Everything posted by suvy
-
அதிசயக்குதிரை
Thapes Vlogger est à Oslo, Norvège. · Svalbard 🇳🇴" நோர்வேயின் இந்த தீவில் நீங்கள் பிள்ளை பெற்றுக்கொள்ளவும் முடியாது, மரணமடையவும் முடியாது.. இந்த தீவைப்பற்றிய சில சுவாரிசயமான தகவல்கள் முதலில்.. அமைவிடம்: பூமியின் வட துருவ Arctic சமுத்திரத்தில்.. முக்கிய நகரம்: Longyearbyen மக்கள் தொகை: 2881 (June 2025) Winter காலங்களில் November,December,January இந்த மூன்று மாதங்களும் இங்கு சூரியனை காணமுடியாது.. (இந்த மூன்று மாதங்களும் மக்கள் தொடர்ந்து இருட்டுக்குள் தான் வாழ வேண்டும்) ஒரு நாளின் 24 மணி நேரமும் இருட்டாக இருப்பதால், Northern Lights பார்க்க இது ஒரு சிறந்த பகுதி. அது போல கோடை காலங்களில் 4-5 மாதங்கள் 24 மணி நேரமும் இங்கு சூரிய வெளிச்சம் இருக்கும். மரங்கள் ஏதும் இல்லாத ஒரு தீவு.. இந்த தீவின் மக்கள் தொகையை விட பனிக்கரடிகள் அதிகமாக வாழ்கின்றன இங்கு.. இந்த தீவில் பூணைகளுக்கு அனுமதியில்லை.. இங்கு பெண்கள் யாரும் பிள்ளை பெற்றுக்கொள்ள அனுமதியில்லை. ஆனாலும் சில பிள்ளைகள் இங்கு பிறந்திருக்கின்றன. பிரசவ திகதிக்கு ஒரு மாதத்திற்க்கு முன்பே பெண்கள் இந்த தீவை விட்டு வெளியேறி நோர்வேயின் Mainland பகுதிக்கு வந்துவிட வேண்டும். இந்த தீவில் மட்டுப்படுத்தப்பட்ட மருத்துவ சேவைகளே இருக்கின்றன. அதே போல இந்த தீவில் யாரும் இறந்தாலும், அங்கே அவர்களை புதைப்பதில்லை, காரணம் அந்த பனிமலைகள் காரணமாக உடல்கள் உக்கிவிடுவதில்லை. அப்படி உக்காத ஒரு உடலினால் 1918 களில் ஒரு பெரும் தொற்றே உருவாகியிருக்கிறது. இந்த தீவில் மட்டும் 2100 பனிமலைகள் (Glaciers) இருக்கின்றன இவை 3000-4000 ஆண்டுகள் பழமையானவை. குறிப்பிட்ட மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தை தவிர்த்து வேறு இடங்களுக்கு நீங்கள் செல்ல நேர்ந்தால், கையில் துப்பாக்கியுடன் தான் செல்லவேண்டும், இல்லையெனில் நீங்கள் திரும்பி வரமாட்டீர்கள்😀" (பனிக்கரடி) துப்பாக்கி பாவனைகளுக்கு தனிச்சட்டங்கள் இருக்கிறது இந்த தீவில்.. இந்த தீவு ஒரு Frozen Desert அதாவது பனிப்பாலைவனம். இந்த தீவில் தான் உலகின் உள்ள அணைத்துவகையான தானியங்களும் ஒரு களஞ்சியத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கிறது. உலக நாடுகளில் போர்கள் வந்து(அணுஆயுத) எல்லாம் அழிந்தாலும் இந்த களஞ்சியத்திலிருந்து எல்லாவற்றையும் மீண்டும் உருவாக்கலாம். இப்படி இன்னும் பல சுவாரிசயமான தகவல்கள் இந்த தீவைப்பற்றி இருக்கின்றன.. இது நோர்வேயினுடைய ஒரு தீவு தான், ஆனால் நோர்வேயின் எல்லா சட்டதிட்டங்களும் இந்த தீவில் செல்லுபடியாகது. இந்த தீவிற்க்கு என்று ஒரு தனியான சட்டம் இருக்கிறது Svalbard Treaty, அத்துடன் இந்த தீவிற்கென ஒரு தனாயான