Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தப் பெண் ஏன் இப்படி செய்தார்...??!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தாலிகட்டும் நேரத்தில் மணப்பெண் செய்த காரியம் : மணமகன் வேதனை

வேலூர் மாவட்டம் வாலாஜா கோட்டை பகுதியை சேர்ந்தவர் அப்பாதுரை மகன் மாதவன் மளிகை கடை வைத்துள்ளார்.

இவருக்கும் சேலத்தை சேர்ந்த கோசால் என்பவரது மகள் ஜெயசுதா என்பவருக்கும் திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டது.

இன்று வாலாஜாவில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். இருவீட்டாரும் தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு பத்திரிகை அழைப்பிதழ் கொடுத்து வரவழைத்தனர்.

வாலாஜாவில் உள்ள கோட்டாராமையா திருமண மண்டபத்தில் நேற்று இரவு திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது.

சேலத்தில் இருந்து மணப்பெண் வீட்டார் நேற்று இரவு வந்தனர். இதனை தொடர்ந்து பெண் அழைப்பு, மாப் பிள்ளை அழைப்பு போன்ற சம்பிரதாய நிகழ்ச்சிகள் நடந்தது. பெண், மாப்பிள்ளை வீட்டார் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் மணப்பெண் ஜெயசுதாவுக்கு திடீரென மாப்பிள்ளை பிடிக்காமல் போனது. இதுபற்றி அவர் தனது அக்காள் கணவரிடம் கூறி அழுதுள்ளார். தனக்கு திருமணம் வேண்டவே வேண்டாம் எனக்கூறி அடம்பிடித்துள்ளார். இதனால் மணப்பெண் வீட்டார் செய்வதறியாது திகைத்தனர்.

மாப்பிள்ளையை அலங்காரம் செய்து மணமேடைக்கு அழைத்து வர தயாராகினர். அந்த நேரத்தில் மணப்பெண் திடீரென மாயமானார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருமண மண்டபத்தில் இருந்து வெளியேறிய ஜெயசுதா வாலாஜா போலீஸ் நிலையம் சென்றார். மாப்பிள்ளை பிடிக்காததால் தனக்கு திருமணத்தில் இஷ்டம் இல்லை என்று புகார் கூறினார். இந்த தகவல் திருமண மண்டபத்தில் இருந்த உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

மாப்பிள்ளை, பெண் வீட்டார் போலீஸ் நிலையம் விரைந்தனர். திருமணத்துக்கு மணப்பெண் சம்மதிக்காததால் திருமணம் நிறுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இருவீட்டாரும் போலீஸ் நிலையத்தில் காரசாரமாக பேசிக் கொண்டனர். திருமண ஏற்பாடுகள் செய்த செலவை நஷ்டஈடாக தரவேண்டுமென மாப்பிள்ளை வீட்டார் கேட்டனர். தொடர்ந்து இருதரப்பினரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நடந்த இந்த சம்பவம் குறித்து மணமகன் மாதவன்,

’’எனது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் செம்மறிக்குளம். வாலாஜாவில் மளிகை கடை நடத்தி வருகிறேன்.

எனக்கு திருமணம் செய்ய பெண் பார்த்து வந்தனர். அப்போது சேலத்தை சேர்ந்த ஜெயசுதாவை பார்த்து பேசி முடித்தனர். ஜெயசுதா சென்னை தி.நகரில் உள்ள ஜவுளி கடையில் வேலைபார்த்து வந்தார். தரகர் மூலம் பேசி முடித்தனர்.

ஒரு மாதத்திற்கு முன்பு சேலத்தில் உள்ள பெண் வீட்டில் வைத்து நிச்சயதார்த்த விழா நடந்தது. அப்போது அவர் என்னை பார்த்தார். அப்போதாவது என்னை பிடிக்கவில்லை என்று கூறியிருக்கலாம்.

நேற்று இரவு நடந்த வரவேற்பு விழாவிலும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டார். அப்போதும் அவர் பிடிக்கவில்லை என்று கூறவில்லை.

