Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலவர்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by புலவர்

  1. எனக்கு இங்கிலாந்து வென்றால் மகிழ்ச்சி.இங்கிலாந்து இப்பொழுது நன்றாக விளையாடிக்கொண்ருக்கிறது. பந்துவீச்சில் சொதப்பாமல் இருந்தால்சரி.
  2. கட்சி என்று இருந்தால் பலர் சேர்வதும் சிலர் விலகுவதும் நடைபெறும். சிறிய கட்சிகளில் இணைந்து புகழ்செளிச்சத்தைப் பெற்று விட்டு பெரிய கட்சிகளில் இணைவதை பெரிய கட்சிகள் வரவேற்பார்கள். பெரிய கட்சிகளில் நேரடியாக இணைந்தால் யாரும் கண்டுக்க மாட்டார்கள் ஊடகங்களும் பெரிது படுத்த மாட்டார்கள்கடைசிவரை பசைவாளியைத் தூக்கிக் கொண்டு திரிய வேண்டிஇருக்கும் பசை இருக்காது.நாதக ஆரம்பிதத காலத்திலிருந்து அனைத்து தேர்தல்களும் போட்டியிட்டவர் காளியம்மாள். அடுத்த முறை வேறு ஒருவருக்கு அந்தச்சந்தர்பம் கிடைக்கும். கட்சியில் தொடர்ந்து இருப்பதா விலகுவதா என்பதை காளியம்மாள்தான் முடிவெடுக்க வேண்டும். இதே Nhல் தொடந்து நாதக சார்பில் அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியி;ட கலியாணசுந்தரம் ராஜீவ்காந்தி ஆகியோர் இன்று என்ன நிலையில் இருக்கிறார்கள். அதன் பிறகும் கட்சி வளர்ச்சிப் பாதையில்தான் போய்க் கொண்டு இருக்கிறது.
  3. இன்றைய முதல்வர் தம்பிபையனுக்கு வாழ்த்துகள்.
  4. அமெரிக்காவை நம்பினால் இப்படித்தான் நடக்கும்.பைடன் ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை விலக்கி தலிபான்களின் ஆட்சிக்கு இடமளித்தது பொன்ற நிலையே இன்று உக்கிரைனில் நடந்துள்ளது.உக்கிரைன் முன்னாள் சோவியத் யூனியனின் ஒரு பகுதி இன்றைய ரஸசியாவின் அண்ட நாடு. அது ரஸ்யாவைச் சீண்டும் விதமாக நேட்டோவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இணைய முயற்சித்த காரணத்தினாலேயே ரஸ்யா உக்கிரன் மீது போர் தொடுத்தது. தனது எல்லையில் நேட்டோவின் படைகளை நிலைநிறுத்துவது அதன்பாதுகாப்பு கருதி அது செயற்பட்டது.இதில் வேடிக்கை என்னவென்றால் ஐரோப்பிய ஒன்றியமே வேண்டாம் என்று பிரிந்த பிரிட்டன் உக்கிரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதை ஆதரிப்பதுதான். இன்று எல்லோராலும் கைவிடப்பட்டு உயிர் அழிவுகளையும் சொத்து அழிவுகளையும் பெற்றரதுதான் உக்கிரைன் கண்ட மிச்சம். இனி ஒருவரும் உக்கிரைனனைப்பற்றி சிந்திக்க மாட்டார்கள். அமெரிக்கா பாலஸதீனத்தை ஆக்கிரமித்தால் புட்டினினும் கண்டு கொள்ள மாட்டார்.
  5. அங்கையும் என்னைப் பின்தொடர்ந்ந்து வேவு பார்த்து;துக் கொண்டுதான் இருக்கிறீர்கள். புள்ளிப்பட்டியலில் பக்கத்தில் வந்து குந்தி இருக்கிறீர்கள்.
