Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்

Everything posted by suvy

  1. கண் போன போக்கிலே ........! 😍
  2. வணக்கம் வாத்தியார் . ........! தமிழ் பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : { மெழுகுவர்த்தி எரிகின்றது எதிர் காலம் தெரிகின்றது } (2) ஆண் : { புதிய பாதை வருகின்றது புகழாரம் தருகின்றது } (2) ஆண் : புது மேகம் எழுகின்றது பூந்தோகை அசைகின்றது ஆண் : { அன்பு என்னும் கோயில் தன்னிலே ஆசை என்னும் தீபம் தன்னிலே } (2) ஆண் : உள்ளம் ஒன்று பறந்து வந்தது { உறவு கொள்ள பிறந்து வந்தது } (2) ஆண் : { தாய்மை என்னும் கோயில் தன்னிலே பாசம் என்னும் தீபம் தன்னிலே } (2) ஆண் : தர்மம் ஒன்று மயங்குகின்றது { தன்னை எண்ணி கலங்குகின்றது } (2) ஆண் : புதிய பாதை வருகின்றது புகழாரம் தருகின்றது ஆண் : புது மேகம் எழுகின்றது பூந்தோகை அசைகின்றது ........! --- மெழுகுவர்த்தி எரிகின்றது ---
  3. சிந்திக்க வைக்கும் சிறுகதைகள் · Ranjini Kanna ·oeSosndtpr5t2o:09ict1c88gfbaml5gc529m1 911fi ta8251ag,rchoet · ஒரு நாள் பயணம்... கணவர் தூங்கிக் கொண்டிருந்தார். மகன்களை மட்டும் எழுப்பினார் பெர்த்தா. மூவருமாகச் சேர்ந்து, ஓசை எழுப்பாமல் ஷெட்டிலிருந்து காரைத் தள்ளிக் கொண்டு வந்தனர். பின்னர் தனது அன்னை வீட்டை நோக்கி வண்டியைச் செலுத்தினார் பெர்த்தா. கணவருடன் சண்டை போட்டு அம்மா வீட்டுக்குப் போகும் சாதாரணப் பயணம் அல்ல அது. பிறகு? ஜெர்மெனியில் வளமான குடும்பத்தில் பிறந்தார் பெர்த்தா. கார்ல் பென்ஸைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். கார்ல் பென்ஸ் திறமையான பொறியியலாளர். குதிரைகள் இல்லாமல், எந்திரத்தால் இயங்கும் வாகனத்தை உருவாக்கினார். அதுதான் காப்புரிமை பெறப்பட்ட முதல் பென்ஸ் மோட்டார் கார். ஆனால் அந்த பென்ஸ் மோட்டார் காரை மக்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. குதிரை வண்டிகள்தான் வசதியானவை என மக்கள் நம்பிக்கொண்டிருந்த காலம் அது. மோட்டார் கார் குறித்து பகடிகளும் எதிர்மறை விமர்சனங்களும் பரவலாக எழுந்தன. கார்ல் பென்ஸால் இந்த விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நிறையப் பணத்தை முதலீடு செய்து, பெரிய கனவுகளுடன் உருவாக்கிய மோட்டார் கார் தோல்வி அடைந்ததாக எண்ணிக் கலங்கிப் போனார். ஆனால் பெர்த்தா அதைத் தோல்வியாகக் கருதவில்லை. பிரச்சனை மோட்டர் காரில் இல்லை, மார்க்கெட்டிங்கில்தான் இருக்கிறது. முறையாக மக்களிடம் அறிமுகப்படுத்தினால், வெற்றிபெறக் கூடிய வாகனம்தான் என்று உறுதியாக நம்பினார். நம்பிக்கையை வெறும் வாய்வார்த்தையாகச் சொல்லாமல் செயலில் காட்ட முடிவெடுத்தார். காரை எடுத்துச் செல்கிறேன் என்று ஒரு குறிப்பு எழுதி வைத்தார். மூன்று சக்கரங்களைக் கொண்டு ரிக்ஷா வடிவிலிருந்த காரைத் தானே கிளப்பினார். தனது இரு மகன்களையும் ஏற்றிக் கொண்டார். சுமார் நூறு