Everything posted by Justin
-
தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
வடக்கு கிழக்கில் சிங்களவர், தெற்கில் தமிழர் இரண்டும் ஒன்றல்ல. மேலே பலர் சுட்டியிருப்பது போல அரச ஆதரவுடன் குடியேற்றம் என்பது தான் முக்கிய காரணி. ஆனால், சில விடயங்களை நாம் எதிர்க்க முடியாது. உதாரணமாக, ஒரு சிங்களவர் மிக அடிப்படையான தமிழ் பரிச்சயத்துடன் வடக்கில் வேலை செய்ய நியமனம் கிடைத்தால் அதில் எதிர்க்க எதுவும் இல்லை. ஏனெனில், மிகக் குறைந்த சிங்களப் பரிச்சயத்துடன் தெற்கில் தமிழர்கள் வேலை செய்கிறார்கள். அதே போல, யாழ் பல்கலைக்கு சிங்கள மாணவர்கள் விரும்பி வருவதையும் நாம் எதிர்க்க இயலாது. தெற்கின் பல்கலைகளில் தமிழ் மாணவர்கள் விரும்பிச் சென்று படிக்கிற நிலையும் இருக்கிறது.
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
ஏனைய கருத்துக்களில் மறுக்க எதுவும் இல்லை. ஆனால், ஸ்திரத் தன்மை இல்லாமல் இருப்பதை அனேகமான மேற்குலக நாடுகள் விரும்புவதில்லை. தங்கள் நலனுக்காக பல நாடுகளில் மேற்குலகம் ஸ்திரமின்மையை ஊக்குவித்தமை பனிப்போர் காலங்களில் நிகழ்ந்திருக்கின்றன. ஈராக் ஒரு அமெரிக்க நிர்வாகத்தின் பெரும் முன் யோசனையற்ற தவறு. ஆப்கானிஸ்தான் நேட்டோ போயிருக்க வேண்டிய இடம் தான், அமெரிக்க படைகள் அங்கே நடந்து கொண்ட விதம் தவறானாலும். சிரியாவின் ஸ்திரமின்மை - தோற்றுவாயோ, தற்கால நிலையோ- மேற்கின் முழுத்தவறல்ல. இது என் கருத்து. (நீங்கள் மட்டும் எழுதிக் கொண்டிருக்க எனக்கு லாங்லியில் இருந்து போனைப் போட்டுத் திட்டுறாங்கள், எனவே நானும் எழுத வேண்டியதாயிற்று😎!)
-
ஆமையும் தமிழனும்....
இவ்வளவு "நீண்ட" வாதப் பிரதி வாதம் ஒரு நகைச்சுவைப் பதிவை விளங்கிக் கொள்ள அவசியமாக இருந்திருக்கிறது என்பதைக் காணும் போது, உங்களிடம் இனி ஜோக்கே சொல்லக் கூடாதென பலர் இங்கே சுய குறிப்பெடுத்துக் கொண்டிருப்பர் என நம்புகிறேன்😂. "சிரிக்க சிறக்க "வில் இணைத்தால் இது போன்ற திரிகள் அகற்றப் படாதென அவர் அறிந்திருக்கிறார்😎. ஆனால், இணைத்ததன் நோக்கம் நகைச்சுவை தானா எனக் கண்டறிவது கடினம்!
-
ஆமையும் தமிழனும்....
நீங்கள் சீரியசாக எடுத்து விட்டீர்களென தெரிகிறது. நீங்கள் கடிந்து கொள்வது போல நீரோட்டம், ஆமை, ஓசோன் வெளிவிடும் துளசிச் செடி என்று கற்பனைக் கதைகள் பரப்பும் போக்குடைய ஒரு அரசியல் தரப்பு தமிழ்நாட்டில் இருக்கிறது, அதன் தீவிர விசிறிகள் யாழில் இருக்கிறார்கள். அவர்களைக் கலாய்க்கும் ஒரு நையாண்டிப் (sarcastic) பதிவு இது. நையாண்டி விளங்க வேண்டுமானால் சுற்றி நடக்கிற சமகால நிகழ்வுகள் பற்றியும் புரிந்து கொள்ள வேண்டுமென நினைக்கிறேன்.
