Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. தினமும் ஒரு வரி தத்துவம் · ஒரு சமயம் எழுத்தாளர்கள் மாநாட்டில் பேசுவதற்காக கலைவாணர் அழைக்கப்பட்டிருந்தார். அப்பொழுது அவர் மேடையில் பேசும்போது ஒரு கேள்வியை எழுப்பினாராம். எழுத்தாளர்கள் தங்கள் பேனாவை எப்படிப்பட்ட மையைத் தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா? - என்று கலைவாணர் அவர்கள் கேட்டதும் மக்கள் அனைவரும். "பேனா மைதான். கருப்பு மை, நீல மை மற்றும் சிகப்பு மையாகத்தான் இருக்கும்" என்று சொன்னார்களாம். "அப்படி இல்லை" என்று கலைவாணர் அவர்கள் சொன்ன பதில்: "சிலர் பெருமையில் தொட்டு எழுதுகிறார்கள். வேறு சிலர் பொறாமையிலும் தொட்டு எழுதுகிறார்கள். சிலர் தற்பெருமையில் தொட்டு எழுதுகிறார்கள். சிலர் பழமையிலும் தொட்டு எழுதுகிறார்கள். ஆனால் தொடக்கூடாத மைகள், மடமை, கயமை, பொய்மை, வேற்றுமை. நன்மை தரக்கூடிய செம்மை, நேர்மை, புதுமை ஆகியவற்றைத் தொட்டு வாசகர்களின் நெஞ்சைத் தொடும்படியாக எழுத வேண்டும். அவர்கள் நீக்க வேண்டிய மைகள் வறுமை, ஏழ்மை, கல்லாமை, மடமை, அறியாமை." படித்து பகிர்ந்து Voir la traduction ***..வாழ்க்கை தத்துவங்கள் ..*** · Jino Sivaji ·edSoportns7c8b9545g1gu7 58c3um1l2gm31 ,ct579r2e8umu9o51:0t8o · ஆப்பிரிக்காவிலே ஹம்மாஸ் என்ற நீதிபதி இருந்தார். ரொம்ப எளிமையான மனிதர். தான் செய்கின்ற பதவிக்காக அரசாங்கத்திடமிருந்து ஊதியம் கூட வாங்குவதில்லை. சரி அப்படி என்றால் குடும்பச் செலவுக்கு என்ன செய்கிறார்? இரவு நேரங்களில் புத்தகங்கள் எழுதுவார். அதை விற்று அதிலிருந்து வரும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தினார். வீட்டு வேலைக்கும் யாரையும் வைத்துக் கொள்வதில்லை. தினமும் ஆற்றுக்கு போய் குடத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வர வேண்டியது இவருடைய வேலை. மக்கள் எந்த நேரத்தில் வந்தாலும் விசாரித்து தீர்ப்பு வழங்குவார். இரவு என்றாலும் சரி கதவை தட்டினால் தீர்ப்பு வழங்குவார். இதனால் மக்களுக்கு அவர் பெயரில் மிகவும் மரியாதை. அந்த ஊர் முதல் மந்திரி அவருக்கு ஒரு பணமுடிப்பை பரிசாக கொடுக்க முன் வந்தார். இவர் அதை மறுத்து விட்டார். சரி உங்களுக்கு ஒரு உதவியாளரையாவது ஏற்பாடு செய்கிறேன் என்றார். அவர் அதுவும் வேண்டாம் என்றார். சரி ஒரு வேலையாளையாவது அனுப்புகிறேன் என்றார். தேவையில்லை என்றார் இவர். நீங்கள் வெளியே போக வர ஒரு வாகனம் ஏற்பாடு செய்கிறேன். அதுவும் வேண்டாம் என்றார். நீதித்துறையில் நீங்கள் பல பொறுப்புக்களை வகிக்கிறீர்கள். அதனால் இரவு நேரத்தில் நீங்கள் நூல்கள் எழுதுவதற்கு அது தடையாக இருக்கும். அரசாங்க நிதியில் இருந்து சிறு தொகையாவது சம்பளமாக வாங்கிக் கொள்ளுங்கள் என்றார். நான் மக்களுக்கு பணியாற்றுகிறவன். மக்கள் தொண்டுக்கு ஊதியம் எதையும் நான் வாங்க விரும்பவில்லை என்றார். முதலமைச்சர் பார்த்தார் சரி இதுக்கு மேல் இவரை வற்புறுத்தினால் இவர் பதவியில் இருந்து விலகினாலும் விலகி கொள்வார். ஒரு நல்ல நீதிபதியை நாம் இழக்கக்கூடாது என்று நினைத்து அதோடு விட்டு விட்டார். அந்த ஊரில் ஒருத்தர் ஆடு மாடு வைத்திருந்தார். அவைகளை எல்லாம் ஓட்டிக்கொண்டு போய் புல் வெளியிலே மேய விடுவார். இவர் உட்கார்ந்து அதை கவனிப்பதற்கு ஒரு நிழலான இடம் தேவைப்பட்டது. அந்தப் புல்வெளி பக்கத்தில் இருந்த ஒரு நடைபாதை ஓரமாக தன்னுடைய நண்பன் ஒருவனுடைய வீட்டை ஒட்டி ஒரு குடிசை போட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தார். நண்பன் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இது நடைபாதை. இதிலே குடிசை போடக்கூடாது என்றான் நண்பன். இரண்டு பேருக்கும் தகராறு வந்துவிட்டது. சரி இதற்கு மேலே நமக்குள் வம்பு