Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. @குமாரசாமி //மிளகாய்த்தூள். சொல்வழி கேக்காத எந்த தாட்டான் குரங்குக்கும் மாங்காயோடை மிளகாய் தூளை கலந்து வைச்சு பாருங்கோ ...பின்னங்கால் பிடரியிலை பட தலை தெறிக்க ஓடித்துலையும். 😂 வாற கிழமை சந்திப்பம்தானே. அப்ப இன்னொரு ஐடியா சொல்லுறன்.😄// வாற கிழமை... உங்களுடைய அந்த பொன்னான ஐடியாவை கேட்க ஆவலாக உள்ளேன். 🙂 ஏனென்றால்.... குரங்குகளின் தொல்லை பெருந் தொல்லையாக கிடக்கு. 🤥 ஒரு குரூப் வந்தால் காரியமில்லை. கருங்குரங்கு, செங்குரங்கு, மந்தி, ஒரங்குட்டான், கொரில்லா என்று... பன்றி போலை கூட்டமாக வருகுதுகள். அதுகளை பிடித்து.... யாழ்ப்பாண முறையில் நலம் எடுத்து அனுப்ப வேண்டும் என்று திட்டமும் இருக்கு. 😂
  2. இலங்கையில் நிற்கும் போது…. ஒரு உணவகத்தில் வெள்ளை குழல் புட்டும்…. வெங்காயம், நெத்தலி போட்டு பொரித்து எடுத்த பிரட்டல் கறியும் சாப்பிட்டேன். 👍🏽 ஆஹா…. அப்படி ஒரு சுவையான உணவாக இருந்தது. இதற்கு முன் அந்தச் சுவையில் நெத்தலியை சாப்பிட்டதே இல்லை. இப்ப நினைத்தாலும் அந்த வாசனையும், சுவையும் மறக்க முடியாதது. இதனை சாப்பிட என்றே… மீண்டும் ஒருக்கால், ஶ்ரீலங்காவுக்கு விமான ரிக்கற் போட்டு போக வேண்டும் போல் உள்ளது. 🙂
  3. அனுரா… புராணம் தூக்கலாக இருக்கு. 😂 உங்களுக்கு…. ஶ்ரீலங்காவிற்கு கொலிடே போற ஐடியா இருக்குப் போலை. 🤣 பிற் குறிப்பு: பகிடிக்கு எழுதியது. யாரும் இதனை சீரியசாக எடுக்க வேண்டாம். 😜
  4. இந்த முன்னாள் நீதிபதிப் பெண்மணி… தனது சட்டத்தரணி கணவரின் தவறான வழிகாட்டலில் வழங்கப் பட்ட நீதி தவறி ஒரு தலைப் பட்சமாக வழங்கிய தீர்ப்புகளுக்கும், அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இனி யார் நீதியை பெற்றுக் கொடுப்பது. அல்லது…. தலை விதியே என்று இருப்பதா. அரசே… முன் வந்து, அவர்களுக்கு தகுந்த நீதியை பெற வழி சமைத்துக் கொடுக்க வேண்டும். ஏற்கெனவே பாதிக்கப் பட்டவர்கள் தமது தரப்பு சட்டத்தரணிக்கு பணம் கொடுத்து வாதாடியும்…. நீதிபதியின் கீழ்த்தரமான செய்கையால், நொந்து போய் உள்ளவர்களை மீண்டும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கவோ அல்லது மீண்டும் சட்டத்தரணி பிடித்து பணம் செலவழித்து வாதாடி காலத்தையும், நேரத்தையும் வீணாக்க விடுவது சரியல்ல.
