Everything posted by குமாரசாமி
-
14ஆவது முறையாக தந்தையானர் எலான் மஸ்க்!
டெய்லி என்ன சாப்பிடுறார் எண்டதை ஒருக்கால் விசாரிக்க வேணும் 😂
-
யுக்ரேன் போர்: அமெரிக்கா துணையின்றி ஐரோப்பாவால் ரஷ்ய ராணுவத்தை சமாளிக்க முடியுமா?
யுக்ரேன் போர்: அமெரிக்கா துணையின்றி ஐரோப்பாவால் ரஷ்ய ராணுவத்தை சமாளிக்க முடியுமா? உக்ரேன் போரில் மட்டுமல்ல. சாதாரணமாகவே அமெரிக்கா இல்லாமல் ஐரோப்பாவால் எதனையும் சமாளிக்க முடியாது.😂
-
14ஆவது முறையாக தந்தையானர் எலான் மஸ்க்!
சிங்கன் எல்லா விசயத்திலையும் சாதனை படைக்க நினைக்கிறார் போல...🤣
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
தமிழ் நாட்டு அரசியலில் யோக்கியர்கள் எவருமில்லை. அதே போல்.... சினிமாத்துறையிலும் யோக்கியர்கள் எவருமில்லை.நிலைமை இப்படியிருக்க சீமான் நடத்தைகளை மட்டும் தூக்கிப்பிடிப்பதும் ஒரு வித அயோக்கியம். அதிலும் அன்றைய பிரச்சனையை இன்று சூடாக்குவதும் பழிவாங்கல் தான். இது சீமானுக்கு வக்காளத்து வாங்கும் கருத்தல்ல.நடு நிலைமையாக யோசித்து பார்த்ததில்.....
-
உக்ரேன் ஜனாதிபதியை பாராட்டிய ட்ரம்ப்!
ஏற்கனவே செலென்ஸ்கி டொனால்ட் ரம்ப் அவர்களை சந்தித்து அடி வாங்காத குறையாக மூக்கேனப்பட்டு திரும்பி வந்தவர். இந்தமுறை என்ன தைரியத்திலை திருப்பியும் ரம்ப் அன்ட் கோ வை சந்திக்கப்போனார் எண்டு தெரியேல்லை? முந்தியே ரம்ப் ரஷ்ய ஆதரவாளர் எண்டு தெரிஞ்சும் போய் சாத்துப்படி வாங்கிக்கொண்டு வந்திருக்கிறார்.அதை விட கொடுமை என்னெண்டால் பைடன் உக்ரேனுக்கு ஆயுதம் குடுக்கேக்க அமெரிக்கா தங்கப்பவுண் எண்டவர்கள் இப்ப தலைகீழாய் நிக்கினம்.🤣 அமெரிக்காவை யார் ஆட்சி செய்தாலும் ....அமெரிக்கா இல்லாமல் ஐரோப்பாவோ ஏனைய கண்டங்களோ தனித்து நின்று எதையும் செய்ய முடியாது. இதுதான் இன்றைய உலக யதார்த்தம்.அப்படி ஏதும் நடந்தால் அது உலக அதிசயம். பாவம் செலென்ஸ்கி மட்டுமல்ல நம்ம ஜேர்மனியும் தான்...😎
-
சீமானை தண்டிக்காவிட்டால், அது சட்டத்தின் தோல்வியாகும்!
