Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

valavan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by valavan

  1. இன்றுவரை தமிழக ஊடகங்களோ அல்லது அரசியல் கட்சிகளோ தமிழக அரசோ தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்தபோது கைது செய்யப்பட்டார்கள் என்றோ அ;ல்லது மீன் பிடித்தார்கள் என்றோ ஒத்துக்கொள்வதும் இல்லை ஒருவரி செய்தி எழுதுவதும் இல்லை. எப்போது தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டாலும் .. இலங்கை கடற்பரப்பு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, கச்சதீவுக்கு அருகிலே மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது..இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டார்கள் என்பதும், அல்லது இந்திய கடற்பரப்பில் அத்துமீறிய இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் என்றும் சொல்வதையே வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். பின்பு அதே வாயால் இலங்கை தமிழர்கள் உரிமையை, அவர்கள் வாழ்வு மேம்பாட்டை வலியுறுத்துகிறோம் என்று நீலிக்கண்ணீர் வடிப்பார்கள். மூன்று தசாப்த காலமாக உயிர் உடமை இழந்து போருக்குள் வாழ்ந்த ஈழ தமிழர்கள் இப்போதுதான் படிப்படியாக மீண்டு வருகிறார்கள்அவர்கள் வயிற்றில் அடிக்காதீர்கள் அது தவறென்று எந்த தரப்புமே தமது மீனவர்களுக்கு சொன்னதும் இல்லை தவறை சுட்டிக்காட்டியதும் இல்லை காலம் காலமாக இலங்கை தமிழர் விவகாரத்தில் எம்ஜிஆரை தவிர்த்து ஏனைய தமிழக கட்சிகளும் ஊடகங்களும் செய்வது வெறும் அரசியல் வியாபாரமும் ஊடக வியாபாரமும் மட்டுமே. உலகின் வலிமையான கடற்படையை கொண்டுள்ள இந்தியாவால் கடற்பரப்பில் மீன்பிடிக்கும் பல ஆயிரம் படகுகள் நடுவே கஞ்சா தங்கம் ஆயுதம் கடத்தும் ஒருசில படகுகளையே கண்டறியும் இந்திய கடற்படையால் நூற்றுக்கணக்கில் எல்லை தாண்டும் மீன்பிடி படகுகளை கண்காணிப்பது அத்தனை சிரமம் அல்ல, ஆனாலும் கண்டுக்காமல் இருப்பார்கள், ஒருதடவை கடலுக்கு போய்வர இழுவை படகுகளுக்கு சில லட்சம் வாடகை பணம் செலுத்தும் அன்றாடங்காய்ச்சி மீனவர்கள் பணத்தை செலுத்துவதற்காகவே தமது பகுதியை வெறுமையாக்கிவிட்டு இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைகின்றனர். மத்திய மாநில அரசுகள் எல்லை தாண்டும் மீனவர்களுக்கெதிராய் கடுமையான சட்டங்களை அமுல்படுத்தினால் கொஞ்சமாவது பயப்படுவார்கள், ஆனால் அரசுகளே அவர்கள் எல்லை தாண்டினார்கள் என்று ஒருபோதும் சொல்வதில்லையே அப்புறம் எப்படி தண்டனைகள் சாத்தியம்? ஒருதடவை எல்லைமீறும் மீனவர்களை விடுதலை செய்யுங்கள் அவர்கள் வரும் படகுகளை பறிமுதல் செய்யுங்கள் என்று சுப்பிரமணிய சுவாமி மஹிந்தவுக்கு ஐடியா கொடுத்தார் , அதன்படி இலங்கையும் நடந்து கொண்டது,பறிமுதல் செய்யப்பட்ட வள்ளங்கள் கரையோரங்களின் நிறுத்தப்பட்டு உக்கிபோனது. அப்போது ஓரளவு அத்துமீறுதல் கட்டுக்குள் வந்தது, பின்பு இந்திய அரசின் பேச்சுவார்த்தையால் அது கைவிடப்பட்டது, எனக்கு தெரிந்து சுப்பிரமணிய சுவாமி இலங்கை தமிழருக்கு நன்மையாக செய்த ஒரேயொரு முதலும் கடைசியுமான காரியம் அதுதான். மீனவர்கள் கைது செய்யப்படும்போது இந்திய ஊடகங்களில் பின்னூட்டமிடும் இந்திய தமிழர் பலர் , ஈழத்து அகதிகளுக்கு நாங்கள் இங்கே குடியுரிமை கொடுக்க வலியுறுத்துகிறோம், வீடுகட்டி கொடுக்கிறோம், சோறு போடுகிறோம், ஆனால் அவர்கள் எமது மீனவர்களை தாக்குகிறார்கள் கைது செய்கிறார்கள் என்று சொல்கிறார்கள். ஈழத்து அகதிகளை தமிழக அரசு ஏற்றுக்கொண்டதை நன்றியுணர்வுடன் நோக்கத்தான் வேண்டும், அதற்காக இலங்கையில் உள்ள கரையோர மக்களை பட்டினி போடலாம் தப்பில்லை என்பதுபோல் அவர்கள் கொண்டிருக்கும் மனப்பான்மையை எந்த வழியில் புரிந்து கொள்வது? வடபகுதி மீனவர்கள் தமிழக மீனவர்களை கட்டுப்படுத்த இலங்கை ஆயுதபடைகளின் உதவியை கேட்கும் அளவிற்கு நிலமை இன்றுள்ளது.அவர்களுக்கு வேறு வழியில்லை. எந்த சிங்கள படைகளுக்கு எதிராக போரிட்டோமோ அதே சிங்கள படைகளுடன் ஈழ தமிழர்களை சேர்த்து வைக்கும் வேலையை தமிழகம் செய்கிறது.
  2. ஆழ்ந்த அனுதாபங்கள் நுணாவிலான், இந்த துயரை தாங்கும் வலிமையை இறைவன் தங்களுக்கு அருளுவாராக.
  3. வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் சொந்த தந்தையே மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியது பல இடங்களில் நடந்திருக்கிறது, அவற்றில் எல்லாம் பெரும்பாலும் பாதிக்கப்பட்டது பதின்ம வயதும் விபரம் அறியாத பெண் குழந்தைகளுமே அதிகம் ஆனால் இங்கே 23 வயது பெண்ணை தந்தை பல தடவை வல்லுறவுக்குட்படுத்தினார் என்பதும் கர்ப்பமாக்கினார் என்பதும் இப்போதுதான் அவர்கள் காவல்துறையில் முறையீடு செய்திருக்கிறார்கள் என்பதும் என்னவென்றே சொல்ல தெரியாத மர்மம். 23 வயது என்பது கல்யாணமாகி ஓரிரு குழந்தைகளுக்கு தாயாகி இருக்கவேண்டிய வயது, அந்த வயதில் பல தடவைகள் தந்தை வல்லுறவு செய்யும்போது இந்த பெண் எதற்கு மெளனம் காத்தார் என்பதும் முதல் தடவையிலேயே இதனை ஏன் வெளிபடுத்தவில்லையென்பதும் மில்லியன் டாலர் பெறுமதிமிக்க சந்தேகங்கள். ஒன்று தந்தையை வீட்டை விட்டு துரத்தியிருக்க வேண்டும், அல்லது இவர் விலகி எங்காவது போய் இருந்திருக்கவேண்டும் ஒருவேளை குடும்ப கெளரவத்தை காப்பாற்றுவதற்கு அமைதியாக இருந்தார் என்று யாரும் வாதிட்டாலும் இப்போ இலங்கை முழுவதுக்குமே தெரிந்த செய்தியாகிவிட்டபோது கெளரவம் பாதிக்கப்படவில்லையா? பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உடனடி எதிர்வினையாற்றாத செயல்கள் அது மீண்டும் மீண்டும் அதிகரிக்கவே வழி செய்யும்.
