Everything posted by suvy
-
கொஞ்சம் ரசிக்க
ரகசியப்பொலிஸ் .........! 😂
-
அதிசயக்குதிரை
பனி மலர் · Venkatesan Vellore ·Sdtrsnpoeo0i809egio8,mtii u661t722h3470i56uh34:7m2l1ub5rico · சமீபத்திய தஞ்சை பயணத்தின் போது, பொறியாளர் ஒருவர் மூலம் நாம் பெற்ற, தஞ்சை பெரியகோவில் கட்டுமானம் பற்றிய ஒரு தகவல்...! கோபுர உச்சியை உற்று நோக்குங்கள்.. கோபுரஉச்சியை நன்கு உற்று நோக்குங்கள். பிரம்மாந்திர கல் எனப்படும் ஸ்தூபிக்கல். இது ஒரு கல்லோ அல்லது பல கற்களின் சேர்க்கையோ இதன் எடை 80 டன்... இந்த பிம்மாந்திர கல்லை தாங்கும் அந்த சதுரவடிவக் கல்லை நோக்குங்கள்... அந்த கல்லும் 80 டன்... அந்த சதுரக் கல்லின் மேல் பக்கத்திற்கு இரண்டு நந்தியாக மொத்தம் எட்டு நந்தி... ஒவ்வொரு நந்தியின் எடை 10 டன். ஆக, எட்டு நந்தியின் மொத்த எடை 80 டன்.. இந்த மூன்றும்தான் பெரியகோவிலின் அஸ்திவாரம்.. இது என்ன விந்தை...! அஸ்திவாரம் அடியில்தானே இருக்கும்.. தலைகீழான கூற்றாய் உள்ளதே..? நாம் ஒரு, செங்கற்களை கொண்டு ஒரு வீடு கட்டும்போது, கட்டிடத்தின் உயரம் 12 அடி என்றால் 4 அடிக்காவது அஸ்திவாரம் இடுவோம்... பெரியகோவில் உயரம் 216 அடி... முழுக்க கற்களைக்கொண்டு எழுப்பப்படும் ஒரு பிரம்மாண்ட கற்கோவில்.. கற்களின் எடையோ மிக மிக அதிகம்.. இவ்வளவு பெரிய கோவிலுக்கு அஸ்திவாரம் எவ்வாறு அமையும்...? குறைந்தது 50 அடி ஆழம், 50 அடி அகல அஸ்திவாரம் வேண்டும்.. இந்த அளவு சாத்தியமே இல்லை.. 50 அடி ஆழத்தில் வெறும் தண்ணீரும் புகை மண்டலமாகத்தான் இருக்கும்... ஆனால்... பெரியகோவிலின் அஸ்திவாரம் வெறும் 5 அடிதான்... மேலும் ஒரு வியப்பு... இது எப்படி சாத்தியம்..?! இங்குதான் நம்ம சோழ விஞ்ஞானிகளின் வியத்தகு அறிவியல் நம்மை சிலிர்ப்படையச் செய்கிறது...! பெரியகோவில் கட்டுமானத்தை, அதாவது கற்கள் இணைக்கப்பட்டதை... “இலகு பிணைப்பு” என்கிறார்கள்... அதாவது Loose joint என்கிறார்கள்.. அதாவது ஒவ்வொரு கல்லையும் இணைக்கும் போது, ஒரு நூலளவு இடைவெளிவிட்டு அடுக்கினார்கள்.. எதற்காக ? நமது கிராமத்தில் பயன்பட்ட கயிற்று கட்டிலை நினைவில் கொள்ளுங்கள்.. கயிறுகளின் பிணைப்பு... லூஸாகத்தான் இருக்கும்... அதன் மேல் ஆட்கள் உட்காரும் போது, கயிறுகள் அனைத்தும் உள் வாங்கி இறுகிவிடும்... கயிறுகளின் பிணைப்பு பலமாகிறது... இதன் அடிப்படைதான் பெரியகோவில் கட்டுமானம் .. லூஸாக கற்களை அடுக்கிக்கொண்டே சென்று, அதன் உச்சியில் மிக பிரம்மாண்டமான எடையை அழுத்தச் செய்வதன் மூலம், மொத்தகற்களும் இறுகி மிக பலமான இணைப்பை பெறுகின்றன... இதுதான் அந்த 240 டன் எடை கொண்ட, ஸ்தூபி, சதுரக்கல் மற்றும் எட்டு நந்தி.. அஸ்திவாரம் கோவிலின் உச்சியில் இடம் பெற்ற அதிசயம் இது...!!! எத்தனை பூகம்பம் வந்தாலும் எந்த கல்லும் அசையாது. எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நிலைபெற்று இருக்கும்... சூரியசந்திரர் இருக்கும் வரை இக்கோவிலும் இருக்கும்... என்ற நம் இராஜராஜ சோழ மன்னரின் நம்பிக்கை எந்த காலத்திலும் பொய்க்காது...!!! Voir la traduction
-
இனித்திடும் இனிய தமிழே....!