கிலோமீட்டருக்கு அப்பாலிருக்கும் பெற்றோர் வீட்டை நோக்கி ஓட்டத் தொடங்கினார். முறையான சாலைகள் அப்போது இல்லை. திசைகளைச் சுட்டும் பதாகைகளும் இல்லை. முழுப் பயணத்துக்கும் தேவையான எரிபொருளை சேமித்து வைக்கும் வசதி அந்தக் காரில் இல்லை. அத்தனை தூரம் அதற்கு முன்னர் யாரும் ஓட்டியதும் இல்லை. எல்லா இல்லைகளையும் துணிச்சலை மட்டுமே கொண்டு இட்டு நிரப்பினார் பெர்த்தா. வழியில் மருந்துக் கடையில் நிறுத்தி, அங்கிருந்த மொத்த லிகோரினையும் வாங்கிக் கொண்டார். பெட்ரோலியக் கரைப்பானான லிகோரின்தான் காரின் எரிபொருள். அந்த மருந்துக் கடைதான் உலகின் முதல் பெட்ரோல் ஸ்டேஷன். (அந்தக் கட்டடம் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இன்றளவும் இருக்கிறது) காருடைய சிறிய இன்ஜின் அடிக்கடி சூடானது. அதைத் தணிக்க வழியில் கண்ட ஆறுகள், நீரோடைகளில் காரை நிறுத்தி, இன்ஜின்மேல் தண்ணீர் ஊற்றினார். மேடுகளில் மூவருமாக இறங்கி வண்டியைத் தள்ளினர். அப்படியும் கார் பாதி வழியில் நின்று போனது. பெர்த்தா பதட்டப்படவில்லை. என்ன கோளாறு என்று ஆராய்ந்தார். எரிபொருள் செல்லும் குழாயில் தூசி அடைத்துக்கொண்டிருந்தது. தொப்பியில் சொருகியிருந்த ஊசியை வைத்து அடைப்பை நீக்கினார். இக்னிஷன் ஒயர் சூடானபோது, தான் அணிந்திருந்த பெல்ட்டினைக் கழற்றி ஒயரில் சுற்றி விட்டார். கோளாறுகள் இத்தோடு நிற்கவில்லை. சிறிது தூரம் சென்றதும் இணைப்புச் சங்கிலி அறுந்து விழுந்தது. சிறுவர்கள் இருவரும் கொல்லரைத் தேடி அழைத்து வந்தனர். இரும்பைப் பற்றவைத்து இணைத்தபின் பயணம் தொடர்ந்தது. அடுத்ததாக மரத்தால் செய்யப்பட்ட பிரேக் கட்டைகள் உடைந்து போயின. செருப்புத் தைப்பவரை அழைத்து பிரேக் கட்டைகளில் லெதர் வைத்துத் தைக்கச் சொன்னார். நூற்று ஆறு கிலோமீட்டர் தொலைவைக் கடந்து அன்று மாலை அன்னை வீட்டை அடைந்தார் பெர்த்தா. தனது பயணம் வெற்றிகரமாக நிறைவடந்ததைக் கணவருக்கு தந்தியடித்துச் சொன்னார். மெக்கானிக்குகளை உடன் வைத்துக்கொண்டு சிறிது தூரம் ஓட்டிச் சென்று மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வருவதுதான் அப்போது வழக்கமாக இருந்தது. பெர்த்தாவின் நெடுந்தூரப் பயணம், மக்களிடத்தில் ஓர் ஆர்வத்தையும், இந்தக் காரைப் போக்குவரத்துக்குப் பயன்படுத்திப் பார்க்கலாம் என்னும் எண்ணத்தையும், பென்ஸ் கார் குறித்த பரவலான அறிமுகத்தையும் ஏற்படுத்தியது. தானே ‘டெஸ்ட் டிரைவ்’ செய்திருந்ததால், அந்த அனுபவத்திலிருந்து பல பயனுள்ள குறிப்புகளைச் சொன்னார். மேடுகளில் ஏறுவதற்கு எனத் தனி கியர், பிரேக் கட்டைகளில் லெதர் லைனிங் என அவர் முன்வைத்த யோசனைகள் இன்றுவரை கார்களில் பொருத்தப்படும் அடிப்படை விஷயங்களாக இருக்கின்றன. பெர்த்தா குறிப்பிட்ட வசதிகளைச் சேர்த்தார் கார்ல். புதுப் பொலிவுடன் மேம்படுத்தப்பட்ட வடிவமைப்புடன் பென்ஸ் கார் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னாளில் மெர்சிடீஸ்-பென்ஸ் நிறுவனம் அடைந்த பெருவெற்றிக்கும், மோட்டார் கார்களின் பரவலான ஏற்புக்கும், பெர்த்தா துணிச்சலுடன் மேற்கொண்ட அந்த ஒரு நாள் பயணமே அஸ்திவாரமாக அமைந்தது. இன்று நாம் செல்லும் நீண்ட சாலைப் பயணங்களுக்குப் பாதை அமைத்துக் கொடுத்த முன்னோடியாக அறியப்படுகிறார் பெர்த்தா பெனஸ். Voir la traduction
