Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. "நுணலும் தன் வாயாற் கெடும்." இப்போ மகிந்தவுக்கு வீடு வழங்கும் தொழிலதிபர்களும், அந்த செய்தியை வெளியிட்டவர்களும் விசாரிக்கப்படவேண்டும். அந்த சொத்துக்கள் யாருடையவை, எப்படி பெறப்பட்டவை என்பதும் விசாரித்து மஹிந்தவுக்கு பின்னால் அழுது புலம்பித்திரியும் மக்களுக்கு வெளிப்படுத்தப்படவேண்டும். அதே போல் மற்றைய ஜனாதிபதிகளின் வசிப்பிடங்களும் ஆராயப்படவேண்டும். பாதாள, போதைக் கும்பல் பிடிபடும்போது நாமல் கதறுகிறார். ரணில் கைது செய்யப்படும்போது எல்லா அரசியல் கள்ளரும் தெருவில் இறங்கி குதிக்கின்றனர். அதற்குள் புலிகளை இழுத்து, இராணுவத்தினரை காட்டி, தமது ஊழலை கொலைகளை மறைக்கப் பாடுபடுகின்றனர். இப்போ அனுரா செய்ய வேண்டியது; இவர்கள் எந்த ஆயுதத்தை ஏந்தி மக்களை கூட்டுகின்றனரோ, அந்த ஆயுதத்தை பாவித்து இவர்களை விட்டு மக்களை விரட்ட வேண்டும். ஆதாரத்தோடு இவர்களின் குற்றங்களை இவர்களை சுற்றி மக்கள் கூடும்போது வெளிப்படுத்த வேண்டும். இவர்களுக்கு கொடுக்கும் தண்டனையை பார்த்து மக்கள் இவர்களை சந்திப்பதை தவிர்க்க வேண்டும். நாடே ஊழலால் நிறைந்திருந்திருக்கு. அபேய வர்தன யாப்பாவை உடனடியாக விசாரணைக்கு அழைத்து, யாரந்த வீடு வழங்கும் தொழிலதிபர் என்பதை அறிந்து விசாரிக்க தொடங்கவும். அத்தனையும் மஹிந்தவின், சிரந்தியின் பெயரில் பதியப்பட்டுள்ள வீடுகளாக இருக்கலாம். மக்களை என்ன ஆசை வார்த்தை கூறி, எதை கொடுத்து திரட்டுகின்றனர், அவர்களை திரட்டும் திருடர்கள் யார், அவர்களுக்கும் மஹிந்த குடும்பத்திற்கும் என்ன தொடர்பு, அவர்களது தொழில் என்ன என்பதையும் ஆராய வேண்டும். இப்போ குடும்பமே ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுத்து தாம் தப்பிக்க போகிறார்கள் போலுள்ளது.
  2. பத்திரிகைகளை குறை கூறி தப்பித்து விடலாம் என்கிற நோக்கில் எது வேண்டுமானாலும் பேசுவார், பின் பத்திரிகைகளை சாடுவார். எடுத்ததெற்கெல்லாம் கோட்டுக்குப்போவேன் என எச்சரிப்பவர், இதற்கு எதிராக ஏன் போகவில்லை? ஆயுதப்போராட்டத்தை நான் ஆதரிக்கவில்லை என்று பலதடவை கூறியிருக்கிறார். சிங்களவருடன் வாழ்வது தனது அதிஷ்டம் என்று கூறியவர், அவர்களிடமே வாக்கைப்பெற்று பாராளுமன்றம் போயிருக்கலாமே? வடக்கு கிழக்கில் தனது உயிருக்கு ஆபத்து எனக்கூறி சிங்கள படையினரின் பாதுகாப்பை பெற்று வடக்கில் அரசியல் செய்ய வேண்டிய தேவை என்ன இவருக்கு? எப்படி வெட்கம் இல்லாமல் வாக்கு கேட்டார்?
  3. தன் பக்கமும் தமிழர் இருக்கிறார்கள் என காட்ட விடும் புலுடாவா அல்லது நீங்கள் சொல்வதுபோல் பினாமியாகவுமிருக்கலாம். அனுரா அதையும் விசாரணை செய்தால்; அது விசுவாசியா பினாமியா என்பது தெரிந்துவிடும். மக்களுக்கு துரோகம் செய்தவர்கள், அவர்களுக்காக மக்கள் கண்ணீர் வடிக்கிறார்கள் என்றால், இவர்களது மனச்சாட்சி உறுத்தவில்லையா இவர்களை?