திருமண நேரத்தில் மணமேடைக்கு வராமல் மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று கூறியது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எதற்கு பிடிக்கவில்லை என்ற காரணத்தை அவர் கூறவில்லை’’ என்று வேதனையை தெரிவித்துள்ளார்.

நன்றி: நக்கீரன்.கொம்

==================================================

இது பற்றி உங்கள் கருத்தென்ன..???!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

திடீரென்று பிடிக்காமல் போனதுக்கு ஆயிரம் காரணம் இருக்கும்.. பேசித் திருமணம் செய்பவர்கள் இதுக்கெல்லாம் தயாராகத்தான் இருக்க வேணும்..! :D

காதல் கலியாணமே சிறந்தது :D

மாப்பிள்ளைக்கு நல்ல காலம் இருந்துள்ளது. வாழ்க்கை முழுக்க விருப்பம் இல்லாதவரை கட்டி அழாமல் தப்பியுள்ளார்.

பெண்ணுக்கும் பாராட்டுக்கள், துணிந்தமைக்கு. விருப்பமில்லாதவரை கட்டி மகிழ்வாக வாழமுடியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திடீரென்று பிடிக்காமல் போனதுக்கு ஆயிரம் காரணம் இருக்கும்.. பேசித் திருமணம் செய்பவர்கள் இதுக்கெல்லாம் தயாராகத்தான் இருக்க வேணும்..! :D

ஆயிரம் காரணத்தில ஒற்றைக் காரணத்தைச் சொல்லி இருந்தா.. அந்த மாப்பிள்ளை ஏன்.. மனம் வருந்தப் போறார்..! காரணமே கண்டிப்பிடிக்க முடியாத காரணங்களாக இருக்குமோ..??! பொண்ணுங்க என்றால் இப்படித்தான் முடிவெடுப்பாங்களோ..!! :lol::D

காதல் கலியாணமே சிறந்தது :D

மாப்பிள்ளைக்கு நல்ல காலம் இருந்துள்ளது. வாழ்க்கை முழுக்க விருப்பம் இல்லாதவரை கட்டி அழாமல் தப்பியுள்ளார்.

பெண்ணுக்கும் பாராட்டுக்கள், துணிந்தமைக்கு. விருப்பமில்லாதவரை கட்டி மகிழ்வாக வாழமுடியாது.

காதல் கலியாணம் சிறந்தது என்றும் சொல்ல முடியாது. காதல் செய்தவர்களிலும்.. அநேகம் பேர் இப்படி ஏமாற்றிறது உண்டு. கலியாணம் செய்து விவாகரத்தும் வாங்கினமே.. அப்படி இருக்க அதெப்படி சிறந்ததாகும்..??????????!

இந்தப் பெண்ணை துணிச்சல் உள்ளவளாக என்னால பார்க்க முடியல்ல. இவளுக்கு அடுத்தவர்களின் மன வலியை உணரும் மனிதத் தன்மையோ.. திறனோ இல்லை. இவள் ஒரு வகை ஜடம். இன்றேல்.. இவள் அந்தாளை பேசி வரேக்கையே வேண்டாம் என்றிருந்தா அவன் வேற பொண்ணைப் பார்த்திருப்பானில்ல..! :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

புறோ ஏன் உங்கட கண்ணுக்கு மட்டும் இப்படியான செய்திகள் தான் தெரியுது....

  • கருத்துக்கள உறவுகள்

சரியாக சொன்னீங்கள் யாயினி இதைத் தான் நான் இந்த செய்தியைப் பார்த்தவுட‌ன் கேட்ட வேண்டும் என்று இருந்தேன்...படிச்ச ஒரு ஆள் சமுதாயத்திற்கு பிர‌யோச‌னப்படுகின்ற மாதிரி ஆக்கங்களை எழுதலாம் அல்லது இணைப்புகளை தேடி இணைக்கலாம் அதை விட்டுட்டு எப்ப பார்த்தாலும் ஒரே பெட்டைப் புராணம்

திருமண வீட்டிக்கு வந்தவர்கள் மாப்பிளை சரியில்லை என்று கூறியிருக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புறோ ஏன் உங்கட கண்ணுக்கு மட்டும் இப்படியான செய்திகள் தான் தெரியுது....

