Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. Swag Sports Tamil · அணிக்குள் வந்த 6வது நாளில் கையில் உலகக் கோப்பை.. கடவுள் நல்லது செய்ய அனுப்பி வைத்தார் – செபாலி வர்மா பேட்டி.........! 😃
  2. ஓம் ......அப்பொழுதுதான் வாத்தியார் ........ ஹமன் ஹில்ஸ் என்னும் கடற்கோட்டை , கசூரினா பீச் எல்லாம் மறக்க முடியாதது ........! 🙂
  3. போட்டியில் வெற்றி பெற்ற அகஸ்தியன் , அல்வாயான், செம்பாட்டான், ஏராளன் மற்றும் அனைவருக்கும் பாராட்டுகள் .........! இந்த திரியை அணையாமல் கொழுத்திக் கொண்டிருந்த மேன்மையான உறவுகளுக்கு நன்றிகள் .....! கந்தப்புவுக்கு ம் . ........ சொல்லி வேல இல்ல ......... ரொம்ப நன்றி ........! 🙂
  4. தினமும் ஒரு வரி தத்துவம் · படித்து பகிர்ந்து வீட்டுக்கு வெளியே ? நாய் சத்தம் கேட்டு வெளியே வந்தார். தனது வீட்டு கேட் முன் நின்று கொண்டு இருந்த உயர்சாதி நாயை அப்போது தான் கவனித்தார் அவர். அது நீண்ட நேரமாக நின்று கொண்டு இருப்பதாக தோன்றியது. அவரையே கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தது சற்று வியப்பை தந்தது. மேலும் ஐந்து நிமிடம் கழிந்தது. மெதுவாக விசிலடித்து கூப்பிட்டார். உடனே அது நாலு கால் பாய்ச்சலில் உள்ளே ஓடி வந்து அவரருகே நின்றது. வாஞ்சையுடன் அதன் கழுத்தை தடவிக்கொடுத்தார். பதிலுக்கு அதுவும் அவரது கால்களை நக்கியது. பின்னர் மாடிப்படிக்கு கீழே சென்று படுத்து நிமிடத்தில் சுகமாக உறங்கிப் போய் விட்டது. இவருக்கோ குழப்பம். ஏதோ செல்வந்தருடைய நாய் என்பது அதன் தோற்றம், கட்டியிருந்த பெல்ட், தாட்டியான உடம்பு போன்றவற்றில் இருந்து புரிந்தது. இங்கே எதற்காக வந்தது.? எழுந்து குளித்து உடைமாற்றி காலை உணவு முடித்து அலுவலகம் புறப்பட்டு செல்லும் வரை அது தூங்கிக்கொண்டு இருந்தது. வேலையாளிடம் சொல்லிவிட்டு புறப்பட்டு சென்றார். மாலை வந்து பார்க்கும் போது நாய் அங்கில்லை. விசாரிக்கும் போது மதியமே சென்று விட்டதாக சொன்னார் பணியாள். மறுநாள் காலை. மறுபடியும் அதே நேரம். அதே நாய். அதே போல் உள்ளே வந்து இவரிடம் சற்று குலாவிவிட்டு அதே இடத்தில் தூங்கி விட்டது. மாலை வந்து பார்க்கும் போது நாய் அங்கில்லை. இந்த சம்பவம் பல நாட்கள் தொடர்ந்தது. வேலையாளை விட்டு பின் தொடர்ந்தும் நாய் எங்கிருந்து வந்தது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருநாள் ஒரு துண்டு சீட்டில் விபரம் எழுதி கழுத்தில் கட்டி அனுப்பினார். மறுநாள் அந்த நாய் வரும்போது கழுத்தில் வேறு ஒரு துண்டு சீட்டு இருந்தது. படித்து விட்டு உருண்டு புரண்டு சிரிப்பதை பார்த்து வேலையாளுக்கு ஒன்றும் புரியவில்லை. அப்படி என்ன தான் எழுதியிருந்தது....??? "அன்பு மிக்கவருக்கு வணக்கம். இந்த நாய் என்னுடையது தான். இது என்னுடைய மனைவியின் காட்டு கூச்சலால் விடிய விடிய தூங்காமல் கஷ்டப்பட்டு கொண்டிருந்தது. சில நாட்களாக காலை வேளைகளில் காணாமல் போய்க்கொண்டு இருந்தது. தங்கள் கடிதம் மூலம் தங்கள் வீட்டில் அது நிம்மதியாக உறங்கி எழுந்து வருவது அறிந்து கொண்டேன். தங்களது அன்பிற்கு மிக்க நன்றி". பி.கு."ஒரு விண்ணப்பம். நாளை முதல் நாயுடன் நானும் வரலாமா? நானும் நன்றாக தூங்கி பல ஆண்டுகள் ஆகின்றன." 🤦‍♂️" ~மகிழா. 💃" -பகிர்வு பதிவு. 🌹 Voir la traduction......!
