Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் .........! 😍 இது ஒரு நல்ல பாடல் . ........கொஞ்சம் கலர் பூசி விட்டிருக்கிறார்கள் .........!
  2. வணக்கம் வாத்தியார் . ..........! தமிழ் பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் சின்மயி இசை அமைப்பாளர் : ஏ . ஆர். ரகுமான் ஆண் : {நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில் காதில் தில் தில் தில் தில் கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்} (2) பெண் : {ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே} (2) பெண் : வாழ்வு தொடங்கும் இடம் நீதானே… ஆஹா …ஆஆஆ…ஆஆஆ….. வாழ்வு தொடங்கும் இடம் நீதானே வானம் முடியுமிடம் நீதானே காற்றைப் போல நீ வந்தாயே சுவாசமாக நீ நின்றாயே மார்பில் ஊறும் உயிரே பெண் : எனது சொந்தம் நீ எனது பகையும் நீ காதல் மலரும் நீ கருவில் முள்ளும் நீ பெண் : செல்ல மழையும் நீ சின்ன இடியும் நீ செல்ல மழையும் நீ சின்ன இடியும் நீ பெண் : பிறந்த உடலும் நீ பிரியும் உயிரும் நீ பிறந்த உடலும் நீ பிரியும் உயிரும் நீ மரணம் ஈன்ற ஜனனம் நீ ........! --- ஒரு தெய்வம் தந்த பூவே ---
  3. உஸ் .....இது நமக்குள்ளேயே இருக்கட்டும் . ......... இதையும் கொஞ்சம் பாருங்க ........! 😇
  4. கால்பந்து விளையாட்டில் அரிதான சில நிகழ்வுகள் ........! 😂
  5. யானை · ஒரு கிராமத்தில் யார் அறிவாளி என்று ஒரு போட்டி! இளைய தலைமுறை தான் அறிவாளிகள் என்று இளைஞர்கள் சொல்ல! வயதில் பெரியவர்கள் தான் என்று பெரியவர்கள் சொல்ல! சரி யார் அறிவாளிகள் என்று பார்க்க இருவருக்கும் ஒரு செடியை கொடுத்து ஒரு மாதம் டைம் கொடுத்து யார் இந்த செடியை நன்றாக வளர்க்கிறார்கள் என்று பார்க்கலாம் என்றார்கள்! இளைஞன் செடியை நல்ல இடமாக தோண்டி நட்டு வைத்து தினமும் நீரும் உரமும் தெளித்து நன்றாக வளர்த்தான்! ஆனால் பெரியவர் நட்டு வைத்ததோடு சரி! தண்ணீரும் ஊற்ற வில்லை உரமும் போட வில்லை! ஒரு மாதம் ஓடியது இளைஞன் வைத்த செடி நன்றாக வளர்ந்து இருந்தது. பெரியவர் வைத்த செடி சிறியதாக வளர்ந்து இருந்தது. அன்று இரவு திடீர் என்று பெரிய காற்றுடன் மழை ! இளைஞன் வைத்த செடி காற்றில் ஒடிந்து மழையில் அடித்து செல்லப்பட்டது! ஆனால் பெரியவர் வைத்த செடி அப்படியே மழை புயல் தாங்கி நின்றது! மறு நாள் காலை இளைஞன் பெரியவர் கிட்ட இது எப்படி சாத்தியம்! நான் தினம் நீர் ஊற்றி உரம் போற்று நன்றாக வளர்ந்து இருந்த செடி ஒடிந்து மழையில் அடித்து செல்லப்பட்டது! நீங்கள் தண்ணீர் கூட ஊற்ற வில்லை ஆனால் செடி எப்படி புயல் மழையை தாங்கி நிற்கிறது என்று கேட்க ! அதற்கு அவர் சொன்னார் ! நீ எல்லாம் அதற்கு கொடுத்தால் அது சுகமாக வேர் விடாமல் அப்படியே இருந்து விட்டது. நான் வைத்த செடி நான் நீர் ஊற்றாததால் உயிர் வாழ நிலத்தில் வேர் ஊன்றி நன்கு வளர்ந்து விட்டது! இன்றைய இளைஞர்கள் வாழ்க்கையும் அப்படித்தான் என்றார்........! Voir la traduction
  6. நன்றி பையா .......!"கூழுக்கும் பாடி உப்புக்கும் பாடி ஒப்பிக்கும் என் உள்ளம் " .........!
