Everything posted by நிலாமதி
-
இரசித்த.... புகைப்படங்கள்.
இலையான் இரையாகிறது ....
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
இதிலிருந்து என்ன தெரிகிறது எந்த வகை பாத்திரமானாலும் உணவு வெந்தால் சரி ....பசிவந்தால் பண்டமென்ன பாத்திரமென்ன ?
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
யாழ் கள விளையாட்டு போட்டி எதிர்வு கூறலில் முன்னணியில் நிற்பவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
-
14ஆவது முறையாக தந்தையானர் எலான் மஸ்க்!
ஐந்து பெண்களுக்கு வாழ்க்கை( பராமரிப்பு ) கொடுத்து 14 குடிமக்களை உலகிற்கு தந்த மனிதரை பாராடட தானே வேண்டும். நம்ம நாட்டில் ஒருத்திக்கு வாழ்கை கொடுத்து 14 க்குமேல் பெற்றும் இருக்கிறார்கள் விண்ணர்கள். 😃
-
பூனைகளின் பேச்சுவார்த்தை
சுண்டெலி தற்போதைக்கு சாமர்த்தியமாக தப்பி விட்ட்து. அநியாய பூனை இனி என்ன செய்யுமோ ? பூனைகளுக்கு எங்கு போனாலும் கபட புத்தி தான்.
-
அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்கு ‘தங்க அட்டை’; விலை 5 மில்லியன் அமெரிக்க டொலர் - ட்ரம்ப் அறிவிப்பு
இவ்வளவு மில்லியனைக் கொட்டி வருவதற்கு அமெரிக்காவில் என்ன இருக்கிறது ?
-
உடல் நலப் பாதிப்பு - பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதி
பாப்பரசர் ,வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதவியில் இருப்பவர் .எனவே இறுதி நிகழ்வுகள் பெரும் ஆயத்தங்களுடன்தான் தொடங்கும்.அதற்காக முற்கூட்டியே திடடமிடுகிறார்கள் என எண்ணுகிறேன்.
-
அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்கு ‘தங்க அட்டை’; விலை 5 மில்லியன் அமெரிக்க டொலர் - ட்ரம்ப் அறிவிப்பு
புதிதாக பதவி ஏற்றவர் "காசு "விடயத்தில் கண்ணும் கருத்துமாய் இருக்கிறார்.விற்பனை முகவராய் இருந்தவருக்கு "காசு" தானே குறி ...
-
யாழில் தேங்காய் விலை ரூ. 250 தொட்டது!
இந்த வருடத்துக்கான முதற்பரிசு பெற்ற ஜோக்.😄
-
விதியற்றவர்
நல்லதொரு கதையுடன் நீண்டநாட்களுக்குப்பின் வந்துள்ளீர்கள். நன்றி அதிகமானவர்களின் கதை இப்படியாகத்தான் இருக்கிறது. அவர்களிடம் நாம் பாடம் படிக்க வேண்டியிருக்கிறது.
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
கறிவேப்பிலை யில் இரும்புச்சத்து உண்டு ..வளர்ச்சிக்குஉதவும். தலைக்கு வைக்கும் எண்ணையில் கறிவேப்பிலைகள் தூளாக்கி போட்டு போட்டு (ஒருசொட்டும் தண்ணீர் இல்லாமல்) காய்ச்சி தலைக்கு தடவினால் முடிவளர்ச்சி கூடும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளை கொண்டாடும் தமிழ் சிறிக்கு, உளம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். ❣️
-
கைவிலங்குகள்
நீ எதற்காக நிமிர்ந்து நிற்கின்றாய் உன் வாள்கள் ஏன் உயருகின்றன உன்னை அடக்க வருபவர்களுடன் உன்னால் சேர்ந்து வாழ முடியாதா............... நீ அடக்கி ஒடுக்கி நசுக்க முனைந்ததனால் தானே நான் வாளுடன் நிமிர்ந்தேன் . நீ வலிமை மிக்கவன் என்றால் நான் வீரம் , மானம் ரோஷம் மிக்கவன். உன் அடடூழியங்ககளினால் தானே நான் பொங்கியெழுந்தேன். இன்னும் மறந்து விடவில்லை ஆழ்மனதில் கனன்று கொண்டிருக்கிறது .ஒரு நாள் சுபமாய் முடியும். .
-
சும்மா ஒர் பதிவு
அன்று சிரமதானம் மூலம் கோவில்களில் பாடசாலைகளில் துப்புரவு செய்தோம் . இன்று வெளிநாட்டு காசில் சுகபோகமாக வாழ்ந்து பழகி விடடார்கள் .எல்லாவற்றுக்கும் வெளிநாட்டு காசு வேண்டும். அது சிலரது பொக்கற்றுக்கு போவது வேறு கதை.
-
நான் ரொம்ப எதிர்பார்த்தேன்.. ஆனால் ஏமாற்றிவிட்டார்.. விஜயலட்சுமி பகீர் குற்றச்சாட்டு
போட்டதே எல்லோரும் ஓடிவந்துபார்க்க வேண்டும் என்பதற்காக தானே
-
மாற்றங்கள்
யாழ்களத்தில் சில விரும்பக்கூடிய மாற்றங்கள் கண்டு மிக்கமகிழ்ச்சி . மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். நன்றி
-
கனடாவும் கண்டறியாத சினோவும். ....
