Everything posted by நிலாமதி
-
மரணத்துக்கு பிறகு என்ன நடக்கும் என அறிய முயன்ற மாணவி உயிரிழப்பு
" ஒரே மகள் " எத்தனை பாஷை தெரிந்து என்னென்ன வசதி இருந்து என்ன பயன் ....பெற்றார் கவனிக்காமல் விட்டுவிடடார்கள் போலும்.
-
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சற்று முன்னர் கைது
தம்பிக்கு கொஞ்சம் நாவடக்கம் அவையடக்கம் தேவை . பதவி வரும்போது கொஞ்சம் பணிவு வேண்டுமடா தோளா ...துள்ளுகின்ற பொதி சுமக்கும். விதியை மதி யால் வெல்லலாம்.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
மேலுள்ளது வசதி உள்ளவர்களது உற்சாக பானம் .கீழுள்ளது வறியவர்கள்/நடுத்தரவர்க்கத்தின் உற்சாக பானம்.
-
மாற்றமொன்றே மாறாதது!
ஏனெனில்…. பாலை வனங்கள் மழையால் அழியுது-வெண் பனி கொட்டுமிடமெல்லாம் வெய்யில் அடிக்குது மும்மாரி மழையும் மோசமாய் போயிற்று முன்பு போல் இல்லை இயற்கையே மாறிற்று. மாற்றங்களுடன் நாமும் மாறி விடத்தான் வேண்டும். நல்ல அருமையான கண்ணோட்டம். நன்றி
-
மாங்குளத்தில் தூக்கிலிடப்பட்டு நாய் கொலை; பெண் கைது!
ஆடடை வேலிபோட்டு கூட்டுக்குள் அடைத்துப் பாதுகாப்பக்க வளர்ந்திருக்க வேண்டும். அந்த நாய் தூக்கிலடப்பட்ட்து பிழை. தீர்ப்பும் பிழை. கடித்த (இறந்த ) ஆட்டின் பெறுமதியை நாய் உரிமையாளர் கொடுக்க வழக்கு முடிந்திருக்கும். இன்னொருதடவை வேறு ஒரு நாய் கடித்தால் என்ன செய்வர்கள். அதையும் ?.....அதற்காக நாய் இனத்தையே அழிப்பார்களா ?
-
எதிர்வரும் நாட்களில் மீன்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை.
இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மீன்கள் உரிய தரத்தில் ஏற்றுமதி செய்யப்படுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்... நாற்புறமும் கடலால் சூழப்படட இலங்கையில் மீன்கள் இருக்கின்றன . ஆனால் "தரம் " தான் இல்லை. அதை தரக்கட்டுப்பாடு செய்பவர்களிடம் கேட்க வேண்டும் .ஐஸ் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் .அதற்கான தொழில் நுட்ப வசதியை பெருக்க வேண்டும்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
உலகில் நாட்டுடன் நாடு போர் செய்வதால் ....பிணந்தின்னிக் கழுகுகளும் காத்திருக்கின்றன வகை தொகையின்றி
-
பாட்டுக் கதைகள்
ரஸோவின் திரி திசைமாறுவதுபோல (எனக்கு )இருக்கு ....பாம்பு கதையைத் தொடங்கி சாத்திரத்தில் வந்து நிற்கிறது . அந்தக் காலத்தில் (இப்போதும் கூட ) சினிமா பாட்டு காதலர்களுக்கு தூது போனது என்றால் மிகை ஆகாது . நீ வருவாய் என நான் இருந்தேன் .... நான் என்ன சொல்லிவிடடேன் என் மயங்குகிறாய் உன் சம்மதம் கேட்ட்டேன் தலை குனிந்தயோ ? மறப்பதற்கு ஒரு மனம் இருந்தால் அவளை மறந்து விடலாம் இருப்பதோ ஒரு மனது ...இரண்டுமனம் வேண்டும் இறைவனிடம் கேட்பேன்..... விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே காதலிக்கு / காதலனுக்கு மடல் எழுத கவிதை வரிகள் தேடுவார்கள். இருக்கவே இருக்கு சினிமா வரிகள். அக்காலத்தில் சினிமா எல்லோருடைய வாழ்விலும் நுழைந்த ஒன்று அதிலும்பாடல்கள் காலத்தால் அழியாதவை . சினிமா கதா நாயகன் கதா நாயகியாக கற்பனை செய்வார்கள். சிலது (காதல் ) முட்டி மோதி வெல்லும் சிலது தோற்று போகும்.
-
Pickering வாகன விபத்தில் தமிழர்கள் இருவர் பலி
May their souls rest in peace.
-
சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் உறவுகள் உங்களின் பெயரை எழுதவும்
நானும் வருவேன் சற்று தாமதமாக . கொஞ்சம் பிசி ....
-
புதிதாக பிறந்த சிங்கக் குட்டிகளுக்கு பெயர் வைக்க பொதுமக்களுக்கு வாய்ப்பு!
