Everything posted by suvy
-
இனித்திடும் இனிய தமிழே....!
தினமும் ஒரு வரி தத்துவம் · Dr.A.B.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் சிவகங்கை முதல்வன் படத்தில் வரும் உளுந்து வெதைக்கையிலே என்ற பாடலை பயணத்தின் போது கேட்டேன் கிராமத்துப் பெண் பாடுவதாக அமைந்த பாடல் அது வைரமுத்துவின் வரிகளில் ஸ்வர்ணலதாவின் குரலில் ஒலிக்கும் பாடலுக்கு இசை ஏ .ஆர். ரஹ்மான் பல காலம் அந்த பாடலை தொடர்ந்து கேட்டு வந்தாலும் பல்லவி பகுதியில் வரும் ஒரு சில வரிகள் எனக்கு புரிந்து கொள்ள இயலாமல் இருந்தேன் அவை பின்வருமாறு " உளுந்து விதைக்கையிலே சுத்தி ஊதக்காத்து அடிக்கையிலே நான் அப்பனுக்கு கஞ்சி கொண்டு ஆத்து மேடு தாண்டி போனேன் அந்த நல்ல நல்ல சகுணத்தில் நெஞ்சுக்குளி பூத்துப்போனேன்.. வக்கப்படப்பில் கெவுளி கத்த.. வலது பக்கம் கருடன் சுத்த.. தெருவோரம் நெறக்கொடம் பாக்கவும். மணிச்சத்தம் கேக்கவும் ஆனதே.. ஒரு பூக்காரி எதுக்க வர. பசும்பால் மாடு கடக்கிறதே.. இனி என்னாகுமோ? ஏதாகுமோ? இந்த சிருக்கி வழியில் தெய்வம் புகுந்து வரம் தருமோ? என்று வரும் பல்லவி.. இதைப்பற்றி சிந்திக்கவே தோன்றாமல் பாடலின் இசைக்கு ஏற்றவாறு எழுதப்பட்ட வரிகள் போல என்றே எண்ணிக்கொண்டிருந்தேன். நேற்று தான் எனக்குப்புரிந்தது. இது இசைக்காக எழுதப்பட்ட வரிகள் அன்று. தமிழர்கள் காலம் காலமாக கொண்டிருக்கும் "சகுணங்கள்" மீது கொண்ட நம்பிக்கையை பிரதிபலிக்கும் வரிகள் என்று. பாடல் வரிகளுக்குள் செய்த சிறு மறுஆய்வு வருமாறு.. உளுந்து என்பது மானாவாரி நிலத்தில் விதைக்கபடும் பயிர் மேலும் உளுந்து வளர காற்றில் ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்க வேண்டும் . அத்தகைய ஈரப்பதம் குளிர் காலத்தில் மட்டுமே இருக்கும் . தமிழகத்தில் அக்டோபர் நவம்பர் டிசம்பர் மாதங்கள் குளிர்காலங்களாகும். அப்போது அடிக்கும் காற்றை ஊதக்காத்து / கூதக்காத்து என்று அழைப்பார்கள் கிராம் மக்கள். காற்றில் ஈரப்பதம் இருக்கும் காற்று ஊதக்காத்து. வாடக்காத்து என்றும் சொலவடை உண்டு. பெரும்பாலும் அந்த மாதங்களில் ஆற்றில் இருந்து வரும் வாய்க்காலில் ஓடையில் தண்ணீர் ஓடும் .ஆகவே அதில் இறங்கி நடந்து போக முடியாது. தாண்டி தான் போகமுடியும்.. இதைத்தான் அழகாக இரண்டு வரிகளில் வைரமுத்து எழுதியிருக்கிறார் பாருங்கள். " *உளுந்து வெதைக்கையிலே சுத்தி ஊதக்காத்து அடிக்கையிலே நான் அப்பனுக்கு கஞ்சி கொண்டு ஆத்து மேடு தாண்டி போனேன்* " அடுத்த வரிகளில் "அந்த நல்ல நல்ல சகுணத்தில் நெஞ்சுக்குளி பூத்துப்போனேன்" என்கிறாள் தமிழக மக்களிடம் பண்டைய காலம் தொட்டு சகுணம் பார்க்கும் பழக்கம் இருந்தது என்பதை சங்க நூல்கள் வழி அறிய முடிகிறது. இது ஒரு நம்பிக்கையாக இருந்து வந்துள்ளது. வருகிறது. அது பிரதிபலிக்கும் வகையில் அடுத்த வரிகள் வருகின்றன "வக்கப்படப்பில் கெவுளி கத்த. வலது பக்கம் கருடன் சுத்த.." எனும் வரிகளில் ஸ்வர்ணலதா " வெக்கப்படப்பில் " கெவுளி கத்த என்று பாடியிருப்பார். நானும் பல லிரிக்ஸ் வெப்சைட்டுகளில் இந்த பாடல் குறித்து தேடினாலும் அனைத்திலும் "வெக்கப்படப்பு" என்றே இருந்தது. நானும் வெக்கப்படப்பு என்பது கிராமத்து வீடுகளில் ஒரு பகுதியாக இருக்குமோ? என்று யோசித்து தேடிக்கொண்டிருந்தேன். இது குறித்த கிராமத்தில் வசிக்கும் தம்பியிடம் கேட்டேன். "வெக்கப்படப்பு" னா என்னது? கிராமத்து வீடுகளில் அது ஒரு இடமா? என்று கேட்டேன். அவர் "அப்படி ஒரு இடம் இல்லையே.. ஒரு வேளை வக்கப்படப்பா இருக்கும் " என்றார் வக்கப்படப்பு என்பது வைக்கோல் படப்பு என்ற சொல்லில் இருந்து மருவி வந்துள்ளது. நெற்கதிர் அறுத்து