Everything posted by ஏராளன்
-
நோர்வேயில், இலங்கையை பூர்விகமாகக் கொண்ட தமிழ் பெண் சுட்டுக்கொலை!
நோர்வேயில் தமிழ் பெண் வைத்தியர் படுகொலை Published By: DIGITAL DESK 3 06 JAN, 2024 | 02:59 PM நோர்வே நாட்டில் 30 வயதான தமிழ் பெண் வைத்தியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை (02) நோர்வேயின் எல்வெரும் (Elverum) என்னும் பகுதியில் குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவர் புத்தாண்டு தினத்தன்று படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்த பெண்ணின் உடலில் பல துப்பாக்கி சூடு காயங்கள் இருந்ததாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், இவர் பல் வைத்தியர் என்பதோடு நீண்ட காலமாக இவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும் சடலம் கண்டெடுக்கப்பட்ட காரிலிருந்து கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை மிரட்டல் தொடர்பில் உயிரிழந்த பெண் பல தடவைகள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்ததோடு, அது தொடர்பில் உரிய முறையில் பொலிஸார் கவனம் செலுத்தவில்லை என குடும்பத்தினர் முன்னதாக குற்றம் சுமத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நோர்வேயில் தமிழ் பெண் வைத்தியர் படுகொலை | Virakesari.lk
-
மாலைத்தீவு கடற்பரப்பில் இரண்டு இஸ்ரேலிய எண்ணெய் கப்பல்கள் மீது ஆளில்லா விமான தாக்குதல்
Published By: RAJEEBAN 06 JAN, 2024 | 10:53 AM மாலைத்தீவு கடற்பரப்பில் இஸ்ரேலுக்கு சொந்தமான இரண்டு எண்ணெய் கப்பல்கள் ஆளில்லா விமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன. மாலைத்தீவின் வடக்கு மற்றும் வடமேற்கு கடற்பரப்பிலேயே இந்த ஆளில்லா விமான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த எண்ணெய் கப்பல்கள் பப் அல் மன்டாப் நீரிணை மற்றும் செங்கடலை கடந்து பயணிக்க திட்டமிட்டிருந்தன என தகவல்கள் வெளியாகியுள்ளன. பப் அல் மன்டாப் நீரிணையிலிருந்து 2000 கிலோமீற்றர் தொலைவில் இந்த ஆளில்லா விமான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. மீண்டும் தாக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக கப்பல்கள் தங்கள் பயணப்பாதையை மாற்றியுள்ளன. https://www.virakesari.lk/article/173248
-
ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம்: வவுனியாவில் பதற்றம்!
காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத் தலைவிக்கு விளக்கமறியல் Published By: DIGITAL DESK 3 06 JAN, 2024 | 11:09 AM வவுனியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன்,ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று வெள்ளிக்கிழமை (05) வவுனியாவிற்கு விஜயம் செய்திருந்ததுடன், நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற வன்னிமாவட்டங்களிற்கான ஒருங்கிணைப்புகுழுக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார். இதனையடுத்து, வடகிழக்கு வலிந்துஅகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டநிலையில் சங்கத்தின் தலைவி உட்பட இருவர் வவுனியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்டவர்கள் நேற்றையதினம் மாலை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். இதன்போது சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், மற்றைய பெண் பிணையில் விடுவிக்கப்பட்டார். https://www.virakesari.lk/article/173252
-
வறுமை நிலைக்குள்ளாகியுள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்தை தாண்டியுள்ளது
05 JAN, 2024 | 05:04 PM (எம்.ஆர்.எம்.வசீம்) நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியுடன் வரி சுமை மக்கள் மீது சுமத்தப்பட்டதால் கடும் வறுமை நிலைக்கு ஆளாகியுள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை 50இலட்சத்தை தாண்டியுள்ளதாக குடிசன மற்றும் புள்ளிவிபர திணைக்கள அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 2019 காலப்பகுதியில் வறுமை கோட்டுக்கு கீழ் இருந்த இந்த வறிய மக்கள், முழு சனத்தொகையில் 25 இலட்சமாக பதிவாகி இருந்தபோதும் தற்போது வறிய மக்கள் பிரிவுக்கு புதிதாக 30இலட்சம் பேர் இணைந்திருக்கின்றனர். நாட்டின் மொத்த சனத்தொகை சுமார் இரண்டு கோடி 20 இலட்சமாகும் இந்த சனத்தொகையில் 2019ஆகும் போது நூற்றுக்கு 11.9 வீதமானவர்களே வறுமை நிலையில் இருப்பதாக பதிவாகி இருந்தபோதும் தற்போது அந்த சதவீதம் நூற்றுக்கு 25 என்ற அளவுக்கு வந்துள்ளது. அதன் பிரகாரம் ஜனசவி, சமுர்தி மற்றும் அஸ்வெசும போன்ற வறுமை நிவாரணம் வழங்கப்படவேண்டியவர்களின் சதவீதம் நூற்றுக்கு 11.9இல் இருந்து நூற்றுக்கு 25 என்ற அளவுக்கு அதிகரித்திருக்கிறது. அத்துடன் இந்த வருடத்தில் ஜனவரி முதலாம் திகதியில் இருந்து அதிகரிக்கப்பட்ட வற்வரி வீதம் நூற்றுக்கு 18வரை அதிகரிப்பதற்கு முன்னர் இலங்கையில் மொத்த மக்கள் தொகையில் நூற்றுக்கு 27.9 வீதமானவர்கள் 2024ஆம் ஆண்டாகும்போது வறுமை நிலைக்கு ஆளாகும் என உலக வங்கியின் கணிப்பாக இருந்தது. இதேவேளை, இதுவரை காலமும் வற்வரி விதிப்புக்கு உள்வாங்கப்படாமல் இருந்த எரிபாெருள் எரிவாயு போன்ற 79 பொருட்களுக்கு புதிதாக நூற்றுக்கு 18 வீத வற் வரி விதிக்கப்பட்டதால், இந்த நாட்டில் மிகமோசமான வறிய மக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என பொருளாதார மற்றும் நிதி ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். அத்துடன் குடிசன மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தின் அறிக்கையின் பிரகாரம் இந்த கணக்கு வழக்குகள் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் நாட்டின் உண்மையான வறிய மக்களின் எண்ணிக்கை மேலும் தீவிரமாகலாம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். கொவிட் தொற்று மற்றும் 2019இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக 3வருட குறுகிய காலத்துக்குள் இந்த நாட்டின் வறியவர்களின் வீதம் இரண்டு மடங்கு வரை அதிகரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். https://www.virakesari.lk/article/173219
-
இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக சேனுகா திரேனி செனவிரத்ன நியமனம்
06 JAN, 2024 | 07:46 AM வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளரான திருமதி சேனுகா திரேனி செனவிரத்ன, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வெள்ளிக்கிழமை (5) தனது நற்சான்றிதழ்களை இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் ஒப்படைத்துள்ளார். இது தொடர்பாக இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு குறிப்பையும் பதிவிட்டிருந்தார். முன்னதாக, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக மிலிந்த மொரகொட அந்தப் பதவியை வகித்தார். அவரது பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/173239
-
அமெரிக்காவை பிரிட்டனின் அடிமைச் சங்கிலியில் இருந்து மீட்டெடுத்த ஒரு கோப்பைத் தேநீர்
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், எலிகா கௌல்டு பதவி, பிபிசியுடன் அவர் நடத்திய உரையாடலின் அடிப்படையில் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அது 1773, டிசம்பர் 16, இரவு. ஆயுதமேந்திய ஒரு கும்பல், பாஸ்டனில் உள்ள கிரிஃபின்ஸ் ஆங்கரேஜில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த மூன்று கப்பல்களில் ஏறினர். அதில் சிலர் மோஹாக் போர் வீரர்களைப் போல உடை அணிந்திருந்தார்கள். இந்தக் கப்பல்களில் 92,000 பவுண்டுகள் அல்லது சுமார் 41,000 கிலோ தேயிலை நிரப்பப்பட்ட 340 பெட்டிகள் இருந்தன. அந்தக் காலத்தில் தேநீர் அமெரிக்காவின் பாஸ்டன் பிராந்தியத்தில் மிகவும் பிரபலமான ஒரு பானமாக இருந்தது. சன்ஸ் ஆஃப் லிபர்ட்டி என்று அழைக்கப்படும் ஒரு தேசபக்த குழுவின் ஆதரவுடன் கப்பலுக்குள் ஊடுருவிய நபர்கள், அங்கிருந்த பெட்டிகளை எடுத்து தேயிலையைக் கடலில் கொட்டினர். அவை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு சொந்தமான தேயிலை. இன்றைய டாலர் மதிப்பில், ஒரு மில்லியன் டாலர்களுக்கு மேல் நஷ்டத்தை சந்தித்தது பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி. இந்தத் தேயிலை அழிப்பு சம்பவம் 13 காலனிகளை புரட்சிக்குத் தூண்டியது அல்லது இதன் மூலம் அமெரிக்க புரட்சி பிறந்தது என்று கூறலாம். பாஸ்டனில் நடந்த இந்த நிகழ்வுதான் பாஸ்டன் தேநீர் விருந்து என்று அழைக்கப்படுகிறது. டிசம்பர் 16ஆம் தேதி வரை, காலனிகளின் அனுமதியின்றி அவர்களின் மீது பிரிட்டிஷ் நாடாளுமன்றம் மீண்டும் மீண்டும் வரி விதிக்க முயன்றபோது, காலனிகளின் ஆட்சேபனைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பது சாத்தியமாக இருந்தது. ஆனால், அந்த நாளுக்குப் பிறகு காலனித்துவ அதிகாரத்தின் மீதான இருதரப்பினரின் நிலைப்பாடும் மாறியது. ஒரே ஆண்டுக்குள் கிரேட் பிரிட்டனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் வெடித்தது. கிழக்கிந்திய கம்பெனி மீது தாக்குதல் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பல குடியேற்றவாசிகள் இந்திய மோஹாக்ஸ் போல் மாறுவேடமிட்டு கப்பல்களில் ஏறினர் பட மூலாதாரம்,GETTY IMAGES பாஸ்டனில் நடந்த தேயிலை அழிப்பு பல தேச பக்தர்களின் மனதைப் புண்படுத்தியது, ஏனெனில் அதன் விளைவுகள் அமெரிக்காவை பாதிக்கும். தேயிலை அழிக்கப்படுவதைப் பற்றி அறிந்ததும், அதைக் கடுமையாகக் கண்டித்தார் ஜார்ஜ் வாஷிங்டன். பெஞ்சமின் பிராங்க்ளின் இந்த நடவடிக்கையால் மிகவும் அதிருப்தி அடைந்தார். கிழக்கிந்திய கம்பெனியின் நஷ்டத்தை அவரே செலுத்த முன்வந்தார். பிரித்தானிய பிரதமர் லார்ட் நோர்த் 1773ஆம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனியுடன் செய்துகொண்ட ஊழல் ஒப்பந்தத்தில், ஒரு முக்கிய கேள்விக்கான பதில் உள்ளது. கிழக்கிந்திய கம்பெனி பிரிட்டனின் பணக்கார மற்றும் சக்திவாய்ந்த குழுமமாக இருந்தது. அவர்கள் தங்களது சொந்த ராணுவத்தையும் கொண்டிருந்தனர். இது பிரிட்டன் அரசரின் வழக்கமான படைகளை விட இரட்டிப்பான அளவில் இருந்தது. தெற்காசியாவில் கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகத்தை "ராணுவம் மற்றும் சர்வாதிகாரம் மூலம் அமைக்கப்பட்ட பேரரசு" என்று விவரித்தார் அரசியல் பொருளாதார நிபுணர் ஆடம் ஸ்மித். இருப்பினும், வங்காளத்தில் கடுமையான வறட்சி மற்றும் அதன் சொந்த நிர்வாகத்தில் இருந்த ஊழல் காரணமாக, கிழக்கிந்திய நிறுவனம் திவாலாகும் நிலையில் இருந்தது. வடக்கு தீர்வு தேயிலை சட்டம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சாமுவேல் ஆடம்ஸ் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் இருக்கும் பிரச்னைகளைத் தீர்க்கும் நம்பிக்கையில், வட அமெரிக்காவில் 17 மில்லியன் பவுண்டுகள் தேயிலையைக் குறைந்த விலையில் விற்கும் குத்தகையை கிழக்கிந்திய கம்பெனிக்கு வழங்கியது அமெரிக்க நாடாளுமன்றம். ஆனால் மறுபுறம், 1767இன் டவுன்சென்ட் வருவாய் சட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட தேயிலை மீதான காலனித்துவ வரியை நாடாளுமன்றம் தக்க வைத்துக் கொண்டது. வரி காரணமாக விலை கூடுதலாக இருந்தாலும், ஜான் ஹான்காக் போன்ற வணிகர்களால் அமெரிக்காவுக்குள் கடத்தி வரப்படும் வரியில்லா டச்சு தேயிலையைவிட, நிறுவனத்தின் தேயிலை மலிவாக இருக்கும் என்று உறுதியளிக்கப்பட்டது. 