  4. Natesan Natesan · ஒரு பெரிய மனிதன். இந்த உலகத்தில் மிகவும் வசதியாக வாழ்ந்தான். ஒரு நாள் அவன் உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு சொர்க்கத்துக்குப் போனான். அங்கே போன பிறகுதான் தெரிந்தது… சொர்க்கத்தின் வாசல் கதவு மூடி இருந்தது. மூடிய கதவின் முன்னால் போய் நின்றான். ‘‘இங்கே யாருமே இல்லையா?’’ என்று உரக்கக் கத்தினான். பதில் இல்லை. ‘‘நான் ஒரு பெரிய மனிதன் வந்திருக்கிறேன். கதவைத் திறந்து விடு!’’ சற்று நேரத்தில் சித்ரகுப்தன் அங்கே வந்தான். உடனே இந்தப் பெரிய மனிதன், தனது சட்டைப்பையிலிருந்து பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவன் கையில் திணித்தான். ‘‘இந்தா… இதை வெச்சுக்கோ… சீக்கிரம் கதவைத் திற… நான் உள்ளே போகணும்!’’ சித்ரகுப்தன் சிரித்தான். ‘‘இதெல்லாம் உங்கள் பூலோக நடைமுறை கள்–& லஞ்சம் கொடுக்கறது, கதவைத் திறக்கச் சொல்றது… அதெல்லாம் இங்கே ஒண்ணும் எடுபடாது!’’ ‘‘அப்படின்னா நான் எப்படி உள்ளே வர்றது?’’ ‘‘சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனு மதிச் சீட்டு கொண்டு வந்திருக்கியா?’’ ‘‘அனுமதிச் சீட்டா? அது எங்கே கிடைக்கும், சொல். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. வாங்கிக்கலாம்.’’ ‘‘அதைக் காசு கொடுத்து வாங்க முடியாது!’’ ‘‘வேறே எப்படி வாங்கறது?’’ ‘‘அடுத்தவர்களுக்கு ஏதாவது உதவி செஞ்சாத்தான் அது கிடைக்கும்.’’ ‘‘என்ன சொல்றே நீ?’’ ‘‘பூலோகத்துலே நீ செய்யுற புண்ணிய காரியங்கள்தான் சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனுமதிச் சீட்டு!’’ ‘‘இப்ப நான் உள்ளே வர என்ன வழி?’’ ‘‘பூலோகத்துலே நீ யாருக்காவது… ஏதாவது உதவி செஞ்சிருக்கியா?’’ பெரிய மனிதன் ரொம்ப நேரம் யோசித்தான். பிறகு சொன்னான்: ‘‘ஒரு முறை ஒரு கிழவிக்கு 10 காசு தானம் கொடுத்திருக்கேன்…. அப்புறம் இன்னொரு நாள் ஓர் அநாதைப் பையனுக்கு ஐந்து காசு கொடுத்திருக்கேன்.’’ ‘‘கொஞ்சம் பொறு!’’ என்று சொல்லிவிட்டு சித்ரகுப்தன் உள்ளே போனான். கொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்தான். ‘‘உள்ளே போய் சொர்க்கத்தின் தலைவர்கிட்டே உனது கதையைச் சொன்னேன். அவர் உடனே உத்தரவு போட்டுட்டார்!’’ ‘‘என்ன உத்தரவு?’’ ‘‘அந்தப் பதினஞ்சு காசை உன்கிட்டே திருப்பிக் கொடுத்துடச் சொன்னார்!’’ ‘‘அப்புறம்?’’ ‘‘உன்னை நரகத்துக்கே அனுப்பி வெச்சுடச் சொன்னார்!’’ பெரிய மனிதன் மயங்கி விழுந்தான். ஆன்மிக உலகில் பயணம் செய்கிறவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பாடம்: காசு கொடுத்து சொர்க்கத்தை வாங்க முடியாது; ஆனால், கருணையைக் கொடுத்து அதைச் சுலபமாக வாங்க முடியும்! நன்றி : ஐயா தென்கச்சி கோ.சுவாமிநாதன் ........! Voir la traduction
