Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. Published By: RAJEEBAN 11 JUN, 2023 | 04:44 PM டியாகோகார்சீயா தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த குடியேற்றவாசிகளில் 12 பேர் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளனர் என பிபிசி தெரிவித்துள்ளது. டியாகோ கார்சியாவில் கடந்த 20 மாதங்களாக சிக்குண்டுள்ள இலங்கையை சேர்ந்த குடியேற்றவாசிகளி;ல் 12 தற்கொலை செய்ய முயன்றுள்ளனர் என பிபிசி தெரிவித்துள்ளது. இந்துசமுத்திரத்தில் உள்ள பிரிட்டனிற்கு சொந்தமான சிறிய தீவில் இலங்கையை சேர்ந்த 89 குடியேற்றவாசிகள் சிக்குண்டுள்ளனர் என தெரிவித்துள்ள பிபிசி சட்டவிரோத பயணங்களின் போது படகுகள் ஆபத்தில் சிக்கியவேளை காப்பாற்றப்பட்டவர்களே இவர்கள் எனவும் தெரிவித்துள்ளது. இராணுவத்தினருக்காக முன்னர் அமைக்கப்பட்ட கொவிட் கூடாரங்களிலேயே இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்துள்ளனஇ டியாகோ கார்சியாவில் தான் பாலியல்துஸ்பிரயோகத்திற்குள்ளானதாக ஒரு பெண் தெரிவித்துள்ளார்- மேலும் இங்கு உண்ணாவிரதப்போராட்டங்களும் இடம்பெறுகின்றன என பிபிசி தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/157467
  2. ரஷ்ய படையினருக்கு எதிரான பதில் தாக்குதல்கள் ஆரம்பம் - உக்ரைன் ஜனாதிபதி Published By: RAJEEBAN 11 JUN, 2023 | 11:15 AM உக்ரைனை ஆக்கிரமித்துள்ள ரஷ்ய படையினருக்கு எதிரான உக்ரைனின் பதில் தாக்குதல் ஆரம்பமாகியுள்ளது என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பதில்தாக்குதல்கள் தற்பாதுகாப்பு சமர்கள் இடம்பெறுகின்றன என வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். எனினும் இது குறித்து மேலதிக தகவல்களை வெளியிடப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். உக்ரைனின் தெற்கிலும் கிழக்கிலும் மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த கருத்து வெளியாகியுள்ளது. உக்ரைன் பதில் நடவடிக்கையை ஆரம்பித்திருக்கலாம் என்ற ஊகங்கள் வெளியாகியுள்ளன. பக்முத்திற்கு கிழக்காகவும் ஜபோரிஜியாவிற்கு தெற்கிலும் உக்ரைன் படையினர் முன்னேறியுள்ளனர் அங்கிருந்து ரஸ்ய படையினரை நோக்கி நீண்டதூர ஏவுகணை தாக்குதல்களைமேற்கொண்டுள்ளனர். உக்ரைன் படையினர் தங்கள் தாக்குதல்நடவடிக்கைகளை ஆரம்பித்தனர் ஆனால் பெரும் இழப்புகளை அவர்கள் சந்தித்துள்ளனர் அது முறியடிக்கப்பட்டுள்ளது என ரஸ்ய ஜனாதிபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/157435
  3. வரி கோப்புகள் திறக்கப்பட்டாலும் அனைவரும் வரி செலுத்த வேண்டியதில்லை - கல்வி அமைச்சர் Published By: DIGITAL DESK 3 05 JUN, 2023 | 09:40 AM (எம்.ஆர்.எம்.வசீம்) வரி கோப்புகள் திறக்கப்பட்டாலும் அனைவரும் வரி செலுத்த வேண்டியதில்லை. வரி செலுத்தவேண்டியவர்களும் அதனை புறக்கணித்து வருகின்றனர். இதனால் நலனோம்பு மற்றும் நிவாரணங்கள் வழங்குவதில் பிரச்சினை ஏற்படுகிறது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜந்த தெரிவித்தார். வரி செலுத்தவேண்டியவர்களின் பதவிநிலை மற்றும் வரி விதிப்புக்கு உள்வாங்கப்படுபவர்களின் பட்டியல் நிதி அமைச்சினால் கடந்த வாரம் வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கையில் வரி செலுத்துவது வரி செலுத்தவேண்டியவர்களில் மிகவும் குறைவானவர்களாகும். என்றாலும் தற்போது வரி செலுத்த வேண்டியவர்களின் கோப்புகள் திறக்கப்பட்டிருக்கின்றன. அதற்காக