  4. 52 வயது என்பது ஒரு மனிதன் பேரன் பேத்திகளை காணும் வயசு. இந்த வயசில் 25 வயசு பெண் தனக்கு மாட்டிவிட்டது என்று நினைத்து ஏகப்பட்ட லட்சங்களை என்ன ஏது என்று சரியாக விசாரிக்காமல் எடுத்து விசுக்கியிருக்கிறார் என்றால் எவ்வளவு பெரிய சபலம்? இவர்களை பருவ வயதில் இருக்கும் பெண்கள் வீட்டுக்கு அங்கிள் தாத்தா என்று சொல்லி வரவேற்பதுகூட மிக அபாயகரமானது. கல்யாணம் என்பது சிலருக்கு அந்தந்த வயதில் தவறிபோகலாம், ஆனால் வசதியும் வதிவிட உரிமையும் உள்ள இவர் விதவைகளாக , இனி வாழ்வு எங்கே சென்று முடியும் என்று தெரியாமல் கல்யாண வயதை கடந்தும் இன்றும் முதிர் கன்னிகளாக ஏழைகளாக வாழ்விழந்து போயிருக்கும் ஏகப்பட்ட நடுத்தர வயது பெண்கள் வாழும் எம் மண்ணில் சட்டப்படி அணுகி திருமணம் செய்திருந்தால் இவரை வாழ்த்துவதற்கு வரிசையில் பலர் நின்றிருப்பார்கள். இவரை குறிப்பிடவில்லை, எல்லோரையும் குறிப்பிடவுமில்லை பெரும்பாலும் இவர் வயதையொத்த வெளிநாட்டில் நீண்டகாலம் திருமணம் செய்யாதவர்களில் பெரும்பாலோனோர் ஆபத்துக்குரியவர்கள். வாலிப வயது முழுக்க வேலைக்கும் போகாமல் கஞ்சா, தண்ணியடி, காட்ஸ் விளையாட்டு , அடுத்தவன்கிட்ட கடன் வாங்கிவிட்டு குடுக்காமல் விடுறது, காலம் முழுக்க ஆபாச படங்களுடன் காலம் கழிப்பது,கடன் அட்டை ஏமாத்துவேலை என்று வயதுகளை தவற விட்ட பின்னர் வாழும் நாட்டில் இவர்களைபற்றி தெரிந்து விடுவதால் நாடுகள் கடந்து யாரையாவது காசையும் விசாவையும் காட்டி வலையில் விழுத்தி நாசமாக்க பார்ப்பார்கள். இவர்களை மோசடிபேர்வழிகளே மிக இலகுவில் வலையில் வீழ்த்துவார்கள் அந்த வலையில் ஐயாவும் தன்னை சொருகி கொண்டார். செக்ஸ் என்பது மனிதனின் வாழ்வியலின் ஒரு அங்கம் வழிமுறை தவறி போகாதவரை அது ஒன்றும் கொலை குற்றமும் அல்ல,, இப்படி ஏமாளியாகி அள்ளியிறைத்த பணத்திற்கு மேற்குநாடுகளில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பாலியல் நிலையங்கள் சென்று பல வருடங்கள் தமது உடல் தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம். இப்படி எல்லாத்தையும் பறி கொடுத்து யாழ்ப்பாணத்தில் இலங்கை ஜனாதிபதி தேர்தல் செய்திகளை ஒரு ஓரமாக தூக்கி வைத்துவிட்டு இவரின் செய்தியை பிரதானமாக்கும் அளவிற்கு போயிருக்க கூடாது.
  5. புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் எந்த நாட்டிலும் ஏதாவது ஒரு சம்பவத்துக்கு எதிர்ப்புக்காட்ட வன்முறைகளில் இறங்குவது அறவே தவிர்க்கப்படவேண்டும். நீங்கள் வீரபோராட்டம் நடத்திவிட்டு வீட்டுக்குபோய் சமைச்சு சாப்பிட்டு அடுத்த வாரமே எல்லாமே மறந்து போவீர்கள், ஆனால் அரசாங்கங்கள் இது சம்பந்தமான அமைப்புக்களையும் அவர்களின் செயற்பாடுகளையும் கணனியில் போட்டு வைக்கும் அது உங்கள் சந்ததிகள் மாறியபின்னரும் அரசின் கண்காணிப்பில் இருக்கும். எங்கள் அமைப்புக்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க அனுதாபத்துடன் நோக்க பல ஆயிரம் தடவை பல வருடங்கள் மீள மீள சரி பார்க்கும் தென்னிந்திய கலைஞர்களுக்கு முட்டை வீசியது கேவலத்தின் உச்சம், நிகழ்வு ஏற்பாடு செய்தது யாரோ, இவர்கள் காசு வாங்கிட்டு பாட வந்தவர்கள் அவர்களுக்கு எங்கள் தகராறு தெரிந்திருக்க நியாயமில்லை. இத்தனைக்கும் இந்தியாவில் ஸ்ரீனிவாஸ் எந்த நிகழ்விலும் புலம்பெயர் தமிழர்கள் பற்றி உயர்வாகவே பேசுவார். வீட்டுக்கு கூப்பிட்டு அசிங்கபடுத்தி அனுப்புவதுபோல் இருக்கிறது இவர்கள் செயற்பாடு. சுவிசில் ஏற்கனவே ஒரு புடுங்குபாடு நடந்து முடிய இப்போது கனடாவில், இந்த லட்சணத்தில் புலிகளின் தடையை சர்வதேசத்தில் நீக்கவேண்டுமென்று நம்மவர்கள் கூப்பாடு. இறுதி நிமிடம்வரை ஒரே தலைவன் கீழ் ஒரே லட்சியத்துக்காக ஒரே மக்களின் விசுவாசமிக்க இயக்கமாக வாழ்ந்து மறைந்த இயக்கம் , தடை மட்டும் எடுக்கப்படும் நிலை வந்தால் பல புலிகள் இயக்கமாக பல தலைவர்களாக பல கொள்கைகளாக பிளவுபட்டு புலிகள் இயக்கத்தின் புனிதத்தையே சாக்கடையாக்கும் நிலமையே நிலையே தோன்றும். முடிவில் நாம்தான் உண்மையான புலம்பெயர் புலி விசுவாசிகள் என்று காண்பிக்க முயல்வோர்கள் ஒருவருக்குள் ஒருவர் தமது மோதி போட்டி குழுவை பழிவாங்க கொழும்பு சென்று எந்த புலம்பெயர் தமிழர் அமைப்புகளுக்கு சிங்களவன் பயந்து நின்றானோ அவனுடன் கைகோர்த்து தமது போட்டியாளர்களை பழிவாங்கி தாகம் தீர்த்துக்கொள்ளும். அதற்கு கண்முன்னே சாட்சியாக அண்மைய சம்பவங்கள். புலிகள் அமைப்பின் தடையை எடுக்க எதிர்ப்பு என்ற தவறான புரிதல் வேண்டாம், புலிகள் அமைப்பின் தடை நீக்கலின் பின்னர் தவறானவர்களின் கைகளிலேயே அதன் தொடர்ச்சி சென்று சேரும் என்பதே கருத்து.