வேண்டாம். பேசாமல் நீதிபதியிடம் போய் முறையிடுவோம் என்று முடிவு செய்தார்கள். இரண்டு பேரும் நீதிபதியை தேடி போனார்கள். நீதிபதி யார் என்று அவர்களுக்கு தெரியாது. நீதிமன்றத்தை நோக்கி அவர்கள் நடந்து போய்க்கொண்டிருந்தார்கள். எதிரில் ஒருவர் தண்ணீர் குடத்தை சுமந்து கொண்டு வந்தார். அவரைப் பார்த்து ஊர் நீதிபதியை பார்க்க வேண்டும். எங்கே இருப்பார்? என்று கேட்டார்கள். நான்தான் நீதிபதி. உங்களுக்குள் என்ன தகராறு? என்று கேட்டார் அவர். ஐயா வணக்கம்! எங்கள் பிரச்சனையைச் சொல்கிறோம். ஆனால் நீங்கள் தண்ணீர் குடத்தை சுமந்து கொண்டிருக்கிறீர்கள். அதை கொஞ்சம் கீழே இறக்கி வையுங்கள். பின்னர் நிதானமாக நாங்கள் சொல்வதை கேளுங்கள் என்றார்கள். அதற்கு நீதிபதி இது மக்கள் நடந்து போகிற நடைபாதை. அதனால் நான் வைத்திருக்கிற குடத்தை இங்கே இறக்கினால் இந்த வழியாக போகும் ஜனங்களுக்கு இடைஞ்சல் ஏற்படும். எனவே நான் அதைச் செய்ய விரும்பவில்லை. நீங்கள் சொல்லுங்கள் என்றார். சரி ஐயா நாங்கள் போயிட்டு வருகிறோம் என்று இரண்டு பேரும் புறப்பட்டார்கள். என்ன இது உங்கள் பிரச்சனை என்னவென்று சொல்லவில்லை. நான் அதற்கு தீர்க்கும் சொல்லவில்லை. அதற்குள் கிளம்பி விட்டீர்களே என்றார் நீதிபதி. நீங்கள் தீர்ப்பு சொல்லி விட்டீர்கள். அதனால்தான் புறப்பட்டு விட்டோம் என்றார்கள் இவர்கள். உண்மை தானே தன் கையிலே இருக்கிற குடத்தை தரையிலே வைக்க விரும்பாத ஒருவர் நடைபாதையில் குடிசை போடுவதை எப்படி சரி என்று ஒத்துக் கொள்வார்? நீதிபதிக்கு நன்றி சொல்லிவிட்டு தன் நண்பனிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டு கிளம்பி விட்டார் அந்த ஆள். Voir la traduction
  2. Chandran Veerasamy · திருப்பூரில் வாழ்ந்து இளம் வயதில் சுதந்திரப் போரில் உயிர் நீத்த கொடி காத்த குமரனின் வரலாற்றை நாம் படித்திருப்போம். இந்த கொடி காத்த குமரனின் மனைவி ராமாயி மிகவும் வறுமையில் உழல்வதாகத் தகவல் கிடைத்ததும் முதலமைச்சாரா இருந்த எம்ஜி.ஆர் அவரை நேரில் சந்தித்தார். நாட்டுக்காக உழைத்த நல்லவரின் மனைவி பிறரிடம் உதவி பெறுவதை விரும்பமாட்டார் என்பதை நன்குணர்ந்த எம்.ஜி.ஆர் ராமாயியை அவர் வீட்டில் சந்தித்து அம்மா நான் உங்கள் மகன் எம்.ஜி.ராமச்சந்திரன் வந்திருக்கிறேன். என் தாய்க்கு நான் உதவ விரும்புகிறேன் என்றார். ராமாயியின் மனம் நெகிழ்ந்தது. மகன் தரும் உதவியை எந்தத் தாயாவது மறுப்பாரா? ஏற்றுக்கொண்டார். இந்த உறவை ராமாயி அம்மாள் இறுதிவரை பெருமையாக ஏற்றுக்கொண்டார். என் மகன் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்னையில் இருக்கிறார் என்று அந்தத்தாய் அன்போடு குறிப்பிடுவோர். எம்.ஜி.ஆர் அந்த ராமாயி அம்மாவை, ‘அம்மா” என்று அழைத்தது செய்தி அல்ல. ராமாயி அம்மா அவரை தனது மகன் என்று அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் குறிப்பிட்டதுதான் செய்தி. Voir la traduction
  3. Bjp Eswaramoorthy Kannan · "அ" வுக்கு அடுத்து "ஆ" வருவதேன்? அரசனும் ஆண்டியாகலாம் என்பதை அறிந்திட!! "இ" வுக்கு அடுத்து "ஈ" வருவதேன்? இருப்பவன் ஈய வேண்டும் என இயம்பிட!! "உ" வுக்கு அடுத்து "ஊ" வருவதேன்? உழைப்பே ஊக்கம் என உணர்த்திட!! "எ" வுக்கு அடுத்து "ஏ" வருவதேன்? எதையும் ஏன் என்று சிந்தித்துப் பார்க்க!! "ஐ" மட்டும் ஏதோடும் சேராமல் தனித்து இருப்பதேன்? அதற்கு நான் ( i ) என்ற அகம்பாவம் அதிகம் உண்டு. "ஒ" வுக்கு அடுத்து "ஓ" வருவதேன்? ஒற்றுமையே ஓங்கும் என்பதை உணர்த்திட!! - படித்ததில் பிடித்தது . Voir la traduction