  5. Dharshini KM vous invite à rejoindre ce groupe. 🎵🎼🎸💃🩵பாடும் வானம்பாடிகள்🩵💃🎸🎼 · சஷ்டி நேத்தே முடிஞ்சுதே மா, இன்னைக்கு எதுக்கு கேசரி பண்ணிருக்க..? ~ தீவாளிக்கு செஞ்ச ரவாலட்டு மீதி இருந்துச்சு, அத சூடாக்கி உலர போட்டு கிண்டி கேசரி பண்ணிட்டேன்... Voir la traduction
  6. Vijayakumaran Panchadcharaiyer · “படித்ததில் பிடித்தது” 💒"திருமண நிபந்தனைகள் 💍" மும்பையின் முலுண்ட் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பம், திருமணத்திற்கு முன் மாப்பிள்ளை வைத்த அசாதாரணமான நிபந்தனைகள் கேட்டு திகைத்துப் போனது. ஆனால், இவை எதுவும் வரதட்சணை சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் அல்ல - மாறாக, திருமண சம்பிரதாயங்களில் கௌரவம், எளிமை மற்றும் மரியாதை ஆகியவற்றை மீட்டுக் கொண்டு வருவது பற்றியது! நகரம் முழுவதும் இப்போது அதிகம் பேசப்படும் அந்த மாப்பிள்ளையின் நிபந்தனைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: 1️⃣திருமணத்திற்கு முன் 'ப்ரீ-வெட்டிங் ஷூட்' எடுக்கக் கூடாது. 2️⃣" மணமகள் லெஹங்காவுக்கு பதிலாக, சேலை அணிந்து வர வேண்டும். 3️⃣" சத்தமான, ஆபாசமான இசைக்கு பதிலாக, திருமணத்தின்போது மென்மையான இசைக்கருவிகளின் இசை மட்டுமே ஒலிக்க வேண்டும். 4️⃣" மாலை மாற்றும் (வர்மாலா) சடங்கின்போது மணமகன் மற்றும் மணமகள் மட்டுமே மேடையில் இருக்க வேண்டும். 5️⃣"மாலை மாற்றும் சடங்கின்போது மணமகனையோ அல்லது மணமகளையோ தூக்க முயற்சிப்பவர்கள் விழாவிலிருந்து வெளியேறச் சொல்லப்படுவார்கள். 6️⃣" அர்ச்சகர் திருமணச் சடங்குகளைத் தொடங்கியவுடன், யாரும் அவரைத் தடுக்கவோ, குறுக்கிடவோ கூடாது. 7️⃣"புகைப்படக் கலைஞர்/வீடியோகிராஃபர் படங்களுக்காக சடங்குகளில் குறுக்கிடவோ அல்லது நிறுத்தவோ கூடாது - புகைப்படங்கள் அமைதியாக, தூரத்திலிருந்து எடுக்கப்பட வேண்டும். "இது இரு மனங்கள் இணையும் புனிதமான திருமணம், படப்பிடிப்பு அல்ல." 8️⃣" புகைப்படக் கலைஞர்களின் அறிவுறுத்தலின் பேரில் மணமகன் மற்றும் மணமகள் கேமராவுக்கு இயற்கைக்கு மாறாக போஸ் கொடுக்கக் கூடாது. 9️⃣"திருமணச் சடங்கு பகலில் நடைபெற வேண்டும், மற்றும் விடைபெறும் சடங்கு (பிடாய்) மாலைக்குள் முடிவடைய வேண்டும். இது, விருந்தினர்களுக்கு இரவு தாமதமான உணவால் (இது பெரும்பாலும் தூக்கமின்மை, அமிலத்தன்மை அல்லது அஜீரணத்தை ஏற்படுத்தும்) சிரமம் ஏற்படாமலும், அவர்கள் சரியான நேரத்தில் சௌகரியமாக வீடு திரும்பவும் உதவுகிறது. 🔟" புதிதாகத் திருமணமானவர்களைப் பொதுவெளியில் கட்டிப்பிடிக்கவோ அல்லது முத்தமிடவோ சொல்லிக் கேட்பவர் யாராக இருந்தாலும், அவர் உடனடியாக அந்த இடத்திலிருந்து வெளியேற்றப்படுவார். மணமகளின் குடும்பம் இந்த நிபந்தனைகள் அனைத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது! 👍" படித்ததில் பிடித்தது👍" Voir la traduction
