Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காந்தி சிலை உடைக்கப்பட்டமைக்கு இந்தியா கடும் ஆட்சேபம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் அமைக்கப்பட்டிருந்த, இந்திய தேசப்பிதாவான மகாத்மா காந்தியின் சிலை உடைக்கப்பட்டமைக்கு இந்தியா கடும் ஆட்சேபத்தையும் கவலையையும் தெரிவித்துள்ளதுடன் இச்சிலையை மீளமைப்பதற்கு உதவ வழங்கவும் முன்வந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சிடம் ஆட்சேபத்தை தெரிவித்ததாக கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் ஒருவர் நேற்று தெரிவித்தார்.இச்சிலைஉடைப்பு குறித்து விசாரணை நடத்துமாறு சம்பபந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்துமாறு அமைச்சிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர கூறினார்.

மட்டக்களப்பில் இனந்தெரியாத குழுவினால் அழிக்கப்பட்ட 5 சிலைகளுள் மகாத்மா காந்தி சிலையும் ஒன்றாகும்.இந்தியாவின் ஆட்சேபனையின் பின்னர், இச்சிலையுடைப்பு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகளையும் இதற்கான நோக்கத்தையும் இணக்காணுமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இச்சிலைகளை புனரமைப்பதற்கு மட்டக்களப்பு பொலிஸார் மேசன்கள் மற்றும் சிற்பக்கலைஞர்கள் குழுவொன்றை அனுப்பியது. இச்சிலையுடைப்புகள் குறித்து விசாரிப்பதற்கு இரு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. ஆனால்,இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.மகாத்மா காந்தி சிலையானது 1960களில் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராஜதுரையினால் திறக்கப்பட்டதாக காந்தி சேவா சங்கத்தின் தலைவர் ஏ. செல்வேந்திரன் தெரிவித்தார்.

சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் பேடன் பவுல், சுவாமி விவேகாந்தனர், புலவர்மணி பெரியதம்பிபிள்ளை ஆகியோரின் சிலைகளும் உடைக்கப்பட்டுள்ளன. எனினும் அவற்றை மீளப்பதற்கு இன்னும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

http://www.saritham.com/?p=56484

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :rolleyes:
  • கருத்துக்கள உறவுகள்

உபயம் கலைஞர் கருணாநிதி அவர்கள்

:lol::D :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திரும்ப கட்டப்படும் காந்தி சிலைக்கு உபயம் பிள்ளையான் என்று போடவேண்டுமாம். :D :icon_mrgreen:

இந்த கடும் ஆட்சேபத்தை தமிழக மீனவர்கள் துன்புறுத்தப்பட்டபோதும்.கொலைசெய்யபபட்டபோதும்,காட்டியிருந்தால் இன்று காந்தி சிலை உடைக்கப்பட்டிருக்கும் அளவிற்கு நிலைமை போயிருக்காது.அதனால் தான் இன்று இந்தியாவே தலை இல்லாமல்............................சகிக்கமுடியாத அருமையான காட்சி??????????????????????????

தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படும் போது கண்டிக்காத ஹிந்திய அரசு சிலை உடைக்கப்பட்ட போது கண்டிப்பது வேடிக்கையாக உள்ளது!

இது ஹிந்தி வெறியர்களின் மனநிலையைக் காட்டுகிறது!

  • கருத்துக்கள உறவுகள்

சிலைக்கு உள்ள மரியாதை மீனவனின் தலைக்கு இல்லை..! :rolleyes:

நல்ல வேளை சிலை எண்டதால தலைய உடைச்சான் உயிரோட இருந்து இருந்தால் பின்னுக்கு கைய கட்டி சுட்டு போட்டு போட்டிருப்பான்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வேளை சிலை எண்டதால தலைய உடைச்சான் உயிரோட இருந்து இருந்தால் பின்னுக்கு கைய கட்டி சுட்டு போட்டு போட்டிருப்பான்

Rajiv1987hit.jpg

ராஜீவ் காந்தியை, துவக்குப் பிடியால்...... பின்னம் தலையில் அடித்து, கொல்ல முயற்சித்தது போல்... அடித்தே கொன்றிருப்பான் சிங்களவன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Rajiv1987hit.jpg

ராஜீவ் காந்தியை, துவக்குப் பிடியால்...... பின்னம் தலையில் அடித்து, கொல்ல முயற்சித்தது போல்... அடித்தே கொன்றிருப்பான் சிங்களவன்.

அப்படி சிங்களவன் ராஜீவ்காந்தியை கொன்றிருந்தால் கூட இழிச்சபடியே ...... :D இந்தியா சிறிலங்காவுக்கு உதவியிருக்கும். :icon_mrgreen:

சிலையைக்கட்டலாம். ஆனால் ஐ.நா.வில் வாக்களித்ததை பெறமுடியுமா? :D

ஆமா காந்திக்கு மட்டக்களப்பில் என்ன வேலை.