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
நீங்கள் சொல்லும் காரணமும் இருக்கலாம். பொது வெளியில், வெளிப்படையாக சொல்லப் பட்ட காரணத்தைப் பற்றித் தான் நாம் கருத்துரைக்க முடியும். அன்ரன் பாலசிங்கத்தின் "போரும் சமாதானமும் பக்கங்கள் 710 முதல் 716" இல் புலிகளின் அமெரிக்கா மீதான ஏமாற்றம் தெளிவாக வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது. இந்தப் பக்கங்களில் இருக்கும் சில தகவல்களை வைத்து சர்வதேச இராஜதந்திரத்தில் தமிழர் தரப்பின் பாரிய குறைபாட்டையும் காண முடிகிறது. "யாருடன் பேசுகிறோம்-know your audience" என்பது எந்தத் தொடர்பாடலிலும் முக்கியம். ரெனிசியில் பிறந்து, மிசிசிப்பியில் வளர்ந்து, புஷ் நிர்வாகத்தில் வேலை செய்த ஆஸ்லி வில்ஸ் தான் அமெரிக்க தூதுவர் - நிச்சயமாக சிறுபான்மையினரின் ஏமாற்றங்களைப் புரிந்து கொள்ளாத ஒருவராக இவர் இருந்திருப்பார். வில்சின் மேலதிகாரி ரிச்சர்ட் ஆர்மிரேஜ் என்ற தெற்காசிய விவகார பொறுப்பதிகாரியும் இவர் போன்றவரே. இவர்கள் இருவரிடமும் எதையும் எதிர்பார்த்திருக்கக் கூடாது என்பது என் அபிப்பிராயம். ஆட்சேபனை தெரிவித்து விட்டு ரோக்கியோ போய் அந்தப் பிரகடனத்தில் மாற்றம் கொண்டு வந்திருக்க முடியுமா என முயன்றிருக்கலாம் என்பது என் அபிப்பிராயம். சரி வந்தால் மலை, போனால் தலை முடி! அப்படிச் செய்திருந்தால் முள்ளிவாய்க்கால் நடப்பதற்கான வாய்ப்பு 50/50 ஆக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.
-
சென்னை கடலூரில் தங்கர்பச்சான் வெற்றி என்று கூறிய கிளி ஜோதிடர் கைதாகி பின்னர் விடுவிப்பு
நூற்றுக் கணக்கான யானைகளை தந்தத்திற்காகக் கொன்ற வீரப்பன் "வனக்காவலன்" ஆக முடியுமென்றால், ஸ்ராலின் "கிளி காத்த செம்மலாக" முயல்வதில் என்ன தவறு யுவர் ஆனர்😎?
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
கோசான் சொல்வது போலவே இவை பற்றிய விளக்கங்கள் redundant ஆக மாறிக் கனகாலம். ஆனால், சம்பவங்கள், வரலாறு இவற்றை உணர்ச்சி எனும் வர்ணக் கண்ணாடியூடாகப் பார்க்கும் நிலை இன்னும் மாறவில்லை. ஒரு உதாரணம் மட்டும், நினைவூட்ட: அமெரிக்கா புலிகளை உதவி மாநாட்டிற்கு வருமாறு அழைக்கவில்லை, அழைத்திருந்தாலும் விசா கிடைத்திருக்காது (தற்போது சில சிறி லங்கா இராணுவத்தினருக்கு விசா கொடுக்காதது போல). அதன் பின்னர் நிகழ்ந்த ரோக்கியோ மாநாட்டிற்கு இந்தக் கோபத்தில் தமிழர் தரப்பு போகவில்லை. இது போன்ற, யதார்த்த நடைமுறையை உதாசீனம் செய்யும் உணர்ச்சி மயமான நிலை இன்னும் தமிழ் தேசியம் பேசுவோரிடையே இருக்கிறது. இது இருக்கும் வரை, பலர் தமிழ் தேசிய செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கிப் போவது தொடரும், உணர்ச்சி மயமான "சிந்தனைத் தலைவர்கள்" இந்த தலைமுறையோடு இல்லாமல் போன பின்னர், ஏதாவது நல்லது எமக்கு நிகழலாம். அது வரை பெரிதாக எதிர் பார்க்க எதுவுமில்லை!
