Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சோனியாவை உறைய வைத்த பாலச்சந்திரனின் ஒளிப்படம் – அதுவே இந்தியாவின் முடிவை மாற்றியதாம்

Featured Replies

ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தியே இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கூறியதாகவும், அவர் அவ்வாறு கூறியதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் கொல்லப்பட்டுக் கிடந்த ஒளிப்படமே காரணம் என்றும் ‘ரைம்ஸ் ஒவ் இந்தியா‘ தகவல் வெளியிட்டுள்ளது.

வாக்கெடுப்புக்கு சில நாட்கள் முன்னதாக சனல்-4 வெளியிட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் கொல்லப்பட்டது உள்ளிட்ட தமிழர்களின் அவலங்கள் பற்றிய காட்சிகள் சோனியாகாந்திக்கு கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக தோன்றுவதாக தம்மை அடையாளம்காட்ட விரும்பாத காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளன.

தமிழ் ஊடகங்களில் வெளியான இந்தப் படங்கள் ஒரு புயலையே தோற்றுவித்தன.

வாக்கெடுப்புக்கு இரண்டு நாட்கள் முன்னதாக, மார்ச் 22ம் நாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனும், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் காங்கிரஸ் உறுப்பினர்களிடம் தனியொரு நாட்டுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க முடியாது என்று கூறியிருந்தனர்.

இதனால் அதிருப்தியடைந்த சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சோனியாகாந்தியை அணுகி அவரிடம் முறையிட்டனர்.

சிறிலங்காவில் தமிழர்கள் கொல்லப்பட்ட படங்களை அவர்கள் சோனியாகாந்தியிடம் காண்பித்து நியாயம் கேட்டனர்.

குறிப்பாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் மார்பில் சுடப்பட்டுக் கிடக்கும் காட்சி அவரை உறைய வைத்தது.

இதையடுத்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தான் நடவடிக்கை எடுப்பதாக சோனியாகாந்தி உறுதி வழங்கினார்.

உடனடியாகவே, அவர் பிரதமர் மன்மோகன்சிங்கிடம், ராஜபக்ச அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கக் கூடாது என்று கூறினார்.

ஒரு குழந்தையின் மரணம் இந்திய - சிறிலங்கா உறவையே மாற்றி விட்டது என்று ‘ரைம்ஸ் ஒவ் இந்தியா‘ மேலும் கூறியுள்ளது

http://www.puthinappalakai.com/view.php?20120330105894

  • Replies 57
  • Views 3.5k
  • Created
  • Last Reply

இதன் மூலம் சோனியா 'ஒரு நல்ல மனம் படைத்தவர்' என்ற விதையை தமிழ் மக்கள் மனங்களில் நாட்ட நினைத்தால்... அது நடக்காது.

இப்பிடியெல்லாம் அவாவைப் பற்றி என்னத்தை சொன்னாலும்... அவாவின்ர நாக்கிலையும் கையிலயும் இருக்கும் எம்மினத்தின் ரத்தைக் கறை எனது கண்களில் இருந்து மறையாது.

Edited by Sooravali

ராஜதந்திர படுதோல்வியை மறைக்க நாசகார சக்திகளால் கட்டிவிடப்படும் கதைகள் இவை.

இவற்றை தமிழர் ஒருபோதும் நம்பப் போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சனல் 4

ஒரு கட்சித்தலைவியால் ஒரு தொலைபேசி அழைப்பில் ஒரு நாட்டின் வெளியுறவுக்கொள்கையில் மாற்றங்களை செய்யமுடியும் என்பது அந்த நாட்டின் பலவீனத்தையே காட்டுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சனல் 4

ஒரு கட்சித்தலைவியால் ஒரு தொலைபேசி அழைப்பில் ஒரு நாட்டின் வெளியுறவுக்கொள்கையில் மாற்றங்களை செய்யமுடியும் என்பது அந்த நாட்டின் பலவீனத்தையே காட்டுகிறது.

வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஒன்றும் வரவில்லை. இந்தியா சிறிலங்காவுக்கு எப்போதும் நெருக்கமாகத்தான் இருக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்

அந்தளவுக்கு அவருக்கு கருணை உள்ளம் கிடையாது

இந்த தலைப்பின் மூலம் கல் நெஞ்சம் கொண்ட கொடுமைக்காறிக்கு நல்ல பெயரை தேட முயசிக்கின்றார்கள்.

