Everything posted by suvy
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
Chandran Veerasamy · சுமார் ஒன்பதரை ஆண்டு காலம் காமராஜர் ஆட்சியைத் தம் தோள்மீது சுமந்து, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்செய்து பிரச்சாரம் செய்து ஆதரவு திரட்டினார் பெரியார். 1961-ல் தேவகோட்டையில் பேசும்போது, மரண வாக்குமூலம்போலத் தமது உள்ளக்கிடக்கையை தந்தை பெரியார் வெளியிட்டார். அதில், ‘‘தோழர்களே! எனக்கோ வயது 82 ஆகிறது. நான் எந்த நேரத்திலும் இறந்துவிடலாம். ஆயினும், நீங்கள் இருப்பீர்கள். உங்களைவிட முதிர்ந்த நான், மரண வாக்குமூலம்போன்று ஒன்றைக் கூறுகிறேன். மரண வாக்குமூலம் கூறவேண்டிய நிலையில் உள்ளவன் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இன்றைய காமராசர் ஆட்சியில் நமது நாடு அடைந்து வரும் முன்னேற்றம் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்ததில்லை. நமது முவேந்தர்கள் ஆட்சிக் காலத்திலாகட்டும், அடுத்து நாயக்கர் மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், முஸ்லிம்கள், வெள்ளைக்காரர்கள் இவர்கள் ஆட்சியில் ஆகட்டும், எல்லாம் நமது கல்விக்கு வகைசெய்யவில்லை. தோழர்களே நீங்கள் என் சொல்லை நம்புங்கள். இந்த நாடு உருப்பட வேண்டுமானால் இன்னும் 10 ஆண்டுகளுக்காவது காமராசரை விட்டுவிடாமல் பிடித்துக்கொள்ளுங்கள். அவரது ஆட்சிமூலம் சுகமடையுங்கள். காமராசரைப் பயன்படுத்திக் கொள்ள நாம் தவறிவிட்டால், தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே சிக்காது.” Voir la traduction
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
எப்படிங்க அப்படி விடமுடியும் ....... மூக்கை சிந்தி அழக்கூட உரிமை இல்லையா ......... நான் வேற 5 ல் நிக்கிறன், அகஸ்தியரை நெருங்க முடியாது தெரியும் .......இவர் ஏராளனையாவது நெருக்கிக் கொண்டு நிக்கலாம் என்று நினைக்கிறன் . .....தப்பா ..........! 😇
-
இரசித்த.... புகைப்படங்கள்.
இன்று தென்றலாக நாளை புயலாய் .........! 😂
-
இனித்திடும் இனிய தமிழே....!
Kanagu Kanagraj · நன்றி Kalai Marx தமிழ் மொழி என்று நினைத்து பாவிக்கும் அரபு மொழி சொற்கள் சில கீழே அசல் أصل. மூலம் மாஜி ماضي முந்தைய அத்து حد வரம்பு முகாம் مقام தங்குமிடம் அத்தர் عطر மணப்பொருள் முலாம் ملام மேற்பூச்சு அமுல் عمل நடைமுறை ரத்து رد விலக்கு/நீக்கம் அனாமத் أنعمت. கேட்பாரற்ற ரசீது رصيد ஒப்புப் படிவம் அல்வா حلوه இனிப்பு ராஜி راضي உடன்பாடு ஆஜர் حاظر வருகை ருஜு رجوع உறுதிப்பாடு ஆபத்து آفت துன்பம் ருமால் رمال கைக்குட்டை இனாம் انعام நன்கொடை லாயக் لائق தகுதி இலாகா علاقة துறை வக்கீல் وكيل வழக்குரைஞர் கஜானா خزانة கருவூலம் வக்காலத்து وكالة பரிந்துரை காலி خالي வெற்றிடம் வகையறா وغيره முதலான காய்தா قاعدة தலைமை/வரம்பு வசூல் وصول திரட்டு காஜி قاضي நீதிபதி வாய்தா وعده தவணை கைதி قيد சிறையாளி வாரிசு وارث உரியவர் சவால் سوال அறைகூவல்/கேள்வி சர்பத் شربة. குளிர்பானம் ஜாமீன் ضمان பிணை சரத்து شرط நிபந்தனை ஜில்லா ضلعة மாவட்டம் தகராறு تكرار. வம்பு தாவா دعوة வழக்கு திவான் ديوان அமைச்சர் பதில் بدل மறுமொழி பாக்கி باقي நிலுவை மஹால் محل மாளிகை மகசூல் محصول அறுவடை/ விளைச்சல் மாமூல் معمول வழக்கம். Voir la traduction
-
சிரிக்க மட்டும் வாங்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