  5. பல வேலைப்பளுவுக்கு மத்தியிலும் உடனைக்குடனே சுடச்சுட புள்ளிகள் போடும் நண்பர் கந்தப்புவுக்கு மிகவும் நன்றிகள் .........! 🙂
  6. India Women vs South Africa ICC Final Highlights 2025 | Ind vs Sa Women Highlights.........!
  7. ஒரு வித்தியாசமாக கள்ளிப்பூவில் கறி செய்து சாப்பிடலாம் . ....... பெரியம்மாவுக்கு நன்றி ........! 😊
  8. யாரங்கே ! அந்த சர்க்கரை டப்பாவை கொண்டு வா பையனின் வாயிலே கொட்டனும் ........!
  9. Chandran Veerasamy · " அண்ணாவுக்கு ரவா உப்புமாப் பிடிக்கும்; உளுத்தம் பருப்பு வடையைவிருப்பமாச் சாபிடும்! வெந்நீரில்தான் குளிக்கம்; எண்ணெய் தேய்த்து குளிக்கிறதுன்னா ஒரே அடந்தான்! சின்ன வயசிலே பள்ளிக்கூடம் போறப்போ, நெத்தியிலே நாமம் போட்டுக்கிட்டுத்தான் போகும்! சில சமயம், முஸ்லிம் போல தொப்பியெல்லாம் வச்சு டிரஸ் பண்ணி அனுப்புவோம்; முஸ்லிம் பெரியவங்கல்லாம் அதைப் பார்த்து, வழியிலே தூக்கி வச்சுக்கிட்டு பொஞ்சுவாங்க! அஞ்சு ஆறு வயசு நடக்கிறப்போ, அதுக்குப் பெண் குழந்தை வேஷம் போட்டு அழுகு பார்ப்போம்! படுக்கப் போறப்போ, பாட்டு வேணும்; இல்லேன்னா அதுக்கு தூக்கம வராது! சினிமாவுக்கு அவ்வளவாகப் போகாது; தெருக்கூத்துன்னா அதுக்கு அவ்வளவு இஷ்டம்; ஒரு நாள் கூத்துப் பாத்திட்டு வந்து, இரணியன் வேஷம் போட்டுக்கிட்டு, அண்ட ரெண்டம் கதி கலங்க வந்தேன்னு பாடி, ஆடிச்சு பாருங்க. வேஷம் கட்டுறவுங்களே ஆச்சரியப்படணும். அப்படி ஆடிச்சு! அவுங்க தொத்தா, அண்ணா மாஜிஸ்திரேட்டா வரணும் - கலெக்டரா வரணும்னு சொல்லிக்கிட்டே இருக்கும்! இது போயி, அரசியலிலே நுழையும்னு யாரு கண்டா? அண்ணா பேரைச் சொன்னா இன்னக்கி எவ்வளவு கூட்டம் வருது? சின்னப் பிள்ளையிலே அதுக்குக் கூட்டத்தைக் கண்டா பயம்! 12 வயசிலே, காலு நோவுதுன்னு சொல்லிச்சு; திருத்தணி முருகனுக்குப் பிரார்த்தனை பணிணிக்கிட்டேன்; கோலிலுக்குக் கூட்டிக்கினு போனா, கூட்டத்தைக் கண்டு, உள்ளே வரமாட்டேன்னு சொல்லி வெளியே உட்காந்திருச்சி! அண்ணாவை அஞ்சு வயசிலே பள்ளிக்கூடத்திலே சேர்த்தோம்; அப்போல்லாம் பள்ளிக்கூடத்திலே சேர்க்கிறது பெரிய வைபவம் மாதிரி நடக்கும்; அண்ணாவுக்குக் கடுக்கன் போட்டு பொட்டு வச்சு சிங்காரிச்சு டபுள் குதிரை பூட்டிய சாரட்லே வாத்தியாரையும் உட்காரவச்சு மேளதாளத்தோட ஊர்கலமா கூட்டிக்கிணு