Everything posted by suvy
-
இரசித்த.... புகைப்படங்கள்.
முத்தமிடும் ஒலிவ் மரங்கள் ...........! 😍
-
களைத்த மனசு களிப்புற ......!
கிரிக்கட்டில் நம்பமுடியாத சம்பவங்கள் .......! 😂
-
குட்டிக் கதைகள்.
Baskar Jayraman Mookkammal est à Bhavani Homeo Pharmacy. · ஒரு முறை கலாம் ஐயா பெண்கள் பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டார்.. விழா முடிந்ததும் வழக்கம் போல மாணவிகளோடு ஒரு கலந்துரையாடல் நடக்கிறது.. அப்போது ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டிருந்த சமயம்.. "ஐஸ்வர்யா ராய் ஏன் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப் பட்டார்.?" இந்த கேள்வியை மாணவிகளிடையே வைக்கிறார்.. ஒரு மாணவி "அங்கு வந்திருந்தவர்களில் அவர்தான் அழகாக இருந்தார்" என்கிறாள்.. அவருக்கு பதிலில் திருப்தி இல்லை.. அடுத்த மாணவி "அங்கே கேட்கப்பட்ட கேள்விக்கு அறிவுப் பூர்வமாக சிறப்பான ஒரு பதிலை சொன்னார்".. அதிலும் அவருக்கு சம்மதமில்லை.. இப்படியே போய்க் கொண்டு இருக்க, அரங்கமே புரிபடாத ஒரு அமைதியில் இருக்கிறது.. ஆசிரியர் உட்பட அத்தனை பேருக்கும் குழப்பமான குழப்பம்.. அந்த சிறுமி எழுகிறாள் "ஏனென்றால் அந்த அழகிப் போட்டியில் நான் கலந்து கொள்ளவில்லை, அதனால்தான்".. என்கிறாள்.. அரங்கமே சிரிப்பால் அதிர்கிறது..😊" ஆனால் அங்கே ஒரே ஒரு கைதட்டல் ஓசை மட்டும் தனியாக கேட்கிறது..👏🏻" அது கலாம் ஐயாவின் கைத்தட்டல். ஐயா அவர்கள் கூறினார்: " குட்..! இதுதான் உண்மையான பதில்..💓" அடுத்தவர்கள் யார் நம் அழகை நிர்ணயம் செய்வதற்கு..👍🏻" அதற்கு முன் நம்மை நாமே அழகு என்று தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டுமல்லவா.? கனிவான அன்பும் தளராத நம்பிக்கையும் உயர்வான எண்ணமும் கொண்ட நாம் எல்லாருமே அழகுதானே?... அந்த நம்பிக்கை தானே அழகு!" அரங்கில் கரவொலி அடங்க வெகுநேரமாகிறது.💓" படித்ததில் ரசித்தது... Voir la traduction
-
இனித்திடும் இனிய தமிழே....!