🌷கரிசக்காட்டுப்பூவே🌷 பழமொழி - remix பழசு: பல் போனா சொல் போச்சு புதுசு:‘cell’ போனா சொல் போச்சு😄" பழசு: காற்றுள்ள போதே தூற்றிக்கொள்!! புதுசு: பேலன்ஸ் இருக்கும் போதே பேசிக்கொள்..😃" பழசு: இளங்கன்று பயமறியாது..!! புதுசு: புது பேட்டரி சார்ஜ் இறங்காது..😃" பழசு: அகத்தின் அழகு முகத்தில் தெரியும்..!! புதுசு: செல்போனின் அழகு சார்ஜ் நிற்பதில் தெரியும்😄" பழசு: நாய் வாலை நிமிர்த்த முடியாது..!! புதுசு: நெட்வொர்க்கை திருத்த முடியாது..😃" பழசு: குடிகாரன் பேச்சு, விடிஞ்சா போச்சு..! புதுசு: கஸ்டமர்கேர் பேச்சு, கட் பண்ணினா போச்சு..😃" பழசு: வெட்டு ஒண்ணு... துண்டு ரெண்டு..!! புதுசு: செல்போன் ஒண்ணு.. சிம்மு ரெண்டு.😃" பழசு: ஆழம் தெரியாமல் காலை விடாதே..!! புதுசு: கேமரா இல்லாமல் போனை வாங்காதே..😃" பழசு: தேனெடுத்தவன் புறங்கையை நக்காமல் இருக்க மாட்டான்..!! புதுசு: போன எடுத்தவன், பொழுதுக்கும் நோண்டாமல் இருக்க மாட்டான்..😃" பழசு: பேராசை பெருநஷ்டம்..!! புதுசு: பாஸ்வேர்ட் மறந்தா பெருங்கஷ்டம்.. கொஞ்சம் சிரிங்க பா.... Voir la traduction......!
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
James Vasanthan · பெண்கள் க்ரிக்கெட் என்றால் நமக்கு (ஆண்களுக்கு) கொஞ்சம் இளக்காரம்தான். அது மந்தமாக இருக்கும் என்கிற பொதுவான கருத்து. இதை எப்படிச் சொல்கிறீர்கள் என்று கேட்டால் அவர்கள் விளையாடுகிற திடல்களில் இருக்கிற சொற்பமான கூட்டத்தைப் பார்த்துதான். அது ஒருபுறம் இருக்கட்டும். நேற்று இரவு நடந்த Women's World Cup Semifinals போட்டியை மட்டும் ஒரே ஒருமுறை பார்த்துவிடுங்கள். India-Australia போட்டி. பெண்கள் க்ரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகள் இதுவரை நடந்தவை 12. ஆஸ்ட்ரேலியா வென்றது 7 முறை. தற்போதைய champion அவர்கள்தான். முரட்டுத்தனமான அணி. அந்நாட்டு ஆண்கள் அணி போலவே மேட்டிமை மனப்பான்மையும், செருக்கும் இயல்பாகவே கொண்டவர்கள். அவர்கள் உடல்மொழியே சொல்லும் "எங்களை மிஞ்ச ஆட்கள் இல்லை" என்று. நேற்று அதை விளையாட்டிலும் நிரூபித்தார்கள். இந்திய பந்துவீச்சாளர்களை திடலின் எல்லா திசைகளிலும் ஓடவிட்டுத் தெறிக்கவிட்டு 338 ரன்கள் குவித்தார்கள். பலரைப்போலவே நானும் இது முடிந்த கதை என்றுதான் நினைத்து Paris Masters Tennis பார்க்கப் போய்விட்டேன். நிச்சயம் நம் அணி மகளிரும் கொஞ்சம் ஆடித்தான் போயிருப்பர் உள்மனதில். ஆனால், பெண்களின் மனஉறுதி நேற்று இன்னொரு முறை நிரூபணமானது. தொடக்க ஆட்டக்காரரில் பொதுவாக புயலாக அசத்தும் ஸ்ம்ருதி நேற்று 24-ல் ஆட்டமிழக்க, ஷஃபாலியும் 10-ல் வெளியேற ஹர்ப்ரீத் (தலைவி) வந்து பொறுப்புடன் மிரட்டலாக விளையாடி 84 சேர்க்க, மறுமுனையில் இந்தியாவின் ரட்சகியாக வந்த ஜெமீமா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 127 ரன்கள் குவித்து ஒரு புதிய