  7. Thapes Vlogger est à Oslo, Norvège. · Svalbard 🇳🇴" நோர்வேயின் இந்த தீவில் நீங்கள் பிள்ளை பெற்றுக்கொள்ளவும் முடியாது, மரணமடையவும் முடியாது.. இந்த தீவைப்பற்றிய சில சுவாரிசயமான தகவல்கள் முதலில்.. அமைவிடம்: பூமியின் வட துருவ Arctic சமுத்திரத்தில்.. முக்கிய நகரம்: Longyearbyen மக்கள் தொகை: 2881 (June 2025) Winter காலங்களில் November,December,January இந்த மூன்று மாதங்களும் இங்கு சூரியனை காணமுடியாது.. (இந்த மூன்று மாதங்களும் மக்கள் தொடர்ந்து இருட்டுக்குள் தான் வாழ வேண்டும்) ஒரு நாளின் 24 மணி நேரமும் இருட்டாக இருப்பதால், Northern Lights பார்க்க இது ஒரு சிறந்த பகுதி. அது போல கோடை காலங்களில் 4-5 மாதங்கள் 24 மணி நேரமும் இங்கு சூரிய வெளிச்சம் இருக்கும். மரங்கள் ஏதும் இல்லாத ஒரு தீவு.. இந்த தீவின் மக்கள் தொகையை விட பனிக்கரடிகள் அதிகமாக வாழ்கின்றன இங்கு.. இந்த தீவில் பூணைகளுக்கு அனுமதியில்லை.. இங்கு பெண்கள் யாரும் பிள்ளை பெற்றுக்கொள்ள அனுமதியில்லை. ஆனாலும் சில பிள்ளைகள் இங்கு பிறந்திருக்கின்றன. பிரசவ திகதிக்கு ஒரு மாதத்திற்க்கு முன்பே பெண்கள் இந்த தீவை விட்டு வெளியேறி நோர்வேயின் Mainland பகுதிக்கு வந்துவிட வேண்டும். இந்த தீவில் மட்டுப்படுத்தப்பட்ட மருத்துவ சேவைகளே இருக்கின்றன. அதே போல இந்த தீவில் யாரும் இறந்தாலும், அங்கே அவர்களை புதைப்பதில்லை, காரணம் அந்த பனிமலைகள் காரணமாக உடல்கள் உக்கிவிடுவதில்லை. அப்படி உக்காத ஒரு உடலினால் 1918 களில் ஒரு பெரும் தொற்றே உருவாகியிருக்கிறது. இந்த தீவில் மட்டும் 2100 பனிமலைகள் (Glaciers) இருக்கின்றன இவை 3000-4000 ஆண்டுகள் பழமையானவை. குறிப்பிட்ட மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தை தவிர்த்து வேறு இடங்களுக்கு நீங்கள் செல்ல நேர்ந்தால், கையில் துப்பாக்கியுடன் தான் செல்லவேண்டும், இல்லையெனில் நீங்கள் திரும்பி வரமாட்டீர்கள்😀" (பனிக்கரடி) துப்பாக்கி பாவனைகளுக்கு தனிச்சட்டங்கள் இருக்கிறது இந்த தீவில்.. இந்த தீவு ஒரு Frozen Desert அதாவது பனிப்பாலைவனம். இந்த தீவில் தான் உலகின் உள்ள அணைத்துவகையான தானியங்களும் ஒரு களஞ்சியத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கிறது. உலக நாடுகளில் போர்கள் வந்து(அணுஆயுத) எல்லாம் அழிந்தாலும் இந்த களஞ்சியத்திலிருந்து எல்லாவற்றையும் மீண்டும் உருவாக்கலாம். இப்படி இன்னும் பல சுவாரிசயமான தகவல்கள் இந்த தீவைப்பற்றி இருக்கின்றன.. இது நோர்வேயினுடைய ஒரு தீவு தான், ஆனால் நோர்வேயின் எல்லா சட்டதிட்டங்களும் இந்த தீவில் செல்லுபடியாகது. இந்த தீவிற்க்கு என்று ஒரு தனியான