Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிக்கலோ மக்கியவேல்லியில் ஏறி கோவிந்தனால் இறங்கவெளிக்கிட்டதால்...

Featured Replies

வாசிப்பு என்பது எழுத்தாளனின் திறமைக்கப்பால் வாசகனின் மனநிலையிலும் தங்கியுள்ளது. அதுவும், வாசகன் ஓரு நூலினை வாசிப்பதற்கு முன்னதாக என்ன நூலினை வாசித்தான், நூல் வாசித்துக் கொண்டிருக்கையில் வாசகனின் வாழ்வின் நகர்ச்சி எவ்வாறு இருந்தது எனப் பல விடயங்கள் ஒரு வாசிப்பினை நிர்ணயிக்கின்றன. எதிர்பாரா விதமாக, நிக்கலோ மக்கியவேல்லியின் 'த பிறின்ஸ்' நூலினை வாசித்து முடித்த கையோடு கோவிந்தனின் புதியதோர் உலகம் நாவலினை வாசிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. ஒன்றோடு மற்றையது முற்று முழுதாக முரண்படும் இவ்விரண்டு நூல்களோடும் எனக்கு உடன்பாடு உணரப்பட்டபோது, சில நாட்கள் அது பற்றிச் சிந்திக்கத்தோன்றியது. அவ்வாறு சிந்தித்தபோது ஒரு பதிவிடத்தோன்றியதால் இப்பதிவு.

இந்த மாபெரும் நூல்கள் இரண்டையும் சேர்த்து ஒற்றைப் பதிவில் விமர்சனம் எழுதும் முட்டாள்வேலையை நான் செய்யப்போவதில்லை. அவற்றின் பாதிப்பில் இருந்து என்னுடைய ஒரு இரைமீட்பாக மட்டும் இப்பதிவினை அமைத்துக்கொள்ளுகிறேன்.

மக்கியவெலியின் நூல் பதினாறாம் நூற்றாண்டையது. கோவிந்தன் இருபதாம் நூற்றாண்டின் கடைக்கூற்றின் போராளி. மக்கியவேல்லியினுடையது உலகின் முதன்முதலாவது றியால்பொலிற்றிக் நூல் என வர்ணிக்கப்படுவது. கோவிந்தனுடையது றியால்பொலிற்றிக்கை மறுதலிக்கும், அதற்கு நேரெதிராகச் சிந்தாந்தங்களைக் கவ்விப்பிடித்தபடி, ஒரு இலட்சிய மனிதத்தைக் கற்பனை பண்ணி, அம்மனிதத்தை உலகில் வேரூன்றச்செய்துவிடலாம் என்ற முனைப்பில் மூச்சிரைக்க எழுதப்பட்டது. முன்னையது வழிமொழியும் பாதையினை நிராகரித்துப் பேசுவது பின்னையது. இன்னமும் சொல்வதானால் முன்னையதன் மறுதலிப்பே பின்னையதன் பிறப்பு. அப்பிடியிருக்க, இரண்டையும் எனக்குக் கொண்டாடத் தோன்து எப்படி?

முதலில் மக்கியவலி பற்றிக் கூறிவிட்டுக் கோவிந்தனிற்குப் போகலாம்.

'மக்கள் எப்போதும் நிலமை சாதகமாய் இருக்கும் வரை தலைவனிற்குச் சாதமாய் இருப்பார்கள் பாதகமாய்ப்போககையில் முதுகிலும் குத்துவார்கள். எனவே ஒரு தலைவனிற்கு அடிப்படையில் மக்களை ஏய்க்கத் தெரியவேண்டும். அலெக்சாந்தர் என்றுமே சொல்வதைச் செய்வததில்லை. சீசர் என்றுமே செய்வதைச் சொல்வதில்லை என்பது இத்தாலிய பழமொழி. எனவே ஒரு தலைவனிற்கு மக்களை ஏய்க்கத்; தெரியவேணடும்;.' .

'ஆள்வதற்கு ஆசைப்படும் ஒருவன் போரை மட்டுமே தனது கற்றலிற்கான தெரிவாக்கிக் கொள்ளவேண்டும். போரின் ஒழுங்குகளையும் தன்மைகளையுமே அவன் சதா சிந்திக்கவேண்டும். போரொன்றே ஆள ஆசைப்படுபவனிற்கான ஒரே ஒரு கலைவடிவம். இளவரசனாய்ப்பிறந்தவன் அரசனாய் வாழ்வதும் குடியானவன் தலைவனாய் ஆவதும் சண்டையிலேயே தங்கியுள்ளது. போhக்குணம் இழத்தலே அதிகார இழப்பின் அடிப்படை. ஆயுதம் அற்றறவன் அப்புறப்படுத்தப்படுவான். இராணுவ சிந்தனையற்றிருப்பது ஆட்சியிழப்பதற்கான அடிப்படை, ஏனெனில் ஆயததாரிக்கும் நிராயுதபாணிக்கும் இடையில் சமனானது என்று ஏதுமில்லை. நிராயுதபாணியால் ஆயுததாரிகள் நடுவில் பாதுகாப்பினை உணர முடியாது. ஆயுதமற்ற தலைவன் ஆயுததாரிக் குடிகள் தனக்குக் கட்டுப்படும் என்று கனவுகாணக்கூடாது. போர்க்கலை தெரியாத ஒரு தலைவனால் தனது இராணுவத்தின் மரியாதையினைப் பெறவும் முடியாது தனது இராணுவத்தில் தங்கியிருக்கவும் முடியாது. சண்டைக்காலத்தைக் காட்டிலும் அமைதிக்காலத்தில் ஒரு தலைவன் 'தான் போரிற்கு அடிமைப்பட்ட ஒருவன்' என்று தன்னைத் தானே உணரரச் செய்யவேண்டும். செயல்கள் மூலமும் கற்றல் மூலமும் இராணுவச்சிந்தனை அவனுள் சர்வமும் வியாபிக்கவேண்டும்.'