  6. அப்படியென்றால் காலனித்துவங்கள் அறிமுகபடுத்திய உடைகள் அணிந்து கல்வி கற்க செல்வதும், காலனித்துவ மொழியான ஆங்கிலத்தில் கல்வி கற்பதும் அவனது பாடதிட்டங்களை பின் தொடர்வதும், அதன்மூலம் பட்டம் பெறுவதும் அந்த பட்டங்களை வைத்து காலனித்துவநாடுகளுக்கு மேற்படிப்புக்கு செல்வதும் அங்கு நிரந்தர குடியுரிமைபெற விண்ணப்பிப்பதும் நிரந்தரமா அங்கேயே குடியேறுவதும், குடியேறியநாடுகளிலிருந்து அந்நிய செலாவணியை அள்ளி அள்ளி சொந்தநாட்டுக்கு அனுப்புவதையும் தடை செய்ய வேண்டுமே. மத்திய அரசு செய்யுமா? காலனித்துவத்தின் வாசனை எந்த வடிவத்திலிருந்தாலும் மாற்றம் செய்துதானே ஆக வேண்டும்.
  7. யசோ சுற்றுலாத்துறையில் வேலை செய்பவர்கள் நிகருக்கு தகவல்கள் அறிந்து வைத்திருக்கிறார்.
  8. அந்த கத்தரிகோலை பயன்படுத்தி யாராவது விமான கடத்தலில் ஈடுபடலாம் என்ற அச்சம்தான்
  9. தாக்குதல் நடந்தபோது இருந்த காருக்கும், இப்போ பொன்சேகா பார்வைக்கு வைச்சிருக்குற காரின் ஓட்டைகளுக்கும் உள்ள வித்தியாசம். நம்மில் பலர் குண்டுகளோடு குண்டுகளாய் வாழ்ந்துவிட்டும் பல குண்டுவெடிப்புகளை பார்த்துஇட்டும் வந்தவர்கள் . எந்த ஊரில் குண்டு வெடிச்சா இப்படி சமச்சீராக பொட்டு வைச்சமாதிரி ஒரே அளவிலிருக்கும்? அனுதாபம் தேடுவதற்காக ஒடிஜினல் ஓட்டைகளோடு கராஜ்சுக்கு கொண்டுபோய் எக்ஸ்ட்ராவா ஓட்டைபோட்டு கொண்டு வந்திருக்காரு போலும். இது ஸ்மார்ட் போன் காலம் வெறும் உணர்ச்சி பேச்சுக்கள் உசுப்பேத்தல்களை வைச்சு ஆட்சியை பிடிப்பதும் ஆக்களை ஆக்கள் ஏமாற்றுவதும் இயலாத காரியம் என்பதை மஹிந்த குடும்பம் ஆட்சியை பறிகொடுத்து ஓட்டமெடுத்தபோதே பொன்சேகா உணர்ந்திருக்கணும்.
  10. போர்க்காலங்களிலும் பேரழிவு காலங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் விடயங்களை எந்த சமூகமும் மதம் சார்ந்து அதனை பார்க்ககூடாது ஏனெனில் அது ஒரு அவசரகால நிலை, இந்தகால கட்டங்களில் எத்தனையோ சைவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டிருக்கின்றன, எத்தனையோ கிறிஸ்தவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன ஆனால் நாம் அதனை தூக்கி பிடித்து சர்ச்சையாக மாற்றியதில்லை, முஸ்லீம்கள் மட்டும் எந்த நெருக்கடியான காலங்களில்லும் தமது மதத்தை மட்டும் தூக்கிபிடித்து கதறுவது எதிலும் மத வியாபாரம் செய்யும் எரிச்சலின் உச்சம். தமிழர் பகுதியில் நின்று எமது சமூகம் எமது சமூகம் என்று தனது சமூகம் நோக்கி வெறிதனமாக கத்துகிறார் மைத்திரியின் ஆட்சியின்போது கிழக்கே ஹிஸ்புல்லா என்பவர் தமிழர்களின் நிலம் அபகரிப்பு, இஸ்லாமிய பல்கலைகழகம், பாடசாலைகள் , பள்ளிவாசல்கள் , கிராமங்கள் ,ஆளுனரிலிருந்து முதல்வர்வரை முஸ்லீம்கள் என்று என்று அதிவேகமாக தமிழர் நில அபகரிப்பில் ஈடுபட வடக்கே ரிஷாத் பதியுதீன் மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளை ஏறக்குறைய முழுமையாக அபகரித்து,வவுனியா பகுதிகளில் தமது சமூகத்தின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முனைந்து, அடுத்தகட்டமாக முல்லைதீவில் காடுகளை அழித்து முஸ்லீம் பரவலாக்கலுக்கு எத்தனங்கள் செய்து அப்படியே முஸ்லிம்கள் பெருமளவில் இல்லாத கிளிநொச்சியில் ஏற்கனவே ஐந்து பள்ளிவாசல்களிருக்க புதிதாக பள்ளிவாசலை மறைமுகமாக இவரே பின்னணியின் நின்று நகர பகுதியில் நிறுவியும்,பிறவற்றை புனரமைத்தும் என்று படிப்படியாக யாழ்ப்பாணம் நோக்கி நகரும் அடுத்த கட்ட நடவடிக்கையின்போதுதான் ஈஸ்டர் குண்டுவெடிப்பு ஏற்ப்பட்டு முஸ்லீம்களுக்கான ஆதரவு சிங்களவர்களிடையே முற்றாக சரிந்தது அவர்கள் கபளீகரமும் நின்று போனது. கெடுதல்களிலும் சில நன்மைகள் முளைக்கத்தான் செய்கின்றன.
  11. பையன் சொல்றது உண்மைதான், சமாரி அட்டபட்டுவ பாத்தா நமக்கே நித்திரை வருது, ஓவரா சாப்பிட்டு வாத்துமாதிரி நடக்குது பொண்ணு., ஆனாலும் அதிரடியில் பொம்பள ஷேவாக். ஆண்கள் அணியில் வெல்லாலகே இனிவரும் காலங்களில் இலங்கை அணியின் முதுகெலும்பாக இருக்கபோகிறார். பந்துவீச்சிலும், துடுப்பாட்டத்திலும் மிக சிறந்த ஒரு ஆல்ரவுண்டர் . இலங்கை அணி இந்தியாவுடனான ஒருநாள் தொடரை வென்றதுக்கு காரணமே வெல்லாலகேதான்.
