Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. இந்தியா-பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயார்! – ஈரான் அறிவிப்பு. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பிரபல சுற்றுலா தலத்தில் கடந்த 22ஆம் திகதி லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான The Resistance Front (TRF) நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். குறித்த தாக்குதல் சம்பவம் சர்வதேச ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூழும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றத்தை தணிக்க மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சர் சயீது அப்பாஸ் அராச்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் ”இந்தியாவும், பாகிஸ்தானும் தமது சகோதர நாடுகள் எனவும், இரு நாடுகளுக்கு இடையேயும் நுாற்றாண்டு பழமையான கலாசாரம் மற்றும் நாகரிக உறவுகள் உள்ளதாகவும் , மற்ற நட்பு நாடுகளை போல அவர்களுக்கும் தாம் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த இக்கட்டான நேரத்தில், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை தணிப்பதற்கு இரு நாடுகள் இடையே மத்தியஸ்தம் செய்ய ஈரான் தயாராக இருப்பதாகவும்” அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1429580
  2. ரஷ்யாவில் கார்குண்டு வெடிப்பு; இராணுவத் தளபதி உயிரிழப்பு. ரஷ்யாவில் இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில் அந்நாட்டின் இராணுவ துணை தளபதி யாரோஸ்லாவ் மோஸ்காலிக் உயிரிழந்துள்ளார். ரஷ்யா தலைநகர் மாஸ்கோ அருகே உள்ள பாலஷிகா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த காரொன்றே நேற்று திடீரென வெடித்துத்துச் சிதறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் காரில் இருந்த ரஷ்யா ஆயுதப் படையின் செயல்பாட்டுத் துறையின் துணைத் தளபதியான யாரோஸ்லாவ் மோஸ்காலிக் உயிரிழந்தார். அவரின் காரில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டு மர்ம நபர்களால் வெடிக்கச் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயங்கர சத்தத்துடன் நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பால் அப்பகுதியே புகைமண்டலமாக மாறியதாகவும், அருகில் இருந்த கட்டடங்களின் ஜன்னல்கள் வெடித்துச் சிதறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பான தீவிர விசாரணைகளை ரஷ்ய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2025/1429566
  3. பந்தா பரமசிவம், பந்தா காட்டப் போய்… கலியாண வீட்டிலை, அதுகும் சாப்பாட்டு பந்தியிலை… தொங்கட்டானை காட்டிக் கொண்டு நிண்டிருக்கு. 😂 போதாக் குறைக்கு… துபாயிலை ஷேக்கு கூட இப்பிடித்தான் என்று, மொத்த ஷேக்கின்ரை மானத்தையும் வாங்கி போட்டுது. 😁 எனக்கும் நீண்ட நாட்களாக ஷேக்குமார்… ஜட்டி போடுவங்களா, இல்லையா என்ற சந்தேகமும் பந்தா பரமசிவம் மூலம் தீர்ந்தது. 🤣
  4. டுபாய் நைக் ஜட்டி கதை தெரியாது கோசான். வடிவேலுவின்…. டுபாய், விவேகானந்தர் தெருவில் நடந்ததா… 🤣
  5. ஜேர்மனியில்…. நோயாளர் காவு வண்டியின் சேவையும், பணி புரிபவர்களின் வேகமும் மிகுந்த திருப்தியாக உள்ளது. வீதியில்… அவசர ஒலி எழுப்பி செல்லும் போது, மற்றைய வாகன ஒட்டிகள் அதன் முக்கியத்துவம் கருதி உடனேயே இடமும் வலமும் ஒதுங்கி நடு வீதியை அம்புலன்ஸ்சிற்காக ஒதுக்கி விடும் அழகே தனி. வாகன அனுமதிப் பத்திரம் எடுக்கும் போது… அவசர நோயாளர் வண்டி, தீயணைப்பு வண்டியின் முக்கியத்துவத்தை சொல்லிக் கொடுப்பதால்… அனைத்து வாகன ஓட்டிகளும் இதனை நன்கே புரிந்து வைத்துள்ளார்கள்.
  6. கறுப்பு கங்காருவிற்கு வெள்ளை குட்டியும், வெள்ளை கங்காருவிற்கு கறுப்பு குட்டியும் பிறந்திருக்கு.
