Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

P.S.பிரபா

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by P.S.பிரபா

  1. இந்தியாவை நம்பியிருக்கும் தமிழர்களில் பெரும்பாலானோர்களை நித்திரையில் இருந்து எழும்பச் சொல்கிறது. ஆனால் அவர்கள் கண்களை திறந்துகொண்டு நித்திரை கொள்பவர்கள்.. அதனால் இந்த செய்தியும் அவர்களைப் பொறுத்தவரை ஒன்றுமில்லை. கடந்த காலத்தில் நடந்தவைகளில் ஏதாவது ஒன்றை மீளாய்வு செய்து குறைபிடிப்பதும், இந்திய சினிமாவின்(திரைப்படம்/ இசைநிகழச்சி) பின் அலைவதுமாக பெரும்பாலானோர் இருக்கையில் இந்த செய்தி என்ன சொல்ல வருகிறது என்பதை ஏன் நினைத்துப் பார்க்கப் போகிறார்கள்.
  2. இருக்கிற சட்டங்கள் கடுமையானவை இல்லை என்பதால்தான் பயமின்றி இந்த மாதிரி செயல்களை திரும்பத் திரும்ப செய்கிறார்கள் என நினைக்கிறேன். சிறையில் அடைத்தால், தண்டனை காலம் முடிய வெளியே வந்து விடுவார்கள், பாலியல் கல்வி பற்றி விழிப்புணர்வு இருந்தாலும் இந்த மாதிரி குற்றச் செயல்கள் குறையவேண்டும் என்றால் தண்டனை பற்றிய பயம் ஏற்படவேண்டும்.
  3. ஆண்டவனே கவலை கொள்ளும் செயல்களை செய்துவிட்டு, மனசாட்சி என்றதை மறைத்துவிட்டு ஆண்டவனுக்காகத்தான், ஆண்டவனது இருப்புக்காகத்தான் அதனை செய்தோம் என கொஞ்சமும் தயங்காமல் சொல்கிறோம். ஆண்டவனே மனிதர்களைப் பார்த்து பயம் கொள்ளும் அளவுக்கு எங்களது செயல்கள் உள்ளன.
  4. விழிப்புணர்வு மட்டும் போதாது, இந்த மாதிரி துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களுக்கான தண்டனையும் கடுமையாக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் இவை குறைவடையும்.
  5. முன்பெல்லாம் நான் நினைப்பதுண்டு, தமிழர்களாகிய எங்களுக்கு, நாங்கள் நிம்மதியாகவும் கெளரவமாகவும், எந்தவித பயமுன்றி, எங்களது நிலத்தில் நாங்கள் வாழ வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் உள்ளது என்று.. ஆனால் நிலமை/எண்ணம் அப்படி இல்லை என்பதைத்தான் இப்பொழுதுதெல்லாம் உணர்கிறேன். நாங்கள் இலங்கை பெளத்த நாடு என்பதை பிழையென கூறும் நாங்கள் இந்து/கிறிஸ்தவம் என பிரிந்து போகிறோம். ஒரே மதம் என்ற காரணத்திற்காக பிழையானவர்களையும் ஆதரிக்கிறோம். ஊரில் ஏற்கனவே கோயில்கள் இருக்க வீதிக்கொரு கோயிலை கட்டுகிறோம். அதே நேரம் கிளிநொச்சியில் உள்ள பின் தங்கிய கிராமத்தில் உள்ள பாடசாலைக்கு ஒரு கட்டிடத்தைக் கட்ட நிறைய யோசிக்கிறோம். புலம்பெயர்ந்த தேசங்களில் பல்வேறு சங்கங்கள். தென்னிந்திய நடிகர்களின் நிகழ்ச்சிகளையும், அவர்களது படங்களை விநியோகிக்கும் உரிமையை அனேகமாக செய்வது ஈழத்தமிழர், ஆனால் ஊரில் உள்ள கலைஞர்களை ஊக்குவிக்க quality சரியில்லை, ticket விற்க முடியாது என பல காரணங்களை அடுக்குவோம். ஊரில் சமூக