Jump to content

நம்பிக்கை தான் வாழ்க்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்துக்களத்தில் என் முதற் பதிவு

என் தாய்த் தமிழன்னை ஈன்றெடுத்த என் சகோதர உறவுகளுக்கு அன்பு வணக்கம் !

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பற்றி நல்லதையும், பாராட்டுக்களையும், தூற்றலையும் வாசித்தேன் மிகிழ்ச்சியாக இருக்கிறது. நான் அறிந்த வரையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இப்படித் திறந்த மனதுடனான விர்சனங்கைளை வெகுவாக வரேவேற்கிறது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் பற்றிய அறிவித்தல் அதைத் தொடர்ந்து வந்திருக்கும் பதில்கள் பற்றி நான் வாசித்தவற்றிலிருந்து சில துளிகள்.

புதிய விதிகளின்படி பெயர்கள் குறிப்பிட விரும்பவில்லை ஆனால் தமிழினத்தின் ஒட்டு மொத்த நன்மைக்காகச் சில விடயங்களைச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.

1) நாடு கடந்த அமைப்பு - என்று குறிப்பிடப்பட்டுள்ளது வேதனையாக இருக்கிறது.

விளக்கம் - 2010ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது ஜனநாயகத்தின் வரைவிலக்கணப்படி புலம் பெயர்ந்த தமிழ் மக்களால், புலம் பெயர்ந்த தமிழ் மக்களிடமிருந்து புலம் பெயர்ந்த தமிழ் மக்களுக்கான ஒரு அரசாங்கம்

ர்வதேச நடைமுறைகளுக்கமைய முறைப்படி தோ்தல் நடாத்தப்பட்டுத் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம்

ஆங்கிலத்தில் Government in Exile என்று கூறப்படுகின்ற நிலை.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு Government in Exile இனுடைய சர்வதேச சட்ட வரைவிலக்கணத்திற்குள் வரவில்லை என்ற யதார்த்தம் இன்றும் இருக்கின்ற நிலையிலும் கூட, முக்கியமான முடிவு மேற்கொள்கின்ற மேலைத்தேய அரசாங்கங்களால் அவ்வாறுதான் பார்க்கப்பட்டு வருகிறது என்ற யதார்த்தம் ஒன்றும் இருந்து வருகிறது என்பது தான் சர்வதேச, அரசியல் மற்றும் ஊடகத்துறை மட்டங்களால் மறைமுகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள உண்மை என்பதும் நாம் விரும்பியோ விரும்பாமலோ இன்றைய நடைமுறையிலுள்ள யதார்த்தமாகும்.

எமது அரசாங்கத்தை, அமைப்பு என்று அழைத்தல் எம்மை நாமே இழிவு படுத்துவதற்கு ஒப்பானதாகும் என்பது என் பணிவான கருத்து

இப்படி நான் கூறும்போது - நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தலில் நாங்கள் வாக்களிக்கவில்லை என்று சிலர் எதிர் வாதம் வைக்கலாம் உண்மை அதுவாக இருந்தாலும் உலகின் எந்த ஒரு நாட்டுத் தேர்தலிலும் 100 வீத வாக்காளர்களும் வாக்களிப்பதில்லை.

அரசாங்கம் ஒன்று தெரிவு செய்யப்பட்டவுடன் அது, வாக்களித்த, வாக்களிக்காத மற்றும் வாக்குரிமை இல்லாத சுருங்கக் கூறின் அந்நாட்டின் ஒட்டு மொத்த சனத் தொகைக்குமான சட்டபூா்வ அரசாங்கமாகிறது என்ற உலக ஜனநாயக நடைமுறை ஒன்றும் உள்ளது என்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தவறிழைத்தால் கண்டிப்போம், சுட்டிக்காட்டுவோம் ஏன் அரசாங்கத்தில் மாற்றத்தையே உண்டாக்குவோம் - அது எங்கள் ஜனநாயக உரிமை, அது எங்கள் ஜனநாயகக் கடமை அது மக்களாகிய எங்கள் சக்தியும் கூட.