'ஒருவன் எவ்வாறு வாழ்கிறான் என்பது ஒருவன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதில் இருந்து பலதூரம் வேறுபடுவது. குறித்த சந்தர்ப்பத்தில் எது செய்யப்படவேண்டும் என்பதற்குப் பதிலாக செய்யபடவேண்டியன என்பவற்றை அவை செய்யப்படவேண்டியன என்பதற்காய்ச் செய்வது அழிவிற்கான பாதை. ஒரு இலட்சிய தலைவனிற்கு இருக்கவேண்டிய பண்புகள் என்று முடிவின்றி விரியும் 'நற்குணங்களை' மக்கள் பட்டியலிடுவர். ஆனால் அக்குணங்கள் மனித இயல்பிற்குப் புறம்பானவை. உலகில், கெட்டதாய்த் தெரியும் பல விடயங்கள் தொடரப்படுகையி;ல் நன்மை பிறப்பதும். நல்லனவாய்த் தெரிவன பல தொடரப்படுகையில் தீமை பிறப்பதற்கும் உதாரணங்கள் ஏராளம். எனவே நல்லன கெட்டன என்பன சார்ந்தும் புனிதங்கள் சார்ந்தும் விழிப்பாய் இரு. முற்றுமுழுதாக நல்லவனாக மனசாட்சிப்படி உத்தமபுருசனாக வாழத் தலைப்படும் ஒரு மனிதனின் அகால அழிவு தவிர்க்க முடியாதது என்பது மடடுமன்றி, தனது தவிர்க்கமுடியாது அழிவின்போது தன்னை அழித்த பல காரணிகள் மத்தியில் அதர்மமும் தீயனவும் அட்டணக்கால்போட்டு அமர்ந்திருப்பதையே அவன் காண்பதும் தவிர்க்கமுடியாதது. எனவே அதிகாரத்தைத் தக்கவைக்க விரும்பும் ஒருவனிற்கு கெடுதல் செய்யத் தெரிந்திருப்பது இன்றியமையாதது. ஒரு தலைவன் அவனது குடிகளால் விரும்பப்படுவதைக் காட்டிலும் தலைவன் மீதான குடிகளின் பயம் ஆதாயமானது. ஒரு தலைவன் தான் குரூரத்தைக் கட்டவிழ்க்கும் வல்iமை பெற்றவன் என்பதனை அவனது மக்கள் அறியச் செய்யவேண்டும்.'

'எக்காரணம் கொண்டும் ஒரு தலைவன் தான் ஆள விரும்பம் கூட்டத்தால் வெறுக்கப்படவோ இகழப்படவோ இடமளித்தல் ஆகாது. மக்கள் வெறுக்காதவரை இகழாதவரை மற்றையன பற்றி அதிகம் கவலைப்படத்தேவையில்லை. குடிகளால் வெறுக்கப்படாதிருப்பதற்கு என்ன செய்யவேண்டும்? அப்பன்கள் செத்துப்போனால் அதனை மறந்துபோவதற்கு மக்கள் தயாராய் இருப்பார்கள். ஆனால் முதுசம் பறிபோயின் கொலைவெறியில் பழிவாங்கத் காத்திருப்பர். தேவை ஏற்படின் கொலை அவசியம். ஆனால் அவர்களின் மண்ணையும் பெண்ணையும் பொன்னையும் எக்காரணம் கொண்டும் தொட்டுவிடாதே. வெளிப்படைக்கு உன்னை மகத்தானவனாக, வாழ்வைக்காட்டிலும் பெரியவனாக, வீரனாக, ஆளுமை மிக்கவனாகப் பெருந்தலைவனாக இரக்கமானவனாகக் காட்டிக்கொள். ஆனால், உன் மக்களுடனான பிரத்தியேக சந்திப்புக்களில் நீ முடிவெடுத்தால் அது மாற்றப்படமுடியாதாக, உன்னை எவரும் ஏய்க்கவோ ஏமாற்றவோ முடியாததாக, உனது முதுகிற்குப் பின்னால் எதுவும் அசையமுடியாதாக அவர்கள் திடமாக நம்ப வை. உனக்கு எதிராகச் சதி செய்வதற்கான எண்ணம் எழுவதற்கே சதிகாரர் பயம்படும் வகை பார்த்துக்கொள். ஒருவனை அடித்தால் அவன் உன்னைத் திருப்பித்தாக்கும் சாத்தியத்தை அடியோடு அழித்துவிடவேண்டும், வெளிப்படைக்கு உன்னைத் தாராளவாத இடதுசாரிப்போக்குடையவனாய் காட்டிக்கொள். ஆனால் நிஜத்தில் அப்படி வாழ்ந்துவிடாதே. வள்ளலாக மக்கள் உன்னைக் காணச் செய், ஆனால் அதற்காக உனது கஜானாவைக் காலி செய்து விடாது. நீ கொடுக்கும் கொடைகளை சுரண்டிக் கொடு. அடியாள் மற்றும் ஒட்டுக்குழுக்களை நம்பிப் படை கட்டாதே. உனக்கான சுய இராணுவம் கட்டிக்கொள்'. உன்னைத் தலைவனாய் மற்றையவர்கள் ஏற்கவேண்டுமென ஆசைப்படின், அவர்கள் உன்னைத் தலைவனாய் ஏற்க முன்னரே நீ தலைவனாய் நடந்துகொள்'

'ஒரு தலைவன் கோட்டைகட்டி, மக்களில் இருந்து தனித்துக் கோட்டைக்குள் வாழ்வது பாதுகாப்பானது எப்போதெனின், மக்கள் அத்தலைவனைக் காப்பார்கள் என்ற நிலை இருக்கும் வரையே. மக்களால் வெறுக்கப்படும் தலைவனிற்கு எந்தக் கோட்டையும் பலமுடையதாகமுடியாது. மக்கள் விரும்பும் தலைவன் கோட்டைக்குள் இருந்தால் மக்களும் சேர்ந்து கோட்டையினை கோட்டையிலும் அதிகமாய்த் தலைவனிற்குப் பாதுகாப்பானாதாக்குவார்கள். மக்கள் வெறுத்தால், எந்தக்கோட்டையாலும் எந்தத் தலைனயும் காப்பாற்றமுடியாது'