சீர்கேடுகளை(சிறுவர் துஷ்பிரயோகம் தொடக்கம் பல) ஒரு சாதாரன விடயமாக கடந்து போகிறோம். அதற்கு எதிரான நடவடிக்கைகளை கூட சேர்ந்து எடுக்க முடியாத நிலையில் தான் உள்ளோம். நாங்கள் ஊரில் வளர்ந்த காலத்தில் இப்படி நடைபெற்றதா? இல்லை. அந்த காலப்பகுதியில் இளமை வயதில் இருந்தவர்களின்(பெரும்பாலானோர்) பிள்ளைகள்தான் இன்றுள்ள இளைய சமூதாயம் என நினைக்கிறேன். அவர்கள்தான் இன்று சோம்பேறிகளாகவும் போதைக்கும் அடிமையாகி வருகிறார்கள். இன்று தமிழர்களாகிய எங்களது எண்ணங்கள் வேறு என்றே தோன்றுகிறது. எங்களிடம் அரசியல் பலமும் இல்லை ஆயுதபலமும் இல்லை, பொருளாதார பலமும்(?) இல்லை, மக்கள் பலமும் இல்லை. நிலமை இப்படி இருக்கையில் நிலாந்தன் தமிழ் மக்கள் தங்களது பேரம் செய்யும் பலத்தை அதிகரிக்க வேண்டும் எனப் பேராசைப்படுகிறார்.
  6. எனக்கு இந்த திரியில் எழுதிய கருத்துக்களையும் வேறு திரிகளில் எமது சமூகம் பற்றிய இன்றைய நிலையைப் பற்றி எழுதப்பட்ட, எழுதும் கருத்துகளைப் பார்க்கையில் ஒரு விஷயம் மட்டுமே தோன்றுகிறது. புலிகள், அவர்களது நடவடிக்கைகள், தோல்விகள் யாவற்றையும் Jail free card போல அவரவர் தங்களது தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்துகிறார்கள். அவ்வளவுதான். இது மட்டுமே எனக்கு விளங்குகிறது.
  7. //வேலையில்லாதவர்களின் பட்டியலைப் பார்த்தால் அவர்களில் உயர்கல்வி படித்தவர்கள் அதிகம்; ஆரம்பக்கல்வி பயின்றவர்கள் வீதம் குறைவு// 2006 ஆண்டில் இந்த கட்டுரை எழுத்தப்பட்டுள்ளது.. இன்றும் இந்த நிலைதான் இலங்கையில் இருக்கும். எங்களது சமூகம், எந்த நாட்டில் போய் வாழ்ந்தாலும் குறிப்பிட்ட துறைகளைத்தான் இன்னமும் அதிகளவில் தெரிவு செய்கிறார்கள் ஆனால் வேறு சமூகங்கள், அந்தந்த நாட்டில் இருக்கும் பல்வேறு துறைகளில் தமக்கு விருப்பமானதை, அன்றைய நிலையில் தேவை அதிகம் உள்ள துறைகளை தெரிவு செய்கிறார்கள், முன்னேறுகிறார்கள். அரசியல், சிறிய நடுத்தர கைத்தொழில், விவசாயம் தொடங்கி விளையாட்டு வரை ஈடுபடுகிறார்கள். ஆனால் எங்களது சமூகம் மிகமிக குறைவானவர்கள் ஈடுபடுகிறார்கள். அதே போல இங்கே ஆசிரியர்களுக்கு தட்டுப்பாடு, உளவியல் ஆலோசகர்களுக்கு தட்டுப்பாடு. எங்களது சமூகத்தைச் சார்ந்தவர்கள் இந்த துறைகளைத் தெரிவு செய்வதில்லை காரணங்கள் இந்த நாட்டு பிள்ளைகளுக்கு படிபிக்க முடியாது, ஆசிரியர்களை மதிக்கமாட்டார்கள் etc etc.. ஆனால் உண்மையான காரணங்கள் வேறு. இங்கேயே இப்படி இருக்கும் பொழுது இலங்கையில் பல்வேறு கற்கை நெறிகளை அறிமுகப்படுத்தினாலும் பாரம்பரிய துறைகளைவிட்டு வேறு படிப்பார்களா? இல்லை என்றுதான் நினைக்கிறேன். அப்படி படித்து அந்தப் பாரம்பரிய துறைகளில் பட்டப்படிப்பை முடித்தாலும் கூட அவர்கள் அனைவருக்கும் வேலை வழங்ககூடிய வாய்ப்புகள் உள்ளதா? இல்லை..
