Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்

Everything posted by suvy

  1. Isai Sangamam · Nandha Kumar · 🌹" சாண்டோ சின்னப்பா தேவர்.., எம்ஜிஆர்.., டி.எம்.எஸ்.., எம்.எஸ்.வி ஆகிய திரை ஜாம்பவான்களின் அழகிய புகைப்படம் 📷" Voir la traduction .........!
  2. அசம்பாவிதமும் கவனக்குறைவும் சேர்ந்து இருக்கு . ......அவரின் உறவினரோ நண்பர்களோ இருந்திருந்தாலாவது உடனடியாய் கவனித்திருப்பார்கள் .........ஆழ்ந்த இரங்கல்கள் அன்னைக்கு ........!
  3. வழுக்கியாறு எம் வாழ்வில் மறக்கமுடியாத ஆறு . ....... ஐந்துகண் மதவு பற்றி ஒரு பழைய கதை உண்டு . ....... அம்மான் கண் என்பதுதான் ஐந்துகண் என மருவியதாக ........ சரி பிழை தெரியவில்லை .........! 🙂
  4. இந்திய மகளிர் வரலாற்று சாதனை .......... ! என்ன கொடுமை சரவணா .........நான் மட்டும் தனியாக "தனிஆவர்த்தனம் " செய்து கொண்டு ......எல்லோரும் அவுஸ் லாஸ் எண்டு ஹவுசுக்குள் முடங்கி விட்டார்களோ.......! 😊
  5. 😱 Unbelievable Moments #womeninsports #womencricket">Top 10 Best Catches in Women’s Cricket History! 😱 Unbelievable Moments.....! மகளிர் கிரிக்கட்டின் அருமையான காட்ச்சுகள் ........! 👋
  6. அசாத்தியமான தருணங்கள் ...........! 👋
  7. பனி மலர் · Venkatesan Vellore ·Sdtrsnpoeo0i809egio8,mtii u661t722h3470i56uh34:7m2l1ub5rico · சமீபத்திய தஞ்சை பயணத்தின் போது, பொறியாளர் ஒருவர் மூலம் நாம் பெற்ற, தஞ்சை பெரியகோவில் கட்டுமானம் பற்றிய ஒரு தகவல்...! கோபுர உச்சியை உற்று நோக்குங்கள்.. கோபுரஉச்சியை நன்கு உற்று நோக்குங்கள். பிரம்மாந்திர கல் எனப்படும் ஸ்தூபிக்கல். இது ஒரு கல்லோ அல்லது பல கற்களின் சேர்க்கையோ இதன் எடை 80 டன்... இந்த பிம்மாந்திர கல்லை தாங்கும் அந்த சதுரவடிவக் கல்லை நோக்குங்கள்... அந்த கல்லும் 80 டன்... அந்த சதுரக் கல்லின் மேல் பக்கத்திற்கு இரண்டு நந்தியாக மொத்தம் எட்டு நந்தி... ஒவ்வொரு நந்தியின் எடை 10 டன். ஆக, எட்டு நந்தியின் மொத்த எடை 80 டன்.. இந்த மூன்றும்தான் பெரியகோவிலின் அஸ்திவாரம்.. இது என்ன விந்தை...! அஸ்திவாரம் அடியில்தானே இருக்கும்.. தலைகீழான கூற்றாய் உள்ளதே..? நாம் ஒரு, செங்கற்களை கொண்டு ஒரு வீடு கட்டும்போது, கட்டிடத்தின் உயரம் 12 அடி என்றால் 4 அடிக்காவது அஸ்திவாரம் இடுவோம்... பெரியகோவில் உயரம் 216 அடி... முழுக்க கற்களைக்கொண்டு எழுப்பப்படும் ஒரு பிரம்மாண்ட கற்கோவில்.. கற்களின் எடையோ மிக மிக அதிகம்.. இவ்வளவு பெரிய கோவிலுக்கு அஸ்திவாரம் எவ்வாறு அமையும்...? குறைந்தது 50 அடி ஆழம், 50 அடி அகல அஸ்திவாரம் வேண்டும்.. இந்த அளவு சாத்தியமே இல்லை.. 