Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா நாணய மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா ரூபாவின் மதிப்பு மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது.

american-dollars_seithy0106.jpg

அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் மதிப்பை 125 ரூபாவாக நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா மத்திய வங்கி உத்தரவாதம் வழங்கிய போதும், சிறிலங்கா ரூபாவின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.

நேற்றுக்காலை அந்நியச் செலாவணி வர்த்தகம் ஆரம்பிக்கப்பட்ட போது அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு 131.55 ரூபாவாக இருந்தது. பின்னர், சிறிலங்கா ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியடைந்து அமெரிக்க டொலருக்கு எதிரான நாணய மதிப்பு 134.55 ரூபா என்ற உச்ச அளவைத் தொட்டது.

சிறிலங்கா மத்திய வங்கி அமெரிக்க டொலருக்கு எதிரான நாணய மதிப்பை 132 ரூபாவாக நிலை நிறுத்தவுள்ளதாக தவறான செய்தி பரப்பப்பட்டதாலேயே நேற்று ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததாக சிறிலங்கா மத்திய வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, டொலருக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் மதிப்பை 125 ரூபாவாக நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா மத்திய வங்கி கூறியிருந்தது. ஆனாலும் சிறிலங்கா அரசினால் ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியைத் தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=61073&category=TamilNews&language=tamil

  • Replies 52
  • Views 6.5k
  • Created
  • Last Reply

உயரத்தில் இருந்து வேகமாக விழுகின்ற கத்தியின் நிலை தான் இலங்கை ரூபாவின் நிலை.

இதை கையைக்கொடுத்து நிற்பாட்ட முடியாது :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உயரத்தில் இருந்து வேகமாக விழுகின்ற கத்தியின் நிலை தான் இலங்கை ரூபாவின் நிலை.

இதை கையைக்கொடுத்து நிற்பாட்ட முடியாது :icon_idea:

அப்ப ........ கண்டிப்பாக ஸ்ரீலங்கா கிளியப்போகின்றது :D

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா ரூபாவின் மதிப்பு பாரிய வீழ்ச்சி - அமெரிக்க டொலர் ஒன்று 133.6 ஆக பெறுமதி:

Rupee-dollar-comparison-150seithy.jpg

சிறிலங்கா ரூபாவின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இன்று அமெரிக்க டொலர் ஒன்று 133.6 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மிகக்குறைந்த பெறுமதி இதுவாகும். பிரிட்டிஷ் பவுண் ஒன்று 206.6 ரூபாவாகவும், ஒரு ஈரோ 165.7 ரூபாவாகவும், ஒரு சுவிஷ் பிறாங் 137.9 ரூபாவாகவும் இன்று காணப்பட்டது.

இந்த விடயத்தில் இலங்கை மத்திய வங்கியோ, ஏனைய அரச வங்கிகளோ தலையிட்டதை காண முடியவில்லை என்றும், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளின் காரணமாக அவர்களின் கைகள் கட்டப்பட்டிருக்கலாம் என்றும் நாணய பரிமாற்றுநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=61630&category=TamilNews&language=tamil

இந்த வருட முடிவுக்குள் 200 ரூபாவை அமெரிக்க டாலர் தொடுமானால், தமிழீழம் பிறக்க அது உதவும்.

இந்த விடயத்தில் இலங்கை மத்திய வங்கியோ, ஏனைய அரச வங்கிகளோ தலையிட்டதை காண முடியவில்லை என்றும், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளின் காரணமாக அவர்களின் கைகள் கட்டப்பட்டிருக்கலாம் என்றும் நாணய பரிமாற்றுநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சீனாவோ இல்லை வேறுயாருமோ கூட உதவ முடியாத நிலை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூரில் பொருட்களின் விலை மிக மோசமாக ஏறும் இந்தனை ஸ்ரீலங்காவில் உள்ள பாமரமக்கள் எதிர் கொள்வார்கள் ? மற்றும் உள்நாட்டில் வன்முறைகள் அதிகரிக்கும் இதனை எப்படி சிங்களம் எதிர் நோக்கும் ?

உள்ளூரில் பொருட்களின் விலை மிக மோசமாக ஏறும் இந்தனை ஸ்ரீலங்காவில் உள்ள பாமரமக்கள் எதிர் கொள்வார்கள் ? மற்றும் உள்நாட்டில் வன்முறைகள் அதிகரிக்கும் இதனை எப்படி சிங்களம் எதிர் நோக்கும் ?

