Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. https://www.youtube.com/watch?v=O__LTVD27_g இந்த இணைப்பில் நீங்கள் பல பேச்சு சொற்களைப் பேசிப் பழக முடியும் . .......! 👍
  2. Amazing Trees Incredible colors in Cape Breton, Nova Scotia - Canada.🍁" வர்ணங்களால் சூழப்பட்ட அழகிய அரண்மனை ........! 🥰
  3. Murugesan N · பேசமுடியாதவர்களின் உணவுகள் பேசுகின்றன ! சென்னை, வேளச்சேரி, 'பீனிக்ஸ் மாலி'ற்கு பக்கத்தில் உள்ளது, இந்த வித்தியாசமான உணவு கடை. வாடிக்கையாளர்கள் உள்ளே நுழையும்போது, இன்முகத்துடன், 'சைகை'யால் வரவேற்கின்றனர், இரு பெண்கள். வந்தவர்களும், பதில் வணக்கம் தெரிவித்து, 'சைகை'யால் ஏதோ சொல்கின்றனர். பெண்கள் இருவரும் புரிந்து, தலையாட்டுகின்றனர். சிறிது நேரத்தில், சப்பாத்தி, தோசை மற்றும் இட்லி சுடச்சுட தயாராகி, அவர்களது இருக்கைக்கு செல்கிறது. பிரமிளா, ரத்னம் என்ற, இந்த இரு பெண்களுக்கும் காது கேட்காது, பேச வராது. ஆனால், பிரமாதமாக சமைக்க தெரியும். இருவரும் பிழைப்பு தேடி, தங்களது ஊரை விட்டு, சென்னை வந்தனர். இங்கே உள்ள காது கேளாதோர் அமைப்பின் மக்கள் தொடர்பாளராக இருக்கும் சித்ராவை சந்தித்து, தங்கள் வாழ்வாதாரத்திற்கு உதவும்படி கேட்டனர். சித்ராவும் இவர்களை அழைத்து, மாற்றுத்திறனாளிகளுக்காக வாதாடும் வழக்கறிஞர்களான, பிரபாகரன், கற்பகம் ஆகியோரை சந்திக்க வைத்தார். அவர்களது வழிகாட்டுதலின்படி, சேலம், ஆர்.ஆர்.பிரியாணி அதிபர், தமிழ்ச்செல்வனை சந்தித்தனர். 'உங்களுக்கு என்ன உதவி வேண்டும்?' என்று அவர் கேட்க, 'எங்களுக்கு தள்ளு வண்டி வாங்கிக் கொடுத்தால், சென்னையில், நடமாடும் உணவகம் அமைத்து, பிழைத்துக் கொள்வோம்...' என்று கூறியுள்ளனர். 'தள்ளு வண்டி வேண்டாம்;சிரமம் அதிகம். அதற்கு பதிலாக, வேளச்சேரி பிரதான சாலையில் இருக்கும், என்னுடைய, ஆர்.ஆர்.பிரியாணி கடையையும், கடைப் பொருட்களையும், காலையும் - மாலையும் கட்டணமில்லாமல் உபயோகித்துக் கொள்ளுங்கள்...' என்று, கொடுத்து உதவினார். அதன்படி, இப்போது இவர்கள் , காலையில், இட்லி, தோசை மற்றும் இடியாப்பமும்; மாலையில், இட்லி, தோசை, சப்பாத்தி, புரோட்டா மற்றும் 'பிரைடு ரைஸ்' என, விதவிதமாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றனர். இவர்களது சுவையான உணவிற்காகவே, நிறைய வாடிக்கையாளர்கள் வருகின்றனர். அவ்வாறு வருபவர்கள், இவர்களின் நிலைமையை புரிந்து, 'சைகை' மொழியில் வேண்டியதை கேட்டு, சாப்பிடுகின்றனர். புது வாடிக்கையாளர்களுக்கும், இந்த இரு பெண்களுக்கு பாலமாகவும், பணவரவு செலவை பார்த்துக் கொள்ளவும் கூடவே இருக்கிறார், சித்ரா. தற்போது, தங்களைப் போன்ற மேலும் சிலருக்கு வேலை வாய்ப்பு தர உள்ளனர்.உழைத்து பிழைக்க தயாரான இவர்கள், பலருக்கு வேலை வாய்ப்பு தரும் அளவிற்கு உயர்ந்திருப்பது பாராட்ட வேண்டியது தான். தலைவணங்குகிறேன். by செந்தில்குமார் பகிர்வு Voir la traduction ..........!