Chandran Veerasamy · 1968 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற உலகத்தமிழ்மாநாட்டு கருத்தரங்கு ஒன்றில் எம்.ஜி.ஆர். பேசினார். கவிதையைப் பற்றிய நயமான விளக்கம் அளித்தார். ‘அழகும் உள்ளத்து உணர்ச்சியும் சேர்ந்ததுதான் கவிதை ’ என்று கூறினார். கூடியிருந்த மக்கள் கரகோஷம் எழுப்பினர். பின்னர், அண்ணா பேச வந்தார். எம்.ஜி.ஆருக்கே குருவாயிற்றே? கேட்க வேண்டுமா? கவிதை பற்றி அவர் கூறும்போது, ‘அறிந்ததனை அறிந்தோர்க்கு அறிவிக்கும் போதினிலே அறிந்ததுதான் என்றாலும் எத்துணை அழகம்மா? என்று அறிந்தோரையும் வியக்க வைக்கும் அருங்கலையே கவிதையாகும்’ ... என்று கவிதையாலேயே கவிதைக்கு விளக்கம் அளித்தார் அறிஞர் அண்ணா. மக்களின் கரகோஷம் அடங்க வெகுநேர மாயிற்று. தொடர்ந்து அண்ணா பேசும்போது, ‘அழகும் உள்ளத்து உணர்ச்சியும் சேர்ந்ததுதான் கவிதை என்று எம்.ஜி.ஆர். கூறினார். நீங்கள் கைதட்டினீர்கள். எதற்கு என்று யோசித்தேன். பிறகுதான் தெரிந்தது. அவர் தன்னைப் பற்றியே சொல்லியிருக்கிறார். ஆம். அழகும் உணர்ச்சியும் சேர்ந்த எம்.ஜி.ஆரே ஒரு கவிதைதானே...’ என்றார் அண்ணா. மக்களின் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது. இதயக்கனியின் ஈர்ப்பு ரகசியம் அறிந்தவர் அண்ணா ! - தி இந்து . Voir la traduction
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Chandran Veerasamy · விருதுநகர் தெப்பக்குளம்; குளத் தைச் சுற்றிலும் கடைவீதிகள். அந்த வீதி களின் ஒன்றுக்குள்ளே பிரிந்து செல்லும் சுலோசன நாடார் வீதி என்னும் அந்தச் சின்னஞ்சிறு சந்துக்குள்ளேதான், தமிழ் நாட்டின் தவப்புதல்வர் காமராஜ் அவர் களை ஈன்றெடுத்த அன்னை சிவகாமி அம்மாள் வாழ்ந்து வருகிறார். மிகச் சாதாரணமான எளிய இல்லம். அங்குள்ள கயிற்றுக் கட்டிலில் அந்த அம் மையார் படுத்திருந்தார். சின்ன இடம். நாலு பக்கத்துச் சுவர்களிலும் பழம் பெரும் தேச பக்தர்களின் படங்கள். அவற் றுக்கிடையே வேல் முருகன் படம். அதற்குப் பக்கத்தில் சத்தியமூர்த்தியின் உருவம்! கட்டிலில் படுத்திருந்த மூதாட்டியார் எங்களைக் கண்டதும் எழுந்து உட் கார்ந்தார். மூச்சுத் திணறியது. ''வாங்கய்யா'' என்று அன்புடன் அழைத்தபடியே எழுந்து போய் மின்சார விளக்கின் 'ஸ்விச்'சைப் போட்டார். ''தங்கள் திருமகனைப் பற்றித் தாங்கள் ஏதாவது சொல்லவேண்டும்...'' ''நான் என்ன சொல்லப் போகிறேன் ஐயா! எனக்கு வயதாகிவிட்டது. அத்து டன் ரத்தக் கொதிப்பு வேறு. பேசினால் மூச்சுத் திணறுகிறது. ரெண்டு வருசம் உப்பைத் தள்ளிப் பத்தியச் சாப்பாடு சாப்பிட்டேன். இப்போது கொஞ்சம் பரவாயில்லை. சாப்பாட்டில் உப்பு சேர்ந்துக்கொள்கிறேன்.'' ''சென்னைக்குப் போய் மகனோடு இருப்பதில்லையா?'' என்று கேட்டபோது அம்மூதாட்டியார் முறுவலித்தார். ''நல்லாச் சொன்னீங்கய்யா... அவன் மந்திரியாகி ஏழெட்டு வருசம் ஆகுது. இதுவரைக்கும் நான் அங்கே அஞ்சு தடவைதான் போயிருப்பேன். போன உடனே என்னை ஊருக்குத் திருப்பிப் பயணம் பண்ணி அனுப்புவதிலேயே குறியாயிருப்பான்! 