சட்டம் இருக்கிறது Svalbard Treaty, அத்துடன் இந்த தீவிற்கென ஒரு தனாயான ஆட்சியரும்(Governor) இருக்கின்றார். இந்த தீவில் ஒரேயொரு விமான நிலையம் மட்டும் தான் இருக்கிறது. இந்த தீவுக்கு நீங்கள் போக வேண்டும் என்றால் நோர்வேயின் இரண்டு நகரங்களிலிருந்து மட்டும் தான் இங்கு போக முடியும். அந்த நகரங்கள்.. தலைநகரம் Oslo மற்றும் வடக்கிலுள்ள Tromsø நகரம். அங்கு வசிக்கும் மக்கள் பெரும்பாலும் சுற்றுலாத்துறை சம்பந்தமானவர்கள் மற்றும் உலக ஆராய்ச்சியாளர்கள்.. இந்த தீவு ஒரு Visa-Free Zone Schengen ஒப்பந்தத்தில் உள்ள 29 நாடுகளில், ஏதாவது ஒரு நாட்டின் Visa (நுழைவு/வதிவிட அனுமதிப்பத்திரம்) இருக்குமானால் நீங்கள் இந்த தீவில் தங்கி நின்று வேலை செய்யலாம்.. நானும் இந்த தீவில் குடியேறத் தான் வேலை ஒன்று பார்த்துக்கொண்டிருக்கிறேன்..🫣" மற்றது தமிழர்கள் இல்லாத ஒரு இடமா பார்த்து குடியேறவேண்டும் என்று யாராவது சொன்னால், இந்த தீவை காட்டிவிடுங்கள்..😀" (இந்த படத்தில் இருப்பது Svalbard தீவு தான்) #fblifestyle Voir la traduction........!
  8. அவசர வாசிப்பில் தடுமாற்றம் ஏற்பட்டு விட்டது எனக்கும் ........நான் இன்னும் வாசிக்கப் பழக வேண்டும் .........! 😇
  9. ஆம் ஆனால் ........ஒரு சமூகத்தின் பிரதிநிதி அவ்வளவுக்கு நான் நினைத்த மாதிரி பகிரங்கமாய் தரம் தாழ்ந்து போகமாட்டார் என்று நினைத்தேன் ......! இப்ப விளங்கீட்டுது இந்த விளையாட்டு . ........கானல் நீரை நம்பி கட்டு கட்டாய் பணமிழந்து கடன்பட்டும் தொலையாததாய் தொல்லை கொடுக்கும் ஒன்றென்று ........!
  10. இந்த முயற்சி வெற்றி பெற்றால் பனைகள்,வடலிகள் அழிவில் இருந்து தப்பிச் சினை பிடித்துப் பெருகலாம் . .....! 🫠
  11. ஒரு தேசியத்தின் கௌரவம் அனாதையாகவும் , ஒரு கேவலத்தை சுற்றிலும் ஊடகங்கள் .......இதைவிட கேவலம் வேறில்லை . .......!
  12. சாம்பார் சாதம் செய்து பாருங்கள் . ...........! 👍
  13. (படத்திலிருப்பது Lady with Lamp செவிலியர் சேவையின் அன்னையான Florence Nightingale அம்மையார். அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படும் அவரது சேவைக்கால ஆடை. நைட்டிங்கேல் புனிதமான செவிலியர் சேவையின் அஸ்திவாரமாக இருந்தவர் இருப்பவர். அவரையும் அவரது சேவையின் தொடக்கப்புள்ளியையும் நினைவு கூறுதலின் ஒரு வடிவம்தான் தலைக்கவசமும் நீண்ட வெள்ளை ஏப்ரனும். ஆரம்பத்தில் அவர் அணிந்த அதே வடிவில் இந்த ஆடை வடிவமைக்கப்பட்டாலும் கால இட சூழலுக்கேற்ப பொருத்தமான பல பரிமானங்களை எடுத்திருக்கிறது, அவரின் நினைவு கூறலுக்கான அடிப்படைகளை விட்டுக் கொடுக்காமல். தவிர்த்து நைட்டிங்கேல் அம்மையார் நினைவு கூறப்படவேண்டியது மகத்தான தாதியர் சேவையில்தானே தவிர அவரது ஆடையொழுங்கில் மாத்திரம் அல்ல. எப்பொழுது அந்த சேவைக்கு இனம் மதம் என்ற கறை பூசப்படுகிறதோ அப்பொழுதே அது தன் புனிதத்தன்மையை இழக்கிறது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. தாதியம் என்ற சேவை ஆடைகளுக்கு அப்பாற்பட்டது என்ற சிறிய தெளிவே இந்தச் சிக்கலுக்கு மிக இலகுவான பதிலாக இருந்தும் அத்தனை இலகுவாக அதையெல்லாம் எமது நாட்டின் சூழலில் எதிர்பார்த்து விட முடியாது என்பதே வெள்ளிடை மலையும் யதார்த்தமும்.) Voir la traduction