தவறு செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இதில் மாற்றுக்கருத்தில்லை. தமிழ்நாட்டில் அரசியலையும் சினிமாவையும் பிரித்து பார்க்க முடியாது. இப்போதெல்லாம் சினிமாவை கூடுதலாக அரசியல் பிரச்சாரத்திற்காகவே மட்டும் பிரயோகிக்கின்றார்கள். சினிமா என்பது ஒரு கனவுத்தொழிற்சாலை. அங்கு நடக்கும் விட்டுக்கொடுப்புகள்,கதை டிஷ்கசன், விடுதிகளில் நடக்கும் புரிந்துணர்வு சந்திப்புகள் என வெளியே சொல்ல முடியாத சம்பவங்கள் அன்றைய இன்றைய வெள்ளித்திரைகளுக்கு பின்னால் நடக்கும் சம்பவங்கள் ஏராளம்.ஏராளம். அன்றும் சீமான் செய்தது போல் பல பல சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. ஆனால் அன்று ஊடக வெளிச்சம் இல்லை. பத்திரிகைகளும் அரசியல் கட்சிகள் சார்ந்தே இருந்திருக்கின்றன. அந்த அரசியல் சார்பு இன்றும் ஊடகங்களில் இருக்கின்றது. அன்றைய சினிமா அரசியல் தலைவர்கள் உள்வீட்டு விடயங்கள் வெளிவந்தாலும் அவை அடக்கப்பட்டு விட்டன.அப்படி இருந்தும் முன்னைய தலைவர்களின் அசிங்க செயல்கள் ஒரு ஓரமாக விவாதிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. தமிழ்நாட்டு அரசியலில் பாலியல் சீர்கேடுகளும்,ஊழல் லஞ்ச நடைமுறைகளும் சாதாரண நிகழ்வாகவே இருக்கின்றது. அத்துடன் சாதி எனும் கொடூரம் தமிழ்நாட்டை தவிர வேறெங்கும் அதிகமாக இல்லை.இவற்றையெல்லாம் அரசியலில் பேசு பொருளாக்க மாட்டார்கள். ஏனென்றால் அவை அனைத்தும் அவர்களுக்கு மூலதனம். இதுதான் தமிழ்நாட்டு அரசியலின் சித்திரம். குற்றவாளியும் சுத்தமில்லை. சுத்தவாளிகளும் குற்றம் செய்யாமலில்லை. இது இப்படி இருக்க சீமான் மட்டும் தமிழ்நாட்டு அரசியலில் குற்றவாளி அல்ல.சீமானை குற்றம் சாட்டுபவர்களும் குற்றவாளிகள் மட்டுமல்ல நீதிமான்களும் அல்ல. அவர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. அத்துடன் சீமானின் முன்னாள் காதலி கணவனே கண்கண்ட தெய்வம் எனும் கொள்கையுடையவராக இருந்தாலும் மேலும் பேசலாம். அதுவும் அங்கே பூச்சியம். நியாயமில்லாத அரசியல் வெற்றிகள் என்றுமே நிலைக்காது. அது யாராக இருந்தாலும் சரி..👈
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
ஜேர்மனியிலையும் உதே நிலைமைதான். ரெஸ்ரோரன்ற் சாப்பாட்டு மேசையிலையும் 13ம் நம்பர் மேசை இல்லை. 😂
-
சீமானுக்கு சிக்கலா..?
அன்றே விளக்கம் கொடுத்த சீமான்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அமைதி கூட பல நேரங்களில் பிறர் பார்வைக்கு திமிராகவே தெரிகின்றது.....
-
யாழில் தேங்காய் விலை ரூ. 250 தொட்டது!
தென்மராட்சி பக்கம் போய் பாருங்கள். தென்னஞ்சோலைகளை பார்த்தால் குளிர்ச்சியில் உடல் சிலிர்க்கும். தேங்காய்க்கும் பஞ்சமில்லை.
-
காளியம்மாள் .... கழகத்துக்கு?
அன்றைய திராவிட கழகத்திலிருந்து பல அறிவாற்றல் கொண்டவர்கள் வெளியேறினார்கள்.வைகோ வெளியேறினார். நெடுஞ்செழியன் வெளியேறினார்.எம்ஜிஆர் வெளியேறினார். அவர்கள் வெளியேறினாலும் அக்கட்சியை யாராலும் அசைக்க முடியவில்லை. திமுக எப்படி வலுவான கொள்கையோ.... அது போல் நாம் தமிழர் கட்சியும் வலுவான கோள்கையுடைய கட்சி. ஒரு காளியம்மாள் விலகினால் ஆயிரம் காளியம்மாக்கள் உருவாகுவர். ஆறு மாதத்திற்கு முதலே பிசுபிசுத்து போன காளியம்மாள் அண்மைய நாட்கள் வரைக்கும் கட்சி தாவல் சம்பந்தமாக யார் யாரோடெல்லாம் பேரம் பேசினாரோ யாருக்குத்தெரியும். கட்சியின் போக்கு பிடிக்கவில்லை என்றால் மாதக்கணக்கான தாமதம் ஏன்?
