Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Justin

  1. பலஸ்தீனர்களின் பட்டினி பற்றி நீங்கள் "உண்மையாக" கவலைப் படுகிறீர்களா?😂 அப்படியானால் ட்ரம்பின் மீதல்லவா உங்கள் தீவிரமான கோபம் வெளிவர வேண்டும்? இப்படியொரு நிலை வராமல் இருக்க சில நடவடிக்கைகளையாவது எடுத்த பைடன் தோற்க வேண்டும் என்று விரும்பிய அதே ஆளா நீங்கள்??😎
  2. உங்களுக்கு இதைப் பதிலாக எழுதினாலும், ஏனையோருக்கு சரியான தகவல் தரும் நோக்கத்தில் எழுதப் படுகிறது: "செயற்கையாக சுவையூட்டிய மாம்பழம்" என்பது தவறான தகவல். பாகிஸ்தானிலும், இந்தியாவிலும் செயற்கையான முறையில் மாம்பழங்களைப் பழுக்க வைக்கிறார்கள். கல்சியம் கார்பைட் என்ற தடை செய்யப் பட்ட இரசாயனத்தைப் பாவித்து இதைச் செய்கிறார்கள். இதனால் மாம்பழத்தின் இனிப்போ, சீனியின் அளவோ அதிகரிப்பதில்லை. இந்த செயற்கை முறைப் பழுக்க வைத்தலில், நச்சுப் பொருட்கள் சேர்கின்றன என்பது வேறு விடயம், அதைப் பற்றியல்ல இங்கே பேசுகிறோம். எனவே, மெக்சிகோ, பாகிஸ்தான், இந்தியா, சிறி லங்கா எங்கேயிருந்தும், எப்படிக் கனிந்த மாம்பழத்தை சாப்பிட்டாலும், சீனி அளவு ஏறுவது ஒரே மாதிரித் தான் இருக்கும்.
  3. இந்தக் கருத்து ஓரளவுக்குச் சரியாகத் தான் படுகிறது. தலைமுறைகள் ஒவ்வொன்றிலும் ஒரு தனித்துவமான போக்கு இருக்கும். எங்கள் Gen X என்ற தலைமுறை (தற்போது ஓய்வு நோக்கிப் போகும் 50+ தலைமுறை) வேலை வேலை என்று இருந்த/இருக்கும் தலைமுறையாக உள்ளது. அடுத்து வந்த மிலெனியல்கள் என்ற Gen Y , தற்போது இந்த 4 நாட்கள் வேலையை நாடும் தலைமுறையாக தெரிகிறது. Gen Y இன் ஒரு தனித்துவ இயல்பு செல்வத்தை விட, "அனுபவங்களைச்" சேகரிப்பதில் இருக்கும் ஆர்வம் என்கிறார்கள். இதனால், வேலையை விட்டு விட்டு, சேர்த்த காசை எடுத்துக் கொண்டு உலகத்தைச் சுற்றும் இவர்கள் பலருக்கு சொந்தமாக வீடு வாசல் கூட இல்லையாம். வீடு இல்லையெனில், திருமணமும் இல்லை, பிள்ளைகளும் இல்லை. உலகின் சனத்தொகை குறைந்து வர இவர்கள் ஒரு காரணமாக இருக்கலாம். இறுதியாக வந்த Gen Z இன் நிலை பரிதாபகரமாகத் தான் இருக்கும் போல தெரிகிறது. ஒரு உதாரணமாக கனடாவில் இந்தத் தலைமுறையின் பொருளாதார நிலையைக் காட்டும் கட்டுரையை இணைத்திருக்கிறேன் கீழே: CBCGen Z is facing the worst youth unemployment rate in deca...Canada's youngest workers are being hit by a perfect storm of economic conditions: an inflation crisis, a surge in population, and a country teetering closer to recession as the U.S. trade war wreaksவேலையின்மை மிக உயர்வாக இருக்கிறது. வேலை அனுபவமின்மை இதன் ஒரு காரணமாக இருக்கிறது என்கிறார்கள். படிக்கும் காலத்தில் உரிய துறை/ஆர்வப் பரப்பில் தேடிப் போய் உள்ளகப் பயிற்சிகளைப் பெறாமையால் இந்த நிலையா என்று யோசிக்கிறேன். Gen Z இன் இளைய மட்டமான 2010 இல் பிறந்த குழந்தைகளின் பெற்றோராக இருப்போர், சுதாரித்துக் கொண்டு தங்கள் குழந்தைகளை ஒரு குறிப்பிட்ட துறை நோக்கி வழி நடந்த வேண்டியது முக்கியம்.