  5. ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்…. பெண் இருப்பாள். 🙂 ஒரு பெண்ணின் தோல்விக்குப் பின்…. ஆண் இருப்பான். 😂
  6. 5- வகையான நெத்திலி மீன் வறுவல் செய்முறைகள்.. 1. சாதாரண கார நெத்திலி மீன் வறுவல் பொருட்கள்: நெத்திலி மீன் – 250 கிராம் மிளகாய் தூள் – 1½ டீஸ்பூன் மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன் உப்பு – தேவைக்கு எண்ணெய் – வறுக்க செய்முறை: 1. மீனை சுத்தம் செய்து மசாலா, எலுமிச்சை சாறு சேர்த்து மேரினேட் செய்யவும். 2. 30 நிமிடம் ஊறவைக்கவும். 3. எண்ணெயில் பொன்னிறமாக வறுக்கவும். --- 2. மசாலா நெத்திலி மீன் வறுவல் பொருட்கள்: நெத்திலி மீன் – 250 கிராம் வெங்காயம் – 1 (நறுக்கியது) தக்காளி – 1 இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன் கரம் மசாலா – ½ டீஸ்பூன் உப்பு – தேவைக்கு எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் செய்முறை: 1. கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது வதக்கவும். 2. தக்காளி, மசாலா சேர்த்து வதக்கவும். 3. நெத்திலி மீன் சேர்த்து மெல்லிய தீயில் வதக்கவும். 4. குருமா போல் இல்லாமல் எண்ணெய் பிரியும் வரை வறுக்கவும். --- 3. கருவேப்பிலை நெத்திலி மீன் வறுவல் பொருட்கள்: நெத்திலி மீன் – 250 கிராம் பச்சை மிளகாய் – 3 வெங்காயம் – 1 கருவேப்பிலை – 1 கைப்பிடி மிளகு – 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் உப்பு – தேவைக்கு எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் செய்முறை: 1. மிளகு, சீரகம், பச்சை மிளகாய், கருவேப்பிலை விழுது அரைக்கவும். 2. மீனை அதில் ஊறவைக்கவும். 3. வெங்காயம் வதக்கி, ஊறவைத்த மீன் சேர்த்து வறுக்கவும். 4. மணமிக்க கருவேப்பிலை நெத்திலி வறுவல் தயார். --- 4. குர்குரா நெத்திலி மீன் வறுவல் (Crispy) பொருட்கள்: நெத்திலி மீன் – 250 கிராம் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன் அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன் கார்ன் பிளோர் – 1 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவைக்கு எண்ணெய் – ஆழ்வறுக்க செய்முறை: 1. மீனை மசாலா, அரிசி மாவு, கார்ன் பிளோருடன் கலக்கவும். 2. எண்ணெயில் ஆழ்வறுத்து மொறு மொறுப்பாக எடுத்துக்கொள்ளவும். 3. சூடாக சாப்பிட அருமை. --- 5. கொத்துமல்லி நெத்திலி மீன் வறுவல் பொருட்கள்: நெத்திலி மீன் – 250 கிராம் கொத்தமல்லி இலை – ½ கப் பச்சை மிளகாய் – 2 இஞ்சி – சிறிதளவு பூண்டு – 4 பல் எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன் உப்பு – தேவைக்கு எண்ணெய் – வறுக்க செய்முறை: 1. கொத்தமல்லி, பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு விழுது அரைக்கவும். 2. மீனை அதில் எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து ஊறவைக்கவும். 3. எண்ணெயில் பொன்னிறமாக வறுக்கவும். 4. பச்சை மணம் மிக்க வறுவல் கிடைக்கும். தமிழ்நாடு ரெசிப்பீஸ்
  7. ஒருவரை நீண்ட நாட்களாக காணவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கருதிய போலீஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர். வழக்கு விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்டவரின் வக்கீல் எழுந்து, “மைலார்ட்! இவர் யாரைக் கொலை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டதோ, அவரே இன்னும் ஐந்து நிமிடத்தில் இதே நீதிமன்றத்தின் கதவு வழியே உள்ளே வரப் போகிறார். நீங்கள் அதைப் பார்த்த பின்பு, இவர் குற்றமற்றவர் என்பதை உணர்வீர்கள்” என்று கூறி அமர்ந்துவிட்டார். நீதிபதி உட்பட எல்லோரும் நீதிமன்றக் கதவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். 5 நிமிடம், 10 நிமிடம் கழிந்தது. ஒருவரும் வரவேயில்லை. இப்போது வழக்கறிஞர் எழுந்தார். “மைலார்ட்! நீங்கள் உட்பட யாருமே காணாமல் போனவர், கொலைதான் செய்யப்பட்டவர் என்பதை முழுமையாக நம்பவில்லை. அதனால்தான் எல்லோரும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தீர்கள். எனவே, உங்களுக்கு இருக்கும் சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு அளித்து, அவரை விடுதலை செய்ய வேண்டும்” என்று கூறிவிட்டு கம்பீரமாக அமர்ந்தார். பிற்பகலில் நீதிபதி தீர்ப்பை வாசித்தார். குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை அளித்தார். வக்கீல் எழுந்து, “எப்படி மைலார்ட்?” என்று கேட்டார். அதற்கு நீதிபதி சொன்னார், “அந்த பத்து நிமிடமும் நான் வாசலைப் பார்த்தது உண்மைதான். ஆனால், ஒருதடவை கூட குற்றம் சாட்டப்பட்டவர் வாசலைப் பார்க்கவில்லை.!!!! 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 👩‍❤️‍💋‍👨பேசும் கவிதைகள்💞 Tamil Kavithai ·