  4. வீடிழந்த மகிந்தவுக்கு ராஜகிரியாவில் உள்ள தனது வீட்டை வழங்க ஜெர்மனி வாழ் தமிழர் ஒருவர் முன்வந்துள்ளாராம் அவர் யார் அவருக்கும் மஹிந்தவுக்கு என்ன தொடர்பு என அறிய ஆவல்.
  5. யாரும் மக்களுக்கு நடந்த அவலங்களை எடுத்துரைக்கப்போவதுமில்லை, யாரும் கேட்கபோவதுமில்லை. கேட்டதற்கே பதிலில்லை, இனி எதை புதுசா சொல்லப்போகிறார்கள், கேட்கப்போகிறார்கள்? உதெல்லாம் மக்களை உசுப்பும் வேலை. அங்கொன்று மக்களுக்கு வேறொன்று சொல்லி பிழைத்த எத்தனைபேரை கண்ட இனம் எம்மினம்.
  6. அந்நியரிடமிருந்து ஒன்று சேர்ந்து பெற்ற சுதந்திரத்தை, தன்னகப்படுத்தி அந்த இனத்தை அந்நியப்படுத்திய துரோகிகள் நாட்டை, மக்களை, மதத்தை, மொழியை பிரித்து நாட்டை கொள்ளையடித்தவர்கள் தியாகிகளாம். இவர்களின் இந்த வாய் வீர உணர்ச்சி வசப்பேச்சுகளை நம்பி மக்கள் ஏமாறுவதாலேயே இவர்கள் மீண்டும் மீண்டும் அரசியல் செய்ய முடிகிறது. ஏமாறுவோர் உள்ளவரை ஏமாற்றுவோரும் குறைவுபடார். சட்டத்திற்கு தலை வணங்குபவர், நீதிபதியை வீட்டுக்கு அனுப்பி பழிவாங்கியது ஏன்? நீதிமன்றத்திற்கு போக அஞ்சி மக்களை திரட்டுவது ஏன்? விமர்சிப்பது ஏன்? நோய் வருவது ஏன்? விழுந்து எழும்புவதும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதுமேன்? தாங்களே நாட்டை ஆளவேண்டுமென்று சட்டங்களை மாற்றி இயற்றியது மனதில் வரவில்லையோ இவருக்கு இதை சொல்லும்போது? அது சரி, மக்களை ஊடகங்களை அழைத்து புலம்புவது ஏன்? வீடற்றவர் போல் ஒப்பாரி வைத்ததுமேன்? மக்கள் பணத்தில் சொகுசாக வாழ்ந்தவர் கோடி சொத்துக்களை முறையற்ற விதத்தில் சேர்த்தவர், இளைப்பாறிய பின்னும் மக்கள் பணத்தில் வாழ நினைப்பது பேராசை. தன் வேலையை தானே செய்ய முடியாமல் வேலையாட்களை கேட்பவர், தன்னை பாதுகாக்க பாதுகாப்பு கேட்பவர், தனக்கென வீடு இல்லாமல் மக்களின் வீடுகளில் வாழ நினைப்பவர்கள் மக்களுக்கு, நாட்டுக்கு எப்படி சேவை செய்யப்போகிறார்கள்? பயங்கரவாதத்தை அறிமுகப்படுத்தியவர்கள், அது தங்களுக்கு எதிராக பாயும் போது அதை தாங்க முடியவில்லை, குறை கூறுகிறார்கள். என்ன செய்வது? வேலிக்கு வைத்த முள் வைத்தவரின் காலை குற்றத்தான் செய்யும். சுதந்திரம்! அது இந்த நாட்டில் இருக்கிறதா? அதை சிதைத்தவர் தொலைத்தவரே இவர்தான்! இந்த இராணுவத்தை சர்வதேசத்தில் குற்றவாளிகளாக்கி, தங்களுக்குள் தியாகிகளாக காட்டி தம்மை பாதுகாத்து கொள்கிறார்கள். தமது திட்டத்தை நிறைவேற்றவும், தம்மை பாதுகாக்கவும் இராணுவத்தை பலி கொடுக்கிறார்கள். அந்த இராணுவமே இவர்களை கைவிட்டதை மறந்து விட்டார் போலும். ஒரு தலைவன், தன் பிள்ளைகளை, குடும்பத்தை பாதுகாத்துக்கொண்டு, சொகுசு