  4. வணக்கம் வாத்தியார் . .........! Englishதமிழ் பாடகி : மஹதி பாடகா்கள் : ஹரிஹரன், கே. பிரசன்னா இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ் ஆண் : முதல் மழை என்னை நனைத்ததே முதல் முறை ஜன்னல் திறந்ததே பெயரே தெரியாத பறவை அழைத்ததே மனமும் பறந்ததே இதயமும் ஓ இதமாய் மிதந்ததே முதல் மழை நம்மை நனைத்ததே மூடி வைத்த ஜன்னல் திறந்ததே பெயரே தெரியாத பறவை அழைத்ததே மனமும் பறந்ததே இதயமும்.. ஹம்ம் இதயமாய் மிதந்ததே…யே ஆண் : கனவோடு தானடி நீ தோன்றினாய் கண்களால் உன்னை படம் எடுத்தேன் ஆண் : என் வாசலில் நேற்று உன் வாசனை நீ நின்ற இடம் இன்று உணர்ந்தேன் பெண் : எதுவும் புரியா புது கவிதை அர்த்தம் மொத்தம் இன்று அறிந்தேன் கையை மீறும் ஒரு குடையாய் காற்றோடுதான் நானும் பறந்தேன் மழைக் காற்றோடுதான் நானும் பறந்தேன் ஆண் : முதல் முறை ஜன்னல் திறந்ததே பெண் : லாலாலாலா.. ஆண் : பெயரே தெரியாத பறவை அழைத்ததே மனமும் பறந்ததே இதயமும்.. ஓ… இதமாய் மிதந்ததே பெண் : ஓர்நாள் உன்னை நானும் காணாவிட்டால் என் வாழ்வில் அந்த நாளே இல்லை….ஓ… ஓர்நாள் உன்னை நானும் பார்த்தே விட்டால் அந்நாளின் நீளம் போதவில்லை ஆண் : இரவும் பகலும் ஒரு மயக்கம் நீங்காமலே நெஞ்சில் இருக்கும் உயிரின் உள்ளே உந்தன் நெருக்கம் இறந்தாலுமே என்றும் இருக்கும் நான் இறந்தாலுமே என்றும் இருக்கும்........! --- முதல் மழை என்னை நனைத்ததே ---
  5. காற்றினிலே பெரும் காற்றினிலே ..........அருமையான பாடல் . ........! 🙂
  6. நீங்கள் இன்னும் ரொம்ப தூரம் போகவேண்டி இருக்கு தனி .........! 😀
  7. சூப்பர் ......! சரியான ஒரு பிரம்மசக்தி….....அது பிரம்மஹத்தி என்று வரும் என நினைக்கின்றேன் ........!
  8. நாங்களும் அக்கா தங்கை அயலவர்களுக்கும் பொடிகார்டாக இருந்திருக்கோம்ல ........! பழைய நினைவுகளைக் கிளறுகின்றது . .......எனக்கென்னமோ சாண்டில்யனின் "கடல்புறா " "யவனராணி " என்றால் மிகவும் பிடிக்கும் . .....அலுக்காமல் வாசிக்கலாம் ..........! 😇
  9. பிரெஞ் பேசிப்பழக குட்டி குட்டி வாக்கியங்கள் ........! ☺️
  10. தொடருங்கள் நன்றாகப்போகின்றது .......! பிரம்மம்: ம்ம்………. குறையாக நினைக்க வேண்டாம்……. ஆனால் உங்களின் நண்பர்களில் அவ்வளவு விசயம் தெரிந்தவர்கள் என்று எவருமில்லை. என்னது பிரியனையுமா உப்பிடிச் சொல்லிப்போட்டுது .......! 😃
  11. தினமும் ஒரு வரி தத்துவம் · Dr.A.B.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் சிவகங்கை முதல்வன் படத்தில் வரும் உளுந்து வெதைக்கையிலே என்ற பாடலை பயணத்தின் போது கேட்டேன் கிராமத்துப் பெண் பாடுவதாக அமைந்த பாடல் அது வைரமுத்துவின் வரிகளில் ஸ்வர்ணலதாவின் குரலில் ஒலிக்கும் பாடலுக்கு இசை ஏ .ஆர். ரஹ்மான் பல காலம் அந்த பாடலை தொடர்ந்து கேட்டு வந்தாலும் பல்லவி பகுதியில் வரும் ஒரு சில வரிகள் எனக்கு புரிந்து கொள்ள இயலாமல் இருந்தேன் அவை பின்வருமாறு " உளுந்து விதைக்கையிலே சுத்தி ஊதக்காத்து அடிக்கையிலே நான் அப்பனுக்கு கஞ்சி கொண்டு ஆத்து மேடு தாண்டி போனேன் அந்த நல்ல நல்ல சகுணத்தில் நெஞ்சுக்குளி பூத்துப்போனேன்.. வக்கப்படப்பில் கெவுளி கத்த.. வலது பக்கம் கருடன் சுத்த.. தெருவோரம் நெறக்கொடம் பாக்கவும். மணிச்சத்தம் கேக்கவும் ஆனதே.. ஒரு பூக்காரி எதுக்க வர. பசும்பால் மாடு கடக்கிறதே.. இனி என்னாகுமோ? ஏதாகுமோ? இந்த சிருக்கி வழியில் தெய்வம் புகுந்து வரம் தருமோ? என்று வரும் பல்லவி.. இதைப்பற்றி சிந்திக்கவே தோன்றாமல் பாடலின் இசைக்கு ஏற்றவாறு எழுதப்பட்ட வரிகள் போல என்றே எண்ணிக்கொண்டிருந்தேன். நேற்று தான் எனக்குப்புரிந்தது. இது இசைக்காக எழுதப்பட்ட வரிகள் அன்று. தமிழர்கள் காலம் காலமாக கொண்டிருக்கும் "சகுணங்கள்" மீது கொண்ட நம்பிக்கையை பிரதிபலிக்கும் வரிகள் என்று. பாடல் வரிகளுக்குள் செய்த சிறு மறுஆய்வு வருமாறு.. உளுந்து என்பது மானாவாரி நிலத்தில் விதைக்கபடும் பயிர் மேலும் உளுந்து வளர காற்றில் ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்க வேண்டும் . அத்தகைய ஈரப்பதம் குளிர் காலத்தில் மட்டுமே இருக்கும் . தமிழகத்தில் அக்டோபர் நவம்பர் டிசம்பர் மாதங்கள் குளிர்காலங்களாகும். அப்போது அடிக்கும் காற்றை ஊதக்காத்து / கூதக்காத்து என்று அழைப்பார்கள் கிராம் மக்கள். காற்றில் ஈரப்பதம் இருக்கும் காற்று ஊதக்காத்து. வாடக்காத்து என்றும் சொலவடை உண்டு. பெரும்பாலும் அந்த மாதங்களில் ஆற்றில் இருந்து வரும் வாய்க்காலில் ஓடையில் தண்ணீர் ஓடும் .