1765ஆம் ஆண்டு முத்திரை சட்டத்திற்குப் பிறகு, காலனிகளுக்கு வரி விதிக்கும் நாடாளுமன்றத்தின் முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியடைந்தன. மேலும் வட அமெரிக்க குடியேற்றவாசிகள் தேயிலை சட்டம் பிரிட்டிஷ் அரசியல்வாதிகளுக்கு ஒரு வெற்றியாக இருக்கும் என்று பயந்தனர். காரணம் காலனிகளின் அனுமதியின்றி வரிகள் விதித்து, அதன் மூலம் தங்களது வருவாயை உயர்த்துவதற்கு வழி செய்ய நாடாளுமன்றத்திற்கு உரிமை உண்டு என்று அந்த அரசியல்வாதிகள் நம்பினர். பாஸ்டன் சம்பவத்தின் தாக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES பாஸ்டனில் நடந்த நிகழ்வுகள் அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை பகுதியில் உள்ள மற்ற நகரங்களிலும் எதிரொலித்தன. பாஸ்டன் நகரம் இந்தப் போராட்டத்தில் தனியாக நிற்கவில்லை. இந்த புதிய தேயிலைச் சட்டத்திற்குக் கடுமையான எதிர்ப்பு மாசசூசெட்ஸிலும் ஏற்பட்டது. தேயிலை சட்டத்திற்கு எதிர்ப்பு பரவியதால், நியூயார்க் மற்றும் பிலடெல்ஃபியாவில் உள்ள தேசபக்தர்கள் தேயிலை கொண்டு வரும் நிறுவனத்தின் கப்பல்களுக்கு துறைமுகத்தில் நங்கூரமிடும் அனுமதியை மறுத்தனர். இதனால் கப்பல்கள் பிரிட்டனுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மற்ற இடங்களில் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட தேயிலை கைவிடப்பட்டு, அழுகிப் போனது. சார்லஸ்டனுக்கு பிறகு, தென் கரோலினா வணிகர்கள் தேயிலை ஏற்றுமதிக்குப் பணம் செலுத்தினர், ஆனால் உள்ளூர் தேசபக்தர்கள் அதை துறைமுகத்தில் கடலில் கொட்டி அழிக்கும்படி கட்டாயப்படுத்தினர். வட கரோலினாவில் உள்ள ஈடன்டனில், பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் 51 பேர் ஒரு மனுவில் கையெழுத்திட்டு, "எங்கள் சொந்த நாட்டை அடிமைப்படுத்திய தேயிலைச் சட்டம் ரத்து செய்யப்படும் வரை தேநீர் குடிக்க மாட்டோம்," என்று உறுதியளித்தனர். வில்மிங்டன் துறைமுக பெண்கள் நகர சதுக்கத்தில் தேயிலையைக் கொட்டி எரித்தனர். நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லார்ட் ஃபிரடெரிக் நார்த் தேயிலை அழிவு பற்றிய செய்தி லண்டனுக்கு எட்டியபோது, அமெரிக்க நலன்கள் குறித்து அனுதாபம் கொண்ட பிரிட்டிஷ் குடிமக்கள்கூட சீற்றமடைந்தனர். இதனால்தான் பல காலனித்துவவாதிகள் இது தனிப்பட்ட சொத்துகள் மீதான தாக்குதல் என்று கூறினர். பின்னர் நாடாளுமன்றம் மூன்று தண்டனைச் சட்டங்களை பதிலாக அளித்தது. மசாசூசெட்ஸின் உரிமைகள் பறிக்கப்பட்டன, காலனியின் நீதிமன்றங்கள் முடக்கப்பட்டன. மேலும் கிழக்கிந்திய கம்பெனிக்கு பொறுப்பானவர்கள் இழப்பீடு வழங்கும் வரை, பாஸ்டன் துறைமுகத்தில் அனைத்து வணிகப் பரிவர்த்தனைகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. வரலாற்று ஆசிரியர்கள் அந்தச் சட்டங்களை இன்று தண்டனைச் சட்டங்கள் என்று நினைவுகூர்கிறார்கள். எனவே காலனித்துவவாதிகள் இதை ஒரு 'சகிக்க முடியாத செயல்' என்று அழைத்தனர். மூன்று சட்டங்கள் குறித்த இரண்டு விளக்கங்களும் மிகவும் துல்லியமாக இருந்தன. நாடாளுமன்றம் கடுமையாக நடந்து கொள்ளாமல் இருந்திருந்தால், பாஸ்டனில் உள்ள தனியார் சொத்துகள் அழிக்கப்பட்டதைக் கருத்தில் கொண்டு அமெரிக்கர்கள் தேயிலை வரி செலுத்துவதற்கான தங்கள் எதிர்ப்பை மறுபரிசீலனை செய்திருப்பார்கள். இறுதியாக கிரிஃபின் துறைமுகத்தில் கப்பல்களில் ஊடுருவியவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டிருக்கலாம், ஆனால் நாடாளுமன்றத்திற்கு வேறு வழி இருக்கவில்லை என லார்ட் நார்த் கூறினார். "நாம் இதைச் செய்துதான் ஆக வேண்டும்," என்று அவர் 22 ஏப்ரல் 1774 அன்று ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் கூறினார், "விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல். இதைச் செய்யாவிட்டால், அனைத்தும் இழக்கப்படும்," என்றார். பிரிட்டனுக்கு ஆதரவாக சூழ்நிலையை மாற்றும் என்று நம்பப்பட்ட அந்த அரசாங்க நடவடிக்கை, கிங் ஜார்ஜ் III கட்டுப்பாட்டில் இருந்த 13 காலனிகளை சரியாக ஓராண்டு கழித்து சுதந்திரத்திற்காக கிளர்ச்சி செய்யத் தூண்டியது. டிசம்பர் 16 நிகழ்வுகளைப் பற்றி அமெரிக்கர்கள் என்ன நினைத்தாலும், மாசசூசெட்ஸில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், பறிக்கப்பட்ட உரிமைகள் அவர்களை மேலும் கவலையடையச் செய்தன. இதனால் வேறு இடங்களில் வசிக்கும் மக்களுக்கும் இதே நிலை ஏற்படுமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்தது. பிரித்தானியாவின் ஒரே வழி அதிகாரத்தின் மூலம் கட்டுப்படுத்துவது என்றால், அவர்களுக்கும் 'ஆயுத எதிர்ப்பு' மட்டுமே மிஞ்சும் என்று காலனித்துவவாதிகள் உணர ஆரம்பித்தனர். ஜூலை மாதம் அது நடைமுறைப்படுத்தப்பட்டது. மேலும் ஜூலை 4, 1776இல் அமெரிக்காவின் சுதந்திரம் அறிவிக்கப்பட்டது. https://www.bbc.com/tamil/articles/czqv8enwn4xo
-
தமிழ் எழுத்துக்களால் வடிவமைக்கப்பட்ட பிரமாண்ட திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்!
இந்தியாவின் கோயம்புத்தூரில் தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட 20 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலையை தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைக்காணொளி தொழில்நுட்பத்தின் மூலம் இன்று திறந்து வைக்கவுள்ளார். தமிழ் எழுத்துகளைக் கொண்டு சுமார் 2.5 டன் எடை கொண்டதாகவும் 20 அடி உயரம் கொண்டதாகவும் குறித்த திருவள்ளுவர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன், சிலையின் முன்பு திருக்குறளின் முதற்குரலான ‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு’ என்ற குரல் பொறிக்கப்பட்டுள்ளது. விசேடமாக, இந்த சிலை முழுவதுமாக தமிழ் எழுத்துக்களால் அமைக்கப்பட்டு நெற்றியில் அறம் என்ற சொல் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கோவை மாவட்டத்தின் பொள்ளாச்சி வீதியின் குறிச்சிக்குளம் பகுதியில் இந்த திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. மாலை வேளைகளில் மின் விளக்குகளால் ஔிரும் வகையில் இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் சிலை முழுவதும் உருக்கு இரும்பினால் (Steel) உருவாக்கப்பட்டுள்ளது. 52 கோடி இந்திய ரூபாய் செலவில் உருவாக்கப்படும் ‘Smart City’ திட்டத்தின் கீழ் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/287142
-
வடகொரியாவின் அடுத்த தலைவராகும் வாய்ப்பு இவருக்கே…!! தென்கொரியா கணிப்பு
கிம் இன்னும் இளமையாகவே இருக்கிறார். பெரிய அளவில் சுகாதார பாதிப்புகள் எதுவும் இல்லை. அவருக்கு வருகிற திங்கட்கிழமையுடன் 40 வயது ஆகிறது. வடகொரியாவின் தலைவராக கிம் ஜாங் உன் இருந்து வருகிறார். ரகசிய நாடுகளில் ஒன்றாக அறியப்படும் அந்நாட்டில் அடுத்த தலைவராக யார் வருவார் என்பது பற்றி அந்நாட்டு அரசு ஊடகங்கள் எந்த தகவலையும் வெளியிடவில்லை. இந்நிலையில், கிம்மின் மகளான கிம் ஜூ யே தந்தையுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அவருடைய தந்தையின் அதிக அன்புக்குரிய அல்லது மதிப்புக்குரிய குழந்தையாக ஜூ யே இருக்கிறார் என அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதற்கேற்ப தென்கொரியாவும் ஜூ யே, அடுத்த வாரிசாக வரக்கூடும் என தெரிவித்து உள்ளது. கிம் ஜாங் உன்னின் மகளின் அதிகரித்து வரும் அரசியல் நிலைப்பாடு மற்றும் தந்தையுடனான நெருக்கம் ஆகியவற்றை வடகொரியாவில் இருந்து வெளிவரும் செய்திகளும் மற்றும் புகைப்படங்களும் நிரூபிக்கின்றன. கடந்த செப்டம்பரில் ராணுவ அணிவகுப்பு ஒன்றின்போது, வி.ஐ.பி. பார்வையாளர் வரிசையில் இருந்தபடி அதனை ஜூ யே பார்வையிட்டு கைதட்டினார். கடந்த நவம்பரில், விமான படை தலைமையகத்திற்கு தன்னுடைய தந்தையுடன் வருகை தந்த ஜூ யே, கிம் ஜாங் உன்னின் முன்னால் நின்று புகைப்படம் எடுத்து கொண்டார். அப்போது, இருவரும் கருப்பு கண்ணாடி அணிந்தபடி காணப்பட்டனர். கடந்த ஞாயிற்று கிழமை பியாங்யாங் நகரில், புது வருட கொண்டாட்டம் நடந்தபோது, கிம் ஜாங் உன் அவருடைய மகளின் கன்னத்தில் முத்தமிட்டார். பதிலுக்கு மகளும் கிம்மின் கன்னத்தில் முத்தமிட்டார். இந்நிலையில், தென்கொரியாவின் தேசிய நுண்ணறிவு சேவை என்ற உளவு அமைப்பு இன்று கூறும்போது, கிம் ஜாங் உன்னின் அடுத்த வாரிசாக கிம் ஜூ யே வருவது போன்று தெரிகிறது என தெரிவித்து உள்ளது. கிம் இன்னும் இளமையாகவே இருக்கிறார். பெரிய அளவில் சுகாதார பாதிப்புகள் எதுவும் இல்லை. அவருக்கு வருகிற திங்கட்கிழமையுடன் 40 வயது ஆகிறது. அதனால், அடுத்த வாரிசுக்கான நடைமுறையை பற்றிய அனைத்து சாத்தியங்களை பற்றியும் ஆலோசித்து வருகிறோம் என்றும் தெரிவித்து உள்ளது. அரசியல் படிப்புகளுக்கான சியோல் நகர ஏசன் மையத்தின் நிபுணரான டூ ஹியோகன் சா கூறும்போது, ஜூ யேவுக்கு அரசியல் சாதனைகள் என்பது குறைவாக உள்ளது. அதனுடன், நாட்டின் வருங்கால தலைவராக அவர் முறைப்படி அறிவிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். கிம் ஜாங்குக்கு அடுத்து அவருடைய வாரிசாக வருவதற்கான தகுதியை ஜூ யே பெற்றிருக்கிறார் என்று கிம் நம்புகிறார் என்று தென்கொரியாவின் செஜாங் மையத்தின் நிபுணரான சியாங் சியாங்-சாங் என்பவர் கூறுகிறார். கிம் ஜாங்கின் உடல் பருமன் தீவிரம் வாய்ந்ததுபோல் காணப்படுகிறது. அதனால், அவர் நாளைக்கே மயக்கமடைந்து விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் கூறியுள்ளார். ஜு யே அவருடைய தந்தையுடன் பெரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என்பது, வளர்ந்து வரும் வயதிலேயே மனிதர்களுடனான தொடர்பை கட்டமைப்பது மற்றும் அரசாட்சி முறையை பற்றி கற்று கொள்வது போல் தெரிகிறது என்றும் சியாங் கூறுகிறார். இதற்கு முன் கிம் ஜாங் உன்னோ அல்லது கிம் ஜாங் 2-வோ, அவர்கள் இருவரும் பெரியவர்களாகும் வரை அரசு ஊடகத்தில் அவர்களின் பெயர் குறிப்பிடப்படவேயில்லை. ஆனால், ஜூ யேவின் பெயர் வெளிவந்திருப்பது வெளிநாட்டு நிபுணர்களுக்கு பெரிய ஆச்சரியம் ஏற்படுத்தி உள்ளது. https://thinakkural.lk/article/287090
-
தொடர்தற்கொலைகள் - ஏழு மரணங்கள் சிஐடியினர் விசாரணை- யார் அந்த மதபோகர்
அடுத்த பிறவிக்கு விரைவாகப் போகலாம் என்ற மதபோதனையால் 7 பேர் அடுத்தடுத்து தற்கொலை - காவல்துறை கூறுவது என்ன? படக்குறிப்பு, தற்கொலை செய்து கொண்ட போதகர். கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழ் 5 ஜனவரி 2024, 05:57 GMT தற்கொலை செய்துக்கொள்வதன் மூலமாக அடுத்த பிறவிக்கு விரைவில் செல்ல முடியும் என போதனை செய்ததை அடுத்து, போதகர் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்த சம்பவமொன்று இலங்கையில் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் போலீஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ருவன் பிரசன்ன குணரத்ன என்ற 47 வயதான நபரொருவர், பௌத்த மதத்தை திரிவுப்படுத்தி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் போதனைகளை நடாத்தியுள்ளார். தற்கொலை செய்துக்கொள்வதன் ஊடாக, அடுத்த பிறவிக்கு விரைவில் செல்ல முடியும் என அவரது போதனைகளில் கூறியுள்ளதாக போலீஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. குறித்த நபர் ஆரம்பத்தில் இரசாயன ஆய்வு கூடமொன்றில் கடமையாற்றியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், இந்த நபர் இரசாயன ஆய்வு கூடத்திலிருந்து விலகி, இலங்கையின் பல்வேறு பகுதிகளில் போதனைகளை நடாத்தியுள்ளார். இவ்வாறான பின்னணியில், குறித்த போதகர் கடந்த மாதம் 28ம் தேதி தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். ஹோமாகம பகுதியிலுள்ள வீடொன்றில், நஞ்சு அருந்தி குறித்த நபர் உயிரிழந்தமை விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, குறித்த போதகரின் மனைவி, தனது மூன்று பிள்ளைகளுக்கு நஞ்சை வழங்கி, தானும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக போலீஸார் கூறுகின்றனர். இந்த சம்பவம் தொடர்பில் மாலபே போலீஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கணவனின் உயிரிழப்பை தாங்கிக் கொள்ள முடியாது, மன அழுத்தம் ஏற்பட்டமையினால், பிள்ளைகளுக்கு நஞ்சை கொடுத்து, தானும் தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என ஆரம்ப கட்டத்தில் போலீஸார் சந்தேகம் வெளியிட்டிருந்தனர். எனினும், இந்த சம்பவம் தொடர்பில் எழுந்த சந்தேகத்தை அடுத்து, போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். இந்த நிலையில், இந்த குடும்பத்தாரின் இறுதிக் கிரியைகளில் கலந்துக்கொண்ட நபர் ஒருவரை போலீஸார் விசாரணை செய்துள்ளனர். அம்பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 34 வயதான பீர்த்தி குமார என்ற நபரிடம் போலீஸார் விசாரணைகளை நடாத்தியுள்ளனர். தற்கொலை செய்துக்கொண்ட போதகரின் போதனைகளில், பல வருடங்களுக்கு முன்னர் தானும் கலந்துக்கொண்டதாக குறித்த நபர் போலீஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இதனாலேயே, போதகரின் மனைவி உள்ளிட்ட குழந்தைகளின் இறுதிக் கிரியைகளில் தானும் கலந்துக்கொண்டதாக அவர் கூறியுள்ளார். தற்கொலை செய்வதனை ஊக்குவிக்கும் வகையில், குறித்த போதகர் போதனைகளை நடாத்தியிருந்ததாகவும் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். விரைவில் அடுத்த பிறவிக்கு செல்லும் எண்ணத்திலேயே, போதகர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக, குறித்த நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில், போலீஸாரிடம் வாக்குமூலம் வழங்கிய, போதனைகளில் கலந்துக்கொண்டதாக கூறப்படும் 34 வயதான பீர்த்தி குமாரவும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். மஹரகம பகுதியிலுள்ள ஹோட்டல் அறையொன்றிலிருந்து, அவரது சடலத்தை போலீஸார் கண்டெடுத்துள்ளனர். குறித்த நபர் ஜனவரி 2ம் தேதி ஒரு வகையான நஞ்சை அருந்தி, தற்கொலை செய்துக்கொண்டுள்ளமை போலீஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இவ்வாறு குறித்த நபர் அருந்தியதாக சந்தேகிக்கப்படும் நஞ்சு மருந்தை, ஹோட்டல் அறையிலிருந்து போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அத்துடன், நஞ்சு அருந்தி உயிரிழந்ததாக கூறப்படும் தாய் மற்றும் பிள்ளைகளின் இறுதி சடங்குகளில் கலந்துக்கொண்டதாக கூறப்படும் யுவதி ஒருவரும் நஞ்சு அருந்தி உயிரிழந்துள்ளார். யக்கல பகுதியிலுள்ள தனது வீட்டிலேயே, குறித்த யுவதி தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். பௌத்த மதத்தை திரிவுப்படுத்தி போதனை நடாத்தியதாக கூறப்படும் போதகரின், போதனைகளில், இந்த யுவதி கலந்துக்கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது என போலீஸார் கூறுகின்றனர். தற்கொலை செய்துக்கொள்வதற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் நஞ்சு பொருள், ஒரே தன்மை உடையதா என்பது