ஐந்து பெண் குட்டிகளும் ஒரு ஆண் குட்டிகளும் ...... தாமரை செவ்வந்தி மல்லிகை (கா) முல்லை ரோசா ராஜபக்சன் 😄 பெயர் சூட்டு விழாவுக்கு எனக்கு "ஸ்பெஷல் அழைப்பு " விடவும்.
-
தமிழர் திருநாள் வாழ்த்துகள்!
அனைவருக்கும் உழவர் திருநாளாம் ,இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
-
கண்டியில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி கண்டுபிடிப்பு!
கடத்தியவர் அந்த பெண்ணின் முறைப்பையனாம். நேரில் வீட்டில் சென்று கேட்டு இருக்கிறார். அவர்கள் மறுத்ததால் இப்படி செய்தாராம். என்று கேள்வி .....இது தொற்று நோய் போல பரவாதிருக்கட்டும். (நாங்களும் கடத்தி பார்ப்போம் என்று இளசுகள் தொடங்கி விடும்.)
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
இவர்கள் நினைப்பு எப்படி இருக்கும் டாக்டரோட நினைப்பு எல்லோரும் நோயாளியாக இருக்கணும் என்பது வக்கீலின் நினைப்பு எல்லோரும் பிரச்சினைகளோடு இருக்கணும் என்பது . ஒரு போலீஸ் காரனோட நினைப்பு எல்லோரும் கிரிமினலாக இருக்கணும் ஒரு திருடனோட நினைப்பு எல்லோரும் வசதியாக நகை நட்டொடு இருக்கணும் நல்ல தூக்கத்தொடரு இருக்கணும் என்று ....😄😄
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
உங்கள் பெற்றோர் உங்களை வளர்த்து போல நீங்கள் உங்கள்பிள்ளைகளை வளர்க்க முடியாது . ஏனெனில் இப்போதுள்ள உலகம் வேறு விதம்
-
பிரபல பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார்!
ஆர்பாடடம் இல்லாத இனிய பாடல்களைத்தந்த சிறந்த பாடகர் . அஞ்சலிகள்.
-
எப்படி ஜக்காம்மாவை சாப்பிடுவது
ஜீ காமா கொடி போல வளரும் என எண்ணுகிறேன். பச்சையாகவே சாப்பிடலாம் போல .கவர்ச்சியான (?) தலைப்பு .....😄
-
டாக்ரரால் கள அரசியலான புல அரசியல்..
அர்ச்சுனாவுக்கு நிதானம், பொறுமை அவசியம். குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரம், சாட்சி போன்றவற்றை சேகரித்து நிதானமாக, முறையாக விசாரணையின் பின் குற்றங்களை நிரூபித்து குற்றவாளிகளை வெளியேற்ற வேண்டும். அதோடு அவர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு படித்த, துடிப்புள்ள இளையவரை பயிற்ற வேண்டும். இதுவே உண்மையான, நேர்மையான ,தமிழ் மக்களுடைய ஆசையும் கூட உங்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும் தெரிவிக்கிறேன்.
-
வருடச் செய்முறை
சமையல் எல்லாம் ஐயா கைப்பக்குவமா? அம்மாக்காரி பக்குவமா ? கால் நடைகளை பரலோகம் அனுப்பிய பாவம் தீர ....உடற்பயிர்ச்சியும் உண்டா ?😄
-
2025 புதுவருட வாழ்த்து
யாழ் கள நட்ப்புறவுகள் யாவருக்கும் புதுவருடம் 2025 ம் ஆண்டு மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் நோய் நொடியற்று நலமே வாழவும் இறைவன் அருள் கொடுப்பராக.
-
2024/2025 புது வருடம்!
பழமைக்கும் புதுமைக்கும் சற்று இடைவெளி விட்டு இருக்கலாம் . புது வருடம் நல்லதே நடக்கும் எனும் எதிர்பார்ப்புகளோடு பிறக்கிறது . நன்றி.
-
சிரிக்க மட்டும் வாங்க
தற்போது ச ரி க ம இல் பாடுகிறாள் இந்த குட்டி. நல்ல வாயாடி
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
1. இரவில் சூரியன் மங்கியபின் பெரிய மரங்களுக்கு கீழ் சென்றால் பேய் அடிக்கும். 2. முடடை உப்பு கடன் கொடுத்தால் உறவு முறியும். 3. உணவு கொண்டு செல்லும்போது கரித் துண்டு வைக்க வேண்டும் 4. ஐந்து பெண் பெற்றால் அரசனும் ஆ ண்டியாவான்
-
இரசித்த.... புகைப்படங்கள்.
இதில் எது யாருடையது என்று சொல்லவும் ... 1 சிறீ 2 சுவி 3 கந்தையா 4 குசா...? 5 பாஞ் 6 ஈழப்பிரியன் ..?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தம்பி ஏராளனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நோய் நொடியற்று நலமே வாழ்க.