Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளைத் தோற்கடிக்க அமெரிக்கா செய்த இராணுவ உதவிகள் – ‘புட்டுப்புட்டு‘ வைக்கும் சிறிலங்கா அதிகாரி

Featured Replies

ுலிகளைத் தோற்கடிக்க அமெரிக்கா செய்த இராணுவ உதவிகள் – ‘புட்டுப்புட்டு‘ வைக்கும் சிறிலங்கா அதிகாரி [ புதன்கிழமை, 28 மார்ச் 2012, 01:14 GMT ] [ கார்வண்ணன் ] USS-Blue-Ridge.jpgவிடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு அமெரிக்கப் பாதுகாப்பு பிரிவுகள் எவ்வாறு உதவின என்பது பற்றிய இரகசியத் தகவல்களை, இறுதிகட்டப் போரின் போது சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவினால் உருவாக்கப்பட்ட ‘முக்கியமான படை‘ ஒன்றின் உறுப்பினர் வெளியிட்டுள்ளார்.

வெளிநாடுகளின் எந்த உதவியும் இன்றியே விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து போரை முடிவுக்குக் கொண்டு வந்ததாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அண்மையில் கூறியிருந்தார்.

அவரது இந்தக் கருத்தை நிராகரிக்கும் வகையிலேயே, சிறிலங்காவில் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா எவ்வாறு உதவியது என்ற தகவலை சரத் பொன்சேகாவினால் உருவாக்கப்பட்ட முக்கிய படை ஒன்றைச் சேர்ந்தவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வெளியிட்டுள்ளார்.

2006ம் ஆண்டில் அப்போதைய சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமெரிக்க இராஜாங்கச் செயலர் கொன்டலிசா ரைசிடம் விடுத்த வேண்டுகோளை அடுத்து அமெரிக்காவில் விடுதலைப் புலிகளின் எல்லாச் செயற்பாடுகளை தடுப்பதற்கு, ஒரு செயலணிக்குழு அமைக்கப்பட்டது.

இதன்படி, கனேடிய எல்லை வழியாக அமெரிக்காவில் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை கொள்வனவு செய்ய வந்த விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டனர்.

2007 ஜனவரியில் இவர்கள் கைது செய்யப்பட்டவுடன், புலிகளின் ஆயுத வலையமைப்பின் செயற்பாடுகளைத் தடுக்க முடிந்தது.

அமெரிக்காவுடன் மங்கள சமரவீர கொண்டிருந்த நல்லுறவினால் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

சிறிலங்கா அரசாங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, அமெரிக்க அரசாங்கம் ஹவாயில் உள்ள பசுபிக் கட்டளைப்பீடத்தின் கீழ் உள்ள, 7வது கடற்படை அணியின் போர்க்கப்பலான ‘யுஎஸ்எஸ். புளூ றிட்ஸ்‘ இல் இருந்து, விடுதலைப் புலிகளின் கப்பல்களின் நடமாட்டம் பற்றிய- குறிப்பாக ஆயுதக்கப்பல்களின் நகர்வுகள் பற்றிய செய்மதிப் படங்கள் சிறிலங்கா அரசுக்குத் தொடர்ச்சியாக வழங்கப்பட்டன.

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் ஊடாக, இந்தச் செய்மதிப் படங்கள் சிறிலங்கா இராணுவத்திடம் கொடுக்கப்பட்டன.

இந்த செய்மதிப் படங்களை கிரகித்துக் கொள்ளும் ஆற்றல்மிக்க அதிகாரிகள் எவரையும் சிறிலங்கா இராணுவம் அப்போது கொண்டிருக்கவில்லை.

இதையடுத்து கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம், மேஜர் கெலும் மத்துமகே என்ற சிறிலங்கா இராணுவ அதிகாரிக்கு புலமைப்பரிசில் வழங்கி, கொலராடோவில் உள்ள இராணுவ அக்கடமியில் இது பற்றிய பயற்சிநெறியை மேற்கொள்ள உதவியது.