ஆட்சியரும்(Governor) இருக்கின்றார். இந்த தீவில் ஒரேயொரு விமான நிலையம் மட்டும் தான் இருக்கிறது. இந்த தீவுக்கு நீங்கள் போக வேண்டும் என்றால் நோர்வேயின் இரண்டு நகரங்களிலிருந்து மட்டும் தான் இங்கு போக முடியும். அந்த நகரங்கள்.. தலைநகரம் Oslo மற்றும் வடக்கிலுள்ள Tromsø நகரம். அங்கு வசிக்கும் மக்கள் பெரும்பாலும் சுற்றுலாத்துறை சம்பந்தமானவர்கள் மற்றும் உலக ஆராய்ச்சியாளர்கள்.. இந்த தீவு ஒரு Visa-Free Zone Schengen ஒப்பந்தத்தில் உள்ள 29 நாடுகளில், ஏதாவது ஒரு நாட்டின் Visa (நுழைவு/வதிவிட அனுமதிப்பத்திரம்) இருக்குமானால் நீங்கள் இந்த தீவில் தங்கி நின்று வேலை செய்யலாம்.. நானும் இந்த தீவில் குடியேறத் தான் வேலை ஒன்று பார்த்துக்கொண்டிருக்கிறேன்..🫣" மற்றது தமிழர்கள் இல்லாத ஒரு இடமா பார்த்து குடியேறவேண்டும் என்று யாராவது சொன்னால், இந்த தீவை காட்டிவிடுங்கள்..😀" (இந்த படத்தில் இருப்பது Svalbard தீவு தான்) #fblifestyle Voir la traduction........!
-
சிரிக்கலாம் வாங்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
- கடலில் கவிழ்ந்த கேஷான் புதா 1 மீன்பிடிக் கப்பல் - மீனவர்களை மீட்கப் புறப்பட்டது சிதுரல கப்பல்
அவசர வாசிப்பில் தடுமாற்றம் ஏற்பட்டு விட்டது எனக்கும் ........நான் இன்னும் வாசிக்கப் பழக வேண்டும் .........! 😇- யாழ்.மாவட்டப் போக்குவரத்து; எம்.பி.க்கள் நேரில் ஆராய்வு!
நல்ல செயல் ......தொடரட்டும் . .......!- யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடிய இளைஞன் உயிர்மாய்க்க முயன்று வைத்தியசாலையில்
ஆம் ஆனால் ........ஒரு சமூகத்தின் பிரதிநிதி அவ்வளவுக்கு நான் நினைத்த மாதிரி பகிரங்கமாய் தரம் தாழ்ந்து போகமாட்டார் என்று நினைத்தேன் ......! இப்ப விளங்கீட்டுது இந்த விளையாட்டு . ........கானல் நீரை நம்பி கட்டு கட்டாய் பணமிழந்து கடன்பட்டும் தொலையாததாய் தொல்லை கொடுக்கும் ஒன்றென்று ........!- 💙 பேரன் ஆரினின் முதல் அகவைநாள் வாழ்த்துக்கள்! [29 அக்டோபர் 2025]
ஆரினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் . .........! 💐- 'தென்கடலில் விழுந்த யாரும் பிழைத்ததில்லை'- கடலில் 26 மணி நேரம் மிதந்து உயிர்பிழைத்த சிவமுருகன்
வல்லிய சீவன் .......நீடுழி வாழட்டும் ........! 🙏- யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடிய இளைஞன் உயிர்மாய்க்க முயன்று வைத்தியசாலையில்
அதென்ன பப்ஜி விளையாட்டு .........! 😗- பனம்பழத்தில் இருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைன் !
இந்த முயற்சி வெற்றி பெற்றால் பனைகள்,வடலிகள் அழிவில் இருந்து தப்பிச் சினை பிடித்துப் பெருகலாம் . .....! 🫠- ஜமைக்காவை தாக்கிய பின்னர் கியூபாவை நோக்கி நகரும் சூறாவளி "மெலிசா"!
