Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. ரஜனிகாந்த் தான் நல்லவன் இல்லை என நேரடி வாக்குமூலம் கொடுத்தாலும் அவர் ரசிகர்கள் நம்ப மாட்டார்கள். 😄
  2. இதுதான் அது.. வரேக்கை முழுசாகவே கொண்டு வாறன் 😂
  3. ஐரோப்பிய மண்ணில் ரஷ்யாவை எதிர்க்க அமெரிக்காவும் தயாரில்லை என்பதை நாங்கள் அன்றே உணர்ந்தவர்கள். கெடு குடி சொல் கேளாது என்பதற்கமைய..... இன்னும் வரும் 😎
  4. ஈழத்தமிழர் பிரச்சனையை.....உலகில் உள்ள எல்லா ஆக்கிரமிப்பு பிரச்சனைகளுடனும் ஒப்பிட நினைப்பதால் தான் நாம் இன்னும் ஒரு படி கூட நகர முடியாமல் இருக்கின்றது.
  5. அமெரிக்காவும் ரஷ்யாவும் தான் இந்த உலகை நிர்ணயிக்கும் சக்திகள் என்பதை உறுதி படுத்தும் சந்திப்பாக பலர் கூறுகின்றார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிரிகள் இருவரும் சந்தித்திருக்கின்றார்கள். கதை அவ்வளவுதான்.
  6. உலகின் முக்கிய இரு தலைவர்களது உக்ரேன் சம்பந்தமான பத்திரிகை சந்திப்பு முடிவடைந்தது. ஆனால் இரு தலைவர்களும் உண்மையான நிலவரத்தை கூறவில்லை என ஜேர்மனிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எல்லாவற்றையும் விட உக்ரேன் விடயம் தொடர்பாக சந்திப்பு நடைபெற்ற அலஸ்கா நிலப்பரப்பு உண்மையில் ரஷ்யாவிற்கு சொந்தமானது எனவும் 18ம் நூற்றாண்டுகளில் அமெரிக்காவிற்கு விற்கப்பட்டது எனவும் ஊடகவியளார்கள் ஆராய ஆரம்பித்து விட்டார்களாம். அடி யாருக்கோ எங்கேயோ விழப்போகின்றது என்பது இன்றைய சந்திப்புகள் சாத்திரம் கூறுகின்றது. புட்டினின் விருப்பம் ரம்ப் அவர்களுடன் அடுத்த சந்திப்பு மொஸ்கோவில்......பாவம் செலென்ஸ்கி....😂 எனக்கு என்னவெண்டால் அலஸ்காவை திருப்பி தா....உக்ரேனைநீ வைச்சிரு பீலிங்...😎
  7. ஆழ்ந்த இரங்கல்கள். உயிர்பிச்சை கொடுத்து.... பாடம் சொல்லி தருபவர்களுக்கே இந்த நிலை என்றால்....?
  8. ஐரோப்பிய ஒன்றியத்தால் ஹிட்லருக்கு சமமாக விமர்சிக்கப்படும் புட்டினுக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் புட்டினும் டொனால்ட் ரம்ப் அவர்களும் பள்ளி தோழர்கள் போல் கை குலுக்கி உரையாடுகின்றார்கள். இஸ்ரேல் காஸாவை ஆக்கிரமிப்பதை ஐரோப்பிய ஒன்றியம் வாய் மூடிக்கொண்டு ஆதரிக்கும் போல்.....உக்ரேனில் ரஷ்யா கைப்பற்றிய இடங்களை விட்டுக்கொடுப்பதுதான் நியாயம். அமெரிக்காவின் திரைமறைவு அரசியல் எப்படி பலமானதோ அதே போல் ரஷ்ய ரஷ்ய திரைமறைவு அரசியலும்.....
  9. அரசியலை விட சினிமாவில் நிலைத்திருப்பது என்பது சாதாரண விடயமல்ல. அதிலும் அன்று தொடக்கம் இன்று வரை சிறுவர்கள் தொடக்கம் முதியோர்கள் வரை விருப்பும் நடிகராக இருக்கின்றார். நடிப்பு பெரிதாக இல்லாவிட்டாலும்.......! இந்திய சினிமாவில் பேசு பொருளாக இருப்பவர்.சினிமா வியாபார ரீதியிலும் முன்னணியில் இருப்பவர். மற்றும் படி சினிமாத்துறை அறைகளில் சீமான் விட்ட தவறுகளைத்தான் ரஜனிகாந்த்தும் செய்தார்.😁 ரஜனிகாந்த் பிரபலம்,சினிமா பலம் காரணமாக வெளியே சொல்லப்படுவதில்லை. வெளிக்கொண்டுவரப்படுவதில்லை.