  7. •ஒரு டவுட்! இலங்கையில் எப்போது எத்தனை மணிக்கு ஈஸ்டர் குண்டு வெடிக்கப்போகிறது என்பதை துல்லியமாக கண்டறிந்து கூறிய இந்திய புலனாய்வு அமைப்புகளால், தங்கள் சொந்த நாட்டில் எல்லை தாண்டி வந்து கொல்லப் போகின்றனர் என்பதை எப்படி கண்டறியாமல் போனது? தோழர் பாலன் தற்போது 26 பேர் கொல்லப்பட்டபோது இந்திய அரசுக்கு வரும் இந்தக் கோவம், 657 தமிழக மீனவர்கள் கொல்லப்படும்போது ஏன் வரவில்லை? தமிழக மீனவர்கள் இந்தியர்கள் இல்லையா? அல்லது இந்துக்கள் இல்லையா? தோழர் பாலன்
  8. •அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் தேசபக்தி இந்திய அரசு பாகிஸ்தானுடன் செய்துகொண்ட நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்திருப்பது தவறான முடிவு ஆகும். யாரோ மூன்று பேர் அதுவும் அவர்கள் யார் என்று உறுதிப்படுத்தாத நிலையில் அவர்கள் செய்த செயலுக்காக இப்படி நீரை நிறுத்துவது தவறான ஒரு முன்னுதாரணம். ஏனெனில் நாளைக்கு இதே போன்று சீனா பிரமபுத்ரா நதி நீரை நிறுத்தினால் அப்போது இந்திய அரசால் குரல் எழுப்ப முடியாது. தேர்தல் நெருங்குவதால் மோடி அரசு வழமைபோல் பயங்கரவாதத்தை வைத்து தேசபக்தி விளையாட்டு காட்டுகிறது. இதனால் பாதிக்கப்படப்போவது அப்பாவி இந்திய மக்களும் பாகிஸ்தானிய மக்களுமே. தோழர் பாலன்
  9. இந்த ஒரு ஒப்புதல் வாக்குமூலமே.... பாகிஸ்தான் மீது இந்தியா உடனடியாக போர் தொடுக்க போதுமானது. இனியும் ஏன் தாமதிக்கின்றார்கள். அல்லது சீனாக்காரனுக்கு பயந்தமாதிரி, பாகிஸ்தான்காரனுக்கும் இந்தியா பயப்பிடுதோ.
  10. இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலவி வரும் போர் பதற்றம் கவலையளிக்கின்றது! -ஐ.நா ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பிரபல சுற்றுலா தலத்தில் கடந்த 22ஆம் திகதி லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான The Resistance Front (TRF) நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். குறித்த தாக்குதல் சம்பவம் சர்வதேச ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூழும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் மிகவும் கவலையளிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் இரு நாடுகளும் போர் பதற்றத்தை தனித்து, பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். https://athavannews.com/2025/1429484
  11. இந்தியா, பாகிஸ்தான் இடையே ஆரம்பித்துள்ள, இந்த துப்பாக்கிச் சண்டை வளர்ந்து... விமான குண்டு வீச்சு வரை, விரிவடைய வேண்டும் என வாழ்த்துகின்றேன்.
  12. இம்முறையாவது ஆபிரிக்க இனத்தவருக்கு பாப்பாண்டவர் பதவியை கொடுப்பதே முறை. நெடுகவும் வெள்ளைத் தோல் உடையவர்களே இப்பதவியில் இருப்பது அழகல்ல.
  13. எமது மருத்துவம் பிற மொழி மாணவர்களை சென்றடைவதில் மகிழ்ச்சி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் சிங்களவன்.... சில வருடங்களில் எமது மருத்துவத்தை, தனது மருத்துவம் என்று உரிமை கோரக் கூடிய சுபாவம் உள்ளவன். எமது ஊர்களை திருடி சிங்களப் பெயர் வைக்கின்றவன், கதிர்காமக் கந்தனை திருடி வைத்திருப்பவன், இராவணனை... உரிமை கோருபவனிடம்... நம்பி எதனையும் கொடுக்க யோசிக்க வேண்டி உள்ளது.
  14. அதே... தான். சில நாட்களுக்கு முன்பு நடந்த டன் பிரசாத் கொலையில் கூட, கொலையாளி முகக் கவசம் அணிந்த படி... டன் பிரசாத் வசித்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு இரவு ஒன்பது மணியளவில், மக்கள் நடமாட்டம் உள்ள நேரம் தயக்கமில்லாமல் வந்து சுட்டு விட்டு சென்று இருக்கின்றார்கள்.