தொடர்பில் போலீஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதேவேளை, போதகரின் போதனைகளில் கலந்துக்கொண்டதாக கூறப்படும் நபர் தொடர்பிலும் போலீஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த விசாரணைகளின் பிரகாரம், அடையாளம் காணப்பட்ட ஒரு தொகுதி குழுவினரிடம் போலீஸார் விசாரணைகளை நடாத்தியுள்ளனர். இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நபர்களிடம், ஏதேனும் நஞ்சு வகைகள் காணப்படுகின்றதா என்பது குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சைனைட் வகையை சேர்ந்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு வகை நஞ்சை அருந்தியே, இவர்கள் உயிரிழந்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார். பட மூலாதாரம்,SRI LANKA POLICE ''இந்த நான்கு சம்பவங்களிலும் ஒரே வகையாக அடையாளங்கள் காணப்பட்டன. அதாவது, நஞ்சு என சந்தேகிக்கப்படும் பை கிடைக்கப் பெற்றது. சிறிய பக்கெட்களிலேயே இந்த நஞ்சு பொருள் காணப்பட்டுள்ளது. இது சைனைட் என சந்தேகிக்கின்றோம். எனினும், இந்த நஞ்சு பொருள் என்ன என்பது குறித்து இரசாயண பகுப்பாய்வு அறிக்கை வந்தவுடனேயே சரியான தகவல்களை கூற முடியும். எனினும், இது நஞ்சு தன்மை வாய்ந்தது என்பது தெளிவாக தெரிகின்றது" என போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ குறிப்பிடுகின்றார். ''நஞ்சை அருந்தி தற்கொலை செய்துக்கொள்ள வேண்டும் என குறித்த போதகர் போதனை செய்துள்ளமை புலனாய்வு பிரிவின் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் உயிரிழந்தால், அடுத்த பிறவியில் சிறந்ததொரு இடத்தில் பிறக்க முடியும் என்ற வகையில் போதனை செய்துள்ளார். சில சந்தர்ப்பங்களில் அதனை நம்பும் நபர்கள் இருக்கக்கூடும். இவரது போதனைகளில் கலந்துக்கொண்டவர்களின் உறவினர்கள், அவர் குறித்து ஆராய்ந்து பாருங்கள்." எனவும் அவர் கேட்டுக்கொள்கின்றார். https://www.bbc.com/tamil/articles/c892rjxjx5do
-
மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வடக்கிற்கு செல்கிறார் ரணில்
பூநகரி பொலிஸார் விடுத்த கோரிக்கை நிராகரிப்பு! கிளிநொச்சி – பூநகரியில் இன்று முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்குமாறு கோரி பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட மனு, கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பூநகரி பிரதேச செயலகத்தில் ஜனாதிபதியின் பங்குபற்றுதலுடன் பல கலந்துரையாடல்கள் இன்று (05) மாலை இடம்பெறவுள்ள நிலையில், எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், பொன்னாவெளி பகுதியில் சீமெந்து நிறுவனமொன்றுக்கு அகழ்வு பணிகளுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆர்பாட்டத்தில் பங்கேற்பது தொடர்பில் 10 பேருக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர். எவ்வாறாயினும், ஜனாதிபதி தலைமையிலான கலந்துரையாடல், பொதுமக்கள் மற்றும் க.பொ.த உயர் தர பரீட்சைக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படாத வகையிலும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்காத வகையிலும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க அரசியலமைப்பில் உரிமை காணப்படுவதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. அவ்வாறன்றி, சட்டத்திற்கு விரோதமாக ஆர்பாட்டத்தில் ஈடுபடும் பட்சத்தில், பொலிஸாரினால் மனுவில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களை கைது செய்ய முடியுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், ஆர்பாட்டத்தின் போது சட்ட விரோத நடவடிக்கைகள் இடம்பெறும் பட்சத்தில் பொலிஸ் கட்டளைச் சட்டம் மற்றும் ஏனைய சட்டங்களுக்கு உட்பட்டு அவற்றை தடுக்க பொலிஸாரினால் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. https://thinakkural.lk/article/287148
-
சுவீடனில் கடும் பனி பொழிவு; பிரதான வீதியில் சிக்கிய 1000 வாகனங்கள்
Published By: DIGITAL DESK 3 05 JAN, 2024 | 12:00 PM சுவீடனில் 24 மணித்தியாலத்திற்கு மேலாக பொழிந்த கடும் பனியினால் ஸ்கேன் பகுதியில் உள்ள E22 பிரதான வீதியில் 1000 வாகனங்கள் சிக்கியுள்ளன. சுவீடனில் செவ்வாய்க்கிழமை கடும் குளிரினால் வெப்பநிலை -40 டிகிரி செல்சியஸிற்கும் கீழ் வெப்பநிலை குறைந்துள்ளது. ஹார்பி மற்றும் கிறிஸ்டியான்ஸ்டாட் இடையே இரு திசைகளிலும் பனி சூழ்ந்ததால் புதன்கிழமை அந்நாட்டு உள்ளூர் நேரப்படி காலை 9.00 மணிக்கு E22 பிரதான வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டது. இந்நிலையில், E22 பிரதான வீதியில் காரில் சிக்கி இருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், வியாழக்கிழமை காலை வரை லொறி சாரதிகள் மட்டுமே தங்கள் வாகனங்களில் இருந்ததாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சுமார் 180 வாகனங்களை விடுவிக்க இன்னும் முயற்சி செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பாவில் கடும் பனி பொழிவால் நோர்டிக் நாடுகளில் வெப்பநிலை குறைந்துள்ளது. இதன் காரணமாக சுவீடன், பின்லாந்து மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் கடுமையான குளிர் வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், புதன் கிழமை முதல் டென்மார்க்கில் பனிப்புயலால் ஆர்ஹஸ் அருகே உள்ள அதிவேக வீதியில் வாகனங்கள் சிக்கியுள்ளன. https://www.virakesari.lk/article/173177
-
நாட்டின் முன்னேற்றத்திற்காக வட மாகாணத்திலிருந்து பெரும் பங்களிப்பை பெற்றுக்கொள்ள முடியும் - ஜனாதிபதி
3 பிரதான கல்வி கேந்திர நிலையங்களில் ஒன்றாக வடக்கு உருவாக்கப்படும் - ஜனாதிபதி 05 JAN, 2024 | 07:21 PM ஒரே திட்டத்தின் கீழ் அடுத்த 05 வருடங்களில் வட. மாகாணம் முழுமையான அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்லப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்திற்கு 50% க்கும் அதிகமான பங்களிப்பை வழங்கும் மேல் மாகாணம் நாட்டு பொருளாதாரத்தின் எஞ்சின் ஆக இயங்குகிறது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களையும் அதனுடன் இணைத்துக்கொண்டு 05 பிரதான எஞ்சின்களுடன் இந்நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வவுனியா மாவட்ட கலாசார மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை (05) நடைபெற் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கான விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களின் கல்வி,சுகாதாரம், மீள்குடியமர்த்தல், காணி, மின்சாரம்,குடிநீர், சுற்றுலா, வனவன பாதுகாப்பு, மீன்பிடித் துறைகளில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதோடு, சில பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஜனாதிபதி அவ்விடத்திலேயே அறிவித்தார். கொழும்பு, கண்டி, வடக்கு இந்நாட்டின் மூன்று பிரதான கல்வி கேந்திர நிலையங்களாக உருவாக்கப்படும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், "எமது நாட்டின் பொருளாதாரத்திற்கு ஒரு எஞ்சின் மாத்திரமே உள்ளது. அதற்கு 50% பங்களிப்பு மேல் மாகாணத்திலிருந்தே பெறப்படுகிறது. மற்றை மாகாணங்களிலிருந்து கிடைக்கும் பொருளாதார பங்களிப்பு மந்தமான நிலையிலேயே உள்ளது. நாடு என்ற வகையில் முன்னேறிச் செல்வதற்கு எஞ்சின்களின் எண்ணிக்கையையை அதிகரிக்க வேண்டும். அதற்காக மற்றைய மாகாணங்களின் பொருளாதாரத்தையும் பலப்படுத்த வேண்டும். அதற்காக சில மாகாணங்கள் அறியப்பட்டுள்ளன. வடக்கு,மேற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் இலங்கையின் தேசிய பொருளாதாரத்திற்கு பெருமளவான பங்களிப்பை வழங்கும் மாகாணங்களாக மேம்படுத்தப்பட வேண்டும். தற்போது நிதி பலமும் இருப்பதால் இடைநிறுப்பட்ட வேலைத்திட்டங்களை மீள ஆரம்பிக்க முடியும். அதேபோல் வெளிநாட்டு நிதியில் முன்னெடுக்கப்படும் திட்டங்களை தொடர்வதற்கான உதவிகளும் கிடைக்கப்பெறவுள்ளன. மேலும் வட.மாகாணத்திடமிருந்து இந்நாட்டின் அபிவிருத்திக்கு பெரும் பங்களிப்பை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. வட. மாகாணத்திலிருந்து காற்று மற்றும் வெப்ப நிலை காரணமாக மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி தயாரிப்புக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. வட. மாகாணத்தில் தயாரிக்கூடிய மின்சாரத்தின் அளவை கணக்கிட்டு பார்க்கும் போது எஞ்சிய தொகையை இந்தியாவுக்கு விற்பனை செய்து பணம் பெறக்கூடிய நிலையும் உள்ளது. அதற்கான பேச்சுவார்தைகள் தற்போதும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வட.மாகாணத்தின் விவசாயிகள் திறமையும் செயற்திறனும் கொண்டவர். விவசாய நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் வட.மாகாணத்தின் விவசாய நிலங்களை முகாமைத்துவம் செய்வதன் வாயிலாக ஏற்றுமதி விவசாய தொழிற்துறையை பலப்படுத்தலாம் " என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன நாட்டின் பொருளாதாரம் பெரும் பாதாளத்தில் விழுந்து கிடந்த போது நாட்டை பொறுப்பேற்றுக்கொண்டு பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியமை சிறப்புக்குரியதாகும். ஜனாதிபதி நாட்டை பொறுப்பேற்றுக்கொண்ட போது சமயல் எரிவாயு இருக்கவில்லை, எரிபொருள் இருக்கவில்லை. மின் துண்டிப்பு தொடர்ச்சியாக நீடித்தது. வெளிநாட்டு கையிருப்பு முற்றாக தீர்ந்துப்போயிருந்தது. அவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி நாட்டை பொறுப்பேற்றுக்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தினார். அதனால் இன்று வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை மீள ஆரம்பிக்க முடிந்துள்ளது. வட. மாகாணத்தின் வீதிக் கட்டமைப்புக்களை பலப்படுத்த ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கினார். அதேபோல் போக்குவரத்து செயற்பாடுகளை பலப்படுத்தி சுற்றுலா வலயமாக மேம்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படு வருகின்றன. வட. மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் கடந்த முறை உயர்தரத்தில் நாடளாவிய ரீதியில் முதலிடத்தை யாழ்ப்பாணம் பெற்றுக்கொண்டது. க.பொ.த. சாதாரண தர பரீட்சையிலும் சிறப்பான பெறுபேறுகள் கிடைத்திருந்தன. மடு மற்றும் துணுக்காய் பிரதேசங்களை இணைத்து கல்வி வலயங்களாக மாற்ற திட்டமிட்டுள்ளோம். வட. மகாண கல்வி அபிவிருத்திக்காக அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் தாமாக முன்வந்து செயற்திறனுடன் பணியாற்றி வருகின்றனர். அது தொடர்பில் மகிழ்ச்சியடைய முடியும். சுகாதார துறையில் காணப்படும் பிரச்சினைகளை நிவர்த்திகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், விவசாய அபிவிருத்தி திட்டங்கள் பலவும் தற்போதும் ஆரம்பிக்கபட்டுள்ளன. குறிப்பாக இதுவரையில் பயிர்செய்யப்படாத நிலங்களில் பயிர்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பிலான தலையீடுகளை மேற்கொண்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கிறோம். இப்பிரதேச விவசாயிகளின் அறுவடைகளை கொண்டுச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் தொடர்பில் போக்குவரத்து அமைச்சருடன் கலந்துரையாடி தீர்வுகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கிறோம். இராஜாங்க அமைச்சர் கே. காதர் மஸ்தான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த முறை எமது பிரதேசத்திற்கு விஜயம் செய்த போதும் இங்குள்ள தேவைகளை ஆராய்ந்து அவற்றை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தார். இம்முறையும் ஜனாதிபதியை வரவேற்று நன்றி கூறுகின்றோம். முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாயத்திற்கு தேவையான காணிகளை விடுவிப்பதற்கான ஏற்பாடுகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், குளங்களைச் சுற்றியுள்ள பகுதிகளை விவசாயத்திற்கு விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கிறோம். அத்துடன், யானை வேலி பராமரிப்பு மற்றும் மீன்பிடி பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றோம். வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினறுமான குலசிங்கம் திலீபன் வவுனியா மாவட்டத்தில் காணி விடுவிப்பு தொடர்பான அறிவிப்பு முதன்முறையாக வனவள திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது. அதற்காக ஜனாதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கின்றேன். வவுனியா மாவட்டத்தில் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான ஆலோசனையை ஜனாதிபதி முன்வைத்துள்ளார். அதற்கு தேவையான மேய்ச்சல் நிலங்களை விடுவிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம். பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், ஜனாதிபதியின் வருகைக்கு நன்றி தெரிவிக்கிறோம். வரவு செலவுத்திட்ட கூட்டத்தொடரின் போது மூன்று அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது. அவர்களில் இருவரை நீங்கள் விடுவித்துள்ளீர்கள். அதற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.நோகராதலிங்கம் ஜனாதிபதியின் வருகைக்கு நன்றி தெரிவிக்கிறோம். வவுனியாவில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் புதிய பொருளாதார மத்திய நிலையத்தை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இறுதி யுத்தத்தின் போது கைது செய்யப்பட்ட சுமார் 12 அரசியல் கைதிகள் இன்னமும் உள்ளதாகவும், அவர்களை விடுவிக்க அல்லது பிணையில் விடுவிக்க விசேட அனுமதி வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், யுத்தம் நிறைவடைந்தாலும் வவுனியாவில் அபிவிருத்திப் பணிகள் குறிப்பிடத்தக்க அளவில் நடைபெறவில்லை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி வருகின்றார். காணி விடுவிப்புப் பணிகளை நீங்கள் நம்பிக்கையுடன் ஆரம்பித்துள்ளதால், அதற்கு உரிய தீர்வுகள் கிடைக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம். மேலும், மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளின் அபிவிருத்திப் பணிகளை விரைவாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன், செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், எஸ். நோஹரதலிங்கம், வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதி தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய, சமூக அலுவல்கள் தொடர்பான ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் ரஜித் கீர்த்தி தென்னகோன், வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ. சரத் சந்திர மற்றும் வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/173235