'பட்டணம் பாக்க ணும்னா சுத்திப் பாரு. திருப்பதிக்குப் போகணும்னா போயிட்டு வா. எல்லாத் தையும் பார்த்துட்டு உடனே விருதுநகர் போய்ச் சேரு'ம்பான்..!'' ''மாசச் செலவுக்கு உங்களுக்குப் பணம் அனுப்புகிறாரா?'' ''அனுப்பறான். பொடிக்கடை தனக் கோடி நாடார் மூலமாத்தான் பணம் வரும்...'' ''எவ்வளவு பணம் அனுப்பறாரு?'' ''120 ரூபாய். பத்துமாய்யா? தண்ணி வரியே பதிமூணு ரூவா கட்டறேன். மாசம் அந்த 120 ரூபாதான், அதுக்கு மேலே செலவு செய்யக்கூடாதும்பான். அவங்கவங்க உழைச்சுப் பிழைக்கணும் பான். நானும் பேசாம இருந்துடுவேன். அவன் சொல்றதும் நியாயம்தானேய்யா? ரேசன் வந்துது பாருங்க... அப்ப இங்கே வந்திருந்தான். 'என்னப்பா, இப்படிக் கேப்பையும் கம்பும் போடறாங்களே, இதை எப்படிச் சாப்பிடறது? நெல்லு வாங்கித் தரப்படாதா'ன்னு கேட்டேன். 'நெல்லு பேச்சுப் பேசாதே. ஊருக்கெல்லாம் ஒண்ணு, நமக்கு ஒண்ணானு கேட் டான். அவன் சொல்றதும் நியாயம்தானேய்யா..?'' ''இப்படியரு தவப்புதல்வனைப் பெற்றெடுத்த தாங்கள் நிஜமாகவே பாக்கியசாலிதான்'' என்றதும், அன்னை யின் கண்கள் கலங்கிவிட்டன. ''ஏன் கண் கலங்குகிறீர்கள் அம்மா?'' ''கலங்காம என்ன செய்ய? துறவியாகி விட்ட பட்டினத்தடிகளை அவன் தாய் துறந்துவிட்டதைப்போல், நானும் என் மகனை இந்த நாட்டுக்காகத் துறந்து விட்டு நிற்கிறேனே!'' - விகடன்பொக்கிஷம். Voir la traduction- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மனதில் கொண்ட ஆசைகளை . ........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ..........! பாடகி : எஸ். ஜானகி பாடகர் : கமல் ஹாசன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : கண்மணி அன்போட காதலன் பெண் : நான் ஆண் : நான் பெண் : ஹ்ம்ம் ஆண் : எழுதும் கடிதம் லெட்டர் சீ கடுதாசி இல்ல கடிதமே இருக்கட்டும் படி பெண் : கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே ஆண் : ஹா ஹா ஹா பாட்டாவே படிச்சிட்டியா அப்ப நானும் மொதல்ல கண்மணி சொன்னன்ல இங்க பொன்மணி போட்டுக்க பொன்மணி உன் வீட்டுல சௌக்கியமா நா இங்க சௌக்கியம் பெண் : பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே ஆண் : உன்ன நெனச்சு பாக்கும் போது கவிதை மனசுல அருவி மாறி கொட்டுது ஆனா அத எழுதனுன்னு ஒக்காந்தா அந்த எழுத்துதான் வார்த்தை பெண் : உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது ஆண் : அதான் பெண் : அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது ஆண் : அதே தான் ஆஹா பிரமாதம் கவிதை கவிதை படி ஆண் : ம்ம் எனக்கு உண்டான காயம் அது தன்னால ஆறிடும் அது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல எனக்கு ஒன்னுமே ஆவரது இல்ல