திட்டுத்திட்டாய் மேற்படி விடயங்களைக் கூறும்போது ஒருவேளை ஒரு சைக்கோவின் டயரியினை வாசிப்பது போன்று மக்கியவேல்லியின் அறிவுரைகள் தோன்றலாம். ஆனால், அவர் எழுதிய ஒழுங்கில், அவர் எழுதிய பின்னணியில் அவரின் பரிந்துரைகள் வாசிக்கப்படும்போதும், குறிப்பாக விடயங்களை நேரடியாக மட்டும் அர்த்தப்படுத்தாது சமாந்தரங்கள் உணரப்படுகையில் அதிகாரம் பற்றிய புரிதல் மெருகேறும். மேலும் முக்கியமாக, போர் என்பதை குதிரை வீரரும் வாழும் அல்லது அணுகுண்டும் பிளேனுமாக மட்டும் கற்பனை பண்ணாது, தலைவன் குடி என்பதை நாடுகளாக றாச்சியங்களாக மட்டும் கற்பனை பண்ணாது, சமாந்தரங்கள் உணரப்பட்டு அலுவலக பொலிற்றிக்சில் இருந்து அடுப்பங்கரைப் பொலிற்றிக்ஸ் வரை, அதிகாரத்தைப் பெறுதல் மற்றும் தக்கவைத்தல் என்பதற்கான பொக்கிசம் இந்நூல். றியால் பொலிற்றிக்ஸ் என்பதே நடைமுறைச் சாத்தியம் பற்றியது. அதாவது இசங்கள், கொள்கைகள் என்று வரிந்து கட்டி வாழ்ந்து சாகாது வாழ்வதற்கு, அதுவும் அதிகாரங்களோடு வாழ்வதற்கு என்ன சிந்தனை அவசியம் என்பது நிறைந்து கிடப்பது இந்நூல். போனபாட் நெப்போலியன் தொட்டு ஹிட்லர் ஊடாக இந்திராகாந்தி வழியாக இன்றைய சின்னப்பொடியள் வரை வெளியில் இகழ்ந்து மறைவில் மனப்பாடம் பண்ணிப் பாவிக்கும் சூத்திரங்களின் பெட்டகம் இந்நூல்.

இவ்வாறு சொல்வதனால் மக்கியவலியைப் பூசிக்கிறேன் என்று அர்த்தம் இல்லை. மக்கியவலி கூறும் அனைத்தோடும் உடன்பாடு என்றோ அவற்றை கடைப்பிடிக்கமுடியும் என்பதோ இல்லை. ஆனால் மேற்கில் alpha male கள் மத்தியில் அதிகாரப்போட்டிகளைப் புரிந்து கொள்வதற்கேனும் இந்நூல் நிச்சயம் உதவும்.

இனி கோவிந்தனிடம் வந்தால் றியால்பொலிற்றிக்சிற்கு நேரெதிரானது கோவிந்தனின் மனம். புனிதம், கொள்கை, இலட்சியம், உன்னதம், உயர்வு என்று மனிதனின் இயல்பு இடம் தர மறுக்கின்ற நல்லகுணங்களிற்காக வக்காலத்து வாங்குவது நூல். வெறும் வக்காலதது மட்டும் அன்றி, அந்த வக்காலத்துக்களிற்காக உழன்றியில் தொங்கித் தோலுரிக்கப்பட்டுச் சித்திரவதை அனுபவித்து நொண்டியபடியும் அந்த சங்கரிலா (தூரமான மறைவான பூலோகத்துச் சுவர்க்கம், அல்லது கனவுலகம்) வினைக் கண்டடைந்து விடலாம் என்று முனைந்தவர்களின் கதை. மக்கியவெலி எவ்வளவிற்கெவ்வளவு றியால்பொலிற்றிக்கில் எக்ஸ்றீம் என்று சொல்லலாமோ அவ்வளவிற்கவ்வளவு கோவிந்தனை அநியாயத்திற்கு நல்லர் என்று சொல்லாம்.

கோவிந்தனின் நூலை வாசிக்கத்தொடங்கும் முன்னர் எனது கவனத்தை ஈர்த்த முதலாவது விடயம், கோவிந்தனிற்கு எனது அம்மாவின் வயது. போராளிகளைப் பொடியள் என்று சொல்லும் கலாச்சாரத்தில் வளர்ந்த எனக்கு, என் அம்மாவின் வயதுப்போராளி என்பது முதலில் ஏனோ ஒரு புதுக்கவனத்தைப் பெற்றது. எனது அம்மாவிற்குக் கல்கியும் சாண்டில்யனும் பிடிக்கும். அவற்றைத் தான் எனக்கும் அவவால் அறிமுகப்படுத்த முடிந்தது. ஆனால் கோவிந்தனின் ஆழம் நூலின் முதல் ஒற்றையில் இருந்தே வெளிப்பட ஆரம்பிக்கிறது. குறியீடு படிமம் என்பதெல்லாம் கோவிந்தன் பிச்சுதறியிருக்கிறார். குறிப்பாக மூன்று உதாரணங்களைக் குறிப்பிட்டுவிட்டுச் செல்கிறேன்.

இந்தியாவிற்குப் பயிற்சிக்குச் செல்லும் சங்கர் கரையிறங்கி நடக்கையில் கைநழுவவிட்ட, சங்கரின் காதலி நிர்மலா சங்கரின் நண்பன் நாதன் மூலம் கொடுத்தனுப்பிய, ஐம்பொன் காப்பு. இந்தக்காப்பு நாவலில் ஒரு சில நொடிகள் நிலைத்துப் போயினும் அது செய்து முடித்த வேலை அற்புதம். நிர்க்கதியாய் நிற்கும் ஒரு மக்கள் கூட்டத்திற்கு இல்லாத பாதுகாப்பை ஏற்படுத்துவதற்கான உத்தி தேடி இயக்கத்திற்குச் செல்லும் போராளிக்குப் பாதுகாப்பாக அவன் காதலி கொடுத்த ஐம்பொன் காப்பது. சங்கர் தன்னோடு எடுத்துவர முடியாத அவனது வீடு, பழகிய நிலம்., அதன் கலாச்சாரம், அன்பான மக்கள், அந்த மக்களை நினைத்த மாத்திரத்தில் ஏற்படும் பாதுகாப்புணர்வு, அம்மக்களின்; பின்னிப் பிணைந்த வாழ்வியற் கோலங்கள், பெறுமதிகள் என்று எத்தனையோ விடயங்களை அந்தக்காப்பு ஒரு மந்திரக்குடவை போன்று அவனுடன் எடுத்துச் செல்லுகின்றது. தூக்கியெறிந்து குலக்கிக்குத்தும் படகிற்குள் மனப்பலத்திற்காய்ப் பிடித்துக்கொள்வதற்கான ஒரு பிடியாகச்; சங்கரின் பொக்கற்றுக்குள் இருந்து அவனது தொடையில் அந்தரங்கமாகத் துருத்தியபடி அந்தக் காப்புக் கிடக்கிறது. அன்றைய தமிழ் சமூகத்தில் காதலி தருகின்ற மனபலம் கூட அந்தரங்கமானதாகத் தான் இருந்திருக்க முடியும் என்கையில் அவள் கொடுத்த காப்பின் பலம் வேறெப்படி இருக்கமுடியும். கரையிறங்கிய சங்கர் காப்பைத் தொலைத்து விட்டான் என்கையில் வீட்டையே தொலைத்தது போல், சின்னவயதில் ஹொஸ்ற்றலிற்கு அனுப்பட்ட குழந்தை போல வாசகரின் மனங்கள் ஒரு கணம் கரைந்து போகும். ஆனால், ஹொஸ்ற்றலிற்கு அனுப்பிய குழந்தையின் ஹோம்சிக் எல்லாம் எந்தமூலை என்ற அளவிற்கு நாவலின் போக்கில் நடந்தேறி ஒரு அநாதை போல் ஈழத்தமிழ் வாசகனை உணரச் செய்யும் சம்பவங்களிற்குக் கட்டியம் கூறுவதாயும் அக்காப்பின் இழப்பு இருந்தது என்பது நாவலின் நகர்ச்சியில் உணரப்படுகையில் கோவிந்தன் நேரே நிற்பின் கட்டித்தழுவாது இருக்கமுடியாது என்ற அளவிற்குபு; புல்லரித்துப் போகிறது வாசக மனங்கள். அபாரமாக அந்தக் காப்பு வேலைசெய்கிறது.