  8. மணித்துளிகள் கரையக் கரைய மலரிதழும் வாடிப் போகும்🤔
  9. பாலைவனத்தில் சில தடங்களைத் தேடி!!
  10. The Whispers!!! - பெயருக்கேற்றவாறு அவர்களின் குரல் இன்னமும் மெதுவாகத்தான் உள்ளது. சிட்னி Obera House இருக்கும் இடத்தில் அவுஸ்ரேலிய பூர்வீக குடிகளின் இந்த Whispers உள்ளது. இந்த இடத்தில் முன்பு வாழ்ந்த அவர்களுடைய உணர்வை, நம்பிக்கையை இந்த Whispers குறிக்கிறது..
  11. இந்த திரியில் நான் எழுதிய ஒரு கருத்தைத் தொடர்ந்து, தேவையற்ற விதமாக கருத்துக்கள், எழுதப்படுவதால் இந்த திரியில் அதனை எழுதியதற்காக உண்மையில் வருத்தப்படுகிறேன்.. நன்னிக்கு அந்தக் கருத்தை நான் எழுதியதன் நோக்கம் வேறு.. ஆனால் தேவையற்ற விதமாக திரிக்கு சம்பந்தம் இல்லாமல் அதனை வைத்தும், அதன் தொடர்ச்சியகவும் ஒருவரை ஒருவர் தாக்கி எழுதுவதைப் பார்க்க ஏன் அதனை எழுதினேன் என்றுதான் நினைக்கிறேன். பார்க்கப்போனால் இந்தப் போரில் இரண்டு பக்கமும் தவறு உள்ளது. காட்டுமிராண்டித்தனமாக செயற்படும் ஹமாஸும் சரி, தனது மக்களை காப்பாற்ற பதிலடி கொடுக்கிறேன் எனக் கூறிக்கொண்டு சாதாரண பாலஸ்தீன மக்களை மனிததன்மையற்று தாக்கும் இஸ்ரேலும் சரி. இரு தரப்பு செய்ததும் பிழை. ஆனால் இதனை தடுக்காமல் ஊக்குவிப்பதில்தான் மற்றைய நாடுகள் செயல்படுகின்றன. இந்த தீவிரமத வாதக்குழுக்களை உருவாக்கும்/ஊக்குவிக்கும் நாடுகளுக்கு அப்பாவி மக்களும் பற்றி அக்கறையில்லை. அதே போல மற்றைய நாடுகளும் தங்களது நாட்டுநலன்களுக்கேற்ப கண்டும்காணாதது போல இருக்கின்றன. என்னைப் பொறுத்த வரை இன்று இந்த உக்ரோன் போர் தொடங்கி இந்த பாலஸ்தீன போர் வரை உலகில் நடந்த/நடந்துகொண்டிருக்கும் போர்களைப் பார்த்தால் மனித உயிர்கள் இரண்டாம் பட்சம். மனித உயிர்களுக்கு மதிப்பே இல்லை. இவையெல்லாம் தெரிந்தும், தேவையற்ற விதமாக கருத்துகளை எழுதி மனஸ்தாபப்படவேண்டுமா?
  12. எமது மக்கள் தொடர்பான எண்ணங்களிலும் இந்த ஆவணத் தயாரிப்பிலும் ஈடுபடும் நன்னியின் மீதான எனது அபிப்பிராயம் மாறவில்லை அண்ணா!. நாங்கள் எல்லோரும் வேறுபட்ட சூழலில் வளர்ந்தவர்கள்.. எல்லோரும் எல்லாவிடயங்களிலும் ஒரே மாதிரி சிந்திப்பார்கள் எனக் கூறமுடியாது தானே. அதே போன்ற ஒன்றுதான் இந்த திரியில் நன்னியின் கேள்விக்கு எனது கருத்து.