மீதம் இருக்கும் வைக்கோலை சேர்த்து குவித்து வைக்கும் இடத்தை " வக்கப்படப்பு " என்பார்கள். கிராமத்தில் ஒரு சொலவடை உண்டு "அடி காட்டுக்கு நடு மாட்டுக்கு நுனி வீட்டுக்கு" நெற்கதிரின் அடிப்பகுதி - அதை வயக்காட்டில் உரமாக விடப்படும் நடுப்பகுதி - மாட்டுக்கு வைக்கோலாக மாறும் நுனியில் இருக்கும் நெற்கதிர் - வீட்டுக்கு வரும் இதுவே அதன் அர்த்தம். வக்கப்படப்பில் கெவுளி கத்த.. இதில் கெவுளி என்பது பல்லிக்கு கிராமத்தில் வழங்கப்படும் பெயர். Indian house lizard என்று அழைக்கப்படும் பல்லி மேற்கில் இருந்து கத்துவது நல்ல சகுணம் என்று பார்க்கபடுகிறது. "வலது பக்கம் கருடன் சுத்த" என்ற வரிகளில் கருடன் என்று அழைக்கப்படும் கழுகு இடப்பக்கத்திலிருந்து வடப்பக்கம் செல்வதை நற்குணம் என்று கூறப்படும். நான் கேட்டு அறிந்த செய்தி யாதெனில் கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சி நடக்கும் போது கருடன் மேலே வானத்தில் சுற்றுவது நற்சகுணம் என்று நம்பப்படுகிறது. அடுத்த வரிகள் "தெருவோரம் நெறகொடம் பாக்கவும். மணிச்சத்தம் கேட்கவும் ஆனதே.. ஒரு பூக்காரி எதுக்கவர. பசும்பால்மாடு கடக்கிறதே.. இனி என்னாகுமோ? ஏதாகுமோ? இந்த சிறுக்கி வழியில் தெய்வம் புகுந்து வரம் தருமோ?" இவையனைத்தும் கிராமங்களில் இன்றும் நல்ல சகுணங்களாக பார்க்கப்பட்டு வருகின்றன என்பதை சில கிராமவாசிகளிடம் கேட்டுத்தெரிந்து கொண்டேன் மேலும் எவற்றையெல்லாம் நற் சகுணங்கள் , கெட்ட சகுணங்கள் என்று நினைக்கிறார்கள் என்று ஆய்வு செய்ததில் பின்வரும் விசயங்கள் கிடைத்தன பண்டைய காலங்களிலும் தமிழ் மக்கள் பல விஷயங்களுக்கு சகுணங்கள் பார்த்திருப்பது பாடல்கள் மூலம் புலனாகிறது. அவற்றுள் ஒன்று இதோ “மையல் கொண்ட மதன்ழி இருக்கையள் பகுவாய் பல்லி படுதொறும் பரவி நல்ல கூறுகென நடுங்கி” (அகம்-289) இவ்வரிகளானது தலைவனைப் பிரிந்த தலைவி, தன் அன்புக் காதலன் வரும் நாளை எதிர் நோக்கியிருக்கும் வேளையில், பல்லியானது நிலைக் கதவுகளிலும், சுவர்களின் மீதும், இருப்பதனைப் பார்த்துக் கொண்டிருக்கும் அவள், பல்லியை நோக்கி நல்ல பலன் கூறுதல் வேண்டும் என தன் மனதில் எண்ணிக் கொள்கின்ற விதமாக அமைந்திருப்பதிலிருந்தே, அக்கால மக்களின் நம்பிக்கைகளின் ஒன்றில் முக்கியமானதாக இவை இருந்துள்ளது எனவும் அறிய முடிகிறது. என்னைப்பொறுத்த வரை சகுணம் என்பது Just a matter of coincidence . ஒன்றோடு ஒன்று ஒத்து நடக்கும் இரு செயல்களை நாம் முடிச்சுப்போட்டுக் கொள்வதே சகுணம் என்கிறோம். . யானை , குதிரை , பசு , கன்று , காளை , திருமணமாகாத பெண் , குழந்தையுடன் பெண் , ஆடை அணியாத குழந்தை , சங்கு , தாமரை , பூக்கள் விற்பவர் , பால் ,நிறை குடம் , காகம் இடப்பக்கமிருந்து வடப்பக்கம் செல்வது , பல்லி கத்துவது , வீட்டில் இருக்கும் காகம் கரைவது போன்றவற்றை நற்சகுணம் என்று நம்பினர். பூனை குறுக்கே போவது, நாய் குறுக்கே போவது, நாய் ஊளையிடுவது, மண்வெட்டியுடன் எதிரே வருவது, தும்முவது, தலையில் முக்காடு போட்டவர் எதிரே காண்பது , விதவயைக் காண்பது இப்படி பலவற்றை துற்சகுணங்கள் என்று மூடநம்பிக்கை கொண்டிருந்தனர் என்னைப்பொறுத்த வரை இந்த சகுணங்கள் மீது கொண்டிருக்கும் நம்பிக்கை மூடநம்பிக்கையாகும் . தன்னம்பிக்கையும், சமூகம் மீது தனிமனிதன் கொண்டிருக்கும் நம்பிக்கை இரண்டு மட்டுமே மனிதவாழ்க்கைக்கு நன்மை சேர்ப்பது. இருப்பினும் இந்தப்பாடல் வரிகள் மூலம் இத்தனை விசயங்களை கற்க முடிந்தது சிறப்பான விசயம். படித்து பகிர்ந்து Voir la traduction உளுந்து விதைக்கையிலே பாடலில் இவ்வளவு விடயங்கள் இருக்கின்றனவா . ........! 😇