தெரிந்தோ தெரியாமலோ அறிந்தோ அறியாமலோ எமது அரசாங்கத்தை நாமே அமைப்பு என்று அழைத்துச் சிறுமைப்படுத்தாது இருப்போம்.

2) இப்ப தமிழிழத்தின் தலைவர் உருத்திரகுமார் என சொல்ல தலையாட்டட ஒரு கூட்டம்,

என்றும் எழுதப்பட்டிருக்கிறது.

நல்ல விடயம்

வேடிக்கை என்னவென்றால் இன்று வரை “நான் தான் தமிழினத்தின் தலைவர்” என்று உருத்திரகுமார் ஓரிடத்திலும் ஒரு தடவையாவது கூறியதாக சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஊடகம் ஒன்றிலும் எழுதப்படவில்லை.

ஆனாலும் உண்மை என்னவெனில் அவருக்குப் பிரதம மந்திரி எனும் மரியாதையையும் அந்தஸ்தையும் முறையாகக் கொடுத்து முன்னணி சர்வதேச ஊடகங்களே எழுத ஆரம்பித்து விட்டன. Visuvanathan Rudrakumaran, prime minister of the Transnational Government of Tamil Eelam,

இணைப்பை வாசிக்கவும்

இப்படியாக சர்வதேச அரங்கினில் எம் தாய்த் தமிழினத்தின் நிலை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் உயர்த்தப் பட்டுக் கொண்டிருக்கும் போது கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கொண்டு கல் எறிவது போலவும் யானை தன் தலையில் தானே மண்ணைப் போடுவது போலவும் நாம் நடந்து கொள்வது முறையா?

ஆங்கிலத்தில் CHARITY BEGINS AT HOME ( நான் ஆங்கிலம் கற்பிக்க முயல்கிறேன் என்று தவறாக எடை போட வேண்டாம்) என்றொரு முது மொழி உண்டு அம் முதுமொழி குறிப்பது என்னவெனில் “நற்குணங்கள் ஆரம்பிப்பது வீட்டில்” எனபதாகும். இதற்கமைய இங்கே வீடாகக் கருதப்பட வேண்டியது எம் தமிழினமும் தமிழ் சமூகமுமாகும், ஆகவே எம்மவர்களின் அருமை பெருமை திறமைகளை ஏற்றிப் போற்றிப் பாராட்டுவதில் நாமே முன்னிற்கக் கற்றுக் கொள்வோம் அப்போது தான் சர்வதேசமும் எம்மோடு சேர்ந்து நின்று எமக்குதவ முன்வரும்.

ஆண்டபரம்பரை மீண்டுமொருமுறை.......என்றெல்லாம் பழம் பெருமை பேசுகின்ற, திரைப்படங்களில் சொல்லப்படுகின்ற காலை வாரும் நண்டுத் தமிழராக எல்லாம் நாம் இருக்காமல், தம்முடைய சொந்த வாழ்வைிற்கும் அப்பால் நின்று கொண்டு பல் வேறுபட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தேசத்திற்காகவும் மக்களுக்காகவும் தம்மை அர்ப்பணித்துள்ள உருத்திரகுமாரன் போன்ற நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அங்கத்தவர்களை அவதூறாக எழுதாமல் அவர்கள் போன்றவர்களை ஊக்குவிப்போம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு - நான் கூறவில்லை இதுவும் முதுமொழி என்பதை நீங்கள் யாவரும் அறிவீர்கள்.

தமிழினத்தின் தாகம் தமிழீழத் தாயகம்

எம் தலைவன் காட்டிய வழி தேச விடுதலையின் வழி

எம் தலைவனின் தேசியக்கனவு - உருத்திரகுமாரன் போன்றவர்களின் ஆளுமையுடன் நிர்வகிக்கப்படும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முயற்சியினால் நிச்சயம் நிறைவேறும் என்றும் நம்புவோம்.

“நம்பிக்கை தான் வாழ்க்கை!!!”

