Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

64 கோடி டாலர் ஜாக்பொட் கிடைத்த அதிர்ஸ்டசாலிகள்

Featured Replies

64 கோடி டாலர் ஜாக்பொட் கிடைத்த அதிர்ஸ்டசாலிகள்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 31 மார்ச், 2012 - 13:06 ஜிஎம்டி

120330115617_lottery_us_getty_304x171_getty_nocredit.jpg

அமெரிக்காவின் மிகப்பெரிய லாட்டரியில் (அதிர்ஸ்ட லாபச் சீட்டிழுப்பில்) வெற்றி பெற்றவர்களை தேடும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.

64 கோடி டாலர் பெறுமதியான இந்த லாட்டரியை மூன்று டிக்கட்டுக்கள் பகிர்ந்துகொள்கின்றன.

மேரிலாந்து, கன்சாஸ் மற்றும் இலினொய்ஸ் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மூவருக்கே இந்த அதிர்ஸ்டம் கிடைத்திருக்கிறது.

லாட்டரி சீட்டுகளுக்காக அமெரிக்கர்கள் 1.5 பில்லியன் லாடர்களை செலவிடுகிறார்கள்.

கடந்த ஜனவரி மாதம் முதல் எவருக்கும் ஜாக்பொட் கிடைக்காத காரணத்தால், பரிசுத் தொகை அதிகரித்து இவ்வளவு பெரிய அளவை எட்டியிருக்கிறது

bbctamil

.

மருதங்கேணி, நுணா, மல்லையூரான், ஈழப்பிரியன், ஜஸ்டின் ... என்ன மாதிரி? ஏதாவது 'லக்'?

  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதார நிபுணர் தோழர் அகூதா இந்த மாறி விசயத்தை எல்லாம் சொல்லமாட்டார். கமுக்கமாக இருந்துவிடுவார். நானும் கொஞ்சம் முயற்சி செய்து பார்த்திருப்பேன். எனக்கு இப்போ சுக்கிரன் 11 வது இடத்திலே அதிஸ்ட ஸ்தானத்திலே உச்சத்துடன் இப்போ நடமாடுகிறார்.. :( :(

  • தொடங்கியவர்

( having some horse language)

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி, நுணா, மல்லையூரான், ஈழப்பிரியன், ஜஸ்டின் ... என்ன மாதிரி? ஏதாவது 'லக்'?

மேரிலாந்து, கன்சாஸ் மற்றும் இலினொய்ஸ்

அமெரிக்காவின் மற்றைய பக்கம் வாழ்கிறேன் சிறி.

  • கருத்துக்கள உறவுகள்

64 கோடி டொலர் பரிசா... ஹார்ட் அட்டாக்கே... வந்திடும். :o

  • கருத்துக்கள உறவுகள்

அங்கிருக்கும் ஒரு தமிழருக்கு கூடவா ஜாக்பொட் கிடைக்கவில்லை :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி, நுணா, மல்லையூரான், ஈழப்பிரியன், ஜஸ்டின் ... என்ன மாதிரி? ஏதாவது 'லக்'?

$5 நஷ்டம்.

இதில் பெரிதாக ஈடுபாடு இல்லை வேலை இடத்தில் எல்லோருமாக காசு சேர்த்து வாங்கினார்கள் அதனால் நானும் ஒரு 5 டாலரை இழக்க நேருட்டுவிட்டது.

நான் அமேரிக்கா வந்த புதுசுல $ 10 விட்டு இருக்கேன்.

மருதங்கேணி, நுணா, மல்லையூரான், ஈழப்பிரியன், ஜஸ்டின் ... என்ன மாதிரி? ஏதாவது 'லக்'?

இன்றுதான் பார்த்தேன்.

"லக்" எனக்கு அடிக்கிறது குறைவு. அதனால் இன்னமும் தொடர்ந்து "காட்" அடிக்குது.

ஒரு டிகெட் எடுத்தேன். அதனால் 64 கோடியோட ஒரு பெரிய மனக்கோட்டை கட்டினேன். நியுயோர்க் பக்கமே எதுவும் விழவில்லை. 1 டொலர் தானே, அதனால் போலும் எதுவும் இடிந்துபோகவில்லை.

Edited by மல்லையூரான்

இன்றுதான் பார்த்தேன்.

"லக்" எனக்கு அடிக்கிறது குறைவு. அதனால் இன்னமும் தொடர்ந்து "காட்" அடிக்குது.

ஒரு டிகெட் எடுத்தேன். அதனால் 64 கோடியோட ஒரு பெரிய மனக்கோட்டை கட்டினேன். நியுயோர்க் பக்கமே எதுவும் விழவில்லை. 1 டொலர் தானே, அதனால் போலும் எதுவும் இடிந்துபோகவில்லை.