-
கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படையினர் 8 பேருக்கு மரண தண்டனை: மத்திய அரசு என்ன சொல்கிறது?
கத்தார்: முன்னாள் கடற்படை அதிகாரிகளின் மரண தண்டனை சிறை தண்டனையாக குறைப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கு தண்டனை 3 மணி நேரங்களுக்கு முன்னர் கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை நிறுத்தப்பட்டு வெவ்வேறு அளவிலான சிறைத் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. இவர்கள் 60 நாட்களில் தங்களது சிறைத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம். கத்தார் அல்லது இந்தியா என இரண்டு நாடுகளுமே அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பற்றிய விவரங்களை இதுவரை வெளியிடவில்லை. ஆனால், ஃபினான்ஷியல் டைம்ஸ், ராய்ட்டர்ஸ் செய்தி முகமை ஆகியவை அந்த அதிகாரிகள் இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக அடையாளம் தெரியாத வழியிலிருந்து தகவல் கிடைத்ததாக செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா, கத்தார் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இதுவரை இதுகுறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்த வழக்கின் நீதிமன்ற ஆணையும்கூட பொதுவெளியில் பகிரப்படவில்லை. அரசின் ராஜதந்திர சோதனையாகப் பார்க்கப்பட்ட இந்த வழக்கின் முக்கியமான முன்னேற்றங்களை மட்டுமே இந்தியா வெளியிட்டு வந்தது. வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மரண தண்டனையைக் குறைக்கும் நீதிமன்ற ஆணையைத் தற்போது அந்த 8 பேரின் சட்டக் குழு பெற்றுள்ளது என்றும், மேலும் அதுவொரு "ரகசிய ஆவணம்" என்றும் கூறியுள்ளார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்நிறுவனத்தில் பணிபுரியும் அனைவரும் இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். “இந்தியாவை சேர்ந்த 8 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு, வெவ்வேறு கால அளவிலான சிறைத் தண்டனைகளாக மாற்றப்பட்டுள்ளது என்பதை உங்களுக்கு உறுதிப்படுத்துகிறோம்," என்று அவர் கூறினார். மேலும் தீர்ப்பை எதிர்த்து 60 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், சிறைத் தண்டனையின் அளவு என்ன என்பதை அவர் வெளியிடவில்லை. “அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது தற்போது சட்டக்குழுவின் முடிவு” என்று அவர் கூறியுள்ளார். கடந்த 2023 அக்டோபர் மாதம், முதலில் கத்தார் முதன்மை அமர்வு நீதிமன்றம் 8 பேருக்கும் மரணதண்டனை விதித்தபோது, இந்தியா “மிகவும் அதிர்ச்சி” அடைந்ததாகக் கூறியது. அப்போது அனைத்து விதமான சட்டரீதியான வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருவதாகக் கூறிய வெளியுறவுத்துறை அமைச்சகம், பின்னர் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்தது. நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் அவர்களை நமது நாட்டின் “முன்னாள்-படைவீரர்கள்” என்று குறிப்பிட்டார். அந்த 8 பேரின் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் அவர்களின் கடற்படை பணி குறித்த விவரங்களை உள்ளூர் ஊடகங்களிடம் உறுதிப்படுத்தியுள்ளனர். மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 பேர் யார்? மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தவர்களில் கமாண்டர் பூர்ணேந்து திவாரி, கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் சௌரப் வசிஷ்டா, கேப்டன் வீரேந்திர குமார் வர்மா, கமாண்டர் சுக்னகர் பகாலா, கமாண்டர் சஞ்சீவ் குப்தா, கமாண்டர் அமித் நாக்பால் மற்றும் மாலுமி ராகேஷ் ஆகியோர் அடங்குவர். இவர்கள் பாதுகாப்பு சேவை நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தனர். இந்நிறுவனத்தில் பணிபுரியும் அனைவரும் இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியது. இந்திய அரசு மரண தண்டனை செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்ததாகத் தெரிவித்தது. இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கான அனைத்து சட்ட வழிகளையும் ஆராய்வதாகவும் வெளியுறவு அமைச்சகம் அப்போது தெரிவித்திருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராணுவ நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதற்கு கத்தார் அரசுக்கு இந்நிறுவனம் உதவுவதாக பல ஊடக அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளன. நிறுவனத்தின் செயல்பாடுகள் என்ன? நிறுவனத்தின் பழைய இணையதளம் இன்னும் புதுப்பிக்கப்படாமல் உள்ளது. கத்தார் அமிரி தேசியப் படைக்கு (QENF) பயிற்சி, தளவாடங்கள் மற்றும் பராமரிப்பு சேவைகளை வழங்கியுள்ளது என்று நிறுவனத்தின் இணையதளப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய இணையதளத்தில் நிறுவனத்தின் பெயர் டஹ்ரா குளோபல் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கத்தார் அமிரி தேசிய படைக்கு வழங்கப்பட்ட அதன் சேவைகள் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதன் தலைமைப் பொறுப்புகளில் இருந்த கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படை அதிகாரிகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ராணுவ நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதற்கு கத்தார் அரசுக்கு இந்நிறுவனம் உதவுவதாக பல ஊடக அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளன. இருப்பினும், இதற்கான உறுதியான ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்கள் கைது செய்யப்படுவதற்கு முன் நான்கு முதல் ஆறு ஆண்டுகள் டஹ்ராவில் பணிபுரிந்துள்ளனர். முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு நிறுவனத்துடனான தொடர்பு என்ன? இந்த வழக்கில் சிக்கியுள்ள 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களில் ஒருவரான கமாண்டர் பூர்ணேந்து திவாரி இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார். இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக 2019இல் அவருக்கு பிரவாசி பாரதிய சம்மன் விருது வழங்கப்பட்டது. அப்போது கத்தாருக்கான அப்போதைய இந்தியத் தூதரும், கத்தார் பாதுகாப்புப் படைகளின் சர்வதேச ராணுவக் கூட்டுறவின் முன்னாள் தலைவருமான பி.குமரன் மூலம் கௌரவிக்கப்பட்டார். இந்திய கலாசார மையத்தில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, இந்திய தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி கேப்டன் கவுசிக் விழாவில் கலந்துகொண்டார். தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்கள் கைது செய்யப்படுவதற்கு முன் நான்கு முதல் ஆறு ஆண்டுகள் டஹ்ராவில் பணிபுரிந்துள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இவர்களை கத்தாரின் உளவுத்துறை நிறுவனமான ஸ்டேட் செக்யூரிட்டி பீரோ கைது செய்துள்ளது. எதற்காக, எப்படி இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டன? மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகளை கத்தாரின் உளவுத்துறை நிறுவனமான ஸ்டேட் செக்யூரிட்டி பீரோ கைது செய்துள்ளது. அவர்கள் கைது செய்யப்பட்டது குறித்து 2022ஆம் ஆண்டு செப்டம்பர் நடுப்பகுதியில் இந்திய தூதரகத்துக்குத் தெரிய வந்தது. அவர்கள் கைது செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக அவர்களுக்கு தூதரக அனுமதி வழங்கப்பட்டது. அப்போது, இந்திய தூதரக அதிகாரி ஒருவர் இவர்களைச் சந்தித்தார். முன்னாள் கடற்படை அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகளை இந்திய அரசோ அல்லது கத்தார் அரசோ பொதுவெளியில் தெரியப்படுத்தவில்லை. https://www.virakesari.lk/article/173236
-
வற் வரி அதிகரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
வற் வரி அதிகரிப்புக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் 05 JAN, 2024 | 06:54 PM வற் வரி அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு, இராஜகிரியவில் இன்று வெள்ளிக்கிழமை (5) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியினால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (படப்பிடிப்பு- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/173234
-
ரூ.1 கோடி காப்பீட்டு தொகைக்காக நண்பரை கொன்ற ஜிம் மாஸ்டரை சிக்க வைத்த செல்போன்
4 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த செப்டம்பர் மாதம், சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த ஜிம் மாஸ்டரான சுரேஷ்குமார்(38) செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகிலுள்ள ஒரு குடிசைப் பகுதியில் உடல் முழுவதும் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் அவருடைய நண்பரும் எண்ணூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநருமான டெல்லி பாபு(39) என்பவரும் காணாமல் போனார். கடந்த செப்டம்பர் 16ஆம் தேதியன்று வீட்டிலிருந்து புறப்பட்ட டெல்லி பாபு வீடு திரும்பவில்லை. இதனால் டெல்லி பாபுவை கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று கோரி அவரது தாயார் லீலாவதி செப்டம்பர் 23ஆம் தேதியன்று எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதற்கிடையே மகனின் நண்பர் என்ற முறையில், இறந்துபோன சுரேஷின் உடலுக்கு டெல்லி பாபுவின் தாயார் லீலாவதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இந்த இருவேறு சம்பவங்களுக்கு இடையே என்ன தொடர்பு? எரிந்த நிலையில் சுரேஷ்குமார் சடலமாக மீட்கப்பட்டதற்கும் செப்டம்பர் 16ஆம் தேதியன்று டெல்லி பாபு காணாமல் போனதற்கும் என்ன தொடர்பு? உயிருடன் திரும்பிய சுரேஷ் படக்குறிப்பு, காணாமல் போனதாக நம்பப்பட்ட டெல்லி பாபு தனது மகனைக் காணவில்லை என்று அளித்த புகாரில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் டெல்லி பாபுவின் தாயார் லீலாவதி ஆட்கொணர்வு மனு ஒன்றை நவம்பர் மாதம் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், டெல்லி பாபுவைக் கண்டுபிடித்து ஒப்படைக்க உத்தரவிட்டது. இதற்குப் பிறகு காவல்துறையின் விசாரணை தீவிரமடைந்தது. காணாமல்போன டெல்லி பாபுவின் நணபர்களிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டது. அப்போது, அதே காலகட்டத்தில் டெல்லி பாபுவின் நண்பரான சுரேஷ் என்பவர் அச்சரப்பாக்கத்திற்கு அருகில் உள்ள அல்லானூர் பகுதியில் இருந்த குடிசையில் உடல் முழுதும் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது தெரிய வந்தது. இதை அந்த நேரடத்தில் தற்கொலை வழக்காக போலீசார் பதிவு செய்திருந்தனர். டெல்லி பாபு வழக்கை விசாரிக்கும்போது, அதே காலகட்டத்தில் சுரேஷும் இறந்து போயிருந்ததால், அவரது செல்போன் எண்ணை போலீசார்ர் ஆய்வு செய்தனர். அப்போது அந்த செல்போன் அரக்கோணம் பகுதியில் செயல்பாட்டில் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார்ர், அரக்கோணம் சென்றனர். அங்கு ஓரிடத்தில், சுரேஷ் தனது நண்பர்கள் ஹரி கிருஷ்ணன், கிரி ராஜன் ஆகியோருடன் தங்கியிருப்பது தெரிய வந்தது. ஏற்கெனவே இறந்து போனதாகக் கருதப்பட்ட சுரேஷ் உயிருடன் இருந்ததால், அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரையும் அவருடைய நண்பர்களையும் சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்தனர். இந்த விசாரணையில்தான் காப்பீட்டுப் பணத்தைப் பெறுவதற்காக தன் நண்பர்களுடன் இணைந்து டெல்லி பாபுவை சுரேஷ் கொலை செய்தது தெரிய வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்தக் கொலையை சுரேஷ் எப்படி திட்டமிட்டு மேற்கொண்டார் என்பதை