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
"ஆனைமுகனே ஆதிமுதலானவனே "
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
"paris place bastille" பாரிஸ் நகரின் மத்தியில் அழகிய சிலை . .......! 😂
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
Vino Mohan · Christmas Eve என்றே கிருஸ்துவ பெருமக்கள் கொண்டாடுகிறார்கள் உலகமெங்கும்.. நாம் அது போல கொண்டாடுவதில்லை தான்.. ஆனால் ஒவ்வொரு பண்டிகைக்கும் முந்திய நாள் வீடு அமர்க்களப்படும். அதிலும் தீபாவளிக்கு முதல் நாள் என்றால்.. ஏ அப்பா! ஏக ரகளை தான் போங்கள். 65 ஆண்டுகளுக்கு முன்னால் ஏதோ ஒரு ஆண்டு ஆனந்த விகடன் தீபாவளி மலரில் வெளியான கோபுலு அவர்களின் ஜோக் இது. ஒரே ஒரு வரிதான்.. தீபாவளிக்கு முதல் நாள்! மொத்த சேதியையும் சொல்லி விட்டார் கோபுலு.. அது தான் கோபுலு. எவ்வளவு விவரங்கள் பாருங்கள்.. இந்த ஒரே ஒரு சித்திரத்தில். 1960 க்கு முந்தைய, ஒரு நடுத்தர குடும்பத்தின் கதை..... ஒன்றும் பிரமாதம் இல்லை அய்யா! தீபாவளிக்கு முதல் நாள் வந்து சேர்ந்து விடுகிறேன் என்று கடிதம் போட்டுவிட்டார் மாப்பிள்ளை சார்வாள்.. கடிதம் பெண்ணின் கையில் இருக்கு. பேருக்கு ஒரு புத்தகமும் கையில் இருக்கு. இன்னொரு கை விரல் எத்தனை மணி, நிமிஷம் இன்னும் இருக்கு, அவர் வருவதற்கு என்று கணக்கு போடுகிறது. கண்கள் இப்போ என்ன மணி ஆச்சுது என்று ஒரு பார்வை பார்த்து கொள்ளுகிறது. மற்றபடி பெண்ணின் உடல் மட்டும் ஆத்தில் இருக்கு. மற்றபடி மனசெல்லாம் அகமுடையானிடத்தில்.. மகளுக்கு வாங்கிய தலை தீபாவளி புடவையை பார்த்து பார்த்து ஆனந்தித்து கொண்டிருக்கிறார் தகப்பனார். மூத்த பொண்ணோல்லியோ. பெருமையும் மகிழ்ச்சியும் பூரிப்பும் முகத்தில் பொங்கி பெருகுகிறது. மற்ற பேருக்கு வாங்கிய ஜவுளி ஒரு மூட்டையாக கட்டி அவருக்கு பின்னே இருக்கும் ஸ்டூலில் இருக்கு. அம்மா விறகு அடுப்போது போராடி கொண்டிருக்கிறாள். அத்தனை பட்சணங்களையும் சுட்டு எடுக்கணுமே... எண்ணெய் புகை வாணலிக்கு மேலே... சாதாரணமாக அப்பளம் பொரித்தால் கூட அடுப்படியை வட்டமிடும் குழந்தைகள் பட்டாசு பிரிவினையில் அதிருப்தி கொண்டு பேதப்பட்டு கிடக்கிறார்கள். மூத்த பயல் தங்கையைகெஞ்சலும் மிரட்டலுமாக ஏதோ கேட்கிறான். அவளோ எனில் பட்டு பாவாடையும் தானுமாக குத்து காலிட்டு அமர்ந்து கொண்டு ஒரு வார்த்தை பேசாமல் பார்க்கிறாள். பேரத்திற்கு படிய மாட்டாள் என்றே போடுகிறது. இன்னொரு பயல் தன்னுடைய பங்கை எடுத்துக்கொண்டு நகர்ந்து விட்டான். அது போல வார் வைத்து தைத்த அரை கால் சட்டையை போட்ட பேர் இங்கே யார் யார்? நான் ஆறாம் வகுப்பு வரை வார் வைத்து தைத்த அரைகால் சட்டை தான். M R ராதா இதே போல் வார் வைத்து தைத்த முழு கால் சட்டையையே போட்டுக்கொண்டு வருவார். சட்டையை டக் இன் செய்திருப்பார். 😂" கடை குட்டியை கவனிப்பார் இல்லை. வீட்டுக்கு வேணப்பட்ட காய்கறிஎல்லாம் மேலே ஒரு பிரம்பு கூடையில் தொங்குகிறது. ஒரு மாத காலண்டர், ஒரு டெய்லி காலண்டர்.. ஒரு ஸ்வாமி படம். முழம் பூ போட்டிருக்கிறது படத்திற்கு. இன்றைக்கு உதிரி சாமந்தி பூ தான் ஒவ்வொரு படத்திற்கும். சுவரில் ஒரே ஒரு மாடம். அதில் தான் கேச வர்த்தினி முதல் ரெமி பவுடர் வரை. பார்க்க பார்க்க மனம் நிறைந்து போகிறது சார். நானே பிறக்காத போது வந்த விகடன் மலரில் கோபுலு போட்டிருக்கிறார் இந்த சித்திரத்தை. இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகள் மக்களே. ஆனந்தமாக கொண்டாடுங்கள். Voir la traduction
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- இரசித்த.... புகைப்படங்கள்.
