Everything posted by vasee
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
3 ஆம் நாள் வெய்யில் உள்ளதால் ஆடுகளம் துடுப்பாட்டத்திற்கு உதவும், இந்த ஆடுகளம் முதல் இரு நாளும் மேக மூட்டமாகவும் மெதுவாகவும் இருந்ததால் வழமையான நேர்கோட்டில் விளையாடும் துடுப்பாட்டம் சிக்கலாக இருக்கும், ஆனால் மூன்றாம் நாள் மேக மூட்டம் இல்லாவிட்டால் காற்றில் பந்து சுவிங் ஆகாது அத்துடன் ஆடுகளம் காய்ந்து கடினமானால் பந்து மட்டைக்கு இலகுவாக வரும் அதனால் விளையாடுவதற்கு இலகுவாக இருக்கும் என பொதுவாக கூறப்படுகிறது. தென்னாபிரிக்கா வெல்லுமா? எனது அபிப்பிராயப்படி துடுப்பாட்டத்திற்கு ஒப்பீட்டளவில் இலகுவான நாளாக மூன்றாவது நாள் இருக்கின்ற போதும் தென்னாபிரிக்கா வெல்வதற்கான சாத்தியகூறு மிக மிக குறைவாகவே உள்ளதாக கருதுகிறேன். கேசல்வூட் பந்தின் கட்டினை சிறப்பாக பயன்படுத்தும் பந்து வீச்சாளர், இந்த மூன்றாம் நாள் இயல்பாகவே அவருடைய நாளாக இருக்கும், கடுமையான ஆடுகளத்தில் அவர் எதிர்பார்க்கும் பந்தின் செயற்பாட்டினை அவரினால் இலகுவாக செய்ய முடியும். லயன் பந்துவீச்சுக்கு மூன்றாம் நாள் சிறப்பாக இருக்கும். பந்தில் சுவிங் இற்கு ஏற்ற நிலை மூன்றாம் நாள் இல்லாவிட்டாலும் அவுஸ்ரேலிய பந்து வீச்சாளர்கள் லோர்ட்ஸ் மைதானத்திற்குரிய (வேறு எந்த மைதானமும் இப்படி இல்லை என கருதுகிறேன்) சரிவினை வைத்து கிரீசினை பயன்படுத்தி பந்து வீசும் போது ஏற்படும் கோணங்களுடன் பந்தின் கட்டை சிறப்பாக பயன்படுத்தி அதன் லைனை கட்டுப்படுத்தி மட்டையின் உள்ளேயும் வெளியேயும் பந்தினை கட்டுப்படுத்துவார்கள் குறிப்பாக கேசல்வூட். அவுஸ்ரேலியாவின் களத்தடுப்பு எப்போதும் தாக்குதல் முறையானது, எல்லைக்கோட்டிற்கு களத்தடுப்பாளர்களை வைத்து பாதுகாப்பாக விளையாடமாட்டார்கள், அதிக பட்சம் ஒரு வீரரை மட்டும் எல்லை கோட்டில் நிறுத்தி வைத்து துடுப்பாட்டக்காரர்களை அடித்தாட தூண்டுவார்கள், மூன்றாம் நாளாக இருந்தாலும் ஆடுகளத்தின் தன்மை இந்த அடித்தாடும் ஆட்டத்திற்கு ஏற்றதல்ல ஆனால் மிக நெருக்கமான களத்தடுப்பு துடுப்பாட்டக்காரர்களை தவறிழைக்க வைக்கும். இந்த அவுஸ்ரேலிய (அனுபவமிக்க) பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு 200 மேலான ஓட்டத்தினை எடுக்க தென்னாபிரிக்க அணியினால் முடியாது என நான் கருதுகிறேன். இந்த இனிங்ஸில் ஸ்ராக்கின ஆரம்ப ஓவர்களில் நிதானமாக விளையாடினால் (அவரது லேட் சுவிங்) பின்னர் பெரிதாக ரிவர்ஸ் சுவிங் இருக்கும் என கருதவில்லை ஆனால் கமின்ஸ், லயன், குறிப்பாக கேசல்வூட் மிக ஆபத்தான பந்து வீச்சாளர்கள். தென்னாப்ரிக்கா முதல் 40 ஓவர்களை ஒன்று அல்லது இரண்டு விக்கெட் மட்டும் இழந்து தாக்குபிடித்தால் (பந்து மென்மையான பின் ஓட்டங்களை இலகுவாக பெறமுடியும்) வெல்வதற்கான வாய்ப்புண்டு, ஆனால் ஆரம்ப ஓவர்களில் அடித்தாட முற்பட்டு விக்கெட்டுக்களை இழந்தால் தோல்வி நிச்சயம்.