  4. நாட்டு மருந்து · Amuthan ·eortndspoSilcm5icm hum68106245cm9lahl8310cn8l8ili1g52igthmtm · முன்னாடியெல்லாம் ஆட்டுக்கறி வாங்கினால் கொஞ்சம் ஈரல், கொழுப்பு எல்லாம் நாம கேட்காமலே சும்மா அள்ளிப்போடுவாங்க... நாமதான் அதெல்லாம் வேண்டாம்னு சொல்வோம் ஆனால் இப்ப அதெல்லாம் வேணும்னு நாமளே கேட்டாலும் அவங்க இல்லன்னு சொல்றாங்க.. ஏன்னு கேட்டால் ஈரல் தனியா, நுரையீரல் சுவரொட்டி தனியான்னு விக்கிறோம்.. வேணும்னா அதுக்கு தனியா காசு கொடுத்து வாங்கிட்டு போங்கன்னு சொல்றாங்க... இதற்கெல்லாம் காரணம் யாரு தெரியுமா? யூடியூப்தான்... கன்டெண்ட்டுக்காக ஈரல் தனியா வாங்கி அது கறி, குடல் மட்டும் வாங்கி அது ஒரு கறி, நுரையீரல் வாங்கி அது ஒரு கறின்னு தனித்தனியா வாங்கி அதுக்கு ஒரு பேர் வைச்சு வீடியோ போட்டதின் விளைவு எங்க வந்து நிக்கிது பார்த்திங்களா? ஆட்டுக்காலுக்கு வந்த மவுசு.. ஆட்டுக்கால் பாயான்னு சொல்லி சொல்லி இப்ப அதுக்கும் ஒரு விலை... மூனு ஆட்டுக்கால் ஆயிரம் ரூபாயாம் ஒரு நேரத்தில் உடம்பு முடியாதவங்களுக்குத்தான் ஆட்டுக்கால் ரசம் வைக்க வாங்குவாங்க எல்லாரும் வாங்க மாட்டாங்க ஆனால் இப்ப வாங்க நினைச்சாலும் வாங்க முடியாது போல அந்த விலை விக்கிது... ஆட்டுக்குடல் அதுவும் பெரிசா யாரும் வாங்க மாட்டாங்க அதுவும் இப்ப விலை அதிமாகிடுச்சு இப்படி எல்லாவற்றையும் விலை ஏத்திவிட்ட பெருமை யூடியூப் காரங்களையே சேரும்... எப்பா சாமிகளா.... இன்னும் எதையெல்லாம் ஏத்திவிடப் போறீங்களோ தெரியல.. Voir la traduction
  5. சண்டை முடிஞ்சால் எமக்கென்ன ....... படத்தைப் பாருங்கள் நம்ம நாட்டாமையை வைத்துத்தான் பஞ்சாயத்து முடிந்திருக்கு . ........உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ......பொறாமை ........! 🙂
  6. பண்டிகைக்காலத்திக்கேற்ற பதவிசான கவிதை ..........! சுமார் 1975 க்கு முன்வரையான சில நிகழ்வுகள் நினைவில் நீந்துகின்றன ........! அன்று நாங்கள், எம்போன்ற மத்தியதர வர்க்கம் ஆட்டிறைச்சி சாப்பிடுவதென்றால் தீபாவளி போன்ற பண்டிகைகள் , கோவில் வேள்விகள் , யாராவது இறந்துபோனால் "சிலவு" நாட்களில்தான் கிடைக்கும் ........அப்போது கடைகளில் இறைச்சி வாங்கும் பழக்கமும் இல்லை ......மாட்டிறைச்சி..... ம்கூம் .....மூச் ........ கோழி இறைச்சி அப்பப்ப மற்றும் உறவினர் வரும்போதும் கிடைக்கும் .......அக்காலத்தில் குளிர்சாதனப்பெட்டி இல்லாதபடியால் அவை தளும்ப தளும்ப இறைச்சியையும் முட்டைகளையும் சுமந்து கொண்டு முற்றத்தில் உலாவித் திரியும் . ........! ஆகையால் நான் வேள்விகளுக்கு எதிரானவன் அல்ல .........கிடாய் வளர்ப்பதே விருந்தோம்பலுக்கும், வேள்விகளுக்கும்தான் ........எப்படி பூசி மொழுகினாலும் இன்றும்கூட இதுதான் யதார்த்தம் . .....! எப்படிக்கொல்வது..... கோவில்களில் ஒரே வெட்டில் முடிந்துவிடும் .......மற்றும்படி இதற்காக ஒரிருவர் டிப்பிளோம் எடுத்து ஆங்காங்கே வசித்தார்கள் . ..... சிலர் வாய்க்குள் உப்பு போன்ற எதையாவது திணித்துவிட்டு மூச்சுத்திணற பிடித்து கொல்வார்கள்...... அடுத்து அதை சாப்பிட இலைகுலை குடுத்து பாரமான இரும்பால் தலையில் ஒரே அடி ......அதன்பின் அதன் தோல் உரிப்பது ஒரு கலை .......காலில் குறிப்பிட்ட இடத்தில் கொஞ்சம் வெட்டி விட்டு அதனுள் காற்றை செலுத்த மாற்றர் பலூன்போல பெரிதாக உப்பிக்கொண்டு வந்திருக்கும் பின் சுலபமாய் உரித்து விடுவார்கள் . ......இப்போது அவர்களும் தாம் கொன்ற சீவன்களைத் தேடிப் போய்விட்டார்கள் ..........! 😇