ஆகவே அதில் இறங்கி நடந்து போக முடியாது. தாண்டி தான் போகமுடியும்.. இதைத்தான் அழகாக இரண்டு வரிகளில் வைரமுத்து எழுதியிருக்கிறார் பாருங்கள். " *உளுந்து வெதைக்கையிலே சுத்தி ஊதக்காத்து அடிக்கையிலே நான் அப்பனுக்கு கஞ்சி கொண்டு ஆத்து மேடு தாண்டி போனேன்* " அடுத்த வரிகளில் "அந்த நல்ல நல்ல சகுணத்தில் நெஞ்சுக்குளி பூத்துப்போனேன்" என்கிறாள் தமிழக மக்களிடம் பண்டைய காலம் தொட்டு சகுணம் பார்க்கும் பழக்கம் இருந்தது என்பதை சங்க நூல்கள் வழி அறிய முடிகிறது. இது ஒரு நம்பிக்கையாக இருந்து வந்துள்ளது. வருகிறது. அது பிரதிபலிக்கும் வகையில் அடுத்த வரிகள் வருகின்றன "வக்கப்படப்பில் கெவுளி கத்த. வலது பக்கம் கருடன் சுத்த.." எனும் வரிகளில் ஸ்வர்ணலதா " வெக்கப்படப்பில் " கெவுளி கத்த என்று பாடியிருப்பார். நானும் பல லிரிக்ஸ் வெப்சைட்டுகளில் இந்த பாடல் குறித்து தேடினாலும் அனைத்திலும் "வெக்கப்படப்பு" என்றே இருந்தது. நானும் வெக்கப்படப்பு என்பது கிராமத்து வீடுகளில் ஒரு பகுதியாக இருக்குமோ? என்று யோசித்து தேடிக்கொண்டிருந்தேன். இது குறித்த கிராமத்தில் வசிக்கும் தம்பியிடம் கேட்டேன். "வெக்கப்படப்பு" னா என்னது? கிராமத்து வீடுகளில் அது ஒரு இடமா? என்று கேட்டேன். அவர் "அப்படி ஒரு இடம் இல்லையே.. ஒரு வேளை வக்கப்படப்பா இருக்கும் " என்றார் வக்கப்படப்பு என்பது வைக்கோல் படப்பு என்ற சொல்லில் இருந்து மருவி வந்துள்ளது. நெற்கதிர் அறுத்து மீதம் இருக்கும் வைக்கோலை சேர்த்து குவித்து வைக்கும் இடத்தை " வக்கப்படப்பு " என்பார்கள். கிராமத்தில் ஒரு சொலவடை உண்டு "அடி காட்டுக்கு நடு மாட்டுக்கு நுனி வீட்டுக்கு" நெற்கதிரின் அடிப்பகுதி - அதை வயக்காட்டில் உரமாக விடப்படும் நடுப்பகுதி - மாட்டுக்கு வைக்கோலாக மாறும் நுனியில் இருக்கும் நெற்கதிர் - வீட்டுக்கு வரும் இதுவே அதன் அர்த்தம். வக்கப்படப்பில் கெவுளி கத்த.. இதில் கெவுளி என்பது பல்லிக்கு கிராமத்தில் வழங்கப்படும் பெயர். Indian house lizard என்று அழைக்கப்படும் பல்லி மேற்கில் இருந்து கத்துவது நல்ல சகுணம் என்று பார்க்கபடுகிறது. "வலது பக்கம் கருடன் சுத்த" என்ற வரிகளில் கருடன் என்று அழைக்கப்படும் கழுகு இடப்பக்கத்திலிருந்து வடப்பக்கம் செல்வதை நற்குணம் என்று கூறப்படும். நான் கேட்டு அறிந்த செய்தி யாதெனில் கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சி நடக்கும் போது கருடன் மேலே வானத்தில் சுற்றுவது நற்சகுணம் என்று நம்பப்படுகிறது. அடுத்த வரிகள் "தெருவோரம் நெறகொடம் பாக்கவும். மணிச்சத்தம் கேட்கவும் ஆனதே.. ஒரு பூக்காரி எதுக்கவர. பசும்பால்மாடு கடக்கிறதே.. இனி என்னாகுமோ? ஏதாகுமோ? இந்த சிறுக்கி வழியில் தெய்வம் புகுந்து வரம் தருமோ?" இவையனைத்தும் கிராமங்களில் இன்றும் நல்ல சகுணங்களாக பார்க்கப்பட்டு வருகின்றன என்பதை சில கிராமவாசிகளிடம் கேட்டுத்தெரிந்து கொண்டேன் மேலும் எவற்றையெல்லாம் நற் சகுணங்கள் , கெட்ட சகுணங்கள் என்று நினைக்கிறார்கள் என்று ஆய்வு செய்ததில் பின்வரும் விசயங்கள் கிடைத்தன பண்டைய காலங்களிலும் தமிழ் மக்கள் பல விஷயங்களுக்கு சகுணங்கள் பார்த்திருப்பது பாடல்கள் மூலம் புலனாகிறது. அவற்றுள் ஒன்று இதோ “மையல் கொண்ட மதன்ழி இருக்கையள் பகுவாய் பல்லி படுதொறும் பரவி நல்ல கூறுகென நடுங்கி” (அகம்-289) இவ்வரிகளானது