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
பொதுவாக 2ஆம் நாள் இலகுவாகவும் 3 ஆம் நாள் ஒப்பீட்டளவில் ஓரளவு இலகுவாகவும் அதன் பின்னர் நிலமை கடினமாகவும் மாறிவிடும், அதனால் 2 ஆம் நாளின் பெரும்பகுதியினை தென்னாபிரிக்கா முழுமையாக விளையாடினால் தென்னாபிரிக்கா வெல்ல வாய்ப்பு நிறைய உள்ளது, 2 ஆம் நாளும் மேக மூட்டமாக இருந்தால் தென்னாபிரிக்காவின் நிலை கடினமாகிவிடும், ஆனால் தற்போது கூட தென்னாபிரிக்கா நிலை கடினமாகவே உள்ளது, வெற்றி வாய்ப்பு மிக குறைவாக உள்ளது.
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
மேக மூட்டமாக இருந்தமையாலா தென்னாபிரிக்கா பந்து வீச்சை தெரிவு செய்த்தது? வேலை கடுமையாக இருந்தமையால் இடையில் ஒரு சிறிது நேரம் மட்டுமே பார்க்கமுடிந்தது, இரண்டாம் நாள் தேனீர் இடைவேளை வரையாவது தென்னாபிரிக்க துடுப்பாடாவிட்டால் போட்டியில் இலகுவாக தோற்றுவிடும். இந்த ஆடுகளத்தில் உள்ள ஈரலிப்பு காயும் போது சமச்சீரற்று காயும் போது பந்து வெவ்வேறு உயரத்தில் எழுந்து வரும், பொதுவாக முதலாவது இனிங்ஸ் கடினமாக இருந்தாலும் முதல் துடுப்பாடவே விரும்புவர் ஏனெனில் 4 ஆவது இனிங்ஸ் மிகவும் கடினமாகிவிடும்.
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
அவுஸ்ரேலிய அணியில் 3ஆவதாக விளையாடிவரும் மானஸ் லபுசேங் மோசமான போர்மில் இருந்து வருவதால் அணியில் அவரின் நிலை தொடர்பில் நெருக்கடிகள் அவருக்குள்ள நிலையில் இந்த போட்டியில் ஆரம்ப துடுப்பாட்டக்காரராக (2ஆவதாக) களமிறங்க உள்ளார். யாரும் இவரை அதிக ஓட்டம் எடுப்பவர் எனும் விசப்பரீட்சையில் இதுவரை இறங்கவில்லை என தெரிகிறது, இந்த போட்டியில் அதிக ஓட்டங்களை எடுத்து பலரிற்க்கும் முட்டைகளை வழங்க வாழ்த்துக்கள். வழமையாக இங்கிலாந்து ஆடுகளம் அவுஸ்ரேலிய ஆடுகளம் போல இருக்காது பந்து அதிகமாக சுவிங் ஆகும் ஆடுகளம் அத்துடன் டூக் பந்தும் அதிகம் சீம் மற்றும் சுவிங் அதிகம் உள்ள இந்த ஆடுகளத்தில் தாமதித்து விளையாடவேண்டும் என கூறுவார்கள், இந்த ஆடுகளத்தில் தென்னாபிரிக்காவினை விட அவுஸ்ரேலியாவிற்கு அதிக அனுபவம் உண்டு, கடந்த காலத்தில் இங்கு அவுஸ்ரேலியா பல வெற்றிகளை குவித்துள்ளது. போட்டியில் கலந்து கொள்ளாதவர்கள் உடனடியாக கலந்து கொள்ளவும், போட்டி முடிவு நேரம் நெருங்கி கொண்டுள்ளது.
