Everything posted by nunavilan
-
ரப் பாடகர் வேடன்
பற்றி எரியும் வேடன் விவகாரம்! களத்துக்கு வந்த திரைப் பிரபலங்கள்?
-
அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்!
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நானே வருவேன் Lyrics-கண்ணதாசன் பாடியவர்:பி .சுசீலா. இசை-வேதா --- நானே வருவேன் இங்கும் அங்கும் நானே வருவேன் இங்கும் அங்கும் யாரென்று யாரறிவார் .ஆ.ஆ..(நானே) உன் மங்கலமாலை பெண்ணாக உன் மஞ்சள் குங்கும மலராக நான் வந்தேன் உன்னிடம் உறவாட உன் மாளிகை சொல்லும் கதையாக சொந்தம் எங்கே செல்லும் அது வந்து வந்து செல்லும் அவன் தந்த உறவல்லவா.ஆ.ஆ.(நானே) மயங்கும் கண்ணைப் பாராமல் கலங்கும் நெஞ்சைக் கேளாமல் பிரிந்து செல்ல எண்ணாதே என் கண்ணீர் பேசும் மறவாதே..எ.எ... மாலை வந்த வேளை மனம் தந்த பாதை அவன் தந்த உறவல்லவா.ஆ.ஆ.(நானே) என் நெஞ்சம் என்பது நீயாக என் நினைவுகள் எல்லாம் ஒளியாக என் காதல் கோயில் சிலையாக நான் கண்டேன் உன்னை துணையாக .. கைகள் செல்லும் தூரம் உன்கண்கள் வந்து சேரும் அவன் தந்த உறவல்லவா.ஆ.ஆ.(நானே)- இழக்கும் சந்தர்ப்பங்கள் மீண்டும் கிடைப்பதில்லை
Nadarajah Kuruparan "இழக்கும் சந்தர்ப்பங்கள் மீண்டும் கிடைப்பதில்லை" "தவறுகள் தொடர்ந்தால் வரலாறு மன்னிக்காது" மாகாணசபைத் தேர்தல் இடம்பெறுமா? என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது. அதிகாரப் பரவலாக்கம் குறித்து NPP யிடமோ அதன் மூலக் கட்சியான JVPயிடமோ தெளிவான நிலைப்பாட்டை காணமுடியவில்லை மாகாண சபை முறைமை என்பது ஒரு வெள்ளையானை என்பது அவர்களின் கருத்து. எனினும் அரசியல் அமைப்பில் 13ஆவது திருத்தச் சட்டம் இருப்பதனையும், தமிழ் மக்கள் அதனை போராடிப் பெற்றனர் எனவும் தோழர் அநுரமார திஸ்ஸநாயக்கா கூறியிருந்தார். இப்போ ஜனாதிபதியானதன் பின் அவர் மாகாணசபைத் தேர்தலை நடத்துவாரா என்பது தெளிவாகவில்லை. முன்னைய மாகாண சபைத் தேர்தலில் JVP போட்டியிட்டாலும் கொள்கை ரீதியாக மாகாண சபையை எதிர்த்தது. இதே நிலைப்பாட்டையே அகில இலங்கைத் தமிழ்காங்கிரசும், தமிழ்த்தேசிய முன்னணியும் கொண்டிருக்கின்றன. தேர்தலில் போட்டியிடுவது ஆனால் கொள்கை அடிப்படையில் எதிர்ப்பது. இங்கே மாகாண சபை வெறும் கோதா அல்லது முட்டையா என்ற விவாதம் தொடரட்டும். ஆனால் அரசியல் அமைப்புச்சட்டத்தில் 13 ஆவது திருத்தத்தில் இருப்பது மாகாணசபை முறை மட்டுமே. இந்த அரசாங்கத்தின் புதிய அரசியல் அமைப்பு கதையை நம்பி மாகாண சபைமுறைமையினை தமிழ் கட்சிகள் விட்டுவிட வேண்டாம் என, இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் தயான் ஜெயத்திலக அண்மையில் கூறியிருந்தார். 1980களில் இருந்து 2009 வரை பல தைப்பெங்கல்கள், தீபாவளிகளை கடந்துவிட்டோம். இன்னும் கனவில் கூட தமிழ் ஈழத்தை காணவில்லை. விடுதலைப் பொராட்டத்தில் இணைந்திருந்த போது இந்த நம்பிக்கையை பலருக்கு விதைத்து அவர்களின் வாழ்வை சிதைத்த வேதனை என்போன்ற பலரின் மனதை இன்றும் உறுத்திக்கொண்டே இருக்கிறது. ஆக சுயநிர்ணய உரிமை, சமஸ்டி, ஒருநாடு இரண்டு தேசம் என்பவற்றிற்காக போராடுபவர்கள் போராடட்டும். கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி. அவை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் தவற விட்டோம். ஆட்சியாளர்கள் கூறியதை முழுமையாக தந்தார்களா? தருவார்களா? என்ற கேள்விகளுக்கு அப்பால் அவர்கள் தருவதாக கூறியவற்றை நாம் நிராகரித்துள்ளோம் என்பது முக்கியமானது. ஒருவேளை சர்வதேசத்தையும், பிராந்தியத்தையும், தமிழ் மக்களையும் திருப்த்திப்படுத்த NPP அரசாங்கம் தேர்தலை