விவரித்தனர். உருவ ஒற்றுமை கொண்ட நபருக்கான தேடுதல் வேட்டை படக்குறிப்பு, சுரேஷின் நண்பர் ஹரி கிருஷ்ணன் அவருடன் சேர்ந்து காப்பீட்டுத் தொகைக்காக திட்டமிட்டார். இந்த விசாரணையில்தான் சுரேஷ் ஒரு கோடி ரூபாய் காப்பீட்டுப் பணத்திற்காக தனது நண்பர்களுடன் இணைந்து டெல்லி பாபுவைக் கொலை செய்தது தெரிய வந்தது. இந்த வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரிகளிடம் பேசியபோது, அவர்கள் சுரேஷ் எப்படி இதைத் திட்டமிட்டுச் செயல்படுத்தினார் என்பது குறித்து விசாரணையில் கிடைத்த தகவல்களை விவரித்தனர். ஜிம் மாஸ்டரான சுரேஷ் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு விபத்துக் காப்பீடு செய்திருந்தார். இந்நிலையில், அந்தப் பணத்தைக் குறுக்கு வழியில் பெறுவதற்காக சுரேஷ் தனது நண்பர்களான கீர்த்தி ராஜன், ஹரி கிருஷ்ணன் ஆகியோருடன் இணைந்து திட்டமிட்டதாக இந்த வழக்கின் விசாரணை அதிகாரி தெரிவித்தார். அந்தக் காப்பீட்டு பணத்தைப் பெறுவதற்காக சுரேஷை போலவே இருக்கும் ஒருவரைக் கொலை செய்துவிட்டு, சுரேஷ்தான் இறந்துவிட்டதாகச் சொன்னால் காப்பீட்டுப் பணம் கிடைக்கும் என அவர்கள் திட்டமிட்டனர். இதற்காக ஜிம் மாஸ்டர் சுரேஷ் போலவே தோற்றமளிக்கும் ஒருவரை அவர்கள் தேடினர். அப்போதுதான் 20 ஆண்டுகளுக்கு முன்பு சுரேஷின் வீட்டில் வாடகைக்குக் குடியிருந்த டெல்லி பாபுவின் நினைவு அவருக்கு வந்துள்ளது. அவர் எண்ணூரில் வசிக்கும் தகவல் தெரிய வரவே, அவரைத் தேடிக் கண்டுபிடித்தனர். காப்பீட்டு பணத்திற்காக நடந்த கொலை படக்குறிப்பு, சுரேஷ் அவரைத் தேடிக் கண்டுபிடித்து நண்பரான பிறகு, டெல்லி பாபுவை அழைத்துக்கொண்டு சுரேஷும் அவரது நண்பர்களும் புதுச்சேரி சென்றனர். அங்கிருந்து பிறகு முன்பே திட்டமிட்டிருந்த குடிசை வீட்டுக்கு அவரை அழைத்துக்கொண்டு அனைவரும் சென்றதாக விவரித்தார் விசாரணை அதிகாரி. அந்தக் குடிசையில் வைத்துதான் சுரேஷ் மற்றும் அவரது நண்பர்கள் டெல்லி பாபுவை கழுத்தை நெறித்துக் கொலை செய்ததாகவும் விசாரணையில் தெரிய வந்ததாக காவல்துறை அதிகாரி குறிப்பிட்டார். இதற்குப் பிறகு உடலை எரித்துவிட்டு, சுரேஷ் தலைமறைவனார். டெல்லி பாபுவின் உடலைக் காட்டி அவர் சுரேஷ் இறந்துவிட்டதாக செய்தி பரப்பப்பட்டது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, “சுரேஷ் தனது நண்பர்களின் மூலமாக தனியார் காப்பீட்டு நிறுவனத்தை அணுகி பணத்தைப் பெற முயன்றார். அப்போது சுரேஷின் மரணம் இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் தற்கொலை எனப் பதிவு செய்யப்பட்டிருப்பதால் காப்பீட்டுப் பணத்தைத் தர முடியாது என காப்பீட்டு நிறுவனம் தெரிவித்துவிட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அடுத்து என்ன செய்வதென்ற குழப்பத்தால் சுரேஷும் அவரது நண்பர்களும் அரக்கோணம் பகுதிக்குச் சென்று பதுங்கியிருந்தார்கள். அங்குதான் அவர்கள் போலீசாரிடம் பிடிபட்டனர்,” என்று கூறினார் காவல்துறையைச் சேர்ந்த இந்த வழக்கின் விசாரணை அதிகாரி. மகன் உடல் எனத் தெரியாமல் அஞ்சலி செலுத்திய தாயின் வேதனை படக்குறிப்பு, டெல்லி பாபு கொலை செய்யப்பட்ட குடிசைப் பகுதி சுரேஷ் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் பரவியதும், டெல்லி பாபுவின் சகோதரரும் அவரது தாயும் நேரில் சென்று இறுதிச் சடங்கில் பங்கேற்றுள்ளனர். அப்போது சுரேஷின் உடல் எனத் தாங்கள் அஞ்சலி செலுத்தியது, தமது மகன் டெல்லி பாபுவுக்கு என்பது தெரிய வந்ததும் அவரது தாயார் டெல்லி பாபு நொறுங்கிப் போய்விட்டார். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், இந்த விவகாரம் பற்றிப் பேசுவதற்கு டெல்லி பாபுவின் குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். ஆனால், சுரேஷின் தாயார் மேரியையும் இந்த வழக்கில் விசாரிக்க வேண்டும் என்று டெல்லி பாபுவின் உறவினர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். https://www.bbc.com/tamil/articles/cnkd2d878w3o
-
நாட்டின் முன்னேற்றத்திற்காக வட மாகாணத்திலிருந்து பெரும் பங்களிப்பை பெற்றுக்கொள்ள முடியும் - ஜனாதிபதி
Published By: VISHNU 05 JAN, 2024 | 03:18 PM மாகாண மட்டத்தில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானது. எனவே, அவற்றில் மத்திய அரசாங்கம் தலையிடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதேபோல் அதிகாரப் பகிர்வு என்பது ஒரு அரசியல் எண்ணக்கருவாக மாத்திரம் அன்றி, பொருளாதார அடிப்படையிலும் யதார்த்தமாக அமைய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அதேபோல், மாகாண மட்டத்தில் சுயாதீன பொருளாதாரத்தை உருவாக்குவது தொடர்பிலான தெரிவை ஜப்பான், கொரியா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் போன்ற நாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறும், 13ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை தங்களது மாகாணத்தின் அபிவிருத்திக்காக தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டுமென அனைத்து மாகாணங்களினதும் மக்கள் பிரதிநிதிகளிடத்தில் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். யாழ். மாவட்ட தொழில் வல்லுனர்களுடன் யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை (04) நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். சகல துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில் வல்லுனர்கள் இதனில் கலந்துகொண்டிருந்ததோடு, நாட்டின் முன்னேற்றத்திற்கு அவர்கள் வழங்கிய யோசனைகள் மற்றும் அவர்களின் கேள்விகளுக்கும் ஜனாதிபதி சாதகமான பதில்களை வழங்கியதுடன, அவர்களுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார். 2024 -2025 இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் வருடங்களாகும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அதற்காக கொள்கை ரீதியில் மேற்கொள்ளப்படவிருக்கும் மூலோபாய மாற்றங்கள் குறித்தும் அறிவுறுத்தினார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2019 உயிர்த்தஞாயிறு தாக்குதலின் பின்னர் நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்து. 2020 ஆம் ஆண்டில் கொவிட் தொற்று காரணமாக மேலும் சரிவடைந்தது. அந்த நிலை 2022 இல் மேலும் மோசமாக மாறியிருந்ததோடு, 7% மறைப்பெறுமானத்தை விடவும் வீழ்ச்சியடைந்தது. அந்த நெருக்கடியான காலத்தை கடந்து 2023 ஆம் ஆண்டில் ஓளரவு பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் இயலுமை எமக்கு கிட்டியது. 2023 ஆம் ஆண்டில் முதல் இரு காலாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி குறைவாக காணப்பட்ட போதிலும் அடுத்த இரு காலாண்டுகளில் வளர்ச்சி ஏற்பட்டது. குறிப்பாக நான்காம் காலாண்டியில் முன்னேற்றகரமான வளர்ச்சியை காண முடிந்தது. அந்த அடிப்படையில் ,இவ்வருடத்தில் 3% பொருளாதார வளர்ச்சியை பெற்றுக்கொள்ள நாம் எதிர்பார்ப்பதோடு, 2025 ஆம் ஆண்டில் 5% ஆக பொருளாதார வளர்ச்சியை பலப்படுத்த எதிர்பார்க்கிறோம். இவ்வாறு நாம் முன்னோக்கிச் செல்ல முடியும். இவ்விரு வருடங்களும் நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்தும் வருடங்களாகும். இன்று நாம் நாட்டின் பொருளாதார முறைமையை மாற்றியுள்ளோம். இன்று நாம் பணம் அச்சிடுவதில்லை. அச்சிடும் பட்சத்தில் ரூபாயின் பெறுமதி குறைந்து பணவீக்கம் அதிகரிக்கும். அதேபோல் வங்கிகளிடத்திலிருந்து கடன் பெறுவதும் இல்லை. எமது அரச வங்கிக் கட்டமைப்புக்களும் நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளன. அதனால் கடன் மற்றும் பணம் அச்சிடும் செயற்பாடுகளை விடுத்தே நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். அதனாலேயே கடன் வழங்குநர்களிடத்தில் நடத்திய பேச்சுவார்த்தையின் போது இந்நாட்டின் பொருளாதாரத்தை போதிய அளவு பலப்படுத்த முடியுமா? என்ற கேள்வி எழுந்தது. அதனால் நாம் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும். நாம் இவ்வருடத்தில் 12% மொத்த தேசிய உற்பத்தியை பெற்றுக்கொள்ள வேண்டும். இறுதியில் 15% ஆக அதனை பலப்படுத்திக்கொள்ள வேண்டியதும் அவசியமாகும். அதனாலேயே இவ்வருடத்தில் வற் வரியை அதிகரிக்க நேரிட்டது. போதியளவு வருமானம் உள்ள பொருளாதாரம் ஒன்று எமக்கு அவசியம். அதேபோல் நாம் வரவு செலவு திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். எமது தேவைகளுக்காகவும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். எமது வருமானத்தில் அதிக தொகையை கடன் வட்டியாக செலுத்த நேர்ந்துள்ளமையே பெரும் பிரச்சினையாகும். அந்த பிழையை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். சில நேரங்களில் அரசாங்கம் தங்களது இயலுமைக்கு மிஞ்சிய செலவுகளை செய்துள்ளது. இவ்வாறான தவறுகளை சரிசெய்து நாம் முன்னேற வேண்டும். எனவே எமக்கு புதிய பொருளாதாரம் தேவை. நாம் திட்டமிட்ட அடிப்படையில் நாட்டில் அந்தப் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி வருகின்றோம். இது ஒரு தொழில் வாய்ப்பை உருவாக்கும் பொருளாதாரம். மேலும் அது நமக்கு அந்நியச் செலாவணியை மேலதிகமாகக் கொடுக்கும், அதிக வருமானத்தைத் தரும் பொருளாதாரமாக இருக்க வேண்டும். அதன்போது ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட விவசாயப் பொருளாதாரம் தொர்பில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். வடக்கு மாகாணத்தை தனித்துவமான பொருளாதார மையமாக கட்டியெழுப்ப முடியும். மேலும், வடக்கை புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மையமாக உருவாக்க முடியும். வட. மாகாணத்தின் அபிவிருத்திக்குத் தேவையான அனைத்து வளங்களும் இங்கு உள்ளன. வடக்கின் அபிவிருத்திக்கு மட்டுமன்றி முழு நாட்டின் அபிவிருத்திக்கும் பங்களிக்க முடியும். அதற்கு போதுமான அதிகாரப்பகிர்வு ஏற்கனவே இடம்பெற்றுள்ளது. அந்த செயற்பாடுகளுக்கு 13 ஆவது திருத்தத்தின் மூலம் கிடைத்துள்ள அதிகாரங்களே போதுமானது என நினைக்கின்றோம். கொழும்பில் இருந்து பணம் வரும் வரை காத்திருக்காமல் அனைவரும் ஒன்றிணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன். நாம் ஜப்பான் தொடர்பில் கவனம் செலுத்தினால், ஜப்பான் சமஷ்டி ஆட்சியுள்ள ஒரு நாடு அல்ல. ஆனால் அதன் அனைத்து மாகாணங்களும் அபிவிருத்தி அடைந்துள்ளன. அதேபோன்று, கொரியா, ஐக்கிய இராச்சியம், ஸ்கொட்லாந்து ஆகிய நாடுகள் அந்த வளர்ச்சியை எட்டியுள்ளன. அப்படியானால் ஏன் ஒரு நாடாக எமக்குரிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது? அதிகாரப் பகிர்வு பற்றி கதைப்பதுபோன்று, அந்த அதிகாரங்களை தமது மாகாணங்களின் வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் பயன்படுத்த வேண்டும். நாம் அரசியல் ரீதியாக அதிகாரப்பகிர்வு பற்றி பேசுகிறோம். சட்டத்தால் இந்த அதிகாரங்கள் அனைத்தையும் வழங்கலாம். ஆனால் உங்களின் மாகாணத்தை அபிவிருத்தி செய்ய போதிய பணம் இல்லை என்றால் அதன் பெறுமதி என்ன என்று நாம் கண்டறிய வேண்டும். அதிகாரப் பகிர்வு குறித்து நாம் பல்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தலாம். ஆனால் இன்றைய நிலவரப்படி மேல் மாகாணத்தால் மாத்திரமே தனது சொந்த செலவை செய்ய முடிகிறது. அதன்படி, எனைய அனைத்து மாகாணங்களும் மேல் மாகாணத்துடன் இணைகின்றன. எனவே, தமது மாகாணத்தை அபிவிருத்தி செய்ய, தங்கள் சொந்த மாகாணங்களுக்குள் வலுவாக இருக்க வேண்டும். உங்கள் மாகாணத்தில் ஒரு வெளிநாட்டு மொழிப் பாடசாலையை நிறுவ விரும்பினால், அதற்கு அரசாங்கம் ஏன் பணம் வழங்க வேண்டும்? அதற்கான கேள்வி மற்றும் தேவை இருந்தால், நீங்கள் அதை எளிதாக ஆரம்பிக்க முடியும். மாணவர்கள் கல்வியைத் தொடர தேவையான உதவிகளை அரசாங்கம் வழங்குகிறது. உலகின் ஒவ்வொரு நாட்டிலும் கல்வி இப்படித்தான் செயல்படுகிறது. இந்த நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை சீர் செய்யத்தான் என்னால் முடியும். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, அங்கஜன் இராமநாதன், வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உள்ளிட்ட பலர் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர். மேலும் அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற “Zee Tamil” சரி கம ப “little champs 2023” போட்டியில் மகுடம் சூடிய கில்மிஷா உதயசீலன் சிறுமி தனது குடும்பத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார். 14 வயதான கில்மிஷா உதயசீலன் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர் என்பதோடு, இலங்கை சிறுமியொருவர் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றி வெற்றி பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும். கில்மிஷா உதயசீலன் சிறுமி நாட்டுக்கு தேடித்தந்த புகழுக்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி, அவரது கல்வி செயற்பாடுகள் மற்றும் இசை வாழ்விலும் வெற்றிபெற ஆசிகளை தெரிவித்தார். இதன்போது கில்மிஷா ஜனாதிபதி முன்னிலையில் பாடல் ஒன்றையும் பாடினார். https://www.virakesari.lk/article/173201
-
இலங்கைக்கு 20 ரயில் எஞ்ஜின்களை இலவசமாக வழங்கும் இந்தியா!