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
இந்த ஆண்டுஇங்கிலாந்தில் கோடைகாலம் கடும் வரட்சி நிலவுகிறதாக கூறப்படுகிறது, சுழல் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமையலாம். Pitch and conditions: Look up and look down It had been a very dry start to the English summer up until the last week. Neither Australia nor South Africa have much experience of playing at Lord's in early June, and there will be some guessing about the conditions. Given the dry spring, the surface is on the drier side which could mean more of an impact for the spinners. The forecast looks good with warm temperatures coming, although there is a chance of a few thunderstorms. South Africa : 1 Aiden Markram, 2 Ryan Rickleton, 3 Wiaan Mulder, 4 Temba Bavuma (capt), 5 Tristan Stubbs, 6 David Bedingham, 7 Kyle Verreynne, 8 Marco Jansen, 9 Keshav Maharaj, 10 Kagiso Rabada, 11 Lungi Ngidi Australia: 1 Usman Khawaja, 2 Marnus Labuschagne, 3 Cameron Green, 4 Steven Smith, 5 Travis Head, 6 Beau Webster, 7 Alex Carey (wk), 8 Pat Cummins (capt), 9 Mitchell Starc, 10 Nathan Lyon, 11 Josh Hazlewood
-
‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் - மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா, பாடாய் படுத்தியதா?
தோழர்கள் @குமாரசாமி , @goshan_che அன்பே சிவம் இதனை விளங்கநினைப்பவன் கவனத்திற்கு.🤣
-
‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் - மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா, பாடாய் படுத்தியதா?
மணிரத்தினத்திடம் 14 துணை இயக்குனர்கள் உள்ளார்களாம், அனைவரும் பெரிய வீட்டு பிள்ளைகளாம் (சிபாரிசில் வந்தவர்கள்).
-
‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் - மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா, பாடாய் படுத்தியதா?
கஸ்டமெல்லாம் படுவதில்லை வேலை முடித்து (இரவு) அப்படியே படத்திற்கு போவதால் நிம்மதியாக நித்திரை கொண்டுவிடுவதுண்டு.🤣 மேலை நாடுகளில் வயதான தாத்தா இயக்குனர்கள் கூட சிறப்பாக செயல்பட ஏன் தமிழ் திரை தாத்தா இயக்குனர்கள் சிரமப்படுகிறார்கள்?
-
யாழ் மருத்துவர்கள் எனக்கு கற்றுக்கொடுத்தது என்ன ? கனடா தமிழர் ஒருவரின் அனுபவம்
விடுமுறை காப்புறுதி பொதுவாக வெளிநாடுகளில் ஏற்படும் மருத்துவ செலவுகளுக்காகவும் பயன்படுத்தலாம், தனியார் மருத்துவவமனையில் ஏற்படும் செலவுகளுக்கு கூட அவை காப்புறுதி அளிக்கின்றது, பொது வைத்தியசாலையில் போய் வரிசையில் நிற்காமல் தனியார் வைத்தியசாலையில் சிறந்த சிகிச்சையினை பெறலாம்.
-
யாழ் மருத்துவர்கள் எனக்கு கற்றுக்கொடுத்தது என்ன ? கனடா தமிழர் ஒருவரின் அனுபவம்
வைத்தியசாலை படுக்கைகள் ஒரு சுகாதாரத்துறையின் வளர்ச்சியின் குறியீடாக பயன்படுத்தப்படுகின்றது (குறிப்பிட்ட தொகுதி மக்களுக்கு எத்தனை வைத்திய்சாலை படுக்கைகள் உள்ளன என)
-
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முற்றாக முடங்கும் அபாயத்தில்
தகவலுக்கு நன்றி!
-
யாழ் மருத்துவர்கள் எனக்கு கற்றுக்கொடுத்தது என்ன ? கனடா தமிழர் ஒருவரின் அனுபவம்
அது மனிதாபிமானமற்ற செயல், ஆனால் இலவச மருத்துவம் அங்குள்ள மக்களுக்கு மட்டும் எனும் நிலை வேண்டும், மற்றவர்கள் அங்கு நோய்வாய்ப்பட்டால் மருத்துவ உதவியினை நாடுவதில் தவறில்லை, அத்தோடு அதற்கான கட்டணத்தினை அறவிட வேண்டும் (மிக குறைந்த வளங்கள் உள்ள தற்போதய் நிலையில் அட்கு அவசியமாகிறது). புலம்பெயர் தமிழர்கள் உணவுச்சங்கிலியில் உயரத்தில் இருப்பவர்கள், தமது விளம்பர பொழுது போக்கிற்காக உதவி செய்வது (அனைவரும் அல்ல ஆனால் தாம் செய்த சிறிய செயல்களை கூட பொதுவெளியில் இணையம் போன்றவற்றினூடாக விளம்பரம் செய்பவர்களே இத்தகையானவர்கள்) பின்னர் அதனைவிட பலமடங்கு அனுகூலங்களை கொள்ளை அடிப்பவர்களாக மாறுகின்றனர் (அந்த மக்களை சுரண்டுபவர்கள்).