  12. கடந்த சில வருடங்களாக ஸிம்பாப்வே அணியின் ரேஞ்சுக்கு தரம் இறங்கிய இலங்கை அணிகள், ஆண்களுக்கான ஒருநாள் தொடரிலும், பெண்களுக்கான ஆசியகோப்பை போட்டியிலும் ஆனானப்பட்ட இந்திய அணியையே ஊதி தள்ளி படிப்படியாக பழைய பலமான நிலைக்கு திரும்பி வருவதுபோல் ஒரு உணர்வு. அதுநிற்க, பாரம்பரியமிக்க வீரகேசரி நாளிதழ் ஒரு கிரிக்கெட் வீராங்கனையை வர்ணிக்கும் விதம் வடிவேலு ஸ்டைல்ல சொல்லணும் எண்டால் ஆத்தாடி காம பார்வையால்ல இருக்கு . ஒருவேளை இந்த எபெக்ட்டா இருக்கலாம் >>>
  13. இரண்டுமேதான், இலங்கைக்குள் இன்னொருநாட்டை உருவாக்குவதை சர்வதேசங்களில் எந்தநாடும் இப்போதும் சரி அப்போதும் சரி ஏற்றுக்கொண்டதே இல்லை. அதனால் தனிநாடு எமக்கு விருப்பில்லை என்றில்லை, சாத்தியப்பாடான அணுகுமுறைகளையே முதலில் ஆராய வேண்டும். புலம்பெயர்ந்து வாழும் நாடுகளின் கொடிகளையும் எமது தாயகத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளின் புகைப்படங்களையும், மஞ்சள் சிவப்பு கொடிகளாய் எமது அடையாளத்தையும் தாங்கி நிற்கலாம் என்பதே மனசில் தோன்றுவது, மஞ்சள் சிவப்பு கொடிகளை தமிழர் பகுதிகளிலேயே எமது மக்கள் அடையாளமாய் தாங்கி நிற்கிறார்கள், சிங்களவனும் அதற்கு தடை விதித்ததாய் தெரியவில்லை. ஆகவே அது எம் பொது அடையாளமாய் இருக்கலாம். ஓரிரு தினங்களின் முன்னர் பிரம்டன் நகரபிதா எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராய் போராட்டம் நடத்திய சிங்களவர்களுக்கெதிராய் காட்டமான பதிலையும் வழங்கி உறுதியாய் குரல் கொடுத்ததெல்லாம் மிக பெரும் விஷயங்கள் அதை கனடாவின் சட்டதிட்டங்களுக்குட்பட்டு அவர்களை பின் தொடர்வதே சாணக்கியம். கனடாவின் வரைமுறைகளை மீறி அவரைபோன்றவர்கள் எமக்காக செயல்படபோவதில்லை, போனால் அவர்கள் மீதும் சட்டம் பாயும் அவ்வாறான நிலமை உருவாக எமது அணுகுமுறைகள் இருக்க கூடாது என்பதே அவா. மீறி வெறும் உணர்ச்சி கொந்தளிப்புகளுக்கு அடிமையாகி எழுந்தமானமாய் போனால் உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணா கேஸ்தான். எமக்கான வாய்ப்புகளை சரியான பயன்படுத்துவதும் தவறாகிபோவதும் வலிமையுள்ள எம்மவர்களின் அமைப்புக்களின் கைகளிலேயே உள்ளது. எம்மை போன்ற சாமானியர்களால் எழுத்தில் மட்டுமே கவலைகளை முடியும் .
  14. ஒன்றிரண்டு புறநடைகள் தவிர்த்து உலகின் ஆயுதபோராட்ட இயக்கங்களை கனடா தடை பட்டியலில் வைத்திருப்பது ஒன்றும் ஆச்சரியத்திற்குரியதொன்றல்ல, பல்தரப்பட்ட மக்கள் கூட்டம் வாழும் கனடாவில் ஆயுத இயங்கங்களிற்கு சுதந்திரம் கொடுத்தால் பல்லின சமூகங்களிற்கிடையே மோதல் வரும் என்று நம்புகிறது. அதனால்தான் அங்கே அகதி தஞ்சம் கோருபவர்களை ஆயுதபோராட்ட இயக்கங்களுக்கு ஆதரவோ அல்லது அங்கத்தவராக இருந்தாலோ கனடா அவர்களின் மனுவை நிராகரித்து திருப்பி அனுப்ப முயற்சிக்கிறது. இங்கே கவனிக்கப்படவேண்டியது கனடா புலிகள் அமைப்பைத்தான் தடை செய்திருக்கிறது புலிகளை நேசிக்கும் மக்களை முடக்கி போடவில்லை அவர்கள்மீது நெகிழ்வு தன்மையையும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியையும் ஓரளவாவது ஒப்புக்கொள்கிறது, உதவி செய்ய முயற்சிக்கிறது. புலிகளை தடை செய்தால் என்ன புலிகளை நேசித்த மக்கள்கூட நேசமா கனடிய அரசு இருந்தாலே போதுமே, பூலிகள் வேறு மக்கள் வேறா என்ன? ஆனால் கனடாவின் சட்ட திட்டங்களை கருத்தில் கொண்டு எமக்கான ஒரு தீர்வுகிட்டும்வரை கனடாவில் நடத்தும் எமது இனத்துக்கான போராட்டங்களின்போது புலிகொடிகளையோ அல்லது தலைவரின் படங்களையோ காவி செல்ல தூண்டும் சில அறபடித்தவர்கள் விடயத்தில் கனடாவாழ் தமிழ் மக்கள் எச்சரிக்கையாய் இருப்பது எம் நலன்களுக்கு உகந்தது. இல்லையென்றால் கனடிய அரசு எம்மைவிட்டு தூர போகும் நிலமையையே அது ஏற்படுத்தும். அவர்களாக தடையை எடுக்கும் காலம்வர காத்திருக்கலாம் அதுவரை கனடிய அரசை வெறுப்பேத்தாத விதத்தில் எமது அமைப்புக்கள் எம் மக்களுக்கான ஜனநாயக அழுத்தங்களை கொடுக்கலாம். பின்பு புலிகளை பகிரங்கமாகவே கொண்டாடலாம் தப்பில்லை. புலிகளை தடையை நீடிக்கிறார்கள் என்பதில் எமக்கு ஓரவஞ்சனை என்று கருத்தில் கொள்ள தேவையில்லை, புலிகள் அமைப்பு கனடாவில் தடை செய்யப்பட்ட பல பத்து ஆயுதபோராட்ட அமைப்புகளில் ஒன்று அவ்வளவுதான். கனடாவில் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் விபரங்கள்: Currently listed entities in XML format Abdallah Azzam Brigades (AAB) Abu Nidal Organization (ANO) Abu Sayyaf Group (ASG) Al-Aqsa Martyrs' Brigade (AAMB) Al-Ashtar Brigades (AAB) Al-Murabitoun Al-Muwaqi'un Bil Dima Al Qaida Al Qaida in the Arabian Peninsula (AQAP) Al Qaida in the Indian Subcontinent (AQIS) Al Qaida in the Islamic Maghreb (AQIM) Al Shabaab Al-Gama'a al-Islamiyya (AGAI) Ansar al-Islam (AI) Ansar Dine Aryan Strikeforce Asbat Al-Ansar (AAA) (The League of Partisans) Atomwaffen Division Aum Shinrikyo Babbar Khalsa International (BKI) Blood & Honour (B&H) Boko Haram Caucasus Emirate Combat 18 (C18) Ejército de Liberación Nacional (ELN) Euskadi Ta Askatasuna (ETA) Fatemiyoun Division (FD) Front de Libération du Macina Fuerzas Armadas Revolucionarias de Colombia (FARC) Gulbuddin Hekmatyar