இயற்கையின் கோரத்தாண்டவம் .........! 🥲- கருத்து படங்கள்
ஒரு தேசியத்தின் கௌரவம் அனாதையாகவும் , ஒரு கேவலத்தை சுற்றிலும் ஊடகங்கள் .......இதைவிட கேவலம் வேறில்லை . .......!- கொஞ்சம் ரசிக்க
- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
- உணவு செய்முறையை ரசிப்போம் !
சாம்பார் சாதம் செய்து பாருங்கள் . ...........! 👍- களைத்த மனசு களிப்புற ......!
(படத்திலிருப்பது Lady with Lamp செவிலியர் சேவையின் அன்னையான Florence Nightingale அம்மையார். அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படும் அவரது சேவைக்கால ஆடை. நைட்டிங்கேல் புனிதமான செவிலியர் சேவையின் அஸ்திவாரமாக இருந்தவர் இருப்பவர். அவரையும் அவரது சேவையின் தொடக்கப்புள்ளியையும் நினைவு கூறுதலின் ஒரு வடிவம்தான் தலைக்கவசமும் நீண்ட வெள்ளை ஏப்ரனும். ஆரம்பத்தில் அவர் அணிந்த அதே வடிவில் இந்த ஆடை வடிவமைக்கப்பட்டாலும் கால இட சூழலுக்கேற்ப பொருத்தமான பல பரிமானங்களை எடுத்திருக்கிறது, அவரின் நினைவு கூறலுக்கான அடிப்படைகளை விட்டுக் கொடுக்காமல். தவிர்த்து நைட்டிங்கேல் அம்மையார் நினைவு கூறப்படவேண்டியது மகத்தான தாதியர் சேவையில்தானே தவிர அவரது ஆடையொழுங்கில் மாத்திரம் அல்ல. எப்பொழுது அந்த சேவைக்கு இனம் மதம் என்ற கறை பூசப்படுகிறதோ அப்பொழுதே அது தன் புனிதத்தன்மையை இழக்கிறது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. தாதியம் என்ற சேவை ஆடைகளுக்கு அப்பாற்பட்டது என்ற சிறிய தெளிவே இந்தச் சிக்கலுக்கு மிக இலகுவான பதிலாக இருந்தும் அத்தனை இலகுவாக அதையெல்லாம் எமது நாட்டின் சூழலில் எதிர்பார்த்து விட முடியாது என்பதே வெள்ளிடை மலையும் யதார்த்தமும்.) Voir la traduction- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Prakasam P Palani · நம் நிலாவில் எடுக்கப்பட்ட உண்மை புகைப்படம். 1969-ல் நாசா அனுப்பிய அப்பலோ 11 விண்கலம் நிலாவில் இறங்கியபோது விண்வெளி வீரரான பஸ் ஆல்ட்ரின் பதித்த கால் தடம் தான் இது. புகைப்படத்தை நல்லா பாருங்க. கால் தடத்தின் ஆழத்தை பார்க்கும்போது ஆல்ட்ரின் ரொம்ப குண்டாக இருந்த மாதிரி தெரியுது தானே...? ஆனா, அது இல்ல. நிலாவில் தரையிறங்கியபோது பஸ் ஆல்ட்ரினின் எடை 27 கிலோ தான். 'என்னாது...வெறும் 27 கிலோவா...'? ஆமா. ஆனா, அவர் பூமியில் இருந்தபோது அவரோட எடை 80 கிலோ. அவர் போட்டுக்கொண்ட விண்வெளி உடைகள்+உபகரணங்களின் எடை 80 கிலோ. ஆக மொத்தம் 160 கிலோ. இது பூமியில் இருந்தபோது இருந்த எடை. அவர் நிலாவுக்கு போனதும் மொத்த எடையும் 27 கிலோவுக்கு மாறிவிட்டது. காரணம் நிலாவில் உள்ள குறைவான ஈர்ப்பு விசை தான். நீங்க இங்க பூமியில் 60 கிலோ எடை இருந்து, அப்படியே நிலாவுக்கு போனால் அங்கே உங்க எடை வெறும் 10 கிலோ தான் இருக்கும். இப்ப ஒரு விஷயத்தை தெளிவாக புரிஞ்சிக்கங்க. இங்க பூமியில் நீங்க 60 கிலோ எடையுடன் இருந்தால், அது உங்களுடைய உடலின் எடை கிடையாது. உங்களை இந்த பூமி எப்போதும் இழுத்து பிடித்துக் கொண்டுருக்கும் விசை தான் அந்த எடைக்கான காரணம். அப்ப, உங்க உடலில் இருப்பது என்ன...? அதுக்கு பேர் தான் mass. அதாவது