  8. ஈஸ்டர் தாக்குதல்; கைது செய்யப்படவுள்ள முன்னாள் இராணுவ அதிகாரிகள்! 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக எதிர்காலத்தில் ஒன்று அல்லது இரண்டு முன்னாள் இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களைக் கண்டுபிடிப்பதில் தொடர்ச்சியான விசாரணைகள் கவனம் செலுத்துவதாகவும் ஜனாதிபதி மேலும் கூறினார். தாக்குதல்கள் தொடர்பில் புதிய விசாரணைகளை நடத்த வேண்டியிருக்கலாம். சாட்சியங்கள் அழிக்கப்பட்டு மறைக்கப்படுவதும், விசாரணை தவறாக வழிநடத்தப்படுவதும் நடந்த பிற சம்பவங்களில் அடங்கும். அமெரிக்காவிற்கு தனது விஜயத்தின் போது நடைபெற்ற அங்கு வசிக்கும் இலங்கை சமூகத்தினருடனான சந்திப்பின் போது இந்த அறிவிப்பினை ஜனாதிபதி வெளியிட்டார். https://athavannews.com/2025/1448672
  9. மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைக்க அனுமதிக்கமாட்டேன்! -டொனால் ட்ரம்ப் உறுதி. மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைக்க அனுமதிக்கப்போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேற்கு கரையில் குடியிருப்புகளை அமைக்க இஸ்ரேல் மேற்கொண்டு வரும் நடவடிக்கை குறித்து வெள்ளைமாளிகையில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” மேற்கு கரை பகுதிகளை இஸ்ரேலுடன் இணைக்க அனுமதிக்கமாட்டேன். இஸ்ரேல் இந்த நடவடிக்கை மேற்கொள்ள அனுமதிக்கமுடியாது. இந்த நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க நேரம் வந்துவிட்டது” எனத் தெரிவித்துள்ளார். காசா முனை மற்றும் மேற்கு கரை என இரு பகுதிகளாக பாலஸ்தீனம் உள்ளது. அதேவேளை, மேற்கு கரையில் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதனிடையே, மேற்கு கரையில் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை இஸ்ரேல் மேற்கொண்டு வருவதாக பல்வேறு நாடுகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. ஆனாலும், பல்வேறு நாடுகளின் எதிர்ப்பையும் மீறி மேற்கு கரையில் இஸ்ரேல் குடியிருப்புகளை அமைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1448657
  10. வெளிநாட்டில் உயிரிழக்கும் இலங்கை பணியாளர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை அதிகரிப்பு! வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர் ஒருவர் பணியின்போது உயிரிழந்தால், அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை 20 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில், அதன் தலைவர் கோசல விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். முன்னதாக வெளிநாட்டில் பணியாற்றும் போது மரணம் ஏற்பட்டால், குடும்பத்தினருக்கு 6 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கு மேலும் 14 இலட்சம் ரூபாய் சேர்த்து மொத்தம் 20 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார். மேலும், வெளிநாட்டு ஊழியர்களின் கணவர் அல்லது மனைவி தொழில் தொடங்குவதற்காக கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களின் சிறுவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை அதிகரிக்கப்படவுள்ளதாகவும், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதேவேளை, இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதம் வரை வெளிநாட்டு தொழிலாளர்கள் 5.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பணத்தை நாட்டிற்கு அனுப்பியிருப்பதாகவும், ஆண்டு இறுதிக்குள் இது 7.2 பில்லியன் டொலர்கள் வரை உயரும் எனவும் அவர் குறிப்பிட்டார். தற்போது 226,240 இலங்கையர்கள் வெளிநாடுகளில் பணியாற்றி வருவதாகவும், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 3 இலட்சத்தை அண்மிக்கும் என்றும் கோசல விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1448549
  11. குமாரசாமி அண்ணே… கடைசியாக எடுத்த ஆயுதம் என்ன என்பதையும் சொல்லுங்கண்ணே. 🙂 எனது தோட்டத்திலும் சில குரங்குகள், 🐒🐒🐒 குரங்கு சேட்டை விட்டு கொண்டு திரிகுதுகள்… அதுகளின் வாலை ஒட்ட நறுக்க வேண்டி இருக்குது. 🐒🐒 🐵 😂
  12. 100 வருடங்களை தாண்டிய வீரகேசரி…. டெல்ஃப்ட் தீவு என்று நெடுந்தீவை எழுதும் கொடுமையை என்னவென்று சொல்வது.