சாதனையையும் படைத்து, வெற்றியையும் பெற்றுத் தந்திருக்கிறார். Breaking News-ல் இதைப் பார்த்து பின்பு Highlights பார்த்துப் பரவசமடைந்தேன். ஆஸ்ட்ரேலிய batters அடிக்கும்போது இந்தத் திறமையை நாம் எதிர்கொள்ள முடியாது என்று நினைத்திருந்தேன் - நம் வீராங்கனைகள் ஆடியதைக் காணும் வரை. நம் பிள்ளைகள் ஆடும்போது அவர்கள் முகத்தில் இருந்த வெறியும் வைராக்கியமும் ஒரு புது எழுச்சியை நம் உணர்வுகளில் கொண்டுவந்ததை உணரமுடிந்தது. இறுதி ஷாட்டில் வெற்றியைப் பெற்றவுடன் ஜெமிமா ஓடிவந்து எதிர்முனையில் தனக்கு ஆதரவாக விளையாடிய கவுரை தூக்கிக் கொண்டாடி, பின் தரையில் முகங்குப்புற முழங்காலிட்டு குலுங்கி அழுது தன் உணர்வுகளைக் கொட்டியது நம்மை கண்கலங்க வைத்துவிட்டது. இதற்கு மேல் நான் சொல்லமாட்டேன். நேரத்தை செலவழித்து எப்படி அந்த இமாலய 338-ஐ எளிதாகக் கடந்து இந்த சாதனை வெற்றியை இவர்கள் ஈட்டினர் என்பதை நீங்கள் பார்த்தேயாக வேண்டும். இதன் தாக்கம் இன்னும் பலநாட்கள் நம்மை உத்வேகப்படுத்தும்.......! Voir la traduction
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
சுலபமாய் செய்யக்கூடிய சுவையான பிரியாணி ........! 🙂
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
வஞ்சிசிட்டு நெஞ்சை தொட்டு ......... ஜெய்சங்கர் & பிரமீளா ........! 😍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .......! பாடகர் : சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : ஜேக்ஸ் பிஜாய் ஆண் : அம்மா என் அம்மா நான் போகின்ற திசை எங்கும் நீ அம்மா ஓ அம்மா என் அம்மா என் இசை தேடும் சுரம் யாவும் நீ அம்மா ஆயிரம் ஆனாலும் அன்னை போல் நேரிலே பேசிட கூடுமோ தெய்வம் இங்கே ஆண் : ஒரு முறை என்னை பார் அம்மா கடவுளின் கண்கள் நீ அம்மா காவலில் உன் போல் ஏதம்மா உன் போல் அம்மா யார் அம்மா ஆண் : விரல்களை பிடித்திடும் போது கிடைக்கிதே பிரபஞ்சமே தாயே உன் மடியில் இருந்தால் போதும் அம்மா ஆண் : ஒரு முறை என்ன பார் அம்மா தாயே தாய்மையின் உச்சம் நீ அம்மா தாயே உன் தாலாட்டுக்கு இணையான இசை ஏதம்மா ஆண் : செல்லமாய் பேரிட்டே நீ எனை கூப்பிட ஊட்டிடும் சோற்றிலும் பாசத்தை ஊட்டிட காட்டிடும் தீபத்தில் ஆயுளை கூட்டிட எனக்காய் துடிக்கும் இதயம் நீ அம்மா நீ இல்லாமல் நானும் தீவாகின்றேனே நீர் இல்லாமல் சாகும் மீனாகின்றேனே நீ வந்தாலே போதும் வாழ்வாதாரமே உனை தாண்டி உலகம் ஏதிங்கே ஆண் : நினைவுகள் இருப்பதுனாலே இருக்கிறேன் உயிருடன் தாயே உன் நினைவில் வாழ்ந்தால் போதும்.. ஆண் : {விரல்களை பிடித்திடும் போது கிடைக்கிதே பிரபஞ்சமே} (3) தாயே உன் மடியில் இருந்தால் போதும் அம்மா ஆண் : ஒரு முறை என்ன பார் அம்மா தாயே தாய்மையின் உச்சம் நீ அம்மா தாயே உன் தாலாட்டுக்கு இணையான இசை ஏதம்மா.........! --- ஒருமுறை என்னை பாரம்மா ---
-
சிரிக்க மட்டும் வாங்க
- குட்டிக் கதைகள்.