Rhymes of India

இலங்கையில் யுத்தம் நடந்த போது, அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்ட போது, channel 4 முதல் காணொளியாக இலங்கையின் கொலைக்களத்தை வெளியிடும் போது எதையுமே உணராதவர் இரண்டாவது காணொளியில் பாலச்சந்திரன் கொல்லப்பட்டதை பார்த்து உறைந்து போய் நடந்த கொடுமைகளை உணர்ந்து இந்தியாவின் முடிவை மாற்ற உதவினார் என்பது பொய்.

இன்று வரை இந்தியாவும், சோனியா காந்தியும் தமிழர்களுக்கு இழைத்த கொடுமைகள் என்றும் மறையாது. இவ்வாறான செய்திகளை வழங்கி அவரை புனிதவதியாக்கவும் முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஒன்றும் வரவில்லை.

இந்தியா சிறிலங்காவுக்கு எப்போதும் நெருக்கமாகத்தான் இருக்கும்..

அப்போ தமிழகத்துக்கு........???

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ தமிழகத்துக்கு........???

இந்தியாவும் தமிழகமும் வேறு நாடுகளா!

தமிழகத்தில் உள்ள 40 பாராளுமன்ற உறுப்பினர்களால்கூட 2009 இல் இந்தியாவின் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் ஒரு துளியளவு மாற்றத்தையும் கொண்டுவரமுடியவில்லை என்பதைக் காலம் ஒருபோதும் மறக்கடிக்காது.

வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஒன்றும் வரவில்லை.

இந்தியா சிறிலங்காவுக்கு எப்போதும் நெருக்கமாகத்தான் இருக்கும்..

வெளியுறவுக்கொள்கையில் மாற்றம் இல்லாமல் எவ்வாறு ஐ.நா. தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருக்க முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

வெளியுறவுக்கொள்கையில் மாற்றம் இல்லாமல் எவ்வாறு ஐ.நா. தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருக்க முடியும்?

ஜெனீவா தீர்மானம் இலங்கையரசைக் கண்டித்து இயற்றப்பட்டதல்ல. மாறாக இலங்கையரசால் இறுதி யுத்த காலத்தில் நடந்தவற்றைகளைக் கண்டறிய அமைக்கப்பட்ட குழுவினது பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டிய கடப்பாடு இலங்கையரசிற்கு உள்ளது என்பதை நினைவூட்டுகின்றது. அதனை இந்தியா (காங்கிரஸ் கூட்டணி)ஆதரித்ததானது தமிழக அரசியல் கட்சிகளின் எதிர்காலக் கூட்டணிக்கான வாய்ப்பை அதிகரிக்க மட்டுமே என்றுதான் நான் பார்க்கின்றேன். இலங்கையரசைக் கண்டித்து அல்லது இலங்கையரசு மனிதவுரிமை மீறல்களைச் செய்துள்ளது என்று ஐ.நா. இல் ஒரு தீர்மானம் வந்தால் அதனை இந்தியா ஒருபோதும் ஆதரிக்காது.. அப்படி ஆதரித்தால் அதனை வெளியுறவுக் கொள்கையின் மாற்றம் என்று சொல்லலாம்!

காங்கிரஸின் சாதுர்யமான அரசியல் காய் நகர்த்தலை அதன் வெளியுறவுக் கொள்கை மாற்றம் என்றும் தமிழர்களுக்கு சார்பாக இந்திய மத்திய அரசு செயற்படும் என்றும் நினைப்பதும், சிறு ஆதரவு கிடைத்துவிட்டது என்று நம்பிச் செயற்படுவதும் ஆபத்தானது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவும் தமிழகமும் வேறு நாடுகளா!

தமிழகத்தில் உள்ள 40 பாராளுமன்ற உறுப்பினர்களால்கூட 2009 இல் இந்தியாவின் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் ஒரு துளியளவு மாற்றத்தையும் கொண்டுவரமுடியவில்லை என்பதைக் காலம் ஒருபோதும் மறக்கடிக்காது.

அது நடந்து 3 வருடங்களுக்குள் தமிழக மாற்றங்களை கணக்கெடுக்க தயங்குவது தெரிகிறது. ஆனால் பாரிய மாற்றங்களும் புரட்சிகளும் தமிழகத்தில் நடந்துள்ளன. துனிசியாவிலும் எகிப்திலும் லிபியாவிலும் என்று வெளியாரின் புரட்சிகளை வரவேற்கும் நாம் எமது சகோதர்கள் அதே புரட்சியை செய்ததை மறைக்கின்றோம்.