  13. நான் இந்த தலைப்பில் செய்திகளையும் கருத்துக்களையும் வாசித்துக் கொண்டு வருகிறேன். கொல்லப்பட்ட பெண்னைப் பற்றிய செய்திகளை படித்துக்கொண்டு இருக்கும் பொழுது திடீரென நீங்கள் ஒரு பெண்ணின் படத்தைப் போட்டுவிட்டு அவர் ஒரு இரானுவ வீரர் etc etc என எழுதியதைப் பார்த்துவிட்டுதான் உங்களிடம் கேட்டேன். ஏனெனில் அந்தப் பெண் இராணுவ வீரர் என்பதால் அந்தப் பெண்ணிற்கு நடந்தது சரியாகுமா? இல்லைத்தானே? யாருக்குமே அப்படி நடக்ககூடாது என்றுதான் நாங்கள் நினைப்போம் இல்லையா!. அவ்வளவுதான். இந்த திரியில் நன்னியின் பதிவுகள், பலஸ்தீனியர்கள் இஸ்லாமியர்கள் என்பதால் அவர்களுக்கு நடப்பது சரியென்ற தோற்றத்தை எனக்குள் உருவாக்கியது. அது சரியான ஒன்றாக எனக்குப்படவில்லை. ஏனெனில் இரண்டு பக்கதாலும் கொல்லப்படுவது சாதாரண அப்பாவி மக்களே. ஆகையால்தான் இரண்டு கொடிகளையும் சேர்த்து எழுதட்டோ எனக் கேட்டதற்கு எனது கருத்தை எழுதினேன். இஸ்ரேலினை ஆதரிக்க கூடாது எனக் கூறவுமில்லை, நன்னியில் மதிப்பும் குறையவில்லை. ஆனால் யூதர்கள் இனவழிப்பு கொடுமையை எதிர்கொண்டவர்கள் ஆனால் இன்னொரு இனம் அவர்களைப் போன்ற இனவழிப்பை எதிர்கொண்ட பொழுது மற்றையவர்கள் போல அமைதி காத்தார்கள் எனும் பொழுது அவர்களின் மேல் நம்பிக்கை ஏற்படவில்லை. அதற்காக இந்த ஹமாஸ், தலீபான் போன்ற இஸ்லாமிய மதவெறிக்குழுக்களையும் ஆதரிக்கவில்லை. இவ்வளவுதான் இந்த விடயத்தில் எனது வட்டம். எல்லா விடயங்களிலும் வட்டத்தைவிட்டு சிந்திக்க முடியவில்லை என்பதையும் ஒத்துக்கொள்கிறேன்.
  14. நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான். போர் என்றாலே அழிவுதான் அதிலும் இந்த மாதிரி கிடைத்த சந்தர்ப்பத்தில் அப்பாவி மக்களை கொன்று குவிப்பது சாதாரனமான ஒன்றாகிவிட்டது. இவர்களால் எங்களுக்கு நன்மை கிடைக்கிறதோ இல்லேயோ ஆனால் எங்களது கொடியை இதற்குள் சேர்ப்பது தேவையற்ற ஒன்று
  15. நீங்கள் எதற்காக இதனை சுட்டிக்காட்டினீர்கள் என தெரிந்து கொள்ளலாமா? இராணுவ வீரர் என்பதற்காக அந்தப் பெண்ணை இப்படி இழுத்துச் செல்வதும்.. கொன்ற பின் துப்புவது. பலாத்காரத்தை ஒரு ஆயுதமாக பாவிப்பதை வீரமாக கருதும் யாருமே மனிததன்மையற்றவரகள். எங்களுக்கு நடந்த பொழுது யாருமே ஒன்று கூறவில்லை.. நியாயம் கிடைக்க இன்னமும் போராடிக் கொண்டு இருக்கிறோம் என்பதற்காக இந்த மாதிரி மனித தன்மையற்று மிருகங்களை விட கேவலமாக நடக்குமளவிற்கு மதவெறி.. மதங்கள் போதிப்பதை தமக்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டு விடுதலைக்காக போராடுகிறார்கள் என்றெதல்லாம் கேலிக்கூத்து.
  16. இந்தக் கூற்று எத்தனை உண்மை.. யாருக்கும் உலக அழிவு பற்றிய அச்சம் 1%தன்னும் இல்லை.. வரலாற்று தவறுகளிலிருந்து பாடம் படிக்கவேண்டும் என்பதெல்லாம் எழுத்தில் மட்டும்தான் உள்ளது.