  4. தற்போது இருக்கும் 190 வரையான தேசங்கள் நாடுகளுடன் ஒப்பிடும் போது நோர்வே தான் இதற்குத் தகுதியான நாடாகத் தெரிகிறது. கடலோடிகளாக கி.பி 1000 ஆண்டு வரை பெரும் கொடுமைகளைச் செய்த நோர்வேயின் பூர்வ குடிகள், பின்னர் பெரிதாக மனித குலத்திற்கெதிரான செயல்களைச் செய்யவில்லை. நேட்டோவில் உறுப்பினராக இருந்து, அமெரிக்காவின் தலைமையில் ஆப்கானிஸ்தான், ஈராக் நடவடிக்கைகளில் பங்கு பற்றிய போதும், நோர்வே படையினர் மனித உரிமை மீறல்களில் பங்கு பற்றியதற்கான ஆதாரங்கள் இல்லை. நோர்வே இதற்குத் தகுதியுடையதாக இல்லா விடின், உங்கள் அபிப்பிராயத்தில் எந்த நாடு தகுதியுடையது?
  5. இந்த ஆய்வு, ஏற்கனவே நிறுவப் பட்ட சில விடயங்களை மீளவும் நிறுவியிருக்கிறது என்றே கருதுகிறேன். நன்கு பழுத்த மாம்பழத்தின் Glycemic Index (GI) 50 முதல் 60 வரை இருக்கும் என்பது பல ஆய்வுகளில் கணிக்கப் பட்டிருக்கிறது. இதை, ஏனைய உணவுகளோடு ஒப்பிடும் போது எப்படிப் புரிந்து கொள்வது? வெள்ளை மாவினால் செய்த பாண், ரொட்டி என்பவற்றின் GI 70 முதல் 100. இதனால் இவை மிக விரைவாக இரத்தக் குழுக்கோசை உயர்த்தும் உணவுகள்.இதனால் நீரிழிவு, முன்நீரிழிவு (Prediabetes) இருப்போர் தவிர்க்க வேண்ண்டிய உணவுகள் இவை. நன்கு கனிந்த வாழைப்பழம், மாம்பழம், பியர்ஸ் (Pears) ஆகியவற்றின் GI 50 முதல் 60 வரை இருக்கும். இதனால் இவை மத்திம வேகத்தில் இரத்த குழூக்கோசை உயர்த்தும் உணவுகள். நீரிழிவு அல்லது முன் நீரிழிவு எனும் நிலைகளில் இருப்போர் இவற்றை அளவாகத் தான் எடுத்துக்கொள்ள வேண்டும். நன்கு கனிந்த பெரிப் பழங்களின் (berries: strawberry, blueberry,raspberry) GI உச்சமாக 40. இதனால் இவை மெதுவாகத் தான் இரத்த குழூகோசை உயர்த்தும். கட்டுப் பாடுகள் அனேகமாக அவசியமில்லை. இரத்த குழூக்கோசை மெதுவாக உயர்த்தும் உணவுகள் எல்லாம் இரு ஒற்றுமைகளைக் கொண்டிருக்கின்றன: 1. அதிகரித்த நார்த்தன்மை. 2. அதிகமான ஒட்சியேற்ற எதிரிகள் (antioxidants) எனப்படும் பதார்த்தங்கள். பெரிப் பழங்கள், இந்த இரு இயல்புகளாலும் நீரிழிவு உடையோருக்கு சிறந்த பழங்களாக விளங்குகின்றன.
  6. குளுக்கோஸ் மீற்றர் அப்போது இருக்கவில்லை, அதனால் "நீரிழிவும்" இருக்கவில்லை! தீர்வு? குழூக்கோசை அளப்பதை விட்டு விடுங்கள்😂!