இந்தியாவும் தமிழகமும் வேறு நாடுகளா!

ஆம். இனி தமிழகம் புறக்கணிக்கப்பட்டு சிங்களத்துடன் கூடினால்.....

குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எமது சகோதர்கள் அதே புரட்சியை செய்ததை மறைக்கின்றோம்.

என்ன புரட்சி நடந்தது?

கருணாநிதி மூன்று மணிநேரம் உண்ணாவிரதம் இருந்ததா?

ஜெயலலிதா அம்மையார் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடக்கின்றார் என்று எடுத்துக்கொண்டாலும், ஈழத் தமிழர்கள் இன்னமும் இந்தியச் சிறப்பு முகாம்களில் வாடுகின்றனர்தானே.. புரட்சிகர மாற்றங்கள் ஒரு சிறு காலப்பகுதியில் நடக்கவேண்டும், இல்லையேல் அவை புரட்சிகள் அல்ல!

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் கண்ணை மூடிக்கொண்டு கதைக்கின்றீர்கள். நேரம்பொன்னானது. நன்றி. வணக்கம் சொல்வோமா??? :lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அய்யா சாமீ நம்புங்க எங்க அன்னை ரொம்ப??????? நல்லவங்க, இரக்ககுணம் கொண்டவங்க, சத்தியமா ஈழத்தில் நடந்தது எதுவுமே எமக்கு தெரியாது யாராவது போர் நடந்தப்ப அவங்களுக்கு சொல்லியிருந்தால் உடனே தலையிட்டிருப்பாங்க, இப்போதான் அவங்களுக்கு தெரியும் , அதனாலதான் உடனே இலங்கைக்கு எதிரா வாக்களிக்க சொன்னாங்க,

தயவு செய்து நம்புங்க, இந்த காங்கிரஸ் , தி.மு.க எம்.பி -களுக்கு கூட இப்போதான் தெரியும் , தயவு செய்து எங்க கட்சியை காலி பண்ணிடாதீங்க தேர்தல் வருது, அடுத்து நாங்க ஆட்சிக்கு வந்தால் கொடுமைக்கார ராஜ பக்சேவை தூக்கிட்டு தமிழருக்கு ஈழத்தை பெற்று தருவோம் ,

""ஒரு குழந்தையின் மரணம் இந்திய - சிறிலங்கா உறவையே மாற்றி விட்டது என்று ‘ரைம்ஸ் ஒவ் இந்தியா‘ மேலும் கூறியுள்ளது""

ஆதலால் உலகத் தமிழர்களே சில புகைப் படங்களிலே மனம் கலங்கிய அன்னை சோனியாவையும் காங்கிரஸ், தி.மு.க.வையும் நம்புவோம் .........................தொடர்ந்து நாமும் ஏமாந்து கொண்டு இருப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் கண்ணை மூடிக்கொண்டு கதைக்கின்றீர்கள். நேரம்பொன்னானது. நன்றி. வணக்கம் சொல்வோமா??? :lol::D

நான் கண்களை எப்போதும் அகலத் திறந்துதான் வைத்திருக்கின்றேன்!

நம்பிக் கெட்டவர்கள் பட்டியலில் இயலுமானவரை இருப்பதைத் தவிர்த்தே வருகின்றேன் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா

அவர்கள் எவரையாவது நம்புகின்றோம் என்று எங்காவது சொன்னோமா?

நான் சொல்வது எம் தமிழக மக்களில் ஏற்பட்ட மாற்றம்.

மற்றவை அனைத்தும் வந்தாலும் அது மக்களின் மாற்றத்துக்கு பின் வந்தவையே.

ஜெனீவா தீர்மானம் இலங்கையரசைக் கண்டித்து இயற்றப்பட்டதல்ல. மாறாக இலங்கையரசால் இறுதி யுத்த காலத்தில் நடந்தவற்றைகளைக் கண்டறிய அமைக்கப்பட்ட குழுவினது பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டிய கடப்பாடு இலங்கையரசிற்கு உள்ளது என்பதை நினைவூட்டுகின்றது. அதனை இந்தியா (காங்கிரஸ் கூட்டணி)ஆதரித்ததானது தமிழக அரசியல் கட்சிகளின் எதிர்காலக் கூட்டணிக்கான வாய்ப்பை அதிகரிக்க மட்டுமே என்றுதான் நான் பார்க்கின்றேன். இலங்கையரசைக் கண்டித்து அல்லது இலங்கையரசு மனிதவுரிமை மீறல்களைச் செய்துள்ளது என்று ஐ.நா. இல் ஒரு தீர்மானம் வந்தால் அதனை இந்தியா ஒருபோதும் ஆதரிக்காது.. அப்படி ஆதரித்தால் அதனை வெளியுறவுக் கொள்கையின் மாற்றம் என்று சொல்லலாம்!