அனுபவித்துக்கொண்டு, ஏழைப்பிள்ளைகளை பலி கொடுத்து, தான் வீரம் பேசுவது, தானே சுதந்திரத்தை கொண்டுவந்தேன் என்று கொண்டாடுவதும், உயிர் இழந்த இராணுவத்தினரின் உடல்களை உறவுகளுக்கு அளிக்காமல் உண்மைகளை மறைத்ததும் சரியா? யார் போர் புரிந்தவர்கள்? இவரா அல்லது இவர் குடும்பத்தை சேர்ந்தவர்களா? றக்பி வீரரின் கொலையில் இவர் பிள்ளைகளின் தனிப்பட்ட ஒழுக்கம் நாடு அறிந்தது. ஊடகவியலார்களின் கொலையில் இவரது குடும்ப ஒழுக்கம் வெளிப்பட்டது. பாதாள, போதைக்கும்பலில் இவர்களின் அரசியல் ஒழுக்கம் வெளிப்படுகிறது. எல்லோருக்கும் சட்டம் சமன். இவர்கள் மட்டும் ஏன் அஞ்சுகிறார்கள், வைத்தியசாலையில் படுக்கிறார்கள், விமர்ச்சிக்கிறார்கள், புலம்புகிறார்கள், வெதும்புகிறார்கள்? அதன் பலனை அவர்களே முதலில் அனுபவித்தார்கள். அவர்கள் மேல் வைத்த குற்றச்சாட்டை, அரசியலுக்கு வந்த உடனேயே உங்களாக மாற்றி காட்டிய பெருமை உங்களை சாரும். நீங்கள் அரசியல் செய்ய, செய்த ஊழலை மறைக்க, அவர்கள் குடும்ப அரசியல் செய்கிறார்கள் என மக்களின் மனதை மாற்றி அரசியல் வெற்றி பெற்றவர், பின்னாளில் குடும்ப அரசியல் செய்ததை மக்கள் மறந்ததே உங்கள் வெற்றி. தமிழர் ஓரங்கட்டப்படுவதற்கு தனது தந்தையே முக்கிய காரணம் என்பதை காலம் கடந்து அவரது மகளே ஒத்துக்கொண்டுள்ளார். இவர் புதுக்கதை சொல்லி தன்னை கதாநாயகன் என்கிறார். அதே மஹிந்த ராஜபக்சவும் அவரது குடும்பத்தினருமே ஒரு இனத்தை அழித்து காணாமல் ஆக்கி துவம்சம் செய்து விட்டு, அது நடக்கவேயில்லை என வாதாடுகிறார், விசாரணை என்றால் அஞ்சுகிறார், இராணுவத்தை சாட்டி ஒழிய பார்க்கிறார். இவற்றில் ஈடுபட்டவர்கள் கடத்தப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்டதும் கொலை செய்யப்பட்டதும் சித்திரவதை செய்யப்பட்டதும் உங்கள் ஆட்சிக்காலத்தில். இப்போ உங்களுக்கென்றவுடன் உபதேசம் செய்ய முடிகிறது இந்த ரவுடிக்கும்பலால். தாங்கள் செய்தது தங்களுக்கு நேர்ந்து விடுமோவென அஞ்சுகிறார்கள், மக்களை கெஞ்சுகிறார்கள். முதலில் உங்களுக்கெதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஓடி ஒழியாமல், விழுந்து முறிந்து படுக்கையில் விழாமல், மக்களை திரட்டாமல், ஆரவாரம் செய்யாமல், இராணுவத்துக்கு பின்னால் ஒழியாமல் சட்டத்திற்கு கீழ்ப்பணிந்து தனித்து நின்று உங்களை நிஞாயவாதியாக நிரூபியுங்கள். அதன் பின் மற்றவைகளை யோசிக்கலாம். இப்படி ஒரு நிலைமை வராது என்றும் நீங்களே எப்போதும் நாட்டை ஆளுவீர்கள் என்றும் கனவு கண்டது உங்களது அறியாமை. அரசியலில் மட்டுமல்ல கொலை, ஏமாற்று, ஊழல் எல்லாவற்றிலுமே பலமாக இருந்துள்ளார். அதனாலேயே அவரும் விசாரணைகளை எதிர்நோக்கியுள்ளார். குடும்பமே