இதையும் எழுதிக நடுல நடுல மானே தேனே பொன்மானே இதெல்லாம் போட்டுக்கணும் ஆண் : இதோ பாரு எனக்கு என்ன காயம்னாலும் என் உடம்பு தாங்கிடும் உன் உடம்பு தாங்குமா தாங்காது அபிராமி அபிராமி அபிராமி பெண் : அதையும் எழுதணுமா ஆண் : ஹான் இது காதல் என் காதல் என்னனு சொல்லாம ஏங்க ஏங்க அழுகையா வருது ஆனா நா அழுது என் சோகம் உன்ன தாக்கிடுமோ அப்டினு நினைக்கும் போது வர்ற அழுகை கூட நின்னுடுது மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது பெண் : உண்டான காயமெங்கும் தன்னாலே ஆறிப் போன மாயம் என்ன பொன்மானே பொன்மானே என்ன காயம் ஆன போதும் என் மேனி தாங்கிக் கொள்ளும் உந்தன் மேனி தாங்காது செந்தேனே பெண் : எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது எந்தன் சோகம் உன்னைத் தாக்கும் என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதலல்ல அதையும் தாண்டிப் புனிதமானது ஆண் : அபிராமியே தாலாட்டும் சாமியே நான் தானே தெரியுமா சிவகாமியே சிவனில் நீயும் பாதியே அதுவும் உனக்கு புரியுமா .........! --- கண்மணி அன்போட காதலன் ---- தவிக்கும் தன்னறிவு
- 2026 முதல் நாடு முழுவதும் முன்பள்ளிகளுக்கு ஒரே பாடத்திட்டம்
நல்ல திட்டம் ........இவர்கள் பல விடயங்களிலும் முன்னேற்றகரமான திட்டங்களை அமுல் படுத்துகின்றனர் .........! 👍- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இப்பதான் பார்க்கிறேன் பையா 2013 ம் ஆண்டிலேயே உலகக்கோப்பையை எவ்வளவு அழகாய் செய்துள்ளார்கள் . ...... நீங்கள் ஒரு ரசிகன் ஐயா ........ உங்களின் ரசனையை நானும் ரசிக்கின்றேன் . .....!- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
அழகென்ற சொல்லுக்கு முருகா அன்னையரோடு அருளும் குமரா ...........!- எளிமையாக தமிழ் மூலம் பிரெஞ்சு மொழி கற்றல் .......!
50 பிரெஞ் சொற்றொடர்கள் ..........! 👍- களைத்த மனசு களிப்புற ......!
- குட்டிக் கதைகள்.
தினமும் ஒரு வரி தத்துவம் · ஒரு சமயம் எழுத்தாளர்கள் மாநாட்டில் பேசுவதற்காக கலைவாணர் அழைக்கப்பட்டிருந்தார். அப்பொழுது அவர் மேடையில் பேசும்போது ஒரு கேள்வியை எழுப்பினாராம். எழுத்தாளர்கள் தங்கள் பேனாவை எப்படிப்பட்ட மையைத் தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா? - என்று கலைவாணர் அவர்கள் கேட்டதும் மக்கள் அனைவரும். "பேனா மைதான். கருப்பு மை, நீல மை மற்றும் சிகப்பு மையாகத்தான் இருக்கும்" என்று சொன்னார்களாம். "அப்படி இல்லை" என்று கலைவாணர் அவர்கள் சொன்ன பதில்: "சிலர் பெருமையில் தொட்டு எழுதுகிறார்கள். வேறு சிலர் பொறாமையிலும் தொட்டு எழுதுகிறார்கள். சிலர் தற்பெருமையில் தொட்டு எழுதுகிறார்கள். சிலர் பழமையிலும் தொட்டு எழுதுகிறார்கள். ஆனால் தொடக்கூடாத மைகள், மடமை, கயமை, பொய்மை, வேற்றுமை. நன்மை தரக்கூடிய செம்மை, நேர்மை, புதுமை ஆகியவற்றைத் தொட்டு வாசகர்களின் நெஞ்சைத் தொடும்படியாக எழுத வேண்டும். அவர்கள் நீக்க வேண்டிய மைகள் வறுமை, ஏழ்மை, கல்லாமை, மடமை, அறியாமை." படித்து பகிர்ந்து Voir la traduction ***..