இது போன்றே தோட்டத்தின் மத்தியில் ஒரு குடிசைக்குள் அவர்களின் பிள்ளைகள் மறந்துபோன வயதான பெற்றோரின் இருப்பு. அவர்களோடு நாதனின் வளர்ச்சி. அக்குடிசைக்குள் இருக்கும் N;தன் கூடு மற்றும் அத்தேன் கூட்டின்; வளர்ச்சி. நாதன் தேனி என்று ஒரு சமாந்தரம். குளவி கூடு கட்டினால் மருமகள் குழந்தை உற்றிருக்கிறாள் என்ற மூதாட்டியின் பேச்சு. தேன் கூட்டின் வடிவம் சார்ந்து பிறக்க இருப்பது ஆணா பெண்ணா என்ற ஊகிப்பு. அதற்குச் சமாந்தரமாக இயக்கங்களின் கூடு கட்டல். இயக்கங்களின் கூடு கட்டலால் தமிழீழம் பிரசவிக்கும் என்ற எதிர்பார்ப்பு. இயக்கங்களின் வளாச்சிப்பாதையின் வடிவம் சார்ந்த ஊகிப்புக்கள். ஒட்டுமொத்தமாகத் தேன் இனிமையானது என்றும் தேனீக்களின் சுறுசுறுப்பு போற்றப்படுவதாயும் வெளிப்பார்வைக்குத் தேனீhக்கள் அதிகார ஏற்றத் தாழ்வுகள் அற்ற கழகம் போன்று காட்சி அளிப்பினும், தேனீக்களிற்குள் இராணித்தேனீ வேலைக்காரத் தேனீ என்று உண்டு. இனிப்பான தேனிற்காக உழைக்கும் தேனீக்களிற்குக் கடுக்க வைக்கும் வகை கொட்டத் தெரியும். தேனீக்களுள்ளும் விசமிருக்கும். என்னதான் தேன் இனிதாயினும் தேன் கூட்டை வீட்டிற்குள் வைத்திருப்பதில் ஆபத்துக்கள் உள்ளன. பின்னிப் பெடலெடுத்திட்டான்யா என்ற வர்ணணனை அப்படியே பொருந்தக் கூடிய எழுத்து.

மத்திய குழு உறுப்பினர்கள் உழன்றியில் தலைகீழாய்ப் போராளிகளைக் கட்டித் தூக்கி சித்திரவதை செய்யும் காட்சியாகட்டும். தங்கைகள் பெயரைக் கேட்டபோது அழுதுவடிக்கும் மனவுறுதிக்காரன் பூபாலன் ஆகட்டும், புதியதோhர் உலகம் வாசகர் மண்டையைக் கிளறிக் கிறங்கச் செய்து மனமறிந்த அத்தனை உணர்வையும் மனதுள் உண்டு பண்ணி நகர்ந்து செல்லும் ஒரு அற்புத படைப்பு.

ஆனால், கோவிந்தன் காண ஆசைப்பட்ட உலகைக் கோவிந்தனாலோ அவரின் நண்பர்களாலோ இற்றைவரை காணமுடியவில்லை. மக்கியவலி சொன்னதைப்போல, மனித இயல்பு இடங்கொடாத நல்ல குணங்கள் அனைத்தினதும் ஒட்டுமொத்த கூட்டாக ஒரு தலைமை சாத்தியம் இல்லை.

ஆனால், மக்கியவலி சொல்லும் வழிமுறைகள் வெல்ல முடிந்தவர்களிற்கு இனிய வாழ்வைப் பெற்றுக்கொடுக்கலாமே அன்றி தோற்பவர்கள் வீதியோரம் விடப்படவே வழி சமைக்கும். வெல்பவர்கள் அமைக்கும் ஆட்சி வெல்பவர்க்கானதாய் மட்டுமே இருக்கும்.

இந்த இடத்தில் தான் கோவிந்தனும் மக்கியவலியும் இணையவேண்டிய அவசியம் பேசப்படக்கூடியது. அதாவது, கோவிந்தன் மனநிலையால் என்றுமே வெல்லவோ தலைவனாய் நிலைக்கவோ முடியாது. தலைவன் ஆவதற்கு மக்கியவலி பக்கம் செவிகொடுத்தே ஆகவேண்டும். ஆனால் தலைவனாபவர்கள் கோவிந்தன் மனநிலையிலும் செயற்படவேண்டும். அதாவது மக்கியவலியின் பரிந்துரைகள் ஒருவன் தன்னைச் சார்ந்து தனது அதிகாரத்தைத் தக்கவைக்கக் கூடியவனாக இருப்பது சார்ந்து முன்மொழியப்படினும், ஒருவன் அதுவும் மக்கியவலியின் பரிந்துரைகள் படி வெல்லக் கூடிய ஒருவன், 'தான்' என்பதை வெறுமனே தான் ஒருவன் என்றில்லாமல் தோற்றுக்கொண்டிருக்கும் தனது மக்கள் குழமமாக வரையறை செய்யின், அப்புள்ளியில் கோவிந்தனிற்கும் மக்கியவலிக்குமான ஒரு இணைவு ஏற்படும். ஆனால் அந்த இணைவு கோவிந்தனோ மக்கியவலியோ ஏற்றுக்கொள்ள மறுக்கும் இருவரிற்கும் உடன்பாடற்ற ஒரு வடிவமாகவே இருக்கும். ஆனால் தோற்றுக்கொண்டு இருக்கும் மக்களைப்பொறுத்தவரை, அவர்களும் வெற்றியைச் சற்றேனும் சுவைக்கவேண்டுமெனின், அத்தகைய ஒரு தலைவன் தான் அவர்களிற்கு அவசியம்.