நம்மளை எதுக்கு பெத்து விட்டிருக்காங்க. :D

  • கருத்துக்கள உறவுகள்

நம்மளை எதுக்கு பெத்து விட்டிருக்காங்க. :D

:lol: :lol: :lol:

உலக பொருளாதார வளர்ச்சி நீண்ட காலத்திற்கு தளம்பல் நிலையில் இருக்கும்! - உலக வங்கி

உலக பொருளாதார வளர்ச்சி நீண்ட காலத்திற்கு தளம்பல் நிலையில் இருக்குமென உலக வங்கி தெரிவித்தது.

அபியிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி முன்னர் எதிர்பார்க்கப்பட்டதை விட குறைவாக இருக்குமென அறிக்கை ஒன்றில் அந்த அமைப்புத் தெரிவித்தது.

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் பொருளாதாரம் கடந்த ஆண்டு 6.1 சதவீதம் வளர்ச்சியடைந்தது. அது இவ்வாண்டு 5.3 சதவீதமாக இருக்குமென உலக வங்கி குறிப்பிடுகிறது.

ய+றோ வலயத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி, உலக பொருளாதாரத்திற்குப் புதிய சவாலாக அமையும் அதேவேளையில் சீனாவின் வளர்ச்சியும் குறைந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளின் மிகக் குறைந்த அளவாக, 8.1 சதவீத வளர்ச்சியை சீனா இவ்வாண்டின் முதல் காலாண்டில் அடைந்தமை குறிப்பிடத்தக்கது.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=12161

[size=4]நாட்டின் முழு வருமானத்தில் 96 வீதமான பணம் கடனைச் செலுத்துவதற்கே அரசு பயன்படுத்திவருகின்றது என ஐ.தே.க குற்றச்சாட்டு

[size=5]நாட்டின் முழு வருமானத்தில் 96 வீதமான பணம் கடனைச் செலுத்துவதற்கே அரசு பயன்படுத்திவருகின்ற[/size]து என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல குற்றம்சாட்டியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் 30 வீத பணமே கடன் தவணைக்காக செலவிடப்பட்டது.

[size=5]நாட்டில் வங்குரோத்து நிலையை தற்போதைய அரசாங்கம் உருவாக்கியுள்ளது. அத்துடன் பணம் இருக்கும் இடங்களை தேடி அடித்து சாப்பிட ஆரம்பித்துள்ளது.[/size]

அந்தவகையில் ஊழியர் சேமலாப நிதியை கொள்ளையிட முயற்சித்த அரசாங்கம் நேரடியாக தேசிய சேமிப்பு வங்கியின் பணத்தை கொள்ளையிட முயற்சித்துடன் அது தெரியவந்ததால், அந்த முயற்சியை கைவிட்டது.

ஏற்கனவே இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மின்சார சபை, போக்குவரத்துச் சபை, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனங்கள் பல மில்லியன் ரூபாய்களை இழந்துள்ளன.

நாட்டில் கையிருப்பில் இருந்த 90 வீதமான தங்கமும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் இயலாமையினால் தவறான முகாமைத்துவம் ஆகியவற்றிற்கு மக்கள் இழப்பீடுகளை செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

தற்போது நுகர்வோர் தாம் கொள்வனவு செய்யும் பொருள் ஒன்றுக்காக 70 வீதத்தை வரியாக செலுத்துகின்றனர். இதனால் நாட்டில் உள்ள மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் கிரியெல்ல மேலும் கூறியுள்ளார்.[/size]

http://onlineuthayan.com/News_More.php?id=337511132414785403

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது இலங்கைப் பொருளாதாரத்தில், பங்காளராக இருக்கும் புலம் பெயர் உறவுகள், ஒரு கொஞ்சக் காலத்திற்கு மட்டும், பார்வையாளராக மாறினால், எல்லாப் பிரச்சனைகளும் சுமுகமாகத் தீர்க்கப் படும்!

புறக்கணி சிறிலங்காவைத் தொடர்வதே, புத்திசாலித் தனமாகும் போல உள்ளது!

இணைப்புக்கு நன்றிகள், அகூதா!

விக்கிரமாயித்தன் கதைமாதிரி இது நீண்டுகொண்டே போகும் போல தெரியுது.

அடுத்த முறை இலங்கை காசு விழுந்தால் தயவு செய்து பதியாமல் விடுங்கோ.

இந்தத் திரி கடுமையா பழகிப்போச்சு.