ஆமா ,விழுந்துட்டா மாத்திரம் சொல்லிடிவியளோ?

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா ,விழுந்துட்டா மாத்திரம் சொல்லிடிவியளோ?

:lol: :lol: :lol: :lol:

கல் அடி பட்டலும் படலாம் ஆனா கண் அடி பட வேண்டாம்.

விழுந்துட்டா(எழுந்து) யாழ் பக்கம் வந்துட வேண்டாம்.

ஆமா ,விழுந்துட்டா மாத்திரம் சொல்லிடிவியளோ?

ஏன் அப்படி நினைக்கிறீர்கள். நியுயோர்க்கில் ஆறு கோடியும், இரண்டு முத்தத்துடனும் இருந்த "ருவின் ரவேஸ்" விழுந்ததிற்கே எல்லாருக்கும் சொல்லி இன்னமும் கனபேருக்கு கொடுக்கிறார்கள். இது 64 கோடி - அப்படி எங்கே கண்டும் காணாத மாதிரி ஓடி தப்பியோடிவிட முடியும்? :D

கல் அடி பட்டலும் படலாம் ஆனா கண் அடி பட வேண்டாம்.

விழுந்துட்டா(எழுந்து) யாழ் பக்கம் வந்துட வேண்டாம்.

அப்படி விழுந்திட்டா "காட்" கண்(Gun) படப்போகுது என்று தான் தான் முன்னுக்கு போகவேண்டும், என்னை பின்னுக்கு வா என்று சொல்லுவான். "லோயர்" என்னை பேசாதே என்றுவிட்டுதான் தான் பேசுவான். அதையெல்லம் உடைச்சுக்கொண்டு யாழ்கள உறவுகளிடம் வர முடிமா? :)

Edited by மல்லையூரான்

உங்கள் சிலேடை மிக அருமை மல்லையூரான்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி விழுந்திட்டா "காட்" கண்(Gun) படப்போகுது என்று தான் தான் முன்னுக்கு போகவேண்டும், என்னை பின்னுக்கு வா என்று சொல்லுவான். "லோயர்" என்னை பேசாதே என்றுவிட்டுதான் தான் பேசுவான். அதையெல்லம் உடைச்சுக்கொண்டு யாழ்கள உறவுகளிடம் வர முடிமா? :)

லொட்டரி விழ முதலே இந்தக் கதை கதைக்கிறீங்களே விழுந்தால் :lol:

லொட்டரி விழ முதலே இந்தக் கதை கதைக்கிறீங்களே விழுந்தால் :lol:

கர்னன் தனக்கு ஒரு அந்தஸ்த்து இருந்திருந்தால் தான் அரிச்சுனன் போன்ற தன் எதிரிகள் எல்லோரையும் பழிக்குப்பழி வாங்கி விடமுடியுமென நினத்தான். அவன் விரும்பிய படி அரசுரிமை வந்து முடி சூடி மன்னன் ஆனான். தனக்கு கிடைத்த செல்வத்தையெல்லாம் ஏழைகளுக்கு கொடுத்தான். தேவலோகத்து மன்னன் இந்திரனுக்கே அவன் கேட்ட பரிசில்கள் கொடுத்தான். தன் தாயிற்கு வரங்கள் கொடுத்தான். தன் எதிரிகளுக்கு(தம்பிமாருக்கு) உயிர்ப்பிச்சை கொடுத்தான். தன் நண்பன் துரியோதனனுக்கு தன் உயிரையும், தன் மகன் உயிரையும், உடன்கட்டை ஏறவைத்து தன் மனைவி உயிரையும் கொடுத்தான். கடவுளான கிருஸ்ணனுக்கே தான் செய்த புண்ணியங்களை தாரை வார்த்துக்கொடுத்தான். வரும்போது இழிவோடுவந்து, செல்வத்தை தேடி, போகும்போது புகழோடு போனான்.