அதன்பின்னர், சிறிலங்கா கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட பேர்ல் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளைத் தடுப்பதற்கான சிறப்பு பயிற்சிகள், கரையில் இருந்த 700 கடல்மைல் தொலைவில் வைத்து அளிக்கப்பட்டன.

இந்த சிறப்புப் பயிற்சியை அடுத்து அமெரிக்காவின் 7வது கடற்படை அணியின் ‘யுஎஸ்எஸ் புளூ றிட்ஜ்‘ தொழில்நுட்ப உதவிகளை வழங்கியதுடன், சிறிலங்கா இராணுவத்தினால் பெறப்பட்ட செய்மதிப் படங்களின் அடிப்படையில் ஆழ்கடலில் விடுதலைப் புலிகளின் கப்பல்களை அழிக்க சிறிலங்கா கடற்படை மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் மேற்பார்வை செய்து வந்தது.

அமெரிக்க இராணுவத்திடம் இருந்து பெறப்பட்ட உதவியின் மூலம் உயர்திறன் கொண்ட ஆயுதங்கள் மற்றும் கருவிகளை ஏற்றி வந்த விடுதலைப் புலிகளின் எல்லாக் கப்பல்களையும் சிறிலங்கா கடற்படை ஆழ்கடலில் தாக்கியழித்தது.

தாக்கியழிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் 7-8 கப்பல்களில் இருந்த ஆயுதங்கள் வடக்கைச் சென்றடைந்திருந்தால், போரின் இறுதி முடிவு வேறுமாதிரியாக அமைந்திருக்கும்“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அதேவேளை எதிர்காலத்தில் தாம், இந்தப் போரின் போது இஸ்ரேல் மற்றும் பிரித்தானியா என்பன சிறிலங்காவுக்கு எவ்வாறு உதவி வழங்கின என்ற தகவலையும் வெளியிடப் போவதாகவம் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20120328105877

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D

சிங்களப் பயங்கரவாதிகள் பொய் பேசுவதில் வல்லவர்கள்.

இதை நம்புவதென்றால் உறுதியான ஆதாரங்களை (அமெரிக்கா வழங்கிய செய்மதிப் படங்கள், எடுத்த வீடியோ படங்கள், தொடர்பாடல் பதிவுகள்) முன்வைக்க வேண்டும்.

ஆதாரங்களை முன்வைக்கும் போது, பயங்கரவாதி மகிந்த கூறுவது பொய்யா அல்லது சிங்கள ராணுவப் பயங்கரவாதி சொல்வது பொய்யா என்று தெரியவரும்.

அமெரிக்கா செய்தது போரியல் தொழில்நுட்பம் மற்றும் புலனாய்வுச் செய்திகளாகத்தான் சொல்லப்பட்டிருக்கின்றன. பாவிக்கத் தடைவிதிக்கப்பட்ட ஆயுதங்களை வாங்கிய இடங்கள் பாவித்த ஆயுதங்கள், அவற்றைப் பாவிக்க ஊக்கப்படுத்தியவர்களின் தகவல்களையும் வெளியிட வேண்டும்.

இது ஏதோ அமெரிக்காவை இக்கட்டில் மாட்டிவிடலாமென இவர்கள் வெளியிடும் தகவல்களாகவேயிருக்கின்றன. இவைகளெல்லாம் புரியாதனவா? புலிகளை அடக்குவதற்கு உதவினார்கள் என்றவகையில் தகவல்களுண்டு. எப்படி இதில் அப்பாவிகளைக் கொலை செய்ததை அடக்கினார்கள் என்று சொல்லவில்லையே.