ஏமாற்று குடும்பம். இதற்கு அரசியல் ஒரு கேடு. சட்டம் சகலருக்கும் சமம். சரத் பொன்சேகாவை போர் முடிந்தவுடன் யாவரும் புகழ்ந்தனர், அதை பொறுத்துக்கொள்ளாத கோத்தா, அவரை ஒதுக்க ஆரம்பித்தார். இதனால் சீற்றமடைந்த பொன்சேகா அரசியலில் குதித்தார். இவரோடு சேர்ந்தால் தமக்கு வாக்கு அதிகமாகும் என எண்ணிய எதிர்கட்சிகள் பொன்சேகாவுடன் கரங்கோத்தனர். இதனால் அச்சம்கொண்ட ராஜபக்ஸக்கள், தேர்தல் குளறுபடி செய்து ஆட்சியை கைப்பற்றிய கையோடு அவரை ஒரு மிருகதைப்போல் அடித்து இழுத்து சென்று சிறையில் போட்டனர். அவரோடு சேர்ந்திருந்த அரசியல் வாதிகள் திகைத்து அவரை கைவிட்டு மறைந்தனர், அவரை சிறையில் சென்று சந்திக்கவேயில்லை. அன்று விழுந்த பொன்சேகாவால் இன்றுவரை எழுந்திருக்க முடியவில்லை. மக்களும் பேச அஞ்சினர். தேர்தல் ஆணையாளர் தேர்தல் முறைகேடுகள் நடக்கிறது என கூப்பாடு போட்டார். இவர்கள் ஆட்சியைப்பிடித்தவுடன் அப்படியேதும் நடக்கவில்லையென பல்டி அடித்து விட்டார். அப்படியொரு காலாச்சாரத்தை ஏற்படுத்த ராஜபக்ஸக்களாலேயே முடியும். அதனாலேயே ஈஸ்ரர் குண்டுத்தாக்குதலை துணிந்து நடத்தினர். ஊழல், கொலை, கொள்ளை, போதை கலாச்சாரத்தை வளர்த்தனர். அவர்களது காட்டாட்சியே இன்றைய துர்பாக்கிய நிலைமைக்கு காரணம். தங்களை நிஞாயப்படுத்த தமிழரை பலி கொடுத்து தம்மை மேன்மைப்படுத்திக்கொண்டனர். "செய்த அதர்மம் தக்க சமயத்தில் கழுத்தறுக்கும்."
  7. இவர்தான் அண்மையில் நாமலை புகழ்ந்து, அடுத்த ஜனாதிபதி அவர் என்றும் முன்புபோல் தமிழருக்கு நடவாதென்றும், தனது அப்பாவை காணாமல் ஆக்கியதை மன்னித்து விட்டதாகவும் கூறியிருந்தார். தேர்தல் காலத்திலேயே மாறி மாறி கதைத்தவர், இவரும் தேர்தலை முன்னிட்டே அப்பப்போ கதையை மாற்றுகிறார். தையிட்டி விகாரை உடைக்கப்படாதென்றும் அதற்காக வேறொரு காணி கொடுக்கப்படலாம் என்றும் கருத்துரைத்தவர், ஆனால் தன் காணிக்கு யார் அதிக விலை தருகிறார்களோ அவர்களுக்கு விற்று விடுவேன், அது யாராகவும் இருக்கலாமென சொன்னவர், நாளைக்கு இன்றைய கருத்தையும் மாற்றிச்சொல்வார். ஒரு கொள்கை இல்லாதவர்கள். இவர்கள் பின்னால் மக்கள் உணர்ச்சி வசப்பட்டு அலைகிறார்கள்.
  8. அற்புதன் கொலை செய்யப்படுவதற்கு முன் புலிகளின் ஆதரவாகவே எழுதினார். நன்றாகவே தெரியும் இது டக்கிளஸ் எனும் இடி அமீனின் வேலை என்பது. தீவுப்பகுதி கிணறுகளை தோண்டுங்கள். அங்கே பல எலும்புக்கூட்டு கதைகள் உள்ளன. தங்கள் கோடடையாக பாவித்து அந்த மக்களை, வீடுகளை பார்க்க சென்ற மக்களை கொன்று குவித்து மறைத்தவர். கேட்டால்; ஜனநாயகம் பற்றி பாடம் எடுப்பார். தீவுப்பகுதியால் இராணுவத்தை வரவழைத்தவரும் இவரே!