Worldscape · American Flamingo mom and her baby Photo credit: @ajoebowan- தவிக்கும் தன்னறிவு
- சிரிக்கலாம் வாங்க
Paranji Sankar · டைம் பாஸ் #கடி_ஜோக்ஸ் : 1. உலகத்திலேயே சிறந்த ஜோடி செருப்புதான்... ஒன்றை பிரிந்தால் மற்றொன்று வாழவே வாழாது.. 2. எல்லா பெண்களையும் விசிலடித்து திரும்பி பார்க்க வைத்தாலும் செருப்படி வாங்காத ஒரே ஜீவன் குக்கர் தான்.. 3. மாமா பொண்ணும், உப்புமாவும் ஒண்ணு.. வேற எதுவுமே கிடைக்காத பட்சத்துல நம்மளோட தலையில கட்டப்படும். 4. நிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியைத் தேடுவதும், மனைவி வந்தப்பின் நிம்மதியைத் தேடுவதுமே.. ஆண்களின் வாழ்க்கை தேடல்... 5. இந்த உலகத்தில் என்னையும் ஒரு மனிதனாக மதித்து பொன்னாடை போர்த்தும் ஒரே நபர்.. சலூன் கடைக்காரர் மட்டுமே.. "நீங்க வெட்டுங்க பாஸ்.."... 6. ஒரு புடவை வாங்க முன்னூறு புடவைகளைப் புரட்டிப் பார்த்த மனைவியிடம் எரிச்சலுடன் கணவன் சொன்னான்: "ஆதிகாலத்தில் ஏவாள் வெறும் இலையை மட்டுமே உடுத்தி இருந்தாள். இது போன்ற தொல்லைகள் நல்ல வேளை ஆதாமுக்கு இல்லை." மனைவி சொன்ன பதில்: "அதுக்கு அவன் எத்தனை மரம் ஏறி இறங்கினானோ?" 7. தொலைபேசியில் ஒரு பதற்றமான குரல்.. "டேய் மச்சான்... எங்கடா இருக்க?" "வீட்லதான்டா ....." "அப்பாடா... இப்பதான்டா நிம்மதியா இருக்கு..." "ஏன்டா? என்ன விஷயம்??" "அதில்லடா..... காலையில பேப்பரை பார்த்தேன். அதுல, உங்க தெருவுல வெட்டியா சுத்திகிட்டிருந்த நாய்களை எல்லாம் கார்பரேசன்காரங்க புடிச்சுட்டு போனதா செய்தி போட்டிருந்துச்சு. ...." 😜" 8. அம்மா: என்னடி உன் புருஷன் தினமும் இப்படி குடிச்சுட்டு வராரே நல்லாவா இருக்கு... மகள் : தெரியலைம்மா நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பார்க்கலை.. 9. நீ என் தங்கக் குட்டியாம்… தாத்தா சொல்றதைக் கேப்பியாம்… நான் உன் புத்தகப் பையைத் தூக்கிட்டு வருவேனாம்…. பாப்பா நடந்து வருவியாம். வேண்டாம் தாத்தா… என் பையைத் தூக்கி நீ கஷ்டப்பட வேணாம். நானே என் பையைத் தூக்கிக்கிறேன். நீ என்னைத் தூக்கிக்கிட்டு வந்தாப் போதும்… 10. “ஏன் ஸ்கூட்டரை திருடினே…?” “டிராபிக் போலீஸ்காரர்தாங்க சீக்கிரம் வண்டிய எடு, வண்டிய எடுன்னு அவசரப்படுத்தினாரு எசமான்..” 11. பகல்ல உங்களுக்குக் கண் தெரியாதா டாக்டர்….?” “தெரியுமே…ஏன் கேட்கறீங்க….. ?” “இல்ல…பார்வை நேரம் மாலை ஆறிலிருந்து எட்டுவரைன்னு போர்டு வெச்சிருக்கீங்களே… அதான் கேட்டேன்..” 12. முதலாளி: டேய் முனியா, நான் கொஞ்சம் வீட்டுக்குப்போய் ஓய்வு எடுத்துக்கிட்டு வர்றேன்… நீ கடையைப் பார்த்துக்க… முனியன்: உங்களுக்கு எதுக்கு சிரமம் முதலாளி? நானே போய் ஓய்வை எடுத்துக்கிட்டு வந்துடறேனே. 13. டீச்சர் : பார்வதி ஏன் சிவபெருமானை மணந்தார் ? மாணவன்: சிவன் துணிகள் உடுப்பதில்லை அதனால் துவைக்கும் வேலை குறைவு. எப்பவும் தலையில் சந்திரன் இருப்பதால் வெளிச்சமாக இருக்கும்... EB பில் வராது.. ஜடாமுடியிலிருந்து கங்கை நதி கொட்டுவதால் மோட்டார் போட்டு டேங்க்கில் தண்ணீர் ஏற்ற வேண்டாம்... சிவன் பச்சை காய்கறி சாப்பிடுவதால் சமைத்து கொட்ட வேண்டாம்... சிவனுக்கு அம்மா அப்பா இல்லாததால் மாமியார் தொல்லை இல்லை... மாணவனின் பதிலை கேட்டு மயங்கி விழுந்த டீச்சர் எழுந்திருக்கவே யில்லை. 14. ஜட்ஜ் : நீங்க ரொம்ப வேகமா வண்டி ஓட்டியதா போலீஸ் சொல்லுறாங்க? நீங்க இல்லேன்னு சொல்லுறீங்க.. இதுக்கு ஆதாரம் ஏதாவது உண்டா.? சாமானியன்: ஐயா நான் என் பொண்டாட்டிய கூட்டிட்டு வர மாமனாரு வீட்டுக்கு போய்கிட்டு இருந்தேன்யா.. நீங்களே சொல்லுங்கய்யா பொண்டாட்டிய வீட்டுக்கு கூட்டிட்டுவர எவனாவது வேகமா போவானா... ? ஜட்ஜ் : கேஸ் டிஸ்மிஸ்ட்...! முதல்ல அவரை விடுதலை செய்ங்க...! Voir la traduction- தீபாவளி... சிரிப்புகள்.