தந்தை தாயுடன் தவமணிகள் ........இப்ப மகிழ்ச்சியா ........! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நடந்தது என்ன என்று நீயே சொல்லு . ........ இரவிச்சந்திரன் &ஜெயலலிதா .......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் ..........! தமிழ் பாடகா்கள் : ஹாிஹரன், தேவன் ஏகாம்பரம்,வி.வி. பிரசன்னா இசையமைப்பாளா் : ஹாிஸ் ஜெயராஜ் ஆண் : நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை நீருக்குள் மூழ்கிடும் தாமரை சட்டென்று மாறுது வானிலை பெண்ணே உன் மேல் பிழை ஆண் : நில்லாமல் வீசிடும் பேரலை நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை பொன்வண்ணம் சூடிய காாிகை பெண்ணே நீ காஞ்சனை ஆண் : ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி என் உயிரை உயிரை நீ ஏந்தி ஆண் : ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி இனி நீதான் எந்தன் அந்தாதி ஆண் : ஏதோ ஒன்று என்னை ஈா்க்க மூக்கின் நுனி மா்மம் சோ்க்க கள்ளத்தனம் ஏதும் இல்லா புன்னகையோ போகன்வில்லா ஆண் : நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ ஆண் : என்னோடு வா வீடு வரைக்கும் என் வீட்டை பாா் என்னை பிடிக்கும் இவள் யாரோ யாரோ தொியாதே இவள் பின்னால் நெஞ்சே போகாதே ஆண் : இது பொய்யோ மெய்யோ தொியாதே இவள் பின்னால் நெஞ்சே போகாதே போகாதே.. ஆண் : தூக்கங்களை தூக்கிச் சென்றாய் பெண் : தூக்கிச் சென்றாய் ஆண் : ஏக்கங்களை தூவிச் சென்றாய் உன்னை தாண்டி போகும் போது பெண் : போகும் போது ஆண் : வீசும் காற்றின் வீச்சு வேறு ஆண் : நில்லென்று நீ சொன்னால் என் காலம் நகராதே நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே காதல் எனை கேட்கவில்லை கேட்காதது காதல் இல்லை ஆண் : என் ஜீவன் ஜீவன் நீதானே என தோன்றும் நேரம் இதுதானே நீ இல்லை இல்லை என்றாலே என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே.........! --- நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை ---- கொஞ்சம் ரசிக்க
- இனித்திடும் இனிய தமிழே....!
💐💐💐பிரியாத உறவு நம் நட்பு🥰❤🥰 Best Friends For Ever💐💐💐 #அலமாரி 25-10-25 உண்டோ குரங்கேற்றுக்கேற்றுக் கொள்ளாத கொம்பு...? அந்த குரங்கு மரத்திற்கு மரம் தாவித் திரிந்தது நான் உன்னை ஏற்கமாட்டேன் என ஒரு மரம் அதனை விரட்டியது. நீ என்னைப் புகழ்ந்து பாடினால் ஒழிய நான் உன்னை ஏற்க மாட்டேன் என்று தீர்க்கமாக கூறியது அந்த மரம். மரம் என்பது இங்கே சோழ நாட்டு மன்னன் . குரங்கென்பது கம்பன் கடவுளைப் பற்றிப் பாடிய இவ் வாயால் நரனைப் பாட மாட்டேன். என்றான் சோழ மன்னனிடம் கம்பன். " மன்னவனும் நீயோ....? வள நாடும் நின்னதுவோ...? உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன். என்னை விரைந் தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ....? உண்டோ குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு ...? என்று பாடி அவை அகன்றான் கம்பன். அதன் பிறகுதான் பாண்டிய நாட்டிற்கு பிரவேசம் ஆனான் கம்பன். அது கம்பன் வரலாறு. அது தலைமை ஆசிரியர் அறை. அந்த ஆசியை அதிகமாகப் பேசுகிறார். அவரிடம் சொல்லி வையுங்கள். எனகிறது நிர்வாகம். நிர்வாகம் கூறியதை த. ஆ அந்த ஆசிரியையிடம் சென்னார்.. அதற்கு அந்த ஆசிரியை , " பெரிதே உலகம் பேனுனர் பலரே...." எனக் கூறி அறையை விட்டு அகன்றார் அந்த ஆசிரியை.. சில நாட்களிலேயே அவருக்கு அரசு பள்ளியில் பணி கிடைத்து,. கம்பனையம் , அந்த ஆசிரியை யும் ஒர நேர் கோட்டில் வைத்துப் பார்த்து வியந்தேன். Voir la traduction- குட்டிக் கதைகள்.