Paranji Sankar · ஒரு குட்டிப் பையன் ஒரு நாள் அப்பாவோடு தோட்டத்தை சுற்றிப் பார்க்கக் கிளம்பினான். சிறிது நேர விளையாட்டுக்குப் பின்தான் அவன் ஒரு விஷயத்தை கவனித்தான். அங்கிருந்த மாடுகள் கவணையில் , ஒரு நீளமில்லாத கயிற்றைக் கொண்டு கட்டப் பட்டிருந்தன . அவை உள்ளே கொட்டப்பட்டிருந்த புற்களை சிரமப்பட்டு உண்ணுவதாய் அவனுக்குத் தோன்றியது . ” ஏன் , இந்த மாதிரி நெருக்கமா மாட்டைக் கட்டி வச்சிருக்கீங்களே , அதுங்க பாவம் இல்லையா ? உங்க தோட்டத்துலதான் இவ்வளோ புல் இருக்குதே . இங்கேயே ஒரு பெரிய கயிறா எடுத்து ஒரு மரத்துல கட்டி வைக்கக் கூடாதா ? அதுங்க கொஞ்சம் Freeயா சாப்பிடுமே ” என்றான். அவர் சிரித்தபடி ,” தம்பிக்காக ஒரு மாட்டை அப்படியே கட்டி வைக்கிறேன் . கொஞ்ச நேரம் என்னாகுதுன்னு தான் பாப்பமே ” என்று சொல்லியபடி ஒரு மாட்டை மட்டும் அவிழ்த்துக் கொல்லையில் இருந்த மரத்தில் , ஒரு நீளமான கயிற்றில் கட்டி வைத்தார் . வந்தவுடனேயே சிறுவன் கொல்லைக்குத்தான் ஓடினான். அங்கே மாடு இருந்த கோலம் அவனை அதிர வைத்து விட்டது. மாடு புல்மேயும் சுவாரஸ்யத்தில் கயிற்றுடன் மரத்தையே சுற்றிச்சுற்றி வந்து கயிறு முழுவதும் மரத்தில் சுற்றிக் கொண்டுவிட்டது . இப்போது அடுத்த அடி கூட எடுத்து வைக்க முடியாமல் , மூச்சுத்திணறியபடி தவித்துக் கொண்டிருந்தது. தோட்டக்காரர் சொன்னார் , ” கயிறு ரொம்ப நீளமா இருந்தா இதுங்க இப்படித்தான் கண்ணு பண்ணும் . சில நேரத்துல உயிருக்கே கூட ஆபத்தாயிடும் ” சொல்லிக் கொண்டே மாட்டை அவிழ்த்துக் கொட்டிலில் கட்டினார். சின்னக் கயிற்றில் கட்டப்பட்டு இருப்பது சிறையல்ல , பாதுகாப்பு என்பது தாம்ஸனுக்குப் புரிந்தது . சில நேரங்களில் அதிகபட்சமான சுதந்திரம் ஆபத்தில் முடிவதுண்டு. சில நியதிகளும் , கட்டுப்பாடுகளும் நம்மைக் காத்துக் கொள்ளவே ஏற்படுத்தப் பட்டவை . Voir la traduction- இரசித்த.... புகைப்படங்கள்.
- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
- சிரிக்கலாம் வாங்க
- நமீபியாவில், பாலைவனச் சிங்கங்கள் கடற்கரையில் காத்திருப்பது ஏன்?
மனிதஇனம் மிகவும் மோசமானது . ........ இவர்களால் சிங்கங்கள் கூட அகதிகளாய் அலைகின்றன ........! 😇- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
Kohli-ன் வார்த்தை தந்த திருப்புமுனை; Cricket உலகையே திரும்பி பார்க்க வைத்த Jemimah Rodrigues........!- கடலில் தொலைந்த அலைச்சறுக்கு பலகை: 2,400 கிலோ மீட்டர் தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?
2400 கி . மீ . பயணித்து இருக்கிறது ........ கடலும் கடல் நீரோடடமும் எவ்வளவு சக்தி வாய்ந்தது ...........! 🙂- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- இரசித்த.... புகைப்படங்கள்.