  9. ம்..... பல வருசங்களுக்கு முன், யாரோ ஒருவர் சொல்லக்கேட்டேன். அதாவது மேலைத்தேசத்திலும் தான் அந்த கழிவறையின் மேல் குந்தியிருந்தே மலம் கழிப்பதாகவும் இல்லையேல் தனக்கு மலம் கழிப்பதில் சங்கடம் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். கேட்டோர் அனைவருமே சிரித்து விட்டனர். இப்போ ஆசிய நாடுகளிலும் மேலைத்தேய கழிவறை முறையே வந்துவிட்டது. சில முழங்கால் பிரச்சனை உள்ளவர்களுக்கு அது வசதியாக உள்ளது.
  10. இந அடக்குமுறைகளும் அச்சுறுத்தல்களும் அழிப்புகளும் பறிப்புகளும் காணாமல் ஆக்குதல் கொக்கரிப்புகளும் கொலைகள் எல்லாம் பொருளாதாரம் என மூட்டை கட்டி மூடி மறைத்துவிட முயற்சிக்கிறார்கள். எடுபடுமா இருந்து பாப்போம். ஏன் நாட்டில் வடக்கு கிழக்கில் மட்டுந்தான் பொருளாதாரப்பிரச்சனையுண்டா?
  11. கால் நடைகளின் உரிமைகளை யாரிடமிருந்து, எப்போது, எப்படி பாதுகாத்தார்கள்? சொந்த நாட்டு மக்களின் உரிமையை பாதுகாக்க தெரியாதவர்கள், பகிர்ந்து வாழ முடியாதவர்கள், அவர்களின் உரிமைகளையும் நிலங்களையும் பறித்தவர்கள் மற்றவர்களுக்கு பாடம் நடத்துகிறார்கள். இவர்கள் குற்றம் புரியவில்லையென்றால் ஏன் துடிக்கிறார்கள்? இராணுவத்தை காட்டி பிச்சை எடுத்து அரசியல், சமயம் செய்பவர்கள்.
  12. முந்தைய சிங்கப்பூர் ஜனாதிபதி லீக்குவான் லீயை பின்பற்ற முயற்சிக்கிறாரா? அல்லது தனது பாதுகாப்பை தானே உறுதிப்படுத்தி தமிழரின் மனதை கவர்கிறாரா? பொறுத்திருந்து பாப்போம்!
  13. ஆரம்பத்திலிருந்தே ஐ. நா. வில் எதிர்ப்பு தெரிவிப்பதும் அவகாசம் கேட்பதும் பொய்யுரைப்பதும் உள்நாட்டில் ரவுடித்தனம் காட்டுவதும் இராணுவத்தை காட்டி தாம் தப்புவதும் இவர்களது வாடிக்கை. இது சிங்கள மக்களை ஏமாற்றும் நடவடிக்கை. இவர்கள் ஊழல், போதைப்பொருள் கடத்தல், ஆட்கடத்தல், பாதாள உலகை நடத்துவது போன்ற குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டவர்களே. குற்றவாளிகளை காப்பாற்றுவதில் சந்திப்பதில் காட்டும் ஆர்வம், துடிப்பு, வக்காலத்து வாங்குவது, நிஞாயப்படுத்துவது இவற்றில் இருந்தே இவர்கள் யாரென்பது தெளிவாகிறது. ஒரு கள்ளனை கைது செய்தவுடன் எல்லா கள்ளரும் துடிக்கின்றனர். தாங்களாகவே தங்களையும் இனங்காட்டிக்கொள்கின்றனர். கையில் இருக்கவே இருக்கிறது செம்மணி அகழ்வு, ரணில் கைது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை. எடுத்து விடவேண்டியதுதான். ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களுக்கும் குறைவில்லை. பதினாறு ஆண்டுகளை கடத்தியவர்கள் இனிமேல் கடத்துவது ஒன்றும் கஸ்ரமில்லையே. 'ஆறின கஞ்சி பழங்கஞ்சியே.'
