Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச தரத்திலான தனியார் வைத்தியசாலை யாழ்நகரில் நேற்று திறந்து வைப்பு

Featured Replies

சர்வதேச தரத்திலான தனியார் வைத்தியசாலை யாழ்நகரில் நேற்று திறந்து வைப்பு

வட மாகாணத்தில் சர்வதேச தரத்திலான தனியார் வைத்தியசாலை நேற்று யாழ் நகரில் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது. நேற்றுக் காலை 9 மணிக்கு திறந்து வைக்கப்பட்ட நொதேர்ன் சென்ரல் வைத்தியசாலையினை, வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி, யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மகிந்த ஹந்துருசிங்க, ஆளுநரின் செயலாளர் எஸ்.இளங்கோவன், யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, மற்றும் வைத்தியசாலையின் ஸ்தாபகர் எஸ்.பி.சாமி ஆகியோர் திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தனதுரையில், இந்த வைத்தியசாலை அமைப்புக்கான அனுமதி கோரப்பட்ட போது நாம் நிலத்தடி நீர் குறித்தே அதிகம் கவலைப்பட்டோம். ஆனால் அந்த கவலையினை முற்றாக நிவர்த்தி செய்யும் வகையில் நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை வைத்தியசாலையில் பொருத்தியிருக்கின்றனர். அந்த வகையில் சிறப்பான பணியை இந்த மண்ணுக்கு ஆற்றியுள்ளனர் என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.இளங்கோவன் தனதுரையில், வெளிநாட்டிலிருந்து வருவோர் எங்களிடமே வடக்கு மாகாணத்தில் சர்வதேச தரத்திலான வைத்தியசாலை, ஆங்கில பாடசாலைகள் இல்லையே ஏன் என்று கேட்கின்றனர். எனவே அந்த நிலையை இன்று இந்த வைத்தியசாலை மாற்றியமைத்திருக்கின்றதென தெரிவித்தார்.

மேலும் இந்த நிகழ்வில், யாழ்.வணிகர் கழகத்தின் தலைவர் இ.ஜெயசேகரம், வைத்திய கலாநிதி ரவிராஜ், முதலீட்டுச்சபையின் யாழ். பணிப்பாளர் ஆர்.ஜெயமனோன், கைத்தொழில் வணிகமன்றத்தின் தலைவர் எஸ்.பூரணச்சந்திரன், வைத்தியகலாநிதி தெய்வேந்திரம், வட மாகாண பிரதம செயலர் திருமதி விஜயலட்சுமி மற்றும் பலரும் உரையாற்றினர்.

இதேவேளை இந்த நிகழ்வில், வங்கி முகாமையாளர்கள், யாழ்.மாவட்டத்தின் சிரேஷ்ட வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள், யாழ். மாவட்ட வர்த்தகர்கள் இராணுவ அதிகாரிகள் சர்வமதத்தலைவர்கள், பொதுமக்கள் ஆகியோர் எனப்பலர் கலந்து கொண்டிருந்தனர்.

http://www.thinakkural.com/news/all-news/jaffna/11658-2012-03-25-20-12-22.html

  • கருத்துக்கள உறவுகள்

வெட்கம் மானம் ரோசம் இவை யாதாகிலும் இத்தனியார் வைத்தியசாலையின் திறப்புவிழாவுக்கு வருகைதந்த அரசாங்க ஊழியர்கட்கு இருக்குதா? சத்தி எடுத்ததுக்கும் கழுவினதுக்கும் கணக்குப்போட்டு தமிழனின் காசைப்புடுங்க தனியார் வைத்திய சாலை. அதன் திறப்புவிழாவுக்கு மாநகரசபை முதல்வர் அரச அதிகாரிகள் வேறு இன்னபல பட்டாளங்கள். உங்களால் முடியாதா, அதேபோன்று தமிழர் பகுதிகளில் அனைத்து அரச வைத்திய சாலைகளையும் பராமரிக்க? சாமான்யன்கள் எல்லோரும் அரச வைத்திய சாலையிலேயே நோய்க்கு மருந்து தேடுவார்கள் அவற்றினது தரத்தினை உயர்த்துவதற்கு பாடுபடுங்கள்.

  • தொடங்கியவர்

மற்றும் வைத்தியசாலையின் ஸ்தாபகர் எஸ்.பி.சாமி ஆகியோர் திறந்து வைத்தனர்

இவர் பாரத நாட்டை சேர்ந்தவர் போலுள்ளது. அத்துடன் நிறையவே தமிழரிடம் கறக்கலாம் என்ற திட்டத்திற்கு அமைய சிங்கள அரசுக்கு இலஞ்சம் கொடுத்து திறக்கப்பட்டு இருக்கலாம்.

இவர் பாரத நாட்டை சேர்ந்தவர் போலுள்ளது. அத்துடன் நிறையவே தமிழரிடம் கறக்கலாம் என்ற திட்டத்திற்கு அமைய சிங்கள அரசுக்கு இலஞ்சம் கொடுத்து திறக்கப்பட்டு இருக்கலாம்.