போய்ச் சேர்த்தோம்! முதல்லே, நெல்லு மேலதான் எழுதணும்; அப்ப அவ்வளவு அமக்களம்; பச்சையப்பா பள்ளிக்கூடத்திலேதான் சேர்த்தோம். பள்ளிக்கூடத்துக்கு, வண்டியிலேயும் போகும் சைக்கிளும் ஓட்டும். அண்ணாவுக்குக் கோபம் வந்திச்சின்னா, ஒண்ணும் பேசாது - பெஞ்சுக்குக் கீழே போய் பூந்துக்கும்; கூப்பிட்டா வராது; அப்படியே தூங்கிடும்; அவ்வளவுதான் அதோட கோபம்! ஆனா, வீட்டிலே சும்மா இருக்காது - எதையாவது படிச்சிக்கிட்டே இருக்கும்; பகோடா, ஓமப்போடி வாங்கிவந்த பேப்பரைக் கீழே போட்டா அதைக் கூட எடுத்துப் படிக்கும்! எஸ்.எஸ்.எல்.சி. பாஸ் பண்ணினதுக்கு அப்புறம், இது நால்லாப் படிக்குதே, இன்னும் படிக்கடடுமேன்னு அவுங்க தொத்தா கூட்டிக்கிணு போயி, சென்னையிலே காலேஜிலே படிக்க வச்சாங்க! அண்ணா இங்கிலீஷ் படிச்சுக்கிட்டு இருக்கும்; டேய், சரியாய்ப் படின்னு தொத்தா சும்மாவாவது அதட்டுவாங்க; தொத்தாவுக்கு இங்கிலீஷ் தெரியாது; அதுக்காக, தொத்தா வார்த்தையை அலட்சியப் படுத்தாம, நிதானமாய்ப் படிக்கும்; இது, அண்ணாவுடன் கூடப் பிறந்த பண்பு! அண்ணாவுக்கு 23 வயதிலே திருமணம் நடந்திச்சு; கல்யாணத்துக்குமுன், அண்ணா, பெண்ணைப் பார்க்கலே; நாங்க பாத்திட்டு வந்து, அழகா இருக்குன்னு சொன்னோம், ஒத்துக்கிடுச்சு! இந்தக் காலம் மாதிரி அப்பெல்லாம் பெண்ணை சுலபமாப் பாத்திர முடியாது! அண்ணா ரொம்ப நாளா சைவமா இருந்திச்சு; பெரியார் கூடக் கூட்டங்களுக்குப் போறப்பத்தான் சைவத்தை விட்டிருச்சி; பெரியார் கூட நாகூருக்குப் போயிருந்தப்போ, சாப்பாட்டுக்குப் பதிலா மீனை மட்டும் கொண்டு வந்து வச்சாங்களாம்; இது வேண்டா மின்னிருக்கு; பெரியாரு, சாப்பிடு, சாப்பிடுன்னு வம்பு பண்ணினாராம்; வேறு வழியில்லாமே சாப்பிட்டிருக்கு; சாப்பிட்டுட்டு, சைவமா இருந்தவன் இப்போ அசைவமா மாறிட்டேன் அப்படின்னு லெட்டர் எழுதிச்சு! அண்ணா எழுதின நாடகங்களைப் பார்த்திருக்கேன்; அதிலே வேலைக்காரி நாடகம்தான் எனக்குப் பிடிக்கும்! வீட்டுக்கு வந்தா, எங்களோட பேசறதுக்கு எங்கே நேரமிருந்துச்சு? எப்பவாவது ரொம்ப முக்கிய விஷயம்ன்னு சொல்லும்! ஒரு சமயம் தீக்குளிச்ச சின்னசாமியைப் பத்தி சொல்லிக் கண் கலங்கிச்சு! இன்னொரு சமயம், வார்னிஷ் குடிச்சிட்டுச் செத்தவங்களைப் பார்த்துடடு வந்து, யாரு கூடவும் பேசல்லே! ஒரு நாளு முழுதும் சாப்பிடாமே வருததமா இருந்திச்சு! அதுக்கு