  6. சத்தியலிங்கம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் விரைவில் துறப்பார் என்று எதிர்பார்க்கலாம். அந்த இடத்துக்கு சுமத்திரன் நியமிக்கப்படுவார். அநேகமாக உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் யாழ்மாநகரசபை மேயர் பதவிக்கு சத்தியலிங்கம் போட்டியிடுவார்.தமிழ்மக்களை வெறும் மாங்காய் மடையர்களாக சுமத்திரன் எண்ணிச் செயற்படுகிறார். இனி சிறிதரனால் ஒன்றும் செய்ய முடியாது. இதற்கு சிறிதரனே காரணம். 2019 ஆம் ஆண்டு மாவைக்கு துரோகம்செய்து சுமத்திரனை தூக்கிப்பிடிச்சு அவர்பாலா அண்யையைப் போல ஒரு விண்ணன். என்று புகழந்து அவருக்கு தனது ஆதரவை வழங்கி அவரை வெல்ல வைத்தார். இல்லாவிட்டால் 2019 ஆம் ஆண்டே சுமத்திரன் தோற்றிருப்பார். தேர்தலில் வென்றவுடன் கட்சிக்குள் தனது ஆட்களை நியமித்து கட்சியைத் தனது பூரணகட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டார்.கட்சித்தலமைக்குத் தெரியாமல் மாவைக்குத்கலையரசனை நியமிப்பதற்கும் சிறிதரன் துணை போனார். இப்பொழுது சிறிதரன் தனித்து விடப்பட்டிருக்கிறார். இனி சிறிதரனால் சட்ட ரீதியாக ஒன்றும் செய்ய முடியாது.அவர் அரகலய போராட்டம் போல் தமிழரசுக்கட்சியிலிருந்து விலகியவர்களையும் சேர்த்துக்கொண்டு தற்போதைய தலைமைகளுக்கு எதிராக தமிழ்க்களை ஒன்று திரட்டி ஒரு வெகுசனப் போராட்டம் செய்தால் ஒருவேளை பலனளிக்கலாம். வினை விதைத்தவன் வினை அறுப்பான். சிறிதரன் தன்தலையிலே தானே மண் அள்ளிப் போட்டு விட்டார்..
  7. இந்தக் கட்டுரை இந்து பத்திரிகையில் வந்திருக்கிறது. எப்பொழுதும் தமிழ்த்தேசியத்திற்கு எதிராகச் செயற்படும் பத்திரிகையில் வருவதென்பது சீமான் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்து விட்டார் என்பதையே காட்டுகிறது. இவ்வளவு காலமும் சீமான் ஒரு ஆளா என்று அவர் பெயர் கட்சியின் பெயரை இருட்டடிப்புச் செய்த ஊடகங்கள் இப்பொழுது சீமான் சீமான் என்று அலநறகின்றன. ஒவ்வொரு நாளும் சீமான் பத்திரிகையாளரைச் சந்திக்கிறார். திமுகவுக்கு எதிரான முறையான எதிர்க்கட்சியாகச் செயற்படுகிறார்.அவர் தொடர்ந்து தனித்து செயற்படாமல் திமுகவுக்கு எதிரான ஒரு பலமான கூட்டணியில் இணைந்தால் கறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற வாய்ப்பு இருக்கிறது என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.
  8. நாடாளுமன்ற உறவினரின் சாரதிதான் வேகமாகவும் பிழையான முறையிலும் வாகனத்தைச் செலுத்தியுள்ளார்.தெய்வாதீனமாக உயிரிழப்பகள் ஏறபடவில்லை. ஏனிந்த வேகம்https://www.facebook.com/61554702940944/videos/970197028545879/
  9. இன்னும் கலந்து கொள்ளாதவர்களின் சார்பில் கிருபன்ஜீ அவர்களே தெரிவுகளைச் செய்து விடுவார். ஆகவே இன்னும் கலந்து கொள்ளாதவர்கள் உடனே கலந்து கொள்ளவும்.
  10. பும்ராவுக்குப்பதிலாக Rashid Khan பெயரை மாற்றவும்.
  11. வேலைப்பளு இருந்த போதிலும் பையன் தமிழ்ச்சிறி போன்றவர்களின் அன்பு வேண்டுகோளின் நிமித்தமும் கிருபன்ஜீயின் அர்ப்பணிப்பான நேரத்திற்கும்மதிப்பளித்துகடைசி நேரங்களில் போட்டியில் குதித்து விட்டேன். எப்படியும் கடைசி ஆள்தானே.
  12. என்னது பும்ரா விளையாடவில்லையா? மேலே இந்திய அணியில் அவரின் பெயரும் இடம்பெற்றிருந்தமையால் 2 கேள்விகளுக்கு அவர் பெயரை போட்டிருந்தேன் அவருக்குப் பதிலாக Mitchell Starc மாற்றி விடவும். பும்ரா இல்லாவிட்டால் இந்திய அணி நேரத்தோடு நாடு திரும்ப வேண்டியதுதான்.
  13. குமாரசுவாமியருக்கு என்ன நடந்தது/அவருக்கு ஏன் தடை?அவர் யாழ்களத்தை கலகலப்பாக வைத்திருக்கும் நீண்டகால உறுப்பினர்.பையனின் கோரிக்கை நியாயமானது. நிர்வாகம் கவனத்தில் எடுப்பது நல்லது.
