Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைத் தமிழ் தலைவர்கள் தனி ஈழத்தை கோரவில்லை – ரங்கராஜன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

rangarajan_CI.jpg

இலங்கைத் தமிழ் தலைவர்கள் தனி ஈழத்தை கோரவில்லை என இந்திய மாக்சிச கம்யூனிஸட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரீ.கே. ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய இலங்கைக்குள் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டுமென்றே தமிழ்;த் தலைவர்கள் விரும்புகின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட இலங்கையின் சகல அரசியல் தலைவர்களும் ஐக்கிய இலங்கை என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

ஈழம் பற்றி பேசவில்லை எனவும், ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுத் திட்டம் வழங்கப்பட வேண்டுமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார் என ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய பிரதிநிதிகள் குழுவில் ரங்க்ராஜன் அங்கம் வகித்திருந்தார்.

நான் ஓர் இலங்கையன், இலங்கையனாகவே சாக விரும்புகின்றேன் என சம்பந்தன் மேலும் கூறினார் என ரங்கராஜன் குறிப்பிட்டுள்ளார்.

http://www.globaltam...IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

மூளைகெட்ட ரங்கராஜனுக்குத் தெரியுமா.. இலங்கை ஒருமைப்பாட்டுக்கு எதிராகப் பேசினால் உள்ளே போட்டுவிட சட்டம் இருக்கு என்று? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் தமிழீழம் கேட்கவில்லை. ஐக்கிய இலங்கைக்குள்.. அவருக்கு சுடலை தான் தேவை. அவர் சிறீலங்கன் பிரஜை.. அவர் சிறீலங்கனா இருக்கலாம்.. அது அவருடைய விருப்பம். அவருக்கு அதிகாரப்பரவல் என்பது.. அது கனத்தை மயானத்தில் அமைஞ்சாலும் அது பெருமை..! ஆனால் தமிழ் மக்கள் 1977 இல் இருந்து தமிழீழம் தான் கேக்கினம்..! இது உங்கட இந்திரா காந்தியில இருந்து எல்லாருக்கும் தெரியும். இப்ப ஏதோ புதிசா கண்டுபிடிச்ச கணக்கா..???! கதையளக்கிறியள்..! உந்த தமிழீழத்திற்காக மக்கள்.. உயிரே விட்டிருக்கினம். சம்பந்தனின் பிள்ளை குட்டி அல்ல உயிர் விட்டது..!

நீங்கள் சந்தித்ததில் இவர் தான் எங்கள் தமிழ் தலைவர் என்று தமிழ் மக்கள் சொல்லி அனுப்பினவையோ..???! சம்பந்தன்.. தமிழ் மக்களின் தலைவர் என்று தமிழ் மக்கள் சொல்லிவிட்டவையோ..??! இல்ல சான்றிதழ் கொடுத்திருக்கினமோ..! இல்ல டக்கிளஸ்.. கருணா..???! :lol::D

Edited by nedukkalapoovan

தமிழ் ஈழம்தான் வேணுமெண்டால் உடனே பெர்ருத்தருவீர்களா? போடாங்....

சரி கேட்ட அதிகாரப் பகிர்வைஎன்டாலும்...

வந்திங்களா சாப்பிடிங்க்களா என்டிருங்க..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தாளுக்கு விஷயம் தெரியவில்லை ஸ்ரீலங்காவின் தயவில் இருந்து அரசியல் பிழைப்பு நடத்தும் சம்பந்தன் டக்லஸ் கருணா போன்றோருக்கு தமிழ் ஈழம் தேவையில்லாது போகலாம், ஈழத்தில் வாழும் மக்களுக்கு தமிழ் ஈழம்தான் வேண்டும், அதற்காகவே அவர்கள் மிகப்பெரிய தியாகங்களை செய்திருக்கின்றார்கள் அதற்காகவே பல ஆயிரம் உறவுகளை விதைத்திருக்கின்றனர். சம்பந்தனோ கருணாவோ டக்கிளசோ எதையும் இழக்கவில்லை .....