  13. இந்தத் திரி ஒருவரின் கண்ணிலும் படவில்லையா.... அல்லது, வாசித்து விட்டு "கோமா நிலை"க்கு போய் விட்டார்களா.
  14. ☢️🌊 ஐரோப்பிய நாடுகள் கடலில் 2 லட்சம் அணுக்கழிவு டிரம்முகளை கொட்டியுள்ளன – இதன் விளைவுகளை மனிதர்கள் விரைவில் சந்திக்க நேரிடலாம். பல தசாப்தங்களாக, சில ஐரோப்பிய நாடுகள் 2 லட்சம் அணுக்கதிர் கழிவு டிரம்முகளை நேரடியாக கடலில் கொட்டியுள்ளன. அது சேதமில்லாமல் இருக்கும் என்று நம்பப்பட்டாலும், விஞ்ஞானிகள் இப்போது எச்சரிக்கிறார்கள் – காலப்போக்கில் அவை அழுகி, அபாயகரமான கதிர்வீச்சு கடல் சூழலுக்கு கசியக்கூடும் என்று. இதனால் கடல் உயிரினங்கள் மட்டுமின்றி, மனிதர்களின் உணவு பாதுகாப்பும் ஆபத்தில் சிக்கக்கூடும். உலக மக்கள் பல கோடிகள், கடல் உணவையே முக்கிய உணவாக நம்புகின்றனர். கதிர்வீச்சு கசிவு, மீன்களையும் கடலையும் மட்டுமல்லாது, மனித ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடும். இந்த அதிர்ச்சி செய்தி, குறுகிய கால நன்மைக்காக மனிதர்கள் எடுத்த தவறான முடிவுகள், நீண்டகால துன்பத்தை உருவாக்கும் என்பதை நினைவூட்டுகிறது. சுற்றுச்சூழலை காக்க உடனடி நடவடிக்கை அவசியம். Tamil Trending Newsz
  15. 🐛 பிளாஸ்டிக்கைத் தின்னும் பூச்சிகள்! வாக்ஸ்வார்ம் (Waxworm) பூச்சிகள் 24 மணி நேரத்தில் ஒரு பிளாஸ்டிக் பையை முழுவதும் தின்றுவிடும் – ஆனால் சில நாட்களில் அவை இறந்துவிடுகின்றன. அறிவியலாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்தது என்னவென்றால், வாக்ஸ்வார்ம் பூச்சிகள் பிளாஸ்டிக்கையே உணவாக எடுத்துக்கொள்ளும் தன்மையுடையவை. சில பூச்சிகள் சேர்ந்து ஒரு பிளாஸ்டிக் பையை 24 மணி நேரத்திலேயே தின்றுவிடும் சக்தி கொண்டவை. இது பிளாஸ்டிக் மாசுபாடு குறைப்பதில் புதிய நம்பிக்கையைத் தருகிறது. ஆனால், இந்த உணவு அவற்றுக்கு இயற்கையானதல்லாததால், சில நாட்களில் அவை உயிரிழந்து விடுகின்றன. எனவே, பூச்சிகளை நேரடியாகப் பயன்படுத்துவதற்கு பதிலாக, விஞ்ஞானிகள் அவற்றின் உடலில் இருக்கும் சிறப்பு என்சைம்களை (enzymes) ஆராய்ந்து, அதை பயன்படுத்தி பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்கும் வழிகளைத் தேடி வருகின்றனர். இது வெற்றிகரமாக செயல்பட்டால், உலகளாவிய பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். 🌍♻️ Tamil Trending Newsz
  16. 🏆 100 வயது முதியவர், ஒரே நிறுவனத்தில் 84 ஆண்டுகள் பணியாற்றி உலக சாதனை படைத்தார். அரிதான வரலாற்றுச் சாதனையாக, 100 வயதுடைய ஒருவர் உலகின் ‘மிக விசுவாசமான ஊழியர்’ என கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். அவர் ஒரே நிறுவனத்தில் 84 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றியுள்ளார். இன்றைய வேகமான தொழில்சூழலில், இப்படியான அர்ப்பணிப்பு மற்றும் நீண்ட கால உறுதிப்பாடு வியப்பை ஏற்படுத்துகிறது. ஓய்வு பெற்றிருக்கும் வயதில் கூட, வேலைக்கான பாசமும், கட்டுப்பாடும், ஒழுக்கமும் அவரை முன்னெடுத்துச் சென்றது. இந்த சாதனை, மனித உள்ளத்தின் வலிமையையும், வாழ்க்கையில் அர்த்தமுள்ள நோக்கத்தை தக்கவைத்துக்கொள்ளும் சக்தியையும் நிரூபிக்கிறது. 🌟 அவரது பயணம், அடுத்த தலைமுறைகளுக்கு ஒரு பேருத்வேகமாக திகழ்கிறது. உண்மையான உழைப்பும் விசுவாசமும் எப்போதும் பாராட்டப்படும் என்பதற்கான சான்றாக இந்த சாதனை விளங்குகிறது. Tamil Trending Newsz