  • கருத்துக்கள உறவுகள்

சனல் 4 இறுதிக் காணொளி 2009 மே முள்ளிவாய்க்கால் மனிதப் படுகொலைகளுக்கு சர்வதேச சமூகத்தையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவிட்டுள்ளதே..! இதில தனிய தனிய அவர்களின் பங்கை எனி பார்க்க வேண்டுமா..??! அதிலும் பெரும் குற்றம் புரிந்தவர்களை மற்றவர்கள் தண்டிக்கும் நிலையை நாம் ஏற்படுத்த வேண்டும். இல்ல.. எல்லா குற்றவாளிகளும் சேர்ந்து செய்த குற்றத்தை நியாயமாக்கவே முயல்வர். அந்த நோக்கத்தோடுதான் சிங்களம் இப்படியான செய்திகளை வெளியிடுகிறது.

அமெரிக்கா சிறீலங்காவிற்கு போரில் உதவியமை வெளிப்படை தானே. 2006 இல் ரெபேட் பிளேக்.. திருமலையில் நின்று சிங்களக் கடற்படைக்கு ஆயுதம் வழங்கி.. போரை ஆரம்பித்து வைத்த செய்திகள் இப்போது பட ஆதாரங்களோடு தமிழ்நெட்டில் உள்ளது.

இப்போ பிரச்சனை அதுவல்ல.. கொடுத்த ஆயுதங்களை மனிதப் பேரழிவு நோக்கி பாவித்த போர்க்குற்றமே சிங்களத்தின் மீதுள்ளது. அந்தக் குற்றங்களுக்கு சிங்களம் தண்டனை அனுபவிப்பதோடு.. சிங்களத்தின்.. திட்டமிட்ட இனப்படுகொலைக்கு உதவிய நாடுகள்.. இனப்படுகொலைக்குள்ளான மக்களுக்கு விடுதலையை பெற்றுக் கொடுக்க முன் வர வேண்டும்..!

Edited by nedukkalapoovan

.

இது சிங்கள அரசாங்கம் வெளியிட்ட கதை மாதிரித்தெரியவில்லை.

*************************************************

அமெரிக்க ஆதரவு சம்பந்தமாக மேலதிக தகவல் - விக்கிலீக்ஸ்

http://www.sangam.org/2012/03/Military_Aid.php?uid=4655

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு வேலை அமெரிக்கா நமக்கு துரோகமே செய்திருந்தால் கூட இப்பொழுது நாம் அவசரபடாமல் ராஜதந்திர ரீதியாக அமெரிக்காவின் பக்கம் இருப்பதே நல்லது என தோன்றுகிறது ஏனெனில் ரஷ்யா சீனா போன்ற வல்லரசுகள் இலங்கைக்கு உதவி செய்யும்போது நாம் ஒதுங்கியிருப்பதை விட அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவதே மேல் , அவனுக்கு இலங்கையில் இடம் வேண்டும் நமக்கு நாடு வேண்டும் எனவே அமெரிக்கா இலங்கையுடனான நட்பை வலுவிழக்க தேவையான முன்னெடுப்புகளை நாம் துவங்க வேண்டும் ,

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா மீது எமக்குக் கோபம் வர வைக்க வேண்டும் எனச் சிங்கள அரசு எதிர்பார்க்கின்றது. அதன் மூலம், நாங்கள் அநாதையாக இருக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றது.

புலிகளின் கடற்படையை ஒழிக்க இலங்கைக்கு உதவிய அமெரிக்காவின் 'ப்ளூ ரிட்ஜ்' படை!

28-uss-blue-ridge.jpg

http://tamil.oneindia.in/news/2012/03/28/srilanka-how-uss-blue-ridge-helped-sri-lanka-to-defeat-ltte-aid0090.html

http://www.facebook.com/USSBlueRidge

  • கருத்துக்கள உறவுகள்

மேலே சொல்லபட்ட கதை உண்மையாக இருந்தாலும் கூட இந்த தருணத்தில் ஏன் சொல்லபட்டது என்பதற்கு பின்னால் உள்ள புலானாய்வு அரசியலை கொஞ்சம் கவனிக்கவேண்டும்.