ஒரு கஷ்டமின்னா யாரு கூடவும் பேசாது! அண்ணா மந்திரியானதுக்கு மறு நாளு சாயங்காலம் வந்து, உனக்கு சேதி தெரியுமாம்மான்னு சொல்லிவிட்டு என் கால்லே விருந்து கும்பிட்டிச்சு! தொத்தா இல்லாததுதான் குறை; இருந்தா, ரொம்ப சந்தோஷப்பட்டிருக்கும்! மந்திரியானதுக்குப் பின்னாலே, அண்ணா, வீட்டுக்கு வர்றது ரொம்ப அரிதாப் போச்சு! அது மந்திரியானதுக்குப் பிறகு ஒரு மாற்றம் தெரிஞ்சுது; தினசரி சேவ் பண்ணிக்கிட்டது, குளிச்சது, உடுப்பு மாத்திக்கிட்டது! " - 1967-ல் அறிஞர் அண்ணா அவர்களின் அன்னையாரைக் காஞ்சிபுரத்தில் பேட்டி கண்ட போது கூறிய செய்தி . (19.09.1976 - கழகக்குரல்) நன்றி : அறிஞர் அண்ணா இணையதளம் . Voir la traduction
  10. 🌷கரிசக்காட்டுப்பூவே🌷 செல்வன் சௌந்தரராஜ் · 🔹" ஒரு பாம்பு அதன் மீது ஒரு கல் விழுந்தபோது உதவிக்காகக் கூக்குரலிட்டது, 🔸" ஒரு பெண் தூரத்திலிருந்து வந்து அதைக் காப்பாற்றினாள். 🔹" அதைக் காப்பாற்றிய பிறகு பாம்பு கூறியது எனக்கு உதவி செய்பவர்களைக் கடிக்கப் போவதாக நான் சத்தியம் செய்துள்ளேன் 🔸" அந்தப் பெண் நான் உனக்கு உதவி செய்தேன் அப்படி இருக்க நீ எப்படி என்னைக் கடிக்க விரும்புகிறாய் என்று கேட்டாள் 🔹" பாம்பு நான் உன்னை நிச்சயமாக கடிப்பேன் உனக்கு இரக்கம் காட்டவே மாட்டேன் அது என் இயல்பு என்ன நடந்தாலும் இயற்கை மாறாது என்று பதிலளித்தது 🔸" அந்தப் பெண் கூறினாள் நமது இந்த பாதையில் நாம் சந்திக்கும் முதல் விலங்கிடம் கேட்போம் அது என்னைக் கடிக்க உனக்கு உரிமை அளித்தால் அதைச் செய் என்றாள் 🔹" சிறிது தூரம் நடந்த பிறகு அவர்கள் ஒரு ஓநாயைச் சந்தித்தனர் அவர்கள் அவரிடம் முழு கதையையும் சொன்னார்கள் 🔸" ஓநாய் தந்திரமாக கூறியது நீங்கள் என் முன் அதே காட்சியை மீண்டும் நடித்து காட்டும் வரை நான் அதை நம்பவே மாட்டேன் 🔹" அதற்கு அந்தப் பெண் பாம்பின் மீது கல்லை வைத்து ஓநாயிடம் இப்படித்தான் நான் அதை ஆரம்பத்தில் பார்த்தேன் என்றாள் 🔸 ஓநாய் கூறியது கல்லுக்கு அடியில் ஆரம்பத்தில் இருந்தது போலவே விட்டுவிடுங்கள் 🔹 ஏனென்றால் நன்றி கெட்டவர்கள் ஒருபோதும் உதவிக்கு தகுதியற்றவர்கள் 🔸 உங்களிடம் கருணையை பெரும் அனைவரும் அந்த உதவியைப் பாராட்டுவதில்லை 🔹" நன்றி கெட்டவர்களாகப் பழகியவர்கள் நீங்கள் என்ன செய்தாலும் ஒருபோதும் மாற மாட்டார்கள் Voir la traduction ........!