  14. Prakasam P Palani · நம் நிலாவில் எடுக்கப்பட்ட உண்மை புகைப்படம். 1969-ல் நாசா அனுப்பிய அப்பலோ 11 விண்கலம் நிலாவில் இறங்கியபோது விண்வெளி வீரரான பஸ் ஆல்ட்ரின் பதித்த கால் தடம் தான் இது. புகைப்படத்தை நல்லா பாருங்க. கால் தடத்தின் ஆழத்தை பார்க்கும்போது ஆல்ட்ரின் ரொம்ப குண்டாக இருந்த மாதிரி தெரியுது தானே...? ஆனா, அது இல்ல. நிலாவில் தரையிறங்கியபோது பஸ் ஆல்ட்ரினின் எடை 27 கிலோ தான். 'என்னாது...வெறும் 27 கிலோவா...'? ஆமா. ஆனா, அவர் பூமியில் இருந்தபோது அவரோட எடை 80 கிலோ. அவர் போட்டுக்கொண்ட விண்வெளி உடைகள்+உபகரணங்களின் எடை 80 கிலோ. ஆக மொத்தம் 160 கிலோ. இது பூமியில் இருந்தபோது இருந்த எடை. அவர் நிலாவுக்கு போனதும் மொத்த எடையும் 27 கிலோவுக்கு மாறிவிட்டது. காரணம் நிலாவில் உள்ள குறைவான ஈர்ப்பு விசை தான். நீங்க இங்க பூமியில் 60 கிலோ எடை இருந்து, அப்படியே நிலாவுக்கு போனால் அங்கே உங்க எடை வெறும் 10 கிலோ தான் இருக்கும். இப்ப ஒரு விஷயத்தை தெளிவாக புரிஞ்சிக்கங்க. இங்க பூமியில் நீங்க 60 கிலோ எடையுடன் இருந்தால், அது உங்களுடைய உடலின் எடை கிடையாது. உங்களை இந்த பூமி எப்போதும் இழுத்து பிடித்துக் கொண்டுருக்கும் விசை தான் அந்த எடைக்கான காரணம். அப்ப, உங்க உடலில் இருப்பது என்ன...? அதுக்கு பேர் தான் mass. அதாவது நிறை. இந்த நிறை பூமி, நிலா, மார்ஸ் என எந்த இடத்திலும் மாறாது. ஆக, நிலாவில் பஸ் ஆல்ட்ரினின் எடை 27 கிலோ, ஆனா நிறை அதே 160 கிலோ தான். சரி இவ்வளவு குறைவான எடையிலும் கால் தடம் ரொம்ப ஆழமா இருக்கே...? ஏன்னா, நம் பூமி மண் போல் நிலாவில் இருக்காது. கிட்டத்தட்ட சிமெண்ட் மாதிரி பவுடராக தான் இருக்கும். இதனால் தான் கால் தடம் மிக ஆழமாகவே விழுந்திருக்கு. இந்த படத்தை பார்த்து நான் சொல்ல வந்த விஷயம் என்னான்னா... "நிலாவில் நீர், காற்று, உயிரினங்கள் என எதுவுமே இல்லை என்பதால், இந்த கால் தடம் எப்போதும் அழியாமல் அப்படியே இருக்கும்" என இந்த போட்டோவில் ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். ஆனால், அது தவறு. நிலாவில் நீர், காற்று எதுவும் இல்லை என்பது உண்மை தான். ஆனால், இன்னொரு விஷயம் அங்க தினமும் நடந்துக்கிட்டு இருக்கே..!! இங்க பூமியில் தினமும் சிறிய அளவிலான எரிகற்கள்(Micrometeorites) விழுந்துக்கிட்டு தான் இருக்கு. இதனால் பூமியின் எடையும் கூடிக்கிட்டு தான் இருக்கு. இதே மாதிரி தான் நிலாவிலும் சிறிய அளவிலான எரிகற்கள் தினமும் விழுந்துக்கிட்டே இருக்கு. இங்க