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இது எவ்வளவு பாரதூரமான தவறு என்று தெரியவில்லை (இரண்டு ஒலி வாங்கிகளுக்கும் ஆளி மட்டும் தான் வித்தியாசம்). இப்படியான குறைகள் சேர்ந்து நா.த.க வாக்குகளைக் குறைத்து விட்டதென பின்னர் கூற முயல்வார்கள் என நினைக்கிறேன். ட்ரம்ப் இவர்களிடம் கற்றாரா அல்லது இவர்கள் ட்ரம்பிடம் கற்றார்களா எனக் குழப்பமாக இருக்கு😂!
-
ஆமையும் தமிழனும்....
எல்லாம் நல்லாத் தான் இருக்கு, ஆனால் இது👆 யாரும் நினைத்தே பார்க்க முடியாத படைப்பு, வாய்ப்பேயில்லை! வேற மட்டம்!😂
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
விசுகர், என்ன சொல்ல வருகிறீர்கள்? இந்தத் தாக்குதலை ஒரு அமைப்பு, கொள்கை சார் நபர்கள் செய்தார்கள் என்று ஐலண்ட் நம்புகிறார் என்று நீங்கள் ஒரு கற்பிதத்தை உருவாக்குகிறீர்கள் போல தெரிகிறதே? முதலில் அந்த யூ ரியூப் சனலில் "சேறடிப்பிற்கு இந்த சம்பவம் பாவிக்கப் படுகிறது" என நான் சுட்டிக் காட்டியிருக்கிறேன். அதையே ஐலண்டும் சொல்கிறார். ஒருவர் "சுட்டிக் காட்டி விட்டதாலேயே அதை நம்புகிறார், இயக்கத்தை, பிரபாகரனைக் கொச்சைப் படுத்துகிறார்" என்று கதையை புரட்டிப் போடுகிறார் குமாரசாமி😂, நீங்களும் அதைப் பின் தொடர்கிறீர்கள். உண்மையாக திரியின் தலைப்பையும், அதன் கீழ் ஓரிருவர் எழுதியிருக்கும் கருத்துக்களையும் பார்க்கும் ஒருவருக்கே ஏன் தாக்குதல் நடந்திருக்கிறது என்று புரிந்து விடும் நிலை. இங்கே "அப்பன் குதிருக்குள் இல்லை" என்று புலிகளையும், பிரபாகரனையும் காட்டிக் கொடுத்திருப்பது யார்?
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
வணக்கம் தும்ஸ், தொடர்ந்து நில்லுங்கோ. இந்த அக்கரையிலும் இக்கரையிலும் "வீடு வைச்சிருக்கும்" பழக்கமும் புலம் பெயர்ந்து வந்து விட்டது. கனடாவில் இருந்து கியூபாவில் வடலி வளர்த்துக் கள்ளுக் குடிப்போர் இருக்கிறார்கள் என அறிந்தேன் (அமெரிக்காவில் இருந்து கியூபா போக முடியாது என்பதால், நாம் சிங்கிள் எஞ்சின் தான்😂!)