தலைவனைப் பிரிந்த தலைவி, தன் அன்புக் காதலன் வரும் நாளை எதிர் நோக்கியிருக்கும் வேளையில், பல்லியானது நிலைக் கதவுகளிலும், சுவர்களின் மீதும், இருப்பதனைப் பார்த்துக் கொண்டிருக்கும் அவள், பல்லியை நோக்கி நல்ல பலன் கூறுதல் வேண்டும் என தன் மனதில் எண்ணிக் கொள்கின்ற விதமாக அமைந்திருப்பதிலிருந்தே, அக்கால மக்களின் நம்பிக்கைகளின் ஒன்றில் முக்கியமானதாக இவை இருந்துள்ளது எனவும் அறிய முடிகிறது. என்னைப்பொறுத்த வரை சகுணம் என்பது Just a matter of coincidence . ஒன்றோடு ஒன்று ஒத்து நடக்கும் இரு செயல்களை நாம் முடிச்சுப்போட்டுக் கொள்வதே சகுணம் என்கிறோம். . யானை , குதிரை , பசு , கன்று , காளை , திருமணமாகாத பெண் , குழந்தையுடன் பெண் , ஆடை அணியாத குழந்தை , சங்கு , தாமரை , பூக்கள் விற்பவர் , பால் ,நிறை குடம் , காகம் இடப்பக்கமிருந்து வடப்பக்கம் செல்வது , பல்லி கத்துவது , வீட்டில் இருக்கும் காகம் கரைவது போன்றவற்றை நற்சகுணம் என்று நம்பினர். பூனை குறுக்கே போவது, நாய் குறுக்கே போவது, நாய் ஊளையிடுவது, மண்வெட்டியுடன் எதிரே வருவது, தும்முவது, தலையில் முக்காடு போட்டவர் எதிரே காண்பது , விதவயைக் காண்பது இப்படி பலவற்றை துற்சகுணங்கள் என்று மூடநம்பிக்கை கொண்டிருந்தனர் என்னைப்பொறுத்த வரை இந்த சகுணங்கள் மீது கொண்டிருக்கும் நம்பிக்கை மூடநம்பிக்கையாகும் . தன்னம்பிக்கையும், சமூகம் மீது தனிமனிதன் கொண்டிருக்கும் நம்பிக்கை இரண்டு மட்டுமே மனிதவாழ்க்கைக்கு நன்மை சேர்ப்பது. இருப்பினும் இந்தப்பாடல் வரிகள் மூலம் இத்தனை விசயங்களை கற்க முடிந்தது சிறப்பான விசயம். படித்து பகிர்ந்து Voir la traduction உளுந்து விதைக்கையிலே பாடலில் இவ்வளவு விடயங்கள் இருக்கின்றனவா . ........! 😇
  12. "paris place bastille" பாரிஸ் நகரின் மத்தியில் அழகிய சிலை . .......! 😂
  13. Vino Mohan · Christmas Eve என்றே கிருஸ்துவ பெருமக்கள் கொண்டாடுகிறார்கள் உலகமெங்கும்.. நாம் அது போல கொண்டாடுவதில்லை தான்.. ஆனால் ஒவ்வொரு பண்டிகைக்கும் முந்திய நாள் வீடு அமர்க்களப்படும். அதிலும் தீபாவளிக்கு முதல் நாள் என்றால்.. ஏ அப்பா! ஏக ரகளை தான் போங்கள். 65 ஆண்டுகளுக்கு முன்னால் ஏதோ ஒரு ஆண்டு ஆனந்த விகடன் தீபாவளி மலரில் வெளியான கோபுலு அவர்களின் ஜோக் இது. ஒரே ஒரு வரிதான்.. தீபாவளிக்கு முதல் நாள்! மொத்த சேதியையும் சொல்லி விட்டார் கோபுலு.. அது தான் கோபுலு. எவ்வளவு விவரங்கள் பாருங்கள்.. இந்த ஒரே ஒரு சித்திரத்தில். 1960 க்கு முந்தைய, ஒரு நடுத்தர குடும்பத்தின் கதை..... ஒன்றும் பிரமாதம் இல்லை அய்யா! தீபாவளிக்கு முதல் நாள் வந்து சேர்ந்து விடுகிறேன் என்று கடிதம் போட்டுவிட்டார் மாப்பிள்ளை சார்வாள்.. கடிதம் பெண்ணின் கையில் இருக்கு. பேருக்கு ஒரு புத்தகமும் கையில் இருக்கு. இன்னொரு கை விரல் எத்தனை மணி, நிமிஷம் இன்னும் இருக்கு, அவர் வருவதற்கு என்று கணக்கு போடுகிறது. கண்கள் இப்போ என்ன மணி ஆச்சுது என்று ஒரு பார்வை பார்த்து கொள்ளுகிறது. மற்றபடி பெண்ணின் உடல் மட்டும் ஆத்தில் இருக்கு. மற்றபடி மனசெல்லாம் அகமுடையானிடத்தில்.. மகளுக்கு வாங்கிய தலை தீபாவளி புடவையை பார்த்து பார்த்து ஆனந்தித்து கொண்டிருக்கிறார் தகப்பனார். மூத்த பொண்ணோல்லியோ. பெருமையும் மகிழ்ச்சியும் பூரிப்பும் முகத்தில் பொங்கி பெருகுகிறது. மற்ற பேருக்கு வாங்கிய ஜவுளி ஒரு மூட்டையாக கட்டி அவருக்கு பின்னே இருக்கும் ஸ்டூலில் இருக்கு. அம்மா விறகு அடுப்போது போராடி கொண்டிருக்கிறாள். அத்தனை பட்சணங்களையும் சுட்டு எடுக்கணுமே... எண்ணெய் புகை வாணலிக்கு மேலே... சாதாரணமாக அப்பளம் பொரித்தால் கூட அடுப்படியை வட்டமிடும் குழந்தைகள் பட்டாசு பிரிவினையில் அதிருப்தி கொண்டு பேதப்பட்டு கிடக்கிறார்கள். மூத்த பயல் தங்கையைகெஞ்சலும் மிரட்டலுமாக