Tamil Culture · எங்கள் காலத்து தீபாவளி! 💥" ஒரு தொண்ணூறுகளில் பிறந்தவனின் ஏக்கமான நினைவலைகள்... 😌" இளைய தலைமுறைப் பிள்ளைகளே... கொஞ்சம் இங்கே வாருங்கள்! 🙋♂️" நீங்கள் இப்போது இணையத்தில் பட்டாசுகளை முன்பதிவு செய்து, பெரிய பெரிய வாண வேடிக்கைகளை வெடிப்பதைப் பார்க்கும்போது... எங்கள் காலத்து தீபாவளி நினைவுதான் மனதுக்குள் ஒரு சூறாவளி போல வந்து போகிறது. 🥺" அப்போதெல்லாம் தீபாவளிக்கு மாதங்களுக்கு முன்னரே கொண்டாட்டம் தொடங்கிவிடும்! 🤩 காசு சேர்த்த காலம்: கைச்செலவுக்குக் கிடைக்கும் பணத்தில் இருந்து, சில்லறையாகச் சேர்த்து வைத்து, ஒரு உண்டியலை நிரப்பி, அதை வைத்துப் பட்டாசு வாங்கப் போகும்போது ஒரு தனி மிடுக்கு இருக்கும் பாருங்கள்... அது இப்போது கோடிகளைக் கொட்டிக் கொடுத்தாலும் வராது! 💪" கூட்டமாக ஒரு கடைக்குப் பயணம்: தெருவில் உள்ளோர் ஒன்று சேர்ந்து, நகரத்திற்குப் போய், மொத்தமாகப் பட்டாசு வாங்கி, அதைப் பங்கு பிரிக்கும்போதே பாதி தீபாவளி முடிந்துவிடும். அந்தப் பட்டாசுப் பெட்டியில் வரும் மருந்து வாசம்... அடடடா! இன்னைக்கும் நாசியில் நிற்கிறது! 😍"சிறிய சிறிய சந்தோஷங்கள்: ஊசி பட்டாசு, குருவி வெடி, சங்கு சக்கரம், புஸ்வானம், லட்சுமி வெடி என்று ஒவ்வொரு பட்டாசுக்கும் எங்களிடம் ஒரு கதை இருக்கும். 📜" இரவில் சங்கு சக்கரத்தைச் சுழற்றிவிட்டு, அதில் வரும் பொறியில் பேய் போல முகத்தைக் காட்டுவது... 😂தெரு முனையில் தார்ச்சாலையில் குருவி வெடியைத் தேய்த்துப் பற்ற வைப்பது என்று... ஒவ்வொரு கணமும் கொண்டாட்டம்தான்! 🥳" பகிர்ந்து கொண்ட உறவுகள்: "ஏடா... நீ இந்தக் கம்பி மத்தாப்பைக் கொளுத்து, நான் இந்தச் சரத்தைப் பற்ற வைக்கிறேன்" என்று நண்பர்களுக்குள் ஒரு உடன்பாடு இருக்கும். 🥰அடுத்த வீட்டு அண்ணன், பக்கத்து வீட்டு அக்கா என்று எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து வெடிக்கும்போது, அந்தத் தெருவே திருவிழாக்கோலம் பூண்டுவிடும்! 🎉" ☀️"அதிகாலை ஆனந்தம்: காலையில் 4 மணிக்கே எழுந்து, கங்கா ஸ்நானம் முடித்து, புத்தாடை அணிந்து வாசலில் நிற்கும்போது... அப்பா வந்து முதல் சரத்தைக் கொளுத்திப் போடுவார் பாருங்கள்... அந்தச் சத்தத்தில்தான் எங்கள் தீபாவளியே தொடங்கும்! ✨" இன்றைக்குப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் என்று நிறைய விடயங்கள் மாறிவிட்டன. அது தேவையும்கூட. 👍" ஆனால், அந்தச் சின்னச்சின்ன விடயங்களில் நாங்கள் அனுபவித்த அந்தப் பெரிய சந்தோஷமும், உறவுகளுடன் இருந்த அந்தப் பிணைப்பும் இன்றைக்கும் மனதுக்குள் பசுமையாக இருக்கிறது. 💖 பட்டாசு வெடிப்பதை விட, அந்தப் பண்டிகையைச் சூழ்ந்திருந்த உறவுகளும், அன்பும், மறக்க முடியாத நினைவுகளும்தான் உண்மையான தீபாவளி! 😊 இந்தத் தீபாவளியை நீங்களும் உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பாதுகாப்பாக, மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள்! 🎊" உங்களுக்கும் சொல்லிக்கொள்ள நிறைய அழகான நினைவுகள் உருவாகட்டும்! அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! 🙏" #90sDiwali #Nostalgia #DiwaliMemories #ThenAndNow #Deepavali #GoodOldDays Voir la traduction- குட்டிக் கதைகள்.
தினமும் ஒரு வரி தத்துவம் · தனது மாணவர்களுக்கு ஆசிரியை ஒருவர் கூறிய ஒரு கதை: "ஒரு கப்பலில் ஒரு தம்பதி பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது கப்பல் கவிழும் அபாயமான கட்டத்தில், ஒரேயொருவர் தப்பிக்க வசதியான படகு ஒன்று மாத்திரமே இருக்கிறது. மனைவியை பின்னே தள்ளி விட்டு கணவன் மட்டும் அந்தப் படகில் தப்பிச்செல்கிறார். கவிழும் கப்பலின் அந்தரத்தில் இருந்தவாறு தப்பிச் செல்லும் கணவனை நோக்கி மனைவி சத்தமாக.... இந்த இடத்தில் என்ன சொல்லியிருப்பார்???" என்று மாணவர்களை நோக்கி ஆசிரியை கேட்டார். எல்லா மாணவர்களும் பல வகையான பதில் தரும் போது ஒரு மாணவன் மட்டும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்..... "ஏம்பா நீ சைலண்டா இருக்க......" 'நம்ம கொழந்தைய பத்திரமா பாத்துக்கங்கன்னு சொல்லிருப்பாங்க டீச்சர்' "எப்பிடிப்பா கரெக்டா சொல்ற, ஒனக்கு முன்னாடியே இந்த கதை தெரியுமா?" 'இல்ல டீச்சர், எங்கம்மாவும் சாவுறதுக்கு முன்னாடி அப்பாக்கிட்ட இதையேதான் சொன்னாங்க...' பலத்த மௌனத்திற்கு பிறகு ஆசிரியை கதையை தொடர்ந்தார். தனி ஆளாக அவர்களது பெண்ணை அந்த மனிதன் வளர்த்து வந்தார். அவரின் மரணத்தின் பின்னர் பல வருடங்கள் கழித்து அந்தப் பெண் தனது தந்தையின் டைரியைப் பார்க்க நேர்ந்தது. தாய்க்கு உயிர் கொல்லி நோய் இருந்திருப்பது அப்போதுதான் அவளுக்கு தெரிய வந்தது. கப்பல் கவிழ்ந்த சம்பவத்தை அப்பா இவ்வாறு எழுதியிருந்தார். ' உன்னோடு நானும் கடலின் அடியில் சங்கமித்திருக்க வேண்டும்... நம் இருவரின் மரணமும் ஒரே நேரத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும். நான் என்ன செய்ய, நமது பெண்ணை வளர்த்தெடுக்க நான் மட்டுமே தப்ப வேண்டியிருந்தது'. கதையை இதோடு முடித்து விட்டு அந்த ஆசிரியை கூறினார்: 'வாழ்க்கைல நல்லது கெட்டது எல்லாமே நடக்கும். எல்லாத்துக்கும் காரணம் இருக்கும் ஆனா சில நேரங்கள்ல உங்களால் புரிஞ்சிக்க இயலாம போகலாம். அதனால நாம ஆழமா யோசிக்காமலோ, சரியா புரிஞ்சிக்காமலோ யார் மேலயும் முடிவுக்கு வந்துடக்கூடாது.' *'நம்ம ரெஸ்டாரண்ட் போனா, ஒருத்தன் காசு கொடுக்க முன்வந்தா அவன் பணக்காரன் என்று அர்த்தமில்ல, பணத்த விட நம்ம நட்ப அதிகமா மதிக்கிறான்' னு அர்த்தம். *'முதல்ல மன்னிப்பு கேக்கிறாங்கன்னா அவங்க தப்பு பண்ணிருக்காங்கன்னு அர்த்தமில்ல, ஈகோவ(Ego) விட உறவ மதிக்கிறாங்க' னு அர்த்தம். 