-
7 கோள்களும் ஒரே அணிவகுப்பில்; இலங்கையர்களுக்கு அரிதான சந்தர்ப்பம்!
அண்ட பிரபஞ்சமே நேர்கோட்டில் வந்து காட்சி தந்தாலும் சிறிலங்கனுக்கு கடன்வாங்கி சாப்பிட்டு வாழுற பழக்கம் போகாது. 😁
-
காளியம்மாள் .... கழகத்துக்கு?
முற்றிலும் உண்மை.இருந்த மரியாதையும் போய்விடும்.
-
சாவகச்சேரியில் காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை
சாவகச்சேரி மீன் சந்தையிலை போய் டிஸ்கவுண்ட் கேக்கிறதுக்கும் ஒரு தைரியம் வேணும் 🤣
-
ஜேர்மனியில் இருந்து யூதர்களைப்போல் துரத்தப்படுவார்களா தமிழர்கள்..?
நேரடியாகவே நல்ல கேள்வியை கேட்டுள்ளீர்கள் விசுகர்!👍 இதற்கு இடக்கு முடக்கு பதில் சொல்லாமே தவிர நீதி நேர்மையான பதில்கள் இல்லை. எந்த நாட்டில் இனவாதம் ,மதவாதம் இல்லை? இதே கேள்வியை ஈழ மண்ணில் கேட்பதாயின் இன்னொரு கேள்வி போனஸ்! அது எதுவென்றால் சாதி வேகுபாடு எங்கில்லை?👈
-
ஜேர்மனியில் இருந்து யூதர்களைப்போல் துரத்தப்படுவார்களா தமிழர்கள்..?
முற்றிலும் தவறான கருத்து.
-
ஜெர்மனி தேர்தல்: எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு! வெளியான Exit Poll ரிசல்ட்!
உலக பொருளாதார அரசியலில் சீனாவை விட ரஷ்ய பொருளாதார அரசியல் 100 சிறந்தது /நம்பகரமானது என டொனால்ட் ரம்ப் நன்கு தெரிந்து வைத்திருக்கின்றார்😎
-
ஜெர்மனி தேர்தல்: எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு! வெளியான Exit Poll ரிசல்ட்!
அமெரிக்க ஜெனாதிபதி டொனால்ட் ரம்ப் அவர்கள் நாளைய ஜேர்மன் அதிபர் Friedrich Merz அவர்கட்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.🍀
-
BBC தமிழோசை ஆனந்தி சூரியபிரகாசம் அவர்கள் காலமானார்!!!
அன்றுதான் தொடங்கியது எம் பின்னடைவுகள்.☹️
-
ஜேர்மனியில் இருந்து யூதர்களைப்போல் துரத்தப்படுவார்களா தமிழர்கள்..?
இது உண்மைக்கு புறம்பான செய்திச்சாரம் அடங்கிய காணொளி. அதிலும் அந்த பெண்மணி சொல்லும் செய்தியை மறுத்து கண்டிக்கின்றேன்.
-
அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி ஆற்றில் வீழ்ந்தது ; மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பம்
வளர்ந்து வரும் சமுதாயம் நாளைய நல்லது கெட்டதுகளை இன்றே முகர்ந்து பிடிக்கின்றார்கள். எம்மைப் போன்றவர்கள் கிழிந்த ரெக்கோர்ட் தட்டு மாதிரி ஒரே இடத்தில் நின்று வாழ்க வாழ்க என கோஷம் போடத்தான் லாயக்கு. 🤣 ஆனால் அவர்கள் எம்மைப்போல் வாழையடி வாழை அரசியல் செய்பவர்கள் அல்ல. நாளைய உலகை பற்றி நன்கு சிந்திக்கின்றார்கள்.💪
-
சீனாவின் விண்வெளி சாதனை: பூமியில் இருப்பவரின் முகத்தை கண்டறியும் புதிய கேமரா..!
இந்த தொழில் நுட்பம் ஏற்கனவே அமெரிக்காவிடம் இருக்கின்றது என நினைக்கின்றேன். இரண்டாவது ஈராக் யுத்தத்தின் போது ஜேர்மனியில் ஒளிபரப்பட்ட ஒரு விவரண நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்த்த ஞாபகம்.