50 அடி ஆழத்தில் வெறும் தண்ணீரும் புகை மண்டலமாகத்தான் இருக்கும்... ஆனால்... பெரியகோவிலின் அஸ்திவாரம் வெறும் 5 அடிதான்... மேலும் ஒரு வியப்பு... இது எப்படி சாத்தியம்..?! இங்குதான் நம்ம சோழ விஞ்ஞானிகளின் வியத்தகு அறிவியல் நம்மை சிலிர்ப்படையச் செய்கிறது...! பெரியகோவில் கட்டுமானத்தை, அதாவது கற்கள் இணைக்கப்பட்டதை... “இலகு பிணைப்பு” என்கிறார்கள்... அதாவது Loose joint என்கிறார்கள்.. அதாவது ஒவ்வொரு கல்லையும் இணைக்கும் போது, ஒரு நூலளவு இடைவெளிவிட்டு அடுக்கினார்கள்.. எதற்காக ? நமது கிராமத்தில் பயன்பட்ட கயிற்று கட்டிலை நினைவில் கொள்ளுங்கள்.. கயிறுகளின் பிணைப்பு... லூஸாகத்தான் இருக்கும்... அதன் மேல் ஆட்கள் உட்காரும் போது, கயிறுகள் அனைத்தும் உள் வாங்கி இறுகிவிடும்... கயிறுகளின் பிணைப்பு பலமாகிறது... இதன் அடிப்படைதான் பெரியகோவில் கட்டுமானம் .. லூஸாக கற்களை அடுக்கிக்கொண்டே சென்று, அதன் உச்சியில் மிக பிரம்மாண்டமான எடையை அழுத்தச் செய்வதன் மூலம், மொத்தகற்களும் இறுகி மிக பலமான இணைப்பை பெறுகின்றன... இதுதான் அந்த 240 டன் எடை கொண்ட, ஸ்தூபி, சதுரக்கல் மற்றும் எட்டு நந்தி.. அஸ்திவாரம் கோவிலின் உச்சியில் இடம் பெற்ற அதிசயம் இது...!!! எத்தனை பூகம்பம் வந்தாலும் எந்த கல்லும் அசையாது. எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நிலைபெற்று இருக்கும்... சூரியசந்திரர் இருக்கும் வரை இக்கோவிலும் இருக்கும்... என்ற நம் இராஜராஜ சோழ மன்னரின் நம்பிக்கை எந்த காலத்திலும் பொய்க்காது...!!! Voir la traduction
  8. 🌷கரிசக்காட்டுப்பூவே🌷 பழமொழி - remix பழசு: பல் போனா சொல் போச்சு புதுசு:‘cell’ போனா சொல் போச்சு😄" பழசு: காற்றுள்ள போதே தூற்றிக்கொள்!! புதுசு: பேலன்ஸ் இருக்கும் போதே பேசிக்கொள்..😃" பழசு: இளங்கன்று பயமறியாது..!! புதுசு: புது பேட்டரி சார்ஜ் இறங்காது..😃" பழசு: அகத்தின் அழகு முகத்தில் தெரியும்..!! புதுசு: செல்போனின் அழகு சார்ஜ் நிற்பதில் தெரியும்😄" பழசு: நாய் வாலை நிமிர்த்த முடியாது..!! புதுசு: நெட்வொர்க்கை திருத்த முடியாது..😃" பழசு: குடிகாரன் பேச்சு, விடிஞ்சா போச்சு..! புதுசு: கஸ்டமர்கேர் பேச்சு, கட் பண்ணினா போச்சு..😃" பழசு: வெட்டு ஒண்ணு... துண்டு ரெண்டு..!! புதுசு: செல்போன் ஒண்ணு.. சிம்மு ரெண்டு.😃" பழசு: ஆழம் தெரியாமல் காலை விடாதே..!! புதுசு: கேமரா இல்லாமல் போனை வாங்காதே..😃" பழசு: தேனெடுத்தவன் புறங்கையை நக்காமல் இருக்க மாட்டான்..!! புதுசு: போன எடுத்தவன், பொழுதுக்கும் நோண்டாமல் இருக்க மாட்டான்..😃" பழசு: பேராசை பெருநஷ்டம்..!! புதுசு: பாஸ்வேர்ட் மறந்தா பெருங்கஷ்டம்.. கொஞ்சம் சிரிங்க பா.... Voir la traduction......!