  7. இது மலையகத் தமிழர்களுக்கு நன்மையாகவும் முடியலாம், தீமையாகவும் முடியலாம். இலங்கையில் பிறப்புச் சான்றிதழ் தான் பெரும்பாலான உத்தியோக பூர்வ ஆவணங்களின் மூல ஆவணமாக இருக்கிறது. பிறப்புச் சான்றிதழின் "பெற்றோரின் இனம்" என்ற அடையாளத்தில் முன்னர் "சிலோன் தமிழ்" என்றும், பின்னர் "சிறிலங்காத் தமிழ்" என்றும் வடக்கு கிழக்குத் தமிழர்களைக் குறிக்கும் வழமை இருந்தது. அந்த வேளையில் "இந்தியத் தமிழர்" என்ற அடையாளம் மலையகத் தமிழர்களுக்கு வழங்கப் பட்டிருந்தது என நினைக்கிறேன். "இந்தியத் தமிழர்" என்ற அடையாளம், அந்த மக்களை வேலைவாய்ப்பு உட்பட்ட பல விடயங்களில் ஒதுக்கி வைக்கக் காரணமாக இருந்திருக்கிறது. 2020 இல் பெற்றோரின் இனம், மதம் ஆகிய தகவல்களை நீக்கி "சிறிலங்காப் பிரஜை" என்ற ஒற்றை அடையாளத்தை பிறப்புச் சான்றிதழில் கொண்டு வர முயன்ற போது விமல் வீரவன்ச உட்பட்ட பல இனவாதிகளின் எதிர்ப்பினால் அந்த முயற்சி கைவிடப் பட்டது. தற்போது வழமை போல சிறிலங்காத் தமிழர், சிங்களவர், மூர், என்ற அடையாளங்களோடு "மலையகத் தமிழர்" என்ற அடையாளமும் சேர்க்கப் படுகிறதென நினைக்கிறேன்.
  8. இது "மூளை மலேரியா (cerebral malaria)". இலங்கை உட்பட பல நாடுகளில் காணப்படும் சாதாரண மலேரியா வகையை விட ஆபத்தானது. சாதாரண மலேரியாவை Plasmodium vivax என்ற ஒரு கல உயிரி உருவாக்கும். மூளை மலேரியாவை Plasmodium falciparum என்ற ஒரு கல உயிரி ஏற்படுத்தும். இந்த P. falciparum சஹாரா பாலைவனத்திற்குக் கீழான ஆபிரிக்க நாடுகளில் மிகவும் தீவிரமாக ஆட்களைக் கொல்லும் ஒரு தொற்று நோய். சாதாரண மலேரியாவிற்கு எதிராகப் பயன்படும் குளோரோகுயின் வகை மருந்துகள், மூளை மலேரியாவிற்கு பயன் தராது. Artemisinin எனப்படும் ஒரு புதிய மருந்து தான் பயன்படுத்த வேண்டும். இந்த மருந்தை ஒரு சீன மூலிகையில் இருந்து பிரித்தெடுத்த விஞ்ஞானிக்கு மருத்துவ நோபல் பரிசு கிடைத்தது. இலங்கையில் இருக்கும் அனோபிலிஸ் வகை நுளம்புகள் மூளை மலேரியக் கிருமியையும் காவக் கூடியவை என்பதால் மருத்துவத் துறை இது பற்றிக் கவனம் செலுத்த வேண்டும். ஆபிரிக்காவில் இருந்து வருவோருக்கு இரத்தப் பரிசோதனை விமான நிலையத்திலேயே செய்து, மலேரியாக் கிருமிகள் இருந்தால் சிகிச்சை முடியும் வரை தனிமைப் (quarantine) படுத்த வேண்டியிருக்கும்.
  9. சசிகாந்த செந்தில் ஒரு காங்கிரஸ் கட்சி சார்ந்த மக்களவை உறுப்பினர், முன்னாள் இந்திய நிர்வாக சேவை (IAS) அதிகாரி. அண்மையில் வடகரோலினாவில் நடந்த FeTNA ஆண்டு விழாவில் இவரது பேச்சைக் கேட்டேன். உலகில் வலதுசாரிகள் ஆட்சி ஏன் ஓங்கி வருகிறது என்பது பற்றிப் பேசினார். மிக அருமையான உரை. "சாதாரண மக்கள் செய்யக் கூடிய மிகப் பெரிய துரோகம், இந்த வலது சாரிகளுக்கு எதிராகப் பேசாமல் இருப்பது தான்" என்று கூறியிருந்தார், அரங்கம் நிறைந்த கரகோசம் கிடைத்தது. அந்த உரையிலும், ஈழத்தமிழர்கள் இன அழிப்பிற்குள்ளாகியிருக்கிறார்கள், அது இன்னும் தொடர்கிறது என்று பேசியிருந்தார்.
