Everything posted by குமாரசாமி
-
ஜேர்மனியில் இருந்து யூதர்களைப்போல் துரத்தப்படுவார்களா தமிழர்கள்..?
முற்றிலும் தவறான கருத்து.
-
ஜெர்மனி தேர்தல்: எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு! வெளியான Exit Poll ரிசல்ட்!
உலக பொருளாதார அரசியலில் சீனாவை விட ரஷ்ய பொருளாதார அரசியல் 100 சிறந்தது /நம்பகரமானது என டொனால்ட் ரம்ப் நன்கு தெரிந்து வைத்திருக்கின்றார்😎
-
ஜெர்மனி தேர்தல்: எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு! வெளியான Exit Poll ரிசல்ட்!
அமெரிக்க ஜெனாதிபதி டொனால்ட் ரம்ப் அவர்கள் நாளைய ஜேர்மன் அதிபர் Friedrich Merz அவர்கட்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.🍀
-
BBC தமிழோசை ஆனந்தி சூரியபிரகாசம் அவர்கள் காலமானார்!!!
அன்றுதான் தொடங்கியது எம் பின்னடைவுகள்.☹️
-
ஜேர்மனியில் இருந்து யூதர்களைப்போல் துரத்தப்படுவார்களா தமிழர்கள்..?
இது உண்மைக்கு புறம்பான செய்திச்சாரம் அடங்கிய காணொளி. அதிலும் அந்த பெண்மணி சொல்லும் செய்தியை மறுத்து கண்டிக்கின்றேன்.
-
அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி ஆற்றில் வீழ்ந்தது ; மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பம்
வளர்ந்து வரும் சமுதாயம் நாளைய நல்லது கெட்டதுகளை இன்றே முகர்ந்து பிடிக்கின்றார்கள். எம்மைப் போன்றவர்கள் கிழிந்த ரெக்கோர்ட் தட்டு மாதிரி ஒரே இடத்தில் நின்று வாழ்க வாழ்க என கோஷம் போடத்தான் லாயக்கு. 🤣 ஆனால் அவர்கள் எம்மைப்போல் வாழையடி வாழை அரசியல் செய்பவர்கள் அல்ல. நாளைய உலகை பற்றி நன்கு சிந்திக்கின்றார்கள்.💪
-
சீனாவின் விண்வெளி சாதனை: பூமியில் இருப்பவரின் முகத்தை கண்டறியும் புதிய கேமரா..!
இந்த தொழில் நுட்பம் ஏற்கனவே அமெரிக்காவிடம் இருக்கின்றது என நினைக்கின்றேன். இரண்டாவது ஈராக் யுத்தத்தின் போது ஜேர்மனியில் ஒளிபரப்பட்ட ஒரு விவரண நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்த்த ஞாபகம்.
-
அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி ஆற்றில் வீழ்ந்தது ; மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பம்
நான் இது வரைக்கும் SPD கட்சிக்குத்தான் வாக்களித்திருக்கிறேன். உள்ளூர் தேர்தல்களில் GRÜNE கட்சிக்கு வாக்களித்திருக்கின்றேன். ஏனெனில் யுத்தமே வேண்டாம் என சொல்லி ஆட்சி அமைத்த கட்சிகள்.ஆயுத உற்பத்தியை கூட கட்டுப்படுத்திய கட்சிகள்.என்று உக்ரேனுக்கு போர்தான் முடிவு என இரு கட்சிகளும் முடிவெடுத்தார்களோ அன்றிலிருந்து இவர்கள் பக்கம் திரும்பி பார்ப்பதில்லை. நான் இன்று வாக்களித்ததுDie Linke என்ற கட்சிக்கு..😎 இருப்பினும் CDU-SPD என்ற இரு பெரும் கட்சிகள் கூட்டாட்சி அமைக்கும் என நினைக்கிறேன். எதிர்க்கட்சி வரிசையில் AfD அமரக்கூடும் 🤣
-
ஜேர்மனியில் இருந்து யூதர்களைப்போல் துரத்தப்படுவார்களா தமிழர்கள்..?