  15. @satan //அதென்ன முகக்கவசமா?அதாலை ஏன் முகத்தை மூடுகிறீர்கள்?// பாவிக்காத புது ஜட்டிகள்…. நல்ல வாசனையாக இருக்கும். 😁😂🤣 பேராசிரியர் ரஜனி கதை நான் கேள்விப்படவில்லையே. சுவராசியமாக இருக்கும் போலுள்ளது. நமக்கும் சொல்லுறது. 😂
  16. சில கொலைகளை மோட்டார் சைக்கிள் தலைக் கவசத்துடன் வந்து துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிப் போவதால் அடையாளம் காண்பதில் சிக்கலாக உள்ளதாம்.
  17. "கிளீன் ஸ்ரீலங்கவுக்கு" வந்த சோதனை. 😂
  18. மித்தெனிய முக்கொலைச் சம்பவம் – மற்றுமொரு நபர் கைது! மித்தெனிய முக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபரை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் இந்தியாவில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் மித்தெனிய பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கஜ்ஜா எனப்படும் அருண விதானகமகே மற்றும் அவரது இரு பிள்ளைகள் உயிரிழந்தனர். மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் குறித்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தின் போது மோட்டார் சைக்கிளைச் செலுத்தியதாகத் தெரிவிக்கப்படும் சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். … இதேவேளை கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெவிநுவர ஶ்ரீ விஷ்ணு கோயிலின் தெற்கு வாயிலுக்கு முன்பாக இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி, குற்றச் செயலானது கடந்த மார்ச் 21ஆம் திகதி இடம்பெற்றிருந்ததுடன் இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட துப்பாக்கிதாரிகளை வாகனத்தில் அழைத்துச் சென்றதோடு, துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு சதித்திட்டம் தீட்டி அவர்களுக்கு உதவியமைக்காக குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் தலல்ல தெற்கு, கந்தர பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவால் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. https://athavannews.com/2025/1429472
  19. அடுத்தவர்.... ஆபிரிக்க, கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து வந்தால் நன்றாக இருக்கும். 👍 கிழக்கு ஆசியா... எனும் போது... பான் கீ மூன் போன்ற ஆட்கள் அல்ல. இந்திய, ஸ்ரீலங்கா போன்ற ஆட்கள்... இதற்கு சரிப்பட்டு வர மாட்டார்கள். எனது வாக்கு.... ஆபிரிக்கருக்கே. 🙂
  20. பாகிஸ்தான் பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு இந்திய அரசாங்கம் அறிவிப்பு! இந்தியாவிலுள்ள பாகிஸ்தான் பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு இந்திய அரசாங்கம் இன்று உத்தியோகபூர்வாக அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இந்திய விமானங்கள் தமது வான் வெளியை பயன்படுத்துவதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் இன்று தடை விதித்துள்ளது. காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் உடனான இராஜதந்திர உறவுகளை இந்தியா நிறுத்திக்கொண்டுள்ள நிலையில் பாகிஸ்தானும் இந்தியாவிற்கு எதிரான தீர்மானங்களை அறிவித்து வருகின்றது. இதேவேளை பிரபல சமூக ஊடக தளமான எக்ஸ் இல், இந்திய மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கமைய, பாகிஸ்தான் அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் அனந்த்நாக்கில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான முக்கிய பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. …………………………………….. பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ள நிலையில் தனது நாட்டு வான்வெளியில் இந்திய விமானங்கள் நுழைய பாகிஸ்தான் இன்று தடை விதித்தது. அத்துடன் கராச்சி கடலோரப் பகுதியில் இன்றும் நாளையும் தரையில் இருந்து இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை நடத்துவதற்கு பாகிஸ்தான் திட்டமிட்டிருப்பதாக ANI நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கை எதிராக இன்று மாலை பாகிஸ்தான் எதிர்வினையாற்றும் என பாகிஸ்தான் பிரதமர், வெளியுறவு அமைச்சர் இசாக் தர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் முதலாவதாக தனது நாட்டு வான்வெளியில் இந்திய விமானங்கள் நுழைய பாகிஸ்தான் தடை விதித்துள்ளதுடன் மேலும் பல தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1429433

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.