  7. ஒரு குறிக்கோளோடுதான் ஐயன் ஆரவாரப்படுத்துகிறார் . ........ எப்படியோ நல்லதுதான் நடந்திருக்கு . .......! 👍
  8. சகோதரி , உங்களின் மைண்ட் வொய்ஸ் எல்லாத்தையும் மறந்துபோய் இங்கே கொட்டிட்டீங்கள் ...........! 😂
  9. பல பாடல்களை அட இந்தப் பாடலை இவரா எழுதினார் என்று திகைக்க வைக்கிறது இந்தக் கட்டுரை .........! 🙂 நன்றி ஏராளன் .......!
  10. Chandran Veerasamy · சுமார் ஒன்பதரை ஆண்டு காலம் காமராஜர் ஆட்சியைத் தம் தோள்மீது சுமந்து, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்செய்து பிரச்சாரம் செய்து ஆதரவு திரட்டினார் பெரியார். 1961-ல் தேவகோட்டையில் பேசும்போது, மரண வாக்குமூலம்போலத் தமது உள்ளக்கிடக்கையை தந்தை பெரியார் வெளியிட்டார். அதில், ‘‘தோழர்களே! எனக்கோ வயது 82 ஆகிறது. நான் எந்த நேரத்திலும் இறந்துவிடலாம். ஆயினும், நீங்கள் இருப்பீர்கள். உங்களைவிட முதிர்ந்த நான், மரண வாக்குமூலம்போன்று ஒன்றைக் கூறுகிறேன். மரண வாக்குமூலம் கூறவேண்டிய நிலையில் உள்ளவன் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இன்றைய காமராசர் ஆட்சியில் நமது நாடு அடைந்து வரும் முன்னேற்றம் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்ததில்லை. நமது முவேந்தர்கள் ஆட்சிக் காலத்திலாகட்டும், அடுத்து நாயக்கர் மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், முஸ்லிம்கள், வெள்ளைக்காரர்கள் இவர்கள் ஆட்சியில் ஆகட்டும், எல்லாம் நமது கல்விக்கு வகைசெய்யவில்லை. தோழர்களே நீங்கள் என் சொல்லை நம்புங்கள். இந்த நாடு உருப்பட வேண்டுமானால் இன்னும் 10 ஆண்டுகளுக்காவது காமராசரை விட்டுவிடாமல் பிடித்துக்கொள்ளுங்கள். அவரது ஆட்சிமூலம் சுகமடையுங்கள். காமராசரைப் பயன்படுத்திக் கொள்ள நாம் தவறிவிட்டால், தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே சிக்காது.” Voir la traduction
  11. எப்படிங்க அப்படி விடமுடியும் ....... மூக்கை சிந்தி அழக்கூட உரிமை இல்லையா ......... நான் வேற 5 ல் நிக்கிறன், அகஸ்தியரை நெருங்க முடியாது தெரியும் .......இவர் ஏராளனையாவது நெருக்கிக் கொண்டு நிக்கலாம் என்று நினைக்கிறன் . .....தப்பா ..........! 😇
  12. இன்று தென்றலாக நாளை புயலாய் .........! 😂