நிறை. இந்த நிறை பூமி, நிலா, மார்ஸ் என எந்த இடத்திலும் மாறாது. ஆக, நிலாவில் பஸ் ஆல்ட்ரினின் எடை 27 கிலோ, ஆனா நிறை அதே 160 கிலோ தான். சரி இவ்வளவு குறைவான எடையிலும் கால் தடம் ரொம்ப ஆழமா இருக்கே...? ஏன்னா, நம் பூமி மண் போல் நிலாவில் இருக்காது. கிட்டத்தட்ட சிமெண்ட் மாதிரி பவுடராக தான் இருக்கும். இதனால் தான் கால் தடம் மிக ஆழமாகவே விழுந்திருக்கு. இந்த படத்தை பார்த்து நான் சொல்ல வந்த விஷயம் என்னான்னா... "நிலாவில் நீர், காற்று, உயிரினங்கள் என எதுவுமே இல்லை என்பதால், இந்த கால் தடம் எப்போதும் அழியாமல் அப்படியே இருக்கும்" என இந்த போட்டோவில் ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். ஆனால், அது தவறு. நிலாவில் நீர், காற்று எதுவும் இல்லை என்பது உண்மை தான். ஆனால், இன்னொரு விஷயம் அங்க தினமும் நடந்துக்கிட்டு இருக்கே..!! இங்க பூமியில் தினமும் சிறிய அளவிலான எரிகற்கள்(Micrometeorites) விழுந்துக்கிட்டு தான் இருக்கு. இதனால் பூமியின் எடையும் கூடிக்கிட்டு தான் இருக்கு. இதே மாதிரி தான் நிலாவிலும் சிறிய அளவிலான எரிகற்கள் தினமும் விழுந்துக்கிட்டே இருக்கு. இங்க பூமியில் வளிமண்டலம் இருப்பதால் வரும் எரிகல் சில நேரம் உராய்ந்து ஆவியாகிவிடும், அல்லது சிறிய சிறிய பீஸ்கள் மிஞ்சி போய் கீழே விழும். ஆனால், நிலாவில் வளிமண்டலம் இல்லை என்பதால் உராய்வு எதுவும் ஏற்படாமல் அப்படியே விழும். ஆக, அங்கேயும் பிரச்சனை இருக்கு. இப்ப இந்த மாதிரி சிறிய சிறிய பீஸ்கள் இந்த கால் தடம் மீது விழத்தானே செய்யும்...? அப்போ, கால் தடம் அழிந்து விடுமே...? இந்த புகைப்படம் எடுத்து 56 வருஷம் ஆகிட்டதால, அது இன்னும் அழியாம இருக்குமா...? அட்லீஸ்ட், shape கூட மாறியிருக்கலாம் என்பதே உண்மை!!! Voir la traduction- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
❣எங்கே எனது கவிதை ❣ · (1887–1895ல்) முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பிரிட்டிஷ் எஞ்சினீயர் பென்னி குவிக் அணயைக் கட்டுவதில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம்.......!- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
Sathiya Kumaran · டியர் மந்தனா இந்த மாதிரி Consistent பேட்டிங் எல்லாம் இந்திய பெண்கள் கிரிக்கெட்டில் உங்களை தவிர வேற யார்க்கிட்டயும் நான் பாரத்ததே இல்லை! இனிமேல் இன்னொரு வீராங்கனையிடம் பார்க்க போகிறானே என்பதும் தெரியவில்லை! பெண்கள் கிரிக்கெட்டில் உலகின் டாப் அணிகளில் இரண்டு அணிகளோடு அரைசதம், இன்னொரு அணியோடு சதம் என்று உலககோப்பையில் அடிக்கிறதெல்லாம் உண்மையாலுமே வேற லெவல் 🔥" நம்பர் 1 பேட்டர்ன்னு சும்மாவா? அதற்கு உண்டான தரம் வெளிப்படுமே! அந்த வெளிப்பாடு தான் மந்தனாவின் பேட்டிங்! நாங்க ஆவலுடன் எதிர்பார்த்த அந்த 18 ஆம் நம்பர் ஜெர்ஸி ஏமாற்றினாலும், அதற்கும் சேர்த்து வைத்து இந்த 18 ஆம் ஜெர்ஸி நான் இருக்கேன்னு வட்டியும் முதலுமாக பேட்டிங்கில் காட்டி இருக்கிறீர்கள் 👏" பெண்கள் கிரிக்கெட்டில் பல வீராங்கனைகள் வருவார்கள் ஆடுவார்கள் செல்வார்கள்! ஆனா மந்தனா அப்படி கிடையாது! பின்னாளில் வரலாற்றை