இந்தப் பதிவை எங்கள் போராட்டம் சாhந்;து இன்னமும் சற்று விரிக்க முடியும் என்ற போதும் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எங்களுக்கு சுழியன் தலைவனாக வேண்டும்.......உள்ளத்தில் புலிக்கொடியும்......வெளியில் சிங்ககொடியும் பிடித்து உரிமையை பெற வேண்டும் என்று சொல்லுறீயள்

  • தொடங்கியவர்

இப்ப எங்களுக்கு சுழியன் தலைவனாக வேண்டும்.......உள்ளத்தில் புலிக்கொடியும்......வெளியில் சிங்ககொடியும் பிடித்து உரிமையை பெற வேண்டும் என்று சொல்லுறீயள்

புத்தன் மற்றும் சுபேஸ் அபராஜிதனிற்கு நன்றிகள்.

புத்தன், இல்லை நீங்கள் சொல்வதை நான் அறவே சொல்லவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நான் மாக்கிய வல்லியை வாசித்ததில்லை ஓரளவு கேள்விப்பட்டிருக்கிறேன். கோவிந்தனின் புதியதோர் உலகத்தைப் பற்றித் தெரியாது. ஆனால் இவ்விரண்டு நூல்களையும் ஓப்பீட்டாய்வு செய்துள்ள கட்டுரையாளர் ஓர் நுனிப்புல் மேய்ந்த அறிவையாவது இந்நூல்கள் பற்றி வாசகர்களுக்குக் கொடுத்துள்ளமை பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு நூல்களைப் பற்றியும் மிகவும் நுண்ணிய பார்வையைத் தந்த இன்னுமொருவனுக்கு நன்றிகள். இரண்டையும் மீள்வாசிக்கவேண்டும்.

'புதியதோர் உலகம்' வாசித்திருக்கிறேன். மக்கியவெல்லியை கேள்விப்பட்டதில்லை. நீங்கல் கூற வந்த விடயம் புரிகிறது. இரு புத்தகங்களையும் நீண்ட இடைவெளியில் வாசித்திருந்தால், இதே மாதிரி ஒப்பிட்டு எழுதும் சிந்தனை வந்திருக்குமோ தெரியாது.

சூப்பர் மாமா :). நல்ல கடைந்த வாசிப்பும் பகிர்வும் :) நீங்கள் உங்கள் வாசிப்வனுவத்தை தொடர்ந்து பகிர வேண்டும்:)

நாம் சிங்கள முதலாளித்துவ அரசின் அராஜகங்களுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்தால் போதாது. தமிழீழ விடுதலை அமைப்பிலும் உள்நுழைந்து வரும் அராஜகப் போக்குகளுக்கு எதிராகவும் போராட வேண்டும். அராஜகமும் ஒடுக்குமுறையும் எந்த ரூபத்தில் வந்தாலும் அதற்கு எதிராகப் போராட வேண்டும். தன்னளவில் இந்தக் கயமைகளை வைத்துள்ள எந்த அமைப்பாலும் தமிழீழ மக்களுக்கு விமோசனத்தை வழங்க முடியாது (பக்கம் : 243)

இந்த கருத்தியலை முற்றாக நம்பினோம் ,இன்னமும் நம்புகின்றோம் .

மிகவும் ரசித்து உங்களது ஒப்பீட்டு விமர்சனத்தை வாசித்தேன் .மிக உண்மையும் கூட.

85 களில் டெல்கியில் தனிமையில் இருந்து வாசித்தேன் .அதன்பின் சில மாதங்களில் உமாவை சந்திக்கும் போது என் மனம் இருந்தநிலையை சொல்லவேமுடியாது .அதுவரை அவரில் வைத்திருந்த மதிப்பு அத்தனையும் உடைந்து சினிமாக்களில் வரும் வெள்ளை வேட்டி அரசியல்வாதியின் முகமே அதில் தெரியும் .

நட்புடன்....

நல்லதொரு ஒப்பிடு....

ஆனால் உடன்பட முடியுமா எனத் தெரியவில்லை....

சிந்திப்பதற்கு சிறிது காலம் வேண்டும்....

ஆனாலும் வாழ்த்துக்கள்.....

  • கருத்துக்கள உறவுகள்

மாக்சீசம் என்டால் என்ன? தேசியம் என்டால் என்ன? யாராவது சரியான பதிலை எழுதுங்கள்?...மக்கியவெல்லியை நான் வாசித்ததில்லை...புதிய பாதை நூலில் எழுதியிருக்கின்றதை ஏன் அவர்களாலேயே புளட்டில் இருந்து பிரிந்த பிறகாவது செயற்படுத்த முடியாமல் போய் விட்டது?

புதிய பாதையில் வரும் காலாதரனா தற்போது கனடாவில் வானொலி நடத்துவதாக அர்ஜீன் அண்ணா எழுதுறவர் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

<p>

மாக்சீசம் என்டால் என்ன? தேசியம் என்டால் என்ன? யாராவது சரியான பதிலை எழுதுங்கள்?

மார்க்சியத்தை தேடி நீங்கள்தான் கற்றுக்கொள்ளவேண்டும்....அது ஒரு கடல்...யாராலும் சரியாக சொல்லி விளங்கப்படுத்தமுடியுமா என்றுதெரியவில்லை..அதைப்பற்றி நீங்களே நிறையத்தேடிப் படியுங்கள்...தெளிவடைவீர்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

<p>

மார்க்சியத்தை தேடி நீங்கள்தான் கற்றுக்கொள்ளவேண்டும்....அது ஒரு கடல்...யாராலும் சரியாக சொல்லி விளங்கப்படுத்தமுடியுமா என்றுதெரியவில்லை..அதைப்பற்றி நீங்களே நிறையத்தேடிப் படியுங்கள்...தெளிவடைவீர்கள்...

கடலின் ஆழத்தை கூட கண்டு பிடிச்சிடலாம் ஆனால் மாக்சீசத்தின் ஆழத்தை கண்டுபிடிக்க முடியாது என்று சொல்லுங்கோ......எனக்கு ஒரு பாட்டுதான் ஞாபகம் வருகின்றது...."வாழ் நாள் பூரா போததே வள்ளல் நபியின்(மார்க்ஸின்) புகழ் பாட"

  • கருத்துக்கள உறவுகள்

மாக்சீசம் என்டால் என்ன? தேசியம் என்டால் என்ன? யாராவது சரியான பதிலை எழுதுங்கள்?...மக்கியவெல்லியை நான் வாசித்ததில்லை...புதிய பாதை நூலில் எழுதியிருக்கின்றதை ஏன் அவர்களாலேயே புளட்டில் இருந்து பிரிந்த பிறகாவது செயற்படுத்த முடியாமல் போய் விட்டது?