'நம்ம கண்டுக்காம விட்டாலும் இருந்திருந்து நமக்கு கால் பண்றாங்கன்னா அவங்க வேல வெட்டி இல்லாம இருக்காங்கன்னு அர்த்தமில்ல, நம்ம அவங்களோட மனசில இருக்கம்னு அர்த்தம்'. பின்னொரு காலத்தில நம்ம பிள்ளைங்க நம்மகிட்ட கேட்கும்,,,,, '"யாருப்பா அந்த போட்டோல இருக்கிறவங்கல்லாம்???"' ஒரு கண்ணீர் கலந்த புன்னகையோட நாம சொல்லலாம் ' அவங்க கூடத்தான் சில நல்ல தருணங்கள நாங்க கழிச்சிருக்கோம்' படித்து பகிர்ந்து Voir la traduction- களைத்த மனசு களிப்புற ......!
- சிரிக்க மட்டும் வாங்க
விரலைவிட வீக்கம் அதிகம் ............! 😂- இரசித்த.... புகைப்படங்கள்.
- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
கீரை விக்கிறது அவ்வளவு சுலபமா ......? அதுக்கும் சரிவரமாட்டார்கள் என்று நீங்கள் கிரிக்கட் டுக்குத்தான் லாயக்கு என்று அனுப்பி வைத்தவை ......! 😂 அட .....8,9 ம் இடத்தில் என்னைக் காணவில்லை என்று கீழே பார்த்தால் அங்கே செம்பாட்டான் , பிரியன் எல்லோரும் வரிசையாய் நிக்க, சரி நான் தனியாய் இல்லை துணைக்கு ஆட்கள் இருக்கினம் என்று பார்த்தால் அங்கும் என் பெயர் இல்லை என்று மேலே பார்க்க அதிசயமாய் 6 ல் என்னை அப்பி வைத்திருக்கு ........மகிழ்ச்சி ......! 😂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் .......! அனைவருக்கும் இனிய தீபாவளி நாள் வாழ்த்துகள் ........! 🌻 தமிழ் பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எ.எம். ராஜா பெண் : உன்னைக்கண்டு நான் ஆட என்னைக்கண்டு நீ ஆட உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி பெண் : ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாக கலந்து உறவாடும் நேரமடா உறவாடும் நேரமடா பெண் : { கன்னத்தில் ஒன்னே ஒன்னு கடனாக தாடா கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா } (2) பெண் : எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன் எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன் பெண் : எனக்கு இனி நீ என்னென்ன தருவாய் வல்லமை சேர நல்லவனாக வளர்ந்தாலே போதுமடா வளர்ந்தாலே போதுமடா பெண் : { சித்திர பூப்போல சிதறும் மத்தாப்பு தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு } (2) பெண் : முத்திரை பசும்பொன்னே ஏன் இந்த சிரிப்பு முத்திரை பசும்பொன்னே ஏன் இந்த சிரிப்பு பெண் : முகமோ மலரோ இது என்ன ரசிப்பு மின்னொளி வீசும் உன் எழில் கண்டால் வேறென்ன வேணுமடா.........! --- உன்னைக்கண்டு நான் ஆட என்னைக்கண்டு நீ ஆட ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சின்ன சின்ன கண்ணிலே ....... ஜெமினி & வைஜந்திமாலா ........! 😍 அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள் ..........! 💐- பேரிச்சம்பழம் நல்லதா?கெட்டதா?
ஒவ்வொரு வைத்தியரும் ஒவ்வொரு உணவைப் பற்றி தத்தமது படிப்பின் ஊடாக பலதையும் சொல்லத்தான் செய்வார்கள் ........ஆனால் அவர்களைவிட தனக்குத் தனக்குத்தான் தன்னுடைய உடலின் ஒத்துக்கொள்ளக்கூடிய உணவுகள் ஒவ்வாமையான உணவுகள் சரியாகத் தெரியும் அவற்றைப் புரிந்து சாப்பிட்டு வந்தால் பலப்பல உபாதைகளைத் தவிர்க்க முடியும் . ......! என்ன வயது ஏற ஏற சாப்பிடும் உணவுகளின் அளவை குறைத்துக் கொண்டு வருவது சுகமானது, முக்கியமாய் இரவு உணவை குறைவாகவும் செரிமானம் ஆகக்கூடிய உணவை உட்கொண்டால் காலையில் சுகமாய் எழுந்திருக்கலாம் இது எனது அனுபவ உண்மை . ......! நீங்கள் ஒரு கிலோ பேரீச்சம் பழத்தை ஒரேயடியாய் உண்ணாமல் இரண்டு மூன்று தாராளமாய் சாப்பிடலாம் .......! இயற்கை ஒவ்வொரு தேசத்திற்கும் அந்தந்த தட்ப வெப்ப நிலைக்கேற்ப பழங்கள் கறிவகைகள் , புல் பூண்டுகள் என்று படைத்திருக்கு .......அந்தந்த நாடுகளில் வாழும் மனிதர்கள் , விலங்குகள் எல்லாம் அவற்றை சாப்பிட்டு வாழ்ந்து வருகின்றனர் . ...... ! போர், பஞ்சம் போன்ற புற சூழல்களால் இன்று மனித இனம் உலகம் முழுதும் பரந்து பட்டு இரந்துண்டு வாழ்ந்து கொண்டு இருக்கு . ..... ஆனால் இயற்கை ஆடுமாடுகள் இங்கு வாழ எங்கும் புல்லும் தண்ணியும் கொட்டி வைத்திருக்கு ...... அங்கு ஒட்டகங்கள் வாழ எங்கெங்கோ தூரம் தூரமாய் நீரூற்றும் ஈச்சம் சோலையையும் தெளித்து விட்டிருக்கு ....... அவைகள் சரியாகத்தான் வாழ்ந்து வருகின்றன . ..... எமக்கு மனம் என்ற ஒன்றைப் படைத்து விட்டதால் நாம்தான் அங்குமின்றி இங்குமின்றி எதிலும் திருப்தியின்றி அலைகிறோம் . ......!- குட்டிக் கதைகள்.