இல்லை ..அகோதா ..பாரத நாட்டை சேர்ந்தவரல்ல ..இந்த எஸ் பி .சாமி ....யாழ் ,,,வேலணையை பிறப்பிடமாக கொண்டவர் ..ஆரம்ப காலங்களில் விஜயகுமாரதுங்கா போன்றோரே எல்லாம் வைத்து சிங்கள படங்கள் எடுத்து தயாரித்து வெற்றி கண்டவர் ...அத்துடன் முன்னாள் தினக்குரல் பத்திரிகை உரிமையாளர்

எஸ்பி சாமி நல்ல மனுசன்.

நன்றி தகவலுக்கு. கொஞ்சம் நல்ல செய்தி. எமது பணம் எமது நாட்டுக்குள்ளேயே இருக்கும், மக்களுக்கும் சேவை, பணம் இருந்தால், கிடைக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த வைத்திய சாலையை திறந்தவர்கள் - முன்பு "சாமி அண்ட் கோ" என்று வைத்திய சேவை வழங்கியவர்களே. அவர்கள் தான் தினக்குரல் பத்திரிக்கை உரிமையாளர்களும் ஆகும். மீதியை பிறகு எழுதுகிறேன். கதையை வேறு பக்கத்திற்கு கொண்டு போகாட்டி சரி :)

கனபேர் ஒரே தகவல் பதிந்துள்ளோம்-கவனிக்கவில்லை

  • தொடங்கியவர்

nch_3.jpg

nch_4.jpg

இல்லை ..அகோதா ..பாரத நாட்டை சேர்ந்தவரல்ல ..இந்த எஸ் பி .சாமி ....யாழ் ,,,வேலணையை பிறப்பிடமாக கொண்டவர் ..ஆரம்ப காலங்களில் விஜயகுமாரதுங்கா போன்றோரே எல்லாம் வைத்து சிங்கள படங்கள் எடுத்து தயாரித்து வெற்றி கண்டவர் ...அத்துடன் முன்னாள் தினக்குரல் பத்திரிகை உரிமையாளர்

முன்பு இவருக்கு தனியார் மருத்துவமனை இருந்தது.இதை விட இவர் ஒரு வர்த்தகர் 4ம் குறுக்கு தெருவில் எஸ் பி சாமி அன் கோ என்ற கடையும் இருந்தது.

நல்ல முயற்சி . குறைவான செலவில் நிறைவான வைத்தியம் என்றால் நல்லம் .

சாதாரண மக்களும் நன்மையடையனும் .

இல்லை ..அகோதா ..பாரத நாட்டை சேர்ந்தவரல்ல ..இந்த எஸ் பி .சாமி ....யாழ் ,,,வேலணையை பிறப்பிடமாக கொண்டவர் ..ஆரம்ப காலங்களில் விஜயகுமாரதுங்கா போன்றோரே எல்லாம் வைத்து சிங்கள படங்கள் எடுத்து தயாரித்து வெற்றி கண்டவர் ...அத்துடன் முன்னாள் தினக்குரல் பத்திரிகை உரிமையாளர்

யாழுக்கான SPS சொகுசு பேரூந்து சேவையை நடாத்துபவரும் இவர் தான்.

பயங்கரவாதி பசில் ராஜபக்சவுடன் பெரும் வர்த்தகர் என்ற ரீதியில் (தவிர்க்க முடியாத?) தொடர்புகளை வைத்திருந்த இவர் சில சந்தர்ப்பங்களில் தினக்குரல் அரசுக்கு எதிராக எழுதுவதாக பயங்கரவாதி பசில் தன்னை எச்சரிப்பதாக பல மாதங்களின் முன்னர் எம்மிடம் கூறியுள்ளார்.

திருநெல்வேலியில் இந்த வைத்தியசாலையை அமைக்க இருப்பதாக 2 வருடங்களின் முன்னர் எம்மிடம் கூறினார்.

நல்ல காரியம்.

பழைய Central Nursing Home இருந்த இடத்திலா புதிதாகக் கட்டி உள்ளார்கள் ?

இவர் E.சண்முகத்தின் உறவினரா ?

இவர் நல்ல தமிழராக இருந்து தமிழ் மக்களுக்கு சேவை செய்தால் நன்று. அதிகம் பணத்தைக் கறக்கும் இந்திய தனியார் வைத்தியசாலைகள் போல் மாறாவிட்டால் சரி. பொறுத்திருந்து பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

nch_3.jpg

திருநெல்வேலியில் முன்பு ஒரு மருத்துவமனை இவர்களால்.... நடாத்தப் பட்டது என நினைக்கின்றேன்.

பணத்தில் குறியாக இல்லாமல்.... நொந்து போயுள்ள மக்களுக்கு, நல்ல சேவையையும் வழங்க வேண்டும்.

மருத்துவமனை திறப்பு விழாவுக்கு, ஏன் இராணுவ கட்டளைத் தளபதியை அழைத்தார்கள் என்பது தான்.... புரியவில்லை.