நடத்தினால் தமிழ்த் தரப்பின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? என்னவாக இருக்க வேண்டும்? என்பது குறித்து சிந்திக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தல் கொடுத்த படிப்பினைகளை கருத்தில் எடுக்காததன் பயனை தமிழ்க் கட்சிகள் அனுபவிக்கின்றன. குறிப்பாக உள்ளுராட்சி சபைகளிள் தனித்து ஆட்சியமைக்க முடியாது ஆதரவுக்கரம் நீட்டி அவை அலைகின்றன. மக்களின் எதிர்பார்ப்புகளை ஒற்றுமையை புறந்தள்ளியதால் வடகிழக்கின் பெருமாபாலான சபைகள் தொங்குகின்றன. மாகாணசபைத் தேர்தலிலும் இந்த துர்ப்பாக்கிய நிலையை உணராவிட்டால் மாகாண சபையும் தொங்கும் சபையாகும் என்பதில் சந்தேகம் இல்லை் குறிப்பாக மாணாக சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர், ஒருமித்த நிலைப்பாட்டடைக் கொண்ட தமிழ்க் கட்சிகளின் பொதுவேட்பாளராக இருப்பது காலத்தின் அதி முக்கிய தேவையாக இருக்கிறது. அந்தப் பொது வேட்பாளர் அதிகார மைய்யத்தின் சேகராக, அடிமையாக, விலைபோகும் ஒருவராக, சொந்த நலனை முதன்மைப்படுத்துபவராக, தற்துணிவு அற்றவராக, முடிவெடுக்கும் ஆற்றல் இல்லாதவராக, அரசியல் அறிவும், நிர்வாக திறனும் ஒருங்கே அமையப்பெற்றவராக இல்லாதிருப்பின் முதலமைச்சர் கதிரையில் அமர்வதில் பயனில்லை. கடந்து போன வடக்கு கிழக்கின் மாகாண ஆட்சிமுறை சிறந்த பாடத்தை மக்களுக்கு புகட்டிச் சென்றுள்ளது. இதுவைரை இருந்த மாகாண ஆட்சிகளில் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபை ஆட்சி ஒப்பீட்டளவில் சிறப்பாக இருந்தது என அதனை நன்கு அறிந்தவர்கள் கூறுகிறார்கள். மிகக் குறுகிய காலமே இணைந்த வடகிழக்கு மாகாண சபையை ஆட்சிபுரிந்த EPRLF அதன் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள், மாகாண சபையின் முக்கியஸ்த்தர்கள் குறித்து ஆயிரம் விமர்சனங்கள் உண்டு. ஆனால் மாகாண சபை நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்கிய விதம், அந்தக் கட்டமைப்புக்கான அதிகாரிகளை தேர்வுசெய்த முறைமை, செயல்திறனும், நிர்வாக திறனும் உடைய சிவில் நிர்வாக அதிகாரிகளை அமைச்சுக்கள், திணைக்களங்களில் இணைத்தமை குறித்து நல்ல அபிப்பிராயம் இருந்தது. நேரடியாக டில்லியும், தீக்ஸித்தும் ஜே.ஆர் ஜெயவர்த்தனவையும், அவரது அமைச்சரவையையும் கட்டுப்பாட்டுள் வைத்திருந்ததோடு, அமைதிப்படையும் மாகாண கட்டமைப்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கை வகித்திருந்தன. இவை இருந்தாலும் அரசியல் ஆளுமையும், நிர்வாகத் திறனும், முடிவெடுக்கும் ஆற்றலும், தற்துணிவும் இல்லாத முதலமைச்சர் கதிரைக்கு பாரமாக இருந்திருந்தால் அது சாத்தியப்பட்டு இருக்காது. குறிப்பாக போகும் போது தமிழீழ பிரகடனத்தையும் செய்திருக்க முடியாது. அதிகாரத்தை பரவலாக்க விரும்பாத, இனவாத அரசாங்கங்களோடு முட்டி மோத வேண்டியகதிரை முதலமைச்சர் கதிரை. அதனால் முதலமைச்சர் வேட்பாளர் தனியே புத்திஜீவியாகவோ, அரசில் மோதாவியாகவோ, நீதிபதிகளாகவோ, அல்லது அரசியல் பின்புலம் அற்ற நிர்வாக அதிகாரியாகவோ இருப்பதனால் மட்டும் வடக்கு கிழக்கு மாகாண சபைகளை நிர்வகிக்க முடியாது. ஆட்சிபுரிய முடியாது. அதற்கு அரசியல் புன்புலமும், அரசியல் அறிவும், நிர்வாகத் திறனும், மொழி ஆற்றலும், அர்ப்பணிப்பும் மக்கள் மீதான கரிசனையும் உடைய ஒருவரையே தேர்வுசெய்ய வேண்டும். அவரை கண்டுபிடியுயுங்கள். அவர் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் பொதுவாட்பாளராக நிறுத்துங்கள். இழக்கும் சந்தர்ப்பங்கள் மீண்டும் கிடைப்பதில்லை. மீண்டும் மீண்டும் தவறிழைத்தால் வரலாறு எம்மை மன்னிக்காது. #ஞாபகங்கள் All reactions: 5656- ஜேர்மனியின் நான்காவது சாம்ராஜ்ய ஆரம்பம்?