புதிய பாதையில் வரும் காலாதரனா தற்போது கனடாவில் வானொலி நடத்துவதாக அர்ஜீன் அண்ணா எழுதுறவர் :unsure:

எனக்கு இரண்டையும் பற்றி தெரியாது ஆனால் இது இரண்டையும் பற்றி பேசி இப்ப புலத்தில் வாழும் பலரை தெரியும்....சாமி கும்பிடாதே,சினிமா(இது எல்லாம் எகாதியபக்திகள் மக்களை முட்டாள் ஆக்க செய்த திட்டமிட்ட செயல்) பார்க்கதே புரட்சி செய் என்று அப்ப சொன்ன பலர் இப்ப முன்னுக்கு நின்று கோவில் செய்திகளையும் சினிமா செய்திகளயும் இணையங்களில் புரட்சிகர சிந்தனை என்று பிர........கேட்டால் மக்கள் எதை விரும்பினமோ அதை செய்ய வேணும் என்று சொல்லுயினம்....

  • தொடங்கியவர்

கரு, கிருபன், தப்பிலி, யோக்கர், அர்யுன், மீராபாரதி, ரதி, சுபேஸ் உங்கள் அனைவரதும் கருத்துக்களிற்கும் ஊக்குவிப்பிற்கும் மிக்க நன்றி.

புதியதோர் உலகம் ஒரு நாவல் என்றபோதும் ஒருவகையில் அது ஒரு ஓட்டோபயோகிரபி என்பதால் இந்நாவலில் கோவிந்தன் பாத்திரம் என்ன பெயரில் சித்தரிக்கப்பட்டிருக்கின்றது என்பது யாரிற்கேனும் தெரியுமா? அத்தோடு நூலின் முற்பகுதியில், எழுத்தாளரின் புனைபெயர்களாக டொமினிக், ஜீவன், கேசவன் என்பன குறிப்பிடப்பட்டிருக்கின்றன. நிஜப்பெயராக சூசைப்பிள்ளை நோபேட் என்று பதிவாகியுள்ளது. அப்படியாயின் கோவிந்தன் என்ற பெயரின் பின்னணி என்ன?

ஆர்யுன் போன்றவர்கள் தெளிவுபடுத்த முடியுமா?

ரதி,

உங்களின் இரண்டாவது கேள்விக்கான எனது ஊகத்தை இறுதிப் பந்தியில் சேர்த்திருக்கிறேன். சாராம்சமாக: 'கோவிந்தன் மனநிலையோடு தலைவனாவதும் தலைவனாய் நிலைப்பதும் சாத்தியமற்றது'.

மீராபாரதி, ஒரு பார்வையோடு அனைவரும் உடன்படவேண்டும் என்பதில்லைத் தானே. உங்கள் பார்வையினையும் முன்வையுங்கள்.

நான் இரண்டும் வாசிக்கவில்லை; நிச்சயம் வாசிக்க வேண்டும் என்றதை உங்கள் எழுத்து உருவாக்கி விட்டது

கடந்த மாதம் நான், ஐயரின் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகளை வாசித்த பின் அடுத்ததாக animal farm இனை வாசித்த போது இரண்டுக்கும் இடையில் காணப்பட்ட ஒற்றுமையையும் ஊடுபோக்கையும் உணர முடிந்தது. இன்னுமொருவன் சில வேளைகளில் நீங்களும் இவை இரண்டையும் அடுத்தடுத்தாக வாசித்து இருந்தால் வித்தியாசமான ஒற்றுமையை உணர்ந்து இருப்பீர்கள் என நினைக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

நான் த பிறின்ஸ் படிக்கவில்லை ஆனால் கோவிந்தனின் புதியதோர் உலகம் படித்திருந்தேன் என்பதற்கப்பால் அன்றைய காலகட்டத்தில் பெரும் அதிகாரத்திற்கு எதிராக போராட புறப்பட்ட போராளி இயக்கமொன்றின் அதிகாரங்களிற்கு எதிராக எழுதப் பட்ட புத்தகம் . அதனை நாங்களும் பிரதியெடுத்து பொது மக்களிடம் வினியோகம் செய்திருந்தோம். (புலிகள்) அந்த புத்தகத்தின் பிரதிகள் பெரும்பாலானவை புலிகள் இயக்கத்தால் இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணம் கொண்டு வரப்பட்டு திலீபனால் பொறுப்பெடுக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டது. பின்னர் நாங்களும் அதிகாரமாகிப் போனோம்.

  • தொடங்கியவர்

நிழலி,

உங்கள் கருத்திற்கு நன்றி.

Animal Farm உடன் ஐயரின் நூலின் உங்கள் ஒப்பீடு புரிகிறது. எனினும் சில விடயங்களைக் கூறத்தோன்றுகின்றது:

எந்தச் சித்தாந்தம் என்பதையெல்லாம் கடந்து தலைமைத்துவத்திற்கென்று ஒரு தன்மை இருக்கிறது. ஆட்சி என்பது, அது ஒரு குடும்பமாகட்டும், ஊர்ச்சங்கமாகட்டும், நிறுவனத்தின் ஆட்சியாகட்டும், நாடாகட்டும், கட்சியாகட்டும், இயக்கமாகட்டும் ஆட்சி என்பதும் தலைமை என்பதும் சிந்தாந்தங்களிற்கப்பாற்பட்ட சில நடைமுறைகளால் தான் அடையப்படக்கூடியது. ஏனெனில் எந்த மக்கள் குழுமத்திற்குள்ளும் எந்த ஒரு சித்தாந்தந்தைச் சார்ந்தும் ஒருசீரான பார்வை அனைவரிற்கும் இருந்துவிடாது. ஒரே இலக்கும் பெறுமதிகளும் இருந்து விடாது. என்னதான் ஒற்றுமைகளைக் குழுமம் சார்ந்து நாம் கற்பிப்பினும் அடிப்படையில் குழுமத்தின் அலகுகள் தனித்துவங்கள். அந்தவகையில் தலைமைத்துவம் என்பது பேரம் பேசல்கள், அப்பப்போ அதட்டல்கள் கையினை முறுக்கல்கள் காய் நகர்த்தல்கள் வெருட்டல்கள் என்று பல நடைமுறைகளையும் கூட உள்ளடக்கியது. ஒரு சித்தாந்தத்தை மனம் கிளர்ச்சியுற விவாதிப்பதற்கும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் உள்ளன. அதுபோன்றே தலைமைத்துவங்களின் நடைமுறைகளிலும் ஒன்றிற்கொன்று வேறுபாடுகள் நிறைந்துள்ளதோடு மக்கள் கூட்டத்தின் சகிப்புக் குணகம் சார்ந்து தலைமைகள் சரித்திரத்தில் பதிவாகும்.