- கொஞ்சம் ரசிக்க
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கண் போன போக்கிலே ........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! தமிழ் பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : { மெழுகுவர்த்தி எரிகின்றது எதிர் காலம் தெரிகின்றது } (2) ஆண் : { புதிய பாதை வருகின்றது புகழாரம் தருகின்றது } (2) ஆண் : புது மேகம் எழுகின்றது பூந்தோகை அசைகின்றது ஆண் : { அன்பு என்னும் கோயில் தன்னிலே ஆசை என்னும் தீபம் தன்னிலே } (2) ஆண் : உள்ளம் ஒன்று பறந்து வந்தது { உறவு கொள்ள பிறந்து வந்தது } (2) ஆண் : { தாய்மை என்னும் கோயில் தன்னிலே பாசம் என்னும் தீபம் தன்னிலே } (2) ஆண் : தர்மம் ஒன்று மயங்குகின்றது { தன்னை எண்ணி கலங்குகின்றது } (2) ஆண் : புதிய பாதை வருகின்றது புகழாரம் தருகின்றது ஆண் : புது மேகம் எழுகின்றது பூந்தோகை அசைகின்றது ........! --- மெழுகுவர்த்தி எரிகின்றது ---- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
சிந்திக்க வைக்கும் சிறுகதைகள் · Ranjini Kanna ·oeSosndtpr5t2o:09ict1c88gfbaml5gc529m1 911fi ta8251ag,rchoet · ஒரு நாள் பயணம்... கணவர் தூங்கிக் கொண்டிருந்தார். மகன்களை மட்டும் எழுப்பினார் பெர்த்தா. மூவருமாகச் சேர்ந்து, ஓசை எழுப்பாமல் ஷெட்டிலிருந்து காரைத் தள்ளிக் கொண்டு வந்தனர். பின்னர் தனது அன்னை வீட்டை நோக்கி வண்டியைச் செலுத்தினார் பெர்த்தா. கணவருடன் சண்டை போட்டு அம்மா வீட்டுக்குப் போகும் சாதாரணப் பயணம் அல்ல அது. பிறகு? ஜெர்மெனியில் வளமான குடும்பத்தில் பிறந்தார் பெர்த்தா. கார்ல் பென்ஸைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். கார்ல் பென்ஸ் திறமையான பொறியியலாளர். குதிரைகள் இல்லாமல், எந்திரத்தால் இயங்கும் வாகனத்தை உருவாக்கினார். அதுதான் காப்புரிமை பெறப்பட்ட முதல் பென்ஸ் மோட்டார் கார். ஆனால் அந்த பென்ஸ் மோட்டார் காரை மக்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. குதிரை வண்டிகள்தான் வசதியானவை என மக்கள் நம்பிக்கொண்டிருந்த காலம் அது. மோட்டார் கார் குறித்து பகடிகளும் எதிர்மறை விமர்சனங்களும் பரவலாக எழுந்தன. கார்ல் பென்ஸால் இந்த விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நிறையப் பணத்தை முதலீடு செய்து, பெரிய கனவுகளுடன் உருவாக்கிய மோட்டார் கார் தோல்வி அடைந்ததாக எண்ணிக் கலங்கிப் போனார். ஆனால் பெர்த்தா அதைத் தோல்வியாகக் கருதவில்லை. பிரச்சனை மோட்டர் காரில் இல்லை, மார்க்கெட்டிங்கில்தான் இருக்கிறது. முறையாக மக்களிடம் அறிமுகப்படுத்தினால், வெற்றிபெறக் கூடிய வாகனம்தான் என்று உறுதியாக நம்பினார். நம்பிக்கையை வெறும் வாய்வார்த்தையாகச் சொல்லாமல் செயலில் காட்ட முடிவெடுத்தார். காரை எடுத்துச் செல்கிறேன் என்று ஒரு குறிப்பு எழுதி வைத்தார். மூன்று சக்கரங்களைக் கொண்டு ரிக்ஷா வடிவிலிருந்த காரைத் தானே கிளப்பினார். தனது இரு மகன்களையும் ஏற்றிக் கொண்டார். சுமார் நூறு கிலோமீட்டருக்கு அப்பாலிருக்கும் பெற்றோர் வீட்டை நோக்கி ஓட்டத் தொடங்கினார். முறையான சாலைகள் அப்போது