-
அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி ஆற்றில் வீழ்ந்தது ; மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பம்
நான் இது வரைக்கும் SPD கட்சிக்குத்தான் வாக்களித்திருக்கிறேன். உள்ளூர் தேர்தல்களில் GRÜNE கட்சிக்கு வாக்களித்திருக்கின்றேன். ஏனெனில் யுத்தமே வேண்டாம் என சொல்லி ஆட்சி அமைத்த கட்சிகள்.ஆயுத உற்பத்தியை கூட கட்டுப்படுத்திய கட்சிகள்.என்று உக்ரேனுக்கு போர்தான் முடிவு என இரு கட்சிகளும் முடிவெடுத்தார்களோ அன்றிலிருந்து இவர்கள் பக்கம் திரும்பி பார்ப்பதில்லை. நான் இன்று வாக்களித்ததுDie Linke என்ற கட்சிக்கு..😎 இருப்பினும் CDU-SPD என்ற இரு பெரும் கட்சிகள் கூட்டாட்சி அமைக்கும் என நினைக்கிறேன். எதிர்க்கட்சி வரிசையில் AfD அமரக்கூடும் 🤣
-
ஜேர்மனியில் இருந்து யூதர்களைப்போல் துரத்தப்படுவார்களா தமிழர்கள்..?
ஜேர்மனியின் உண்மையான அரசியல் தெரியாத ஒருவரின் காணொளி தயாரிப்பு என நினைக்கின்றேன். இதன் பின் புலத்தில் உள்ளவர்களையும் ஊகிக்க முடிகின்றது. ஜெர்மனிக்கு அகதி அரசியல் நெருக்கடி இருப்பது உண்மைதான். ஆனால் வெளிநாட்டவர் பிரச்சனை அல்ல.CDU,Afd கட்சிகள் அகதிகளை பற்றித்தான் பேசு பொருளாக எடுத்துள்ளார்கள்.வெளிநாட்டு வேலையாட்களைப்பற்றி அல்ல....அகதிகளாக வந்து வேலை வெட்டிக்கு போகாமல் சோசல் காசு எடுத்துக்கொண்டு பிள்ளை குட்டிகளை டசின் கணக்கில் பெற்றுக்கொண்டிருப்பவர்கள் கவனிக்கவும். இந்த காணொளியில் பேட்டி கொடுக்கும் பெண் CDU,Afd கட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள் எனும் தொனியில் ஏதோவெல்லாம் கூறுகின்றார். ஆனால் எந்த கட்சிக்கு வாக்களியுங்கள் என சொல்லவில்லை.CDU கட்சிதான் என்றுமில்லதவாறு அகதிகளை உள்வாங்கியவர்கள்.அதனாலேயே ஜேர்மனிக்குள் அதிக பிரச்சனைகள் வந்தது.சிறுமிகள் பல்லியல் வன்கொடுமை,கத்திக்குத்துக்கள் இதுபற்றி வாயே திறக்கவில்லை ஏன்?அகதிகள் பற்றி ஏன் இவ்வளவு எதிர்ப்புகள் வந்தது பற்றியும் இவர் ஒரு வார்த்தை கூறவில்லை.அது பற்றி அலசவுமில்லை. மொட்டையாக வெளிநாட்டவர்களை அடிக்கப்போகிறார்கள். துரத்தப்போகின்றார்கள் என ஏதோவெல்லாம் சொல்லி தான் சார்ந்த கட்சி பிரச்சாரம் செய்கின்றார்.அவ்வளவுதான். 80களில் SPD கட்சிதான் ஈவு இரக்கமில்லாமல் அன்றைய அகதிகளையும் அகதி தஞ்சம் கோரிய எம்மவர்களையும் இரவோடு இரவாக திருப்பி அனுப்பியவர்கள் இதெல்லாம் அந்த காணொளி தயாரித்தவர்களுக்கு தெரியுமா?படிக்கவும் விடாமல்,வேலை செய்யவும் விடாமல் இழுத்தடித்தவர்கள் எந்த கட்சியினர் என்றாவது இவர்களுக்கு தெரியுமா? தேவையில்லாத அச்சமூட்டி மறைமுக தேர்தல் பிரச்சாரம் செய்யும் இவர்கள் முதலில்...