அனைவரும் வரி செலுத்த வேண்டும் என்றில்லை. என்றாலும் வரி கோப்புகள் திறப்பதன் மூலம், வரி செலுத்துவதற்கு எத்தனை பேர் இருக்கின்றார்கள் என்பதை எங்களுக்கு தெரிந்துகொள்ள முடியும். அவ்வாறு இல்லை என்றால் வரி செலுத்தவேண்டியவர்களும் வரி செலுத்தாமல் அதனை புறக்கணித்து விடுகின்றனர். அரசர்களது காலத்தில் இருந்து நாட்டில் வரிகளின் மூலம் கிடைக்கப்பெறுகின்ற வருமானத்தின் மூலமே நலநோம்பு வேலைத்திட்டங்கள் நிவாரண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதனால் எந்தவொரு நாட்டுக்கும் வரி மிகவும் முக்கியமானதாகும். கடந்த காலங்களில் நாட்டில் பாரியளவில் வரி குறைப்பு செய்தமையாலே அரசாங்கத்தின் வருமானம் குறைவடைந்து பொருளாதார நெருக்கடி ஏற்பட காரணமாக அமைந்தது என்றார். https://www.virakesari.lk/article/156926
  4. யாழ்ப்பாணம் - காரைக்கால் கப்பல் சேவைக்கு அனுமதி ஜூன் 10 முதல் ஆரம்பிக்க எதிர்பார்ப்பு தென்னிந்தியாவுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான சரக்குக் கப்பல் சேவையை நடத்துவதற்கு இலங்கையின் ஹேலீஸ் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 10ஆம் திகதி முதல் இந்த சேவையை நடத்த முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் - கே.கே.எஸ். இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்துச் சேவையை ஆரம்பிப்பதில் இழுபறி நீடித்து வருகின்றது. இதன்போது இந்தியத் தரப்பிலிருந்தே அதற்கான அனுமதிகள் இன்னமும் கிடைக்கவில்லையென அறியமுடிகின்றது. இதேவேளை, பாண்டிச்சேரியிலிருந்து காங்கேசன்துறைக்கான சரக்குக் கப்பல் சேவையை எதிர்வரும் 10ஆம் திகதி முதல் நடத்துவதற்கான அனுமதி ஹேலீஸ் நிறுவனத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.thinakaran.lk/2023/06/03/உள்நாடு/99258/யாழ்ப்பாணம்-காரைக்கால்-கப்பல்-சேவைக்கு-அனுமதி
  5. வரிக் கோப்பு குறித்து விளக்கம் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரிக் கோப்பு ஒன்றைத் திறப்பதன் ஊடாக அவர்களிடம் இருந்து வரி அறவிடப்படும் என்ற அர்த்தம் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இந்த வரிக் கோப்பு இலக்கத்தின் கீழ் எதிர்கால நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 2023 வரவு செலவு திட்டத்தில் நம் நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் வரிக் கோப்பு திறக்கப்படும் என்று ஒரு முன்மொழிவு இருந்தது. இதன் பொருள் அரசாங்கம் இவர்கள் அனைவரிடமிருந்தும் வரிப் பணத்தை வசூலிக்கப் போகிறது என்று அர்த்தமல்ல என அவர் தெரிவித்துள்ளது. அரச வருமானத்திற்கு சில கட்டுப்பாடுகளை கொண்டு வருவதற்காகவே எல்லோரையும் பதிவு செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். சிலருக்கு பதிவு செய்து அந்த கோப்பில் உள்ள தகவலின் படி அரசாங்கம் கொடுக்கும் உதவிகள் அவருக்கு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/256525