இல்லை. திசைகளைச் சுட்டும் பதாகைகளும் இல்லை. முழுப் பயணத்துக்கும் தேவையான எரிபொருளை சேமித்து வைக்கும் வசதி அந்தக் காரில் இல்லை. அத்தனை தூரம் அதற்கு முன்னர் யாரும் ஓட்டியதும் இல்லை. எல்லா இல்லைகளையும் துணிச்சலை மட்டுமே கொண்டு இட்டு நிரப்பினார் பெர்த்தா. வழியில் மருந்துக் கடையில் நிறுத்தி, அங்கிருந்த மொத்த லிகோரினையும் வாங்கிக் கொண்டார். பெட்ரோலியக் கரைப்பானான லிகோரின்தான் காரின் எரிபொருள். அந்த மருந்துக் கடைதான் உலகின் முதல் பெட்ரோல் ஸ்டேஷன். (அந்தக் கட்டடம் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இன்றளவும் இருக்கிறது) காருடைய சிறிய இன்ஜின் அடிக்கடி சூடானது. அதைத் தணிக்க வழியில் கண்ட ஆறுகள், நீரோடைகளில் காரை நிறுத்தி, இன்ஜின்மேல் தண்ணீர் ஊற்றினார். மேடுகளில் மூவருமாக இறங்கி வண்டியைத் தள்ளினர். அப்படியும் கார் பாதி வழியில் நின்று போனது. பெர்த்தா பதட்டப்படவில்லை. என்ன கோளாறு என்று ஆராய்ந்தார். எரிபொருள் செல்லும் குழாயில் தூசி அடைத்துக்கொண்டிருந்தது. தொப்பியில் சொருகியிருந்த ஊசியை வைத்து அடைப்பை நீக்கினார். இக்னிஷன் ஒயர் சூடானபோது, தான் அணிந்திருந்த பெல்ட்டினைக் கழற்றி ஒயரில் சுற்றி விட்டார். கோளாறுகள் இத்தோடு நிற்கவில்லை. சிறிது தூரம் சென்றதும் இணைப்புச் சங்கிலி அறுந்து விழுந்தது. சிறுவர்கள் இருவரும் கொல்லரைத் தேடி அழைத்து வந்தனர். இரும்பைப் பற்றவைத்து இணைத்தபின் பயணம் தொடர்ந்தது. அடுத்ததாக மரத்தால் செய்யப்பட்ட பிரேக் கட்டைகள் உடைந்து போயின. செருப்புத் தைப்பவரை அழைத்து பிரேக் கட்டைகளில் லெதர் வைத்துத் தைக்கச் சொன்னார். நூற்று ஆறு கிலோமீட்டர் தொலைவைக் கடந்து அன்று மாலை அன்னை வீட்டை அடைந்தார் பெர்த்தா. தனது பயணம் வெற்றிகரமாக நிறைவடந்ததைக் கணவருக்கு தந்தியடித்துச் சொன்னார். மெக்கானிக்குகளை உடன் வைத்துக்கொண்டு சிறிது தூரம் ஓட்டிச் சென்று மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வருவதுதான் அப்போது வழக்கமாக இருந்தது. பெர்த்தாவின் நெடுந்தூரப் பயணம், மக்களிடத்தில் ஓர் ஆர்வத்தையும், இந்தக் காரைப் போக்குவரத்துக்குப் பயன்படுத்திப் பார்க்கலாம் என்னும் எண்ணத்தையும், பென்ஸ் கார் குறித்த பரவலான அறிமுகத்தையும் ஏற்படுத்தியது. தானே ‘டெஸ்ட் டிரைவ்’ செய்திருந்ததால், அந்த அனுபவத்திலிருந்து பல பயனுள்ள குறிப்புகளைச் சொன்னார். மேடுகளில் ஏறுவதற்கு எனத் தனி கியர், பிரேக் கட்டைகளில் லெதர் லைனிங் என அவர் முன்வைத்த யோசனைகள் இன்றுவரை கார்களில் பொருத்தப்படும் அடிப்படை விஷயங்களாக இருக்கின்றன. பெர்த்தா குறிப்பிட்ட வசதிகளைச் சேர்த்தார் கார்ல். புதுப் பொலிவுடன் மேம்படுத்தப்பட்ட வடிவமைப்புடன் பென்ஸ் கார் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னாளில் மெர்சிடீஸ்-பென்ஸ் நிறுவனம் அடைந்த பெருவெற்றிக்கும், மோட்டார் கார்களின் பரவலான ஏற்புக்கும், பெர்த்தா துணிச்சலுடன் மேற்கொண்ட அந்த ஒரு நாள் பயணமே அஸ்திவாரமாக அமைந்தது. இன்று நாம் செல்லும் நீண்ட சாலைப் பயணங்களுக்குப் பாதை அமைத்துக் கொடுத்த முன்னோடியாக அறியப்படுகிறார் பெர்த்தா பெனஸ். Voir la traduction- குட்டிக் கதைகள்.