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
லா சப்பல் வந்தால் எனக்கும் அறை விழலாம்😎 ஆனால் நான் இவர்களைப் பார்ப்பது முட்டாள்களாகத் தான். இந்த செயலால், அந்தப் பெண்ணின் செயல்பாடுகள் மாறவில்லை, அந்த வகையில் விளைவேதும் தராத ஒரு நடவடிக்கை இது. இன்னொரு கோணத்தில், இந்த லா சப்பல் சம்பவத்தை இணையத்தில் தேடினால் Paris Telegraph என்ற ஒரு யூ ரியூப் சனலில் "பாரிசில் பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட குழுவினால் அச்சுறுத்தல்" என்று சொல்லும் காணொளி வருகிறது. எந்த "குறிப்பிட்ட குழு" என்ற ஊகித்துக் கொள்ளுங்கள். எனவே, இந்த நிகழ்வு சேறடித்தலுக்கும் இனிப் பயன்படப் போகிறது என்பது தெளிவாகிறது. எந்த சட்டத் தரணியிடமும் ஆலோசனை கேட்டால் இதை உங்களுக்குச் சொல்வார்கள்: நீங்கள் என்ன உணர்கிறீர்கள், மகாஜனங்கள் என்ன உணர்கிறார்கள் என்பதை விட, நீதி விசாரணையில் நீங்கள் என்ன ஆதாரங்கள், நியாயங்களை முன் வைக்கிறீர்கள் என்பதில் தான் கேசினுடைய வெற்றி, தோல்வி இருக்கிறது. என்ன நடக்கிறதெனப் பார்க்கலாம்.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
🤣😂 அட! பிரெஞ்சு சட்டம் இவ்வளவு மென்மையாக இருக்குமென்று எனக்குத் தெரியாது. மாக்ரோனைக் கன்னத்தில் அறைந்தவருக்கு 18 மாதம் சிறைத்தண்டனை கிடைத்தது, அதில் 14 மாதங்களை ஒத்தி வைத்தார்களாம் (இன்னொரு குற்றம் செய்தால், அந்தப் 14 மாதமும் சேர்க்கப் படும், புதிய குற்றத்தின் தண்டனையோடு!). எனவே, அடித்தவர்கள் ரெடியாக இருப்பார்கள் என நம்புகிறேன்😎.
-
உலக வங்கியின் விசேட அறிவிப்பு!
மொழி பெயர்ப்புத் தவறு. உலக வங்கி சொன்னது இது: "..While prices have eased off recently, the World Bank estimates the poverty rate in Sri Lanka will remain above 22% until 2026. It was about 26% in 2023, compared to pre-COVID levels of 11.3% in 2019, the World Bank said." https://www.reuters.com/world/asia-pacific/world-bank-raises-sri-lankas-growth-forecast-22-2024-2024-04-02/ "World Bank raises Sri Lanka's growth forecast to 2.2% for 2024" "றொய்ற்றர்ஸ் கக்கா" என்று திட்ட ஆரம்பிப்பார்கள் என நினைக்கிறேன்😂!
-
உடல்நலம்: பூண்டு சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள் - நிபுணர்கள் விளக்கம்
டாக்டர் கார்த்திகேயன் MBBS டாக்டர் தான், ஆனால் பூண்டு மருத்துவம் பற்றிய அவரது கருத்துக்கள் மனிதர்களில் நிகழ்த்தப் பட்ட ஆய்வு ஆதாரங்கள் அற்றவை. Cochrane library என்ற ஒரு தளம் இருக்கிறது. இது வரை பூண்டின் ஆரோக்கிய குணங்கள் பற்றி செய்த ஆய்வுகளை மீள ஆய்ந்து (systemic review) தந்த முடிவுகள் கீழே இருக்கின்றன. ஆர்வமுள்ளோர் கண்டு பயனடைக: https://www.cochranelibrary.com/cdsr/doi/10.1002/14651858.CD007653.pub2/full (இதய நலன் - ஆதாரம் இல்லை) https://www.cochranelibrary.com/cdsr/doi/10.1002/14651858.CD006206.pub3/full (சளிக் காய்ச்சல் - ஆதாரம் இல்லை) எனவே, யூ ரியூப் வியாபாரத்திற்காக நிஜ டாக்டர் வந்து நீங்கள் கேட்க விரும்புவதைச் சொன்னாலும் நம்ப வேண்டிய அவசியமில்லை, நீங்களே தேடிப் பார்க்கலாம், தரவு சரி பார்க்கலாம்!