  6. Published By: VISHNU 01 JUN, 2023 | 05:26 PM (எம்.மனோசித்ரா) நாட்டில் வருடத்துக்கு 12 இலட்சத்துக்கும் அதிக வருமானம் பெறுகின்றவர்கள் உட்பட 14 தொழிற்துறைகளை சார்ந்தவர்கள் தம்மை தேசிய வருமான திணைக்களத்தில் பதிவு செய்வது வியாழக்கிழமை (01) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கமைய இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள வைத்தியர்கள், இலங்கை பட்டய கணக்காளர் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் , முகாமைத்துவ கணக்காய்வு நிர்வாக உறுப்பினர்கள், இலங்கை பொறியியல் நிறுவன உறுப்பினர்கள், இலங்கை அளவீட்டு மற்றும் மதிப்பாய்வு நிறுவன உறுப்பினர்கள், உயர் நீதிமன்ற சட்டத்தரணிகள், பிரதேச செயலகங்களில் பதிவு செய்துள்ள வர்த்தகர்கள் , மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்துள்ளவர்கள் (முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள், உழவு இயந்திரங்கள் தவிர) தம்மை வருமான திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் அசையா சொத்துக்களை கொள்வனவு செய்துள்ள அல்லது உரித்தாக்கிக் கொள்வதற்கான உரிமத்தை பரிமாற்றிக் கொண்டவர்கள் , இலங்கையில் மாதாந்தம் ஒரு இலட்சம் அல்லது வருடத்துக்கு 12 இலட்சம் வருமானம் பெறுபவர்களும் தம்மை பதிவு செய்து கொள்ள வேண்டும். அதே போன்று இவ்வாண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்குள் 18 வயதை பூர்த்தி செய்துள்ள அல்லது 2024 ஜனவரி முதலாம் திகதி அல்லது அதன் பின்னர் 18 வயதாகவுள்ள அனைவரும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். https://www.virakesari.lk/article/156711
  7. மஹ்ஸா அம்னியின் மரணம் குறித்த செய்திகளை முதன்முதலில் வெளியிட்ட ஈரானின் இரு பெண் பத்திரிகையாளர்கள் சிறையில் - நீதிமன்ற விசாரணைகள் ஆரம்பம் Published By: RAJEEBAN 31 MAY, 2023 | 01:06 PM கடந்தவருடம் செப்டம்பர்மாதம் மாசா அமினியின் மரணம் குறித்த செய்தியை உலகிற்கு தெரியப்படுத்திய இருபெண் பத்திரிகையாளர்கள் ஈரானில் விசாரணைகளை எதிர்கொண்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஈரானின் பெண்பத்திரிகையாளர்கள் இருவரையுமே அதிகாரிகள் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். ஹாம் மிகான் செய்தித்தாளின் இலாஹே முகமதி மஹ்சா அமினியின் இறுதிசடங்குகள் குறித்த செய்தியொன்றை வெளியிட்டிருந்தார் .தற்போது சிறையில் உள்ள அவர் திங்கட்கிழமை ஈரானின் புரட்சிகர நீதிமன்றத்தின் விசாரணைகளை எதிர்கொண்டுள்ளார். திங்கட்கிழமை நீதிமன்ற விசாரணைகளின் போது பெண் பத்திரிகையாளர்களின் சார்பில்ஆஜரான சட்டத்தரணிகள் தங்கள்கருத்துக்களை வெளியிடவோ தங்கள்கட்சிக்காரர்களிற்கு ஆதரவாக வாதிடவோ சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என இலாஹே முகமதியின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார். இந்தவழக்கை தகுதிவாய்ந்த குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை செய்யவேண்டும் என என இலாஹே முகமதியின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார். மஹ்சா அமீனியின் மரணம் குறித்த செய்தியை வெளியிட்டஷார்க் செய்தித்தாளின் நிலௌபர் ஹமேதியும் கைதுசெய்யப்பட்டுள்ளார் .அவரும் ஈரானின் புரட்சிகர நீதிமன்றத்தின் விசாரணைகளை எதிர்கொண்டுள்ளார். இருபெண் பத்திரிகையாளர்களும் அமெரிக்காவுடன் ஒத்துழைத்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் இந்த குற்றச்சாட்டுகளை அமெரிக்கா நிராகரித்துள்ளது. https://www.virakesari.lk/article/156600
  8. The Silent Shift When unique people come together, great things happen. One such example is ‘The Silent Shift’ run by 8 specially-abled staff at the SB Road Pune Station, India. With grit, determination, and encouragement from our customers, these champions have created a movement that truly fills hearts with hope.