ஐய்யா ரங்கராஜன் அவர்களே நீங்கள் எந்தவித அச்சுறுத்தலும் அற்ற நிலையில் அங்கு வாழும் தமிழ் மக்களிடம் கேட்டிருக்கவேண்டும் அவர்களுக்கு என்ன வேண்டும் என்று அதைவிடுத்து சிங்கள அரசின் அடிவருடிகளிடம் கேட்டால் அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள்.

நான் ஓர் இலங்கையன், இலங்கையனாகவே சாக விரும்புகின்றேன் என சம்பந்தன் மேலும் கூறினார் என ரங்கராஜன் குறிப்பிட்டுள்ளார்.
அப்ப ....... இதுவரைகாலமும் தமிழ்மக்களை ஏமாற்றிய வாக்கு கேட்டார் ?!
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர் பற்றிய ரங்கராஜன் பேச்சு வடி கட்டிய பொய்- சீமான் தாக்கு.

சென்னை: இலங்கைக்கு சென்று வந்த மார்க்சிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே. ரங்கராஜன், உண்மைக்குப் புறம்பான வடிகட்டிய பொய்யான தகவல்களைக் கூறுவதாக நாம் தமிழர் கட்சியின் த்லைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சாத்வீகமும் ஆயுதமும்

தமிழ் ஈழத்துக்காக சாத்வீக வழியில் போராடிய தந்தை செல்வாவின் போராட்டங்களை ஆயுத வன்முறையின் மூலம் சிங்கள அரசு தொடர்ந்து ஒடுக்கியதன் எதிர்விளைவாகவே தமிழர்களின் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டம் தொடங்கியது.

தமிழ் மக்களின் முழுமையாக ஆதரவுடன் நடந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தைத்தான் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய வல்லாதிக்கங்களின் துணையுடன் தமிழர்களை அழிக்கும் இன அழிப்புப்போராக சிங்கள இனவெறி அரசு நடத்தி முடித்தது. இரண்டரையாண்டுக் காலம் நடந்த அப்போரில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

வடிகட்டிய பொய்

அப்படிப்பட்ட ஒரு கொடூரமான போரில் தங்கள் சொந்தங்களை இழந்தும், வாழ்விடங்களை இழந்து வாழ வழியின்றியும் தவித்துக் கொண்டிருக்கும் தமிழ் மக்களின் துயர நிலையை கண்டறியச் சென்ற நாடாளுமன்ற குழுவினர், அவர்களின் துயரத்தை போக்க இலங்கை அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்காததைப்பற்றிப் பேசாமல், தமிழர்கள் அரசியல் தீர்வைப்பற்றி பேசுகிறார்கள் என்று கூறுவது வடிகட்டிய பொய்யாகும்.

இலங்கையில் போர் நடந்த பகுதிகளில் இயல்பு நிலை திரும்பி வருவதாக கூறுகிறார் ரங்கராசன். அப்படி ஒரு கருத்தை நாடாளுமன்றக் குழுவில் சென்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட கூறவில்லையே?

கடைந்தெடுத்த மோசடி

இலங்கை தமிழர்களின் தனித் தமிழ் ஈழக் கோரிக்கையை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம் என்று ஓங்கிக் குரல் எழுப்பும் மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினர், தன் கருத்தை ஈழத் தமிழர்களின் கருத்தாக அங்கு போய் விட்டு வந்து கூறுவது கடைதெடுத்த அரசியல் மோசடியாகும்.

தமிழர்கள் அரசியல் தீர்வைத்தான் விரும்புகிறார்கள். விடுதலையை அல்ல என்று கூறும் மார்க்சிஸ்ட் கட்சி, ஈழத் தமிழர்களிடம் விடுதலைத் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிக்கத் தயாரா? என்று நாம் தமிழர் கட்சி கேட்கிறது.