  13. Kanagu Kanagraj · நன்றி Kalai Marx தமிழ் மொழி என்று நினைத்து பாவிக்கும் அரபு மொழி சொற்கள் சில கீழே அசல் أصل. மூலம் மாஜி ماضي முந்தைய அத்து حد வரம்பு முகாம் مقام தங்குமிடம் அத்தர் عطر மணப்பொருள் முலாம் ملام மேற்பூச்சு அமுல் عمل நடைமுறை ரத்து رد விலக்கு/நீக்கம் அனாமத் أنعمت. கேட்பாரற்ற ரசீது رصيد ஒப்புப் படிவம் அல்வா حلوه இனிப்பு ராஜி راضي உடன்பாடு ஆஜர் حاظر வருகை ருஜு رجوع உறுதிப்பாடு ஆபத்து آفت துன்பம் ருமால் رمال கைக்குட்டை இனாம் انعام நன்கொடை லாயக் لائق தகுதி இலாகா علاقة துறை வக்கீல் وكيل வழக்குரைஞர் கஜானா خزانة கருவூலம் வக்காலத்து وكالة பரிந்துரை காலி خالي வெற்றிடம் வகையறா وغيره முதலான காய்தா قاعدة தலைமை/வரம்பு வசூல் وصول திரட்டு காஜி قاضي நீதிபதி வாய்தா وعده தவணை கைதி قيد சிறையாளி வாரிசு وارث உரியவர் சவால் سوال அறைகூவல்/கேள்வி சர்பத் شربة. குளிர்பானம் ஜாமீன் ضمان பிணை சரத்து شرط நிபந்தனை ஜில்லா ضلعة மாவட்டம் தகராறு تكرار. வம்பு தாவா دعوة வழக்கு திவான் ديوان அமைச்சர் பதில் بدل மறுமொழி பாக்கி باقي நிலுவை மஹால் محل மாளிகை மகசூல் محصول அறுவடை/ விளைச்சல் மாமூல் معمول வழக்கம். Voir la traduction
  14. தந்தை தாயுடன் தவமணிகள் ........இப்ப மகிழ்ச்சியா ........! 😂
  15. நடந்தது என்ன என்று நீயே சொல்லு . ........ இரவிச்சந்திரன் &ஜெயலலிதா .......! 😍
  16. வணக்கம் வாத்தியார் ..........! தமிழ் பாடகா்கள் : ஹாிஹரன், தேவன் ஏகாம்பரம்,வி.வி. பிரசன்னா இசையமைப்பாளா் : ஹாிஸ் ஜெயராஜ் ஆண் : நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை நீருக்குள் மூழ்கிடும் தாமரை சட்டென்று மாறுது வானிலை பெண்ணே உன் மேல் பிழை ஆண் : நில்லாமல் வீசிடும் பேரலை நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை பொன்வண்ணம் சூடிய காாிகை பெண்ணே நீ காஞ்சனை ஆண் : ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி என் உயிரை உயிரை நீ ஏந்தி ஆண் : ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி இனி நீதான் எந்தன் அந்தாதி ஆண் : ஏதோ ஒன்று என்னை ஈா்க்க மூக்கின் நுனி மா்மம் சோ்க்க கள்ளத்தனம் ஏதும் இல்லா புன்னகையோ போகன்வில்லா ஆண் : நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ ஆண் : என்னோடு வா வீடு வரைக்கும் என் வீட்டை பாா் என்னை பிடிக்கும் இவள் யாரோ யாரோ தொியாதே இவள் பின்னால் நெஞ்சே போகாதே ஆண் : இது பொய்யோ மெய்யோ தொியாதே இவள் பின்னால் நெஞ்சே போகாதே போகாதே.. ஆண் : தூக்கங்களை தூக்கிச் சென்றாய் பெண் : தூக்கிச் சென்றாய் ஆண் : ஏக்கங்களை தூவிச் சென்றாய் உன்னை தாண்டி போகும் போது பெண் : போகும் போது ஆண் : வீசும் காற்றின் வீச்சு வேறு ஆண் : நில்லென்று நீ சொன்னால் என் காலம் நகராதே நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே காதல் எனை கேட்கவில்லை கேட்காதது காதல் இல்லை ஆண் : என் ஜீவன் ஜீவன் நீதானே என தோன்றும் நேரம் இதுதானே நீ இல்லை இல்லை என்றாலே என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே.........! --- நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை ---