  9. தினேஷ் ஷாஃப்டரின் தாயாரின் மரபணு கோரப்பட்டுள்ளது தினேஷ் ஷரஃப்டரின் உடலம் தொடர்பான விசாரணைகளுக்கு அவரது தாயாரின் மரபணு (DNA) கோரப்பட்டுள்ளது. தாயாரின் இரத்த மாதிரிகளை அரசாங்க பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அறிக்கைகளை கோருமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய, குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு நேற்று (26) உத்தரவிட்டுள்ளார். அவரது தாயார் தற்போது வெளிநாட்டில் இருப்பதால் இரத்த மாதிரிகளை பெற்றுக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் உடலம் தொடர்பான இரண்டாவது பிரேத பரிசோதனை நேற்று (26) கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது. நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கொழும்பு பல்கலைக்கழகத்தின் தடயவியல் மருத்துவப் பேராசிரியர் அசேல மெண்டிஸ் தலைமையிலான ஐவர் அடங்கிய நிபுணர் குழுவினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 5 மாதங்களுக்கு முன்னர் மர்மமான முறையில் மரணமடைந்த வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் உடலம், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள சட்ட வைத்திய சபையின் பரிந்துரையின் பின்னர் கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய வழங்கிய உத்தரவின் பிரகாரம் நேற்று (26) தோண்டி எடுக்கப்பட்டது. உடலம் தோண்டப்பட்ட சந்தர்ப்பத்தில் கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய தலைமையில் அவ்விடத்திலேயே வழக்கு ஒன்றும் இடம்பெற்றதுடன், வழக்கை எதிர்வரும் 20ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/255605
  10. பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது ! Published By: DIGITAL DESK 5 25 MAY, 2023 | 11:52 AM மர்மமான முறையில் உயிரிழந்த வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய அடக்கம் செய்யப்பட்ட அவரின் பூதவுடலை மீண்டும் தோண்டுவதற்கு விசேட சட்ட வைத்திய நிபுணர் குழுவினால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் வியாழக்கிழமை (25 ) கொழும்பு, பொரளை பொது மயானத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவினால் அவரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. (படப்பிடிப்பு- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/156118
  11. பெரிய பூனைக்குட்டி வளர்க்கிறாரோ?!
  12. வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சடலத்தை தோண்டி எடுக்க நீதிமன்றம் அனுமதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சடலம் எதிர்வரும் மே மாதம் 25ஆம் திகதி தோண்டி எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீதிமன்றத்தின் கோரிக்கையின் பேரில், ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழு, தினேஷ் ஷாஃப்டரின் உடலை தோண்டி எடுக்க முடிவு செய்ததாக பொலிஸார் கூறுகின்றனர். சடலம் தோண்டி எடுக்கப்பட்ட பின்னர் இரண்டாவது பிரேதப் பரிசோதனை நடத்தப்படவுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி பொரளை மயானத்தில் தினேஷ் ஷாஃப்டர் தனது காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டார். பின்னர் தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் அன்றிரவே உயிரிழந்துள்ளார். https://thinakkural.lk/article/254740
  13. ஓடர் குடுக்கிற கணவர்களுக்கு பயம் வரும் தானே?! காசையும் குடுத்து ____ இழக்கலாமா?
  14. வட்டுக்கோட்டைப் பக்கம் போறவை கவனமா போங்கோ! இப்ப தான் அப்பா நாயிடம் கடி வாங்கி வந்திருக்கிறார். ஊசி போடுவதென்றால் நாய்க்கு ஊசி போட்ட அட்டையை கொண்டு வரட்டாம்.