  7. எதிர்கால ரௌடிகள் ......... இப்படிக்கு மான்கள் .......! 😂
  8. தினமும் ஒரு வரி தத்துவம் · 🌹" படித்து பகிர்ந்து🌹" *Forwarded many times* *கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிக்குங்க*😀" செருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா, நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது . --- தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது ) இட்லி மாவை வச்சு இட்லி போடலாம். சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்... ஆனா, கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா? --- ராவெல்லாம் முழிச்சு கெடந்து யோசிப்போர் சங்கம். என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல் , காடு , கரைன்னு எல்லாம் இருந்தாலும் , ரயிலேறனும்னா, ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும் . இதுதான் வாழ்க்கை . பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும் . ஆனா,ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா ? நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது !!! (என்ன... தத்துவம்...) என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும், ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது !! அதேமாதிரி, என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும், லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது !!! டிசம்பர் 31 க்கும், ஜனவரி 1 க்கும் ஒரு நாள்தான் வித்தியாசம் . ஆனால், ஜனவரி 1 க்கும், டிசம்பர் 31 க்கும், ஒரு வருசம் வித்தியாசம். இதுதான் உலகம். பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும் . ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும் .. சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும் . ஆனா...கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா ?? யோசிக்கணும்............ ...!! தத்துவம் 1: இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம் . ஆனா பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா? தத்துவம் 2 ஆட்டோக்கு ' ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும் , மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும் . தத்துவம் 3: தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும் , ஆனா இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது ! (என்ன கொடுமை சார் இது !?!) தத்துவம் 4: வாழை மரம் தார் போடும் ஆனா....... அதை வச்சு ரோடு போட முடியாது! (ஹலோ ! ஹலோ !!!!) தத்துவம் 5: பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம் , ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா? இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா? (டேய் ! எங்க இருந்துடா கிளம்புறீங்க ?!) தத்துவம் 6: சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும் , அதுக்காக, மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா ? (ஐயோ ! ஐயோ !! ஐயோ !!! காப்பாத்துங்க!!!) பில் கேட்ஸோட பையனா இருந்தாலும் , கழித்தல் கணக்கு போடும்போது, கடன் வாங்கித்தான் ஆகனும். கொலுசு போட்டா சத்தம் வரும் . ஆனா, சத்தம் போட்டா கொலுசு வருமா ? பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும், ஃப்ரன்ட் வீல முந்த முடியாது . இதுதான் உலகம் T Nagar போனா டீ வாங்கலாம் . ஆனால்....... விருதுநகர் போனா விருது வாங்க முடியுமா? என்னதான் பெரிய வீரனா இருந்தாலும், வெயில் அடிச்சா, திருப்பி அடிக்க முடியாது . இளநீர்லயும் தண்ணி இருக்கு,..... பூமிலயும் தண்ணி இருக்கு.... . அதுக்காக, இளநீர்ல போர் போடவும் முடியாது , பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது .. உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும் ஒரு செல்லில் கூட ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது . நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம் ஆனா...... ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது . வண்டி இல்லாமல் டயர் ஓடும் . ஆனால்............டயர் இல்லாமல் வண்டி ஓடுமா ? (இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.) சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா..... ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா? இல்ல.......... பிளேன் ஓட்டுறது பிளானிங் னுதான் ஆகிடுமா. நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும் மெஸேஜ் Forward தான் பண்ண முடியும்..... Rewindலாம் பண்ண முடியாது. "Tea" / " Coffee" எது சுகாதாரம் ??........ "Tea"ல ஒரு "ஈ " இருக்கும். "Coffee"ல 2 "ஈ " இருக்கும். நீங்களே முடிவு பண்ணிக்கீங்க..🤓" Voir la traduction
  9. சிந்திக்க வைக்கும் சிறுகதைகள் · Guru Tamilanda ·odoSnestrpgg6m81f3gmf148 8hm2tf2gg0ci8gf941ctm9igiu8muuth2lt · ’முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி' - இதிலிருந்து நீங்கள் அறிவது என்ன?’' வகுப்பறையில் ஆசிரியர் கேட்டார். ”முல்லை என்பது ஒரு கொடிவகை தாவரம். அது பற்றிப்படர ஏதேனும் ஒரு பற்றுப்பொருள் கண்டிப்பாக தேவை என்பது புரிகிறது” என்றான் ஒரு மாணவன். ”ஒரு தாவரம் பற்றிப்படர இடமின்றி தவித்தால்கூட அதனை கண்டு மனம்துடித்த அரசனொருவன் தமிழகத்தில் வாழ்ந்திருக்கிறான், நெகிழ்ச்சியாக இருக்கிறது”- இன்னொரு மாணவன். ”இதென்ன பைத்தியக்காரத்தனம்?, ஒரு முல்லைக்கொடி படர ஏதுமின்றி தவித்தால் அதற்கு ஒரு குச்சியை அல்லது கோலை ஊன்றுகோலாய் கொடுக்கலாம் அதனை விடுத்து அவ்வளவு பெரிய தேரை யாராவது கொடுப்பார்களா? முட்டாள் அரசர்களும் அந்நாளில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது இதிலிருந்து புரிகிறது” – சொல்லிவிட்டு நக்கலாய் சிரித்தான் வேறொரு மாணவன். ”தான் பயணித்த தேரை ஒரு முல்லைகொடிக்காக விட்டுவிட்டு தான் நடந்து செல்ல துணிந்த அரசன் தான் எவ்வளவு பெரிய வள்ளல்" - ஒரு மாணவி. ”முதலில் தேர் செய்ததே மரத்தில்தான், மரத்தை வெட்டி தேர் செய்துவிட்டு கொடியை காப்பது அறிவுடைமையா? தேர் செய்ய மரம் வெட்டுவதை நிறுத்தவேண்டும் என சொல்லியிருக்கவேண்டும் அந்த அரசன்”- இன்னொரு மாணவியின் பதிலிது. செயல் ஒன்றுதான்… எத்தனை எத்தனை பார்வை. எத்தனை எத்தனை கண்ணோட்டம். ஒரு விஷயத்தில் எல்லோருக்கும் ஒரே கண்ணோட்டம் இருக்க எப்போதும் சாத்தியமில்லை. அவரவர் பார்வை… அவரவர் கண்ணோட்டம். இப்படித்தான் நமது செயல்களைப்பற்றி நாம் நன்மையே செய்தாலும் ஆயிரம் விமர்சனங்கள் வரலாம். அதனாலெல்லாம் மனம் சோர்ந்துவிடாமல், மற்றவர்க்கு தீங்கு இல்லையெனில் நமக்கு சரியென்று தோன்றுவதை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பதே சிறப்பு. Voir la traduction
  10. அப்படியே வரையறுக்கப்பட்ட முறையில் புகையிலையை பயிரிடுதல் பற்றியும் யோசிக்கலாம் .......!
  11. பையா இது வழமைதான் ....... அறிமுகமாகும் ஒருவரின் திறமையை மற்றவர்களும் அறியும்படி உயர்வாக சொல்வதென்றால் எல்லோரும் அறிந்த ஒருவருடன் ஒப்பிட்டு சொல்வது .......! உதாரணமாக....... ஈழப்பிரியன் வந்து சுவிக்கு வீரப்பையனை விட கிரிக்கட் விபரங்கள் தெரியும் என்று சொன்னால் இங்கு எல்லோருக்கும் தெரியும் சுவி ஒரு 10 என்றும் பையன் 100 என்றும் . ...... ஆனால் சுவி யை விளம்பரப்படுத்த பையனுடன் ஓப்பிடவேண்டிய தேவை உள்ளது அதுதான் விடயம் . .....! 😂 அந்த ஜாம்பவான்களுடன் ஒப்பிடப்படுவது அவவுக்கு மிகவும் பெருமையான விடயம் . .......!