Paranji Sankar · ஒரு ஊரில் ஒரு தச்சர் இருந்தார். காலையிலே அவருடைய தொழிலுக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்துகொண்டு இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு கிளம்பினார். போகும் வழியில் அவருடைய வாகனம் பழுதடைந்து நின்றது. அதை தள்ளிக் கொண்டே பொய் மெக்கானிக் கடையில் பழுது பார்த்து, ஒரு மணி நேரம் தாமதமாக வேலைக்கு போய் சேர்ந்தார். முதலாளி கடுமையாக அவரை திட்டினார். மிகுந்த வேதனையுடன் அவர் வேலைகளை ஆரம்பித்தார். சுத்தியலால் அடிக்கும் போது கை தவறி அவர் விரலில் காயம் பட்டது. காயத்துக்கு துணியால் கட்டு போட்டுக் கொண்டு மீண்டும் வேலையை தொடர ஆரம்பித்தார். சிறிது நேரம் கழித்து அவருடைய உளி உடைந்து விட்டது. "என்னடா இது காலையில் இருந்து நமக்கு நேரமே சரி இல்லையே" என்று முனுமுனுத்துக் கொண்டே மீதி வேலைகளையும் முடித்தார். முதலாளியிடம் சொல்லி விட்டு வீட்டுக்கு புறப்பட தயாரானார். வண்டியை கிளப்ப முயற்சித்தார். ஆனால் வண்டி கிளம்ப மறுத்து விட்டது. "இருட்டி போய் விட்டது, இனி உன் வண்டியை பழுது பார்த்து எப்படி எடுத்து போவாய், வா என் வண்டியில் உன்னை வீட்டில் விட்டுவிட்டு வருகிறேன்" என்று முதலாளி சொன்னதும் அவருடன் கிளம்பினார். போகும் வழியில் "பாவம்யா நீ காலையில் இருந்து உனக்கு எல்லாம் சோதனையாகவே இருக்கு" என்று ஆறுதல் சொல்லிக் கொண்டே கூட்டிகிட்டு போனார் முதலாளி. தச்சர் வீடு வந்ததும் "தாகமா இருக்கு கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வா" என்று முதலாளி சொன்னார். "வீட்டுக்குள் வாங்க முதலாளி" என்று அவரை உள்ளே அழைத்தார் தச்சர். முதலாளியும் அவர் பின்னாடியே சென்றார். தச்சர் வீட்டு வாசலில் இருக்கும் மரத்தின் மீது சிறிது நேரம் கை வைத்திருந்து விட்டு உள்ளே சென்றார். முதலாளிக்கு ஒன்றும் புரியவில்லை. தச்சர் உள்ளே நுழைந்தவுடன் அவருடைய குழந்தை ஓடி வந்தது. குழந்தையை பார்த்தவுடன் தூக்கி அனைத்து முத்தம் கொடுத்தார். தன் மனைவியை பார்த்ததும் புன்முறுவலுடன் தன் முதலாளியை அறிமுகபடுத்தி விட்டு தண்ணீர் எடுத்து வரச் சொன்னார். காலையில் நடந்த எந்த பிரச்சனையையும் நினைத்து பார்க்காமல் எப்படி இவரால் சகஜமாக இருக்க முடிகிறது என்று முதலாளி வியந்தார். தச்சர் எந்த வித கவலையும் இல்லாமல் குழந்தையுடன் விளையாடிக் கொண்டு இருந்தார். தண்ணீர் குடித்து விட்டு முதலாளி கிளம்பத் தயாரானார். வீட்டிற்கு வெளியே வந்தவுடன் தச்சரிடம், "இந்த மரத்தை தொட்டுவிட்டு போனவுடன் காலையில் நடந்த எதை பற்றியும் கவலை படாமல் எப்படி உன்னால் இருக்க முடிந்தது" என்றார். "அதுவா முதலாளி இது என்னுடைய சுமை தாங்கி மரம். ஒவ்வொரு நாளும் நான் வேலை முடித்து வந்தவுடன் இந்த மரத்தைத் தொட்டு என் பாரத்தை இறக்கி வைத்து விட்டு தான் செல்வேன். வேலை செய்யும் இடத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் நடக்கும். அதை எல்லாம் வீட்டிற்குள் எடுத்துகொண்டு போக கூடாது. காலையில் வண்டி பழுதானதற்கும், நான் தாமதமாக வந்ததற்கும், என் கையில் காயம் ஆனதற்கும், உளி உடைந்து போனதற்கும் என் குடும்பத்தார் எப்படி பொறுப்பாக முடியும்? நான் அவர்கள் மேல் கோபப்படுவது எந்த விதத்தில் நியாயம்? காலையில் நான் போகும்போது இந்த மரத்திடம் இருந்து என் பிரச்சனைகளை எடுத்துக் கொண்டு போவேன் . ஆனால் என்ன ஆச்சரியம் என்றால் நான் மாலை கொண்டு வந்து வைத்து விட்டு போன பிரச்சனைகள் அடுத்த நாள் காலை பாதி அளவு குறைந்து போய் இருக்கும்". தச்சர் சொல்வதை கேட்டு முதலாளி ஆச்சரியப்பட்டு நின்றிருந்தார். நண்பர்களே.. நீங்களும் நாளையில் இருந்து இதை கடைபிடித்து பாருங்கள். பிரச்சனைகள் உங்களை கண்டு அஞ்சி ஓடும்... Voir la traduction- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