  10. இப்படி புவிசார் அரசியலை ஆழமாக வாசித்து, சிந்தித்து, "எல்லாரும் செய்வது சரிதான், இதில் பிழையேதும் கிடையாது" என்ற முடிவுக்கு வந்து விட வேண்டும்! பிறகேன், எங்களை சிங்களவன் கொன்றது பிழையென்று நீலிக் கண்ணீர் வடிப்பான்? அதுவும் அவசியமில்லை😎!
  11. 😂"தலைவன்" ட்ரம்ப், "மாண்புமிகு புரின்", "தியாகி" கடாபி, "கண்ணியவான்" ஹிற்லர்...இப்படியே போனால் விரைவில் "எங்கள் தலைவன்" ராஜபக்ஷ என்றும் வரும் என நினைக்கிறேன்! ஒரு மெல்லிய லைன் தான், தொடர்ந்து செல்லுங்கள்!
  12. "யார்" காத்திருக்கிறார்கள்? உங்களைப் போன்ற கண் முன்னே இருக்கும் ஒரு ஆதாரத்தை, மனத்தில் இருக்கும் கற்பனையால் மறைப்போர் காத்திருக்கிறார்கள். "எவரும்" நம்பவில்லை என்கிறீர்கள். உங்கள் உலகம் இந்த விடயத்தில் மிகவும் சிறியது என்று காட்டும் வாக்கியம் இது! "புறப்பட்டுப் போங்கள், நான் வரவில்லை" என்ற கணக்காக அவரே ஆட்களை அனுப்பி விட்டுத் தனியே மரணத்தை நோக்கிப் போயிருக்கிறார் என்பதாகத் தான் வன்னியில் இருந்து வந்த மக்கள் சொல்லியிருக்கிறார்கள். நடேசன், பாலகுமார் போன்றோரும் கூட, வெள்ளைக் கொடிப் படுகொலை நிகழ்வதற்கு சில நாட்கள் முன்னரே , மக்களோடு வந்து முள்ளிவாய்க்கால் கடற்கரையில் சாதாரணமாக நின்றிருக்கிறார்கள் என்பதையும் அங்கே நின்ற மக்கள் கண்ட சாட்சிகளாக இருக்கிறார்கள். இதில் இருந்தெல்லாம் எதையும் உய்த்தறிய முயலாமல், "இருக்கிறாரா, இல்லையா" என்று உங்கள் போன்றோர் குழம்ப, ஒரு கும்பல் அதை வைத்துப் பிழைப்பு நடத்துகிறது. இதை விட என்ன பெரிய அவமதிப்பை பிரபாகரனின் வரலாற்றுக்கு எவரும் செய்து விட முடியுமென நினைக்கிறீர்கள்?
  13. ட்ரம்ப் விசிறிகளின் கோபத்திற்காளாகப் போகிறீர்கள்! அக்கம் பக்கம் பார்த்துப் பேசுங்கள் ஐயா😂!
  14. இதுவல்லவே நான் கேட்டது? பா.உவாக வர முதலும் சரி, வந்த பின்னரும் சரி கஜேந்திரகுமார் அவர்கள் இனப்படுகொலை, போர்க்குற்ற விசாரணை இவை தொடர்பாக சர்வ தேச நீதிமன்றங்களில் எதை நகர்த்தினார்? அப்படி எதையும் நகர்த்த முடியவில்லையானால் ஏன் முடியவில்லை? கஜேந்திரகுமார் பா.உ போன மாதம் தான் சட்டத்தரணியானாரா அல்லது ஐ.நாவுக்குக் கடிதம் அனுப்ப ஒரு இங்கிலாந்து பரிஸ்ரரால் மட்டும் தான் முடியுமா?
  15. அவர்கள் பக்கம் இருக்கும் தீவிர முல்லாக்களுக்கும் உங்களுக்கும் வேறுபாடு இனம் மட்டும் தான், குணம் இரு இடங்களிலும் ஒன்று தான்😂! பந்தி பந்தியாக எழுதுகிறீர்கள், ஆனால் உணர்ச்சிவயப் பட்ட உளறலாக அல்லவா இருக்கிறது? ஒரு தகவலும் இல்லை. 2020 இல் ஒரு ஏமாற்றுக் கார முஸ்லிம் ஒளித்திருந்தார் என்பதற்காக 90 களில் முஸ்லிம்கள் கொல்லப் பட்டதும் பொய் என்று ஆகாது. இவை நடந்திருக்கின்றன. இயக்கத்தில் இருந்தவர்களே இதை மறுப்பதில்லை, நீங்கள் வெளி நாட்டில் இருந்து சின்னத்திரையில் பார்த்து விட்டு சும்மா அலட்டிக் கொண்டிருக்கிறீர்கள்😂.