காங்கிரஸின் சாதுர்யமான அரசியல் காய் நகர்த்தலை அதன் வெளியுறவுக் கொள்கை மாற்றம் என்றும் தமிழர்களுக்கு சார்பாக இந்திய மத்திய அரசு செயற்படும் என்றும் நினைப்பதும், சிறு ஆதரவு கிடைத்துவிட்டது என்று நம்பிச் செயற்படுவதும் ஆபத்தானது.

வெளிவிவகாரக்கொள்கையில் மாற்றம் என்பது ஒருநாளில் ஏற்படுவது அல்ல. எம்மைப்பொறுத்தவரையில் இந்தியாவிடம் இருந்து எந்தப்பெரிய மாற்றத்தையும் எதிர்பார்க்கவில்லை. அதேவேளை அமெரிக்காவின் இந்த தீர்மானத்தை இந்தியா எதிர்த்திருந்தால் இது நிறைவேற்றுப்படாமால் போயிருக்கலாம். அந்த வகையில் இது முக்கிய மாற்றமே.

வாக்களிப்பில் நடுநிலைமை வகித்த மலேசியா இந்தக்கிழமை ஐ.நா. அறிக்கையை மேற்கோள் காட்டி தமிழீழத்தில் நடந்தது 'இனப்படுகொலை' என்பதை ஏற்றுள்ளதாக அறிவித்துள்ளது. எனவே மாற்றங்கள் என்றுமே சாத்தியம். இந்தியாவும் மாறும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா

அவர்கள் எவரையாவது நம்புகின்றோம் என்று எங்காவது சொன்னோமா?

நான் சொல்வது எம் தமிழக மக்களில் ஏற்பட்ட மாற்றம்.

மற்றவை அனைத்தும் வந்தாலும் அது மக்களின் மாற்றத்துக்கு பின் வந்தவையே.

தமிழக மக்கள் எப்போதும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகத்தான் இருந்துள்ளார்கள்.. 91 இல் ராஜீவ் கொல்லப்பட்டபோது கோபம் கொண்டார்கள். எனினும் சில வருடங்களுக்குள்ளே மீண்டும் ஆதரவு தொடங்கியிருந்தது.. ஆயினும் எம்.ஜி.ஆர் க்குப் பின்னர் தமிழக அரசியலில் செல்வாக்குச் செலுத்தியவர்களின் ஆதரவு ஈழத்தமிழர்களின் நலன்களின் அடிப்படையில் அமையவில்லை மாறாக அவர்தம் உள்ளூர் அரசியல் காரணங்களின் அடிப்படையில் அமைந்தது..

தற்போது தமிழர்களின் தாயகப் பகுதிகளில் சிங்களவர்கள் வேகமாகக் குடியேறுவதையும், தமிழர் நிலங்கள் எல்லாம் பெளத்த விகாரைகள் தோன்றுவதையும் இந்தியாவால் தடுக்கமுடியவில்லை. அதே வேளை தமிழக மீனவர்கள் இலங்கை மீனவர்களின் வலைகளை அறுக்கின்றார்கள் என்று இலங்கைத் தமிழர்களைக் கொண்டே ஆர்ப்பாட்டம் செய்யவைக்க சிங்கள அரசாலும் அதற்கு முண்டுகொடுக்கும் தமிழ்க்கட்சிகளாலும் முடிகின்றது. இத்தகைய செயற்பாடுகள் சிங்கள அரசு மிகவும் விவேகமாகச் செயற்படுகின்றது என்பதைத்தான் சொல்லுகின்றது!

அண்மைக்கால உலக அரசியலில் ஏற்பட்ட சில மாற்றங்களில் ஒன்று 'அரபு எழுச்சி' அடுத்தது ஒபாமாவின் வெற்றி. ஒபாமா வெற்றியானது 'பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்திற்கு' முடிவு கட்டியதோடு ஒரு புதிய ஒழுங்குமுறையை நோக்கி செல்ல ஆரம்பித்துள்ளார். அதில் ஆசியா மிக முக்கிய இடம் பிடிக்கின்றது.