05 JAN, 2024 | 12:45 PM இலங்கைக்கு 20 ரயில் எஞ்ஜின்களை இலவசமாக வழங்க இந்திய அரசாங்கம் முன்வந்துள்ளது. பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட 20 டீசல் எஞ்ஜின்களை இலங்கை்க்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் எச்.எம்.கே.டபிள்யூ.பண்டார தெரிவித்துள்ளார். அவற்றை இந்நாட்டின் ரயில் பாதைகளில் இயக்க முடியுமா என சமீபத்தில் இந்தியா வந்த ரயில்வே துறை நிபுணர்கள் குழு ஆய்வு செய்திருந்தது. இதனையடுத்தே முதல் கட்டமாக எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டு எஞ்ஜின்களை இலங்கைக்கு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/173190
-
அதிசய பறவை: பாதி ஆண், மறுபாதி பெண் - எப்படி சாத்தியம்?
படக்குறிப்பு, பொதுவாக இருபாலுயிரிகள் ஆண்-பெண் பாலுறுப்புகளை தனித்தனியே கொண்டிருக்கும். 2 மணி நேரங்களுக்கு முன்னர் கொலம்பியாவின் மனிஸேல்ஸ் நகருக்கு தென்-மேற்கில் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள டான் முகெல் இயற்கை சரணாலயத்தில், பறவைகள் ஆர்வலர் ஜான் முரில்லோ பறவை ஒன்றை கண்டபோது, அதில் ஏதோ ஒன்று தனித்துவமாக இருப்பதை உணர்ந்தார். இந்த பச்சை நிற ஹனி க்ரீப்பர் பறவையினம் (க்ளோரோஃபேன்ஸ் ஸ்பைஸா) பரவலாக காணப்படும் ஒன்றுதான். ஆனால், ஜான் முரில்லோ கண்ட பறவை நிச்சயமாக குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஆண்-பெண் தன்மைகள் இரண்டுமே அந்த பறவையிடம் இருந்தன. அந்த இனத்தின் பெண் பறவைகளிடம் காணப்படுவது போன்று இடதுபுறத்தில் பச்சை நிற இறகுகளும் வலதுபுறத்தில் ஆண் பறவைகளை போன்று நீல நிற இறகுகளும் இருந்தன. தான் கண்டுபிடித்ததை பரிணாம மரபியல் நிபுணரும் நியூசிலாந்தின் ஒட்டாகோ பல்கலைக்கழகத்தின் உயிரியல் பேராசிரியருமான ஹேமிஷ் ஸ்பென்சரிடம் பகிர்ந்துகொண்டார். ”மிகவும் உற்சாகமான தருணமாக அது இருந்தது. பறவை ஆர்வலர்கள் தங்கள் வாழ்நாள் முழுதும் செலவழித்தாலும் காண முடியாத ஒன்று இது. ஆண்-பெண் தன்மைகளை ஒரே உடலில் கொண்டிருக்கும் இத்தகைய இனத்தை ஜான் முரில்லோவின் கண்டுபிடிப்பின் மூலம் பார்த்து நான் பயனடைந்ததை பெருமையாக நினைக்கிறேன்,” என அந்த சமயத்தில் கொலம்பியாவில் விடுமுறையை கழித்துக்கொண்டிருந்த ஹேமிஷ் ஸ்பென்சர் பிபிசியிடம் தெரிவித்தார். இத்தகைய அதிசயம் பறவைகளிடம் காண்பது மிக அரிதானது. தன் சொந்த நாடான நியூசிலாந்தில் இருந்து அப்படி ஒரு உதாரணம் கூட இல்லை என்கிறார் அவர். படக்குறிப்பு, 100 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த இனங்களில் பதிவுசெய்யப்பட்ட இரண்டாவது உதாரணம் இது மிகவும் அரிதான சூழல் “இந்த அரிதான சூழலில் ஒரு உயிரினம் ஒருபுறத்தில் ஆண் தன்மைகளையும் மற்றொரு புறத்தில் பெண் தன்மைகளையும் கொண்டிருக்கும்” என்கிறார் அவர். இந்த பறவை குறித்து பறவையினங்கள் குறித்து வெளியிடப்படும் ஆய்விதழான ’ஃபீல்ட் ஆர்னிதாலஜி’ எனும் இதழில் பேராசிரியர் ஹேமிஷ் ஸ்பென்சர், ஜான் முரில்லோ உள்ளிட்டோருடன் இணைந்து கட்டுரை எழுதியுள்ளார். “இந்த அதிசயம், அதிகளவில் விலங்குகளிடையே காணப்படுகிறது. அதில் பெரும்பாலானவை இருவகையான பாலியல் பண்புகளை கொண்டிருக்கும் (பெரும்பாலும் எளிதில் கண்டறிய முடியும்)” என்கிறார் அவர். இது, 100 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த இனங்களில் பதிவுசெய்யப்பட்ட இரண்டாவது உதாரணம். "பொதுவாக இருபாலுயிரிகள் ஆண்-பெண் பாலுறுப்புகளை தனித்தனியே கொண்டிருக்கும். இது அவற்றின் பாலின நிர்ணயம் மற்றும் பாலியல் நடத்தை பற்றிய நமது புரிதலுக்கு முக்கியம்” என, ஒட்டாகோ பல்கலைக்கழகத்திலிருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் பேராசிரியர் ஸ்பென்சர் தெரிவித்துள்ளார். “ஆனால், ஒருபுறம் ஆண் தன்மையும் மறுபுறம் பெண் தன்மையும் கொண்ட இந்த பறவையில், இருபுறமும் பெண்ணாகவோ அல்லது ஆணாகவோ இருக்கலாம்,” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருபால் பறவையாக உருவெடுத்தது எப்படி? "இருபால் இறகுகளை பறவைகள் கொண்டிருப்பது, உடல் முழுவதும் உள்ள ஹார்மோன் வேறுபாட்டைக் காட்டிலும் அதன் அருகே அமைந்திருக்கும் செல்களின் குரோமாசோம்கள் அமைப்பால் ஏற்படுகிறது,” என அவர் பிபிசியிடம் தெரிவித்தார். இது, பல்வேறு பூச்சியினங்களிடையே காணப்படுகிறது. குறிப்பாக, பட்டாம்பூச்சிகள், கணுக்காலிகள், சிலந்திகளிலும் பல்லி, எலிகள் போன்ற கொறித்துண்ணிகளிலும் காணப்படுகிறது. இந்த நிகழ்வு "ஒரு முட்டையை உற்பத்தி செய்ய பெண்ணின் உயிரணுப் பிரிவின் போது ஏற்படும் பிழையிலிருந்து எழுகிறது, அதைத் தொடர்ந்து இரண்டு விந்தணுக்களால் இரட்டை கருத்தரித்தல் ஏற்படுகிறது" என அவர் சுட்டிக்காட்டுகிறார். 21 மாத கவனிப்பு இரண்டாம் நிலை காடுகளின் பெரிய பகுதிகளைக் கொண்ட ஒரு பண்ணையான டான் முகெல் இயற்கை சரணாலயத்தில், பறவைகளுக்கான உணவு நிலையம் உருவாக்கப்பட்டது. அங்கு பறவைகளுக்கு புதிய பழங்கள் மற்றும் சர்க்கரை தண்ணீர் வழங்கப்படுகிறது. இது பறவைகளை கண்காணிக்க சிறந்த இடமாக உள்ளது. இந்த பறவை அங்கு "குறைந்தபட்சம் 21 மாதங்கள் இருந்தது. மேலும் அதன் நடத்தை, மற்ற பச்சை ஹனி க்ரீப்பர் இன பறவைகளுடன் பொருந்துகிறது" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட சமயத்தில் அப்பறவை, “மற்ற பறவைகளிடமிருந்து தனித்திருந்தது. மேலும், அதன் இனத்தைச் சேர்ந்த மற்ற பறவைகளுக்கு உணவளிக்க விடாமல் தடுத்தது,” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏன் அந்த பறவை அப்படி செய்கிறது என்பதை தங்களால் உறுதியாக கூற முடியவில்லை என ஆய்வாசிரியர்கள் சுட்டிக்காடுகின்றனர். “பொதுவாகவே அந்த இனத்தின் மற்ற பறவைகளை அந்த பறவை புறக்கணிக்கிறது. மற்ற பறவைகளும் அதை புறக்கணிக்கின்றன. எனவே, அந்த பறவைக்கு இனப்பெருக்கம் செய்வதற்கான எந்த வாய்ப்பும் கிடைத்திருக்காது” என அந்த அறிக்கை கூறுகிறது. அந்த பறவை தன் வாரிசுகளை விட்டுச்செல்லா விட்டாலும் ஏற்கனவே விலங்குகள் ராஜ்ஜியத்தில் அதன் அடையாளத்தை உருவாக்கியிருக்கிறது என்பதுதான் உண்மை. https://www.virakesari.lk/article/173190
-
ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம்: வவுனியாவில் பதற்றம்!
