Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தற்போதை இலங்கை ஜனாதிபதி மகிந்தாவை பதவியிலிருந்து அகற்றினால் சர்வதேச நீதி மன்றம் அவருக்குரிய தண்டனையை வழங்குவது இலகுவாக இருக்கும்

Featured Replies

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தற்போதை இலங்கை ஜனாதிபதி மகிந்தாவை பதவியிலிருந்து அகற்றினால் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் அவருக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த பிரேரணையின் மூலம் சர்வதேச நீதி மன்றம் அவருக்குரிய தண்டனையை வழங்குவது இலகுவாக இருக்கும். இதை நாம் செய்வதற்கு ஜனாதிபதி; மகிந்தா ராஜபக்சாவை பதிவியிலிருந்து அகற்றுவதற்கு தேவையான பலமான அரசியல் கட்சிக்கு ஆதரவு வழங்கவேண்டும்.

ஜனாதிபதி மகிந்தாவை ஆட்சியிலிருந்து அகற்றுவது என்பது தமிழ் மக்களுக்கு மிகவும் அவசியமானதும் தார்மீகக் கடமைகளில் ஒன்றாகவும் இருக்கும் என்றே நாம் கருதுகின்றோம். எனவே அதற்குரிய வேலைத்திட்டங்களில் இலங்கைக்கு உள்ளேயும் வெளிநாடுகளிலும் தமிழ் மக்கள் இணைந்து பணியாற்ற வேண்டும்."

இவ்வாறு கனடாவில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் அவதானிகள் குழு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசியலில் தற்போதைய அவசரத் தேவை என்ற தலைப்பில் கலந்துரையாடப்பட்ட மேற்படி விடயம் தற்போது அறிக்கையான வெளிவந்துள்ளது.

மேற்படி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

ஜனாதிபதி மகிந்தாவும் அவரது சகாக்களும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்களை கொன்றழித்தவர்கள் என்பதை உலகமே அறியும். அத்துடன் இன்றும் இன்னமும் அந்த நாட்டில் கடத்தல்களும், கொலைகளும் இடம்பெற்ற வண்ணமே உள்ளன. இவ்வாறான அடக்கும் முறையும் அட்டகாசமும் நிறைந்த மகிந்தாவின் ஆட்சியை நீடிப்பது என்;பது இலங்கையில் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு ஆபத்தானதாகவே அமையும்.

இலங்கையில் தொடர்ந்தும் மகிந்தாவின் ஆட்சியில் அவரது சகோதரர் கோதபாயா ஒரு சர்வதிகாரியாகவே செயற்பட்டு வருகின்றார். அங்கு அரசியல் நியாயம் கேட்கும் பத்திரிகையாளர்கள் எச்சரிக்கப்படுகின்றார்கள் அல்லது கொன்றழிக்கப்படுகின்றார்கள். எனவே மகிந்த ராஜபக்சாவை ஆட்சியை விட்டு அகற்றுவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளிலும் உலகத்தின் எந்த மூலையில் வசித்தாலும் தமிழ் மக்கள் அனைவரும் உடனடியாக ஈடுபட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=58405&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தாவை ஜனநாயக முறையில் தமிழ் மக்களால் ஆட்சியில் இருந்து அகற்றுவது என்பது முடியாத காரியம்...சிறிலங்காவின் ஜனாதிபதியை சிங்கள மக்கள் தான் தெரிவு செய்கிறார்கள்....சிங்கள மக்களிடமிருந்து மகிந்தாவுக்கு எதிரான புரட்சி நடந்தால் மட்டுமே சாத்தியம்

இந்தச் செய்தியை புலம்பெயர் தமிழர் அமைப்பு ஒன்று சொன்னதென்று சிங்கள மக்களுக்கு சொன்னாலே போதும் அடுத்து வரும் இறந்த தேர்தல்களிலும் ராசபக்ச தொடர்ந்து வெல்லுவான்.

உனக்கும், உன் வீரத்துக்கும் உன் முன் என் சிரம் தாழ்ந்த வணக்கணம்.

தமிழருக்கான தேசம் உருவாவது காலத்தின்

கட்டாயம்...........ஓங்குக தமிழர் ஒற்றுமை.

579926_275191795900454_100002289079056_613738_260909122_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த 2 தரம் வந்தாச்சு?

இனி....?

மஹிந்த ஜனாதிபதி பதவியிலிருந்து விலக்கப்பட்டாலும் செய்தியில் சொல்வது போல் நடப்பதற்குச் சாத்தியங்கள் ஏதுமில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சந்திரிகா அம்மையார் பழைய  படி சவுண்ட் விடுறா.  இந்தியா போய் வழியுறா.  

உசுப்பி களம் இறக்கி பார்க்கலாம்.  ராபக்சே வெண்டாலும் சிங்களவன் இரண்டாகிட்டான். 

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தாவின் ஆட்சி நடக்கிறதாலதான் அமெரிக்கா பிரேரணையினைக் கொண்டு வந்தது. மகிந்தாவின் ஆட்சி அகற்றப்பட்டு இரணில் மாதிரி யாராவது வந்தால், வாரவர் அமெரிக்கா சார்பு நிலை எடுத்தால் சர்வதேசம் சிறிலங்காவுக்கு ஒரு அழுத்தத்தினையும் கொடுக்க மாட்டாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.