இதனூடாகத்தான் ஆசியாவில் பல வெளிவிவகாரக்கொள்கைகள் வகுக்கப்பட உள்ளன. இதற்கேற்ப இந்தியாவும், விரும்பியோ இல்லையோ மாறும். அந்த மாற்றத்தில் நாமும் எமது முயற்சியால் நல்ல தீர்வை பெற்றேடுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

பாலச்சந்திரனின் சூட்டுக்காயத்தை தவிர எந்த ஒரு தமிழ் குழந்தை/பெண்களின் இது வரை (கடந்த 3 வருடத்தில்) பார்க்கவில்லை என்பதும் இப்போ பாலச்சந்திரனின் உடலைப்பார்த்தவுடன் மனமுருகி விட்டார் என்பதும் நாடகம்.அடுத்த தேர்த்தலில் தமிழ் நாட்டை நோக்கி இப்படியான பிரச்சாரங்கள் எடுபடும் என காங்கிரஸ்காரர் திட்டமிட்டு செயற்படுகிறார்கள்.

இவர்கள் உண்மையானவர்கள் எனில் ஜெனிவாவில் இலங்கையில் போர்குற்றம் நடைபெற்றது என்ற ஒர் தீர்மானத்தை கொண்டு வரச்சொல்லுங்கள் பார்ப்போம்.அப்போ பம்முவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

அண்மைக்கால உலக அரசியலில் ஏற்பட்ட சில மாற்றங்களில் ஒன்று 'அரபு எழுச்சி' அடுத்தது ஒபாமாவின் வெற்றி. ஒபாமா வெற்றியானது 'பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்திற்கு' முடிவு கட்டியதோடு ஒரு புதிய ஒழுங்குமுறையை நோக்கி செல்ல ஆரம்பித்துள்ளார். அதில் ஆசியா மிக முக்கிய இடம் பிடிக்கின்றது.

இதனூடாகத்தான் ஆசியாவில் பல வெளிவிவகாரக்கொள்கைகள் வகுக்கப்பட உள்ளன. இதற்கேற்ப இந்தியாவும், விரும்பியோ இல்லையோ மாறும். அந்த மாற்றத்தில் நாமும் எமது முயற்சியால் நல்ல தீர்வை பெற்றேடுக்கலாம்.

உங்கள் வாக்கு எப்பொழுதும் பலிப்பதாக மற்றவர்களின் கருத்துகளிலிருந்து அறிந்து கொண்டேன். இதுவும் பலிக்கும் என நம்புகிறேன்.

The Ney sayers

அமெரிக்க அரசியலில் பேசப்படும் ஒரு வார்த்தை மேலே உள்ள ஆங்கிலச்சொல். அதன் அர்த்தம் ' இல்லை சொல்பவர்கள்'. அது அதன் நேரடி மொழிபெயர்ப்பாக இருந்தாலும், 'முடியாது என சொல்பவர்கள்' என்பதே முறையான மொழிபெயர்ப்பாக பார்க்கமுடியும்.

இதன் அடிப்படையிலேயே ஒபாமாவின் மிகப்பெரிய தேர்தல் சுலோகமான ' இயஸ் வீ கான் ' என்பதும் எழுதப்பட்டது.

பெரும்பான்மையான எம்மவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நாம் எமது உறவுகளை படிக்க மாற்றும் பொருளாதார வழிகளில் முன்னேற்ற உதவுகிறோம். ஆனால், சமூக அடிப்படையில் அவ்வாறு செய்வது ஒரு சிறு வீதமானவர்களே. ஆனால் அவ்வாறு செய்தவர்கள் இன்று பல வெற்றிகளை ( ஐ.நா. அறிக்கை (தருச்மன்), அதை வெளியிட்டமை, ஜி.எஸ்.பி..பிளஸ் தடை) சர்வதேச அரசியல் ஊடாக பெற உதவியுள்ளார்கள். அவர்களும் 'முடியாது' இல்லை 'இணக்க அரசியல் தான்' இல்லை 'இந்தியா மாறாது' எனக்கூறி இருந்திருந்தால் ஜெனீவா தீர்மானம் கூடி நிறைவேற்றப்பட்டிருக்காது என்பது திண்ணம்.

எனவே, Yes We Can!

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.