ஜேர்மனியின் உண்மையான அரசியல் தெரியாத ஒருவரின் காணொளி தயாரிப்பு என நினைக்கின்றேன். இதன் பின் புலத்தில் உள்ளவர்களையும் ஊகிக்க முடிகின்றது. ஜெர்மனிக்கு அகதி அரசியல் நெருக்கடி இருப்பது உண்மைதான். ஆனால் வெளிநாட்டவர் பிரச்சனை அல்ல.CDU,Afd கட்சிகள் அகதிகளை பற்றித்தான் பேசு பொருளாக எடுத்துள்ளார்கள்.வெளிநாட்டு வேலையாட்களைப்பற்றி அல்ல....அகதிகளாக வந்து வேலை வெட்டிக்கு போகாமல் சோசல் காசு எடுத்துக்கொண்டு பிள்ளை குட்டிகளை டசின் கணக்கில் பெற்றுக்கொண்டிருப்பவர்கள் கவனிக்கவும். இந்த காணொளியில் பேட்டி கொடுக்கும் பெண் CDU,Afd கட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள் எனும் தொனியில் ஏதோவெல்லாம் கூறுகின்றார். ஆனால் எந்த கட்சிக்கு வாக்களியுங்கள் என சொல்லவில்லை.CDU கட்சிதான் என்றுமில்லதவாறு அகதிகளை உள்வாங்கியவர்கள்.அதனாலேயே ஜேர்மனிக்குள் அதிக பிரச்சனைகள் வந்தது.சிறுமிகள் பல்லியல் வன்கொடுமை,கத்திக்குத்துக்கள் இதுபற்றி வாயே திறக்கவில்லை ஏன்?அகதிகள் பற்றி ஏன் இவ்வளவு எதிர்ப்புகள் வந்தது பற்றியும் இவர் ஒரு வார்த்தை கூறவில்லை.அது பற்றி அலசவுமில்லை. மொட்டையாக வெளிநாட்டவர்களை அடிக்கப்போகிறார்கள். துரத்தப்போகின்றார்கள் என ஏதோவெல்லாம் சொல்லி தான் சார்ந்த கட்சி பிரச்சாரம் செய்கின்றார்.அவ்வளவுதான். 80களில் SPD கட்சிதான் ஈவு இரக்கமில்லாமல் அன்றைய அகதிகளையும் அகதி தஞ்சம் கோரிய எம்மவர்களையும் இரவோடு இரவாக திருப்பி அனுப்பியவர்கள் இதெல்லாம் அந்த காணொளி தயாரித்தவர்களுக்கு தெரியுமா?படிக்கவும் விடாமல்,வேலை செய்யவும் விடாமல் இழுத்தடித்தவர்கள் எந்த கட்சியினர் என்றாவது இவர்களுக்கு தெரியுமா? தேவையில்லாத அச்சமூட்டி மறைமுக தேர்தல் பிரச்சாரம் செய்யும் இவர்கள் முதலில்...ஜேர்மனியில் வேலை செய்யாமல் சோசல்காசில் வாழும் எம்மவர்களுக்கு வேலைக்கு போய் உழைத்து வாழுமாறு அறிவுரை கூறுங்கள்.கிரிமைனல்,சுத்துமாத்து வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு நல்லதை எடுத்து கூறட்டும். அதன் பின் நாட்டு அரசியலில் இறங்கலாம். தேவையில்லாத அச்சமூட்டி மறைமுக தேர்தல் பிரச்சாரம் செய்யும் இவர்கள் முதலில்...ஜேர்மனியில் வேலை செய்யாமல் சோசல்காசில் வாழும் எம்மவர்களுக்கு வேலைக்கு போய் உழைத்து வாழுமாறு அறிவுரை கூறுங்கள்.