ஏதோ கேட்கிறான். அவளோ எனில் பட்டு பாவாடையும் தானுமாக குத்து காலிட்டு அமர்ந்து கொண்டு ஒரு வார்த்தை பேசாமல் பார்க்கிறாள். பேரத்திற்கு படிய மாட்டாள் என்றே போடுகிறது. இன்னொரு பயல் தன்னுடைய பங்கை எடுத்துக்கொண்டு நகர்ந்து விட்டான். அது போல வார் வைத்து தைத்த அரை கால் சட்டையை போட்ட பேர் இங்கே யார் யார்? நான் ஆறாம் வகுப்பு வரை வார் வைத்து தைத்த அரைகால் சட்டை தான். M R ராதா இதே போல் வார் வைத்து தைத்த முழு கால் சட்டையையே போட்டுக்கொண்டு வருவார். சட்டையை டக் இன் செய்திருப்பார். 😂" கடை குட்டியை கவனிப்பார் இல்லை. வீட்டுக்கு வேணப்பட்ட காய்கறிஎல்லாம் மேலே ஒரு பிரம்பு கூடையில் தொங்குகிறது. ஒரு மாத காலண்டர், ஒரு டெய்லி காலண்டர்.. ஒரு ஸ்வாமி படம். முழம் பூ போட்டிருக்கிறது படத்திற்கு. இன்றைக்கு உதிரி சாமந்தி பூ தான் ஒவ்வொரு படத்திற்கும். சுவரில் ஒரே ஒரு மாடம். அதில் தான் கேச வர்த்தினி முதல் ரெமி பவுடர் வரை. பார்க்க பார்க்க மனம் நிறைந்து போகிறது சார். நானே பிறக்காத போது வந்த விகடன் மலரில் கோபுலு போட்டிருக்கிறார் இந்த சித்திரத்தை. இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகள் மக்களே. ஆனந்தமாக கொண்டாடுங்கள். Voir la traduction
  14. Worldscape · American Flamingo mom and her baby Photo credit: @ajoebowan
  15. "புளியங்கொம்பா அல்லது புலியின் பல்லா" இது நல்லா இருக்கு .......! 😂
  16. Paranji Sankar · டைம் பாஸ் #கடி_ஜோக்ஸ் : 1. உலகத்திலேயே சிறந்த ஜோடி செருப்புதான்... ஒன்றை பிரிந்தால் மற்றொன்று வாழவே வாழாது.. 2. எல்லா பெண்களையும் விசிலடித்து திரும்பி பார்க்க வைத்தாலும் செருப்படி வாங்காத ஒரே ஜீவன் குக்கர் தான்.. 3. மாமா பொண்ணும், உப்புமாவும் ஒண்ணு.. வேற எதுவுமே கிடைக்காத பட்சத்துல நம்மளோட தலையில கட்டப்படும். 4. நிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியைத் தேடுவதும், மனைவி வந்தப்பின் நிம்மதியைத் தேடுவதுமே.. ஆண்களின் வாழ்க்கை தேடல்... 5. இந்த உலகத்தில் என்னையும் ஒரு மனிதனாக மதித்து பொன்னாடை போர்த்தும் ஒரே நபர்.. சலூன் கடைக்காரர் மட்டுமே.. "நீங்க வெட்டுங்க பாஸ்.."... 6. ஒரு புடவை வாங்க முன்னூறு புடவைகளைப் புரட்டிப் பார்த்த மனைவியிடம் எரிச்சலுடன் கணவன் சொன்னான்: "ஆதிகாலத்தில் ஏவாள் வெறும் இலையை மட்டுமே உடுத்தி இருந்தாள். இது போன்ற தொல்லைகள் நல்ல வேளை ஆதாமுக்கு இல்லை." மனைவி சொன்ன பதில்: "அதுக்கு அவன் எத்தனை மரம் ஏறி இறங்கினானோ?" 7. தொலைபேசியில் ஒரு பதற்றமான குரல்.. "டேய் மச்சான்... எங்கடா இருக்க?" "வீட்லதான்டா ....." "அப்பாடா... இப்பதான்டா நிம்மதியா இருக்கு..." "ஏன்டா? என்ன விஷயம்??" "அதில்லடா..... காலையில பேப்பரை பார்த்தேன். அதுல, உங்க தெருவுல வெட்டியா சுத்திகிட்டிருந்த நாய்களை எல்லாம் கார்பரேசன்காரங்க புடிச்சுட்டு போனதா செய்தி போட்டிருந்துச்சு. ...." 😜" 8. அம்மா: என்னடி உன் புருஷன் தினமும் இப்படி குடிச்சுட்டு வராரே நல்லாவா இருக்கு... மகள் : தெரியலைம்மா நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பார்க்கலை.. 9. நீ என் தங்கக் குட்டியாம்… தாத்தா சொல்றதைக் கேப்பியாம்… நான் உன் புத்தகப் பையைத் தூக்கிட்டு வருவேனாம்…. பாப்பா நடந்து வருவியாம். வேண்டாம் தாத்தா… என் பையைத் தூக்கி நீ கஷ்டப்பட வேணாம். நானே என் பையைத் தூக்கிக்கிறேன். நீ என்னைத் தூக்கிக்கிட்டு வந்தாப் போதும்… 10. “ஏன் ஸ்கூட்டரை திருடினே…?” “டிராபிக் போலீஸ்காரர்தாங்க சீக்கிரம் வண்டிய எடு, வண்டிய எடுன்னு அவசரப்படுத்தினாரு எசமான்..” 11. பகல்ல உங்களுக்குக் கண் தெரியாதா டாக்டர்….?” “தெரியுமே…ஏன் கேட்கறீங்க….. ?” “இல்ல…பார்வை நேரம் மாலை ஆறிலிருந்து எட்டுவரைன்னு போர்டு வெச்சிருக்கீங்களே… அதான் கேட்டேன்..” 