நக்கீரன் வாசிச்சா தெரிய வருது.. தங்கச்சி..! :)

சரியாக சொன்னீங்கள் யாயினி இதைத் தான் நான் இந்த செய்தியைப் பார்த்தவுட‌ன் கேட்ட வேண்டும் என்று இருந்தேன்...படிச்ச ஒரு ஆள் சமுதாயத்திற்கு பிர‌யோச‌னப்படுகின்ற மாதிரி ஆக்கங்களை எழுதலாம் அல்லது இணைப்புகளை தேடி இணைக்கலாம் அதை விட்டுட்டு எப்ப பார்த்தாலும் ஒரே பெட்டைப் புராணம்

பெட்டையள் தப்புப் பண்ணிறதையும் சமுதாயத்துக்கு சுட்டிக்காட்டத் தானே இப்படியான செய்திகளைப் போடுறாங்க. அதை நாங்க ஏன் மறைக்கனும்.. அக்கா..! இப்படி மறைச்சு மறைச்சுத் தான்.. பொண்ணுங்க.. பயமில்லாம மனிதத் தன்மையே அற்று.. தப்புப் பண்ணுறதை ஊக்குவிக்கிறம்..! அந்த இடத்தில் ஒரு ஆண் இதே தவறைச் செய்திருந்தாலும் அதையும் இங்க இணைச்சுத் தான் இருப்பேன்..! :):icon_idea:

திருமண வீட்டிக்கு வந்தவர்கள் மாப்பிளை சரியில்லை என்று கூறியிருக்கலாம்.

இப்படி அடுத்தவர் சொல்லுக்கு மனசை மாற்ற பெண்கள்.. அப்ப ஒரு மாப்பிள்ளை அவர்களை சரியில்லை என்று சொன்னா தற்கொலையா செய்து கொள்ளுவார்கள்..???! இப்படியான பெண்களுக்கு சுய புத்தியோ.. மனிதாபிமான செயற்பாடுகளோ.. தெரியாதா..???! என்ற கேள்வியும் அங்கு எழுகிறதே..??! இவங்கள எப்படி மனித சமூகத்தில் மனிதர்களாக கருதப்பட முடியும்..??! :):icon_idea:

குழப்புவதற்கென்று நிறைய பேர் இருப்பார்கள் என்பதற்காக கூறினேனே தவிர. நானும் அந்த பெண்ணை தான் பிழை என்று சொல்கிறேன். மாப்பிளை எப்படிப்பட்டவரா இருப்பினும் திருமணம் வரை வந்தவர்கள் அதனை குழப்பாது செய்திருக்க வேண்டும்.

நான் பெண் என்பதற்காக பெண்கள் விடும் தவறுகளை தவறல்ல என்று வாதாட கூடாது. :)

அந்த பெண் இப்ப விட்ட தவறுக்கு இனி அவர் திருமணம் செய்யும் போது பலனை அனுபவிப்பார். "இந்த பெண் மணமேடையில் வைத்து திருமணத்தை குழப்பியவள்" என்று இனி புதிதாக வரும் மணமகனுக்கு சொல்லுவார்கள்.

மாப்பிளை பெண்ணை சரியில்லை என்று கூறினால் பெண் தற்கொலை பண்ணுவாரோ இல்லையோ பெண்ணின் பெற்றோர் தற்கொலை பண்ண வாய்ப்பிருக்கு. :)

  • கருத்துக்கள உறவுகள்

மளிகைக்கடைக்கும் ஜவுளிக்கடைக்கும் எப்படிப் பொருத்தம் வரும் ??!