  14. தீவிர சிகிச்சையில் இருந்து வீட்டுக்கு சென்றவுடன் சஜித்துக்கு தொலைபேசி அழைப்பும் எடுத்துள்ளார். எதிர்கட்சிகளெல்லாம் ரணிலுக்காகவா அழுதனர்? தமக்கு நிகழ இருக்கும் சம்பவத்தை நினைத்தே அழுதிருப்பர். ரணில் தனது ஆட்சிக்காலத்தில் நீதியாக நடக்கவில்லை, நீதியை நிலைநாட்டவுமில்லை. மாறாக ஊழல்வாதிகளின் பாதுகாவலராகவே செயற்பட்டார். அதே போன்றே ரணிலுக்காக அழுவோரும், இன்று நீதிமன்றத்தை விமர்ச்சிப்பவர்கள் அன்று நீதிபதிகளையும் அவர்களது தீர்ப்புகளையும் மாற்றியமைத்தவர்களே. சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டதும் ரணில் அவரை சந்திக்க தூதனுப்பியதும் துடித்ததும் ஏன்? அப்போ, ஈஸ்ரர் குண்டுத்தாக்குதலில் இவருக்கும் தொடர்புண்டா? இப்போ, ஒவ்வொரு அரசியல்வாதிகளும் மற்றவரை போட்டுக்கொடுத்து தாம் தப்ப தூதனுப்பப்போகின்றனர்.
  15. தமிழ் அரசியல் தலைவர்கள் என்றே கூறுகிறார்கள். அதில் எட்டுப்பேர் என்றும் சொல்கிறார்கள். பார் சிறி என்று எங்கும் சொல்லப்படவில்லை, நானும் சொல்லவில்லை. உங்களின் தவறான புரிதலுக்கு விளக்கம் தர முடியாமைக்கு வருந்துகிறேன்!
  16. இந்தப்பறவைகள் ஒரே இனத்தை சேர்ந்தவை. ஒன்று பெண், மற்றையது ஆண்.
  17. ரணிலின் கைதை தொடர்ந்து சில தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கைது செய்யப்படுவார்கள் என கதை அடிபடுகிறதே, உண்மையா? ரணில் ஊழல் செய்யாதவர் என பேசிக்கொள்கிறார்கள். அப்படியெனில் ஏன் நோயாளி போல் நாடகமாடுகிறார்? "முதுகிலே புண்ணுள்ளவனுக்கு காடு நுழையப்பயம்." "மடியிலே கனமில்லாவிடில் வழிப்பயணத்திற்கு பயமில்லையே." ஏன் இவ்வளவு கொந்தளிப்பு இவர் கைது செய்யப்பட்டவுடன்?
  18. ஆமா .... தமிழ் இளைஞரை பயங்கரவாத சட்டத்தின் மூலம் கைது செய்து இதைவிட பயங்கர மனித உரிமை மீறலில் ஈடுபட்டபோது இவர் வாயே திறக்கவில்லையே, அது ஏன்? தான் தமிழரின் பிரதிநிதி என்று எப்படி உரிமை எடுத்துக்கொள்ளலாம்? எல்லோரும் வைத்திய சாலையில் படுக்கும் போது, தலைமறைவாகும்போது ரணிலார் மட்டும் ஏன் தலையைக் கொடுத்தார்? "யானைக்கும்அடி சறுக்கும்." தமிழரை தந்திரமாக கூறு போட்டு அழித்தவர், இன்று தன்னை தான் காப்பாற்ற முடியாமல் போனது ஏன்? அனுதாபம் பெறவா? இவனுகள் நித்திரையிலும் தமக்கு எழும் எதிர்ப்பை எதிர்ப்பாளரை வைத்தே தமக்கு சாதகமாக எப்படி திருப்பலாமென யோசிப்பார்கள். இராணுவ வெற்றி மறைந்து போக, இப்போ வீடற்றவர் எனக்காட்டி எப்படி ஏழை மக்களை திசை திருப்பினார்கள். உடனடியாக இவர்கள் மேல் நடவடிக்கை எடுத்திருந்தால் இப்படியான ஏமாற்று வேலைகளுக்கு இடமில்லாமல் போயிருக்கும். ஆனால் சரியான சட்ட விசாரணை செய்து குற்றங்கள் நிரூபிக்கப்படாமல் கைது செய்தால் அரசியல் பழிவாங்கல் என்பது ஏற்றுக்கொள்ளப்படும். அதனாலேயே அதற்கு முன், அனுராவுக்கு எதிராக நீதிக்கு எதிராக மக்களை அணிதிரட்ட முடிகிறது. இப்போ, மக்களை இவர்களின் ஊழலுக்கு எதிராக திசை திருப்பும் வேலையை அனுரா செய்ய வேண்டியது முதல் வேலை. இல்லையேல் எதிரி முந்திக்கொண்டு அனுராவை சிறையில் அடைக்கக்கூடும்.