  15. தினேஷ் ஷாஃப்டரின் உடல் தோண்டி எடுக்கப்படுமா? தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பான அறிக்கையை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட வைத்தியர்களை உள்ளடக்கிய ஐவர் அடங்கிய நிபுணர் குழு, உயிரிழந்த ஷாஃப்டரின் சடலத்தை நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் எழுத்து மூலம் கோரியுள்ளது. ஷாஃப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டுபிடிக்க அவரை தோண்டி எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்காக, இறந்தவரின் உடலை தோண்டி எடுத்து பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், கொழும்பு மேலதிக நீதவான் திருமதி ராஜீந்திர ஜெயசூரிய அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரப்பட்டது. இதன்படி, இது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிடுமாறு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் திகதியை நிர்ணயித்துள்ளது. பெப்ரவரி 17ஆம் திகதி, கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய, ஐவரடங்கிய விசேட வைத்திய குழுவொன்றை நியமிப்பதற்காக விசேட வைத்தியர்களின் பட்டியலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சுகாதார பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் தடயவியல் மருத்துவம் மற்றும் நச்சுயியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் அசேல மென்டிஸ் தலைமையிலான ஐவரடங்கிய நிபுணர் குழு பெப்ரவரி 27 ஆம் திகதி நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டது. https://thinakkural.lk/article/254547
  16. நலன்புரி கொடுப்பனவு திட்டம் : பெருந்தோட்ட மக்களுக்கு கிடைப்பது சந்தேகத்துக்குரியது - இராதாகிருஸ்ணன் Published By: DIGITAL DESK 3 12 MAY, 2023 | 08:30 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) 17 ஆயிரத்துக்கும் குறைவான மாத வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அஷ்வசும் நலன்புரி கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்ற நியதி காணப்படும் போது மலையக மக்களுக்கு இந்த கொடுப்பனவு கிடைக்குமா என்ற சந்தேகம் காணப்படுகிறது. பொருளாதார ரீதியில் பெருந்தோட்ட மக்கள் பல்வேறு வழிமுறையில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.ஆகவே இவ்விடயத்தில் பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் நிதியமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி இராதாகிருஸ்ணன் சபையில் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்ற அஷ்வசும் நலன்புரி கொடுப்பனவு திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்கான சிறந்த நலன்புரி கொடுப்பனவு திட்டமாக அஷ்வசும் புதிய செயற்திட்டம் காணப்படுகிறது. பல இலட்சம் பேருக்கு இந்த திட்டத்தின் ஊடாக நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன.2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 6 ஆயிரம் ரூபா குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு மாத்திரமே அரச நலன்புரி கொடுப்பனவு வழங்கப்பட்டன.இந்த தொகை தற்போது 17,772 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் 46 சதவீத அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. மாத வருமானம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஆகியவற்றை மதிப்பிட்டு ஒரு குடும்பத்தின் நிலையை மதிப்பிட முடியும். மாதம் 17 ஆயிரத்துக்கும் குறைவான வருமானம் பெறும் தரப்பினருக்கு அல்லது குடும்பத்துக்கு இந்த நிவாரணம் வழங்க வேண்டும் என்ற வரையறை காணப்படுவதால் பெருந்தோட்ட மக்களுக்கு இந்த நலன்புரி கொடுப்பனவு கிடைக்குமா என்ற சந்தேகம் காணப்படுகிறது. ஏற்கனவே வழங்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவிலும் மலையக மக்களில் பெரும்பாலானோர் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.குடும்ப அடிப்படையில் மலையக மக்களுக்கு இந்த நிவாரணம் கிடைக்குமா என்பதை நிதியமைச்சு தெளிவுப்படுத்த வேண்டும். விவசாயத்துறை வீழ்ச்சி,அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் ஆகிய காரணிகளினால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.இந்த நலன்புரி திட்டத்துக்கு உலக வங்கி வழங்குகிறது.ஆகவே இந்த நிதி தொகை நியாயமான முறையில் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். நுவரெலியா வைத்தியசாலையில் அண்மையில் 34 பேருக்கு கண் சத்திரசிகிச்சை இடம்பெற்றுள்ளது.இவர்களில் 10 பேருக்கு கண் பார்வையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/155170
  17. அக்கா அந்த நடைமுறைகள் கொஞ்ச காலம் எடுக்கும், உறுதியில் பிரச்சனைகள் இல்லையா என்பதை பிரதேச சபையின் சட்டத்தரணி ஆராய்ந்து தான் பெயர் மாற்ற அனுமதி தருவார்கள். தோம்பு எல்லாம் சரி பார்த்திருப்பார்களே?