போங்கப்பா உங்களுக்கு வேறை வேலையே இல்லை

எந்த நேரமும் பெண்களிடம் குறை கண்டுபிடிக்கிறதிலேயே இருங்கோ :lol:   :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குழப்புவதற்கென்று நிறைய பேர் இருப்பார்கள் என்பதற்காக கூறினேனே தவிர. நானும் அந்த பெண்ணை தான் பிழை என்று சொல்கிறேன். மாப்பிளை எப்படிப்பட்டவரா இருப்பினும் திருமணம் வரை வந்தவர்கள் அதனை குழப்பாது செய்திருக்க வேண்டும்.

நான் பெண் என்பதற்காக பெண்கள் விடும் தவறுகளை தவறல்ல என்று வாதாட கூடாது. :)

அந்த பெண் இப்ப விட்ட தவறுக்கு இனி அவர் திருமணம் செய்யும் போது பலனை அனுபவிப்பார். "இந்த பெண் மணமேடையில் வைத்து திருமணத்தை குழப்பியவள்" என்று இனி புதிதாக வரும் மணமகனுக்கு சொல்லுவார்கள்.

மாப்பிளை பெண்ணை சரியில்லை என்று கூறினால் பெண் தற்கொலை பண்ணுவாரோ இல்லையோ பெண்ணின் பெற்றோர் தற்கொலை பண்ண வாய்ப்பிருக்கு. :)

பெண்களின் தவறை மறைக்காமல்... அவர்களின் தவறை அவர்களுக்கு இனங்காட்டி.. திருந்தக் கேட்பது.. தவறல்ல என்பதை உணர்ந்து தாங்கள் பதிந்துள்ள இக்கருத்து வரவேற்கத்தக்கது. :)

Edited by இணையவன்
மேற்கோள் காட்டப்பட்ட கருத்திற்கான பதில் நீக்கப்பட்டுள்ளது.

தம்பி நெடுக்கு, உங்கள் நோக்கில் பெண்கள் கூடாதவர்கள், கெட்டவர்கள், ஏமாத்துக்காரர்கள்........ ஓகே. பிறகு ஏன் அவர்களைப் பற்றியே கதைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்???

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் சும்மா நக்கீரனில் வந்ததென்று தூக்கி வந்து இங்கு போட்டுவிட்டு நீங்கள் உங்கள் பாட்டுக்கு அரைக்க வெளிக்கிடக்கூடாது.