  10. பப்பாவில எத்தி ரணகளமாக்கிறதிலையே குறியாய் கொஞ்ச சனம் திரியுது.... எற்கனவே ஜேர்மன்காரன் ஆரை எப்ப தூக்கலாம் எண்டு கண்ணுக்கை எண்ணை விட்டு பாத்துக்கொண்டு திரியிறாங்கள். இதுக்குக்குள்ள அதிபர் சோக்கு வேற....😂 சரியாத்தான் யோசிச்சிருக்கிறியள்..😄 எங்களுக்கு கள்ளு எப்படியோ ஜேர்மன்காரனுக்கு, ஐரோப்பியனுக்கு பியர்.....😎 பருத்தித்துறை வடை,ரின் மீன் கட்லட்,பற்றீஸ்,உழுந்து வடை,போண்டா,மட்டன் றோல்ஸ்,சிவப்பு வெல்வெட் கேக். வீட்டிலை பங்சன் செய்தால் பலகாரம் கட்டிக்கொடுக்கப்படாது😎 எங்கடை வீடுகளிலை கோயில் திருவிழாக் காலம் எண்டால் மச்சச்சட்டியும் கள்ளு போத்திலும் பறணைக்கு ஏறீடும். ஒரே சிவ சிவ பக்தி மயம்.😂 இந்த முறை வித்தியாசமான அதிரடி நடவடிக்கை...போன கிழமை பக்கத்து கோயில்ல திருவிழா முடிஞ்சு வைரவர் மடை நடந்தது. ஐயா இரண்டு வடை மாலையோட எஸ்கேப் 😎
  11. நினைவு வைத்து வாழ்த்திமைக்கு மிக்க நன்றி.. உங்கள் வாழ்த்திற்கு நன்றி. நன்றி தோழர். நன்றி கிருபன் நன்றி ஐயா நன்றி...இன்னொரு முறை சந்திக்கும் நிலை வரும் போல் இருக்கின்றது. உங்கள் வாழ்த்திற்கு நன்றி சுவியர்! மனிதர்களிடம் வாழ்த்து பெறுவது தெய்வ கடாட்சத்திற்கு சமன். நியாயமான உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி. உங்கள் வாழ்த்திற்கு நன்றி சிறித்தம்பி வாழ்த்திற்கு நன்றி ரசோதரன். நான் உங்கள் எழுத்துக்களின் வாசகன் . உங்கள் பிரமாண்ட வாழ்த்திற்கு நன்றி ஏராளன். மனமார்ந்த நன்றிகள்.நேரம் கிடைக்கும் போது ஏதாவது எழுதுங்கள்.யாழ்களத்தில் உங்கள் வெற்றிடம் பெரிது. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நிழலி. ஓடி வந்து வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றி. யாழில் மீண்டும் காண்பதில் மிகுந்த சந்தோசம். நலமோடு இருங்கள்.
  12. அட நீங்கள் வேற....🙂 பொது மேடைகளில் கடவுள் இல்லை என்பவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை காண நேரிட்டால் மயங்கி வீழ்ந்து விடுவீர்கள்😄. செவ்வாய்,வெள்ளி விரத நாட்களுக்கென்று தனிப்பாத்திரம் வைத்து சமைப்பார்கள். அவ்வளவிற்கு சுத்த பத்தமானவர்கள்.அதை விட கொடுமை என்னவென்றால் இவர்களின் திருமணமோ அனைத்து கிரக,ராசி,யோனி பொருத்தங்களும் பார்த்து பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருக்கும். வைரவர்,காளி,சனீஸ்வரன் என்றால் தசை நடுங்குபவர்களாக இருப்பர். இது நான் கண்ட அனுபவம்.☝ உண்மையை தவிர வேறேதும் எழுதவில்லை.🙏 கடவுள் இல்லையென வாதாடுபவர்கள் பெரும்பாலோர் இந்துக்களாகவே இருப்பர். கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் நாத்தீக விடயத்தில் கொஞ்சம் விலகியே இருப்பர். உலக பொருளாதாரத்தில் தங்கத்தின் பங்கு எப்படியோ அது போல் தான் யாழ்ப்பாணத்தானுக்கும் தங்கம் முக்கியம். தமிழர்களின் பொருளாதாரத்தை சிங்களம் அழிக்க முடியாமல் இருப்பதற்கு அவர்கள் சேமித்து வைத்திருந்த தங்கமும் ஒரு காரணம் என்பார்கள்.