-
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முற்றாக முடங்கும் அபாயத்தில்
எனக்கு இதன் பின்னணி தெரியவில்லை, பொதுவாக வேலைக்கு வருபவர்கள் வேலை செய்யும் எண்ணத்துடன் வருவதில்லை, இது ஆசிய இனத்தவர்களுக்குள் உள்ள விடயமா அல்லது இது ஒரு பிரபஞ்ச உண்மையா என தெரியவில்லை. மேலை நாடுகளில் கூட இந்தநிலை காணப்படுகிறது, தாம் ஊதியம் பெறுகிறோம் அதற்கு வேலை செய்ய வேண்டும் என பார்க்கமாட்டார்கள், மற்றவர்களுடன் ஒப்பிட்டு வேலை செய்தல் அல்லது வேலையினை தவிர்த்தல் புத்திசாலித்தனம் என நினைக்கின்றமை, நான் வேலையிடத்தில் பொதுவாக கூறும் நகைச்சுவை வேலை செய்ய கூடாது எனபதற்காக வெளிக்கிட்டு வேலைக்கு வருகிறார்கள் என🤣. முக்கியமான வேலைகளில் கூட எந்த கட்டுப்பாடும் இல்லாமல் விரும்பியமாதிரி வேலை செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பது, பின்னர் குறித்த பிரிவினர் மேலை நாடுகளில் வந்து மிக சிரமமான நடைமுறைகளை கூட மனம் கோணாமல் செய்பவர்களாக இருக்கின்றார்கள். 9 - 4 ?
-
‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் - மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா, பாடாய் படுத்தியதா?
ஏன் உங்களுங்கு என் மேல் இப்படி ஒரு கொலைவெறி? பெரிய நடிகர்களின் படம் பார்ப்பதில்லை எனும் ஒரு முடிவு வைத்துள்ளேன் (அதனால் இப்படியான கொலைவெறித்தாக்குதலில் தப்பிவிடுகிறேன்), படம் நல்ல படம் என அனைவரும் குறிப்பிட்டாலே பெரிய நடிகர்களின் படம் பார்ப்பதுண்டு(கமல், ரஜனி, அஜித், விஜய், சூரியா...........). ஆனால் குடும்பத்தினருக்காக சில பெரிய நடிகர்களின் படங்களை பார்க்க சென்று நித்திரை கொண்டு அதனால் மனஸ்தாபம் ஏற்பட்டு (அவர்களின் இரசனையினை இழிவுபடுத்துவது போல அவர்கள் கருதுகிறார்கள் என கருதுகிறேன்) தற்போது அதனையும் தவிர்ப்பதுண்டு. மணிரத்தினத்தினம், சங்கர் போன்ற கடந்த தலைமுறை இயக்குனர்களை பாராட்டியே ஆகவேண்டும், தாத்தா வயதில் கல்லூரிகளில் படித்து அல்லது படிப்பித்து, கல்லூரிக்காதல் என நடித்துகொண்டிருக்கும் தமிழ் திரையுலக தாத்தாக்களின் கொடுமைகளுக்கு ஒரு முற்று புள்ளி வைக்க இந்த மாதிரியான இயக்குனர்களே தேவை.
-
யாழ் மருத்துவர்கள் எனக்கு கற்றுக்கொடுத்தது என்ன ? கனடா தமிழர் ஒருவரின் அனுபவம்
குறைந்த பட்சம் குறிப்பிட்ட அளவு வைத்தியசாலை படுக்கைகள் என கணிப்பிடப்பட்டுள்ள அளவுகளுடன் ஒப்பிடும் போது அங்கு மிக குறைவான அளவிலே காணப்படுகிறது, இந்த நிலையில் புலம்பெயர் தமிழர்கள் அந்த குறைவான வசதிகளை பயன்படுத்துவது அங்குள்ள மக்களுக்கு மேலும் நெருக்கடியினையே உருவாக்கும். புலம்பெயர் தமிழர்கள் மருத்துவ காப்புறுதி வைத்திருந்தால் அவர்கள் வாழும் நாட்டிலேயே மிக சிறப்பான சேவையினை பெறமுடியும், குறைந்த பட்சம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சிறந்த வைத்தியசாலை இருக்கவேண்டும், அதனை கூட நிறைவேற்ற முடியாத சூழ்நிலைதான் அங்குள்ளது, வைத்தியசாலைகளை நிர்வகிப்பதற்கு ஆண்டுதோறும் (இலவச) பெரும் பணம் செலவிட வேண்டிய நிலை உள்ளது அதனால் அரசு கூட அதனை செய்ய தயங்கும் நிலையில் ஒவ்வொரு துறைகளிலும் அங்குள்ள மக்களின் வசதி வாய்ப்புக்களை தட்டிப்பறிக்கும் புலம்பெயர் தமிழர்களை முதலில் அடித்து விரட்ட வேண்டும், அதனால் அங்குள்ள மக்களுக்கு குறைந்த பட்ச வசதிகளைசெய்ய முடியும் (ஒரு புலம்பெயர் தமிழர் அங்குள்ள பலரின் அடிப்படை வசதிகளை தனியாளாக உறிஞ்சும் அட்டை).