ஜேர்மனியின் நான்காவது சாம்ராஜ்ய ஆரம்பம்? சிவதாசன்இரண்டாம் உலக யுத்தத்தில் தோல்வியடைந்து ஏறத்தாழச் ‘சிறைப்படுத்தப்பட்டுக் கிடந்த’ இரண்டு நாடுகளான யப்பானுக்கும் ஜேர்மனிக்கும் விடுதலை கிடைத்துவிட்டது. இதில் முரண்நகை என்னவென்றால் இரண்டாம் போரில் இந்நாடுகளைத் தோற்கடித்து சிறைப்படுவதற்குக காரணமான சோவியத் குடியரசின் பதாங்கமான ரஸ்யாவே அவற்றுக்கு இந்த இந்த விடுதலையைப் பெற்றுத் தந்திருக்கிறது. ஹிட்லரின் விஸ்தரிப்பைத் தடுத்து மேற்கைக் காப்பாற்றுவதற்காக சேர்ச்சில் வைத்த பொறியில் வீழ்ந்த ஸ்டாலின் இதற்காக காவு கொடுத்தது 9 மில்லியன் சோவியத் படைகளையும் 18 -19 மில்லியன் பொதுமக்களையும். மீண்டுமொரு தடவை கோர்பச்சேவ் வடிவத்தில் மேற்கின் பொறியில் சோவியத் வீழ்ந்து தன்னையே சிதலம் செய்து இன்று பலமிழந்த ரஸ்யாவாக மேற்கின் படையெடுப்பை எதிர்கொள்ளத் தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த தடவை மேற்கின் படையெடுப்பிற்கு தலைமை தாங்குவதன் மூலம் ஜேர்மனி ரஸ்யாவைப் பழிவாங்கப் போகிறதா? பட்சி அப்படித்தான் சொல்கிறது. ஹிட்லரின் ஜேர்மனியை (ஜனவரி 30, 1933 – மே 8, 1945) ‘மூன்றாம் இராச்சியம்’ (Third Reich) என்பார்கள். முதலாவது ரோம் சாம்ராஜ்யமும் அதற்குப் பின்னர் ஜேர்மன் சாம்ராஜ்யம் இரண்டாவதாகவும் இருந்தன. தற்போது ஜேர்மனியின் அதிபராக வந்துள்ள ஃப்றைடிக் மேர்ஸ் வந்ததும் வராததுமாக உலக நீதிமன்றத்தினால் கைதாணை விடுக்கப்பட்ட இஸ்ரேலின் நெட்டன்யாஹுவைத் தனது விருந்தாளியாக அழைத்து உலக அபிப்பிராயம் எனக்குத் தேவையில்ல்லை என்பதுபோல அவரை உலக நாயகனாக அங்கீகரித்தமை ஹிட்லரின் மீள்வருகைக்குக் கட்டியம் கூறியமை போல இருந்தது. ஜேர்மனி நான்காவது சாம்ராஜ்யமாக உருவாகுவது இவரது காலதில் தான் ஆரம்பமாகும் என்பது எனது கணிப்பு. லிதுவேனியா முன்பு சோவியத் குடியரசில் இருந்து கோர்பச்சேவ் புண்ணியத்தில் பிரிந்துபோன ரஸ்யாவின் எல்லை நாடு. அதன் சனத் தொகை 2.87 மில்லியன் மட்டுமே. கோர்பச்சேவுடனான ஒப்பந்தத்தின்படி பேர்லினைத் தாண்டி நேட்டோ ஒரு அங்குலமும் நகராது என்ற சத்தியத்தையும் மீறி நேட்டோ இப்போது லிதுவேனியா, ஃபின்லாந்து உட்பட பல ரஸ்ய எல்லை நாடுகளில் நிரந்தரமாகத் தளங்கள் அமைத்து விட்டது. ரஸ்யாவின் கலினின்கிராட் நகரினதும், ரஸ்யாவின் நடு நாடான பெலாறுஸ் நாட்டிநதும் எல்லைகளில் இருக்கிறது லிதுவேனியா. யூக்கிரெய்னிலும் இதே உத்தியை நேட்டோ கையாள முற்பட புட்டின் அதற்கு மறுத்தான் போட்டதன் விளைவே இன்றைய ரஸ்ய – யூக்கிரெய்ன் போர். இப்போரை நிறுத்தி ரஸ்யாவுக்கு ஒரு இடைவேளை வாங்கித்தர ட்றம்ப் முயற்சித்தமை நேட்டோவின் தலைமையை அமெரிக்காவிடமிருந்து ஐரோப்பிய ஒன்றியம் பிடுங்கிக்கொள்ள வாய்ப்பாகி விட்டது. அத்தோடு கனடா போன்ற நேட்டோ நாட்டுடனான தீர்வைச் சண்டையும் ஐரோப்பிய தலைமையை ஊக்குவிக்கும் கார்ணியின் தலைமையும் உலகின் அடுத்த அதிகார மையமாக ஐரோப்பாவைவையே முந்தள்ளி விட்டிருக்கிறது. எனவே ரஸ்ய – யூக்கிரெய்ன் போர் விரைவில் உக்கிரமடையும் இதில் நேட்டோ உறுப்பினர் என்ற வகையில் ஜேர்மனி தலைமையை எடுக்கும் என உறுதியாக நம்பலாம். இதற்கு காரணம் பிரித்தானியா, பிரான்ஸ், கனடா போன்ற பலமான நாடுகளை விட ரஸ்ய எல்லைக்கு மிக நெருக்கமான நாடு ஜேர்மனி மட்டுமே என்பது தான். இதை உறுதிப்படுவதுபோல், கடந்த வியாழனன்று (மே 22) லிதுவேனியாவில் ஜேர்மனியின் 45 ஆவது கவசப் படையணியை வரவேற்று தலைநகர் வில்னியஸில் லிதுவேனியா கொண்டாடியிருக்கிறது. இது ஒரு நீண்டகால நிலைகொள்ளல் எனவும் ரஸ்யாவிடமிருந்து ஐரோப்பாவையும் நேட்டோவையும் பாதுகாப்பதே இதன் நோக்கம் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. யூக்கிரெய்னை ரஸ்யா வெற்றி கொண்டால் அது அத்தோடு நிற்காமல் மீதமுள்ள சிறிய நாடுகளையும் கபளீகரம் செய்துவிடுமென்ற காரணத்தினால் தான் இந்த நடவடிக்கை எனவும் கூறப்படுகிறது. லிதுவேனியாவை நோக்கிய இந்த ஜேர்மானிய படை நகர்வு இவ்விரு நாடுகளும் தம்மிடையே மேற்கொண்ட இணக்கப்பட்டின் விளைவு இதில் இதர நேட்டோ நாடுகளின் பங்கு என்ன என்பது