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
அப்படியெதுவும் கண்ணியத்துடன் நடக்க வேண்டிய கட்டாயமில்லை. என்ன தான் குறைந்து விடும் கண்ணியத்தை இழந்தால்? அமெரிக்காவில் கறுப்பினத்தவருக்கும், ஐரோப்பாவில் முஸ்லிம்களுக்கும் கொடுத்த அதே முத்திரையைக் கொடுப்பர். கல்வி, வேலை, சமூகப் பதவிகளில் தமிழ் வழிப் பிள்ளைகளுக்கு வாய்ப்புகள் இப்போதிருப்பதை விடக் குறையும். ஒரு தலை முறை கழித்து அந்த தமிழ் வழி வந்த பிள்ளைகள் ஏழைகளாக சமூகத்தின் ஓரங்களில் வாழ்ந்து விட்டுப் போவர். எனவே உங்களுக்கோ எனக்கோ ஒன்றும் குறையாது, நாம் இருவரும் புதைந்த இடத்தில் புல் முளைத்திருக்கும்😎!
-
நந்தவனத்தில் போட்டு உடைப்பவர்கள்
மீள உரைத்தல் தவறல்ல, நினைவு மங்கும் பிரச்சினையுள்ள கேட்போரோடு பேசும் போது, மீள உரைத்தல் தவறல்ல!😎
-
உடல்நலம்: பூண்டு சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள் - நிபுணர்கள் விளக்கம்
இருக்கலாம், ஆனால் நீங்கள் இணைத்த வீடியோவில் இருக்கும் "டாக்டர் மன்டெல்" உண்மையான டாக்டர் அல்ல😂! Chiropractor எனும் வகையைச் சேர்ந்த போலி டாக்டர். Chiropractors மருந்தியல், அடிப்படை உடற்றொழிலியல், என்று எதையும் படித்துப் பட்டம் பெறுவதில்லை. இவர் போல பலர், "Dr. என்றால் டாக்டர் தான்" என்று நம்பும் அப்பாவி மக்களை ஏமாற்றியபடி இருக்கின்றனர் என்பது உண்மையே.👇
-
நந்தவனத்தில் போட்டு உடைப்பவர்கள்
யார் கருத்தையும், தகவலையும் தரவு சரி (fact-check) பார்க்க யாழில் தடையில்லை. செய்யலாம், நீங்கள் முயன்றிருக்கிறீர்கள். சில சமயங்களில் பிழையான கேள்வியை சற் ஜிபிரியிடம் கேட்டு, நீங்கள் விரும்பிய பதிலைப் பெற்று, குதூகலத்துடன் வந்து, முகம் சோர்ந்து போயிருக்கிறீர்கள்😂. அனேகமாக மறந்திருப்பீர்கள் இதையெல்லாம், இவை கசப்பான அனுபவங்கள் என்பதால்! சுருக்கமாக: "வேலைப் பழு, நேரமின்மை, இவையெல்லாம் தரவு சரி பார்ப்பதற்கு தடை" என்பது அறிவலட்சியத்தின் இன்னொரு வெளிப்பாடு. அப்படி சரி பார்க்காத தகலவல்களைப் சும்மா போட்டு விடுவோம் என்பது "வாசகன் கேனையன் தானே?" என்ற இறுமாப்பின் வெளிப்பாடும் கூட😎.