[size=4]உலகம் மீண்டும் ஒரு நீண்ட பொருளாதார மந்த நிலையை எதிர்நோக்கியுள்ளது.[/size]

[size=4]- கிரேக்க நாட்டின் பாணியில் ஸ்பெயின் இன்று. அரச கடன்பத்திரங்கள் அதி கூடிய வட்டியை கொடுத்தே விற்ககூடிய நிலை [/size]

[size=4]- அடுத்து இத்தாலியும் இந்த நிலையில் உள்ளது[/size]

[size=4]இந்த நாடுகளின் பாதிப்பு சகல நாடுகளையும் பாதிக்கும், குறிப்பாக சீனா. ஏற்கனவே அதன் வளர்ச்சி வீதம் குறையத்தொடங்கியுள்ளது.[/size]

[size=4]இதன் பாதிப்பு இலங்கையையும் பாதிக்கும். எவ்வளவு ஆழமாக பாதிக்கும் என்பதில் பல முடிச்சுக்கள் உள்ளன.[/size]

[size=4] [/size]

இவற்றை ஈடு செய்யும் நோக்கில் நாம் புதிய உற்பத்தி ஒன்றை ஆரம்பிக்கும் நோக்கில் இருக்கிறோம்.......அதுதான் கஞ்சா செடி உற்பத்தி -அமைச்சர்

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் இருக்கும் நாங்கள் இந்த நேரம் இந்தப் பாதிப்புகளைக் கூட்ட உதவலாம்:

1. சிறிலங்கன் விமான சேவையைப் பயன் படுத்தாதீர்கள்

2. சிறிலங்காவுக்கு உறவுகளைப் பார்க்கத் தாராளமாகப் போய் வாருங்கள்-ஆனால் அங்கே சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க உங்கள் பணத்தைச் செலவு செய்யாதீர்கள் (போயிற்று வந்து முகநூலில் எங்கட ஆட்கள் போடும் சிறிலங்கா விசிட் படங்கள் சுற்றுலா விளம்பரங்கள் போல இருக்குது!)

3. சிறிலங்காவில் இருந்து தேயிலை கொண்டு வராதீர்கள் (கென்யா நாட்டுத் தேயிலை சிறிலங்கன் தேயிலையை விடத் திறம்!)

4. ஓலை, மூங்கில், பற்றிக் போன்ற கைவினைப் பொருட்களை வாங்கி வராதீர்கள் (இவற்றில் பாவிக்கப் படும் சாயங்கள் மனித ஆரோக்கியத்திற்கு உகந்தவையா என பரீட்சிக்கப் படாதவை!)

5. ஊருக்குக் காசு அனுப்பும் போது தேவையான அளவை மட்டும் அனுப்புங்கள். மேலதிகமான பணம் சிறிலங்காவின் திமிரைக் கூட்டத் தான் உதவும்.

6. அலுவலகத்தில், கல்லூரியில், வணக்கத்தலத்தில் யாராவது சிறிலங்காப் பயணம் போவதாக அறிந்தால் உண்மை நிலையைச் சொல்லி திட்டத்தை மாற்ற ஊக்குவியுங்கள் (மனித உரிமைப் பிரச்சாரம் எடுபடாது, வெளிநாட்டவரின் உயிருக்கு ஆபத்து என்று செய்தி ஆதாரத்தோடு சொன்னால் தான் கேட்பார்கள்! "ஒரு வெள்ளைத் தோல் உடையவனைக் கண்டால் டொலர் நோட்டு நடந்து வருவதாகத் தான் சிறிலங்காவில் பார்ப்பார்கள்-கவனம்" என்று நான் இங்கே நண்பர்களுக்குச் சொல்லியிருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நேரடியாக பணம் அனுப்புவதை விட தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்பி அங்கிருந்து நன்கொடையாக சம்பந்த பட்டவர்களுக்கு திருப்பி விட வேணும்.

டிஸ்கி:

அந்த அமைப்பு நேர்மையாக இருக்கணும்.. இங்கிட்டேல்லாம் தொண்டு நிறுவனத்திற்கு எல்லாம் ரேக்ஸ் கிடையாது.. அங்கிட்டு என்ன வென்று தெரியவில்லை..