காலத்தின் கட்டாயமாக இருக்கலாம்.

  • தொடங்கியவர்

திருநெல்வேலியில் முன்பு ஒரு மருத்துவமனை இவர்களால்.... நடாத்தப் பட்டது என நினைக்கின்றேன்.

பணத்தில் குறியாக இல்லாமல்.... நொந்து போயுள்ள மக்களுக்கு, நல்ல சேவையையும் வழங்க வேண்டும்.

மருத்துவமனை திறப்பு விழாவுக்கு, ஏன் இராணுவ கட்டளைத் தளபதியை அழைத்தார்கள் என்பது தான்.... புரியவில்லை.

அங்கே நடப்பது இராணுவ ஆட்சி, மக்களாட்சி அல்ல, என்பது மீண்டும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விசயம்.அவங்கடை காலைப்பிடித்து தங்கடை வயித்த வழர்ப்பதை விட இது மேல்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் எனக்கு தெரிந்ததை எழுதுவம் என்று யோசித்து போட்டு, வேண்டாம் இப்ப இருக்கிற தடைகள் தண்டனைகள் சீசனில் என்ரை தலையும் உருளாம பார்த்துகொண்டு போவம் என்று பார்க்கிறான். ஒன்று உந்த சர்வதேசத தரன்த்திலான அசுபத்திரிகள் கூடுதலாக பாதிக்கிறது டிபிகல் மிடில் கிளாஸ் குடும்பங்களைத்தான். அவர்கள்தான் பரிசோதனை பிராணிகள். நல்ல உதாரணம் ஒன்று, சில வைத்திய சாலைகளில் செய்யப்படும் "சிறுநீரக நோய்க்கான ஆரம்பகட்ட சோதனைகளும், ஆரம்பகட்ட சிகிச்சை முறைகளும்" பல சந்தர்பங்களில் கிட்டத்தட்ட ஒரு 6 அல்லது 7 வருடங்களுக்கு முந்திய கணக்கு; 8 அல்லது 10 இலட்சத்தை செலவழித்து போட்டு, "இறுதிக்கட்ட சிறுநீரக வருத்தம், சிறுநீரக மற்று சிகிச்சை தேவை" என்று குடும்பமே நடுத்தேருவிர்ற்கு வந்த பிறகு, அரச வைத்திய சாலைகளில் சாவை எதிர்பார்ந்து கொண்டு இருப்பார்கள்.

இதன் மூலம், நவீன சிகிச்சை முறைகள் சாதாரண மக்களுக்கு கிடைபதர்க்கு எதிரானவன் என்று கருத்தல்ல, இந்த இலக்கற்ற "சர்வதேச" தரமான தனியார் வைத்திய சாலைகள், இலங்கை போன்ற நாடுகளுக்கு தேவைவில்லை.

மற்றது கொஞ்சமாவது தெரிந்ததை சொல்லாவிடில் மண்டை வெடித்து விடும் என்பதால்...இவர் முந்தி ஒருக்கால் (தவறான) காலைப்பிடிதாலே இன்னுமொருவருக்கு பேப்பர் வாசிக்கும் படம் கிடைத்தது, இப்பவும் எதோ செய்கிறார் போல- பிளையார் பிடிக்க போய் குரங்கு வராட்டி சரி.

  • தொடங்கியவர்

யாழில் வைத்திய சுகாதார சேவைக்கான ஆளணி பற்றக்குறை அதிகரிப்பு: ஆ.கேதீஸ்வரன்

யாழ்.மாவட்டத்தின் வைத்திய சுகாதார சேவைக்கான ஆளணிப்பற்றாக் குறைகள் அதிகரித்துச் செல்வதாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்விதம் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் உள்ள வைத்தியசாலைகளுக்கு 110 வைத்தியர்கள் தேவையாக உள்ளதாகவும் அவர்களில் 60 வைத்தியர்களே இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், 28 வைத்திய நிபுணர்களில் 6பேர் மட்டும் இருப்பதாகவும் தொழிநுட்ட உத்தியோகத்தர்கள் அதிகளவில் தேவைப்படுவதாகவும் கூறினார்.

இதேவேளை தாதியர் உத்தியோகத்தர்கள் 200க்கு மேற்பட்டோர் யாழ்.வைத்தியசாலைகளுக்கு தேவையாக உள்ளதாகவும் தெரிவித்த அவர், இந்த ஆளணிப் பற்றாக்குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டால் யாழ்.மக்களுக்கு போதியவளான சுகாதார சேவைகளை வழங்கமுடியும் என்றும் கூறினார்.

யாழ்.மாவட்டத்தில் யுத்ததினால் பாதிக்கப்பட்ட 34 வைத்தியசாலைகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. இதேவேளை கிராமிய வைத்தியசாலைகளை நிறுவுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

யாழ்.சாவகச்சேரியில் உள்ள வைத்தியசாலையில் புதிதாக 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் தங்கியிருந்து வைத்திய சேவையைப் பெறுவதற்கான முதியோர் விடுதிகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/38597-2012-03-30-12-54-57.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.