குசேலமுனியும் கண்ணனும் பள்ளி நண்பர்கள். பள்ளியில் ஒரு பொட்டலத்தை பிரித்துண்டு பசியாறிப்பழகி ஒரேமட்டத்தில் வாழ்ந்தவர்கள். கண்ணன் துவாரகையை ஆழும் அரசனானான். குசேலன் பிள்ளைகள் உண்ண உண்வின்றி பட்டினி. அவர்கள் தாயிடம் சென்ற போது உணவு கேட்கவில்லை. அவர்களுக்குத் தெரியும் அது அவளிடம் இல்லை என்பது. அதனால்த்தான் அவை தாயிடம் சென்ற போது அவளின் முகத்தை மட்டும் பார்த்து உள்க்கிடக்கையை அறிந்து திரும்பிவிட்டன. உணவு கேட்டிருந்தால் அவள் பொறுத்திருந்திருப்பாள். பிள்ளைகள் பெற்றதாயை விட யாரிடம் பசி என்று வாய் திறந்து சொல்லும் என்பதை அறியாத அன்னையா அவள்? வாய்திறந்து கேட்டிருந்தால் ஒருவேளை "அதுதான் இல்லை என்று தெரியாதா" என்று கேட்டு அதட்டி இருப்பாள் கூட. அவைகள் ஆனால் அவள் முகத்தை பார்த்துவிட்டு திரும்பி குந்துகளிலும் சந்துகளிலும் போய் இருந்து வாடிச் சோர்ந்ததுதான் அவளுக்கு பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதுதான் அவள் தனது கணவன் எவ்வளவு பெருந்தன்மையானவன் என்று தெரிந்திருந்தும் அவன் முகத்தை பார்த்து "ஒருதடவை கண்ணனை முகத்தை போய் பார்த்துவிட்டு வாருங்களேன்" என்று கேட்டாள்.

கண்ணன் முகத்தை போய்ப்பார்த்தான் முனிவன். ஆனால் தன் நிலையில் இருந்து இறங்கி வந்து தன் பிள்ளைகளுக்காகவோ அல்லது தன் மனைவிக்காகவோ எதுவும் கேட்க விரும்பவில்லை. வீட்டில் இருந்த ஒருபிடி அவலையும் கூட கொண்டுவந்து கண்ணனிடம் கொடுத்துவிட்டு பெருந்தன்மையாக வீடு திரும்பிக்கொண்டிகுக்கிறார் குசேலமாமுனி.

போக விரும்பாத யாசகத்திற்கு போய்வந்த கிலேசம் நெஞ்சில்;விளாசி எரிக்கும் வெய்யிலின் கடுமை பாதையில்; நித்தம் கிருஸ்ணனனை நினைத்து விரதமிருந்து உருகிப்போன போன எலும்புகளின் சுமை உடம்பில். வீட்டுக்குக் கிட்டவந்தும் விபரம் தெரியாத குழப்பம் நினைவில்; தனது குடிசையை காணாது தடுமாறுகிறார் குசேலர்.

சற்று தூரத்தில் ஆரோ ஒரு அழகிய மாது ஒரு மாளிகையின் முன்னின்று கைகளை காட்டி தன்னை வரவழைப்பதை காண்கிறார் களைத்துபோய் வீடு திரும்பும் முனிவர். யாரோ ஒரு பத்தினி ஆசீர்வாதம் கேட்க விரும்புகிறாள் என்று நினைத்து அதையும் தன் கடமையாக கொண்டு அந்த பெண்ணிடம் செல்கிறார்.

கிருஸ்ணன் உண்ட ஒருபிடி அவலினால் குசேலனின் குடிசை பளிங்கினால் ஆன ஒரு மாளிகை போல்வந்துவிட்டது. சுசீலை மாகாராணி மாதிரி பொலிவடைந்துவிட்டாள். பிள்ளைகள் பாலிலும் தேனிலும் திளைத்தார்கள். மானத்தில் ஒரு படி கீழே இறங்கி கால் மிதிக்காத தன் கணவன் தனக்கும் பிள்ளைகளுக்குமாக கிருஸ்ணனிடம் கேட்டுப் பெற்று வந்தவைகளைக் கண்டு பூரித்து போனாள் அந்த பெண். அவனை ஆர அணைத்து ஆசனத்தில் அமர்த்தி அவன் பெற்று வந்த செல்வத்தின் சுகத்தை அவனுக்கு காட்டவென்று துடித்தாள் அந்த பேதை. அதனால்த்தான் கணவனின் வருகைக்காக வாசலில் காவல் நின்றிருந்தாள் அவள். தனது வழமையான குடிசையையோ அல்லது அதை சுற்றி வாடி வதங்கி எப்போதும் குந்திகொண்டிருக்கும் தனது பிள்ளைகளையுமோ காணாத குசேலர் தன் இளைத்துப்போன கண்களும், கால்களும் தன்னை பிழையான இடத்திற்கு இட்டு வந்து விட்டதாகத்தான் நினைத்து தன் குடிசையை தேடவென்று திரும்பினார். அப்போதுதான் அந்த தேவமாது போல பெண் தன்னை அழைப்பதை கண்டு எந்த களையானாலும் அவளையும் வாழ்த்திவிட்டு திரும்பலாம் என்று அந்தப்பக்கம் சென்றார்.