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மீது பொலிசார் பலப்பிரயோகம் ; சங்கத் தலைவி உள்ளிட்ட இருவர் கைதுசெய்யப்பட்டதால் பதற்றம் ! Published By: VISHNU 05 JAN, 2024 | 01:01 PM வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மீது பொலிசார் பலப்பிரயோகத்தை முன்னெடுத்ததுடன் சங்கத்தின் தலைவி உட்பட இருவர் வலுக்கட்டாயமாக கைதுசெய்யப்பட்டனர். இதனால் குறித்த பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெள்ளிக்கிழமை (5) வவுனியாவிற்கு விஜயம் செய்திருந்ததுடன் நகரசபை மண்டபத்தில் இடம்பெறும் வன்னிமாவட்டங்களிற்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார். இதனையடுத்து வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்காக நிகழ்வு இடம்பெற்ற மண்டபத்திற்குள் செல்ல முற்ப்பட்டனர். அவர்களை தடுத்து நிறுத்திய பொலிசார் ஜனாதிபதியை சந்திப்பதற்கு அனைவருக்கும் அனுமதி வழங்கமுடியாது என்றும் ஒருவருக்கு மாத்திரம் அனுமதி வழங்கமுடியும் என்றும் தெரிவித்தனர். இதனை மறுத்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அனைவரையும் அனுமதிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொலிசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்ப்பட்டது. இதனையடுத்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றா பொலிசாரால் குண்டுக்கட்டாக தூக்கிச்செல்லப்பட்டு பொலிசாரின் பேருந்தில் ஏற்றப்பட்டு கைதுசெய்யப்பட்டார். அவருடன் மற்றொரு பெண்ணும் கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த சம்பவத்தால் அந்தப்பகுதியில் குழப்பநிலை ஏற்ப்பட்டிருந்தது. இதேவேளை கைதுசெய்யப்பட்டிருந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றாவுக்கு இன்றையதினம் போராட்டம் எதனையும் முன்னெடுப்பதற்கு நீதவான் நீதிமன்றம் தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/173195
-
டேவிட் வார்னர்: 132 ஆண்டு வரலாற்றை திருத்தி ஆஸ்திரேலிய அணிக்குள் நுழைந்தவர்
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் ஆக்ரோஷமான இடதுகை பேட்டிங் , சிறந்த தொடக்க ஆட்டக்காரர் மட்டுமின்றி, களத்தில் நங்கூரமிட்டால், ஸ்விட்ச் ஹிட் பேட்டிங்கை சிறப்பாக கையாளக் கூடியவர். ஆப்சைடில் அதிகமாக விளையாடக் கூடியவர், டெஸ்ட் போட்டிகளில் ஸ்ட்ரைக் ரேட்டை ஒருபோதும் 52க்கு குறைவில்லாமல் வைத்துள்ளவர் டேவிட் வார்னர். டி20 நிபுணராக சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகினாலும் சட்டென தன்னை ஒருநாள், டெஸ்ட் போட்டிகளுக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டவர் டேவிட் வார்னர். ஆஸ்திரேலிய அணியில் உள்ள சிறந்த பீல்டர்களில் வார்னரும் குறிப்பிடத்தகுந்தவர். வார்னர் களத்தில் இருந்தாலே பெரும்பாலும் பீல்டிங்கை கோட்டைவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தது இல்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES 132 ஆண்டு வரலாற்றை திருத்தி எழுதியவர் ஆஸ்திரேலியக் கிரிக்கெட்டின் 132 கால வரலாற்றில் முதல் தரப் போட்டிகளில் விளையாடி தனது திறமையை நிரூபிக்காமல் ஒரு வீரர் தேசிய அணிக்குள் நுழையவே முடியாது. ஆனால், அனைத்தையும் முறியடித்து, முதல்தரப் போட்டிகளில் இடம் பெறாமலேயே தேசிய அணிக்குள் இடம் பெற்ற முதல் வீரர் டேவிட் வார்னர்தான். ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன், உலகக் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவர், இந்த தலைமுறையின் தலைசிறந்த பேட்டர், சர்ச்சைகளின் நாயகன் என்று வார்னரை அழைக்கலாம். டேவிட் வார்னர் தனது ஆஸ்திரேலிய அணியில் மட்டுமல்லாமல் பிக்பாஷ் லீக், ஐபிஎல் தொடர் என எதில் இடம் பெற்றாலும் தான் சார்ந்த அணிக்காக எந்தவிதமான சமரசமின்றி விளையாடி கோப்பையை வென்றுதரக்கூடிய மேட்ச் வின்னராகவே விளங்கினார். ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தது வார்னர் தலைமைதான். டெல்லி கேபிடல்ஸ் அணியிலும் இடம்பெற்று தனது திறமையை நிரூபிக்க வார்னர் தவறியதில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தது வார்னர் தலைமைதான். டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் ஓய்வு கிரிக்கெட்டிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாத, கிரிக்கெட்டை முழுமையாக நேசித்த டேவிட் வார்னர், டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக நடந்து வரும் 3ஆவது டெஸ்ட் போட்டியுடன் டேவிட் வார்னர் எனும் மகத்தான பேட்டரை ஆஸ்திரேலிய அணி இழக்கிறது என்றுதான் கூற முடியும். வார்னர் இடம் வெற்றிடமாக மாறும் இனிமேல் ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் போன்ற சிறந்த தொடக்க ஆட்டக்காரரை தேடி எடுக்க வேண்டிய மிகப்பெரிய சவால் ஆஸ்திரேலிய நிர்வாகத்துக்கு வந்துள்ளது. ஆடம் கில்கிறிஸ்ட், மார்க் டெய்லர், மேத்யூ ஹெய்டன், ஷேன் வாட்ஸன் போன்றோர் சென்றபின் அடுத்தடுத்து ஜாம்பவான்கள் அணிவகுத்து இருந்ததால், ஆஸ்திரேலிய வாரியத்தின் பணி எளிதாக இருந்தது ஆனால், தற்போதுள்ள ஆஸ்திரேலிய அணியில் இருக்கும் வீரர்கள் வார்னர் இடத்தை எவ்வாறு நிரப்பப் போகிறார்கள் என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES வலக்கையிலிருந்து இடக்கைக்கு மாறியவர் கடந்த 1986ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி சிட்னியின் புறநகரான பேடிங்டன் பகுதியில் பிறந்தவர் டேவிட் வார்னர். டேவிட் வார்னர் இடதுகை பழக்கம் கொண்டவராக இருந்தாலும், தொடக்கத்தில் கிரிக்கெட் பயிற்சி எடுத்தபோது வலதுகை பேட்டிங் செய்து வந்தார், அப்போது அவரால் பந்தை அதிக தொலைவுக்கு அடிக்க முடிந்தது. ஆனால், வார்னரின் தாயார் லோரன் வார்னர் அதற்கு சம்மதிக்கவில்லை வார்னருக்கு இடதுகை பேட்டராகவே பயிற்சி அளிக்க வேண்டும் என்று பயிற்சியாளரிடம் தெரிவித்தார். அதன்பின் வார்னர் இடதுகை பேட்டராகவே மாறி பயிற்சிஎடுத்தார். 16வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் சிட்னி கோஸ்டர் கிரிக்கெட் கிளப்பில் சேர்ந்து வார்னர் சிறப்பான ஆட்டத்தை நிரூபித்தார். இதையடுத்து வார்னரின் 19வயதில் மாநில கிரிக்கெட் அணியின் ஒப்பந்தமும் கிடைத்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இடதுகை பழக்கம் கொண்டவராக இருந்தாலும், தொடக்கத்தில் கிரிக்கெட் பயிற்சி எடுத்தபோது வலதுகை பேட்டிங் செய்து வந்தார் வார்னர். உள்நாட்டுப் போட்டிகளில் வார்னர் 2008ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக ஆடிய வார்னர். டாஸ்மானியா அணிக்கு எதிராக முதல்முறையாக உள்நாட்டில் சதம் அடித்தார். 2009ம் ஆண்டு நடந்த ஷெப்பீல்டு ஷீல்ட் சீசனிலும் முதல்முறையாக நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக முதல்தரப் போட்டியில் மேற்கு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக களமிறங்கினார். 6-வது வரிசையில் களமிறங்கிய வார்னர் 48 பந்துகளில் 42 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக வார்னர் விளையாடியபோது, உள்நாட்டில் ஒருநாள் போட்டியில் அதிக ரன் அடித்த பேட்டர் என்ற பெருமையைப் பெற்றார். 141 பந்துகளில் 197ரன்கள் குவித்து வார்னர் சாதனை செய்து அசத்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முதல் டி20 போட்டியிலேயே அசத்திய டேவிட் வார்னர் 43 பந்துகளில் 86 ரன்கள் குவித்து மிரட்டினார். 1877ம் ஆண்டுக்குப்பின் முதல்வீரர் டேவிட் வார்னரின் சாதனையையும், பேட்டிங் திறமையையும் பார்த்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அவரை 2009ஆம் ஆண்டு, தேசிய அணிக்குத் தேர்வு செய்தது. இதையடுத்து, 2009, ஜனவரி 11ம் தேதி மெல்போர்னில் நடந்த டி20 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டேவிட் வார்னர் அறிமுகமாகினார். 1877ம் ஆண்டுக்குப்பின் ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் வரலாற்றில் முதல்தரப் போட்டிகளில் அனுபவமே இல்லாத ஒரு வீரரை தேசிய அணிக்குள் தேர்ந்தெடுத்தது என்றால் அது டேவிட் வார்னர் மட்டும்தான். முதல் போட்டியிலேயே அசத்திய டேவிட் வார்னர் 43 பந்துகளில் 86 ரன்கள் குவித்து மிரட்டினார். டி20 போட்டி அறிமுகத்திலேயே 86 ரன்கள் குவித்து வார்னர் அசத்தினார். 2011, டிசம்பர் 1ம் தேதி, பிரிஸ்பேனில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் வார்னர் அறிமுகமாகினார். ஷேன் வாட்ஸன் காயத்தால் அணியில் இடம் பெறமுடியாமல் போகவே, வார்னருக்கு வாய்ப்புக் கிடைத்தது. முதல் இன்னிங்ஸில் 3 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 12 ரன்களும்சேர்த்து அணியின் வெற்றிக்கு வார்னர் காரணமாகினார். 2ஆவது போட்டியிலேயே டேவிட் வார்னர் சதம் அடித்து 123ரன்கள் சேர்த்து ஜஸ்டின் லாங்கர், ஹெய்டன் சாதனையை முறியடித்தாலும் அந்தப் போட்டியில் நியூசிலாந்து வெற்றியைத் தடுக்க முடியவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வார்னர் 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6,932 ரன்கள் குவித்து, 45.30 சராசரி வைத்துள்ளார் வார்னரின் சாதனைகள் 2009ம் ஆண்டு ஹோபர்ட்டில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில்தான் வார்னர் முதல்முறையாக ஒருநாள் போட்டியில் அறிமுகமாகினார். இதுவரை வார்னர் 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6,932 ரன்கள் குவித்து, 45.30 சராசரி வைத்துள்ளார். இதில் 22 சதங்கள், 33 அரைசதங்கள் அடங்கும். வார்னர் என்றாலே அதிரடி தொடக்க ஆட்டக்காரர், களத்தில் நங்கூறமிட்டுவிட்டால் சதம் அடிக்காமல் செல்லமாட்டார் என்ற மிரட்டலான பாணியை தனக்கே உரிய ஸ்டைலில் கடைசி வரை பராமரித்தவர் டேவிட் வார்னர். ஆஸ்திரேலிய அணியில் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கிற்கு(29) அடுத்தார்போல் அதிகமாக 22 சதங்களை அடித்தவரும் வார்னர்தான். டேவிட் வார்னர் இதுவரை 111 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,695 ரன்கள் சேர்த்துள்ளார் . இதில் 26 சதங்கள், 36 அரைசதங்கள் அடங்கும், 45 ரன்கள் சராசரி வைத்துள்ளார். அதேபோல 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய வார்னர் 22 சதங்கள், 33 அரைசதங்களுடன் 6,932 ரன்கள் சேர்த்துள்ளார். 99 டி20 போட்டிகளில் விளையாடிய வார்னர் ஒரு சதம், 24 அரைசதங்களுடன் 2894 ரன்கள் குவித்துள்ளார். ஒட்டுமொத்தமாக 356 டி20 போட்டிகளில் விளையாடிய வார்னர் 11695 ரன்கள் குவித்துள்ளார். இதில் 8 சதங்கள், 99 அரைசதங்கள் அடங்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2023 உலகக் கோப்பைத் தொடரில் 11 போட்டிகளில் 535 ரன்கள் சேர்த்து தனது திறமையை நிரூபித்துள்ளார் வார்னர். ஆஸ்திரேலிய அணி இருமுறை (2015,2023) ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற போதும், 2021ல் டி20 உலகக் கோப்பையை வென்றபோதும், 2022ல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை வென்றபோதும் அணியில் இருந்த பங்களிப்பை செய்தவர் டேவிட் வார்னர். டேவிட் வார்னர் டி20 வீரராக அறிமுகமாகி, டி20 வீரராகவே வளர்ந்தாலும், ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்புக் கிடைத்து அதில் விளையாடும்போது தனது ஆட்டத்தின் பாணியை மாற்றிக்கொள்ளத் தயங்காதவர். 2015ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் 8 போட்டிகளில் 345 ரன்கள் சேர்த்த வார்னர், 2023 உலகக் கோப்பைத் தொடரில் 11 போட்டிகளில் 535 ரன்கள் சேர்த்து தனது திறமையை நிரூபித்துள்ளார். 2016 காலண்டர் ஆண்டில் மட்டும் ஒருநாள் போட்டிகளில் 7 சதங்களை வார்னர் அடித்து, சச்சின் டெண்டுல்கருக்குபின் 2ஆவதாக இடம் பெற்றார். 93 ஒருநாள் போட்டிகளில் 4ஆயிரம் ரன்களை எட்டிய வார்னர், 5ஆயிரம், 6ஆயிரம் ரன்களை அதிவிரைவாக எட்டிய வீரர் என்ற பெருமையும் பெற்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிக்பாஷ் லீக்கில் சிட்னி சிக்ஸர் அணிக்காக கேப்டன் பொறுப்பேற்று சிறப்பாக வார்னர் செயல்பட்டுள்ளார். கேப்டனாகவும் ஜொலித்த வார்னர் டேவிட் வார்னர் சிறந்த பேட்டர் என நிரூபித்த அதேநேரத்தில் சிறந்த கேப்டன் என்பதையும் அவர் ஆஸ்திரேலிய அணிக்காக தலைமை ஏற்றபோதும், பிக்பாஷ் லீக்கிலும், ஐபிஎல் தொடரிலும் நிரூபிக்க அவர் தவறவில்லை. ஆஸ்திரேலிய அணிக்கு ஒருநாள் போட்டிகளில் 3 போட்டிகளில் வழிநடத்திய வார்னர் 3 வெற்றிகளையும், டி20 போட்களில் 9 ஆட்டங்களில் கேப்டனாக செயல்பட்ட வார்னர் 8 வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்தார். வார்னருக்குள் இருந்த தலைமைப் பண்பு, ஐபிஎல் டி20 தொடரில் சன்ரைசர்ஸ் அணியில் வெளிப்பட்டது. ஆஸ்திரேலிய அணிக்கு துணைக் கேப்டனாகவும், கேப்டனாகவும் வார்னர் பணியாற்றியுள்ளார். பிக்பாஷ் லீக்கில் சிட்னி சிக்ஸர் அணிக்காக கேப்டன் பொறுப்பேற்று சிறப்பாக வார்னர் செயல்பட்டுள்ளார். ஐபிஎல் டி20 லீக்கில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக கேப்டனாக செயல்பட்ட வார்னர் கோப்பையையும் வென்று கொடுத்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஐபிஎல் லீக்கும் வார்னரும் ஐபிஎல் டி20 தொடரில் வெற்றிகரமான வெளிநாட்டு பேட்டராக வார்னர் வலம் வருகிறார். ஐபிஎல் தொடரில் மட்டும் 6 ஆயிரம் ரன்களைக் குவித்த வார்னர், இதுவரை 3 முறை ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியுள்ளார். 