Puthiyamaadhavi Sankaran · மூதாட்டி கற்றுக் கொடுத்த வியாபார தர்மம். மகாராஷ்டிரா நாக்பூர் அருகே அந்த மூதாட்டி விற்கும் காரி -டோஸ்ட் ரொம்ப நல்லாயிருக்கும் என்று தோழர் காம்ப்ளே எங்களை மாலை நேரத்தில் அழைத்துச் சென்றார். டோஸ்ட் வாங்கியாச்சு. இப்போ அதை முக்கி சாப்பிட சூடான சாய் வேணும். நான் என் பொருளாதரப் புத்தியை அவளிடம் காட்டினேன். " மெளசி, ஆஃப் சாயா பி தேனேக்கா" நீங்க எங்களுக்கு தேநீரும் கொடுக்கணும். டீயும் சேர்த்து விற்பனை செய்தால் நல்லா விற்பனை ஆகுமே" இது நம்ம படிச்ச பொருளாதர தொழில் அபிவிருத்தி. அந்த மூதாட்டி கண்கள் புன்னகைக்க சொன்னாள்.... " பேட்டி.. பக்கத்தில ஒருத்தர் சாய் விக்கிறார் பாரு. அவரு குடும்பமும் பிழைக்கணும்" நான் திரும்பிப் பார்த்தேன். எதிரே அந்த மனிதர் சாய் விற்றுக் கொண்டிருந்தார். அவரு யாரு என்று கேட்டேன். தெரியாது, என்னமாதிரி ஒருத்தர் அவ்வளவுதான்" என்று சொல்லி விட்டு தன் அடுத்த கஸ்டமருக்கு பொட்டலம் போட ஆரம்பித்துவிட்டாள். அவளுக்கு சாய் விற்கமுடியும். ஆனால் அதை அவள் செய்யவில்லை. வியாபார அபிவிருத்தி திட்டங்களை பக்கம் பக்கமாக எக்னாமிக்ஸ் பத்திரிகைகளில் வாசித்திருந்த எனக்கு அந்த ஆதித்தாயின் பொருளாதர வியாபாரக் கொள்கை பிடித்திருந்தது. வியாபாரம், முன்னேற்றம் என்பதெல்லாம் " தான் மட்டும் வாழ்வதல்ல" மற்றவர்களையும் வாழ வைப்பதுதான்." வாழு. வாழ விடு. என் குடியிருப்புக்கு கீழே இருந்த கடையில் ( provision store) எல்லாம் கிடைக்கும். காய்கறி தவிர. காய்கறி வாங்கி விற்க முடியாது என்பதல்ல. ஆனால் அந்தக் கடைக்காரர் அதைச் செய்யவில்லை. காரணம் அக்கடைக்கு வெளியே தள்ளுவண்டியில் காலையிலும் மாலையிலும் காய்கறி வியாபாரம் உண்டு. கடைக்காரருக்கு எவ்வளவு பெரிய மனசு. வாழு வாழ விடு. Voir la traduction- இரசித்த.... புகைப்படங்கள்.
ஒரு பறவை மீன் பிடிக்கிறது .........! 🙂- இலங்கை முழுவதும் 120 நாட்கள் பயணம் - யாழ். திரும்பிய இளைஞர்கள் சாதனை!
அனைத்து இளைஞர்களுக்கும் பாராட்டுகள் ..........! 👍- இரசித்த.... புகைப்படங்கள்.
முத்தமிடும் ஒலிவ் மரங்கள் ...........! 😍- களைத்த மனசு களிப்புற ......!
கிரிக்கட்டில் நம்பமுடியாத சம்பவங்கள் .......! 😂- குட்டிக் கதைகள்.