ஜேர்மனியில் வேலை செய்யாமல் சோசல்காசில் வாழும் எம்மவர்களுக்கு வேலைக்கு போய் உழைத்து வாழுமாறு அறிவுரை கூறுங்கள்.கிரிமைனல்,சுத்துமாத்து வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு நல்லதை எடுத்து கூறட்டும். அதன் பின் நாட்டு அரசியலில் இறங்கலாம். தேவையில்லாத அச்சமூட்டி மறைமுக தேர்தல் பிரச்சாரம் செய்யும் இவர்கள் முதலில்...ஜேர்மனியில் வேலை செய்யாமல் சோசல்காசில் வாழும் எம்மவர்களுக்கு வேலைக்கு போய் உழைத்து வாழுமாறு அறிவுரை கூறுங்கள்.கிரிமைனல்,சுத்துமாத்து வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு நல்லதை எடுத்து கூறட்டும். அதன் பின் நாட்டு அரசியலில் இறங்கலாம். ஜேர்மனிக்கு வந்து அவர்கள் மண்ணில் இராஜ கோபுரம் கட்டி பந்தா காட்டும் நீங்கள் எல்லோரும் யாழ்ப்பாணத்தில் கட்டப்படும் புத்த விகாரை பற்றி கதைக்க அருகதை அற்றவர்கள். தேவையில்லாத அச்சமூட்டி மறைமுக தேர்தல் பிரச்சாரம் செய்யும் இவர்கள் முதலில்...ஜேர்மனியில் வேலை செய்யாமல் சோசல்காசில் வாழும் எம்மவர்களுக்கு வேலைக்கு போய் உழைத்து வாழுமாறு அறிவுரை கூறுங்கள்.கிரிமைனல்,சுத்துமாத்து வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு நல்லதை எடுத்து கூறட்டும். அதன் பின் நாட்டு அரசியலில் இறங்கலாம். ஜேர்மனிக்கு வந்து அவர்கள் மண்ணில் இராஜ கோபுரம் கட்டி பந்தா காட்டும் நீங்கள் எல்லோரும் யாழ்ப்பாணத்தில் கட்டப்படும் புத்த விகாரை பற்றி கதைக்க அருகதை அற்றவர்கள். ஊர் திருவிழாக்களில் பக்கத்து ஊர்க்காரன் வந்து பெண்களுடன் சேட்டை விட்டால் உயிருடன் விட்டுவைக்காத எமது சமூகம்.....👈 ஜேர்மனிக்கு அகதியாக வந்து பெண்கள்,சிறுமிகள் என பாரபட்சம் இல்லாமல் பாலியல் கொடுமை செய்தும் கொலை செய்தும்,அப்பாவி மக்களை கத்தியால் குத்தி கொலை செய்தும்......பொது வீதி விழாக்களில் மக்கள் கூட்டங்கள் மீது வாகனங்களால் மோதி கொலை செய்வதையும் ஒரு ஜேர்மன்காரனை பார்த்து சும்மா இரு என சொல்ல வருகின்றார்களா? இதே மாதிரி உங்கள் ஊர்களில் நடந்தால் வாய் மூடிக்கொண்டு சும்மா இருப்பீர்களா?
-
'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
உலகின் யதார்த்த அரசியலை புரிந்து கொண்டால் அதுவும் சரியானதே. உலகில் எந்த நாடும் தனித்து இயங்க முடியாது. அது எந்தா நாடாகினும் சரி. அதை விட இன்னுமொரு பகிடி. ஜேர்மனியை அமெரிக்காவின் இன்னொரு மாகாணம் என இங்கு நக்கலுக்கு சொல்வார்கள்.🤣 இன்றைய தேர்தலுக்கு பின்(23.02.2025) அதாவது ஆட்சி மாறும் CDU கட்சி தான் முதன்மையாக வரும். அதன் பின்னர் புதிய நாடகங்கள் கூத்துகளை கண்டு களிக்கலாம்.