Gulbuddin Hekmatyar's Faction of the Hezb-e Islami, Hezb-e Islami Gulbuddin (HIG) Hamas (Harakat Al-Muqawama Al-Islamiya) (Islamic Resistance Movement) Haqqani Network Harakat al-Sabireen (HaS) Harakat ul-Mudjahidin (HuM) HASAM (Harakat Sawa'd Misr) Hay'at Tahrir al-Sham Hizballah Hizbul Mujahideen Indian Mujahideen (IM) International Relief Fund for the Afflicted and Needy - Canada (IRFAN – CANADA) International Sikh Youth Federation (ISYF) Islamic Movement of Uzbekistan (IMU) Islamic Revolutionary Guard Corps Islamic Revolutionary Guard Corps' Qods Force Islamic State Islamic State – Bangladesh Islamic State – Democratic Republic of the Congo Islamic State East Asia Islamic State in the Greater Sahara Islamic State – Khorasan Province (ISKP) Islamic State in Libya Islamic State – Sinai Province (ISSP) Islamic State West Africa Province Jaish-e-Mohammed (JeM) Jama’at Nusrat Al-Islam Wal-Muslimin James Mason Jaysh Al-Muhajirin Wal-Ansar (JMA) Jemaah Islamiyyah (JI) Kahane Chai (Kach) Kurdistan Workers Party (PKK) Lashkar-e-Jhangvi (LJ) Lashkar-e-Tayyiba (LeT) Liberation Tigers of Tamil Eelam (LTTE) Movement for Oneness and Jihad in West Africa (MOJWA) Palestine Liberation Front (PLF) Palestinian Islamic Jihad (PIJ) Popular Front for the Liberation of Palestine - General Command (PFLP-GC) Popular Front for the Liberation of Palestine (PFLP) Proud Boys Russian Imperial Movement Sendero Luminoso (SL) Taliban Tehrik-e-Taliban Pakistan (TTP) The Base Three Percenters World Tamil Movement (WTM) https://www.publicsafety.gc.ca/cnt/ntnl-scrt/cntr-trrrsm/lstd-ntts/crrnt-lstd-ntts-en.aspx
  15. இந்திய புலிகள் மோதலின்போது ஆயுதம் உணவு மருந்துகள் என்று அனைத்தும் தடைப்படுத்தப்பட்டு முற்றுகைக்குள் புலிகள் சிக்கியபோது, லொறி லொறியாக துப்பாக்கிகள், பல்லாயிரம் ஜேஆர் வகை இஸ்ரேலிய கைகுண்டுகள், ஆர்பிஜி க்கள், லட்சக்கணக்கான ரவைகள், மருந்துகள் உணவு என்று அனைத்தும் இலங்கை ராணுவத்தினூடாக பிரேமதாசவினால் புலிகளுக்கு வழங்கப்பட்டு புலிகளை வேட்டையாட சென்ற இந்திய ராணுவத்தை புலிகள் வேட்டையாடியதே வரலாறு. பலநூறு இந்திய ராணுவம் கொல்லப்பட மறைமுக காரணமாயிருந்த இலங்கை ராணுவமும் சேர்ந்து கொல்லப்பட்ட இந்திய ராணுவத்தினரை நினைவு கூர்ந்ததை வடிவேலு ஸ்டைல்ல சொல்லணும்னா
  16. மீண்டும் ஒருமுறை நான் மேலே எழுதியதை படித்து பாருங்கள், அமெரிக்காவின் மேலாதிக்கம் பற்றி பேசி இருக்கிறேனா அல்லது அவர்கள் மேன்மையைபற்றி பேசியிருக்கிறேனா? அவர்கள் மேன்மையானவர்கள் என்று எங்காவது ஒருவரி குறிப்பிட்டிருந்தால் தயக்கமின்றி சுட்டிகாட்டுங்கள். பெரும்பாலான நாடுகள் அமெரிக்காவின் பிடியிலேயே உள்ளன, அதனை மீறி செயல்பட ரஷ்யா சீனாவால்கூட முடியாது காரணம் ஒன்றேதான் பொருளாதாரம். ராணுவரீதியில் அமெரிக்காவுக்கு சீனா ரஷ்யாவை பார்த்து பயம் இருப்பது உண்மைதான். உலகில் அனைத்துநாடுகளையும்விட அமெரிக்காவால் பேரழிவை சந்தித்தநாடு ஜப்பான், ஆனால் இன்று அமெரிக்காவின் மிக நெருங்கியநட்பு நாடு பொருளாதார ரீதியிலும் ராணுவரீதியிலும். காரணம் ஒன்றேதான் பொருளாதாரம். ரஷ்யா எந்த ஒரு நாட்டுக்கும் அச்சுறுத்தல் இல்லை என்கிறீர்கள் நீங்கள் வசிக்கும் ஜேர்மனிக்கும் கூடவா? ரஷ்யா எந்தநாடுகளுக்கெல்லாம் அச்சுறுத்தலாய் இருக்கிறது என்பதற்கு ஒரு நீள் பட்டியலே உண்டு, அது அமெரிக்காவால் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நாடுகளைவிட அதிகமாக இருக்ககூட வாய்ப்புண்டு. அது உங்கள் பார்வைக்கு. https://www.aalep.eu/russia-enemy-list
  17. 1991இல் சோவியத் உடைவிலிருந்து உக்ரேன் உருவானபோதே அமெரிக்கா உக்ரேனுடன் உறவினை ஏற்படுத்திக்கொண்டது, பின்னர் தனது தற்பாதுகாப்புக்காக உக்ரேன் மேற்குலகுடன் நெருங்கி சென்றது. ரஷ்யா மட்டுமல்ல, அமெரிக்காவிற்கு சவாலாக அல்லது அமெரிக்காவுடன் மறைமுக மோதலில் ஈடுபட்டிருக்கும் எந்த நாடுகளை சுற்றியும் அமெரிக்கா படைதளங்களை அமைக்கும். அதற்கு சான்றாக அமெரிக்காவிற்கு எதிராக நிற்கும் சீனா வடகொரியாவை சுற்றி , தென்கொரியா ,ஜப்பான் அவுஸ்திரேலியாவில் படை தளங்களையும், நெருங்கிய நட்புநாடுகளின் மறைமுகமாக தனது கட்டுப்பாட்டில் சிங்கபூர் தாய்வான், பிலிபைன்ஸ், ,மலேசியா,இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் சுற்றி வளைத்து கடை/படை விரித்துள்ளது, மத்திய கிழக்கில் அமெரிக்கா எங்கெல்லாம் இருக்கிறது எப்படி வலைபின்னல் அமைத்திருக்கின்றது என்பது அனைவருமே அறிந்தது. ஐரோப்பாவில் யூகே, ஜேர்மனி, இத்தாலி, ஸ்பெயின் என்று வளைத்திருக்கிறது, லத்தீன் அமெரிக்காவை எப்படி தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்பதை சேகுவரா கொலையிலிருந்து, உலகிலேயே மத்திய கிழக்கைவிட அதிக எண்ணெய்வளம் கொண்ட வெனிசுலாவை உலகிலேயே பிச்சைக்காரநாடாக எப்படி வைத்திருக்கிறது என்பதுவரை நீளும். ஆகவே அமெரிக்காவின் படை பரப்பலை ரஷ்யாவை மட்டும் சுற்றியதான ஒன்று என்பதாக பார்த்தல் தகாது.