  17. எங்கடை ஆட்களும் லேசுப்பட்ட ஆட்கள் இல்லை. ஒரு தமிழ் பொம்பிளை நீதிபதிக்கு கீழே தங்கள் வேலை செய்வதோ என்று "பெட்டிசன்" போடுற ஆட்கள் இருக்கும் மண் என்பதனையும் கவனத்தில் எடுக்க வேண்டும். நாணயத்திற்கு இரு பக்கங்கள் உண்டு சாத்தான்.
  18. பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சர்கோசி குற்றவாளி என நிரூபிப்பு! பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி ஒரு முக்கிய ஊழல் விசாரணையில் குற்றவியல் சதித்திட்டத்தில் குற்றவாளி என வியாழக்கிழமை (25) நிரூபிக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு தனது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கு நிதியளிப்பதற்காக லிபிய சர்வாதிகாரி முஅம்மர் கடாபியிடமிருந்து மில்லியன் கணக்கான பணத்தைப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களே நிரூபிக்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமை பிற்பகுதியில் தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அதேநேரம், பாரிஸ் குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள், 2007 முதல் 2012 வரை ஜனாதிபதியாக இருந்த வலதுசாரி அரசியல்வாதியை, சட்டவிரோத பிரச்சார நிதி மற்றும் மோசடி போன்ற பல கடுமையான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்தனர். தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சர்கோசிக்கு உரிமை உண்டு. மேலும் இந்த வழக்கில் எந்த தவறும் செய்யவில்லை என்று அவர் மறுத்துள்ளார். வழக்குரைஞர்களுக்கும் மேல்முறையீடு செய்ய உரிமை உண்டு. https://athavannews.com/2025/1448540
  19. பொலிஸாரைக் கண்டு தப்பியோடிய சந்தேக நபர் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழப்பு! கிளிநொச்சி, இராமநாதபுரம் பகுதியில் குற்றச் செயலுடன் தொடர்புடைய நபரை பொலிஸார் கைது செய்வதற்கு வீடு சென்ற வேளை பொலிஸாரை கண்டு தப்பியோடிய சந்தேக நபர் கிணறொன்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது ” நேற்றிரவு மாலை சுமார் 6.30 மணி அளவில் குறித்த பகுதியில் சட்ட விரோத கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக பொலிஸாருக்கு ரகசிய தகவலொன்று கிடைத்துள்ளது. இதனையடுத்து பொலிஸார் குறித்த பகுதிக்கு சென்றுள்ள நிலையில், பொலிஸாரைக் கண்டு அதிர்சியடைந்த சந்தேக நபர் பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட போது எதிர்பாராத விதமாக அப்பகுதியில் இருந்த கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். பொலிஸாரின் விசாரணையில் அதே பகுதியைச்சேர்ந்த 24வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார் எனத் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேதிக விசாரணைகளை இராமநாதபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2025/1448513

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.