  17. @Justinஅண்ணா, யாழிணையத்தில் தலைவரைப் பற்றிய தொடர், நன்னியின் வரலாற்று ஆவணப்படுத்தல் மற்றும் உங்களது இந்த தொடர் எல்லாமே மிகவும் பயனுள்ள தொடர்கள். உண்மையில் இப்படியான தொடர்களை இங்கே அல்லது புலம்பெயர் தேசத்தில் உள்ள தமிழ்ப் பாடசாலைகள் இலகுவான மொழி நடையில் உயர் வகுப்புகளிற்குப் பயன்படுத்தலாம். ஒரே சிலப்பதிகாரத்தையும் இராமயாணத்தையும் சொல்லிக் கொடுக்காமல்.
  18. யாழ்ப்பாணப் பொது நூலகமும் முதலியார் வாசிகசாலையும் நான் இந்த வருட ஆரம்பத்தில் ஊருக்குச் சென்றிருந்தேன். ஒரு நாள் யாழ்ப்பாணப் பொது நூலகத்திற்குச் சென்றிருந்த வேளை ஒரு சிறிய நாகபாம்புக்குட்டி ஒன்றை நூலகத்தின் வரையறுக்கப்பட்ட அனுமதி பகுதிக்குள் இருந்து பிடித்துக் கொண்டுவந்தார்கள். நான் நினைத்தேன் முதலியாரின் இந்த வாசிகசாலைக்குள் சுதந்திரமாகத் திரியாமல் அநியாயமாக அங்கே போய் மாட்டிக்கொண்டதே என்று. இன்றுடன் இந்தப் பயண அனுபவம் நிறைவடைகிறது. இவ்வளவு நாட்களும் கருத்துகள் எழுதி என்னை ஊக்குவித்த அனைத்து கள உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். நன்றி வணக்கம். - பிரபா.
  19. எனக்கென்னவோ முதலில் நாங்கள் தமிழர்கள் என்ற அடையாளத்தை, தமிழ் மொழியை, கலாச்சாரத்தை பேண வேண்டுமா இல்லையா என்பதை முடிவெடுக்கட்டும்.. அதன் பிறகே அவர்களால் உணர்ந்து கொள்ளமுடியும். ஏனெனில் போதைவஸ்து ஒரு புறம். போட்டி பொறாமையால் சமூக சீர்கேடுகளைக் கூட தட்டிக் கேட்க முடியாமல் தடுமாறும் சமூகத்தில், எமது தொன்மையை எப்படி பாதுகாக்க முடியும்? . மக்களின் எண்ணங்கள் இப்பொழுது வேறு. அதற்காக அவர்களை பிழையெனவும் கூற இயலாது. எனக்கு உங்களைப் போல அரசியல் கதைக்க முடியாது ஆனால் என் மனதில் பட்டதை எழுதினேன்
  20. ஒருவருமே இதை உணரவில்லை என்பதைத்தான் இன்றைய உலக நிகழ்வுகள் காட்டுகிறது. நன்றி Justin அண்ணா..
  21. உண்மைதான்.. குமுதம் அல்லது ஆனந்தவிகடனில் வந்த நினைவு உள்ளது(சரியாகத் தெரியவில்லை). இந்தப் புத்தகத்தைப் பார்த்ததும் சரி திரும்ப ஒருமுறை வாசிப்போம் என நினைத்தேன்.. அப்படித்தான் நானும் கேள்விப்பட்டனான், ஆனால் வருத்தம் இல்லாவிட்டாலும் சாப்பிடலாம் ரின்னில் வர்ற ஆட்டிறைச்சியை விட இது சுவையாக இருக்கும்😁 அப்புசாமி 80😎
  22. நன்றி ஏராளன்.. எழுதும் பொழுதும் கொஞ்சம் சந்தேகமாகத்தான் இருந்தது.
  23. அப்புசாமியும் ஆட்டுக்காலும்.
  24. நீங்கள் சொல்வது சரி.. ஏனெனில் தாளையடி வழியாகத்தான் போனேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.