இன்னமும் தெரியவில்லை என்கிறார்கள். இரண்டாம் போரில் ஜேர்மனி தோற்கடிக்கப்பட்டபோது நேச நாடுகளால் அதன் மீது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதில் முக்கியமானவை மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ பலம், உற்பத்தித்துறை ஆகியவையாகும். இருப்பினும் ரஸ்ய – யூக்கிரெய்ன் போர் ஆரம்பித்ததும் (2022) ஜேர்மனியின் இராணுவ விஸ்தரிப்பின் மீதான கட்டுப்பாட்டை நேட்டோ தளர்த்தியிருந்தது. இப்போது ஆட்சிக்கு வந்திருக்கும் ஃப்றைட்றிக் மேர்ஸ் “ஜேர்மனியின் இராணுவத்தை ஐரோப்பாவின் பலமான இராணுவமாக மாற்றுவேன்” எனச் சபதமெடுத்தது மட்டுமல்லாது அதற்காக மிதமான செலவீனத்தையும் ஒதுக்கியிருக்கிறார். லிதுவேனியாவில் தற்போது 500 ஜேர்மன் இராணுவம் நிலைகொண்டுள்ளது. 2027 இல் இதை 5,000 இராணுவத்தினரும் சிவிலியன்களும் சேர்ந்த பலமான படையொன்றாக உருவாக்கவிருப்பதாகவும் கேர்மனி தரப்பில் கூறப்பட்டுள்ளது. லிதுவேனியாவில் அமெரிக்க படைகளும் நிலைகொண்டுள்ளனரெனினும் ட்றம்ப் நிர்வாகத்தில் அவர்கள் ஐரோப்பிய சகாக்களிடமிருந்து விலகியே இருப்பதாகவும் இதன் காரணமாகவே லிதுவேனியா ஜேர்மனியின் உதவியை நாடியுள்ளது எனவும் கூறப்படுகிறது. தனது எல்லையில் இருக்கும் லிதுவேனியாவில் நேட்டோ வந்தமர்ந்தபோதோ அல்லது கடந்த சில ஆண்டுகளில் ஃபின்லாந்து போன்ற நாடுகள் நேட்டோவில் இணைந்தபோதோ புட்டின் எதுவித எதிர்ப்பையும் தெரிவிக்காது யூக்கிரெய்னில் மட்டும் தனது எதிர்ப்பைக் காட்டியதற்கு முக்கிய காரணம் யூக்கிரெய்னில் வாழும் கணிசமான ரஸ்ய மொழி பேசும் மக்கள் மீது யூக்கிரெய்ன் ஆட்சியாளர்கள் மேற்கொண்ட வன்முறை எனபதும் கிரீமியா உடபட யூக்கிரெய்னில் அடங்கும் பல பிரதேசங்கள் ஒரு காலத்தில் ரஸ்யாவினால் தானமாக வழங்கப்பட்டமை என்பதுமே காரணம். யாவில் ஜேர்மனி படைகள் நிலைகொள்வது விரைவில் நேட்டோ ரரஸ்ஸ்யா மீது பாரிய போரொன்றுக்குத் தயாராகுவதாகவே அவதானிகள் கருதுகின்றனர். பொருளாதாரத் தடகள் மூலம் பலமிழந்திருக்கும் நிலையில் ரஸ்யா நேட்டோவின் உக்கிரமான தாக்குதலை எதிர்கொள்ள இயலாத பட்சத்தில் அது தனது அணுவாயுதங்களைப் பாவிக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை. இரண்டாம் உலகப் போரிலும் ஐரோப்பிய நேசநாடுகளுக்கு உதவியாகக் களமிறங்க அமெரிக்கா தயங்கியபோது சேர்ச்சில் தான் தனது தந்திரத்தால் அதைச் சாதித்தார். இப்போது ட்றம்பின் ஆட்சியில் அவர் நடுநிலையாக இருப்பாரானால் ரஸ்யா ஓரளவு தாக்குப் பிடிக்க வாய்ப்புண்டு. மறுபக்கத்தில் ட்றம்பின் இறக்குமதித் தீர்வை விவகாரத்தால் குழம்பிப்போயிருக்கும் உலக பொருளாதாரம் யப்பான், தென் கொரியா, சீனா போன்ற எதிரி நாடுகளிடையே ஒரு இணக்கப்பாட்டைக் கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை. உலக மீளொழுக்கிற்கான காலம் நெருங்கி விட்டது. போரொன்றே அதைச் சாத்தியமாக்கும் போலிருக்கிறது. https://marumoli.com/%e0%ae%9c%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%ae%be/- கனடாவில் Toronto நகரிலும், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கான வாய்ப்பு உள்ளதா?
கனடாவில் Toronto நகரிலும், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கான வாய்ப்பு உள்ளதா? மாநகரசபை உறுப்பினர் பார்த்தி கந்தவேள் அவர்களுடன் May 18 சிறப்பு நேர்காணல். கனடாவில் Toronto நகரிலும், முள்ள...5,110 次播放 · 56 个心情 | கனடாவில் Toronto நகரிலும், முள்ளிவாய...கனடாவில் Toronto நகரிலும், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கான வாய்ப்பு உள்ளதா? மாநகரசபை உறுப்பினர் பார்த்தி கந்தவேள் அவர்களுடன் May 18 சிறப்பு நேர்காணல்.... https://www.instagram.com/eastfmtamil/reel/DJpmSzJJCy6/- அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
யாழ் மாநகரசபையின் அசமந்தப்போக்கே ,பன்னாட்டு அசைவ உணவகம் வருவதற்குக் காரணமா?- பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்
அடுத்த அரசு வந்து இவரை வெளியே எடுத்து விடும்.- களைத்த மனசு களிப்புற ......!