  18. வீடியோவை கூர்ந்து கவனிக்காமலே அது ஒரு வீடியோகேம் போன்ற சோடிக்கப்பட்ட காட்சி என்பது தெளிவாக தெரிகிறது. சுதந்திரம் கேட்டார்கள் என்பதற்காக சோவியத் காலத்தில் ஏறக்குறைய 70 லட்சம் உக்ரேனியர்களை பட்டினிபோட்டே கொன்றார் ஸ்டாலின் என்பது பலரும் அறிந்த வரலாறு. அதுதான் நாகரிகம் பெரிதாக வளராத போர்காலம் என்றால் நாகரிகம் வளர்ந்த இக்காலத்திலும் சோவியத் உடைந்த பின்னரும் உக்ரேனின் பகுதிகளை ஆக்கிரமித்து தன்னோடு இணைத்துக்கொண்டது ரஷ்யா. தொடர்ச்சியாக ஒருவர் அழுத்தத்தை பிரயோகித்தால் பலவீனமானவன் தன்னை காக்க பிறருடன் கூட்டு சேர்வான் அது மானுட தர்மம். நான் திருப்பி அடிக்க முடியாதவன் என்னை அடித்தால் அவனை அடிக்க சண்டியர்களை சக மனிதன் நாடுவது சகஜம். நேட்டோவினால் ரஷ்யாக்கு ஆபத்து நோட்டோவுடன் உறவு கொள்ளும் நாடுகளால் ஆபத்து என்றால் நேட்டோவில் அங்கம் வகிக்கும் துருக்கியுடன் மிக நெருங்கிய நட்பை ரஷ்யா பேணுவது எந்த வகையில் நியாயம்? ரஷ்யாவுக்குள் உக்ரேன் சில ஆயிரம் படைகளை அனுப்பி ரஷ்ய பகுதிகளை ஆக்கிரமிப்பது தற்காலிக வெற்றிதான் அதனை தக்க வைக்க ரஷ்யா எனும் யானை ஒருபோதும் அனுமதிக்காது, ரஷ்யாவிற்குள் புகுந்து ரஷ்ய பகுதிகளை கைப்பற்றி நீண்டகாலம் நிலைகொண்டிருக்க உக்ரேனின் படை பலமும் அதற்கு ஒத்துழைக்காது. ஆக்கிரமிப்பு எந்த திசையிலிருந்து வந்தாலும் அது தவறுதான், ஆக்கிரமிப்பை கற்றுக்கொடுத்த ரஷ்யா உக்ரேன் தமது பகுதியை ஆக்கிரமித்துவிட்டது என்று கூறுவது தான் கற்றுக்கொடுத்த மாணவன் தவறாக விடை சொல்கிறான் என்பது போலாகும். உக்ரேன் சொந்த ஆயுத தயாரிப்பு படை கட்டமைப்புடன் இருந்தால் மட்டுமே ரஷ்யாவை எதிர்காலத்திலும் எதிர் கொள்ள முடியும், அமெரிக்கா உட்பட்ட மேற்குலகத்தை நம்புவது எனது இடுப்பு வேட்டியை இறுக்கிபிடி என்று நம்பி அடுத்தவனிடம் சொல்வதற்கு சமம் எப்போது வேண்டுமென்றாலும் அவன் கைவிட்டுவிட்டால் அம்மணமாகி போய்விடுவோம், உக்ரேனின் நிலமையும் அதுதான், இஸ்ரேல் காசா --ஹிஸ்புல்லா ஈரான் போர் மிக பெரும் போர் வடிவமெடுத்தாலோ அல்லது அது முடிவுக்கு வந்த பின்னரோ பொருளாதார செலவு கணக்கு வழக்குகளை மேற்குலகம் பார்க்கும்போது பெரும் நஷ்டத்தில் வீழ்ந்திருந்தால் உக்ரேனை படிப்படியாக அமெரிக்கா உட்பட்ட மேற்குலகம் முழுமையாக கைவிடும் வாய்ப்புண்டு அப்போது ரஷ்யா மேற்குலகத்தை முழுமையாக வெறுப்பேத்தாத விதத்தில் உக்ரேனையும் தாண்டி போரை பரப்பாமல் மட்டுப்படுத்த அளவில் உக்ரேனை மட்டும் விழுங்கிவிடும்.
  19. ஆளாளுக்கு நானேதான் புலிகளை அழித்தேன் என்று சிங்கள மக்களிடயே தம்மை வீர சூரரா காண்பித்தாலும், புலிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தியது சமாதான பேச்சு என்று நோர்வேயின் பொறிகிடங்கு உருவாக்கியது, சமாதான பேச்சு என்று அங்கும் இங்கும் என்று இழுத்தடித்து புலிகள் பயங்கரவாதிகள் சமாதான பேச்சுக்கெல்லாம் ஒத்துவரமாட்டார்களென்று சர்வதேசத்துக்கு காண்பிக்க முனைந்தது அந்த சமாதான காலத்தில் மிக ரகசியமாக இலங்கை படையினரின் தொகையை பலமடங்காக்கியது சமாதான காலத்தில் பலமடங்கு ஆயுதங்களை ரகசியமாக இறக்குமதி செய்தது சமாதானகாலத்தில் கருணாவை பிரிச்சு புலிகளை பலவீனபடுத்தியது. நாங்களே புலிகளிடமிருந்து அவனை பிரித்தோம் என்று அவரே வெளிப்படையாக மஹிந்த ஆட்சி காலத்தில் கூறியிருந்தார் அதற்கு முற்பட்ட சில மாதங்களில் கருணாவை போட்டுத்தள்ள ஊடுருவிதாக்கும் அணியை அனுப்பியதாகவும் பின்னர் அவர்களை உடனடியா திரும்புமாறும் தான் கட்டளையிட்டதாக பகிரங்கமா கூறியிருந்தார் சமாதான காலத்தில் இந்தியா அமெரிக்காவுடன் இணைந்து புலிகளின் சர்வதேச கடல் போக்குவரத்து பற்றிய கண்காணிப்பு உதவிகளை, தகவல்களை பலமாக பெற்றது என்று அத்தனைக்கும் அடித்தளம் போட்டது சாட்சாத் அன்றைய பிரதமரும் இன்றைய ஜனாதிபதி ரணிலேதான். அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா ஒரு சாணக்கியமற்றவராகவே இருந்தார். ஆக வீடுகட்ட பணம் சேர்த்து கல்லு மண் பறிச்சு அத்திவாரம் போட்டது ரணில் , அதை வைச்சு வீடுகட்டி முடித்தவர்கள் மற்றையவர்கள். இல்லையென்றால் மஹிந்த ஆட்சிக்கு வந்து இரண்டே வருடங்களில் படிப்படியாக போர் தொடங்கியது, அந்த குறுகிய காலத்தில் படையினர் மற்றும் ஆயுதங்கள் தொகையை பலமடங்காக்கி பெருமெடுப்பில் பயிற்சிகள் கொடுத்து , முன்புபோல் வடக்கிலிருந்து கிழக்குக்கும் கிழக்கிலிருந்து வடக்குக்கும் படையினரை மாற்றி மாற்றி நகர்த்தி போர் செய்யாமல் போரை வெற்றி கொள்வது உலகில் எவராலும் முடியாதது. குள்ளநரி ஜேஆரிடம் கற்ற சாணக்கியத்தை பயன்படுத்தி புலிகளை அழிப்பதற்கு பலமான அத்திவாரம் போட சமாதானகாலத்தை பயன் படுத்தினார் ரணில், சமைச்சு வைச்சது அவர், ஆனால் சாப்பிட்டவர்கள் விருந்துக்கு சிங்களவர் மத்தியில் மஹிந்த, கோட்டபாய, சரத் என்று ஆளாளுக்கு உரிமைகோருகிறார்கள்.
  20. விளங்க நினைப்பவன் சொல்வதும் சரிதான் நைஸ் என்பதும் பூந்து விளையாடுது அதே நேரம் கீழே நுணா சொன்னமாதிரி இந்த கைஸ் விளையாட்டை 16:22 லிருந்து இந்த வீடியோவில் பாருங்க எத்தன கைஸ் போடுறாரெண்டு, அப்படியே தளபாட கடையையும் பார்த்ததாச்சு ஆனால் அது தவறில்லை நாங்கள் நினைச்சமாதிரிதான் அவர்கள் வாழோணும் எண்டில்லை அதொண்டுமில்லை இங்கிலீஷில் உள்ள Another Level என்ற வார்த்தையை அப்படியே பொளந்து பாதி தமிழை சேர்த்து வேற லெவல் என்று உருவாக்கி விட்டார்கள், இந்தியாவில் See you later என்பதை அப்புறமா பார்க்கலாம் என்று தமிழில்மொழிமாற்றி சொல்வதுபோல்.