Baskar Jayraman Mookkammal est à Bhavani Homeo Pharmacy. · ஒரு முறை கலாம் ஐயா பெண்கள் பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டார்.. விழா முடிந்ததும் வழக்கம் போல மாணவிகளோடு ஒரு கலந்துரையாடல் நடக்கிறது.. அப்போது ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டிருந்த சமயம்.. "ஐஸ்வர்யா ராய் ஏன் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப் பட்டார்.?" இந்த கேள்வியை மாணவிகளிடையே வைக்கிறார்.. ஒரு மாணவி "அங்கு வந்திருந்தவர்களில் அவர்தான் அழகாக இருந்தார்" என்கிறாள்.. அவருக்கு பதிலில் திருப்தி இல்லை.. அடுத்த மாணவி "அங்கே கேட்கப்பட்ட கேள்விக்கு அறிவுப் பூர்வமாக சிறப்பான ஒரு பதிலை சொன்னார்".. அதிலும் அவருக்கு சம்மதமில்லை.. இப்படியே போய்க் கொண்டு இருக்க, அரங்கமே புரிபடாத ஒரு அமைதியில் இருக்கிறது.. ஆசிரியர் உட்பட அத்தனை பேருக்கும் குழப்பமான குழப்பம்.. அந்த சிறுமி எழுகிறாள் "ஏனென்றால் அந்த அழகிப் போட்டியில் நான் கலந்து கொள்ளவில்லை, அதனால்தான்".. என்கிறாள்.. அரங்கமே சிரிப்பால் அதிர்கிறது..😊" ஆனால் அங்கே ஒரே ஒரு கைதட்டல் ஓசை மட்டும் தனியாக கேட்கிறது..👏🏻" அது கலாம் ஐயாவின் கைத்தட்டல். ஐயா அவர்கள் கூறினார்: " குட்..! இதுதான் உண்மையான பதில்..💓" அடுத்தவர்கள் யார் நம் அழகை நிர்ணயம் செய்வதற்கு..👍🏻" அதற்கு முன் நம்மை நாமே அழகு என்று தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டுமல்லவா.? கனிவான அன்பும் தளராத நம்பிக்கையும் உயர்வான எண்ணமும் கொண்ட நாம் எல்லாருமே அழகுதானே?... அந்த நம்பிக்கை தானே அழகு!" அரங்கில் கரவொலி அடங்க வெகுநேரமாகிறது.💓" படித்ததில் ரசித்தது... Voir la traduction- இனித்திடும் இனிய தமிழே....!
Chandran Veerasamy · 1968 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற உலகத்தமிழ்மாநாட்டு கருத்தரங்கு ஒன்றில் எம்.ஜி.ஆர். பேசினார். கவிதையைப் பற்றிய நயமான விளக்கம் அளித்தார். ‘அழகும் உள்ளத்து உணர்ச்சியும் சேர்ந்ததுதான் கவிதை ’ என்று கூறினார். கூடியிருந்த மக்கள் கரகோஷம் எழுப்பினர். பின்னர், அண்ணா பேச வந்தார். எம்.ஜி.ஆருக்கே குருவாயிற்றே? கேட்க வேண்டுமா? கவிதை பற்றி அவர் கூறும்போது, ‘அறிந்ததனை அறிந்தோர்க்கு அறிவிக்கும் போதினிலே அறிந்ததுதான் என்றாலும் எத்துணை அழகம்மா? என்று அறிந்தோரையும் வியக்க வைக்கும் அருங்கலையே கவிதையாகும்’ ... என்று கவிதையாலேயே கவிதைக்கு விளக்கம் அளித்தார் அறிஞர் அண்ணா. மக்களின் கரகோஷம் அடங்க வெகுநேர மாயிற்று. தொடர்ந்து அண்ணா பேசும்போது, ‘அழகும் உள்ளத்து உணர்ச்சியும் சேர்ந்ததுதான் கவிதை என்று எம்.ஜி.ஆர். கூறினார். நீங்கள் கைதட்டினீர்கள். எதற்கு என்று யோசித்தேன். பிறகுதான் தெரிந்தது. அவர் தன்னைப் பற்றியே சொல்லியிருக்கிறார். ஆம். அழகும் உணர்ச்சியும் சேர்ந்த எம்.ஜி.ஆரே ஒரு கவிதைதானே...’ என்றார் அண்ணா. மக்களின் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது. இதயக்கனியின் ஈர்ப்பு ரகசியம் அறிந்தவர் அண்ணா ! - தி இந்து . Voir la traduction- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Chandran Veerasamy · விருதுநகர் தெப்பக்குளம்; குளத் தைச் சுற்றிலும் கடைவீதிகள். அந்த வீதி களின் ஒன்றுக்குள்ளே பிரிந்து செல்லும் சுலோசன நாடார் வீதி என்னும் அந்தச் சின்னஞ்சிறு சந்துக்குள்ளேதான், தமிழ் நாட்டின் தவப்புதல்வர் காமராஜ் அவர் களை ஈன்றெடுத்த அன்னை சிவகாமி அம்மாள் வாழ்ந்து வருகிறார். மிகச் சாதாரணமான எளிய இல்லம். அங்குள்ள கயிற்றுக் கட்டிலில் அந்த அம் மையார் படுத்திருந்தார். சின்ன இடம். நாலு பக்கத்துச் சுவர்களிலும் பழம் பெரும் தேச பக்தர்களின் படங்கள். அவற் றுக்கிடையே வேல் முருகன் படம். அதற்குப் பக்கத்தில் சத்தியமூர்த்தியின் உருவம்! கட்டிலில் படுத்திருந்த மூதாட்டியார் எங்களைக் கண்டதும் எழுந்து உட் கார்ந்தார். மூச்சுத் திணறியது. ''வாங்கய்யா'' என்று அன்புடன் அழைத்தபடியே எழுந்து போய் மின்சார விளக்கின் 'ஸ்விச்'சைப் போட்டார். ''தங்கள் திருமகனைப் பற்றித் தாங்கள் ஏதாவது சொல்லவேண்டும்...'' ''நான் என்ன சொல்லப் போகிறேன் ஐயா! எனக்கு வயதாகிவிட்டது. அத்து டன் ரத்தக் கொதிப்பு வேறு. பேசினால் மூச்சுத் திணறுகிறது. ரெண்டு வருசம் உப்பைத் தள்ளிப் பத்தியச் சாப்பாடு சாப்பிட்டேன். இப்போது கொஞ்சம் பரவாயில்லை. சாப்பாட்டில் உப்பு சேர்ந்துக்கொள்கிறேன்.'' ''சென்னைக்குப் போய் மகனோடு இருப்பதில்லையா?'' என்று கேட்டபோது அம்மூதாட்டியார் முறுவலித்தார். ''நல்லாச் சொன்னீங்கய்யா... அவன் மந்திரியாகி ஏழெட்டு வருசம் ஆகுது. இதுவரைக்கும் நான் அங்கே அஞ்சு தடவைதான் போயிருப்பேன். போன உடனே என்னை ஊருக்குத் திருப்பிப் பயணம் பண்ணி அனுப்புவதிலேயே குறியாயிருப்பான்! 'பட்டணம் பாக்க ணும்னா சுத்திப் பாரு. திருப்பதிக்குப் போகணும்னா போயிட்டு வா. எல்லாத் தையும் பார்த்துட்டு உடனே விருதுநகர் போய்ச் சேரு'ம்பான்..!'' ''மாசச் செலவுக்கு உங்களுக்குப் பணம் அனுப்புகிறாரா?'' ''அனுப்பறான். பொடிக்கடை தனக் கோடி நாடார் மூலமாத்தான் பணம் வரும்...'' ''எவ்வளவு பணம் அனுப்பறாரு?'' ''120 ரூபாய். பத்துமாய்யா? தண்ணி வரியே பதிமூணு ரூவா கட்டறேன். மாசம் அந்த 120 ரூபாதான், அதுக்கு மேலே செலவு செய்யக்கூடாதும்பான். அவங்கவங்க உழைச்சுப் பிழைக்கணும் பான். நானும் பேசாம இருந்துடுவேன். அவன் சொல்றதும் நியாயம்தானேய்யா? ரேசன் வந்துது பாருங்க... அப்ப இங்கே வந்திருந்தான். 'என்னப்பா, இப்படிக் கேப்பையும் கம்பும் போடறாங்களே, இதை எப்படிச் சாப்பிடறது? நெல்லு வாங்கித் தரப்படாதா'ன்னு கேட்டேன். 'நெல்லு பேச்சுப் பேசாதே. ஊருக்கெல்லாம் ஒண்ணு, நமக்கு ஒண்ணானு கேட் டான். அவன் சொல்றதும் நியாயம்தானேய்யா..?'' ''இப்படியரு தவப்புதல்வனைப் பெற்றெடுத்த தாங்கள் நிஜமாகவே பாக்கியசாலிதான்'' என்றதும், அன்னை யின் கண்கள் கலங்கிவிட்டன. ''ஏன் கண் கலங்குகிறீர்கள் அம்மா?'' ''கலங்காம என்ன செய்ய? துறவியாகி விட்ட பட்டினத்தடிகளை அவன் தாய் துறந்துவிட்டதைப்போல், நானும் என் மகனை இந்த நாட்டுக்காகத் துறந்து விட்டு நிற்கிறேனே!'' - விகடன்பொக்கிஷம். Voir la traduction- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மனதில் கொண்ட ஆசைகளை . ........