12. முதலாளி: டேய் முனியா, நான் கொஞ்சம் வீட்டுக்குப்போய் ஓய்வு எடுத்துக்கிட்டு வர்றேன்… நீ கடையைப் பார்த்துக்க… முனியன்: உங்களுக்கு எதுக்கு சிரமம் முதலாளி? நானே போய் ஓய்வை எடுத்துக்கிட்டு வந்துடறேனே. 13. டீச்சர் : பார்வதி ஏன் சிவபெருமானை மணந்தார் ? மாணவன்: சிவன் துணிகள் உடுப்பதில்லை அதனால் துவைக்கும் வேலை குறைவு. எப்பவும் தலையில் சந்திரன் இருப்பதால் வெளிச்சமாக இருக்கும்... EB பில் வராது.. ஜடாமுடியிலிருந்து கங்கை நதி கொட்டுவதால் மோட்டார் போட்டு டேங்க்கில் தண்ணீர் ஏற்ற வேண்டாம்... சிவன் பச்சை காய்கறி சாப்பிடுவதால் சமைத்து கொட்ட வேண்டாம்... சிவனுக்கு அம்மா அப்பா இல்லாததால் மாமியார் தொல்லை இல்லை... மாணவனின் பதிலை கேட்டு மயங்கி விழுந்த டீச்சர் எழுந்திருக்கவே யில்லை. 14. ஜட்ஜ் : நீங்க ரொம்ப வேகமா வண்டி ஓட்டியதா போலீஸ் சொல்லுறாங்க? நீங்க இல்லேன்னு சொல்லுறீங்க.. இதுக்கு ஆதாரம் ஏதாவது உண்டா.? சாமானியன்: ஐயா நான் என் பொண்டாட்டிய கூட்டிட்டு வர மாமனாரு வீட்டுக்கு போய்கிட்டு இருந்தேன்யா.. நீங்களே சொல்லுங்கய்யா பொண்டாட்டிய வீட்டுக்கு கூட்டிட்டுவர எவனாவது வேகமா போவானா... ? ஜட்ஜ் : கேஸ் டிஸ்மிஸ்ட்...! முதல்ல அவரை விடுதலை செய்ங்க...! Voir la traduction
  17. Tamil Culture · எங்கள் காலத்து தீபாவளி! 💥" ஒரு தொண்ணூறுகளில் பிறந்தவனின் ஏக்கமான நினைவலைகள்... 😌" இளைய தலைமுறைப் பிள்ளைகளே... கொஞ்சம் இங்கே வாருங்கள்! 🙋‍♂️" நீங்கள் இப்போது இணையத்தில் பட்டாசுகளை முன்பதிவு செய்து, பெரிய பெரிய வாண வேடிக்கைகளை வெடிப்பதைப் பார்க்கும்போது... எங்கள் காலத்து தீபாவளி நினைவுதான் மனதுக்குள் ஒரு சூறாவளி போல வந்து போகிறது. 🥺" அப்போதெல்லாம் தீபாவளிக்கு மாதங்களுக்கு முன்னரே கொண்டாட்டம் தொடங்கிவிடும்! 🤩 காசு சேர்த்த காலம்: கைச்செலவுக்குக் கிடைக்கும் பணத்தில் இருந்து, சில்லறையாகச் சேர்த்து வைத்து, ஒரு உண்டியலை நிரப்பி, அதை வைத்துப் பட்டாசு வாங்கப் போகும்போது ஒரு தனி மிடுக்கு இருக்கும் பாருங்கள்... அது இப்போது கோடிகளைக் கொட்டிக் கொடுத்தாலும் வராது! 💪" கூட்டமாக ஒரு கடைக்குப் பயணம்: தெருவில் உள்ளோர் ஒன்று சேர்ந்து, நகரத்திற்குப் போய், மொத்தமாகப் பட்டாசு வாங்கி, அதைப் பங்கு பிரிக்கும்போதே பாதி தீபாவளி முடிந்துவிடும். அந்தப் பட்டாசுப் பெட்டியில் வரும் மருந்து வாசம்... அடடடா! இன்னைக்கும் நாசியில் நிற்கிறது! 😍"சிறிய சிறிய சந்தோஷங்கள்: ஊசி பட்டாசு, குருவி வெடி, சங்கு சக்கரம், புஸ்வானம், லட்சுமி வெடி என்று ஒவ்வொரு பட்டாசுக்கும் எங்களிடம் ஒரு கதை இருக்கும். 📜" இரவில் சங்கு சக்கரத்தைச் சுழற்றிவிட்டு, அதில் வரும் பொறியில் பேய் போல முகத்தைக் காட்டுவது... 😂தெரு முனையில் தார்ச்சாலையில் குருவி வெடியைத் தேய்த்துப் பற்ற வைப்பது என்று... ஒவ்வொரு கணமும் கொண்டாட்டம்தான்! 🥳" பகிர்ந்து கொண்ட உறவுகள்: "ஏடா... நீ இந்தக் கம்பி மத்தாப்பைக் கொளுத்து, நான் இந்தச் சரத்தைப் பற்ற வைக்கிறேன்" என்று நண்பர்களுக்குள் ஒரு உடன்பாடு இருக்கும். 🥰அடுத்த வீட்டு அண்ணன், பக்கத்து வீட்டு அக்கா என்று எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து வெடிக்கும்போது, அந்தத் தெருவே திருவிழாக்கோலம் பூண்டுவிடும்! 🎉" ☀️"அதிகாலை ஆனந்தம்: காலையில் 4 மணிக்கே எழுந்து, கங்கா ஸ்நானம் முடித்து, புத்தாடை அணிந்து வாசலில் நிற்கும்போது... அப்பா வந்து முதல் சரத்தைக் கொளுத்திப் போடுவார் பாருங்கள்... அந்தச் சத்தத்தில்தான் எங்கள் தீபாவளியே தொடங்கும்! ✨" இன்றைக்குப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் என்று நிறைய விடயங்கள் மாறிவிட்டன. அது தேவையும்கூட. 