  18. நான் அனுதாபத்திற்காக நாடகமாடினேன்- மே 9 சம்பவம் குறித்து மகிந்த ஹகந்தகம 11 MAY, 2023 | 11:50 AM கடந்தவருடம் ஒன்பதாம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதலிற்குள்ளான கொழும்பு மாநாகரசபையின் முன்னாள் உறுப்பினர் மகிந்த ஹகந்தகம தான்அவ்வேளை தன்மீது அனுதாபத்தை ஏற்படுத்துவதற்காகவும் அங்கிருந்து தப்புவதற்காகவும் நடித்ததாக தெரிவித்துள்ளார். கடந்தவருடம் மே 9 ம் திகதி இடம்பெற்ற சம்பவம் குறித்து கருத்துதெரிவித்துள்ள அவர் என்னை ஒரு அரசியல் தலைவராக மாற்றியமைக்காக அரகலயவிற்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார். அரகலயவின் பின்னர் இடம்பெற்ற விடயங்களால் நான் தற்போது பிரபலமாகிவிட்டேன் எனக்கு தற்போது விளம்பரம் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அன்று நடந்தது ஒரு சதி என தெரிவித்துள்ள அவர் பேரவாவியில் குளிப்பது எனக்கு புதிய விடயமல்ல எனவும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/155028
  19. சரி செய்யப்பட்டுவிட்டது என நினைக்கிறேன். தேடலின் பின் செய்திகளை இணைக்க முடிகிறது. நிர்வாகிகளுக்கு நன்றி.
  20. 33 இலட்சம் பேருக்கு ஜூலை முதல் நலன்புரிக் கொடுப்பனவு - மிக வறியவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு 15 000 ரூபா வழங்க தீர்மானம் Published By: DIGITAL DESK 5 10 MAY, 2023 | 08:50 PM (எம்.மனோசித்ரா) நாட்டிலுள்ள 33 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு ஜூலை 1 முதல் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. அதற்கமைய மிக வறியவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள பயளானிகளுக்கு எதிர்வரும் 3 ஆண்டுகளுக்கு 15 000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அதிகாரங்களுக்கமைய இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இடைநிலை, பாதிக்கப்படக்கூடிய, வறிய மற்றும் மிகவும் வறுமையான குடும்பங்களுக்கு 4 பிரிவுகளின் கீழ் கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளதோடு, அங்கவீனமானவர்கள், முதியவர்கள் மற்றும் சிறுநீரக நோயாளர்கள் ஆகியோருக்கும் அஸ்வெசும திட்டத்தின் கீழ் நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன. அதற்கமைய தற்காலிக நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்திருக்கும் 400,000 பேருக்கான 2500 ரூபாய் மாதாந்த கொடுப்பனவு 2023 டிசம்பர் 31 வரையிலும், பாதிக்கப்படக் கூடிய 400,000 பேருக்கான 5000 ரூபாய் கொடுப்பனவு 2024 ஜூலை 31 வரையிலும் வழங்கப்படவுள்ளது. மேலும் வறியோர் என்று அறியப்பட்ட பயனாளிகள் 800,000 பேருக்கான 8500 ரூபாய் கொடுப்பனவும் மிக வறுமையானவர்களுக்காக மாதாந்தம் 15,000 கொடுப்பனவும் 2023 ஜூலை 01 முதல் மூன்று வருட காலத்திற்கு வழங்கப்படவுள்ளன. தற்போது நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளும்72,000 மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்தம் 5000 ரூபாய் வீதமும், சிறுநீரக பாதிப்புக்கான நிவாரணங்களை பெறும் 39,150 பேருக்கு 5000 ரூபாய் வீதமும் முதியவர்களுக்கான கொடுப்பனவுகளை பெறும் 416,667 பேருக்கு 2000 ரூபாய் என்ற அடிப்படையிலும் கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன. மேற்படி நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள 340 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து 3,712,096 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு திட்டத்திற்கு தகுதியானவர்களை கண்டறிவதற்கான திட்டத்தில் தகவல்களை சரிபார்க்கும் பணிகளில் 91.5 சதவீதம் நிறைவடைந்துள்ளது. பிரதேச செயலாளர் பிரிவுகளில் மூவர் அடங்கிய தெரிவுக்குழு ஒன்றின் கீழ் தகவல்கள் பரிசீலிக்கப்பட்டு மாவட்டச் செயலாளரின் அனுமதியை பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/154972

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.