  9. James Vasanthan · பெண்கள் க்ரிக்கெட் என்றால் நமக்கு (ஆண்களுக்கு) கொஞ்சம் இளக்காரம்தான். அது மந்தமாக இருக்கும் என்கிற பொதுவான கருத்து. இதை எப்படிச் சொல்கிறீர்கள் என்று கேட்டால் அவர்கள் விளையாடுகிற திடல்களில் இருக்கிற சொற்பமான கூட்டத்தைப் பார்த்துதான். அது ஒருபுறம் இருக்கட்டும். நேற்று இரவு நடந்த Women's World Cup Semifinals போட்டியை மட்டும் ஒரே ஒருமுறை பார்த்துவிடுங்கள். India-Australia போட்டி. பெண்கள் க்ரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகள் இதுவரை நடந்தவை 12. ஆஸ்ட்ரேலியா வென்றது 7 முறை. தற்போதைய champion அவர்கள்தான். முரட்டுத்தனமான அணி. அந்நாட்டு ஆண்கள் அணி போலவே மேட்டிமை மனப்பான்மையும், செருக்கும் இயல்பாகவே கொண்டவர்கள். அவர்கள் உடல்மொழியே சொல்லும் "எங்களை மிஞ்ச ஆட்கள் இல்லை" என்று. நேற்று அதை விளையாட்டிலும் நிரூபித்தார்கள். இந்திய பந்துவீச்சாளர்களை திடலின் எல்லா திசைகளிலும் ஓடவிட்டுத் தெறிக்கவிட்டு 338 ரன்கள் குவித்தார்கள். பலரைப்போலவே நானும் இது முடிந்த கதை என்றுதான் நினைத்து Paris Masters Tennis பார்க்கப் போய்விட்டேன். நிச்சயம் நம் அணி மகளிரும் கொஞ்சம் ஆடித்தான் போயிருப்பர் உள்மனதில். ஆனால், பெண்களின் மனஉறுதி நேற்று இன்னொரு முறை நிரூபணமானது. தொடக்க ஆட்டக்காரரில் பொதுவாக புயலாக அசத்தும் ஸ்ம்ருதி நேற்று 24-ல் ஆட்டமிழக்க, ஷஃபாலியும் 10-ல் வெளியேற ஹர்ப்ரீத் (தலைவி) வந்து பொறுப்புடன் மிரட்டலாக விளையாடி 84 சேர்க்க, மறுமுனையில் இந்தியாவின் ரட்சகியாக வந்த ஜெமீமா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 127 ரன்கள் குவித்து ஒரு புதிய சாதனையையும் படைத்து, வெற்றியையும் பெற்றுத் தந்திருக்கிறார். Breaking News-ல் இதைப் பார்த்து பின்பு Highlights பார்த்துப் பரவசமடைந்தேன். ஆஸ்ட்ரேலிய batters அடிக்கும்போது இந்தத் திறமையை நாம் எதிர்கொள்ள முடியாது என்று நினைத்திருந்தேன் - நம் வீராங்கனைகள் ஆடியதைக் காணும் வரை. நம் பிள்ளைகள் ஆடும்போது அவர்கள் முகத்தில் இருந்த வெறியும் வைராக்கியமும் ஒரு புது எழுச்சியை நம் உணர்வுகளில் கொண்டுவந்ததை உணரமுடிந்தது. இறுதி ஷாட்டில் வெற்றியைப் பெற்றவுடன் ஜெமிமா ஓடிவந்து எதிர்முனையில் தனக்கு ஆதரவாக விளையாடிய கவுரை தூக்கிக் கொண்டாடி, பின் தரையில் முகங்குப்புற முழங்காலிட்டு குலுங்கி அழுது தன் உணர்வுகளைக் கொட்டியது நம்மை கண்கலங்க வைத்துவிட்டது. இதற்கு மேல் நான் சொல்லமாட்டேன். நேரத்தை செலவழித்து எப்படி அந்த இமாலய 338-ஐ எளிதாகக் கடந்து இந்த சாதனை வெற்றியை இவர்கள் ஈட்டினர் என்பதை நீங்கள் பார்த்தேயாக வேண்டும். இதன் தாக்கம் இன்னும் பலநாட்கள் நம்மை உத்வேகப்படுத்தும்.......! Voir la traduction
  10. சுலபமாய் செய்யக்கூடிய சுவையான பிரியாணி ........! 🙂
  11. வஞ்சிசிட்டு நெஞ்சை தொட்டு ......... ஜெய்சங்கர் & பிரமீளா ........! 😍