வாழ்க்கை தத்துவங்கள் ..*** · Jino Sivaji ·edSoportns7c8b9545g1gu7 58c3um1l2gm31 ,ct579r2e8umu9o51:0t8o · ஆப்பிரிக்காவிலே ஹம்மாஸ் என்ற நீதிபதி இருந்தார். ரொம்ப எளிமையான மனிதர். தான் செய்கின்ற பதவிக்காக அரசாங்கத்திடமிருந்து ஊதியம் கூட வாங்குவதில்லை. சரி அப்படி என்றால் குடும்பச் செலவுக்கு என்ன செய்கிறார்? இரவு நேரங்களில் புத்தகங்கள் எழுதுவார். அதை விற்று அதிலிருந்து வரும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தினார். வீட்டு வேலைக்கும் யாரையும் வைத்துக் கொள்வதில்லை. தினமும் ஆற்றுக்கு போய் குடத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வர வேண்டியது இவருடைய வேலை. மக்கள் எந்த நேரத்தில் வந்தாலும் விசாரித்து தீர்ப்பு வழங்குவார். இரவு என்றாலும் சரி கதவை தட்டினால் தீர்ப்பு வழங்குவார். இதனால் மக்களுக்கு அவர் பெயரில் மிகவும் மரியாதை. அந்த ஊர் முதல் மந்திரி அவருக்கு ஒரு பணமுடிப்பை பரிசாக கொடுக்க முன் வந்தார். இவர் அதை மறுத்து விட்டார். சரி உங்களுக்கு ஒரு உதவியாளரையாவது ஏற்பாடு செய்கிறேன் என்றார். அவர் அதுவும் வேண்டாம் என்றார். சரி ஒரு வேலையாளையாவது அனுப்புகிறேன் என்றார். தேவையில்லை என்றார் இவர். நீங்கள் வெளியே போக வர ஒரு வாகனம் ஏற்பாடு செய்கிறேன். அதுவும் வேண்டாம் என்றார். நீதித்துறையில் நீங்கள் பல பொறுப்புக்களை வகிக்கிறீர்கள். அதனால் இரவு நேரத்தில் நீங்கள் நூல்கள் எழுதுவதற்கு அது தடையாக இருக்கும். அரசாங்க நிதியில் இருந்து சிறு தொகையாவது சம்பளமாக வாங்கிக் கொள்ளுங்கள் என்றார். நான் மக்களுக்கு பணியாற்றுகிறவன். மக்கள் தொண்டுக்கு ஊதியம் எதையும் நான் வாங்க விரும்பவில்லை என்றார். முதலமைச்சர் பார்த்தார் சரி இதுக்கு மேல் இவரை வற்புறுத்தினால் இவர் பதவியில் இருந்து விலகினாலும் விலகி கொள்வார். ஒரு நல்ல நீதிபதியை நாம் இழக்கக்கூடாது என்று நினைத்து அதோடு விட்டு விட்டார். அந்த ஊரில் ஒருத்தர் ஆடு மாடு வைத்திருந்தார். அவைகளை எல்லாம் ஓட்டிக்கொண்டு போய் புல் வெளியிலே மேய விடுவார். இவர் உட்கார்ந்து அதை கவனிப்பதற்கு ஒரு நிழலான இடம் தேவைப்பட்டது. அந்தப் புல்வெளி பக்கத்தில் இருந்த ஒரு நடைபாதை ஓரமாக தன்னுடைய நண்பன் ஒருவனுடைய வீட்டை ஒட்டி ஒரு குடிசை போட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தார். நண்பன் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இது நடைபாதை. இதிலே குடிசை போடக்கூடாது என்றான் நண்பன். இரண்டு பேருக்கும் தகராறு வந்துவிட்டது. சரி இதற்கு மேலே நமக்குள் வம்பு வேண்டாம். பேசாமல் நீதிபதியிடம் போய் முறையிடுவோம் என்று முடிவு செய்தார்கள். இரண்டு