  13. செலன்ஸ்கி பிள்ளையருக்கு காலம் சரியில்லை போல கிடக்கு....😂 இந்தக்காலத்திலை நீதி நேர்மைக்கு காலமில்லை. பெரிய துரைமார் சொல்லுறதும் செய்யிறதும் தான் சட்டம்.
  14. இது இரு வருடங்களுக்கு முன்னர் வந்த சித்திரம்.
  15. இந்த தூய வாழ்க்கை சிஷ்டங்கள் அந்தக்காலத்திலை துண்டற இல்லை.ஐரோப்பாவில கூட இல்லை.🥰
  16. தற்போது நடக்கும் உக்ரேன் போர் ஐரோப்பிய யூனியனின் தன்மான பிரச்சனையாக மாறிவிட்டது. எங்கேயோ ஆரம்பித்து வேறு எதையோ நோக்கி போய்க்கொண்டிருக்கின்றது. நேட்டோ எனும் திருகுதாள இராணுவ அமைப்பு எதற்காக உருவாக்கப்பட்டதோ அதை இன்றுவரை செய்யவில்லை. மாறாக அரபு நாடுகள் மீது குண்டுகளை வீசி அழித்ததுதான் மிச்சம்.
  17. எம்பியாக இருக்கும் போது ஒரு கொள்கை... வேலை வெட்டியில்லாமல் இருக்கும் போது இன்னொரு வகையான கொள்கை... இதெல்லாம் தமிழ் அரசியல்வாதிகளுக்கு கை வந்த கலை...
  18. இதே நிலமைதான் உக்ரேனிலும்.....செலென்ஸ்கிக்கு எதிரான போரட்டங்கள் வெளியே சொல்லப்படுவதில்லை. அதை விட கொடுமை என்னவென்றால் உக்ரேனில் நடக்கும் ஊழல்களுக்கு எதிரான போராட்டம். சொல்லி வேலையில்லை.அதுவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் செல்லப்பிள்ளை உக்ரேனில் ஊழல் பிரச்சனை???? அமெரிக்கர்கள் எப்படி தங்கள் நாட்டிற்காக நெஞ்சின் மேல் கைவைத்து தேசிய கீதம் பாடுகின்றார்களோ அதே போல் அல்ல இன்னும் வலிமையாக நெஞ்சின் மேல் கை வத்து தேசிய கீதம் பாடுகின்றார்கள்.இதைப்பற்றி பளிங்கு ஊடகங்கள் வெளியே சொல்லாது.ரஷ்யர்கள் வலிமையானவர்கள். வலு உள்ளவர்கள். நாட்டுப்பற்று மிகுந்தவர்கள். ஒவ்வொரு நாட்டிலும் எதிர்கட்சி ஆளும் கட்சி என கொள்கைகள் இருக்கும். அதையெல்லாம் நாட்டின் நிலைமை சாட்சிகளாக ஏற்றுக்கொள்ள முடியாது.
  19. ஒரே நாளில் இறந்து விடுவோம் என தெரிந்தும் உயர உயர பறக்கும் ஈசலை போல் நாமும் வாழ்க்கையை ரசித்து வாழ்வோம்.😂
  20. நான் எல்லோருடனும் கருத்து முரண்படக்கூடியவன்தான்! ஏனெனில் என்னால் வஞ்சகமாக யாருடனும் நடந்துகொள்ள முடியவில்லை.!
  21. பற்களை இழந்த ஓநாய் சைவ உணவு முறைகளை புகழ்ந்து பேசத்தொடங்குமாம்.
  22. உக்ரேன் யுத்தம் ஆரம்பித்த காலங்களில் பட்டும் படாமலும் என்னால் சொல்லப்பட்ட கருத்து. ரஷ்யாவை முறியடிக்க யாராலும் முடியாது.அதன் பலம் பொருளாதார பலம்...அது மிக வலுவானது. உங்கள் எழுத்துக்களுக்கு நன்றி வசி.
  23. நீண்ட காலம் இலங்கையின் கடற்தொழில் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தாவிடம் கேட்டிருக்க வேண்டும். எவரும் கேட்க மாட்டார்கள் என்பது சிதம்பர ரகசியம்.
  24. நான் தினசரி நினைக்கின்றேன்.அஞ்சலி செலுத்துகின்றேன்.எனக்கு எல்லா நாட்களும் மாவீரர் நாட்களே. 🙏 உங்கள் எழுத்துக்களுக்கு நன்றி உதயன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.