  16. பிரபாகரன் மரணம் , காணாமல் போனோர். இந்த இரண்டிற்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை. காணாமல் போனோர் பற்றி ஒரு தகவலும் இல்லை. அவர்களது உடல்கள் மட்டுமல்ல, அவர்களது உடுதுணிகள் கூட கண்டெடுக்கப் படவில்லை, எனவே அவர்களை உயிரோடிருப்போராகக் கருதித் தேட வேண்டியது அவசியம். பிரபாகரனின் உடல் இறந்த உடனேயே காண்பிக்கப் பட்டிருக்கிறது. இதை "பொடி டபுள்" என்று நம்பும் உரிமை யாருக்கும் இருக்கிறது. ஆனால், அதை வைத்து செல்வம் திரட்ட ஒரு குழு அலைவதை அப்படி நம்புவோர் மனதில் இருத்த வேண்டியது அவசியம்.
  17. இந்த ஊடகவியலாளர் தானே "சுமந்திரன் பா.உ வாக வர இருக்கிறார்" என்று கடந்த டிசம்பரில் இருந்து யூ ரியூபில் வந்து சில்லறை பொறுக்கினார்? திரும்பவும் சில்லறை பொறுக்க ஒரு அரிய வாய்ப்பு! நல்லூர் திருவிழாவில் பிச்சைக் காரர்களுக்கு சீசனலாக வாய்ப்புக் கிடைப்பது போல இவையளுக்கும் பிழைப்பு ஓடுது😂!
  18. ஆதாரங்களை விடுங்கள். உங்கள் ஒரே கருத்திற்கு இரு வேறு விதமான பிரதிபலிப்பை எப்படி விளக்குகிறீர்கள்? ரஞ்சித் எழுதியது," ஓ..இப்ப புரிஞ்சிடிச்சு" என்ற நிலையா? உங்களைப் போல பலரின் சந்தேகத்தையும், நம்ப மாட்டேனென்ற அடம் பிடிப்பையும் அப்படியே காசாக்க சுவிசில் இருந்து ஒரு பக்கா மோசடிப் பேர்வழியை இறக்கினார்களே? அதற்குப் பிறகும் இந்த சந்தேகங்களால் "எவருக்கும் நட்டமில்லை" என்கிறீர்களா😂?
  19. உங்கள் பிரச்சினை என்னவென்று புரியவில்லை😂. ரஞ்சித் விளக்கமாக எழுதியிருக்கிறார், அதற்கு விருப்பக் குறி இட்டிருக்கிறீர்கள். ரஞ்சித் எழுதிய அதே விடயத்தை ஏனையோர் சுருக்கமாக எழுதியிருக்கிறார்கள். அவர்கள் சொல்வது புரட்டு என்று வாதிடுகிறீர்கள்! நான் நினைக்கிறேன், இன்னும் நீங்கள் பிரபாகரன் உயிருடன் இருக்க வேண்டுமென்ற விருப்பத்தில், வெளியே இருந்து வரும் உங்கள் விருப்பத்திற்கு மாறான தரவுகளை உதாசீனம் செய்து விட்டு ஒரு குமிழிக்குள் அமர்ந்திருக்கிறீர்கள்.
  20. புலவர், கஜேந்திரகுமார் பா.உவுக்குத் தான் தன் ஆசனத்தைக் காப்பாற்றும் "தமிழரசு எதிர்ப்பு" அரசியல் இந்த நேரம் தேவைப்படுகிறதென்றால், அரசியல் வாதியல்லாத உங்களுக்கும் அதே பிரச்சினையா? கடிதத்தை தமிழரசுக் கட்சியின் பங்களிப்பில்லாமலே அனுப்பலாம். விளைவில் மாற்றம் இருக்காது. இங்கிலாந்தில் (பெயரளவிலாவது) பரிஸ்ரரான கஜேந்திரகுமார் அவர்கள், இதை முன்னின்று இயக்கி, றோகிங்கியாக்கள் பாவித்த மாற்று வழி மூலம் ICJ முன் இலங்கையின் வழக்கைக் கொண்டு செல்ல என தடை இருந்தது/ இப்போது இருக்கிறது என்று சொல்லுங்கள்?