பேரும் நீதிபதியை தேடி போனார்கள். நீதிபதி யார் என்று அவர்களுக்கு தெரியாது. நீதிமன்றத்தை நோக்கி அவர்கள் நடந்து போய்க்கொண்டிருந்தார்கள். எதிரில் ஒருவர் தண்ணீர் குடத்தை சுமந்து கொண்டு வந்தார். அவரைப் பார்த்து ஊர் நீதிபதியை பார்க்க வேண்டும். எங்கே இருப்பார்? என்று கேட்டார்கள். நான்தான் நீதிபதி. உங்களுக்குள் என்ன தகராறு? என்று கேட்டார் அவர். ஐயா வணக்கம்! எங்கள் பிரச்சனையைச் சொல்கிறோம். ஆனால் நீங்கள் தண்ணீர் குடத்தை சுமந்து கொண்டிருக்கிறீர்கள். அதை கொஞ்சம் கீழே இறக்கி வையுங்கள். பின்னர் நிதானமாக நாங்கள் சொல்வதை கேளுங்கள் என்றார்கள். அதற்கு நீதிபதி இது மக்கள் நடந்து போகிற நடைபாதை. அதனால் நான் வைத்திருக்கிற குடத்தை இங்கே இறக்கினால் இந்த வழியாக போகும் ஜனங்களுக்கு இடைஞ்சல் ஏற்படும். எனவே நான் அதைச் செய்ய விரும்பவில்லை. நீங்கள் சொல்லுங்கள் என்றார். சரி ஐயா நாங்கள் போயிட்டு வருகிறோம் என்று இரண்டு பேரும் புறப்பட்டார்கள். என்ன இது உங்கள் பிரச்சனை என்னவென்று சொல்லவில்லை. நான் அதற்கு தீர்க்கும் சொல்லவில்லை. அதற்குள் கிளம்பி விட்டீர்களே என்றார் நீதிபதி. நீங்கள் தீர்ப்பு சொல்லி விட்டீர்கள். அதனால்தான் புறப்பட்டு விட்டோம் என்றார்கள் இவர்கள். உண்மை தானே தன் கையிலே இருக்கிற குடத்தை தரையிலே வைக்க விரும்பாத ஒருவர் நடைபாதையில் குடிசை போடுவதை எப்படி சரி என்று ஒத்துக் கொள்வார்? நீதிபதிக்கு நன்றி சொல்லிவிட்டு தன் நண்பனிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டு கிளம்பி விட்டார் அந்த ஆள். Voir la traduction- அதிசயக்குதிரை
Chandran Veerasamy · திருப்பூரில் வாழ்ந்து இளம் வயதில் சுதந்திரப் போரில் உயிர் நீத்த கொடி காத்த குமரனின் வரலாற்றை நாம் படித்திருப்போம். இந்த கொடி காத்த குமரனின் மனைவி ராமாயி மிகவும் வறுமையில் உழல்வதாகத் தகவல் கிடைத்ததும் முதலமைச்சாரா இருந்த எம்ஜி.ஆர் அவரை நேரில் சந்தித்தார். நாட்டுக்காக உழைத்த நல்லவரின் மனைவி பிறரிடம் உதவி பெறுவதை விரும்பமாட்டார் என்பதை நன்குணர்ந்த எம்.ஜி.ஆர் ராமாயியை அவர் வீட்டில் சந்தித்து அம்மா நான் உங்கள் மகன் எம்.ஜி.ராமச்சந்திரன் வந்திருக்கிறேன். என் தாய்க்கு நான் உதவ விரும்புகிறேன் என்றார். ராமாயியின் மனம் நெகிழ்ந்தது. மகன் தரும் உதவியை எந்தத் தாயாவது மறுப்பாரா? ஏற்றுக்கொண்டார். இந்த உறவை ராமாயி அம்மாள் இறுதிவரை பெருமையாக ஏற்றுக்கொண்டார். என் மகன் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்னையில் இருக்கிறார் என்று அந்தத்தாய் அன்போடு குறிப்பிடுவோர். எம்.ஜி.ஆர் அந்த ராமாயி அம்மாவை, ‘அம்மா” என்று அழைத்தது செய்தி அல்ல. ராமாயி அம்மா அவரை தனது மகன் என்று அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் குறிப்பிட்டதுதான் செய்தி. Voir la traduction- இனித்திடும் இனிய தமிழே....!