கிரிமைனல்,சுத்துமாத்து வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு நல்லதை எடுத்து கூறட்டும். அதன் பின் நாட்டு அரசியலில் இறங்கலாம். ஜேர்மனிக்கு வந்து அவர்கள் மண்ணில் இராஜ கோபுரம் கட்டி பந்தா காட்டும் நீங்கள் எல்லோரும் யாழ்ப்பாணத்தில் கட்டப்படும் புத்த விகாரை பற்றி கதைக்க அருகதை அற்றவர்கள். தேவையில்லாத அச்சமூட்டி மறைமுக தேர்தல் பிரச்சாரம் செய்யும் இவர்கள் முதலில்...ஜேர்மனியில் வேலை செய்யாமல் சோசல்காசில் வாழும் எம்மவர்களுக்கு வேலைக்கு போய் உழைத்து வாழுமாறு அறிவுரை கூறுங்கள்.கிரிமைனல்,சுத்துமாத்து வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு நல்லதை எடுத்து கூறட்டும். அதன் பின் நாட்டு அரசியலில் இறங்கலாம். ஜேர்மனிக்கு வந்து அவர்கள் மண்ணில் இராஜ கோபுரம் கட்டி பந்தா காட்டும் நீங்கள் எல்லோரும் யாழ்ப்பாணத்தில் கட்டப்படும் புத்த விகாரை பற்றி கதைக்க அருகதை அற்றவர்கள். ஊர் திருவிழாக்களில் பக்கத்து ஊர்க்காரன் வந்து பெண்களுடன் சேட்டை விட்டால் உயிருடன் விட்டுவைக்காத எமது சமூகம்.....👈 ஜேர்மனிக்கு அகதியாக வந்து பெண்கள்,சிறுமிகள் என பாரபட்சம் இல்லாமல் பாலியல் கொடுமை செய்தும் கொலை செய்தும்,அப்பாவி மக்களை கத்தியால் குத்தி கொலை செய்தும்......பொது வீதி விழாக்களில் மக்கள் கூட்டங்கள் மீது வாகனங்களால் மோதி கொலை செய்வதையும் ஒரு ஜேர்மன்காரனை பார்த்து சும்மா இரு என சொல்ல வருகின்றார்களா? இதே மாதிரி உங்கள் ஊர்களில் நடந்தால் வாய் மூடிக்கொண்டு சும்மா இருப்பீர்களா?
-
'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
உலகின் யதார்த்த அரசியலை புரிந்து கொண்டால் அதுவும் சரியானதே. உலகில் எந்த நாடும் தனித்து இயங்க முடியாது. அது எந்தா நாடாகினும் சரி. அதை விட இன்னுமொரு பகிடி. ஜேர்மனியை அமெரிக்காவின் இன்னொரு மாகாணம் என இங்கு நக்கலுக்கு சொல்வார்கள்.🤣 இன்றைய தேர்தலுக்கு பின்(23.02.2025) அதாவது ஆட்சி மாறும் CDU கட்சி தான் முதன்மையாக வரும். அதன் பின்னர் புதிய நாடகங்கள் கூத்துகளை கண்டு களிக்கலாம்.
-
சாவகச்சேரியில் காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை
உதென்ன பிரமாதம். இன்னுமொரு பெரிய புதினம் சொல்லுறன் கேளுங்கோ.. ஊரில இருக்கிற இரத்த உரிமை சொந்தங்களுக்கே நீங்கள் காசு பணம் குடுக்கேல்லை எண்டால் அவ்வளவுதான். அதாவது அவையள் கேக்கிற நேரம் மணி குடுக்கேல்லை எண்டால் மனிசராயே மதிக்க மாட்டினம்.
-
BBC தமிழோசை ஆனந்தி சூரியபிரகாசம் அவர்கள் காலமானார்!!!
அஞ்சலிகள். இன்றும் பிபிசி தமிழோசை என்றால் இவரின் குரல் தான் ஞாபகத்திற்கு வரும். இவர் தமிழுக்கும் தமிழீழத்திற்கும் ஆற்றிய சேவைகள் எண்ணிலடங்காதவை.