நின்று கொண்டு இருப்பவர் உசைன் போல்ட். வணங்குபவர் Gatlin. இது நடந்த இதே stadium த்தில் Gatlin போதை பொருள் உபயோகித்து ஓடியத்திற்காக 2012 ல் தடை செய்யப்பட்டு cheat பட்டம் வாங்கினார். உலக தடகள வீரர்கள் மத்தியில் அவரை ஒரு ஏமாற்றுக்காரர் என்று ஏசினார்கள். ஆனால் அதே போட்டியில் தங்கம் வென்ற போல்ட் அவரைப் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. பல பேட்டிகளில் அவரை நோண்டி நோண்டி கேட்ட போது அவர் சொன்னது. Galtin ஒரு திறமையானவர். அவர் போதை பொருளை உபயோகித்தால் தடை செய்யப் பட்டு இருக்கலாம். ஆனால் என்னைப் பொருத்தவரை அவர் போதை பொருளை உபயோகிக்காமல் இன்னும் முயற்சி எடுத்து இருந்தால் கண்டிப்பாக என்னை கூட ஜெயிக்கலாம் என்றார். உலகம் அவர் செய்த தவறை மட்டும் பார்க்கிறது. நான் அவரின் திறமையை மட்டும் பார்க்கிறேன் என்றார். அப்போது எல்லோரு சிரித்தார்கள். ஒரு கருப்பருக்கு இன்னொரு கருப்பர் வக்காலத்து வாங்குகிறார் என்று. ஆனால் அந்த பேட்டி Galtin க்குள் ஒரு பெறும் மாறுதலை உண்டாக்கியது. 6 வருடம் உழைத்து போதைகளை விட்டு விட்டு மீண்டும் களத்துக்கு வந்தார். அதே களத்தில் அவர் உசைன் போல்ட்டையே வென்றார். அவர் தரையில் அமர்ந்து போல்ட்டை வணங்கிய காட்சி... 🎉" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t8c/1/16/1f389.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🎉" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t8c/1/16/1f389.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">- இந்த அரசாங்கம் எமக்கு என்ன செய்துச்சு? | கூர்மையான கேள்வியுடன் சத்தியலிங்கம் அவர்கள்
இந்த அரசாங்கம் எமக்கு என்ன செய்துச்சு? | கூர்மையான கேள்வியுடன் சத்தியலிங்கம் அவர்கள் ஜே வி பியும் இனவாதம் பேசி நாட்டை ஆட்சி செய்தால் நாடு ஒரு போதும் முன்னேறாது.- தமிழ் இன அழிப்பு போன்ற கருத்துகள் பகிரப்பட்டால் இனி சட்டம் பாயும் , அரசாங்கம் எச்சரிக்கை.
இதுவும் ஓரு வகை இனவாதம் தான். தமது வாக்கு வங்கி 6 மாதத்தில் குறைந்தவுடன் நாட்டை காக்கும் வீரர்கள் என தங்களை சிங்கள மக்களிடம் காட்ட வேண்டியுள்ளது.- நடனங்கள்.
- மனிதாபிமான உதவிகள் இல்லை - அடுத்த 48 மணிநேரத்தில் காசாவில் 14000 குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம்
Unusual movements by the British Royal Air Force were observed over the Eastern Mediterranean today, with 3-4 KC2 and KC3 "Voyager" aerial refueling tankers, possibly accompanied by an unknown number of fighter aircraft, arriving at RAF Akrotiri Airport in Cyprus from RAF Bryce Norton in the UK earlier today.- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேல் மீது நடவடிக்கை எடுக்கும் ஐரோப்பிய ஒன்றியம்! காஸாவில் ஏற்பட்டுள்ள கொடுந்துயர நிலைக்கு மத்தியில், இஸ்ரேலுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஒப்பந்தம் மறுபரிசீலனை செய்யப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் காஜா கல்லாஸ் தெரிவித்துள்ளார். காஸா பகுதியின் முழு பொறுப்பையும் அமெரிக்கா எடுத்துக்கொள்ளும் என்றும், காஸாவில் குடியிருக்கும் பாலஸ்தீன மக்கள் வெளியேற்றப்படுவார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருந்ததை அடுத்து, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கம் காஸாவில் புதுப்பிக்கப்பட்ட இராணுவத் தாக்குதலைத் தொடங்கியுள்ளதுடன், நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்திய நாட்களில் இஸ்ரேல் மீதான சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ளது. மட்டுமின்றி, காஸா பகுதியை மொத்தமாக கைப்பற்றும் வரையில் ஓய்வதில்லை என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பகிரங்கமாக அறிவித்திருந்தார். இந்தச் சூழலில், காஸாவில் நடந்தேறும் நெருக்கடிகளின் மத்தியில், இஸ்ரேலுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வதற்கு பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார அமைச்சர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆதரவளித்ததாக கல்லாஸ் கூறியுள்ளார். காஸாவில் நிலைமை பேரழிவின் விளிம்பில் உள்ளது. இஸ்ரேல் அனுமதித்த உதவி நிச்சயமாக வரவேற்கத்தக்கது, ஆனால் அது வெறும் கண் துடைப்பு நாடகம். உதவிகள் உடனடியாக, தடையின்றி, அளவில் அதிகமாக அளிக்கப்பட