  11. நேர்படப்பேசு மாத இதழ் · Sudha Srinivasan ·toodrnespS202l1l 6870370fgi9hhhmum5a2guha2fggf33cat2mm77at7u · பதிமூன்று வயதில் படிப்பு போச்சு.. வீட்டில் ஏழ்மை.. தொடர்ந்து பல நாட்களாக பசி... வேலை தேடித் தேடி அலுத்துப் போச்சு... ஒருநாள், பசியால் மயக்கமடைந்து ஒரு நாடகக் கொட்டகை வாசலில் சொருகும் கண்களுடன் அமர்ந்திருந்தான் அந்த சிறுவன். ஒரு பணக்காரர் குதிரையில் நாடகம் பார்க்க வந்தார். பையனிடம், ”டேய் இங்கே கட்டிவிட்டு செல்லும் குதிரைகள் காணாமல் போகின்றன. நீ இதைப் பார்த்துக் கொள். வரும் போது காசு தருகிறேன்,” என்றார். ஆஹாஸ இப்படி ஒரு வேலையா?’ பையன் ஆர்வமாகத் தலையாட்டினான். தெம்புடன் எழுந்தான். நாடகம் முடிந்து பணக்காரர் வெளியே வந்தார். வெளியே நிற்பது தன் குதிரை தானா என்ற சந்தேகம் வந்து விட்டது. குதிரையைச் சுத்தப்படுத்தி, சேணத்தை பளபளப்பாக துடைத்து வைத்திருந்தான் பையன். சற்று அதிகமாக பணத்தை அவனிடம் நீட்டினார் பணக்காரர். சில்லரை கிடைக்குமென நினைத்தவனின் கையில் பணம்ஸ மகிழ்ந்தான். மறுநாள், நாடகம் பார்க்க வந்த மற்றவர்களும் குதிரையை அவனிடம் ஒப்படைக்க, அவற்றையும் பாதுகாத்து, சுத்தப்படுத்திக் கொடுத்தான். வருமானம் பெருகவே, குதிரை லாயமே அமைத்து, உதவிக்கு வேலைக்கு ஆள் அமர்த்தி முதலாளியாகி விட்டான். அதோடு விட்டானா... நாடகங்களையும் கவனித்தான். மிகப்பெரிய இலக்கிய மேதையாகி விட்டான். அந்தச் சிறுவன் தான், உலகப்புகழ் பெற்ற இலக்கியமாமேதை ஷேக்ஸ்பியர். மனிதர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் நல்ல நேரம் வரும். வருகிற சந்தர்ப்பத்தை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டால், குதிரைக்காரனும் குபேரனாகி விடலாம். வாய்ப்புகளை பயன்படுத்துகின்றவர்கள் வெற்றிகரமாக வலம் வருகின்றனர்... Voir la traduction
  12. வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒன்று .........நடிப்பு நாகேஷ் ......! 😍
  13. வணக்கம் வாத்தியார் . ........! தமிழ் பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு ஏனிந்த சிரிப்பு…. ஆண் : ஒரு பாதை போட்ட நாயகன் அதை வேலிப் போட்டு மூடினான் மனம் வேலி தாண்டி போனது அதை தாலி வந்து கேட்டது… ஆண் : ஒரு பாதை போட்ட நாயகன் அதை வேலிப் போட்டு முடினான் மனம் வேலி தாண்டி போனது அதை தாலி வந்து கேட்டது… ஆண் : தேனுக்குள் விழுந்து திகைத்தது எறும்பு இதயத்தின் பிணைப்பு இறைவனின் சிரிப்பு… ஆண் : ஒரு நீதி கூண்டில் நின்றது ஒரு நீதி சாட்சி சொன்னது ஒரு நீதி தெய்வம் ஆனது இதில் தர்மம் எங்கு போனது ஆண் : ஒரு பக்கம் இருட்டு ஒரு பக்கம் வெளிச்சம் ஒரு பக்கம் வழக்கு இறைவனின் சிரிப்பு….....! --- நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு ---
  14. அப்போது என்ஜினியராக உதயகுமார் இருந்தவர்.....அவர் உயரமானவர் . .....இப்போ வேறு நாட்டில் இருக்கிறார் என நினைக்கிறேன் . ...... அநேகமாய் அங்கு வேலை செய்தவர்கள் எல்லாம் காரைநகர் , சுழிபுரம் , மானிப்பாய் , சண்டிலிப்பாய், ஊர்காவற்துறை, நாரந்தனை என்று அதைச்சுற்றியுள்ள ஆட்கள்தான் வேலை செய்தவை ........அப்படியே சீ . நோரிலும் அந்த சுற்றாடலை சேர்ந்தவர்கள்தான் படகுகள் கட்டுறது , மீன் , கணவாய் , றால் எல்லாம் பைக்கட் செய்வது + விற்பது .......நிறைய பெண்பிள்ளைகள் வேலை செய்தவை . ........ அங்கு சில்லறை வியாபாரமும் இருக்கும் .....நாங்கள் வேலை முடிந்து வீட்டுக்கு போகும்போது வாங்கிக்கொண்டு போவது வழக்கம் . .....!