இறுதி வரைக்கும் ஏதோ ஒரு நம்பிக்கை அந்தப் பெண்ணு இருந்திருக்கவேண்டும். இல்லாவிட்டால் தன்னுடைய குடும்பத்தை அந்த இக்கட்டான நிலைக்கு எந்தப்பெண்ணும் தள்ளியிருக்க மாட்டாள். யார் கண்டா..முதகெலும்பில்லாத எவனையாவது காதலித்து...கடைசி வரைக்கும் இவன் தன்னை அழைக்க வருவான் என்றும் நம்பியிருக்கலாம் அல்லவா... அல்லது பெற்றோருக்கு ஆரம்பத்திலிருந்தே தனக்கு பிடித்தமில்லாத மணம் என்று சொல்லியிருக்கலாம். பெற்றோர்கள் தனது கருத்துக்கு மதிப்பளிப்பார்கள் என்று கடைசி வரைக்கும் நம்பியிருக்கலாம் இதுதான் இல்லையென்றாலும் இந்த மாப்பிள்ளை பெண்ணிடம் அரைமணிநேரமாச்சும் பேசி அவள் மனதை அறிந்திருக்கலாம்... ஆக தனது குடும்பத்தின் மீதான நம்பிக்கையில் பேசாமடந்தையாக சடங்குகள் நடாத்தப்படும்போது சமாளித்திருக்கலாம்..அதுவே இனி சமாளிக்க முடியாது என்ற நிலை வந்தபோது பேசவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கலாம்... இந்த விடயத்தில் சமூகமே குற்றவாளி...சும்மா பெண்மீது பழிபோடும் கூப்பாடுகளை கொண்டுபோய் குப்பையில் வீசுங்கள். ஆண்கள் எல்லோரும் ஏதோ திறமானவர்கள் அப்பிராணிகள் பெண்கள் மட்டுமே ஏமாற்றுக்காரர்கள் என்று எல்லை மீறிப் போகாதீர்கள் அந்தப் பெண்ணின் நிலையில் நின்றிருந்தால் ஒருவேளை உங்களுக்கும் அவளின் உணர்வைப் புரிந்துகொள்ளமுடியும். கெட்டிக்காரி நின்று போராட ஆரம்பித்திருக்கிறாள் அவளுடைய எதிர்ப்பு என்பது மணமுடிக்க வந்த மாப்பிள்ளைக்கு எதிரானது இல்லை. வெளியே தெரியாத பன்முக அடக்குமுறை கொண்ட சமூகத்திற்கு எதிரானது. தயவு செய்து பெண்களைக் கொச்சைப்படுத்தாதீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் இந்தப் பகுதியை ஒரு பிரச்சனையான பகுதியாக தயவு செய்து ஆக்காதீர்கள்..நான் எப்போதும் நெடுக் அண்ணாவோடு இப்படித் தான் கதைப்பது வளக்கம் அவருக்கும் அது விளக்கும்...அதன் பொருட்டு தான் மேலே ஒரு கேள்வியைக் கேட்டேனே தவிர பிரச்சனை பண்ணுவதற்காக எதையும் எழுதுவது இல்லை..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் சும்மா நக்கீரனில் வந்ததென்று தூக்கி வந்து இங்கு போட்டுவிட்டு நீங்கள் உங்கள் பாட்டுக்கு அரைக்க வெளிக்கிடக்கூடாது.

இறுதி வரைக்கும் ஏதோ ஒரு நம்பிக்கை அந்தப் பெண்ணு இருந்திருக்கவேண்டும். இல்லாவிட்டால் தன்னுடைய குடும்பத்தை அந்த இக்கட்டான நிலைக்கு எந்தப்பெண்ணும் தள்ளியிருக்க மாட்டாள். யார் கண்டா..முதகெலும்பில்லாத எவனையாவது காதலித்து...கடைசி வரைக்கும் இவன் தன்னை அழைக்க வருவான் என்றும் நம்பியிருக்கலாம் அல்லவா... அல்லது பெற்றோருக்கு ஆரம்பத்திலிருந்தே தனக்கு பிடித்தமில்லாத மணம் என்று சொல்லியிருக்கலாம்.

பெற்றோர்கள் தனது கருத்துக்கு மதிப்பளிப்பார்கள் என்று கடைசி வரைக்கும் நம்பியிருக்கலாம் இதுதான் இல்லையென்றாலும் இந்த மாப்பிள்ளை பெண்ணிடம் அரைமணிநேரமாச்சும் பேசி அவள் மனதை அறிந்திருக்கலாம்... ஆக தனது குடும்பத்தின் மீதான நம்பிக்கையில் பேசாமடந்தையாக சடங்குகள் நடாத்தப்படும்போது சமாளித்திருக்கலாம்..அதுவே இனி சமாளிக்க முடியாது என்ற நிலை வந்தபோது பேசவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கலாம்... இந்த விடயத்தில் சமூகமே குற்றவாளி...சும்மா பெண்மீது பழிபோடும் கூப்பாடுகளை கொண்டுபோய் குப்பையில் வீசுங்கள். ஆண்கள் எல்லோரும் ஏதோ திறமானவர்கள் அப்பிராணிகள் பெண்கள் மட்டுமே ஏமாற்றுக்காரர்கள் என்று எல்லை மீறிப் போகாதீர்கள் அந்தப் பெண்ணின் நிலையில் நின்றிருந்தால் ஒருவேளை உங்களுக்கும் அவளின் உணர்வைப் புரிந்துகொள்ளமுடியும். கெட்டிக்காரி நின்று போராட ஆரம்பித்திருக்கிறாள் அவளுடைய எதிர்ப்பு என்பது மணமுடிக்க வந்த மாப்பிள்ளைக்கு எதிரானது இல்லை. வெளியே தெரியாத பன்முக அடக்குமுறை கொண்ட சமூகத்திற்கு எதிரானது. தயவு செய்து பெண்களைக் கொச்சைப்படுத்தாதீர்கள்.