வேண்டும், ஏனென்றால் இதுதான் தற்போதையத் தேவை என்று கல்லாஸ் செய்தியாளர்களிடம் கூறினார். இதனிடையே பாராளுமன்றத்தில் பேசிய பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சர் ஜீன்-நோயல் பரோட், ஐரோப்பிய ஒன்றிய முடிவை வரவேற்று, 27 உறுப்பு நாடுகளில் 17 நாடுகள் இந்த நடவடிக்கையை ஆதரித்ததாகக் கூறினார். முன்னதாக செவ்வாய்க்கிழமை இஸ்ரேலுடனான சுதந்திர வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை பிரித்தானியா இடைநிறுத்தியதுடன், அதன் தூதரை வரவழைத்து தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்தது. அத்துடன் மேற்குக் கரை குடியேறிகள் மீது மேலும் தடைகளை அறிவித்தது. மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து காஸாவிற்குள் மருத்துவம், உணவு மற்றும் எரிபொருள் விநியோகங்கள் நுழைவதை இஸ்ரேல் தடுத்துள்ளது. இதனால் அடுத்த அடுத்த இரண்டு நாட்களில் 14,000 சிறார்கள் பட்டினியால் இறக்கும் மிக மோசமான சூழல் காஸாவில் உருவாகியுள்ளது. இந்த நிலையில், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் லாமி தெரிவிக்கையில், மீதமுள்ள பணயக்கைதிகளை மீட்பதற்கான வழி தாக்குதல் அல்ல என்றும், உதவித் தடையை இஸ்ரேல் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். மேலும் இஸ்ரேல் அரசாங்கத்தின் சில பிரிவுகளில் தீவிரவாதம் ஊடுருவியுள்ளதையும் அவர் கண்டித்தார். https://seithy.com/breifNews.php?newsID=333582&category=WorldNews&language=tamil- அமைச்சர் விஜித ஹேரத்தின் கவனத்துக்கு
அமைச்சர் விஜித ஹேரத்தின் கவனத்துக்கு--- ”இன அழிப்பு“ என்று கூறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேர்காணல் ஒன்றில் விளக்கம் கொடுத்துள்ளீர்கள். சரி- ஏற்கிறோம்-- A) ஆனால், யாழ்ப்பாணம் -நகதீவ எனவும் திருகோணமலை -பெற்றிக்கோட்டை என்றும் தமிழ் வரலாற்று பாடநூலில் சிங்களப் பெயர்களாக ஏன் மாற்றினீர்கள்? B) சிங்கள இனவாதம் பாடநூலில் ஆரம்பிக்கிறது என்பதை உங்களால் மறுக்க முடியுமா? C) வரலாற்று பாடநூலை பௌத்த தேரர்கள்தான் எழுதுகின்றனரே! தமிழ் வரலாற்று பாடநூலுக்கும் அது மொழி பெயர்க்கப்படுகிறதே! D) இன அழிப்பு என்பது மக்களை கொல்வது மாத்திரமல்ல. அந்த மக்களின் மரபுரிமைகளை அழித்தல், இன விகிதாசாரத்தை மாற்றும் திட்டமிட்ட குடியேற்றங்கள், வரலாற்றுத் திரிபுகள், சமயத்தை வரலாற்று பாடநூலில் புகுத்தல் உள்ளிட்ட அனைத்துமே இன அழிப்புத்தான். கீழே சில கேள்விகள் - விளங்கங்கள் உண்டு. பதில் தருமாறு தாழ்மையுடன் கேட்கிறேன். ------ ----- நீங்கள் உட்பட சிங்களத் தலைவர்களின் நிலைப்பாடு என்வென்றால், விடுதலைப் புலிகளுடன் நடத்த போரை மாத்திரம் வைத்தே இனப் பிரச்சினை விகாரத்தை நோக்குகின்றீர்கள். ஆனால், தமிழர்கள் கோருகின்ற “இன அழிப்பு” நீதி விசாரணை என்பது, 1956 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணம் கல்லோயா படுகொலையில் இருந்து 1958 ஆம் ஆண்டு கொழும்பு கலவரம் உள்ளிட்ட 2009 முள்ளிவாய்க்கால் வரையும் நீடித்து, பின்னர் கடந்த 15 வருடங்களில் காணி அபகரிப்பு - சிங்கள குடியேற்றம் - தமிழ் வரலாற்று பாடநூல்களில் பௌத்த சமய வரலாற்று மற்றும் சிங்களச் சொற்கள் திணிப்பு போன்ற விவகாரங்களில் இருந்து வர வேண்டும். குறிப்பாக 1920 இல் இலங்கைத் தேசிய இயக்கம் உடைந்து, 1921 இல் தமிழர் மகாசபை உருவானதில் இருந்து, ஏறத்தாள நூறு வருடங்களுக்கு மேற்பட்ட அரசியல் போராட்டம் இது. ஆனால், நீங்கள் உட்பட சிங்கள தலைவர்கள் அனைவருமே, இந்த விவகாரத்தை மிக இலகுவாக ”தமிழ் இனவாதம்” என்றும் புலிகளின் பயங்கரவாதம் எனவும் சித்தரித்து மூடி மறைக்கின்றீர்கள். 2019 ஆம் ஆண்டில் இருந்து நடைபெறுகின்ற கா.பொ.த சாதாரண தர பரீட்சையில் தமிழ் ஊர்களுக்கு சிங்களப் பெயரில் கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றன. A) யாழ்ப்பாணம் - நகதீவ B) திருகோணமலை - பெற்றிக்கோட்டை C) யாழ். ஊர்காவற்துறை -சூக்கிரசித்த, D) யாழ். கந்தரோடை - கந்துருகொட. E) காங்கேசன்துறை - ஜம்புகோள பட்டுன F) கதிர்காமம் - கஜராஜகம அல்லது கத்தரகம. அதேவேளை ---- 1) அரச செயற்பாடுகள் - ரஜகரிய 2) கிரமாத் தலைவன் - தமிக 3) குடும்பத் தலைவன் - குர்கபதி 4) கிராம சேகவர் - கிராம நிலதாரிய ---- என்ற சிங்கள சொற்கள் தமிழ் வரலாற்று பரீட்சை வினாத் தாளில் உண்டு. ஐ.நா.