இங்கே உறங்குவது ஒரு தன்மானத் தமிழனென்று என் நடுகல் கூறும் வரை

தோழமையுடன்

யாழ்வாணன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கை தான் வாழ்க்கை, நிழல் நிஐமாகும், நன்றி பகிர்வுக்கு யாழ்வாணன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண் கற்புடையவளாக இருக்கின்றாளா, என்பதைப் பற்றி உலகம் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை!

அவள் கற்புடையவளாகத் தன்னைக் காட்டிக் கொள்வதிலேயே, அவளது கற்பின் பெருமை தங்கியிருக்கின்றது!

நாடு கடந்த தமிழீழ அரசு, தனது செயல்கள் மூலமே, தனது இருப்பை, வெளிப்படுத்த வேண்டும்!

நம்பிக்கையே வாழ்க்கை என்பது உண்மையே, தமிழ்வாணன்!

ஆனால், வாழ்க்கைக்கும் ஒரு வரையறை உண்டல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பகிர்வுக்கு நன்றி - ஆனாலும் மக்களாகிய நாம் வெளிப்படையாகக் கொடுக்கும் ஆதரவும் ஊக்கமும் தான் எமது அரசாங்கத்தின் இருப்பை பகிரங்கமாக வெளிப்படுத்தும் அந்த வெளிப்படையான ஆதரவு தெரியும் வரை எந்த ஒரு அரசாங்கமும் அரசியல் சதுரங்க மேசையில் ராசதந்திர ரீதியான திரைமறைவு அரசியலில் (COVERT POLITICS) மட்டும் அரசியற் காய்களை நகர்த்தும் அப்போது தான் அது அந்த அரசாங்கத்திற்கும் அதன் ஆளுமைக்குட்பட்ட மக்களுக்கும் நன்மையும் வெற்றியும் அளிக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த தற்கால அரசியல் யதார்த்தம்.

இதற்கு எமது அரசாங்கமும் விதி விலக்கல்ல என்பது என் பணிவான கருத்து. கடந்த மாதம் ஜெனீவாவில் சிறீலங்காவிற்கு ஏற்பட்ட முடிவு இதற்கான சிறந்த உதாரணமாகும்.

இணைக்கப்பட்டுள்ள காணொளிப் பதிவுகளைக் காண்க

“நம்பிக்கை தான் வாழ்க்கை!!!”

இங்கே உறங்குவது ஒரு தன்மானத் தமிழனென்று என் நடுகல் கூறும் வரை

தோழமையுடன்

யாழ்வாணன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“நம்பிக்கை தான் வாழ்க்கை!!!”

நன்றி பகிர்வுக்கு யாழ்வாணன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டக்கியும்,கருணாவும்,கே.பி யும்,தயா மாஸ்டரும் எல்லாரும் தான் சொல்லுகினம்

"நம்பிக்கை தான் வாழ்க்கை என்று".. <_<:icon_idea:

Link to comment
Share on other sites

உங்கள் பதிவுக்கு மிகவும் நன்றி யாழ்வாணன். நீங்கள் குறிப்பிட்டது போல், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் திரை மறைவு அரசியல்தான் செய்து கொண்டிருக்கிறது. அவ்வரசியலை மேற்கத்தைய நாடுகளைச் சேர்ந்த மக்கள் விளங்கிக் கொள்வார்கள். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், யார் தம்மைத் தாமே புகழ்ந்து கொள்கிறார்களோ அவர்களுக்குத்தான் ஆதரவு அளிப்பார்கள். தமிழ் மக்களின் ஆதரவு வேண்டுமாயின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் தாம் செய்பவற்றை வெளிக்கொணர வேண்டும். இல்லாதுவிடின், இன்னும் ஓரிரு வருடங்களில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் வரலாறாகிவிடும். கனடாவில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இன்றைய நிலை இதுதான்.