நான் ஒன்றும் என் கருத்தை திணிக்கவில்லை. நக்கீரனிற்கு அளித்துள்ள பேட்டியில் அந்த மணமகன் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் தான் எனது கருத்தை பதிவு செய்துள்ளேன்.

இதனை நான் ஆண் - பெண் என்ற விபரத்துக்கு அப்பால் மனிதாபிமானப் பிரச்சனையாகவே நோக்குகிறேன். எந்தக் குற்றமும் செய்யாது.. மன உளைச்சலோடு.. தவிக்கவிடப்பட்ட அந்த மனிதனுக்கு (ஆணுக்கு) ஆறுதல் என்ன..??! தீர்வென்ன..???! இதையே ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்திருந்தால்.. என்ன சொல்லி இருப்பீர்கள்..???!

அந்தப் பெண் தனக்கு ஏன் விருப்பமில்லை என்பதை அந்தப் பையனைப் போல ஊடகங்களுக்கு சொல்லி இருக்கலாமே. அதைத்தானே அவனும் கேட்கிறான்..! அதைச் செய்யாமல் திருமண மேடை வரை வந்துவிட்டு ஓடி ஒளிப்பது எந்த வகையில் நியாயமான ஒரு நடவடிக்கை என்று கருதுகிறீர்கள்..????! இதனை எதைக் கொண்டு நியாயப்படுத்தப் போகிறீர்கள்..??! அடக்குமுறை என்றா இதனையும் வரையறுக்கப் போகிறீர்கள். பொலீஸ் நிலையம் வரை போனவருக்கு இல்லாத அடக்குமுறை.. காரணத்தைச் சொல்வதில் வந்திடுமா..???!

இதை உங்களுக்கு ஒரு ஆண் செய்திருந்தால்.. உண்மையாக.. ஆண்களை நீங்கள் புகழ்ந்து தள்ளுவீர்களா..???!

இக்கேள்விகளுக்கு இதய சுத்தியோடு பதில் சொல்ல முடிந்தால்... அதைச் சொல்லுங்கள்..??!

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணாவிடம் ஓர் வேண்டுகோள். தலைப்பை "இந்தப்பெண் ஏன் இப்படி செய்தார்?" என்று மாற்றி விடுங்கோ. எல்லா பெண்களையும் சம்பந்தப்படுத்தி தலைப்பு இருப்பதாலேயே இந்தப்பிரச்சினை.

தலைப்பை உங்கள் தாழ்மையான வேண்டுகோளிற்கு இணங்க மாற்றியுள்ளேன். உண்மையில் தலைப்பை அந்த வகையான தவறு செய்யும் பொண்ணுங்களை நோக்கியே இட்டிருந்தேன். இருந்தாலும் அதில் பொருள் மயக்கம் இருக்க வாய்ப்புள்ளதை நீங்கள் சுட்டிக்காட்டியதை ஏற்றுக் கொண்டு தலைப்பை மாற்றியுள்ளேன்..!

குழப்புவதற்கென்று நிறைய பேர் இருப்பார்கள் என்பதற்காக கூறினேனே தவிர. நானும் அந்த பெண்ணை தான் பிழை என்று சொல்கிறேன். மாப்பிளை எப்படிப்பட்டவரா இருப்பினும் திருமணம் வரை வந்தவர்கள் அதனை குழப்பாது செய்திருக்க வேண்டும்.