  14. குழு நிலைப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை. 1) குழு A: புதன் 19 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து, கராச்சி PAK NZ NZ 2) குழு A : வியாழன் 20 பெப் 09:00 AM – பங்களாதேஷ் எதிர் இந்தியா, துபாய் BAN IND IND 3) குழு B: வெள்ளி 21 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா, கராச்சி AFG SA SA 4) குழு B : சனி 22 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து, லாஹூர் AUS ENG AUS 5) குழு A : ஞாயிறு 23 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் இந்தியா, துபாய் PAK IND IND 6) குழு A: திங்கள் 24 பெப் 09:00 AM - பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து, ராவல்பிண்டி BAN NZ NZ 7) குழு B :செவ்வாய் 25 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா, ராவல்பிண்டி AUS SA SA 😎 குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து, லாஹூர் AFG ENG ENG 9) குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி PAK BAN PAK 10) குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா, லாஹூர் AFG AUS AUS 11) குழு B: சனி 1 மார்ச் 09:00 AM – தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து, கராச்சி SA ENG SA 12) குழு A: ஞாயிறு 2 மார்ச் 09:00 AM – நியூஸிலாந்து எதிர் இந்தியா, துபாய் NZ IND IND குழு A: 13) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND PAK Select PAK Select NZ Select NZ NZ BAN Select BAN Select 14) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (3 புள்ளிகள்) IND #A2 - ? (2 புள்ளிகள்) NZ 15) குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! BAN குழு B: 16) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS Select AUS AUS SA Select SA SA ENG Select ENG Select AFG Select AFG Select 17) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (3 புள்ளிகள்) SA #B2 - ? (2 புள்ளிகள்) AUS 18) குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! ENG அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 14)க்கும் 17) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 19) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய், அணி A1 (குழு A முதல் இடம்) எதிர் அணி B2 (குழு B இரண்டாவது இடம்) AUS 20) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: புதன் மார்ச் 05: 09:00 AM, லாஹூர், அணி B1 (குழு B முதல் இடம்) எதிர் அணி A2 (குழு A இரண்டாவது இடம்) SA இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 19)க்கும் 20) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 21) சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு மார்ச் 09: 09:00 AM, லாஹூர் அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி AUS சம்பியன்ஸ் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 22) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) NZ 23) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) BAN 24) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Virat Kohli 25) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 24 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 26) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Jasprit Bumrah 27) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 26 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 28) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Rachin Ravindra 29) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 28 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 30) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Jasprit Bumrah 31) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 30 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS 32) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Virat Kohli 33) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 32 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS
  15. குரங்குகள் மனிதன் செய்வதை திருப்பிச் செய்யுமாம். தொப்பியைக் கழட்டி எறிந்த மாதிரி செயல் முறைக் கருத்தடை செய்து பார்க்கலாமே.
  16. மாதகல் கடற்கரையை அண்டிய கடலில் வருடம் தோறும் மாசி மாதத்தில் வரும் மாசி முரல் மீனவர்களால் பிடிக்கப்பட்டு இரவு 7:30 மணி முதல் மாதகல் கடற்கரையில் விற்பனையாகின்றது, இந்த ஆண்டும் வழமையாக பிடிக்கும் மாசி முரல் இரவு 7:30 தொடக்கம் 10:00 மணிவரை மாதகல் கடற்கரைக்கு சென்றால் நீங்களும் வாங்கலாம். 70 ரூபா தொடக்கம் 200 ரூபா வரை முரல் மீன் விற்பனையாகியுள்ளதாம். இந்த சிறிய வகையான முரல் சொதிக்குள் போட்டு அல்லது பொரிச்சு சாப்பிட நல்ல ருசியாக இருக்கும், மாதகலுக்கு போறது கிட்டவாக இருந்தால் இரவு 7:30 மணிக்கு மாதகல் கடற்கரைக்கு சென்றால் துடிக்க துடிக்க முரல் வாங்கலாம்
  17. திமுக கூட்டனிக்கட்சியில் உள்ள எந்த ஓரு கட்சிக்கும் தங்களுடைய வாக்கு வீதம் சரியாகத் தெரியாது . அப்படித் தெரிந்து கொள்ள அவர்கள் விரும்புவதும் இல்லை.தெரிந்து கொள்ள வேண்டுமானால் தனித்து தேர்தலில் நிற்க வேண்டும்.. அப்படி ஒரு விசப் பரீட்சைக்கு அவர்கள் தயாரில்லை.இன்றைய நிலையில் சீமானை; கூட்டணிக்குப் போனால்இந்த உதிரிகள் காணமல் போவார்கள். அவர்களைக் கழட்டி விட திமுக தயங்காது.திமுக கூட்டணி என்று வரும் போது தன்னைத் திட்டியவர்கள் என்று கணக்கில் எடுக்காது. வைகோ திட்டாத திட்டா?அவர்களுக்குப் பதவியும் அதனால் வரும் ஊழல்பணமுமே பிரதானம்.இன்யைற திமுக வின்9 அமைச்சர்கள் அதிமுகவில் இருந்து வந்தவர்கள்தான். தன்ளைன நிருபிக்க சீமான் தொடர்ந்து தனித்து நிற்கிறார். மாற்றம் ஒன்றே மாறாதது . இலங்கையில் எத்தனை தடவைகள் தோற்றும் ஜேவிபி தொடர்ந்தும் தேர்தல்களில் ங்கு பற்றி வந்தது. இன்று ஆட்சியைப் பிடித்துள்ளது.ஆகையால் தொடர்து தேர்தல்களில் பங்குபற்றுவது அந்தக்கட்சிக்கு வளர்சிதான். தேர்தலுக்கு தேர்தல் அவர்கள் வாக்குகக்கு பணம் கொடுக்காமல் வளர்ச்சியைக் காட்டிக் கொண்டே யிருக்கிறார்கள். இந்த சங்கி றோவின் ஏஜன்ட் என்பதெல்லாம் ஆதாரமில்லாத கற்பனாவதாக் கருத்துகள்.அப்படி றோவின் ஏஜன்ட. முகவராக இருந்தால் உண்மை ஒருநாள் வெளிபட்டே தீரும். அப்போது அதனைப் பார்த்துக் கொள்ளலாம். எங்களுக்குத் தேவை தமிழ்த்தேசியத்தின் இருப்பு அதனைச் சீமான் உறுதியாக வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்கிறார். இல்லாத திராவிட மாயை உடைக்கப்படும் போது தமிழ்த் தேசியத்தின் எழுச்சி பேரெழுச்சியாக இருக்கும்.
  18. இல்லையே விஜை தன் கொள்கை விளக்க உரையை நிகழத்தும் மட்டும் சீமான் விஜையை அரவணைத்தார். விஜை திராவிடத் தேசியம் தமிழ்த்தேசியம் என்று இரண்டு தோணியில் கால்வைத்து பெரியாரைக் கொள்கைத் தலைவர் என்று சொன்ன மறுநாளே அவர் விஜையை விமர்சிக்கத் தொடங்கினார். அதன் பின்னர்தான் அலின் கொள்கைத்தலைவர் பெரியாரைக் கிழித்துத் தொங்க விட்டார். பெரியார் பிறந்த மண்ணிணில் பெரியாரை அடித்துத் துவைத்துப் பெற்ற வாக்குகள்தான் இந்தப் 14000. இந்தப் 16 வீத வாக்குகள் 10 கட்ச கூட்ணி போட்டு பெற்ற வாக்குகள் கிடையாது 10 கட்சிகளையும் தனித்து நின்நறு பந்தாடிப் பெற்ற வாக்குகள்.
  19. இது உண்மைதான் காங்கரஸ் .விசிக திமுகவைக் கழட்டி விட்டு அதிமுக தவெக பாமக தேதிமுக ;என்ற வலுவான கூட்டணி அமைப்பதற்கும் சந்தர்ப்பம் இருக்கின்றது. சீற் பேரத்தில் இப்படியான தாவல்கள் நடக்கும்.வைகோ கூட தாவுவார்.
  20. நான் எங்கே சொன்னேன்? ஆதாரத்தை இணையுங்கள். திமுக கூடணியோடு சேர்ந்த முன்னுதாரணம் இருக்கிறது. நாதக கூட்டணி சேரந்த வரலாற்றைச் சொல்லுங்கள் பார்க்கலாம்.. நீங்களாகவே கற்பனை செய்து கொண்டு திமுக பாஜகவோடுகூட்டணி வைக்கலாம் நாம் தமிழர் பாஜகவோடு கூட்டணி வைக்கக் கூடாதா என்று கூறுகிறீர்கள். பாஜகவோடு அல்லது வேறு எந்தக் கட்சியோடு கூட்டணி என்று நாம்தமிழர் கட்சி கூறியது என்று ஒரு ஆதாரத்தைக் கூறுங்கள் பார்க்கலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.