👍" ஆனால், அந்தச் சின்னச்சின்ன விடயங்களில் நாங்கள் அனுபவித்த அந்தப் பெரிய சந்தோஷமும், உறவுகளுடன் இருந்த அந்தப் பிணைப்பும் இன்றைக்கும் மனதுக்குள் பசுமையாக இருக்கிறது. 💖 பட்டாசு வெடிப்பதை விட, அந்தப் பண்டிகையைச் சூழ்ந்திருந்த உறவுகளும், அன்பும், மறக்க முடியாத நினைவுகளும்தான் உண்மையான தீபாவளி! 😊 இந்தத் தீபாவளியை நீங்களும் உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பாதுகாப்பாக, மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள்! 🎊" உங்களுக்கும் சொல்லிக்கொள்ள நிறைய அழகான நினைவுகள் உருவாகட்டும்! அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! 🙏" #90sDiwali #Nostalgia #DiwaliMemories #ThenAndNow #Deepavali #GoodOldDays Voir la traduction
  18. தினமும் ஒரு வரி தத்துவம் · தனது மாணவர்களுக்கு ஆசிரியை ஒருவர் கூறிய ஒரு கதை: "ஒரு கப்பலில் ஒரு தம்பதி பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது கப்பல் கவிழும் அபாயமான கட்டத்தில், ஒரேயொருவர் தப்பிக்க வசதியான படகு ஒன்று மாத்திரமே இருக்கிறது. மனைவியை பின்னே தள்ளி விட்டு கணவன் மட்டும் அந்தப் படகில் தப்பிச்செல்கிறார். கவிழும் கப்பலின் அந்தரத்தில் இருந்தவாறு தப்பிச் செல்லும் கணவனை நோக்கி மனைவி சத்தமாக.... இந்த இடத்தில் என்ன சொல்லியிருப்பார்???" என்று மாணவர்களை நோக்கி ஆசிரியை கேட்டார். எல்லா மாணவர்களும் பல வகையான பதில் தரும் போது ஒரு மாணவன் மட்டும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்..... "ஏம்பா நீ சைலண்டா இருக்க......" 'நம்ம கொழந்தைய பத்திரமா பாத்துக்கங்கன்னு சொல்லிருப்பாங்க டீச்சர்' "எப்பிடிப்பா கரெக்டா சொல்ற, ஒனக்கு முன்னாடியே இந்த கதை தெரியுமா?" 'இல்ல டீச்சர், எங்கம்மாவும் சாவுறதுக்கு முன்னாடி அப்பாக்கிட்ட இதையேதான் சொன்னாங்க...' பலத்த மௌனத்திற்கு பிறகு ஆசிரியை கதையை தொடர்ந்தார். தனி ஆளாக அவர்களது பெண்ணை அந்த மனிதன் வளர்த்து வந்தார். அவரின் மரணத்தின் பின்னர் பல வருடங்கள் கழித்து அந்தப் பெண் தனது தந்தையின் டைரியைப் பார்க்க நேர்ந்தது. தாய்க்கு உயிர் கொல்லி நோய் இருந்திருப்பது அப்போதுதான் அவளுக்கு தெரிய வந்தது. கப்பல் கவிழ்ந்த சம்பவத்தை அப்பா இவ்வாறு எழுதியிருந்தார். ' உன்னோடு நானும் கடலின் அடியில் சங்கமித்திருக்க வேண்டும்... நம் இருவரின் மரணமும் ஒரே நேரத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும். நான் என்ன செய்ய, நமது பெண்ணை வளர்த்தெடுக்க நான் மட்டுமே தப்ப வேண்டியிருந்தது'. கதையை இதோடு முடித்து விட்டு அந்த ஆசிரியை கூறினார்: 'வாழ்க்கைல நல்லது கெட்டது எல்லாமே நடக்கும். எல்லாத்துக்கும் காரணம் இருக்கும் ஆனா சில நேரங்கள்ல உங்களால் புரிஞ்சிக்க இயலாம போகலாம். அதனால நாம ஆழமா யோசிக்காமலோ, சரியா புரிஞ்சிக்காமலோ யார் மேலயும் முடிவுக்கு வந்துடக்கூடாது.' *'நம்ம ரெஸ்டாரண்ட் போனா, ஒருத்தன் காசு கொடுக்க முன்வந்தா அவன் பணக்காரன் என்று அர்த்தமில்ல, பணத்த விட நம்ம நட்ப அதிகமா மதிக்கிறான்' னு அர்த்தம். *'முதல்ல மன்னிப்பு கேக்கிறாங்கன்னா அவங்க தப்பு பண்ணிருக்காங்கன்னு அர்த்தமில்ல, ஈகோவ(Ego) விட உறவ மதிக்கிறாங்க' னு அர்த்தம். 'நம்ம கண்டுக்காம விட்டாலும் இருந்திருந்து நமக்கு கால் பண்றாங்கன்னா அவங்க வேல வெட்டி இல்லாம இருக்காங்கன்னு அர்த்தமில்ல, நம்ம அவங்களோட மனசில இருக்கம்னு அர்த்தம்'. பின்னொரு காலத்தில நம்ம பிள்ளைங்க நம்மகிட்ட கேட்கும்,,,,, '"யாருப்பா அந்த போட்டோல இருக்கிறவங்கல்லாம்???"' ஒரு கண்ணீர் கலந்த புன்னகையோட நாம சொல்லலாம் ' அவங்க கூடத்தான் சில நல்ல தருணங்கள நாங்க கழிச்சிருக்கோம்' படித்து பகிர்ந்து Voir la traduction
  19. விரலைவிட வீக்கம் அதிகம் ............! 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.