நான் பெண் என்பதற்காக பெண்கள் விடும் தவறுகளை தவறல்ல என்று வாதாட கூடாது. :)

அந்த பெண் இப்ப விட்ட தவறுக்கு இனி அவர் திருமணம் செய்யும் போது பலனை அனுபவிப்பார். "இந்த பெண் மணமேடையில் வைத்து திருமணத்தை குழப்பியவள்" என்று இனி புதிதாக வரும் மணமகனுக்கு சொல்லுவார்கள்.

மாப்பிளை பெண்ணை சரியில்லை என்று கூறினால் பெண் தற்கொலை பண்ணுவாரோ இல்லையோ பெண்ணின் பெற்றோர் தற்கொலை பண்ண வாய்ப்பிருக்கு. :)

அதுமட்டுமன்றி.. இத் தலைப்பில்.. விதண்டாவாதம் செய்யாமல்.. பெண்கள் விடும் தவறுகளையும் ஏற்றுக் கொண்டு.. அவர்கள் அதில் இருந்து மீள வேண்டும் என்ற கருத்தை தலைப்புக்கு ஏற்ப நீங்கள் முன்வைத்திருந்தமைக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது..!

இப்படியான நியாயபூர்வ கருத்தாளர்களையே நாங்கள் எதிர்பார்க்கிறோம் இத்தலைப்பிலும் கருத்தாட....! :)

Edited by nedukkalapoovan

தலைப்பை உங்கள் தாழ்மையான வேண்டுகோளிற்கு இணங்க மாற்றியுள்ளேன். உண்மையில் தலைப்பை அந்த வகையான தவறு செய்யும் பொண்ணுங்களை நோக்கியே இட்டிருந்தேன். இருந்தாலும் அதில் பொருள் மயக்கம் இருக்க வாய்ப்புள்ளதை நீங்கள் சுட்டிக்காட்டியதை ஏற்றுக் கொண்டு தலைப்பை மாற்றியுள்ளேன்..!

அதுமட்டுமன்றி.. இத் தலைப்பில்.. விதண்டாவாதம் செய்யாமல்.. பெண்கள் விடும் தவறுகளையும் ஏற்றுக் கொண்டு.. அவர்கள் அதில் இருந்து மீள வேண்டும் என்ற கருத்தை தலைப்புக்கு ஏற்ப நீங்கள் முன்வைத்திருந்தமைக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது..!

இப்படியான நியாயபூர்வ கருத்தாளர்களையே நாங்கள் எதிர்பார்க்கிறோம் இத்தலைப்பிலும் கருத்தாட....! :)

என் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி.

நெடுக்ஸ் திடீரென்று தலைப்பை மாற்றியதால் எனது கருத்தின் ஆழம் பாதிக்கப்பட்டுவிட்டது மட்டு அவர்களே.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் திடீரென்று தலைப்பை மாற்றியதால் எனது கருத்தின் ஆழம் பாதிக்கப்பட்டுவிட்டது மட்டு அவர்களே.. :D

இந்தக் கருத்து எத்தனை அடி ஆழம்.. இசை..! :lol::D

நெடுக்ஸ் திடீரென்று தலைப்பை மாற்றியதால் எனது கருத்தின் ஆழம் பாதிக்கப்பட்டுவிட்டது மட்டு அவர்களே.. :D

:lol::D

எங்க இன்னும் காணேல்லையே என்று பார்த்தன்..... முதலாவதா ஓடி வந்து கருத்தை எழுதின ஆளாச்சே..... :D

உங்கட கருத்தையும் மட்டிறுத்தினா சரியாயிடும். :lol::D

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் திடீரென்று தலைப்பை மாற்றியதால் எனது கருத்தின் ஆழம் பாதிக்கப்பட்டுவிட்டது மட்டு அவர்களே.. :D

உங்கள் கருத்திற்கு ஆழம் அதிகம் (வடிவேலை யோசிச்சேன்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.