Natesan Natesan · ஒரு பெரிய மனிதன். இந்த உலகத்தில் மிகவும் வசதியாக வாழ்ந்தான். ஒரு நாள் அவன் உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு சொர்க்கத்துக்குப் போனான். அங்கே போன பிறகுதான் தெரிந்தது… சொர்க்கத்தின் வாசல் கதவு மூடி இருந்தது. மூடிய கதவின் முன்னால் போய் நின்றான். ‘‘இங்கே யாருமே இல்லையா?’’ என்று உரக்கக் கத்தினான். பதில் இல்லை. ‘‘நான் ஒரு பெரிய மனிதன் வந்திருக்கிறேன். கதவைத் திறந்து விடு!’’ சற்று நேரத்தில் சித்ரகுப்தன் அங்கே வந்தான். உடனே இந்தப் பெரிய மனிதன், தனது சட்டைப்பையிலிருந்து பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவன் கையில் திணித்தான். ‘‘இந்தா… இதை வெச்சுக்கோ… சீக்கிரம் கதவைத் திற… நான் உள்ளே போகணும்!’’ சித்ரகுப்தன் சிரித்தான். ‘‘இதெல்லாம் உங்கள் பூலோக நடைமுறை கள்–& லஞ்சம் கொடுக்கறது, கதவைத் திறக்கச் சொல்றது… அதெல்லாம் இங்கே ஒண்ணும் எடுபடாது!’’ ‘‘அப்படின்னா நான் எப்படி உள்ளே வர்றது?’’ ‘‘சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனு மதிச் சீட்டு கொண்டு வந்திருக்கியா?’’ ‘‘அனுமதிச் சீட்டா? அது எங்கே கிடைக்கும், சொல். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. வாங்கிக்கலாம்.’’ ‘‘அதைக் காசு கொடுத்து வாங்க முடியாது!’’ ‘‘வேறே எப்படி வாங்கறது?’’ ‘‘அடுத்தவர்களுக்கு ஏதாவது உதவி செஞ்சாத்தான் அது கிடைக்கும்.’’ ‘‘என்ன சொல்றே நீ?’’ ‘‘பூலோகத்துலே நீ செய்யுற புண்ணிய காரியங்கள்தான் சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனுமதிச் சீட்டு!’’ ‘‘இப்ப நான் உள்ளே வர என்ன வழி?’’ ‘‘பூலோகத்துலே நீ யாருக்காவது… ஏதாவது உதவி செஞ்சிருக்கியா?’’ பெரிய மனிதன் ரொம்ப நேரம் யோசித்தான். பிறகு சொன்னான்: ‘‘ஒரு முறை ஒரு கிழவிக்கு 10 காசு தானம் கொடுத்திருக்கேன்…. அப்புறம் இன்னொரு நாள் ஓர் அநாதைப் பையனுக்கு ஐந்து காசு கொடுத்திருக்கேன்.’’ ‘‘கொஞ்சம் பொறு!’’ என்று சொல்லிவிட்டு சித்ரகுப்தன் உள்ளே போனான். கொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்தான். ‘‘உள்ளே போய் சொர்க்கத்தின் தலைவர்கிட்டே உனது கதையைச் சொன்னேன். அவர் உடனே உத்தரவு போட்டுட்டார்!’’ ‘‘என்ன உத்தரவு?’’ ‘‘அந்தப் பதினஞ்சு காசை உன்கிட்டே திருப்பிக் கொடுத்துடச் சொன்னார்!’’ ‘‘அப்புறம்?’’ ‘‘உன்னை நரகத்துக்கே அனுப்பி வெச்சுடச் சொன்னார்!’’ பெரிய மனிதன் மயங்கி விழுந்தான். ஆன்மிக உலகில் பயணம் செய்கிறவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பாடம்: காசு கொடுத்து சொர்க்கத்தை வாங்க முடியாது; ஆனால், கருணையைக் கொடுத்து அதைச் சுலபமாக வாங்க முடியும்! நன்றி : ஐயா தென்கச்சி கோ.சுவாமிநாதன் ........! Voir la traduction- சிரிக்க மட்டும் வாங்க
Dharshini KM vous invite à rejoindre ce groupe. 🎵🎼🎸💃🩵பாடும் வானம்பாடிகள்🩵💃🎸🎼 · சஷ்டி நேத்தே முடிஞ்சுதே மா, இன்னைக்கு எதுக்கு கேசரி பண்ணிருக்க..? ~ தீவாளிக்கு செஞ்ச ரவாலட்டு மீதி இருந்துச்சு, அத சூடாக்கி உலர போட்டு கிண்டி கேசரி பண்ணிட்டேன்... Voir la traduction- சிரிக்கவும் சிந்திக்கவும் .