  17. 💐💐💐பிரியாத உறவு நம் நட்பு🥰❤🥰 Best Friends For Ever💐💐💐 #அலமாரி 25-10-25 உண்டோ குரங்கேற்றுக்கேற்றுக் கொள்ளாத கொம்பு...? அந்த குரங்கு மரத்திற்கு மரம் தாவித் திரிந்தது நான் உன்னை ஏற்கமாட்டேன் என ஒரு மரம் அதனை விரட்டியது. நீ என்னைப் புகழ்ந்து பாடினால் ஒழிய நான் உன்னை ஏற்க மாட்டேன் என்று தீர்க்கமாக கூறியது அந்த மரம். மரம் என்பது இங்கே சோழ நாட்டு மன்னன் . குரங்கென்பது கம்பன் கடவுளைப் பற்றிப் பாடிய இவ் வாயால் நரனைப் பாட மாட்டேன். என்றான் சோழ மன்னனிடம் கம்பன். " மன்னவனும் நீயோ....? வள நாடும் நின்னதுவோ...? உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன். என்னை விரைந் தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ....? உண்டோ குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு ...? என்று பாடி அவை அகன்றான் கம்பன். அதன் பிறகுதான் பாண்டிய நாட்டிற்கு பிரவேசம் ஆனான் கம்பன். அது கம்பன் வரலாறு. அது தலைமை ஆசிரியர் அறை. அந்த ஆசியை அதிகமாகப் பேசுகிறார். அவரிடம் சொல்லி வையுங்கள். எனகிறது நிர்வாகம். நிர்வாகம் கூறியதை த. ஆ அந்த ஆசிரியையிடம் சென்னார்.. அதற்கு அந்த ஆசிரியை , " பெரிதே உலகம் பேனுனர் பலரே...." எனக் கூறி அறையை விட்டு அகன்றார் அந்த ஆசிரியை.. சில நாட்களிலேயே அவருக்கு அரசு பள்ளியில் பணி கிடைத்து,. கம்பனையம் , அந்த ஆசிரியை யும் ஒர நேர் கோட்டில் வைத்துப் பார்த்து வியந்தேன். Voir la traduction
  18. Puthiyamaadhavi Sankaran · மூதாட்டி கற்றுக் கொடுத்த வியாபார தர்மம். மகாராஷ்டிரா நாக்பூர் அருகே அந்த மூதாட்டி விற்கும் காரி -டோஸ்ட் ரொம்ப நல்லாயிருக்கும் என்று தோழர் காம்ப்ளே எங்களை மாலை நேரத்தில் அழைத்துச் சென்றார். டோஸ்ட் வாங்கியாச்சு. இப்போ அதை முக்கி சாப்பிட சூடான சாய் வேணும். நான் என் பொருளாதரப் புத்தியை அவளிடம் காட்டினேன். " மெளசி, ஆஃப் சாயா பி தேனேக்கா" நீங்க எங்களுக்கு தேநீரும் கொடுக்கணும். டீயும் சேர்த்து விற்பனை செய்தால் நல்லா விற்பனை ஆகுமே" இது நம்ம படிச்ச பொருளாதர தொழில் அபிவிருத்தி. அந்த மூதாட்டி கண்கள் புன்னகைக்க சொன்னாள்.... " பேட்டி.. பக்கத்தில ஒருத்தர் சாய் விக்கிறார் பாரு. அவரு குடும்பமும் பிழைக்கணும்" நான் திரும்பிப் பார்த்தேன். எதிரே அந்த மனிதர் சாய் விற்றுக் கொண்டிருந்தார். அவரு யாரு என்று கேட்டேன். தெரியாது, என்னமாதிரி ஒருத்தர் அவ்வளவுதான்" என்று சொல்லி விட்டு தன் அடுத்த கஸ்டமருக்கு பொட்டலம் போட ஆரம்பித்துவிட்டாள். அவளுக்கு சாய் விற்கமுடியும். ஆனால் அதை அவள் செய்யவில்லை. வியாபார அபிவிருத்தி திட்டங்களை பக்கம் பக்கமாக எக்னாமிக்ஸ் பத்திரிகைகளில் வாசித்திருந்த எனக்கு அந்த ஆதித்தாயின் பொருளாதர வியாபாரக் கொள்கை பிடித்திருந்தது. வியாபாரம், முன்னேற்றம் என்பதெல்லாம் " தான் மட்டும் வாழ்வதல்ல" மற்றவர்களையும் வாழ வைப்பதுதான்." வாழு. வாழ விடு. என் குடியிருப்புக்கு கீழே இருந்த கடையில் ( provision store) எல்லாம் கிடைக்கும். காய்கறி தவிர. காய்கறி வாங்கி விற்க முடியாது என்பதல்ல. ஆனால் அந்தக் கடைக்காரர் அதைச் செய்யவில்லை. காரணம் அக்கடைக்கு வெளியே தள்ளுவண்டியில் காலையிலும் மாலையிலும் காய்கறி வியாபாரம் உண்டு. கடைக்காரருக்கு எவ்வளவு பெரிய மனசு. வாழு வாழ விடு. Voir la traduction
  19. ஒரு பறவை மீன் பிடிக்கிறது .........! 🙂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.