சுஷ்மாவின் தனி சந்திப்பு

நாடாளுமன்ற குழுவிற்கு தலைமை தாங்கிச் சென்ற சுஷ்மாசுவராஜ் மற்ற உறுப்பினர்கள் அனைவரையும் தவிர்த்து விட்டு தனியாக சென்று இலங்கை அதிபர் ராஜபக்சவை சந்தித்து பேசியிருக்கிறார். இப்படியொரு தனித்த சந்திப்பு எதற்காக என்று தெளிவுப்படுத்தப்படவில்லை. அது குறித்து மற்ற உறுப்பினர்கள் ஒருவரும் விளக்கவில்லை.

திட்டமிட்ட நாடகம்

இலங்கைக்கு சென்ற இந்திய நாடாளுன்ற குழுவில் தமிழர்களுக்கு ஆதரவான கட்சிகள் இடம் பெறாததும் இடம்பெற்றவர்களில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இலங்கை பிரச்சினை என்றால் என்னவென்று தெரியாதவர்கள் என்பதும் இக்குழுவின் பயணம் ஒரு திட்டமிட்ட நாடகமே என்பதை பறைசாற்றுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

thatstamil

கீழ்பாக்கத்தில் இருக்க வேண்டியதுகள் ஹிந்திய உல்லாச பயணக் குழுவில் இணைக்கபப்ட்டுள்ளது!

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஓர் இலங்கையன், இலங்கையனாகவே சாக விரும்புகின்றேன் என சம்பந்தன் மேலும் கூறினார் என ரங்கராஜன் குறிப்பிட்டுள்ளார்.

தலை நல்லா யாழ்பாண கொப்பரை தேங்காயாட்டம் இருக்கு..! உள்ள ஒண்ணும் சரக்கு கிடையாது  இரண்டுக்கும் தான்..! ராஜதந்திரம் பேச்சு வார்த்தை என்றால் ரெண்டுக்கும் தெரியல .. வார்த்தைய விட்டவருக்கும் அதை அப்பூடியே வாந்தி எடுப்பவருக்கும் ..  இங்க பிரண்ட்ஸ் ஜாலியா தண்ணி அடித்துவிட்டு பேசுகிறார்களா..? ரங்கராஜலுவை குறை சொல்ல முடியாது அவன் கிந்தியாவுக்கு காவடி தூக்குறவன்..உள்ளாட்டை ஏதாவது இலங்கை கிந்திய தயாரிப்பில் தயார் ஆனத் என்றால் அதை போட்டு காட்டி கிந்தியாக்கு சாதகமாக பொதுமேடையில் அணிந்து விளம்பரம் குடுப்பார்.. சம்பந்தத்திற்கு ஏன் இந்த மாறி ஏடா கூடமாக வார்த்தையை விடணும்....? டியுசன் பீஸ் எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை ராஜதந்திர கோர்ஸ் ஏதாவது இருந்தால் கொஞ்சம் சேர்த்து விடுங்கப்பா..!

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

மார்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி தனி ஈழத்துக்கு, தமிழுக்கு எதிரான கொள்கையுடையது. இந்தியக் கம்னியூஸ்ட் கட்சியின் தமிழகப் பிரிவுதான் தொடர்ச்சியாக ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுத்து வருகிறது.

ரங்கராஜனுக்குக் குழப்பந்தான். தமிழீழம் என்பதை விடுங்கள். சம்பந்தரால் வெளிப்படையாகவே சொல்லப்பட்ட ஒரு நாட்டுக்குள்ளான தீர்வினை, தமிழர்களுக்கான இலங்கைப் பிரஜைகளுக்குரிய சம உரிமையினை இவர்கள் பெற்றுக் கொடுக்கட்டும்.

அது இந்த ரங்கராஜன் குழுக்களால் முடியாமல் போகும்போது சம்பந்தர் சொல்லாமல் சொல்லியது என்னவென்று அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.