[size=4]சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து புதிதாக கடனைப் பெறுவது தொடர்பாக, அரசாங்ம் பேச்சுக்களை நடத்தவிருக்கின்றது.[/size]

[size=4]சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து புதிதாக கடனைப் பெறுவது தொடர்பாக, எதிர்வரும் செப்டம்பர் மாதம் இலஙகை அரசாங்ம் பேச்சுக்களை நடத்தவிருக்கின்றது. [/size]

[size=4]இலங்கைக்கான 2.6 பில்லியன் டொலர் மொத்த நிதியுதவியில், கடைசிப் பங்கான 400 மில்லியன் டொலரை வழங்குவதற்கு முன்னர், இலங்கையிலுள்ள பொருளாதார நிலைமையை ஆராய்வதற்காக டொக்டர். ஜோன் நெல்ம்ஸ் தலைமையில் சர்வதேச நாணய நிதிய குழு இந்த மாத முற்பகுதியில் இலங்கை சென்றது.

தற்போதுள்ள கடனுதவியைப் ன்று புதிய கடனுதவியை சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கும் வாய்ப்பிருப்பதாக ஜோன் நெல்ம்ஸ் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அரசாங்கத்துடுன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலதிகமாக ஐநூறு மில்லியன் டொலர் கடனுதவியை சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை அரசாங்கம் கோருமென தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையிலிருந்து வோஷிங்டனுக்குத் திரும்பியதும், இலங்கையின் பொருளாதார நிலைமை தொடர்பான அறிக்கையை நெல்சன் தலைமையிலான குழுவினர் சமரப்பிப்பார்கள்.[/size]

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=12196

[size=5]சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு எச்சரிக்கை[/size]

[size=4]இலங்கையில் வெளிநாட்டு நாணய மாற்று வீதம் அதிகரித்துள்ள நிலையில் பண வீக்கம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.

வெளிநாடுகளில் திரட்டப்பட்ட மில்லியன் கணக்கான வர்த்தக வங்கிகளின் கடன்களை மத்திய வங்கி தன்னகத்தே கொண்டுள்ளது. இது உள்நாட்டின் நாணய புழக்கத்தை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் புதிதாக நாணயங்கள் அச்சிடப்படுவதும் இலங்கையில் பணத்தின் பெறுமதி வீழ்ச்சி அடைகின்றமைக்குக் காரணம் என சுட்டிக் காட்டியுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரி ஜோன் நெல்மெஸ், இது தொடர்பில் இலங்கை அவதானமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் வெளிநாடுகளின் முதலீடுகள் ஈடுபடுத்தப்படுகின்றமை வரவேற்கத்தக்க விடயம். எனினும், அவ்வாறான பாரிய நிதியினால் ஏற்படுகின்ற சிக்கல்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.[/size]

[size=4]http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=38845[/size]

[size=5]சரிந்து வரும் தேயிலை ஏற்றுமதி - [/size][size=6]Sri Lanka's tea production fell[/size]

[size=5]Sri Lanka's May tea output was 30.81 million kg compared with 33.65 million kg in the same month a year ago. Production in the first five months dropped 3.8 percent to 135.63 million kg from 140.92 million compared with the same period in 2011.[/size]

[size=5]Analysts say the earnings outlook for 2012 is unclear due to a possible dip in exports to Iran, which buys a fifth of Sri Lanka's tea directly, as banks have been reluctant to finance the trade fearing consequences from impending U.S. sanctions on Iran. [/size][size=5]Other countries in the Middle East are also major buyers, but political turmoil may limit their appetite for Sri Lankan tea, traders say. [/size]

[size=5]Tea is one of the $59 billion economy's main foreign currency earners, along with remittances, garment exports and tourism.[/size]

[size=3]http://in.reuters.com/article/2012/06/20/srilanka-tea-idINL3E8HK22E20120620[/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=5]ஒரு பில்லியன் டொலர் பெறுமதியான பிணைகளை விற்க நடவடிக்கை[/size]

[size=2]

[size=4]

Rupee60.gif[/size]

[/size]

[size=2]

[size=4]அரசாங்கத்தின் டொலர் கையிருப்பை அதிகரிப்பதற்காகவும் பெறுமதி குறைந்து செல்லும் ரூபாவை பாதுப்பதற்கு மத்திய வங்கிக்கு கூடிய வாய்ப்பு அளிக்கவும் வகை செய்யும் நோக்கில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அரச உத்தரவாதம் கொண்ட யூரோ பிணைகளை இலங்கை விற்கவுள்ளது.