கல்வித் திட்ட யுனெஸ்கோ விதிகளின் பிரகாரம், பாடநூல்கள் அந்த அந்த மொழிகளிலேயே எழுதப்பட வேண்டும். அதுவும் வேறொரு இனத்தின் வரலாற்று பாடநூலில், இன்னொரு சமய வரலாற்றை புகுத்த முடியாது. ஒரு நாட்டில் எத்தனை தேசிய இனங்கள் வாழ்ந்தாலும், ஒவ்வொரு தேசிய இனங்களின் வரலாறுகளும் சமநிலையில் பாடநூலில் வர வேண்டும். ஆனால் இலங்கைத்தீவில் அப்படியல்ல. அதுவும் 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் குறிப்பாக 2015 மைத்திரி - ரணில் என்று மார்தட்டிய, நல்லாட்சி என்று கூறப்பட்ட அரசாங்கமே, வரலாற்று பாடநூல்களில் சிங்கள சொற்களை புகுத்தியது. எழுத இன்னும் ஏராளம் உண்டு. இவை சில உதாரணங்கள் மாத்திரமே. ஆனாலும் மேலும் சில குறிப்புகள்-- 1) யாழ்ப்பாண இராஜியம், வரலாற்று பாடநூலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. 2) திருகோணமலை கந்தாளாய் குளம் குளக்கோட்ட மன்னன் கட்டியது. ஆனால் அக்கபோதி மன்னன் கட்டியதாக பாடநூலில் மாற்றப்பட்டுள்ளது. -- சோழகங்க தேவன் என்ற இயற்பெயரையுடைய குளக்கோட்டன் என்ற மன்னன், இலங்கைத்தீவின் மட்டக்களப்பு அம்பாறை உள்ளிட்ட கிழக்குப் பிரதேசத்தை ஆட்சி செய்தான். --- திருக்கோணேச்சரம் ஆலயத்துக்குத் திருப்பணி செய்தவன் என்று கோணேசர் கல்வெட்டில் உண்டு. ஆகவே எக் காரண - காரிய அடிப்படையில் அக்கேபோ மன்னன் என்று மாற்றினீர்கள்? ---- சரி - யாழ்ப்பாணம் என்ற வரலாற்று பெயரை - நகதீவ என்றும், தமிழர்களின் புராதன நகரமான திருகோணமலை என்ற பெயரை பெற்றிக்கோட்டை எனவும் யாரைக் கேட்டு மாற்றினீர்கள்? 1983 ஆம் ஆண்டு அமரர் ஜேஆர் சிங்கள அரச அதிபரை திருகோணமலைக்கு நியமித்தது முதல் இன்று வரை அங்கு எத்தனை சிங்களக் குடியேற்றங்கள்? சில்வா என்ற அரச அதிபர் திருகோணமலையின் தமிழ் இன விகிதாசாரத்தை மாற்ற வரைபடம் வரைந்தவர். சில்வா பற்றி அமரர் சம்பந்தன் 2006 இல் நாடாளுமன்ற உரை ஒன்றில் விளக்குகிறார். நன்றி- அ.நிக்ஸன் பத்திரிகையாளர் கொழும்பு-- சயனைட் குப்பிகளை அணிந்து மண்ணுக்காக இந்த நாட்டிலே ஒரு இனம் போராடியது - ரிஷாட் ஆவேசப் பேச்சு
சயனைட் குப்பிகளை அணிந்து மண்ணுக்காக இந்த நாட்டிலே ஒரு இனம் போராடியது - ரிஷாட் ஆவேசப் பேச்சு மன்னார் புத்தளம் பாதை மூடப்பட்டதை ஏற்க முடியாது.சபாநாயகர் பொம்மை போல இருக்கின்றார். 25 வருடங்களில் இப்படி ஒரு சபாநாயகரை கண்டதில்லை.- ரணில் அலுவலகத்தில் இரகசிய கலந்துரையாடல்!
ரணில் அலுவலகத்தில் இரகசிய கலந்துரையாடல்! http://seithy.com/siteadmin/upload/ranil-wickremesinghe-201124-seithy.jpg உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சி அமைத்தல் உள்ளிட்ட எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து கொழும்பு - பிளவர் வீதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இதில் பங்கேற்றுள்ளார். முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் முக்கிய அரசியல் பிரமுகர்களும் இதில் கலந்துகொண்டுள்ளனர். இந்த கலந்துரையாடல் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவிக்கையில், அரசாங்கத்தின் தோல்வி உறுதியாகிவிட்டது. ஒருபுறம் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் தலைதூக்கியுள்ள நிலையில், மறுபுறம் உப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கள்வர்கள் என விமர்சித்த எமது உறுப்பினர்களிடம் பேரம் பேசி, அவர்களின் ஆதரவுடன் சபைகளை நிறுவுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. அதிகாரத்துக்காக எதையும் செய்யும் சம்பிரதாயபூர்வ அரசியலிலேயே அவர்கள் ஈடுபட்டுள்ளனர். சகல எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைத்து மக்களுக்கான சேவைகளை வழங்குவோம். அரசாங்கம் 50 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் நாம் தலையிடப் போவதில்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் 50 சதவீதத்தை பெற்றுள்ளவற்றில் நிச்சயம் நாம் ஆட்சி அமைப்போம். குரங்குகள் சனத்தொகை கணக்கெடுப்பைப் போன்று நடைமுறை சாத்தியமற்ற திட்டங்களை தவிர, பிரயோசனமான எந்தவொரு நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. ஆங்கிலேயர் ஆட்சியின் பின்னர் முதன்முறையாக இலங்கையில் உப்பு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள நிலையில், மக்களின் செய்தியை எதிர்க்கட்சிகள் சரியாக புரிந்துகொள்ள வேண்டும் என்றார். http://seithy.com/breifNews.php?newsID=333593&category=TamilNews&language=tamil- பிரம்டன் நினைவகம் குறித்து கனடாவுடன் இராஜதந்திர பேச்சு!