-
சாவகச்சேரியில் காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை
எமது ஊர்களில் ஏற்கனவே வாழ்க்கை போராட்டம். அப்படி இருக்க குடும்பத்தை சுமந்து கொண்டிருந்த தூணையே தகர்த்து விட்டார்கள்.கனடாவில் இருக்கும் கொலையாளிகளின் உறவினர்கள்,நண்பர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு முன்வந்து மாதாந்த உதவிகளை செய்ய வேண்டும்.அதுதான் நீதியும் தர்மமும். அன்னாரின் உற்றார் உறவினர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
நீங்கள் சொல்வதெல்லாம் ரொம்ப ரொம்ப கரெக்டு.... அதிலும் ஒரு சிக்கல் பாருங்கோ.. செலென்ஸ்கி தனி ஆளாக நின்று அமெரிக்காவை அதாவது டொனால்ட் ரம்ப எதிக்கவில்லை. ஐரோப்பிய ஒன்றியம் ரம்ப் அவர்களின் உக்ரேன் கொள்கையை எதிர்க்கின்றது.அதனோடு சேர்ந்து செலென்ஸ்கியும் முட்டுக்கொடுக்கின்றார் அவ்வளவுதான். டொனால்ட் ரம்பின் முன்னைய ஆட்சியில் பத்திரிக்கையாளர் முன்பே வைத்து செலென்ஸ்கியின் மூக்கை உடைத்தவர் ரம்ப். அதாவது உங்களுக்கு பிரச்சனை என்றால் ரஷ்ய புட்டினுடன் பேசி தீர்த்துக்கொள்ளுங்கள் என முகத்தில் அடித்தாற்போல் வாங்கிக்கட்டியவர் செலென்ஸ்கி. அப்போது வாய் மூடி இருந்துவிட்டு இப்போது ஐரோப்பிய ஒன்றியம் பின்னால் நிற்கின்றது என்றவுடன் நெஞ்ச நிமித்துகின்றார்.என்றாலும் ரம்ப் இரும்பு வரி அந்த வரி இந்தவரி என உயர்த்தா விட்டால் ஐரோப்பிய ஒன்றியமும் வாய்மூடிக்கொண்டுதான் இருந்திருக்கும். நாம் செய்ய முடியாததை உக்ரேனியர்கள் செய்து முடிப்பார்கள். ஏனென்றால் எமது நாட்டு பிரச்சனை வேறு. உக்ரேனியர்களின் பிரச்சனை வேறு. ஏனென்றால் உக்ரேனியர்கள் சுதந்திரமாக வாழ்ந்தவர்கள். நேட்டோ ஆசையில் நனைச்சு சுமப்பதற்கு யாரும் எதுவும் செய்யமுடியாது. என்னது தலைவர் பிரபாகரனால் செய்ய முடியாததை!?!?!?!?!?! தலைவர் எதை செய்து காட்டவில்லை என்பதை இங்கே சொல்லித்தொலையுங்கள்.
-
காளியம்மாள் .... கழகத்துக்கு?
இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் கட்சி தாவுவது என்பது பெரிய விடயமல்ல. கொள்கை இல்லாதவர்கள் இங்கிருந்தால் என்ன? அங்கிருந்தால் என்ன? எல்லாம் ஒன்றுதான்.
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
13ம் இலக்கம் ராசி இல்லாத இலக்கம். அதை இன்றும் பரவலாக நம்புகின்றார்கள் 😂
-
கனடாவும் கண்டறியாத சினோவும். ....