ஐயரிற்கும் கோவிந்தனிற்கும் ஜோர்ச் ஓவலிற்கும் அடிப்டையில் சமவுடமைச் சார்பு இருப்பினும் இவர்கள் மூவரிற்குள்ளும் கூட ஏகப்பட்ட வித்தியாசங்கள். என்னைப் பொறுத்தவரை இவர்களை ஏறுவரிசைப் படுத்தின்: ஜோர்ச் ஓவலை அடியில் போட்டு, அடுத்ததாய் ஐயரைப்போட்டு மேலே கோவிந்தனைப் போடுவேன். மூவரும் எழுதினார்கள். ஜோர்ச் ஓவல் எழுத்தில் மற்றையவர்கள் இருவரைக் காட்டிலும் மாபெரும் வெற்றியும் பிரபலியமும் பெற்றார். அற்புதமான எழுத்தாளர். மறுப்பதற்கில்லை. ஆனால் ஜோர்ச் ஓவல் படை கட்டவுமில்லை தலைமைத்துவம் செய்யவும் இல்லை. அந்தவகையில் புரட்சிக்குள் தலைமைத்துவத்தின் பிறழ்வுகள் பற்றி ஜோர்ச் ஓவல் புரட்சியினை வெளியில் இருந்து பார்த்து எழுதுவது, மக்களின் பட்டறிவுகளைச் சார்ந்து அவர்களிற்குள் சிறப்பாக வாசிக்கப்படும் என்றபோதும் ஜேர்ச் ஓவலினால் மேற்படி பிரச்சினைக்கான பரிகாரத்தைத் தரமுடியாது. மக்கியவலியினை நான் பேசியமைக்குக் காரணம் மக்கியவலி படைகட்டி, சிறை சென்று நடைமுறை அனுபவித்து எழுதியமை காலத்தால் அழியாது நடைமுறைச்சாத்தியமாய் இன்றைக்கும் படுகிறது. ஐயர் ஜோர்ச் ஓவலைக் காட்டிலும் நடைமுறை சார்ந்து அறிவு பெற்றார் என்றபோதும் ஐயரின் பேச்சில் அவரது தலைமைத்துவப் பண்புகள் மிளிரவில்லை. கோவிந்தன் மேற்படி இருவரைக் கடந்து மிளிர்கின்றபோதும், அவரது கொள்கைப்பிடிப்பும், புனிதங்கள் பெறுமதிகள் சார்ந்த விட்டுக்கொடுப்பற்ற நிலையும், தலைவன் என்பவன் எண்ணற்ற 'நற்பண்புகளின்' ஒட்டுமொத்த கூட்டாக இருக்கவேண்டும் என்ற நிலைப்பாடும் அவரைத் தலைவராக என்றைக்கும் ஆகவோ நிலைக்கவோ மிளிரவோ விடாது. தலைமைத்துவம் என்பது ஒரு தனிப் பூதம். அந்தப் பூதத்திற்கான தேவையினையும் தன்மையினையும் உணராத எவரும், என்னதான் அரிய சிந்தனைகளை வைத்திருப்பினும் அவற்றை என்றைக்கும் நடைமுறைப்படுத்த முடியாது.

சாத்திரி உங்களின் அனுபவப் பகிர்விற்கு மிக்க நன்றி. உண்மையில் ஒரு நூலை விவாதிக்கையில் அந்நூலின் காலத்தில் அந்நூலின் கதைமாந்தர்களோடு வாழ்ந்தவர்களும் கூட இருப்பது அளப்பரிய மகிழ்ச்சியினைத் தருகிறது. யாழ் களத்தில் எனக்குப் பிடித்த மிகப்பெரிய சிறப்பே இதுதான்.

உங்களது பின்னூட்த்தையும் நிழலியின் பின்னூட்டத்தையும் சேர்த்துப் பார்க்கையில் இன்னுமொன்றைக் கூறத் தோன்றுகின்றது:

ஜோhச் ஓவலின் 84 இற்கு கியூபாவில் ஒரு நீட்டி முளக்கிய முகவுரை எழுதப்பட்டு அது முதலாளித்துவம் மீதான விமர்சனம் என்று வருணிக்கப்பட்டது. ஆனால் கியூபர்களின் கையில் 84 கிடைக்காத வகை வெகு கவனமாக நூல் கியூபாவில் தடைசெய்யப்பட்டது. ஏனெனில் 84 இனை கியூபர்கள் வாசிப்பின் 'பிக் பிறதறினை' அவர்கள் முதலாளித்துவத்தில் மட்டும் தான் காண்பர் என்பதில்லை. கியூபாவிலும் காண்பர். உண்மையில் கியூபாவில் தான் அதிகம் காண்பர். ஈழத் தமிழனிற்கும் பிக்பிறதர் பல மட்டங்களிள் வெகு பரீ;ட்சயமானது தான்.

கதாசிரியர் நோபேட் தான் கோவிந்தன் ,இது ஒரு கூட்டுமுயற்சி (சந்ததியார் ,ஜான் மாஸ்டர் ,கண்ணாடி சந்திரன் உட்பட )என்றுதான் சொல்லவேண்டும் .<p>செயலதிபர் - உமா மகேஸ்வரன் -உயி

  • தொடங்கியவர்

கதாசிரியர் நோபேட் தான் கோவிந்தன் ,இது ஒரு கூட்டுமுயற்சி (சந்ததியார் ,ஜான் மாஸ்டர் ,கண்ணாடி சந்திரன் உட்பட )என்றுதான் சொல்லவேண்டும் .<p>செயலதிபர் - உமா மகேஸ்வரன் -உயி�

உங்கள் பதிலிற்கு நன்றி.

எனது கேள்வியினை நான் தெளிவாகக் கேட்கவில்லை என்று நினைக்கிறேன். கதாசிரியர் தான் கோவிந்தன் என்பது புரிகிறது. எனது கேள்வி என்னவெனில், கதாசிரியரின் புனைபெயர்கள் மற்றும் சொந்தப் பெயர்கள் என்று இடப்பட்ட பட்டியலில் இல்லாத 'கோவிந்தன்' என்ற புனைபெயர் இந்நாவலின் கதாசிரியர் பெயராகப் பயன்படுத்தப்பட்டதில் ஏதேனும் சுவாரசியமான பின்னணி உள்ளதா என்பதே. அதுவும் இதுவொரு கூட்டு முயற்சி என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், ஒருவேளை சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களின் முதலெழுத்துக்களின் கோர்வை அப்படி ஏதாவது இருக்குமா என்பது.