2009 முதல் 2014ம் ஆண்டுவரை டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஆடிய வார்னர் 2014 ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் வார்னர் வாங்கப்பட்டார். 2015ம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட வார்னர், தொடரிலேயே முன்னணி ரன் குவித்து சாதித்தார். 2016ம் ஆண்டில், வார்னர் தலைமையில் ஆர்சிபி அணியை வென்று இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் அணி கோப்பையை வென்றது. 2018ம் ஆண்டிலும் சன்ரைசர்ஸ் அணிக்கு வார்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டாலும், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக பந்தை சேதப்படுத்திய புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். 2019ம் ஆண்டு மீண்டும் விளையாட வந்த வார்னர் முதல் போட்டியிலேயே 85 ரன்களும், அந்த சீசனில் 600 ரன்களுக்கு மேல் குவித்தார். 2020ம் ஆண்டில் வில்லியம்சனுக்குப் பதிலாக வார்னரிடம் கேப்டன் பதவி தரப்பட்டது. ஆனால், கேப்டனாக வார்னர் வந்தபின் சன்ரைசர்ஸ் ஒரு போட்டியில் மட்டுமே வென்றதால், வார்னர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். பல்வேறு காரணங்களால் அணியில் தொடரமுடியாத நிலையில் வார்னரை டெல்லி கேபிடல்ஸ் அணி மீண்டும் விலைக்கு வாங்கியது.2023 ஐபிஎல் சீசனில் வார்னர் 432 ரன்களை டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக குவித்தார். ஐபிஎல் டி20 தொடர் தவிர்த்து இங்கிலாந்தில் கவுன்டி அணிகளான துர்ஹம், மிடில்செக்ஸ் கவுன்டி, குளோபல் டி20 கனடா, வங்கதேச டி20 லீக், பாகிஸ்தான் டி20 சூப்பர் லீக்கிலும் வார்னர் விளையாடியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2015ம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட வார்னர், தொடரிலேயே முன்னணி ரன் குவித்து சாதித்தார். வார்னரின் மைல்கல்கள் ஆஸ்திரேலியாவில் சிறந்த கிரிக்கெட் வீரருக்கு வழங்கப்படும் ஆலன் பார்டர் விருதை தொடர்ந்து 2முறை வாங்கிய 4வது வீரர் வார்னர். டி20 வரலாற்றில் ஷேன் வாட்ஸன், வார்னர் தொடக்க ஜோடி சேர்ந்து 1,108 ரன்கள் குவித்துள்ளர், இதுவரை இருவரின் பார்ட்னர்ஷிப்பை எந்த நாட்டு வீரர்களாலும் முறியடிக்க முடியவில்லை. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சுனில் கவாஸ்கருக்கு அடுத்தாற்போல், தொடர்ந்து 3 டெஸ்ட் சதங்களைக் குவித்து ஆடம் கில்கிறிஸ்ட்டுக்கு அடுத்தாற்போல் வார்னர் மட்டும்தான். டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 4 ஆயிரம் ரன்களைக் கடந்த 4ஆவது ஆஸ்திரேலிய பேட்டரும் வார்னர்தான். 100ஆவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த 8-வது சர்வதேச பேட்டரும் வார்னர்தான். இதற்கு முன் கிரீனிட்ஜ், கிறிஸ் கெயின்ஸ், அசாருதீன், குமார சங்கக்கரா, கிறிஸ் கெயில், டிரஸ்கோத்திக், ராம்நரேஷ் சர்வான் ஆகியோர் இந்த சாதனையைச் செய்திருந்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடால் 17 முறை ஆட்டமிழந்தவரும் டேவிட் வார்னர் மட்டும்தான். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே பந்துவீச்சாளரிடம் அதிகமுறை விக்கெட்டை இழந்தவரும் வார்னர் மட்டும்தான். பட மூலாதாரம்,GETTY IMAGES சர்ச்சைகளின் நாயகன் வார்னர் டேவிட் வார்னர் என்றால் அதிரடியான பேட்டிங் என்பது நினைவுக்கு வருகிறதோ இல்லையோ அவருடைய சர்ச்சைகள் கவனத்துக்கு வந்துவிடும். குறிப்பாக 2013 ஐசிசி சாம்பியன் டிராபி போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்துக்கு முன் மதுபாரில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டுடன் தகராறு செய்து அவரை வார்னர் தாக்கியது பெரிய சர்ச்சையானது. இங்கிலாந்து அணியுடன் அடைந்த தோல்வியால் ஆஸ்திரேலிய துவண்டுகிடந்த போது, வார்னர் மதுபாரில் இருந்தபோது இரு வீரர்களும் மோதிக்கொண்டனர். இந்த விவகாரத்தில் வார்னருக்கு அபராதமும், சில போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலிய நிர்வாகம் தடையும் விதித்தது. 2013ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஏ அணியில் வார்னர் விளையாடியபோது, தென் ஆப்பிரிக்க ஏ அணி வீரரும் விக்கெட் கீப்பருமான தமி சோல்கிலேயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் சர்ச்சையானது. இருமுறை நடுவர்கள் களத்தில் வாக்குவாதத்தை விலக்கிவிட்டாலும், இது முறைப்படி புகராக பதிவாகவில்லை என்பதால், வார்னர் தப்பித்தார். நியூசிலாந்து முன்னாள் கேப்டன் மார்டின் குரோவ் வெளிப்படையாகவே வார்னரின் அநாகரீகமற்ற செயல்கள், நடவடிக்கைகளை கண்டித்து, களத்தில் மரியாதைக் குறைவாக நடப்பவர்களுக்கு எதிராக ரெட் கார்டு, மஞ்சள் அட்டை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 2018ம் ஆண்டு, தென் ஆப்பிரிக்க பயணத்தின்போது, வார்னர் மனைவி குறித்து தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் டீ காக் பேசிய விதம் இருவருக்கும் இடையே மோதலை உருவாக்கியது. இதையடுத்து, பந்தை சேதப்படுத்தும் திட்டத்தை வார்னரும், கேப்டன் ஸ்மித்தும் செயல்படுத்தி சிக்கலில் மாட்டிக்கொண்டனர். இந்த விவகாரத்தில் வார்னருக்கும், ஸ்மித்துக்கும் ஓர் ஆண்டு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. 2018ம் ஆண்டு மார்ச் மாதம் கேப்டவுனில் நடந்த தென் ஆப்பிரி்க்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வார்னர் ஆட்டமிழந்து சென்றபோது, பார்வையாளருடன் நடந்த வாக்குவாதம் கடுமையாக கண்டிக்கப்பட்டது. இதுபோன்று களத்திலும், வெளியேயும் வார்னர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியர்களின் மனம் கவர்ந்தவர் ஆஸ்திரேலிய வீரராக இருந்தாலும் இந்தியாவிலும் மற்ற எந்த வெளிநாட்டு வீரர்களை விடவும் அதிகமாகப் பிரபலமானவர் டேவிட் வார்னர். இந்தியத் திரைப்பட நடனங்களுக்கு சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிடுவது இந்தியர்களுடன் அவரை நெருக்கமாக்கியது. இந்தியப் பாரம்பரிய உடைகளை அணிவது, இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகளுக்காக கருத்துக் கூறுவது என அவரது சமூக வலைத்தள பதிவுகள் இந்தியர்கள் மத்தியில் பிரபலமானவை. அவருக்கு கிரிக்கெட் ஆட ஓராண்டு தடை விதிக்கப்பட்டபோது, இந்தியாவில் இருந்து ஆதரவுக் குரல்கள் எழுந்ததையும் கேட்க முடிந்தது. https://www.bbc.com/tamil/articles/cz9eq3ygg6yo
-
IOWA பாடசாலையில் துப்பாக்கி சூடு.
அமெரிக்காவில் மீண்டும் பாடசாலையில் துப்பாக்கி சூட்டு சம்பவம் - பலர் பலியாகியிருக்கலாம் என அச்சம் Published By: RAJEEBAN 04 JAN, 2024 | 10:00 PM அமெரிக்காவின் அயோவாவின் பெரி உயர் தரப்பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பலர் பலியாகியிருக்கலாம் என அச்சம் வெளியாகியுள்ளது. துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகின்றனர் என தெரிவித்துள்ள மருத்துவமனை வட்டாரங்கள் எத்தனை பேர் கொல்லப்பட்டுள்ளனர் காயமடைந்துள்ளனர் என்பதை தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/173158
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
அமெரிக்காவின் குற்றச்சாட்டை நிராகரித்த ரஷ்யா! உக்ரைன் மீதான போரில் வடகொரியாவினால் வழங்கப்பட்ட, ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்தியுள்ளதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. தேசிய பாதுகாப்பு பேரவையின் பேச்சாளர் ஜோன் கிர்பி இதனைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு பேரவையில் இந்த விடயம் தொடர்பில், அவதானம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆயுத பரிமாற்றத்தை எளிதாக்கும் தரப்பினருக்கு எதிராக கடும் பொருளாதார விதிப்பதற்கான விவாதங்கள் அதன்போது முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை ரஷ்யா நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/287073
-
விசேட டெங்கு ஒழிப்பு வாரம் ஆரம்பம்
எதிர்வரும் 7ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரையான வாரத்தை விசேட டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. டெங்கு நோயாளர்களின் கணிசமான அதிகரிப்பு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர, கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தெரிவித்துள்ளார். தொடரும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் டெங்கு பரவும் அதிக ஆபத்துள்ள 70 வலயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை அதிகளவில் முன்னெடுப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. முப்படையினர், பொலிஸார், சுகாதார அதிகாரிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த டெங்கு ஒழிப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். தேசிய டெங்கு தடுப்பு பிரிவின் புள்ளிவிபரத்தின் அடிப்படையில், கடந்த வருடத்தில் 88 ஆயிரத்து 398 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டனர். கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியிருந்ததுடன், டெங்கு நோயினால் கடந்த வருடத்தில் மாத்திரம் 58 பேர் உயிரிழந்தனர். https://thinakkural.lk/article/287067
-
மக்கள் பொறுமையாக இருந்தால் பொருளாதாரத்தை ஸ்திரநிலைக்கு கொண்டுவர முடியும் - அகிலவிராஜ்
Published By: VISHNU 04 JAN, 2024 | 09:39 PM (எம்.ஆர்.எம்.வசீம்) வற்வரி அதிகரிப்பு குறுகிய காலத்துக்காகும், மக்களுக்கு விரைவாக நிவாரணம் வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்திருக்கிறார். அதனால் வீழ்ச்சியடைந்திருக்கும் பொருளாதாரத்தை ஸ்திரநிலைக்கு கொண்டுவர சிறிது காலத்துக்கு அனைத்து மக்களும் சற்று பொறுமையாக இருக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் வியாழக்கிழமை (4) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், வற்வரி அதிகரிப்பால் பொருளாதார ரீதியில் மக்களுக்கு பாரிய கஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. என்றாலும் இந்த வற் வரி அதிகரிப்பு குறுகிய காலத்துக்காகும். மக்களுக்கு விரைவாக நிவாரணம் வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்திருக்கிறார். அதேநேரம் அத்தியாவசிய பொருட்களுக்கு இந்த வற்வரி அதிகரிக்கப்படவில்லை. குறிப்பாக கல்வி, சுகாதார துறை சார்ந்த பொருட்களுக்கு இந்த வரி அதிகரிக்கப்படவில்லை. அத்துடன் 15வீதமாக இருந்ததை தற்போது 18 வீதமாக அதிகரித்திருக்கிறோம். ஏற்கனவே வரி விலக்களிக்கப்பட்டிருந்த ஒரு சில பொருட்களுக்கே தற்போது 18வீத வரி அதிகரிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பல வருடங்களுக்கு பின்னர் அரசாங்கத்தின் அனைத்து கொடுப்பனவுகளும் கடந்த டிசம்பர் 31ஆம் திகதிக்குள் கொடுத்த முடிப்பதற்கு திறைசேரிக்க இம்முறை முடியுமாகி இருந்துள்ளது. பணம் அச்சிடாமலே இதனை செய்ய முடியுமாகி இருக்கிறது. ஜனாதிபதியின் சிறந்த நிதி முகாமைத்துவமே இதற்கு காரணமாகும். கடந்த காலங்களில் பணம் அச்சிட்டே மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வந்தது. அதனால் நாட்டின் பணவீக்கம் அதிகரித்தது. ஆனால் ஜனாதிபதி சரியான முறையில் நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது மக்களுக்கு கஷ்டம் ஏற்படும். என்றாலும் குறுகிய காலத்துக்கு இதனை பொறுத்துக்கொண்டால் எதிர்காலம் சுபீட்சமாக அமையும். அதற்காகவே வற்வரி அதிகரிக்கப்பட்டிருக்கிறது. பெப்ரவரி மாதமாகும்போது மின் கட்டணத்தை குறைக்க இருக்கிறது. அதேநேரம் பொருட்களின் விலையும் குறைவடையும். அத்துடன் வீழ்ச்சியடைந்திருக்கும் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேறு மாற்று வழி இல்லாததாலே ஜனாதிபதி இந்த வழியில் செல்கிறார். வேறு மாற்று வழி இருந்தால் இதனை விமர்சிப்பவர்கள் அதனை தெரிவிக்க வேண்டும். அதனால் மக்கள் இவர்களின் பாெய் பிரசாரங்களை ஏற்றுக்கொண்டு செயற்பட்டால் நாடு அழிவின்பால் சென்றுவிடும். அவ்வாறான நிலை ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அதனால் வீழ்ச்சியடைந்திருக்கும் பொருளாதாரத்தை ஸ்திரநிலைக்கு கொண்டுவர ஜனாதிபதி பாரிய முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார். எனவே இதன்போது ஏற்படுகின்ற கஷ்டங்களை குறுகிய காலத்துக்கு அனைத்து மக்களும் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/173144
-
ஊருலா
ஒத்தப்பேடி யார் என கண்டுபிடிச்சிட்டன். தொடருங்கள் ஐயா.