  12. Swag Sports Tamil · கபில்தேவ் தோனி சாதித்ததை விட.. ஹர்மன் செஞ்சது இதனால பெரிய விஷயம்.. இதை வெப் சீரிஸா எடுக்கணும் – அஸ்வின் கோரிக்கை.......! 🙂
  13. Swag Sports Tamil · அணிக்குள் வந்த 6வது நாளில் கையில் உலகக் கோப்பை.. கடவுள் நல்லது செய்ய அனுப்பி வைத்தார் – செபாலி வர்மா பேட்டி.........! 😃
  14. ஓம் ......அப்பொழுதுதான் வாத்தியார் ........ ஹமன் ஹில்ஸ் என்னும் கடற்கோட்டை , கசூரினா பீச் எல்லாம் மறக்க முடியாதது ........! 🙂
  15. போட்டியில் வெற்றி பெற்ற அகஸ்தியன் , அல்வாயான், செம்பாட்டான், ஏராளன் மற்றும் அனைவருக்கும் பாராட்டுகள் .........! இந்த திரியை அணையாமல் கொழுத்திக் கொண்டிருந்த மேன்மையான உறவுகளுக்கு நன்றிகள் .....! கந்தப்புவுக்கு ம் . ........ சொல்லி வேல இல்ல ......... ரொம்ப நன்றி ........! 🙂
  16. தினமும் ஒரு வரி தத்துவம் · படித்து பகிர்ந்து வீட்டுக்கு வெளியே ? நாய் சத்தம் கேட்டு வெளியே வந்தார். தனது வீட்டு கேட் முன் நின்று கொண்டு இருந்த உயர்சாதி நாயை அப்போது தான் கவனித்தார் அவர். அது நீண்ட நேரமாக நின்று கொண்டு இருப்பதாக தோன்றியது. அவரையே கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தது சற்று வியப்பை தந்தது. மேலும் ஐந்து நிமிடம் கழிந்தது. மெதுவாக விசிலடித்து கூப்பிட்டார். உடனே அது நாலு கால் பாய்ச்சலில் உள்ளே ஓடி வந்து அவரருகே நின்றது. வாஞ்சையுடன் அதன் கழுத்தை தடவிக்கொடுத்தார். பதிலுக்கு அதுவும் அவரது கால்களை நக்கியது. பின்னர் மாடிப்படிக்கு கீழே சென்று படுத்து நிமிடத்தில் சுகமாக உறங்கிப் போய் விட்டது. இவருக்கோ குழப்பம். ஏதோ செல்வந்தருடைய நாய் என்பது அதன் தோற்றம், கட்டியிருந்த பெல்ட், தாட்டியான உடம்பு போன்றவற்றில் இருந்து புரிந்தது. இங்கே எதற்காக வந்தது.? எழுந்து குளித்து உடைமாற்றி காலை உணவு முடித்து அலுவலகம் புறப்பட்டு செல்லும் வரை அது தூங்கிக்கொண்டு இருந்தது. வேலையாளிடம் சொல்லிவிட்டு புறப்பட்டு சென்றார். மாலை வந்து பார்க்கும் போது நாய் அங்கில்லை. விசாரிக்கும் போது மதியமே சென்று விட்டதாக சொன்னார் பணியாள். மறுநாள் காலை. மறுபடியும் அதே நேரம். அதே நாய். அதே போல் உள்ளே வந்து இவரிடம் சற்று குலாவிவிட்டு அதே இடத்தில் தூங்கி விட்டது. மாலை வந்து பார்க்கும் போது நாய் அங்கில்லை. இந்த சம்பவம் பல நாட்கள் தொடர்ந்தது. வேலையாளை விட்டு பின் தொடர்ந்தும் நாய் எங்கிருந்து வந்தது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருநாள் ஒரு துண்டு சீட்டில் விபரம் எழுதி கழுத்தில் கட்டி அனுப்பினார். மறுநாள் அந்த நாய் வரும்போது கழுத்தில் வேறு ஒரு துண்டு சீட்டு இருந்தது. படித்து விட்டு உருண்டு புரண்டு சிரிப்பதை பார்த்து வேலையாளுக்கு ஒன்றும் புரியவில்லை. அப்படி என்ன தான் எழுதியிருந்தது....??? "அன்பு மிக்கவருக்கு வணக்கம். இந்த நாய் என்னுடையது தான். இது என்னுடைய மனைவியின் காட்டு கூச்சலால் விடிய விடிய தூங்காமல் கஷ்டப்பட்டு கொண்டிருந்தது. சில நாட்களாக காலை வேளைகளில் காணாமல் போய்க்கொண்டு இருந்தது. தங்கள் கடிதம் மூலம் தங்கள் வீட்டில் அது நிம்மதியாக உறங்கி எழுந்து வருவது அறிந்து கொண்டேன். தங்களது அன்பிற்கு மிக்க நன்றி". பி.கு."ஒரு விண்ணப்பம். நாளை முதல் நாயுடன் நானும் வரலாமா? நானும் நன்றாக தூங்கி பல ஆண்டுகள் ஆகின்றன." 🤦‍♂️" ~மகிழா. 💃" -பகிர்வு பதிவு. 🌹 Voir la traduction......!
  17. பல வேலைப்பளுவுக்கு மத்தியிலும் உடனைக்குடனே சுடச்சுட புள்ளிகள் போடும் நண்பர் கந்தப்புவுக்கு மிகவும் நன்றிகள் .........! 🙂
  18. India Women vs South Africa ICC Final Highlights 2025 | Ind vs Sa Women Highlights.........!
  19. ஒரு வித்தியாசமாக கள்ளிப்பூவில் கறி செய்து சாப்பிடலாம் . ....... பெரியம்மாவுக்கு நன்றி ........! 😊
  20. யாரங்கே ! அந்த சர்க்கரை டப்பாவை கொண்டு வா பையனின் வாயிலே கொட்டனும் ........!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.