பூமியில் வளிமண்டலம் இருப்பதால் வரும் எரிகல் சில நேரம் உராய்ந்து ஆவியாகிவிடும், அல்லது சிறிய சிறிய பீஸ்கள் மிஞ்சி போய் கீழே விழும். ஆனால், நிலாவில் வளிமண்டலம் இல்லை என்பதால் உராய்வு எதுவும் ஏற்படாமல் அப்படியே விழும். ஆக, அங்கேயும் பிரச்சனை இருக்கு. இப்ப இந்த மாதிரி சிறிய சிறிய பீஸ்கள் இந்த கால் தடம் மீது விழத்தானே செய்யும்...? அப்போ, கால் தடம் அழிந்து விடுமே...? இந்த புகைப்படம் எடுத்து 56 வருஷம் ஆகிட்டதால, அது இன்னும் அழியாம இருக்குமா...? அட்லீஸ்ட், shape கூட மாறியிருக்கலாம் என்பதே உண்மை!!! Voir la traduction
  15. ❣எங்கே எனது கவிதை ❣ · (1887–1895ல்) முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பிரிட்டிஷ் எஞ்சினீயர் பென்னி குவிக் அணயைக் கட்டுவதில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம்.......!
  16. Sathiya Kumaran · டியர் மந்தனா இந்த மாதிரி Consistent பேட்டிங் எல்லாம் இந்திய பெண்கள் கிரிக்கெட்டில் உங்களை தவிர வேற யார்க்கிட்டயும் நான் பாரத்ததே இல்லை! இனிமேல் இன்னொரு வீராங்கனையிடம் பார்க்க போகிறானே என்பதும் தெரியவில்லை! பெண்கள் கிரிக்கெட்டில் உலகின் டாப் அணிகளில் இரண்டு அணிகளோடு அரைசதம், இன்னொரு அணியோடு சதம் என்று உலககோப்பையில் அடிக்கிறதெல்லாம் உண்மையாலுமே வேற லெவல் 🔥" நம்பர் 1 பேட்டர்ன்னு சும்மாவா? அதற்கு உண்டான தரம் வெளிப்படுமே! அந்த வெளிப்பாடு தான் மந்தனாவின் பேட்டிங்! நாங்க ஆவலுடன் எதிர்பார்த்த அந்த 18 ஆம் நம்பர் ஜெர்ஸி ஏமாற்றினாலும், அதற்கும் சேர்த்து வைத்து இந்த 18 ஆம் ஜெர்ஸி நான் இருக்கேன்னு வட்டியும் முதலுமாக பேட்டிங்கில் காட்டி இருக்கிறீர்கள் 👏" பெண்கள் கிரிக்கெட்டில் பல வீராங்கனைகள் வருவார்கள் ஆடுவார்கள் செல்வார்கள்! ஆனா மந்தனா அப்படி கிடையாது! பின்னாளில் வரலாற்றை எடுத்து பார்க்கும் போது ஸ்மிரிதி மந்தனாவின் பெயர் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு இருக்கும் 💯" இந்திய கிரிக்கெட்டில் ஆண்கள் அணியின் அரசனாக அவர் இருக்கும் போது பெண்கள் கிரிக்கெட்டில் அரசியாக நான் இருக்கிறேன் என்று நிரூபித்து உள்ளீர்கள் ! ஒருநாள் போட்டிகளில் மந்தனாவின் 14-வது சதம் இதுவாகும்! இந்த உலகக்கோப்பையில் ஒரு வீராங்கனையின் முதல் சதமாகும்! ஒட்டுமொத்த ஒருநாள் உலககோப்பையில் அவர் அடிக்கும் மூணாவது சதம் இதுவாகும்!! அதுமட்டுமின்றி பெண்கள் ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த இரண்டாவது வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா உள்ளார்! முதல் இடத்தில் ஆஸி வீராங்கனை 15 சதங்களுடன் மெக் லானிங் உள்ளார்! Queen of Indian Womens Cricket 🏏" #smiritimandhana #TeamIndia #INDIANWOMENSCRICKETTEAM #INDWvsNZW #womensworldcup2025 #cricketlovers Voir la traduction

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.