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ..........! பாடகி : எஸ். ஜானகி பாடகர் : கமல் ஹாசன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : கண்மணி அன்போட காதலன் பெண் : நான் ஆண் : நான் பெண் : ஹ்ம்ம் ஆண் : எழுதும் கடிதம் லெட்டர் சீ கடுதாசி இல்ல கடிதமே இருக்கட்டும் படி பெண் : கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே ஆண் : ஹா ஹா ஹா பாட்டாவே படிச்சிட்டியா அப்ப நானும் மொதல்ல கண்மணி சொன்னன்ல இங்க பொன்மணி போட்டுக்க பொன்மணி உன் வீட்டுல சௌக்கியமா நா இங்க சௌக்கியம் பெண் : பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே ஆண் : உன்ன நெனச்சு பாக்கும் போது கவிதை மனசுல அருவி மாறி கொட்டுது ஆனா அத எழுதனுன்னு ஒக்காந்தா அந்த எழுத்துதான் வார்த்தை பெண் : உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது ஆண் : அதான் பெண் : அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது ஆண் : அதே தான் ஆஹா பிரமாதம் கவிதை கவிதை படி ஆண் : ம்ம் எனக்கு உண்டான காயம் அது தன்னால ஆறிடும் அது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல எனக்கு ஒன்னுமே ஆவரது இல்ல இதையும் எழுதிக நடுல நடுல மானே தேனே பொன்மானே இதெல்லாம் போட்டுக்கணும் ஆண் : இதோ பாரு எனக்கு என்ன காயம்னாலும் என் உடம்பு தாங்கிடும் உன் உடம்பு தாங்குமா தாங்காது அபிராமி அபிராமி அபிராமி பெண் : அதையும் எழுதணுமா ஆண் : ஹான் இது காதல் என் காதல் என்னனு சொல்லாம ஏங்க ஏங்க அழுகையா வருது ஆனா நா அழுது என் சோகம் உன்ன தாக்கிடுமோ அப்டினு நினைக்கும் போது வர்ற அழுகை கூட நின்னுடுது மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது பெண் : உண்டான காயமெங்கும் தன்னாலே ஆறிப் போன மாயம் என்ன பொன்மானே பொன்மானே என்ன காயம் ஆன போதும் என் மேனி தாங்கிக் கொள்ளும் உந்தன் மேனி தாங்காது செந்தேனே பெண் : எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது எந்தன் சோகம் உன்னைத் தாக்கும் என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதலல்ல அதையும் தாண்டிப் புனிதமானது ஆண் : அபிராமியே தாலாட்டும் சாமியே நான் தானே தெரியுமா சிவகாமியே சிவனில் நீயும் பாதியே அதுவும் உனக்கு புரியுமா .........! --- கண்மணி அன்போட காதலன் ---- தவிக்கும் தன்னறிவு
- 2026 முதல் நாடு முழுவதும் முன்பள்ளிகளுக்கு ஒரே பாடத்திட்டம்
நல்ல திட்டம் ........இவர்கள் பல விடயங்களிலும் முன்னேற்றகரமான திட்டங்களை அமுல் படுத்துகின்றனர் .........! 👍- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இப்பதான் பார்க்கிறேன் பையா 2013 ம் ஆண்டிலேயே உலகக்கோப்பையை எவ்வளவு அழகாய் செய்துள்ளார்கள் . ...... நீங்கள் ஒரு ரசிகன் ஐயா ........ உங்களின் ரசனையை நானும் ரசிக்கின்றேன் . .....!- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
அழகென்ற சொல்லுக்கு முருகா அன்னையரோடு அருளும் குமரா ...........! - இரசித்த.... புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.