திலீபன் அண்ணாவின் சிலையை உடைத்து இந்தியத் துணை தூதரகம் கட்டியதை இந்த சந்தர்ப்பத்தில் நினைத்துப்பார்க்கிறேன்.

சிங்கள இடத்திலுள்ள ஒரு சிலை இவ்வாறு உடைக்கப்பட்டிருந்தால் ......

தமிழ் மக்களுக்காக தம் உயிரை தியாகம் செய்த மாபெரும் வீரர்களின் சிலைகளை வைக்கும் சூழ்நிலை இல்லையெனினும், குறைந்தது சந்திகளில் ஈழத் தமிழ் பெரியோர்களின் சிலைகளை வைக்க வேண்டும்.

இலங்கை மட்டகளப்பில் உள்ள பூங்காவில் காந்தியின் சிலையை சமூக விரோதிகள் உடைத்து சேதப்படுத்தினர். இதை கண்டித்து விழுப்புரம்மாவட்டம் செஞ்சி, கிருஷ்ணாபுரம் தியாகி இப்ராஹிம் தெருவில் வசிக்கும் வடமலை மகன் கிருஷ்ணமூர்த்தி,56, நேற்று காலை 10.30 மணிக்கு செஞ்சி கூட்ரோட்டில் தனி ஆளாக திடீரென சாலை மறியலில் உட்கார்ந்தார். போலீசார் இவரை அப்புறப்படுத்தினர்.

பின், மாலை 6.30 மணிக்கு திடீரென காந்தி சிலையை சேதம் தொடர்பாக இலங்கை அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இந்திய அரசே கண்டனம் தெரிவி, என்ற பேனருடன், ராஜபக்ஷே உருவ பொம்மையை கயிற்றில் கட்டி, காந்தி பஜார் வழியாக இழுத்து வந்தார்.

செஞ்சி கூட்ரோட்டிற்கு வந்ததும் உருவ பொம்மையுடன் மறியல் செய்ய முயன்றார். பொதுமக்கள் சிலர் ராஜபக்ஷே உருவ பொம்மையை செருப்பால் அடித்தனர்.

இதற்குள் அங்கு வந்த போலீசார் கிருஷ்ணமூர்த்தியை செஞ்சி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர் கட்டி இழுத்து வந்த உருவ பொம்மையை ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையம் கொண்டு சென்றனர்.

http://thaaitamil.com/?p=15041&utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%259c%25e0%25ae%25aa%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25af%2587-%25e0%25ae%2589%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25b5%25e0%25ae%25ae%25e0%25af%258a%25e0%25ae%25ae%25e0%25af%258d%25e0%25ae%25ae%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25af%2588-%25e0%25ae%25a4%25e0%25af%2586

  • கருத்துக்கள உறவுகள்

Gingee-fort%5B3%5D.jpg

செஞ்சி கூட்ரோட்டிற்கு வந்ததும் உருவ பொம்மையுடன் மறியல் செய்ய முயன்றார். பொதுமக்கள் சிலர் ராஜபக்ஷே உருவ பொம்மையை செருப்பால் அடித்தனர்.

செஞ்சி அட நம்ம ஊரு.. பேப்பரில் எல்லாம் வருது.. போகட்டும்... பொதுமக்கள் அடித்தது சரி ஓக்கே.. ஆனால் செஞ்சிகோட்டையில் இன்னும் சில காங்கிரஸ் கார கபோதிகள் இருக்குது என்று தெள்ள தெளிவாக தெரிகிறது.அடுத்த எலக்செனுக்கு இவர்களுக்கு சுளுக்கெடுத்து சுண்ணம்பு தடவபடும்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கொடுமை என்னவென்றால் நடுக்கடலில் கடலில் ஜீவனோபாயம் தேடி வரும் அப்பாவி இந்தியமீனவரர்களை கண்மூடித்தனமாக கொல்லுவதை கண்டுகொள்ளாத இந்தியடில்லி அரசு வெறும் மண்ணாலான சிலை உடைக்கப்பட்டதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது ! ^_^

மண் சிலை அளவுக்கு கூட இந்தியதமிழன் இல்லையா ? :rolleyes:

ஜெ கிந்த் ........ வந்தே மாதரம் கோசம் போட்டுக்கொண்டு இருங்கோ வெகுவிரைவில் மொத்தமாக அழிந்துவிடுவீர்கள். :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தன் குடியானவனைக் கொன்றால் பொன்னாடை, சிலையை உடைத்தால் கண்டனம்!

இந்தியனே! நீ, செல்வாக்கு இல்லாத மனிதனாய் பிறப்பதைவிட சிலையின் கல்லாய்ப் பிறப்பது மேலடா!

உன்சாவை மயிர் போல் கருதும் தேசத்தின் நாட்டுப் பற்றை நீ, உன் உயிர் போல் வளர்க்க வேண்டுமாம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.