சுசீலைதான் ஆரம்பித்து பேசினாள்: ஏன் இவ்வளவு நேரம் எடுத்தீர்கள். நான் இவ்வளவு நேரமும் உங்களுக்காக இங்கேதான் நிண்டுகொண்டிருக்கிறேன், எப்போ வந்துசேர்வீர்கள் என்று காத்திருந்து களைத்துப்போய்விட்டேன் என்று மழையாகப் பொழிந்தாள். கண்களை நிமிர்த்தி தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் பெண்ணின் முகத்தை பார்த்த குசேலர் அசந்து போய்விட்டார். "சுசீலா! நீயாடி அது? எப்படி இங்கே வந்தாய்? இது யார் வீடு? " என்று கேள்விக்கு மேல் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார். "களைத்துபோய் இருக்கிறீர்கள், அதனால்த்தான் இந்த கேள்விகள் எல்லாம். இது நம்ம வீடுதான். உங்களுக்கு கண்ணன் தந்த பரிசு" என்று கூறி உள்ளே அழைத்து செல்ல முயன்றாள். செல்வத்தை ஏற்றுக்கொள்ளமுடியாத குசேலர் கூச்சத்துடன், தயங்கித் தயங்கி பழககமில்லாதார் ஒருவரின் புதுவகம் புகுவதுபோல் உள்ளே காலடி எடுத்து வைத்தார்.

உள்ளே குழந்தைகள் விளையாடிவிட்டு எறிந்திருந்த விளையாட்டு பொருள்களிருந்து பறந்த முத்துக்களும் மணிகளும் அவர் மிதிக்குமிடமெல்லாம் நிறைந்திருந்திருந்து அவர் கால்களை நெருடின. வெகுத்துப்போய்விட்ட நெய்ச்சாதத்தை குழந்தைகள் "இது எனக்குப் பிடிக்காது" என்று தட்டிவிட்ட போது அது நிலமெங்கும் சிந்தி நெடும்தூரம் வரை பறந்திருந்தது. அதை பார்த்ததும் குசேலர் பரதவித்து போய்விட்டார்.

"இந்த செருக்கு வாழ்க்கை நமக்கு அடுக்காதடி சுசீலா!. இப்போதே நான் கண்ணனிடம் சென்று இதை மீளப்பெறச்சொல்ல வேண்டும்" என்று அவசரமாகத் திரும்பினார். சுசீலை தடுக்க முயன்றாள். "குழந்தைகளுக்கு இது புதியதுதானே. நாம் கற்றுக்கொடுத்தால் சரியாக பழகிக் கொள்ளுங்கள். நமக்கு மிஞ்சியது தானத்திற்கும் தருமத்திற்கும் தானே. அவசரப்படாதீர்கள் என்றாள்." ஆனால் குசேலர் படிதாண்டிப் போய்விட்டார்.

கண்ணனிடமிருந்து இந்தமுறை திரும்பி வரும் போது குசேலருக்கு. மனத்தில் கிலேசமில்லை. கால்களில் அசதியில்லை. தூரத்திலேயே அவர் தன் குடிசையை அடையாளம் கண்டு திருப்திப்பட்டார். சுத்தி குந்தியிருந்த குழந்தைகளை எண்ணி கணக்கை சரிசெய்து கொண்டார். சுலீலா இன்னமும் வாசலில்தான் காத்துக்கொண்டிருந்தாள். அவர் வந்ததும் எதுவும் பேசாமல் அவர் முகத்தை சும்மா பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் முகத்திலும் குழந்தைகள் முகத்திலும் ஏமாற்றம் தொனித்தது. குசேலர் தண்டையும் கமண்டலத்தையுமயெடுத்துக்கொண்டு யெபம் செய்ய ஆற்றங்கரைக்கு புறப்பட்டார். அவரின் நடையில் அடக்கமும் எளிமையும் குடியிருந்தன.

சொல்லத் தேவையில்லை, நான் கர்னன் பக்கம். ரதியக்கா இப்போ நீங்கள்சொல்லுங்கள்? நீங்கள் அரசபதவிக்கு அலைந்த ஆடம்பரப்பிரியன் கர்னன் பக்கமா அல்லது, அடக்கமான, எளிமையான வாழ்க்கை வாழும் குசேலன் பக்கமா? :lol:

Edited by மல்லையூரான்

.

அசத்திவிட்டீர்கள் மல்லையூரன்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்காலத்து சுசீலைகள் டிவோர்ஸ் வாங்கிவிடுவார்கள்..! :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.