  19. அப்போ ரணில் தவறு செய்தார் என்பதை ஏற்றுக்கொள்கிறார் இவர். அப்போ மக்கள் சிறிய தவறு செய்தாலும் வாழ்நாள் எல்லாம் சிறையில் வைத்து கண்ணை பிடுங்கி அடித்து சித்திரவதை செய்யலாமென்கிறார் இப்போ ரணிலை வைத்து இவர்கள் கைது செய்யப்படலாம். அனுரா அரசியல் பழிவாங்கல் செய்கிறார் என்றால்; இவர்களும் பழிவாங்கியவர்கள் என்பதை ஒத்துக்கொள்கிறார். சரி.... அவர் அரசியல் பழிவாங்கல் செய்தால், அவருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யுங்கள் நீதிமன்றத்தில் நம்பிக்கை இருந்தால். இல்லையென்றால், இந்த நீதிமன்றத்தில் தானே போர்க்குற்ற விசாரணை செய்வோமென எப்படி அடம் பிடித்தீர்கள்?
  20. ஊழல் விசாரணை வருகிற வரையும் ஊடகவியலாளர் சந்திப்பு, அறிக்கை, கூட்டம், வெளிநாட்டுப்பயணம் என பிசியாக இருக்கும் அரசியல்வாதிகள் விசாரணை என்றவுடன் உலகத்தில் இல்லாத நோய்கள் எல்லாம் வந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு விடுகிறார்கள். இதிலிருந்து விளங்குவது என்ன? ஏன் மக்கள் அதை உணர்கிறார்கள் இல்லை? இவரது கைதுக்கு சரியான விளக்கம் கொடுக்கப்பட்டு மக்கள் யதார்த்தத்தை உணர்ந்து, நீதிமன்றத்தின் மேல் நம்பிக்கை வைக்கச் செய்தால் செய்தால் மட்டுமே அடுத்து வரும் பெரிய தலைகளை இலகுவாக கைது செய்ய முடியும். இப்பவே தங்கள் கைதுகளை தடுக்கும் வழிமுறைகளை தயார் செய்ய தொடங்கி விடுவார்கள் ராஜ பாக்ஸர்கள். இன்றைக்கே மஹிந்தா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஊழல்வாதிகளை சட்டத்தின் முன் நிறுத்துவேன் என்பதே ஜனாதிபதியின் தேர்தல் வாக்குறுதி அதையே செய்வதாக விளக்க வேண்டும். ஆம், அவர்கள் புலிகளை கொலை செய்வதற்கு மக்கள் வாக்களித்தார்கள் என்று சர்வதேசத்திலும் நாட்டிலும் கூறி தமிழ் மக்களை அழித்து சாதித்தார்கள் யாரும் தட்டிக்கேட்கவில்லை. ஊழல்வாதிகளை கைது செய்தவுடன் நாடும் சர்வதேசமும் ஏதோ தியாகியை கைது செய்வதுபோல் கொந்தளிக்கிறார்கள்.
  21. நீதிமன்ற விசாரணையின்போது தனக்கு மொழிப்பிரச்சனை என்று சொன்னவர், இன்று அதை மறந்து விளாசுகிறார். தனக்கு தனக்கென்றால் சுளகு படக்கு படக்கென்குமாம். புலிகளை சாட்டி, காட்டி அரபு முஸ்லீம் நாடுகளிடம் இரு இனமும் பெற்றவை அப்பப்போ வெளிவருகிறது. கட்டார் பள்ளி கட்ட நிதியளித்ததாம். தனக்கு பாதிப்பு வருகிறதென்றால் வீராவேசமாக நீதி கதைப்பார்கள். இன்னும் சிறிது நாளில் இவரும் விசாரணை வலையத்துக்குள் வருவார், அதுவரை தன் முன் கூட்டாளிகளை காட்டிக்கொடுக்கட்டும்.