பிரம்டன் நினைவகம் குறித்து கனடாவுடன் இராஜதந்திர பேச்சு! http://seithy.com/siteadmin/upload/aruna-Jayasekara-01025-seithy.jpg கனடா, பிரம்டன் நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழின அழிப்பு நினைவகம் தொடர்பில் கனடாவின் மத்திய அரசுடன் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலை இனிவரும் காலங்களில் ஏற்படாமல் இருப்பதை தடுக்கும் பாரிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு’’ என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ‘‘2025.05.10 ஆம் திகதியன்று கடனாவில் பிரம்டன் நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழின அழிப்பு நினைவகம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் சார்பில் இந்த விசேட கூற்றை முன்வைக்கின்றேன். இந்த நினைவகம் திறக்கப்பட்டுள்ளதை அனைவரும் அறிவோம். இந்த விவகாரம் தொடர்பில் நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். கனடாவில் பிரம்டன் நகரில் தமிழின அழிப்பு நினைவகம் திறந்துவைக்கப்பட்ட போது பிரம்டன் நகர மேயர், ஏனைய நகர மேயர்கள் மற்றும் அரசியல்வாதிகளும் கலந்துகொண்டுள்ளனர். கனடாவில் உள்ள இரண்டு தமிழ்த் தரப்பினர்கள் இந்த நினைவகத்தை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளை 2022ஆம் ஆண்டு ஆரம்பித்துள்ளனர். தமிழின அழிப்பு நினைவகத்துக்கு கனடாவில் உள்ள இலங்கையின் கொன்சியூலர் காரியாலயம் பொறுப்பான தரப்பினர்களுக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. 2021ஆம் ஆண்டு முதல் இலங்கை அரசாங்கம், வெளிவிவகார அமைச்சு மற்றும் கனடாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் கொன்சியூலர் காரியாலயம் இந்த நினைவகத்துக்கு எதிர்ப்பைத் தெரிவித்து இராஜதந்திர மட்டத்தில் தலையீடு செய்துள்ளது. 2021ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியான எதிர்ப்புகளை இலங்கை வெளிப்படுத்திய நிலையிலும் 2025.05.10ஆம் திகதியன்று இந்த நினைவகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலை இனிவரும் காலங்களில் ஏற்படாமல் இருப்பதைத் தடுக்கும் பாரிய பொறுப்பு அரசாங்கத்துக்குண்டு. இலங்கையில் இன அழிப்பு இடம்பெற்றதாக தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் உறுதிப்படுத்தப்படவில்லை. கனடாவால் அமுல்படுத்தப்பட்ட இனவழிப்பு வாரத்தை ஏற்க முடியாதென்பதை வெளிவிவகாரத்துறை அமைச்சு கொழும்பிலுள்ள கனடா உயர்ஸ்தானிகராலயத்துக்கு அறிவித்துள்ளது. அரசாங்கம் தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் நல்லிணக்க முயற்சிக்கு தடையேற்படுத்தும். கனடாவில் பிரம்டன் நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழின அழிப்பு நினைவகம் தொடர்பில் கனடாவின் மத்திய அரசுடன் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது’’ என்றார். http://seithy.com/breifNews.php?newsID=333595&category=TamilNews&language=tamil- யுத்த வெற்றியை கொண்டாடும் Anura - தமிழர்களின் இன அழிப்பிற்கு துணை போகிறாரா?
யுத்த வெற்றியை கொண்டாடும் Anura - தமிழர்களின் இன அழிப்பிற்கு துணை போகிறாரா?- சிறீதரனை சபையில் உரையாற்றவிடாமல் குழப்பம்! அர்ச்சுனாவும் குறுக்கீடு
மீண்டுமொரு இரகசிய இன அழிப்பிற்கு தயாராகிறதா Anura அரசு?- சிறீதரனை சபையில் உரையாற்றவிடாமல் குழப்பம்! அர்ச்சுனாவும் குறுக்கீடு
சிறீதரனை சபையில் உரையாற்றவிடாமல் குழப்பம்! அர்ச்சுனாவும் குறுக்கீடு- பிரித்தானியாவில் இராணுவத் தளபதியின் மகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி!
லண்டன் 🇬🇧" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t96/1/16/1f1ec_1f1e7.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;"> மாநகரின் மத்தியில் 150 மாணவர்கள் ஒன்று திரண்டு ஆற்றிய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடனம் லண்டன் 🇬🇧 மாநகரின் மத்தியில் 1...3,410 个心情 · 421 次分享 | லண்டன் 🇬🇧 மாநகரின் மத்தியில் 150...லண்டன் 🇬🇧 மாநகரின் மத்தியில் 150 மாணவர்கள் ஒன்று திரண்டு ஆற்றிய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடனம்- சிந்தனைக்கு சில படங்கள்...
அந்தக்கால ATM ம் அதோட PIN ம் .....- பரிஸில் பொய்யா விளக்கு திரைப்படம்
பரிஸில் பொய்யா விளக்கு திரைப்படம் | மருத்துவர் துரைராஜா வரதராஜாவுடன் ஓர் சந்திப்பு- 16ஆவது மே 18இல் நீதிக்கான போராட்டம் – நிலாந்தன்.
மக்களை கொன்றொழிக்க முன்கூட்டி திட்டமிட இலங்கை அரசு | நான் ஒரு சாட்சி | - இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Important Information
By using this site, you agree to our Terms of Use.