  12. வணக்கம் வாத்தியார் . .......! பாடகர் : சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : ஜேக்ஸ் பிஜாய் ஆண் : அம்மா என் அம்மா நான் போகின்ற திசை எங்கும் நீ அம்மா ஓ அம்மா என் அம்மா என் இசை தேடும் சுரம் யாவும் நீ அம்மா ஆயிரம் ஆனாலும் அன்னை போல் நேரிலே பேசிட கூடுமோ தெய்வம் இங்கே ஆண் : ஒரு முறை என்னை பார் அம்மா கடவுளின் கண்கள் நீ அம்மா காவலில் உன் போல் ஏதம்மா உன் போல் அம்மா யார் அம்மா ஆண் : விரல்களை பிடித்திடும் போது கிடைக்கிதே பிரபஞ்சமே தாயே உன் மடியில் இருந்தால் போதும் அம்மா ஆண் : ஒரு முறை என்ன பார் அம்மா தாயே தாய்மையின் உச்சம் நீ அம்மா தாயே உன் தாலாட்டுக்கு இணையான இசை ஏதம்மா ஆண் : செல்லமாய் பேரிட்டே நீ எனை கூப்பிட ஊட்டிடும் சோற்றிலும் பாசத்தை ஊட்டிட காட்டிடும் தீபத்தில் ஆயுளை கூட்டிட எனக்காய் துடிக்கும் இதயம் நீ அம்மா நீ இல்லாமல் நானும் தீவாகின்றேனே நீர் இல்லாமல் சாகும் மீனாகின்றேனே நீ வந்தாலே போதும் வாழ்வாதாரமே உனை தாண்டி உலகம் ஏதிங்கே ஆண் : நினைவுகள் இருப்பதுனாலே இருக்கிறேன் உயிருடன் தாயே உன் நினைவில் வாழ்ந்தால் போதும்.. ஆண் : {விரல்களை பிடித்திடும் போது கிடைக்கிதே பிரபஞ்சமே} (3) தாயே உன் மடியில் இருந்தால் போதும் அம்மா ஆண் : ஒரு முறை என்ன பார் அம்மா தாயே தாய்மையின் உச்சம் நீ அம்மா தாயே உன் தாலாட்டுக்கு இணையான இசை ஏதம்மா.........! --- ஒருமுறை என்னை பாரம்மா ---
  13. Paranji Sankar · ஒரு குட்டிப் பையன் ஒரு நாள் அப்பாவோடு தோட்டத்தை சுற்றிப் பார்க்கக் கிளம்பினான். சிறிது நேர விளையாட்டுக்குப் பின்தான் அவன் ஒரு விஷயத்தை கவனித்தான். அங்கிருந்த மாடுகள் கவணையில் , ஒரு நீளமில்லாத கயிற்றைக் கொண்டு கட்டப் பட்டிருந்தன . அவை உள்ளே கொட்டப்பட்டிருந்த புற்களை சிரமப்பட்டு உண்ணுவதாய் அவனுக்குத் தோன்றியது . ” ஏன் , இந்த மாதிரி நெருக்கமா மாட்டைக் கட்டி வச்சிருக்கீங்களே , அதுங்க பாவம் இல்லையா ? உங்க தோட்டத்துலதான் இவ்வளோ புல் இருக்குதே . இங்கேயே ஒரு பெரிய கயிறா எடுத்து ஒரு மரத்துல கட்டி வைக்கக் கூடாதா ? அதுங்க கொஞ்சம் Freeயா சாப்பிடுமே ” என்றான். அவர் சிரித்தபடி ,” தம்பிக்காக ஒரு மாட்டை அப்படியே கட்டி வைக்கிறேன் . கொஞ்ச நேரம் என்னாகுதுன்னு தான் பாப்பமே ” என்று சொல்லியபடி ஒரு மாட்டை மட்டும் அவிழ்த்துக் கொல்லையில் இருந்த மரத்தில் , ஒரு நீளமான கயிற்றில் கட்டி வைத்தார் . வந்தவுடனேயே சிறுவன் கொல்லைக்குத்தான் ஓடினான். அங்கே மாடு இருந்த கோலம் அவனை அதிர வைத்து விட்டது. மாடு புல்மேயும் சுவாரஸ்யத்தில் கயிற்றுடன் மரத்தையே சுற்றிச்சுற்றி வந்து கயிறு முழுவதும் மரத்தில் சுற்றிக் கொண்டுவிட்டது . இப்போது அடுத்த அடி கூட எடுத்து வைக்க முடியாமல் , மூச்சுத்திணறியபடி தவித்துக் கொண்டிருந்தது. தோட்டக்காரர் சொன்னார் , ” கயிறு ரொம்ப நீளமா இருந்தா இதுங்க இப்படித்தான் கண்ணு பண்ணும் . சில நேரத்துல உயிருக்கே கூட ஆபத்தாயிடும் ” சொல்லிக் கொண்டே மாட்டை அவிழ்த்துக் கொட்டிலில் கட்டினார். சின்னக் கயிற்றில் கட்டப்பட்டு இருப்பது சிறையல்ல , பாதுகாப்பு என்பது தாம்ஸனுக்குப் புரிந்தது . சில நேரங்களில் அதிகபட்சமான சுதந்திரம் ஆபத்தில் முடிவதுண்டு. சில நியதிகளும் , கட்டுப்பாடுகளும் நம்மைக் காத்துக் கொள்ளவே ஏற்படுத்தப் பட்டவை . Voir la traduction
  14. மனிதஇனம் மிகவும் மோசமானது . ........ இவர்களால் சிங்கங்கள் கூட அகதிகளாய் அலைகின்றன ........! 😇
  15. Kohli-ன் வார்த்தை தந்த திருப்புமுனை; Cricket உலகையே திரும்பி பார்க்க வைத்த Jemimah Rodrigues........!
  16. 2400 கி . மீ . பயணித்து இருக்கிறது ........ கடலும் கடல் நீரோடடமும் எவ்வளவு சக்தி வாய்ந்தது ...........! 🙂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.