டிங் டிங்....... சிறீ : சாமி அண்ணோய் என்ன சங்கதி நாரியை பிடிச்சு கொண்டு நடக்கிறியள் சாமி : இருந்தா எழும்பே லாமல் கிடக்கு ...ஐயோ ....வந்தனெண்டா .எனக்கு வர கோவத்துக்கு ...உனக்கு பகிடியாய் இருக்கு . சிறீ : ஏன் அண்ணா சினோ வழிச்சு களைச்சு போட்டீங்களா ? இந்தமுறை ஒரு நாளிலேயே கொட்டித்தள்ளி போட்டுது சாமி : பரிமளம் ! ....இவன் தம்பி ஸ்ரீ வந்திருக்கிறான் . கொஞ்சம்கோப்பி போட்டு தாறீரோ ? இவள் கம்ப்யூட்டர் ஐ விட்டு அசையமாடடாள் . ... சிறீ : அப்பவும் சொன்ன நான் பெரிய வாசல் (drive way ) இருக்கிற வீடு வாங்க தீங்க என்று ... பரிமளம் : என்ன தம்பி விசேஷம்.? இந்தாங்கோ காப்பி சாமி : இவள் தான் பெரிய வீடு வேணும் என் இன சனம் எல்லாம் வந்து சேர்ந்தால் ஒன்றாக இருக்கலாம் என்று. .சும்மா சொல்ல கூடாது எல்லோரையும் வரவேற்று (கொஞ்ச ரூம் காசு தந்தவைதான் ) PR (permanent residence ) கிடைச்ச உடனே பறந்திட்டுதுகள். ம் சிறீ : நான் வந்ததென்ன என்றால் ...சினோ வழிச்சு கைவிறைச்சுப்போட்டுது . உங்கட ..snow blower ஐ தாறீங்களோ ? இவள் வேலையால் வரமுன்னம் வழிச்சுப்போட்டு நான் வேலைக்கு இறங்கவேண்டும். சாமி : இன்னும் இரண்டு நாளுக்கு கொட்டுமாம் ...இந்தா வழிச்சுப்போட்டு உடன் கொண்டுவந்து தா...இவன் அமேரிக்கண்ட பிளேன் விழுந்து தலைகீழபோச்சுதாம் .சிறீ : ஓம் ஓம் கேள்விப்படட நான் சாமி : ம் ம் ஊரில் இருந்தா.... இந்த சினோவும் இல்லை வழியல் உம் இல்லை ...ச் சா கை விறைச்சு போச்சு... பெஞ்சன்(pension ) எடுத்தப்புறம் ஊரோடு போய் இருந்திடனும். காலத்துக்கேற்ற உரையாடல். (சாமியாரும் சிறீத்தம்பியும் மன்னிக்கவும். )
-
இரசித்த.... புகைப்படங்கள்.
இரை ஒன்று கண்ணில் தென்படாதா ? என் பசி தீர்க்க ...😃
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
ஈழமண்ணின் மகிமை .....
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
5 hours ago, வீரப் பையன்26 said: என்னமோ தெரியல இந்த திரியிம் எனக்கு வெறுத்து போச்சு இது தான் நான் யாழ்களத்தில் களந்து கொள்ளும் கடசி போட்டி................... இனி இந்த திரிக்குள்ளும் எழுத போவது கிடையாது.............. பையன் ...குழப்பமான நேரத்தில்முடிவெடுக்கக்கூடாது மனதை பக்குவப்படுத்தி தேவையற்றதை விலக்கி, தேவை ஏற்படும்போதுமட்டும் பதில் சொன்னால் வீண் விவாதங்களால் மனச் சோர்வு வராது. Come on ! paiya .. Be strong and Active.
-
இரண்டு ஆண்பிள்ளைகள் பெற்ற எனக்கு என்ன பயம்?
புலம் பெயர்ந்த பலரது வாழ்க்கை இப்படித்தான். உயிர் உள்ள வரை மறக்க முடியாத சோகம். அம்மா இல்லை என்பது ஏற்கமுடியாது இன்னும் உங்கள் எண்ணத்தில் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார். எல்லாம் காலம் செய்த கோலம். ஒவ்வொரு தமிழனுக்கும் இழப்பு உண்டு.
-
இனித்திடும் இனிய தமிழே....!
அத்தனையும் அருமை தொடருங்கள்.
-
புல்லாங்குழல்! காற்றை இசையாக்கும் வித்தகக் கருவி புல்லாங்குழல்!
முத்துக் குமரனின் அழகு தமிழ் கேட்க இனிமையாக இருக்கும்.நல்ல தமிழ் கற்று சான்றோரின் கைகளால் புனையப்படட அழகு சிலைபோல. செந்தமிழ் கேட்க சிலிர்க்கின்றது தமிழ் உள்ளம்.
-
ஒரு காரின் கடைசி வாக்குமூலம்
இத்தனை நாள் உங்களுக்காக உழைத்த ஜீவனை கைவிடலாமா...இறுதி வரை வாழட்டும் உங்களுடன் ...இறுதி மூச்சுவரை
-
இறுக்கமான இதயத்தில் இதமாகப் பூத்தவளே
அட டா அல்வாயனுக்குள் இத்தனை கவித்துவம் எங்கே ஒளித்து வைத்தீர்கள் இத்துணை திறமையினை. பாராட்டுக்கள்