-
யாழ் மருத்துவர்கள் எனக்கு கற்றுக்கொடுத்தது என்ன ? கனடா தமிழர் ஒருவரின் அனுபவம்
தனிய அரசின் உதவியுடன் செய்ய முடியாது புலம்பெயர் சமூகத்தின் உதவியுடன் இதனை சாத்தியமாக்கலாம் (சிறு துளி பெரு வெள்ளம்). சிறந்த தலைவர்கள் எப்போதும் நீண்டகால சிந்தனையாளர்களாக இருப்பார்கள், ஏன் நீங்கள் அங்குள்ள மக்கள் நலனுக்காக அரசியலில் இறங்க கூடாது? எல்லோரும் மற்றவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என இருப்பதால் பாதிக்கப்படுவது மக்களே!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கறுப்பு மண் ஆடுகளத்திற்குரிய பந்து அதிகம் சுழலாத நிலையில் மணிக்கட்டு சுழல் பந்து வீச்சாளர்கள் கூட அதிகம் சாதகம் அற்ற நிலையில் வெறுமனே கிறீசினையும் பந்தினை காற்றில் வேகமாகவும் மெதுவாகவும் வீசி கட்டுக்கோப்பான அளவுகளில் வீசினார். பஞ்சாப் பந்து வீச்சாளர்களும் அளவுகுறைந்த பந்தினை மெதுவாக வீசி மிக கட்டுகோப்பாக வீசியிருந்தார்கள் ஆனால் குருணல் பந்து வீச்சு மிக சிறப்பு.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஜக்கம்மா நண்டுகளை கைவிட்டு விடார். இது நல்ல முடிவு, எனக்கு புள்ளிகள் அந்த கேள்விகளுக்கு வராது.🤣
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஜக்கம்மாவே நண்டுகள் பக்கம்தான், ரஜனிக்காந்த மொடியுலேசனில் வாசிக்கவும்.🤣 அடுத்து உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன் உள்ளது ஆனால் இது போல இழுபடாது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பெங்களூர் அணி பலமான அணிதான் ஆனால் அவர்கள் இறுதி போட்டியில் பஞ்சாப்பிற்கு எதிராக மட்டும் விளையாடவில்லை யாழ்கள ஒட்டு மொத்த நண்டுகளுக்கு எதிராக விளையாடுகிறார்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ரீஸ ஒரே ஒரு மட்சில விளையாட வைத்து சொந்த செலவில சூனியம் வைச்சிட்டாங்கள். பையன் வந்தா ராஜாவாத்தான் (முதல்வன்) வருவார்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தோற்றுப்போன மும்பாய் அணியினை தேர்வு செய்தவர்களை விட்டு விட்டு நண்டுகள் குலாமிற்கு அந்த 3 புள்ளிகலை வழங்கலாம்தானே🤣.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பும்ரா 18 வது ஓவரில் போட்டது நல்ல முடிவுதான், அந்த ஓவரில் ஒரு விக்கெட் விழுந்திருந்தால் நிலமை சில வேளை பம்பாயிற்கு சாதகமாக அமைந்திருக்கலாம், 19 ஓவர் மிக தாமதமகிவிடும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பாண்டியா, சான்ட்னருக்கு 2 + 2 ஓவர்கள் இருந்துள்ளது, அளவு குறைந்த மெதுவான பந்து விளையாட சிரமாக காணப்பட்ட போதும் இறுதி ஓவர்களில் புல் லெந்தில் போட்டு வாங்கி கட்டிக்கொண்டார்கள், ஆனாலும் பஞ்சாப் சிறப்பாக விளையாடியது. பெங்களூர் அணிக்கு இறுதி போட்டி இலகுவாக இருக்கபோவதில்லை, பஞ்சாப் மிக சிறந்த அணியாக உள்ளது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மும்பாயினை முடிச்சுவிட்டாங்கள்.