  15. வாத்தியார் நீங்கள் அந்தப்பக்கமா . ........ நான் காரைநகர் இ . போ . ச வில் 5 வருடங்கள் ( அது ஜெற்றியில் இருந்த காலத்தில் இருந்து, பின் புது டிப்போ கட்டி குடிபுகுந்தனங்கள் . ......அப்போது தியாகராஜ என்பவர் சேர்மன் ஆக இருந்தவர் , அதேநேரத்தில் இன்னொரு தியாகராஜ பார்லிமென்ட் எம் . பி என்று நினைக்கிறேன் இருந்தவர் )வேலை செய்தனான் .......! கோஷன் - சே அவர்களே அது ஐந்துகண் உள்ள மதகுதான் ........அதற்கு முதலே வழுக்கியாறு இருந்திருக்கு . .....அதற்குத்தான் மதகு கட்டியது . ..... ஆணைக்கோட்டை எண்ணை உருட்டுற சில குடும்பங்கள் என் நண்பர்கள் + சீனியர்கள் . ..... அவர்களுடன் நான் சக மெக்கானிக்காக இருந்திருக்கிறேன் . .........அவர்கள் வழி வழியாக வரும் கதை சொல்லித்தான் எனக்குத் தெரியும் ........அவ்வளவுதான் . .......! 784..... கல்லுண்டாய் வெளியால் செல்வது . .....! 786 .....ஆணைக்கோட்டை நவாலியால் செல்வது . ......! 782..... மானிப்பாய், சங்கானை, சுழிபுரம் , மூளாய் வழியாக செல்வது ......!
  16. Isai Sangamam · Nandha Kumar · 🌹" சாண்டோ சின்னப்பா தேவர்.., எம்ஜிஆர்.., டி.எம்.எஸ்.., எம்.எஸ்.வி ஆகிய திரை ஜாம்பவான்களின் அழகிய புகைப்படம் 📷" Voir la traduction .........!
  17. அசம்பாவிதமும் கவனக்குறைவும் சேர்ந்து இருக்கு . ......அவரின் உறவினரோ நண்பர்களோ இருந்திருந்தாலாவது உடனடியாய் கவனித்திருப்பார்கள் .........ஆழ்ந்த இரங்கல்கள் அன்னைக்கு ........!
  18. வழுக்கியாறு எம் வாழ்வில் மறக்கமுடியாத ஆறு . ....... ஐந்துகண் மதவு பற்றி ஒரு பழைய கதை உண்டு . ....... அம்மான் கண் என்பதுதான் ஐந்துகண் என மருவியதாக ........ சரி பிழை தெரியவில்லை .........! 🙂
  19. இந்திய மகளிர் வரலாற்று சாதனை .......... ! என்ன கொடுமை சரவணா .........நான் மட்டும் தனியாக "தனிஆவர்த்தனம் " செய்து கொண்டு ......எல்லோரும் அவுஸ் லாஸ் எண்டு ஹவுசுக்குள் முடங்கி விட்டார்களோ.......! 😊
  20. 😱 Unbelievable Moments #womeninsports #womencricket">Top 10 Best Catches in Women’s Cricket History! 😱 Unbelievable Moments.....! மகளிர் கிரிக்கட்டின் அருமையான காட்ச்சுகள் ........! 👋
  21. அசாத்தியமான தருணங்கள் ...........! 👋

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.