நம்பிக்கைதான் வாழ்க்கை - இது வாழ்க்கைக்கு வேண்டுமானால் பொருந்தலாம். அரசியலுக்குப் பொருந்தாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கருத்துக்கு நன்றி தமிழச்சி,

நாளை காலையில் கண் விழிப்பேன் என்ற எண்ணத்துடன் நித்திரைக்குச் செல்கிறீர்களே! அதற்குப் பெயர் தான் நம்பிக்கை. ஆனால் கண் விழிப்பீார்களா இல்லையா என்று உங்களுக்கே தெரியாது ஆனாலும் “கண் விழிப்பேன்” என்று உங்கள் மனதில் தோன்றும் அந்த எண்ணம் இருக்கிறதே அதன் மறு பெயர் தான் நம்பிக்கை.

இரண்டாவதாக - மனிதர்கள் தான் அரசியல் செய்கிறார்கள். அரசியல் செய்வதற்கு மனிதர்கள் வாழ வேண்டும். மனிதர்கள் வாழ்வதற்கு வாழ்க்கை என்று, ஒன்று வேண்டும். நீங்கள் குறிப்பிட்டது போல் நம்பிக்கைதான் வாழ்க்கை - இது வாழ்க்கைக்கு வேண்டுமானால் பொருந்தலாம் என்றால் வாழ்க்கையை வாழும் மனிதர்கள் செய்யும் அரசியலுக்கும் அது பொருந்தும் என்பதையும் நீங்கள் இனியாவது ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

அடுத்து

நீங்களும் தமிழினமும் மீண்டுமொரு முள்ளி வாய்க்காலைச் சந்திக்கத் தயார் என்றால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் தமிழ் மக்களைச் சந்தோஷப்படுத்துவதற்காக வெளிப்படையாக அரசியல் நகர்வுகளைத் தெரியப்படுத்தும் என நம்புவோம். ஏனென்றால் அது மக்களின் அரசாங்கம்.

தயாராக இருக்கிறீர்களா? மற்றுமொரு முள்ளி வாய்க்காலுக்கு?

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் செய்த திரைமறைவு அரசியலின் பயன்தான் 22-03-2012 முதல் சிறீ லங்கா ஆட்சியாளர்கள் துண்டையும்,துணியையும் காணோம் என்று இப்பொழுதும் ஓடித்திரிவது

சிறீ லங்காவின் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் மனித உரிமைகள் குறித்த ஜனாதிபதியின் விசேட தூதுவருமான மஹிந்த சமரசிங்க பின்வருமாறு கூறுகிறார்.

புலம்பெயர் மக்களின் இனவாத பிரிவினர் கூறும் பொய்யான கூற்றுக்களை தவிர்த்து இலங்கையில் உண்மையில் என்ன நடக்கின்றது என்று இந்திய எம்.பி.க்களினால் புரிந்துகொள்ள இந்த விஜயம் சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார். இந்த சமரசிங்க தான் கடந்த மாதம் ஜெனீவா சென்ற சிறீ லங்கா குழுவினருக்குத் தலைமை வகித்தவர் என்பதை மறந்து விட வேண்டாம்.

மூல இணைப்பு

மற்றும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இன்னும் இரண்டொரு வருடங்களில் வரலாறாவதும் ஆகாமல் போவதும் உங்கள் போன்ற அளுமையுள்ளவர்களின் எழுத்தாணிகளில் தான் தங்கியுள்ளது என்பதையாவது நம்புங்கள்

நம்புவீர்களாயின் நிச்சயமாக நீங்களும் வாழ்வீர்கள் தமிழினமும் சிறப்புடன் சுதந்திர தமிழீழத்தில் வாழும்.