-
உடல்நலம்: பூண்டு சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள் - நிபுணர்கள் விளக்கம்
அப்பிள் வினிகர், உள்ளி, வெந்தயம், வெங்காயம் - இவை தரும் ஆரோக்கிய நன்மைகள் பற்றிய செய்திகளை "மருத்துவ தகவல்கள்" என்று அழைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஏனெனில், இவற்றின் மருத்துவ குணங்கள் பற்றிய தகவல்கள் சிறிதும் மருத்துவ அறிவியலில் பயிற்சியோ, அனுபவமோ இல்லாத தரப்பிடமிருந்து தான் பெரும்பாலும் வெளிவருகின்றன. மிக அரிதாக சில சந்தர்ப்பங்களில், போசணையியலில் தகுதி பெற்ற (dietician) சிலரிடமிருந்து வருகின்றன. இந்த போசணையியல் தகுதி கூட இரு வருடங்களில் மேலோட்டமாகக் கற்ற பின்னர் கிடைக்கும் BS தகுதியேயொழிய, ஆழமான மருத்துவ, உயிரியல் அறிவினால் கிடைக்கும் தகுதி அல்ல என்பதைக் கவனிக்க வேண்டும். எனவே, இவை "மருத்துவ தகவல்கள்" என்பதை விட quack களால் இணையத்தில் வெளியிடப் படும் "போலி மருத்துவத் துணுக்குகள்" என்ற வகைக்குள் அடங்கும். மேலே பிபிசி தந்திருப்பது போன்ற ஆக்கங்களில் தான் இந்த "துணுக்குகள்" தகுதி பெற்ற நிபுணர்களால் சீர் தூக்கிப் பார்க்கப் படும். அவர்கள் கூட "தெரியாது" என்று தான் சொல்ல முடியும், ஏனெனில் இவை பற்றி முறையான ஆய்வுகள் மருத்துவ உலகில் செய்யப் படவில்லை.
-
பாரிஸ் இலக்கியச் சந்திப்பும் கூக்குரல் இட்டோரும்
கட்டுரையில் அவசியமற்ற புலி வெறுப்பு இருக்கிறது. ஓணாண்டியார் இணைத்த காணொளி பயனுள்ளதாக இருக்கிறது. இலக்கியம் என்றால் சமூகத்தின் சமகால பிரச்சினைகளில் இருந்து வருவது, வரலாறும் அதில் இருக்கும். "ஏன் இலக்கியக் கூட்டமென்று விட்டு சாதியைப் பேசுகிறீர்கள்?" என்று கேட்ட இளையவர் எதை இலக்கியம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாரோ அறியேன் (லியோ திரைப்படம், ராணி காமிக்ஸ்?😂) பி.கு: ஜேபிசி மெசின் தேர் விளக்கம் அடிக்கடி மாறுகிறது. சேற்றில் புதைந்த தேரை இழுத்தோம் என்பது மாறி இப்போது குடும்பப் பிரச்சினையாகி விட்டது.
-
நந்தவனத்தில் போட்டு உடைப்பவர்கள்
இது "மன்னிப்பு இல்லாத மன்னிப்பு போல இருக்குது😂. ஒருவரது வயது, ஓய்வு நிலை என்பவற்றை சுட்டிக் காட்டிப் பேசுவது யாழ் கள விதி மீறலாக இருக்கலாம், ஆனாலும் உங்களை ரிப்போர்ட் செய்யவில்லை. ஏனெனில், கருத்தை அகற்றி விட்டு சும்மா விட்டு விடும் நிர்வாகம் - அதில் ஒருவருக்கும் படிப்பினை கிடைக்காது. உங்கள் கருத்தை அப்படியே விட்டு "இவர் இப்படித் தான்" என்று வாசகர்களுக்கு அடையாளம் காட்டி விடுவது மிகவும் பயனுள்ள நடைமுறை என்பதால் ரிப்போர்ட் செய்யவில்லை. ஆனால், பென்சன் எடுக்கும் வரை விரல் நுனியில் இருக்கும் இணையத்தில் தேடி சரி பார்க்காமல் அறிவலட்சியமாக இருப்பது உங்களுக்கே ஆபத்தாக ஒரு நாள் முடியலாம் என அஞ்சுகிறேன். அலரிக்காயை அரைத்துத் தின்றால் இதயத்திற்கு நல்லது என்று யாராவது இணைய வம்பர்கள் பதிவிட, அதை சரி பார்க்காமல் நீங்கள் பரப்பினால், பின்பற்றினால்..யோசித்துப் பாருங்கள்😎, நீங்கள் பென்சன் எடுப்பதைப் பற்றியே யோசிக்க வேண்டியதில்லை!