இந்த விற்பனையுடன் தொடர்பான விடயங்களை கவனிப்பதற்கு நான்கு உலகமட்ட முதலீட்டு வங்கிகளை மத்திய வங்கி தெரிவு செய்துள்ளது. இலங்கை வெளியிடும் 5ஆவது அரச உத்தரவாதம் கொண்ட பிணையாக இது அமைகிறது.

டொலருக்கு எதிராக, ரூபாவின் பெறுமதிகள் சுமார் 133.60 ஆக காணப்படும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. கடந்த நவம்பரிலிருந்து 17 சதவீதமளவில் பெறுமதி வீழ்ச்சி கண்ட இலங்கை நாணயத்தை உறுதி செய்ய இந்த விற்பனையால் கிடைக்கும் டொலர்கள் பயன்படுத்தப்படலாமென வர்த்தகர்கள் கூறினர்.

இந்த விற்பனையால் கிடைக்கும் டொலர்கள் இவ்வருடம் ஒக்டோர் மாதம் முதிர்வு நிலைக்கு வரும் இலங்கையின் முதலாவது யூரோ பிணைகளை மீட்க பயன்படும் என மத்திய வங்கியும் நிதியமைச்சும் கூறியுள்ளன.

உள்நாட்டு யுத்தத்தின் கவனிக்கப்படாது விடப்பட்ட உட்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் கூடிய வட்டி கொடுக்க வேண்டிய குறுங்கால வெளிநாட்டு கடன்களை முடிவுக்கு கொண்டு வரவும் இலங்கை பிணை விற்பனையால் கிடைத்த வரும்படியை பயன்படுத்தி வருகின்றது.

அபிவிருத்தி திட்டங்களை நிதிப்படுத்த விற்கப்பட்ட கடன்பத்திரங்கள் முதிர்வு நிலைக்கு வந்திவிட்டதால் அவற்றை மீட்க 150டொலர் மில்லியன் பெறுமதியான அபிவிருத்தி பிணைகளை விற்கப்போவதாக மத்திய வங்கி கூறியது.[/size]

[/size]

[size=2]

[/size]

[size=4]ஸ்பெயின் தனது அரச பிணை பத்திரங்களை 5%.. 6%.. 7% என அதிகரித்த வட்டி வீதத்துடனேயே விற்க முடிகின்றது. [/size]

[size=4]அடுத்தது இத்தாலி, இதனுடன் யூரோ கதை முடியலாம். [/size]

[size=4]இந்த கால கட்டத்தில் கூடுதலாகவே வட்டி கொடுத்து சிங்களம தனது பத்திரங்களை விற்க முடியும். அதுவும் முதிர்ச்சியில் வரும் கடனை வேண்டி புதிய பெரிய கடனை பெற.[/size]

[size=5]'நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரம் 20 சதவீதத்தால் வீழ்ச்சி! [/size]

கடந்த காலங்களில் 37 சதவீதமாக இருந்த இலங்கையின் ஏற்றுமதி இன்று 17 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவாகும். நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரம் 20 சதவீதத்தால் குறைந்துள்ளது. இது உழைக்கும் மக்களைப் பெரிதும் பாதிக்கின்றது.

சீனா, இந்தியா போன்ற நாடுகளின் நலனுக்காக மாபெரும் பொருளாதாரத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் மஹிந்த அரசு, நாட்டு மக்களின் நலன்கருதி பொருத்தமான  முறையான பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தாதது ஏன் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பொருளாதார நிபுணருமான ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த காலங்களில் 37 சதவீதமாக இருந்த இலங்கையின் ஏற்றுமதி இன்று 17 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவாகும். நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரம் 20 சதவீதத்தால் குறைந்துள்ளது. இது உழைக்கும் மக்களைப் பெரிதும் பாதிக்கின்றது.

[size=4]இலங்கையின் பொருளாதாரம் பாதாளத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பதை மக்கள் நன்கு அறிந்துள்ளனர். எல்லோரையும் சில நேரத்தில் மட்டுமே முட்டாள்களாக்கலாம். எல்லோரையும் எல்லா நேரத்திலும் முட்டாள்களாக்க முடியாது என்பதை மஹிந்த அரசு புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

சீனா, இந்தியா முதலான நாடுகளின் நலன்கருதி இலங்கையில் பாரிய அளவிலான அபிவிருத்தித் திட்டங்களை மஹிந்த அரசு முன்னெடுக்கின்றது. அதற்காகப் பெருந்தொகையான பணத்தையும் செலவு செய்கின்றது. ஆனால், நாட்டிலுள்ள அப்பாவி மக்களின் நலனுக்காக அரசு ஒன்றுமே செய்வதில்லை.