எடுத்து பார்க்கும் போது ஸ்மிரிதி மந்தனாவின் பெயர் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு இருக்கும் 💯" இந்திய கிரிக்கெட்டில் ஆண்கள் அணியின் அரசனாக அவர் இருக்கும் போது பெண்கள் கிரிக்கெட்டில் அரசியாக நான் இருக்கிறேன் என்று நிரூபித்து உள்ளீர்கள் ! ஒருநாள் போட்டிகளில் மந்தனாவின் 14-வது சதம் இதுவாகும்! இந்த உலகக்கோப்பையில் ஒரு வீராங்கனையின் முதல் சதமாகும்! ஒட்டுமொத்த ஒருநாள் உலககோப்பையில் அவர் அடிக்கும் மூணாவது சதம் இதுவாகும்!! அதுமட்டுமின்றி பெண்கள் ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த இரண்டாவது வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா உள்ளார்! முதல் இடத்தில் ஆஸி வீராங்கனை 15 சதங்களுடன் மெக் லானிங் உள்ளார்! Queen of Indian Womens Cricket 🏏" #smiritimandhana #TeamIndia #INDIANWOMENSCRICKETTEAM #INDWvsNZW #womensworldcup2025 #cricketlovers Voir la traduction- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்க மட்டும் வாங்க
- ‘பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வரை’ சூரனை வரவேற்ற இலங்கை இராணுவம்
அது வேறொன்றுமில்லை ......அவர்கள் வேற்றுமையில் ஒற்றுமையாய் இருக்கிறார்கள், இவர்கள் ஒற்றுமையில் வேற்றுமையாய் இருக்கிறார்கள் ........!- ‘பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வரை’ சூரனை வரவேற்ற இலங்கை இராணுவம்
பாராட்டுக்கள், சூரன்போர் நடக்கும் நேரத்தில் யாழில் சூரனின் விஜயம் பொருத்தமாய் அமைந்திருக்கு . .....! 😂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் ........! தமிழ் பாடகி : சின்மயி பாடகர் : உதித் நாராயண் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : சஹானா சாரல் தூவுதோ சஹாரா பூக்கள் பூத்ததோ பெண் : சஹாரா பூக்கள் பூத்ததோ சஹானா சாரல் தூவுதோ ஆண் : என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ அடடா அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ அது என்னுடன் தேநீர் கொண்டதோ பெண் : கனவோ நிஜமோ காதல் மந்திரமோ ஆண் : ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது பெண் : தலைமுதல் கால்வரை தவிக்கின்ற தூரத்தை இதழ்களில் கடந்துவிடு உன் மீசையின் முடியென்ற மெல்லிய சாவியில் புலன்களைத் திறந்துவிடு ஆண் : பூமிக்கும் வானுக்கும் விரிகின்ற தூரத்தை பூக்களில் நிரப்பட்டுமா பெண் : ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் பூக்களின் சாலையில் பூவுன்னை ஏந்தியே வானுக்குள் நடக்கட்டுமா ஆண் : என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ குழு : அடடா ஆண் : அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ அது என்னுடன் தேநீர் கொண்டதோ பெண் : கனவோ நிஜமோ காதல் மந்திரமோ.......! --- சஹாரா சாரல் தூவுதோ ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில் ........ கல்யாணகுமார் & ஷீலா (பாவாடை தாவணியில் நீண்ட பின்னல் குஞ்சத்துடன் ஆட செம அழகு )........! 😍 - இரசித்த.... புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.