  • புலம்பெயர் தமிழ் மக்களை அமேரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கு எதிராக கருதிட செய்தல்
  • வழமை போல உணரசிவச அரசியல் மூலம் தமிழ் செயற்பாட்டாலர்களிடியே பிரிவினை உருவாக்கல்

இதில் வேடிக்கை என்ன என்றால், எவ்வளவோ செய்த இந்தியாவை பற்றி ஒரு வார்த்தை கூட கூறாமல் அமெரிக்காவை புட்டு புட்டு வைக்கும் நோக்கம் என்ன.

ஒரு மரியாதைக்கு என்றாலும் இந்தியவை இடியப்பம் இடியப்பம் வைக்கலாமே. :lol::icon_idea:

ஏன் நைனா கபில கெந்தவிதாரண இந்தியா என்ற சொல்லை தணிக்கை செய்துவிட்டாரோ? :lol:

யார் அறிவார் பராபரமே.

சொல்லுவது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள் :icon_idea:

Edited by முதல்வன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுத கப்பல்கலை தாக்க 2 நிலை உதவிகள் தேவை. ஒன்று தகவல் மற்றது இலங்கைக் கடற்படை ஆழ்கடலில் செயல்பட வேண்டிய தாய்க்கப்பல் ஆதரவு Mother ship support.

இதில் முதலாவது குறிப்பிட்ட விடயங்களில் அமரிக்காவின் உதவியும் இரண்டாவது விடயத்தில் இந்தியாவின் உதவியும் இலங்கைக்குக் கிட்டியது.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவும் இதுவரைக்கும் இரகசிமா வைத்திருந்த சிலவற்றை இப்போது சொல்ல வருவதற்கான காரணம் தமக்கெதிராக அமெரிக்காவின் செயற்பாடுகள்தான்.

அமெரிக்காவுக்கும் தமிழர்களுக்கான உறவில் விரிசலை ஏற்படுத்துவதற்கு என்பது யாவரும் அறிந்த உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் ஆத்திரத்தில் அமெரிக்காவை காட்டிக்கொடுக்கிறது.இந்தியாவையும் கூடிய விரைவில் காட்டிக்கொடுக்கும்.உலகத்தை வைத்து தமிழர்களை எப்படி சிறிலங்கா அடக்கியதோ அதே சூத்திரத்தை (formula)தமிழர்கள் பாவித்து சிறிலங்கா அரசுக்கு எதிராக பாவிக்க வேண்டும்.

.

சிங்களம் இப்படியான தகவலை தானே வெளிவிடுவது அதற்குப் பாதகமாகத்தான் முடியும்.

  1. சிங்கள மக்களின் அமெரிக்க எதிர்ப்பலை விழுந்துவிடும். (மகிந்த இந்த எதிர்பலையை தன் பாதுகாப்பாகக் கருதலாம்.)
  2. அமெரிக்க உதவிக்கு சிங்களம் என்ன கைமாறு செய்ய உள்ளது என்ற‌ அழுத்தம் ஏற்படுகின்றது.

*************************************************************************

தமிழ் மக்களின் எதிர்ப்பை எப்போதாவது அமெரிக்கா அசண்டை செய்திருக்கிறதா ?

இது உண்மையாக்கூட இருக்கலாம்..... நாங்கள் அறியாததுமில்லை.

நடந்த அவலத்தையும் இழப்புக்களையும் துரோகங்களையும் மறக்கப்பட முடியாதவை.

இருந்தாலும் கடந்த காலத்தை விட எதிர்காலம் முக்கியமானது.

எமக்கு இப்போது வேண்டயதெல்லாம் அடுத்த கட்டத்துக்கும் போவதற்கு வேண்டிய தடமும் வடமும் தான்.

இழப்புக்களை எல்லாம் தியாகமாக்கி அடுத்த கட்டத்துக்கு நாங்கள் நகருவோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.