ஏனைய உலக நாடுகளைப்போல் நாம் நினைத்தபொழுதே எமது பொருளாதாரக் கொள்கைகளை மாற்றியமைக்க முடியாது. ஏனெனில், அவர்களின் தேசிய பொருளாதாரம் மிகப் பரந்தளவிலானதாகும். அவர்களைப் போல் நாம் செயற்பட்டால் பொருளாதாரம் பின்நோக்கியே பயணிக்கும். எனவே, மஹிந்த அரசு இவற்றைக் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பொருளாதார நிபுணருமான ஹர்ஷ டி சில்வா.[/size]

http://www.pongutham...ac-98988067a2b7

Edited by akootha

[size=5]'நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரம் 20 சதவீதத்தால் வீழ்ச்சி! [/size]

[size=4]இலங்கையின் பொருளாதாரம் பாதாளத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பதை மக்கள் நன்கு அறிந்துள்ளனர். எல்லோரையும் சில நேரத்தில் மட்டுமே முட்டாள்களாக்கலாம். எல்லோரையும் எல்லா நேரத்திலும் முட்டாள்களாக்க முடியாது என்பதை மஹிந்த அரசு புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.[/size]

http://www.pongutham...ac-98988067a2b7

அப்போ இப்ப என்ன சொல்ல வாறார். அந்தப்பக்கமும் சிலபேர் வெளிப்பான ஆக்கள் இருக்கினமாமோ. அப்ப ஏன் அவைக்கு அந்த பேர் வந்தது? டி.எஸ், பண்டாராநாயக்கா, சிறிமா, ராசபக்சா......... எப்ப தெரிய வரப்போகுது?

[size=5]இலங்கை மத்திய வங்கியின் உத்தரவை அடுத்து, அமெரிக்க டொலரை விற்பதை வணிக வங்கிகள் நிறுத்தின[/size]

[size=4]இலங்கை மத்திய வங்கியின் உத்தரவை அடுத்து, இலங்கையின் வணிக வங்கிகள், அமெரிக்க டொலரிற்கான சந்தைப் பெறுமதியை வெளியிடுவதை நிறுத்தின. [/size]

[size=4]இலங்கை ரூபாவின் பெறுமதி சாதனை அளவாக குறைந்துள்ள நிலையில், அமெரிக்க டொலருக்கான பெறுமதியை குறிப்பிடவேண்டாமென இலங்கை மத்திய வங்கி உத்தரவிட்டது.

இதன் காரணமாக நேற்று முதல் அமெரிக்க டொலருக்கான இலங்கை ரூபாவின் பெறுமதியை இலங்கை வங்கிகள் வெளியிடவில்லை.

நேற்றைய தினம் டொலர் ஒன்று 132 ரூபா 90 சதம் என்ற அளவை அடைந்ததைத் தொடர்ந்து, 133 ரூபா என்ற நிலைக்கு மேல் டொலரின் பெறுமதியை குறிப்பிடவேண்டாமென இலங்கை மத்திய வங்கி கேட்டுக் கொண்டது.

இன்றைய தினம், காலையில் டொலர் விற்பனை இடம்பெறவில்லை.

இலங்கை ரூபாவின் பெறுமதி சுமார் 133 ரூபா 70 சதம் என்ற நிலையில் உள்ளதாக வங்கிகள் தெரிவித்தன.[/size]

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=12288

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=5]சிறிலங்கா நாணயப் பெறுமதி இன்று வரலாறு காணாத வீழ்ச்சி[/size]

[size=3]

[size=4]அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு இன்று வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

இன்று அந்நிய செலவாணி பரிமாற்றங்களின் போது அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு 134 ரூபாவாக வீழ்ச்சியடைந்தது.

SL-rupees.jpg[/size]

[/size][size=3]

[size=4]கடந்த 12ம் நாள் டொலருக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு 133.60 ரூபாவாக விற்கப்பட்டதே ஆகக்குறைந்த நாணய மதிப்பாக இருந்தது.

இந்தநிலையில் சிறிலங்கா நாணயப் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்து, டொலர் ஒன்று 134 ரூபாவாக விற்கப்பட்டது.

கடந்த ஆண்டு நொவெம்பர் மாதத்துக்குப் பின்னர் சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 18 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.[/size][/size][size=3]

[size=4]http://www.pathivu.com/news/21403/57//d,article_full.aspx[/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.