என்னை காதலித்தால் மட்டும் போதுமா ........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்...........! பாடகர்கள் : இளையராஜா மற்றும் அனன்யா பட் இசை அமைப்பாளர் : இளையராஜா பாடல் ஆசிரியர் : இளையராஜா ஆண் : வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள ஆண் : காடே மணக்குது வாசத்துல என்னோட கலக்குது நேசத்துல வழி நெடுக காட்டுமல்லி….. பெண் : வழி நெடுக காட்டுமல்லி கண்பார்க்கும் கவனமில்லை பூக்குற நேரம் தெரியாது காத்திருப்பேன் நான் சலிக்காது பெண் : பூ மணம் புதுசா தெரியும்மா என் மனம் கரும்பா இனிக்குதம்மா வழி நெடுக காட்டுமல்லி….. ஆண் : கனவெனக்கு வந்ததில்லை இது நிசமா கனவு இல்ல பெண் : கனவா போனது வாழ்க்க இல்ல வாழ்க்கைய நெனச்சி வாழ்ந்தில்ல ஆண் : மஞ்சு மூட்டமா மனசுக்குள்ள போகுற வருகிற நினைவுகளே பெண் : ஒறங்குது உள்ளே ஒரு விசயம் ஒறக்கம் கலஞ்சா நெசம் தெரியும் ஆண் : காத்திருப்பேன் நான் திரும்பி வர காட்டுமல்லியில அரும்பெடுக்க பெண் : வழி நெடுக காட்டுமல்லி கண்பார்க்கும் கவனமில்லை ஆண் : காடே மண்க்குது வாசத்துல என்னோட கலக்குது நேசத்துல பெண் : கிட்ட வரும் நேரத்துல எட்டி போற தூரத்துல ஆண் : நீ இருக்க உள்ளுக்குள்ள உன்ன விட்டு போவதில்ல பெண் : ஒலகத்தில் எங்கோ மூலையில இருக்கிற இருண்ட காட்டுக்குள்ள ஆண் : இறு சிறு உயிரு துடிக்கிறது நெசமா யாருக்கும் தெரியாது பெண் : சாட்சி சொல்லும் இந்தக் காடறியும் காட்டுல வீசிடும் காத்தறியும் வழி நெடுக காட்டுமல்லி கண் பார்த்தும் கவனமில்லை ஆண் : எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள பெண் : பூ மணம் புதுசா தெரியுதம்மா என் மனம் கரும்பா இனிக்குதம்மா........! --- வழி நெடுக காட்டுமல்லி ---- குட்டிக் கதைகள்.
Mujeeb New se sent super bien à Trinquemalay, Province de l'Est, Sri Lanka. · தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி, ஒற்றைத் தாயின் மகள். அவளது அம்மா அவளை ரொட்டி வாங்க கடைக்கு அனுப்பினாள். அவள் திரும்பி வரும் வழியில், ஒரு அந்நியன் அவளை புகைப்படம் எடுத்தான். அந்தப் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி, அவரது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. பொது அழுத்தத்தின் கீழ், ரொட்டி நிறுவனம் அவரை பிராண்ட் தூதராக மாற்றியது. அவரது புகைப்படம் இப்போது தென்னாப்பிரிக்கா முழுவதும் ரொட்டி விளம்பரப் பலகைகளில் உள்ளது. அதற்கு ஈடாக, தாய்-மகள் இருவருக்கும் இரண்டு அறைகள் கொண்ட வீட்டைப் பெற்றுக் கொடுத்ததுடன், பட்டப்படிப்பு வரை பெண்ணின் கல்விச் செலவை நிறுவனம் ஏற்கும். இப்படியும் நடக்கும் . ( புகைப்படத்தில் பதிவான ) ஒரு அற்புதமான தருணம் ஒருவரின் வாழ்க்கையை எவ்வாறு சிறப்பாக மாற்றும் என்பதற்கான உதாரணம் . புகைப்படம் பிடிப்பாளர்களும் சாதாரணமானவர்கள் அல்ல பலம் வாய்ந்தவர்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் . ©mujeeb Voir la traduction- இனித்திடும் இனிய தமிழே....!
ஆனையூரான் ஜெராட் · இலங்கையில் தமிழர்களிடம் பேச்சு வழக்கில் பேசப்படும் போர்த்துக்கேய சொற்கள் அலுமாரி — நிலைப் பேழை. அன்னாசி — செந்தாழம்பழம். கொய்யாப் பழம் — காழ்ப் பழம். பப்பாளி — செங்கொழும்பை. அலவாங்கு — கடப்பாரை. அலுகோசு — தூக்கிலிடுபவர். பைலா — ஆட்டம். சாவி — திறவுகோல், திறபு. சன்னல் — சாளரம், காலதர். கதிரை — நாற்காலி. கஜு — முந்திரி. களுசான் — காலாடை. கமிசை — கைச்சராய். கடதாசி — தாள். கோப்பை — தட்டு. குசினி — அடுப்படி. மேஜை — மிசை. பாண் — வெதுப்பி. பேனா — எழுதுகோல், தூவல் பீங்கான் — வழை. பீப்பா — உருள்கலன். சப்பாத்து — மூடுகாலணி. தவறணை — கள்ளகம். தாச்சி — கலம். துவாய் — துண்டு விறாந்தை — தாழ்வாரம் Voir la traduction- இரசித்த.... புகைப்படங்கள்.
- கைகூ வடிவில்!
நல்ல காத்திரமான கைகூக்கள் நிகழ்காலத்தில் .......... தொடருங்கள் . .........! 👍 - இரசித்த.... புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.