  21. தம் இனத்திற்கான போராட்டத்திலா 10 மில்லியன் மக்களை நவீன விஞ்ஞான நுட்பங்களெல்லாம் பாவித்து நாசிகள் கொன்றார்கள்?😂 ஹன்னா அரெண்ட் - நாசிகளின் காலத்தில் வாழ்ந்த ஒரு தத்துவாசிரியர் - கீழ் வருமாறு சொல்லியிருப்பது உங்களைப் போன்ற நோக்கர்களுக்குச் சரியாகப் பொருந்துகிறது: “The ideal subject of totalitarian rule is not the convinced Nazi or the convinced Communist, but people for whom the distinction between fact and fiction (i.e., the reality of experience) and the distinction between true and false (i.e., the standards of thought) no longer exist.” சுருக்கமாகத் தமிழில்: கொடூர சர்வாதிகாரிகள் இலகுவாக தம் பக்கம் ஈர்த்துக் கொள்வது சர்வாதிகாரிகளின் கொள்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்டோரயும், எதிர்ப்போரையும் அல்ல! நல்லது கெட்டது, உண்மை போலி இடையேயான வேறுபாடு புரிந்து கொள்ளாத மக்களைத் தான்!
  22. இந்தக் கருத்து, சில புலம் பெயர்ந்த தமிழர்கள் தாயகத்தில் இருந்து எவ்வளவு ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கிறார்கள் என்பதை அப்படியே அச்சொட்டாகக் காட்டும் கருத்து என நினைக்கிறேன்😂. ரணிலும், பின்னர் வந்த என்.பி.பியும் மாவீரர் தினத்தை "தமிழ் குடும்பங்கள் தங்கள் குடும்பத்தில் இறந்த உறவுகளை நினைவு கூரும் நிகழ்வு, எனவே தடுக்க மாட்டோம்" என்று உயர் மட்டத்தில் தீர்மானித்து, வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார்கள். கீழ் மட்டத்தில் உள்ளூர் பொலிஸ் இதை விடக் கடுமையாக நடந்து கொள்வதும், தடுக்க முனைவதும் வருடாந்தம் செய்திகளில் வருகிறது. இலங்கையில் அடுத்த முறை இப்படி ஒரு கேஸ் நீதிமன்றில் வரும் பொழுது இந்த உரையாடலை நினைவு படுத்த முடிகிறதா எனப் பார்க்கலாம்.
  23. உங்களுக்குப் பதில் தெரியும் என்பதால் யாரும் சொல்லாமல் இருக்கிறார்கள் என நினைக்கிறேன். முகநூலில் புலிகளின் இலச்சினையையோ, அல்லது பிரபாகரன் படத்தையோ பகிர்ந்தாலே அவர்களை விசாரணைக்கு அழைக்கும் நிலை இருக்கும் இலங்கையில், பிரபாகரனுக்கு மௌனமாகத் தான் வீர வணக்கம் செலுத்த முடியும். ஒவ்வொரு ஆண்டும், ஆயுத மோதலில் அல்லாமல் உண்ணாவிரதம் இருந்து மாண்ட திலீபனை நினைவு கூர்வதற்குக் கூட அங்கே நீதிமன்றம் ஏறி இறங்க வேண்டிய நிலை இருக்கிறது. இந்த நிலையில் சாதாரணமாக வாழ முயலும் தாயக மக்கள் பிரபாகனுக்கு வெளிப்படையாக அஞ்சலி செலுத்த முடியாது.
  24. ஜெருசலேமை யாரும் விட்டுக் கொடுக்க வேண்டியதில்லை. அதை உலக நகரமாக பிரகடனம் செய்து ஐ.நா வே நிர்வகிக்கலாம். இதற்கு முன்னுதாரணம் முதல் உலகப் போர் காலத்தில் இருந்திருக்கிறது. டான்சிக் (Danzig) என்ற நகரம் இப்படி உலகப் பொது நகரமாக இருந்திருக்கிறது. இறுதியில் ஜேர்மனி அதை ஆக்கிரமித்து ஏற்பாட்டை மீறியது. தற்போது போலந்தில் இருக்கும் Gdansk தான் பழைய டான்சிக். இஸ்ரேல் ஜெருசலேமைக் கேட்பது யூதர்கள் எதிர்பார்த்திருக்கும் "மீட்பர் - Messiah" அங்கே வரக் கூடும் என்று தான் என நினைக்கிறேன். இஸ்ரேல் தற்போது செய்து கொண்டிருக்கும் அநியாயங்களைக் கண்டால், அப்படியொரு மீட்பர் எங்கேயும் வந்து இறங்கப் போவதில்லை!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.