  21. முதலில் சிரிப்பு பட்டனை அமத்தவா எண்டு யோசிச்சன், ஆனால் குமாரசாமியண்ணை எழுதியது வெளிநாட்டுக்கு அகதியாய் வந்தவர்கள் அனைவரும் எதிர்கொள்ளூம் ஒன்று என்பதால் யாதர்த்தத்தைபதிவு செய்கிறார் அதனால் இது சிரிப்பல்ல சீரியஸ் ம் சீரியசுக்கு எப்படி சிரிப்பது என்றாச்சு. மேலே உள்ள வரிகளை சுட்டி காட்டியதன் நோக்கம் வெளிநாட்டுக்கு அகதியா வருபவர்களில் எம்மவர்தான் நீண்டகாலம் ஒரு நாட்டிலிருந்தும் ஒரு மொழியை 60% வீதமாவது கற்றுக்கொள்ளாமல் இன்றும் ஒரு அலுவலுக்கு அடுத்தவர் உதவியை நாடுவதும் , வெள்ளைக்காரனுடன் பேசும்போது தகிட தகிட ததிமி தகிட ததிமி தந்தானா என்று பக்கத்தில நிக்கும் வேற்று நாட்டுக்காரன் எம்மை பார்த்து பரிதாபபடும் நிலையில் உள்ளவர்கள் , எனது அலுவல்களுக்கு மொழி விஷயத்தில் அடுத்தவர் உதவியை பெரிதாக நாடாவிடிலும் நானும் பூரண மொழி ஆற்றலில் மேற்குறிப்பிட்டவர்களின் அதே ரகம்தான். எமக்கு முதல் நிலையில் உள்ளவர்கள் சீனர்கள். எம்மவர்கள் பிற இனங்களுடன் ஒப்பிடும்போது மொழி ஆற்றலில் பின் தங்கியதற்கு இரண்டு காரணங்கள் ,,,வந்த காசு கட்டவேணுமென்று வந்து அடுத்தவாரமே ஓயாமல் வேலை வேலை என்று காலம் முழுக்க ஓடுவது இரண்டு தாயகத்தில் தாய் மொழியை தவிர பிறமொழியை அறியும் ஆற்றல் இல்லாதது, தாயகத்தில் சுத்த தமிழ் பேசுவதற்கு மொழி பற்று முதலாவது காரணமில்லை, இங்கிலீசு தெரியாததும் ஒரு காரணம், உண்மைய சொல்வதானால் தமிழக தமிழ் பேட்டிகள் , டிவி நிகழ்ச்சிகள், உரையாடல்களை நம்மவர்கள் முழுதா புரிவதென்றாலே ஓரளவு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் இப்போது தாயகத்திலும் , கைஸ், வாவ், வேற லெவல், அதைவிட பல ஆங்கில கலப்பு சொற்கள் யாழ்ப்பாண தமிழில் கலந்துவிட்டன. குமாரசாமியண்ணை கருத்தை பதிவிடுகிறேன் என்று கண்ணாடியை பதிவேற்றிவிட்டார் ஒவ்வொரு அகதியின் முகமும் அதில் தெரியுது.
  22. தயக்கமின்றி சொல்லலாம், மிக குறைந்த உறுப்பினர் எண்ணிக்கையை கொண்டு ஒரு இயக்கத்தை நடத்திய செயல்வீரன், இயக்கங்களிலேயே புலிகளுக்கடுத்ததாக இந்தியாவின் கண்களில் மண்ணை தூவி சர்வதேச கடல் எல்லையூடாக ஆயுதங்களை தனது இயக்கத்திற்கு கொண்டு சேர்த்த பெருமையும் மகேஸ்வரனுக்கு உண்டு என்று சொல்வார்கள். இயங்கங்களிலேயே பெரும்பாலும் எண்ணிக்கையில் குறைவானாலும் அனைத்தும் ஒரிஜினல் ஆயுதங்கள் வைத்திருந்ததும் இவர் தலைமை தாங்கிய இயக்கமென்றே பேச்சுண்டு., இயங்கங்களிலேயே ஒரிஜினல் மோட்டார் வைத்திருந்த ஒரேயொரு இயக்கம் தம்பா இயக்கம் என்று சொல்வார்கள். தனியொருவனாக அவர் ஆயுதங்களை கொண்டுவந்து சேர்த்த சர்வதேச தொடர்பு பற்றி புலிகளும் தகவல் எதுவும் பெற்றிருக்கவில்லையென்றும் கதைகள் உலவியதுண்டு. ஏறக்குறைய புலிகளின் B- Team தான் தம்பாவின் இயக்கம் என்றும் கூறுவார்கள். ஒரு கல்விமானாக, பொருளாதார பின்னணி, அக்காலத்திலேயே லண்டன் வாழ்வு என்று அத்தனையும் இருந்தும் அனைத்தையும் துறந்து தாயகத்துக்காக போராட வந்து எதுவும் நனவாகாமல் மீண்டும் மீண்டும் சிறை வாழ்வு, நாடுநாடாக அலைச்சல் என்று போய் கடைசியில் வாழைக்கு தண்ணீர் பாய்ச்சும் நிலைக்கு போய் பட்டமரமாக அவர் வாழ்வு முடிந்தது. தனிமனிதனாக பெரும் திட்டங்களை செயல்படுத்த ஆசைப்பட்டிருந்தார், எதுவும் ஈடேறாமல் காலம் தடுத்து அவரை காலமாக்கிவிட்டது. தமிழர் தரப்பில் அரசியல் ரீதியாகவும், ஆயுதபோராட்ட ரீதியாகவும் பெரும் கல்விமான்கள்,சட்ட வல்லுனர்கள், செயற் திறனாளர்கள்,அஞ்சா நெஞ்சம் படைத்தவர்கள் , மிக நுண்ணிய திட்டமிடலாளர்கள் என அத்தனையும் இருந்தும், எவ்வளவோ முயன்றும் எதுவும் சாதிக்க முடியாமல் எம் கதை முடிந்துபோனது ஏனோ, எம்மீது யாரிட்ட சாபமோ தெரியல. செயல் வீரனுக்கு அஞ்சலிகள்.