இன்றுதான் என் கண்ணில் பட்டுது. இதற்கெல்லாம் எதற்கு மன்னிப்பு? மற்றவர்களை சிரிக்க வைத்தால் அதுவும் சந்தோசம் தானே...😀 உங்கள் சிந்தனைக்கு பாராட்டுகள்.👍
-
'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
விசுகர்! நான் புட்டினின் வெற்றிக்காக உழைக்கவுமில்லை. டொனால்ட் ரம்பின் வெற்றிக்காக உழைக்கவுமில்லை.செலென்ஸ்கியின் கொள்கைக்காக உழைத்து பாடுபடவுமில்லை. இன்றைய அரசியலில் எது நடக்கின்றதோ அதை வைத்தே என் கருத்துக்களை எழுதினேன்.உக்ரேன் போரை எதிர்த்தவர்கள் காசா அழிவை ஆதரித்தார்கள் அல்லது வேடிக்கை பார்த்தார்கள். அவ்வளவுதான்.நாம் அந்த இரு யுத்தங்கள் பற்றி கருத்துக்கள் எழுதலாமே ஒழிய வரலாறுகள் எதுவுமே படைக்கப்போவதில்லை.அது முடியாத விடயம். இந்த பிரச்சனை ஐரோப்பாவிற்கு புதிதான ஒன்றல்ல. டொனால்ட் ரம் முதல் நான்கு வருடம் ஆட்சியில் இருந்த போதும் அல்லல் பட்டதுதான்.ரம்ப் அன்று விட்ட குறையை இன்று தொடர்கின்றார்.அவ்வளவுதான். அடுத்த நான்கு வருடங்களுக்கு பல்லைக்கடித்துக்கொண்டிருக்க வேண்டியதுதான். மற்றும்படி ரஷ்யா ஐரோப்பாவை தன் கைக்குள் கொண்டு வரும் என்ற கருத்துக்கள் எல்லாம் ஒரு வித தேவையில்லாத பகல் கனவுகள் தான். அன்று நான் ரஷ்யா சார்பாக கருத்துக்கள் எழுதியிருக்கா விட்டால்....... பந்தி பந்தியாக உக்ரேன்,ரஷ்ய,ஐரோப்பிய வரலாறுகள் ஆவேசமாக எழுதப்பட்டிருக்காது.மாற்றுக்கருத்துக்கள் எழுதப்பட்டதால் தான் நல்லகெட்ட கருத்துக்கள் வெளியே வந்தது. நீங்களும் நானும் ஒரே மாதிரியாக எழுதினால் சுவாரசியம் இருக்குமா விசுகர்? 🤣 இப்போது ஏதோ காணி,கதியால்,வரம்பு பிரச்சனை மாதிரி உக்ரேன் பிரச்சனை எமக்குள் வந்து நிற்கின்றது.😉
-
'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
செலென்ஸ்கி நாட்டை விட்டு ஓடலாம் அல்லது நாடு கடத்தப்படலாம் எனும் பாணியில் செய்தி ஒன்று ஜேர்மன் பத்திரிகையில் உலாவுகின்றது. ஆதாரம்
-
பெரியார் தொண்டர்
பிராமண ஐயர் வைச்சு பூசையாக்காட்டில் கோயிலுக்கு மரியாதை இல்லையாம் 😂
-
சும்மா ஒர் பதிவு
ஒரு 30,40 வருடங்களுக்கு முன்னர் ஊர் மக்களிடம் சிரமதான பணி எனும் நடைமுறை ஒன்று இருந்தது.குளங்கள்,ஏரிகள்,வாய்க்கால்கள்,ஏரிகள் என தூர்வாரும் செயல்கள் சிரமதான பணியாக ஊர்மக்களே சேர்ந்து செய்தார்கள். சிரமதான ஆட்களுக்கு ஊரில் இருப்பவர்களே ஒரு இடத்தில் ஒன்றுகூடி சமையல் சாமான்கள் கொண்டுவந்து சமைத்து சாப்பாடு கொடுப்பார்கள்.தனிமனித செலவுகளும் இருக்காது. அப்பப்ப அரசாங்கத்தால நடத்தப்படும் சிரமதான வேலைகளுக்கு வண்டுகள் நிறைந்த கூப்பன் மாவும் புளுக்கள் நெளியும் கருவாடும் கொடுப்பது வேற விசயம். நல்லதொரு சிந்தனைப்பதிவு புத்தன் 👍
-
உண்மை தெரிந்தாகனும்
ஐயோ நான் கந்தையா இல்லை குமாரசாமி 🤣
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சிறித்தம்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். 💐 நொடிக்கு நொடி வயதும் ஏறிக்கொண்டு போகுது என்ன? 🙂
-
உண்மை தெரிந்தாகனும்
வணக்கம் வாருங்கள். சந்திப்பதில் சந்தோசம்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஓ...அவரா? அவர் அதே இடத்தில நிண்டால் அடியார் மடத்தில ஒரு மாசம் தொடந்து அன்னதானம் 😂