Bjp Eswaramoorthy Kannan · "அ" வுக்கு அடுத்து "ஆ" வருவதேன்? அரசனும் ஆண்டியாகலாம் என்பதை அறிந்திட!! "இ" வுக்கு அடுத்து "ஈ" வருவதேன்? இருப்பவன் ஈய வேண்டும் என இயம்பிட!! "உ" வுக்கு அடுத்து "ஊ" வருவதேன்? உழைப்பே ஊக்கம் என உணர்த்திட!! "எ" வுக்கு அடுத்து "ஏ" வருவதேன்? எதையும் ஏன் என்று சிந்தித்துப் பார்க்க!! "ஐ" மட்டும் ஏதோடும் சேராமல் தனித்து இருப்பதேன்? அதற்கு நான் ( i ) என்ற அகம்பாவம் அதிகம் உண்டு. "ஒ" வுக்கு அடுத்து "ஓ" வருவதேன்? ஒற்றுமையே ஓங்கும் என்பதை உணர்த்திட!! - படித்ததில் பிடித்தது . Voir la traduction- இரசித்த.... புகைப்படங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! Englishதமிழ் பாடகி : மஹதி பாடகா்கள் : ஹரிஹரன், கே. பிரசன்னா இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ் ஆண் : முதல் மழை என்னை நனைத்ததே முதல் முறை ஜன்னல் திறந்ததே பெயரே தெரியாத பறவை அழைத்ததே மனமும் பறந்ததே இதயமும் ஓ இதமாய் மிதந்ததே முதல் மழை நம்மை நனைத்ததே மூடி வைத்த ஜன்னல் திறந்ததே பெயரே தெரியாத பறவை அழைத்ததே மனமும் பறந்ததே இதயமும்.. ஹம்ம் இதயமாய் மிதந்ததே…யே ஆண் : கனவோடு தானடி நீ தோன்றினாய் கண்களால் உன்னை படம் எடுத்தேன் ஆண் : என் வாசலில் நேற்று உன் வாசனை நீ நின்ற இடம் இன்று உணர்ந்தேன் பெண் : எதுவும் புரியா புது கவிதை அர்த்தம் மொத்தம் இன்று அறிந்தேன் கையை மீறும் ஒரு குடையாய் காற்றோடுதான் நானும் பறந்தேன் மழைக் காற்றோடுதான் நானும் பறந்தேன் ஆண் : முதல் முறை ஜன்னல் திறந்ததே பெண் : லாலாலாலா.. ஆண் : பெயரே தெரியாத பறவை அழைத்ததே மனமும் பறந்ததே இதயமும்.. ஓ… இதமாய் மிதந்ததே பெண் : ஓர்நாள் உன்னை நானும் காணாவிட்டால் என் வாழ்வில் அந்த நாளே இல்லை….ஓ… ஓர்நாள் உன்னை நானும் பார்த்தே விட்டால் அந்நாளின் நீளம் போதவில்லை ஆண் : இரவும் பகலும் ஒரு மயக்கம் நீங்காமலே நெஞ்சில் இருக்கும் உயிரின் உள்ளே உந்தன் நெருக்கம் இறந்தாலுமே என்றும் இருக்கும் நான் இறந்தாலுமே என்றும் இருக்கும்........! --- முதல் மழை என்னை நனைத்ததே ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
காற்றினிலே பெரும் காற்றினிலே ..........அருமையான பாடல் . ........! 🙂- முத்தமிட ஏற்ற இடம் எது? - கலவி மொழி கற்போம்
நீங்கள் இன்னும் ரொம்ப தூரம் போகவேண்டி இருக்கு தனி .........! 😀- தவிக்கும் தன்னறிவு
- சிறுகதை: சாந்தா அக்கா! - வ.ந.கிரிதரன் -
நாங்களும் அக்கா தங்கை அயலவர்களுக்கும் பொடிகார்டாக இருந்திருக்கோம்ல ........! பழைய நினைவுகளைக் கிளறுகின்றது . .......எனக்கென்னமோ சாண்டில்யனின் "கடல்புறா " "யவனராணி " என்றால் மிகவும் பிடிக்கும் . .....அலுக்காமல் வாசிக்கலாம் ..........! 😇- எளிமையாக தமிழ் மூலம் பிரெஞ்சு மொழி கற்றல் .......!
பிரெஞ் பேசிப்பழக குட்டி குட்டி வாக்கியங்கள் ........! ☺️- தவிக்கும் தன்னறிவு
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.