  22. ஊழல் வாதிகளுக்கு தோள்கொடுத்து அடைக்கலம் கொடுத்து காப்பாற்றி வைத்தவர் இவர்தான். ஏன் இவர் ஊழல்வாதிகளை காப்பாற்ற வேண்டும்? சட்டத்தின்முன் ஏன் நிறுத்தவில்லை? இப்போ; ராஜபக்ச குடும்பத்தினருக்கு உளறல் எடுத்திருக்கும். முன்னே அவர்களுக்கு தெரியும் தங்கள் கைது செய்யப்படுவோம் என்று. அதனாலேயே வீடற்றவராக காண்பித்து மக்களிடம் பிச்சை எடுக்கிறார்கள். எந்த மக்களை சுரண்டினார்களோ ஏமாற்றினார்களோ அந்த மக்களை தமது சுயநலத்திற்காக பாவிக்கிறார்கள். இவர்களின் ஊழலால் தெருவுக்கு வந்து பிச்சை எடுக்கிறார்கள், இவர்களின் செல்வாக்கிற்காக போர் செய்து அவயவங்களை இழந்து, உறவுகளை இழந்து நீதிக்காய் உண்மைகளை வெளியிட்டவர்களை கொலை செய்து தனித்தவர்களுக்கு இந்த மக்கள் உணவும் வீடும் கொடுப்பார்களா? மக்களை எந்த விதத்திலும் ஏமாற்றி, கலவரத்தை தூண்டி தங்கள் நலனை பாதுகாப்பதில் இவர்கள் பலே கில்லாடிகள். இப்போ சட்டம் செய்ய வேண்டியது; இவர்களது ஊழல்கள் எல்லாவற்றையும் விசாரித்து உடனுக்குடன் மக்களுக்கு தெளிவுபடுத்தி நாட்டில் எவ்வளவு சுரண்டினார்கள், அதை என்ன செய்தார்கள், யாரெல்லாம் உடந்தை என்பதை வெளிச்சமாக வெளியிடவேண்டும். இவர்களால் கொலை செய்யப்பட்டவர்களை வெளியிட வேண்டும். இவர்களால் நாட்டிற்கு ஏற்பட்ட இழப்புகளை வெளியிட வேண்டும். இல்லையேல் நாட்டில் கலவரம் ஏற்பட்டு கொலைகள் நடப்பதை தவிர்க்க முடியாது. இதனால் தமிழர்மேலேயே வன்முறைகள் திரும்பும். அனுமதியற்ற, தேவையற்ற விகாரைகளை யார் கட்டினார்கள், எங்கிருந்து பணம் வந்தது, எதற்காக கட்டினார்கள் என்கிற சட்ட விசாரணை செய்து தண்டிக்கப்பட வேண்டும். நிஞாயமான முறையில் விசாரணைகள் நடைபெறாமை, சட்டத்தை தமக்கு சார்பாக வளைத்தமையே இப்படிப்பட்டவர்கள் கைது செய்யப்படும்போது அரசியல் பழிவாங்கல் என்று தப்பிப்பதும், மக்களை தூண்டி விடுவதும் நடைபெறுகிறது. சட்டம் தன் வேலையை செய்திருந்தால், தப்பு செய்பவர் தண்டனை பெறுவார் என்கிற மனநிலை மக்கள் மனதில் நிலைத்திருக்கும். சாட்சியத்தின் விசாரணைகளின் பெயரிலேயே இவர்களுக்கு தண்டனை என்பதை மக்கள் உணரச்செய்ய வேண்டும். பாவம் மக்கள், தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார்கள்.
  23. மக்களிடம் இழந்துபோன தன் செல்வாக்கை கட்டியெழுப்ப இவர் என்னவெல்லாமோ செய்யப்பார்க்கிறார், அது காலம் கடந்துவிட்டது. இனி தனது தொழிலுக்கு திரும்புவதே நல்லது. ஆனால் அரசியலில் இறங்கி செய்த குழறுபடிகளால் இருந்ததையும் இழந்துவிட்டார் பாவம். அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாயிற்று. அவரை களத்தில் இறங்கியவர்கள் ஒதுக்கப்பட்ட பின் இவருக்கு அங்கு என்ன வேலை? மாறி மாறி பதவி சுகம் அனுபவித்தவர், எல்லோரும் தன்னை உபசரிப்பார்கள் என்கிற கனவு கலைந்தது. "பிறர்க்கு இடு பள்ளம், தான் விழும் குழி."

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.