நன்றி

“நம்பிக்கை தான் வாழ்க்கை”

தோழமையுடன்

யாழ்வாணன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மன்சூர் அலிகானை முந்திய நோட்டா! தற்போதைய நிலவரம்; தி.மு.க - 4,46,326 பா.ஜ.க - 2,72,289 அ.தி.மு.க - 88,584  நாம் தமிழர் கட்சி - 38,978 மன்சூர் அலிகான் - 2,181 நோட்டா - 6,695 வேலூர்: விட்டு தராத கதிர் ஆனந்த்... ஹாட்ரிக் தோல்வி ஏ.சி.எஸ்! - மன்சூர் அலிகானை முந்திய நோட்டா! | vellore parliamentary constituency - dmk candidate kathir anand wins - Vikatan
    • நான் இடையில் குத்துகல்லாட்டம் வந்து மறிச்சு ஆடுவன் 😀 என் இலட்சியமே இந்தப் போட்டியில் @suvy அண்ணாவை வெல்வது தான்.😆
    • Published By: DIGITAL DESK 7   04 JUN, 2024 | 05:51 PM   இரணைமடு நீர்ப்பாசனத்திற்கு நிலையான பொறிமுறை ஏற்படுத்தப்பட வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தெரிவித்துள்ளார். வெளிகண்டல் பகுதியில் நெற்செய்கையில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டினை தீர்க்கும் விசேட கலந்துரையாடலில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்திற்கு இரணைமடுக் குளம் வரப்பிரசாதமானது. குறித்த குளத்திலிருந்து மேற்கொள்ளப்படும் விவசாயம் என்பது மாவட்டத்தில் முக்கிய இடமாக உள்ளது. ஆனால், குறித்த குளத்தின் கீழ் சிறுபோக செய்கை மேற்கொள்வதற்கான நிரந்தர பொறிமுறை இல்லை. வருடா வருடம் ஒவ்வொரு பிரச்சினை எழுகின்றது. இந்த நீர்ப்பாசன திட்டத்திற்கான நிரந்தர பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். நீர்பாசன திணைக்களம் குறிப்பிடுவது போன்று, வான் கதவுகள் திறக்கப்படும்போது அழிவுகளை சந்திப்பவர்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்ன மன நிலை எல்லாருக்கும் உள்ளது. இரணைமடுக் குளத்தின் நீர் குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் சென்றடையாது, பரந்துபட்ட மக்களிற்கும் கிடைக்கும் வகையில் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். வருடம் தோறும் புதிய புதிய பிரச்சினைகள் எழுகின்றது. இதற்கு நீர்ப்பாசன திணைக்களம், கமநல சேவைகள் திணைக்களத்தின் ஆலோசனையுடன் விவசாயிகளையும் உள்ளடக்கி நிரந்தர பொறிமுறையை உருவாக்க வேண்டும். இந்த சிறுபோகத்தின் பின்னர் இந்த பிரச்சினைக்கு முறையான பொறிமுறை ஊடாக தீர்மானம் எடுக்க வேண்டும்.  சில விவசாயிகள் என்னை சந்திக்கும் போது, எமக்கு தண்ணி தந்தால் போதும். சில தலைவர்கள் தமக்கு ஏற்றாப்போல் செயற்படுகின்றனர் என கூறுகின்றனர். விவசாய அமைப்புக்களின் தலைவர்கள் தமக்கு ஏற்றாப்போல் செயற்படாமல் உறுப்பினர்களின் விருப்பங்களை முன்னிலைப்படுத்தி செயற்பட வேண்டும். முதலில் விவசாயிகள் பிரச்சினையை பெரிதாக்கிக் கொண்டே செல்லாமல், ஒற்றுமையாக இருந்து முரண்பாடுகள் இல்லாமல் தீர்க்க வேண்டும். இதில் ஒவ்வொருவரும் தமது விருப்பத்திற்கு அமைவாக செயற்பட முடியாது. இரணைமடு குளத்தின் கீழான விவசாயத்துக்கு நிரந்தர தீர்வு ஒன்றை வரைய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/185309
    • வெற்றி பெறுபவர்கள். ஒவ்வொரு தொகுதியிலும்.  33 % வாக்குகளுக்கு மேல் பெறப் போவதில்லை    என்று தெரிகிறது   எனவே… முதலாவது இரண்டாவது  இடங்களில் வந்தவர்களுக்கு மட்டும் மீண்டும் போட்டி இடவேண்டும்.    இரண்டாவது இடம் வந்தவர்கள் கூட   வெல்லலாம்.  
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.