Vijayakumaran Panchadcharaiyer · “படித்ததில் பிடித்தது” 💒"திருமண நிபந்தனைகள் 💍" மும்பையின் முலுண்ட் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பம், திருமணத்திற்கு முன் மாப்பிள்ளை வைத்த அசாதாரணமான நிபந்தனைகள் கேட்டு திகைத்துப் போனது. ஆனால், இவை எதுவும் வரதட்சணை சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் அல்ல - மாறாக, திருமண சம்பிரதாயங்களில் கௌரவம், எளிமை மற்றும் மரியாதை ஆகியவற்றை மீட்டுக் கொண்டு வருவது பற்றியது! நகரம் முழுவதும் இப்போது அதிகம் பேசப்படும் அந்த மாப்பிள்ளையின் நிபந்தனைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: 1️⃣திருமணத்திற்கு முன் 'ப்ரீ-வெட்டிங் ஷூட்' எடுக்கக் கூடாது. 2️⃣" மணமகள் லெஹங்காவுக்கு பதிலாக, சேலை அணிந்து வர வேண்டும். 3️⃣" சத்தமான, ஆபாசமான இசைக்கு பதிலாக, திருமணத்தின்போது மென்மையான இசைக்கருவிகளின் இசை மட்டுமே ஒலிக்க வேண்டும். 4️⃣" மாலை மாற்றும் (வர்மாலா) சடங்கின்போது மணமகன் மற்றும் மணமகள் மட்டுமே மேடையில் இருக்க வேண்டும். 5️⃣"மாலை மாற்றும் சடங்கின்போது மணமகனையோ அல்லது மணமகளையோ தூக்க முயற்சிப்பவர்கள் விழாவிலிருந்து வெளியேறச் சொல்லப்படுவார்கள். 6️⃣" அர்ச்சகர் திருமணச் சடங்குகளைத் தொடங்கியவுடன், யாரும் அவரைத் தடுக்கவோ, குறுக்கிடவோ கூடாது. 7️⃣"புகைப்படக் கலைஞர்/வீடியோகிராஃபர் படங்களுக்காக சடங்குகளில் குறுக்கிடவோ அல்லது நிறுத்தவோ கூடாது - புகைப்படங்கள் அமைதியாக, தூரத்திலிருந்து எடுக்கப்பட வேண்டும். "இது இரு மனங்கள் இணையும் புனிதமான திருமணம், படப்பிடிப்பு அல்ல." 8️⃣" புகைப்படக் கலைஞர்களின் அறிவுறுத்தலின் பேரில் மணமகன் மற்றும் மணமகள் கேமராவுக்கு இயற்கைக்கு மாறாக போஸ் கொடுக்கக் கூடாது. 9️⃣"திருமணச் சடங்கு பகலில் நடைபெற வேண்டும், மற்றும் விடைபெறும் சடங்கு (பிடாய்) மாலைக்குள் முடிவடைய வேண்டும். இது, விருந்தினர்களுக்கு இரவு தாமதமான உணவால் (இது பெரும்பாலும் தூக்கமின்மை, அமிலத்தன்மை அல்லது அஜீரணத்தை ஏற்படுத்தும்) சிரமம் ஏற்படாமலும், அவர்கள் சரியான நேரத்தில் சௌகரியமாக வீடு திரும்பவும் உதவுகிறது. 🔟" புதிதாகத் திருமணமானவர்களைப் பொதுவெளியில் கட்டிப்பிடிக்கவோ அல்லது முத்தமிடவோ சொல்லிக் கேட்பவர் யாராக இருந்தாலும், அவர் உடனடியாக அந்த இடத்திலிருந்து வெளியேற்றப்படுவார். மணமகளின் குடும்பம் இந்த நிபந்தனைகள் அனைத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது! 👍" படித்ததில் பிடித்தது👍" Voir la traductionImportant Information
By using this site, you agree to our Terms of Use.
- குட்டிக் கதைகள்.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.