  23. ஏற்கனவே அமெரிக்காவின் பலநூறு தாக்குதல் விமானங்களுடன் 4 விமானம் தாங்கி கப்பல்கள் மற்றும் நாசகாரிகள் ஈரானின் தாக்குதலை எதிர்கொண்டு இஸ்ரேலை காக்கும் நடவடிக்கையில் அங்கு தரித்து நிற்க......, முதல் தடவையாக உலகில் யாருக்கும் அமெரிக்காவால் விற்பனை செய்யப்படாத, முதன் முதலாக ஒரு நாட்டுக்கெதிராக தாக்குதலுக்கு தயாராக மத்திய கிழக்கை நோக்கி பெரும் எண்ணிக்கையில் புறப்பட்டு செல்லும் F-22 Raptor விமானங்கள் பின்விளைவுகளை நன்கறிந்து ஒப்புக்கு சில ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் தாக்குதலை தவிர்த்து ஈரான் நீண்ட பெரும் போர் ஒன்றில் இஸ்ரேலுக்கெதிராக ஈடுபடாது என்று நினைக்கிறேன், மாறாக ஹிஸ்புல்லாவையும் ஏற்கனவே குற்றுயிராய் போன காமசையும்(நேற்றும் ஒரு முக்கிய தளபதி காலி என்று தகவல்) , ஹுத்தியையும் முன்னுக்கு தள்ளிவிட்டு அவர்கள் எண்ணிக்கையை குறைக்கும் அமெரிக்க இஸ்ரேல் நடவடிக்கையில் அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டலாம்
  24. இவர்களின் தமிழர்மீதான தொடர் வன்முறையின் பொறுமையிழந்த ஒரு கட்டத்தில்தான் புலிகள் எதிர் நடவடிக்கையிலீடுபட்டனர், அதற்காக பொதுமக்கள்மீதான படுகொலைகள் எத்தரப்பில் நடந்தாலும் அதை நியாயப்படுத்த முடியாது, ஆனால் அதை தூண்டியவர்கள் யார் என்ன காரணம் என்பதை ஒருபோதும் இவர்கள் நினைத்தே பார்ப்பதில்லை. ஆனால் மூன்று தசாப்த காலங்கள் கடந்த பின்னரும் தமிழர்கள் எம்மை கொன்றுவிட்டார்கள் என்று வன்ம வக்கிரம் கலந்த தோரணையில் நினைவேந்தல் என்ற பெயரில் பகை வளர்க்கிறார்கள். 1915 ல் சிங்களவர்கள் முஸ்லிம்களுக்கெதிராக பெரும் கலவரம் செய்தார்கள் இவர்கள் சொத்துக்களை அழித்தார்கள், கொன்றார்கள், அதை ஏன் இவர்கள் இன்றும் நினைவு கூருவதில்லை? நினைவு கூர்ந்தால் சிங்கள முஸ்லீம் பகை வளரும் தமது ஒட்டுண்ணி சுயநல வாழ்க்கை கெட்டுவிடும் என்பதால்தானே? இத்தனைக்கும் அந்த கலவரத்தில் முஸ்லீம்கள் சிங்களவர்களுக்கெதிராக எந்த தவறும் செய்யவில்லையென்றும் பெரகரா ஊர்வலம் பள்ளிவாசல் முன்னாடி போகும்போது அமைதியாக போகவேண்டுமென்று கோரிக்கை மட்டும் வைத்தார்கள் என்பதே தகவல்கள் சொல்கின்றன. ஆனால் யுத்த காலத்தில் இவர்கள் தாக்குதலுக்கு எதிர் தாக்குதலாய் நடந்த காத்தான்குடி சம்பவத்தை காலா காலத்துக்கும் தொடர்கிறார்கள் என்றால் வெறும் தமிழர் விரோத போக்கு என்பதை தவிர வேறொன்றும் இல்லை. ஆனால் நம்மில் ஒரு சிலர் முஸ்லீம்களுக்கெதிராக இழைக்கப்பட்ட தவறுகளை சுட்டிக்காட்டுகிறோம் அனுதாபம் கொள்கிறோம், ஆனால் அது தவறென்றில்லை மனிதர்களுக்கெதிராக இழைக்கப்பட்டவை அநீதிகள் என்றால் அதை தட்டிகேட்கலாம் , அந்த வகையில் நாம் மேன்மையான இனம்தான் ஆனால் தமிழர்களுக்கெதிராக இழைக்கப்பட்டவை அநீதிகள் என்று சொன்ன சிங்களவர்கள் ஒரு சிலரை காண்பிக்கலாம் ஆனால் ஒரு முஸ்லீமை எவருமே காண்பிக்க முடியாது. எம்ம்மீது சக இனங்கள் மேற்கொண்ட படுகொலைகள் வன்முறைக்கு ஒவ்வொரு பொழுது விடியும்போதும் தினமும் நாம் நினைவேந்தல் செய்யவேண்டும், அது போர்கால வடுக்கள் என்று வேறு புரிந்து வலிகளை மட்டும் மனசில் சுமந்து கடந்து செல்கிறோம். போர்யுகத்தில் ஆறிய காயங்களும் உண்டு ஆறாத காயங்களும் உண்டு, வினைக்கு எதிர்வினையாற்றிய சம்பவங்கள் போர்க்கால சம்பவங்களென்றே கடந்து போகவேண்டும் வேறு வழியில்லை, முஸ்லீம்கள் செய்வது ஆறிய காயங்களை மீண்டும் மீண்டும் பிராண்டி இனபகையை வளர்க்கும் ஒரு கொடூர செயலன்றி வேறில்லை, அப்படியென்றால் 83 கலவரத்தை நாம் ஏன் நினைவுகூருகிறோம் என்று யாரும் கேள்வி எழுப்பலாம் , 58/77/83 களில் சிங்கள மக்களுக்கு எதிராக தமிழர்கள் எந்த வன்முறைகளிலும் ஈடுபடாமல் இருந்தபோதே தமிழர்கள் தேடி தேடி ஒருபக்கம் சார்ந்து வேட்டையாடப்பட்டார்கள். 83 கலவரத்துக்கு புலிகள் 13 ராணுவத்தை கொன்றதுதான் கலவரத்துக்கு காரணம் என்றால் அன்று இலங்கை அரசு தேடி தேடி வேட்டையாடியிருக்கவேண்டியது புலிகளைத்தான் 100% அவர்கள் கட்டுப்பாட்டில் வாழ்ந்த தமிழர்களையல்ல. அன்றைய தமிழர்கள் இலங்கை அரசின் ஆட்சிமுறையின்கீழ் ஜனநாயக முறையில் வாக்களித்து இலங்கை அரசின் பாராளுமன்றில் எதிர்கட்சியாக கூட இருந்தார்கள். மேலே முதல் பதிவிடும்போது முஸ்லீம்கள் தமிழர்களுக்கு செய்த கொடுமைகள் தொடர்பான தகவல்களை எப்போதெல்லாம் இஸ்லாமியர்கள் எமக்கெதிரான நினைவுகூரல்கள் அறிக்கைகள் விடுகிறார்களோ அவர்கள் செய்தி இணைப்புக்கள் மற்றும் தளங்களின் நன்னி சோழன் பகிரவேண்டுமென்று ஒரு வரி சேர்க்கலாமென்று நினைத்திருந்தேன் பின்னர் அது என் கருத்துக்கு குழு சேர்க்கும் ஒரு நடவடிக்கைபோல் பார்க்கப்பட்டுவிடுமென்று தவிர்த்தேன், இப்போ நன்னியே பதிவிட்டதால் இதை சொன்னேன், நன்னி, எம் கால பதிவுகளை சேகரிக்கும் உங்கள் ஆற்றலும் பணியும் அளப்பரியது. இணையவெளியில் எங்கெல்லாம் ஒருபக்க சார்பாக எமது இனத்துக்கெதிராக பதிவுகளிடப்படுகிரதோ அங்கெல்லாம் உங்கள் பதிவுகளை இணைப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் நன்றி.
  25. இந்நாளில் தென் தமிழீழத்தில் மட்டக்களப்பு- அம்பாறை மாவட்டங்களில் ஜிகாத், முஸ்லீம் ஊர்காவல்படை , அரசபடைகளுடன் இணைந்து பணியாற்றும் முஸ்லீம் குழுக்களால் படுகொலை செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான எம் தமிழ் மக்களையும், இஸ்லாத்தின் பெயரால் நடத்தப்பட்ட ஈஸ்டர் குண்டுவெடிப்பில் பலியான நூற்றுக்கு மேற்பட்ட எம் உறவுகளையும் நினைவு கூருகிறோம். இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு தம் உறவுகளை பலிகொடுத்து அநாதையாக நிற்கும் எம் தமிழ் உறவுகளுக்கு எம் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.