மற்றைய கேள்வி, நாவலில் உள்ள சங்கர், நாதன், கோபாலன், கலாதரன் இவ்வாறு நீழும் பாத்திரங்களில் நோபேட்டின் நிஜ வாழ்க்கை எந்தப் பாத்திரத்தோடு அதிகம் ஒத்திருக்கிறது என்பதே. சங்கராகவும் இருக்கலாம். ஆனால் சங்கர் சற்று வயதில் குறைந்தவராகத் தெரிகிறார். கோபாலன் பணி புரிந்து விட்டு வந்து இயக்கத்தில் சேர்ந்ததால் அவராயும் இருக்கலாம். இவர்கள் பற்றிய நேரடி அனுபவம் உள்ளவர்கள் இப்பாத்திரங்களில் நோபேட்டின் நிஜ வாழ்வு எந்தப் பாத்திரத்தை அதிகம் ஒத்திருக்கிறது என்று கூறமுடியுமா என்பதே.

இன்னுமொருவன்,

கறுப்பி என்பவர் எழுதின பதிவிலிருந்து : http://karupu.blogspot.com.au/2006/07/blog-post.html

ஈழநாதன்(Eelanathan) said...

புதியதோர் உலகம் நூலாசிரியர் கோவிந்தன் குறித்த விபரங்கள்

சொந்தப் பெயர் : சூசைப்பிள்ளை நோபேட்

புனைபெயர்கள் : டொமினிக், ஜீவன், கேசவன்

பிறப்பு : 1948.5.02 பாலைய10ற்று, திருகோணமலை

தந்தையின் பெயர் : மைக்கல் சூசைப்பிள்ளை

தாயின் பெயர் : நிக்கொலஸ் அன்னம்மா

கல்வியும் தொழிலும் :

இவர் தனது ஆரம்பக் கல்வியை திருகோணமலை புனிதவளனார் தமிழ் வித்தியாலயத்தில் முடித்தார். இடைநிலை கல்வியை திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியிலும், உயர்கல்வியை திருகோணமலை இந்துக் கல்லூரியிலும் முடித்தார். கொழும்பு பல்கலைக் கழகத்தில் கலைப் பிரிவில் பட்டப்படிப்பை மேற்கொண்டார். அக் காலத்தில் மாணவர் அமைப்புகளில் தீவிரமாக பங்கெடுத்தார். மார்க்சியக் கருத்துகளில் ஈடுபாடு செலுத்தினார். பட்டபடிப்பை முடித்துக் கொண்டு கொழும்பு நில அளவையாளர் திணைக்களத்தில் எழுதுவினைஞராக (குமாஸ்தா) பணியாற்றினார். பின்பு திருமலை மாவட்ட கல்விக் கந்தோரில் பணியாற்றினார்.

அரசியல் :

பல்கலைகழக வாழ்வில் பல்வேறு இடதுசாரிக் குழுக்கள், அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டார். பின்னர் மலையகத்திலிருந்து வெளியான ~தீர்த்தக்கரை| எனும் அரசியல், இலக்கிய காலண்டிதழின் ஆசிரியர் குழுவில் ஒருவராகவும் அதன் வெளியீட்டாளராகவும் இருந்தார். அப்போது பிரான்சிஸ் சேவியர் எனும் பெயரில் சிறுகதைகள் எழுதியுள்ளார்.

1980 களின் தொடக்கத்தில் ~சங்கப்பலகை| எனும் குழுவை அமைத்து, மாதாந்தம் முக்கிய சமூக, அரசியல், பொருளாதார, கலை இலக்கிய விடயங்கள் தொடர்பான கருத்தரங்குகளை தொடர்ச்சியாக நடாத்தி வந்தார்.

1982 இல் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் (Pடுழுவு) இணைந்து கொண்டார்.

1983 இல் முழுநேர உறுப்பினரானதுடன் கழகத்தின் மத்திய குழுவிற்கும் தெரிவானார்.

1985 இல் Pடுழுவு மைப்பிலிருந்து வெளியேறினார். ~தீப்பொறி| ஈழவிடுதலைப் போராட்டக் குழுவை நிறுவிய ஸ்தாபக உறுப்பினர்களில் இவரும் ஒருவர். இக் காலகட்டத்தில் Pடுழுவு இனால் தேடப்பட்டு தலைமறைவாக இருந்து செயற்பட்டார். இக் காலத்தில்தான் ~புதியதோர் உலகம்| என்ற இந்த நாவல் எழுதப்பட்டது.

1986 இல் விடுதலைப் புலிகள் ஏனைய அமைப்புகளை தடைசெய்தமையால் இவர் தொடர்ந்தும் தலைமறைவாகவே செயற்பட்டார்.

1991 இல் யாழ்ப்பாணத்தில் அமைப்புப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மே மாதம் 17ம் திகதி விடுதலைப் புலிகள் அமைப்பினால் கைது செய்யப்பட்டார். மேற்கொண்டு அவர் பற்றிய எந்த விபரமும் இன்றுவரை கிடைக்கவில்லை.

புத்தகம் வாசிக்கவிரும்புவர்களுக்கு

http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

  • தொடங்கியவர்

இன்னுமொருவன்,

கறுப்பி என்பவர் எழுதின பதிவிலிருந்து : http://karupu.blogsp.../blog-post.html

ஈழநாதன்(Eelanathan) said...

புதியதோர் உலகம் நூலாசிரியர் கோவிந்தன் குறித்த விபரங்கள்

சொந்தப் பெயர் : சூசைப்பிள்ளை நோபேட்

புனைபெயர்கள் : டொமினிக், ஜீவன், கேசவன்

பிறப்பு : 1948.5.02 பாலைய10ற்று, திருகோணமலை

தந்தையின் பெயர் : மைக்கல் சூசைப்பிள்ளை

தாயின் பெயர் : நிக்கொலஸ் அன்னம்மா

கல்வியும் தொழிலும் :

இவர் தனது ஆரம்பக் கல்வியை திருகோணமலை புனிதவளனார் தமிழ் வித்தியாலயத்தில் முடித்தார். இடைநிலை கல்வியை திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியிலும், உயர்கல்வியை திருகோணமலை இந்துக் கல்லூரியிலும் முடித்தார். கொழும்பு பல்கலைக் கழகத்தில் கலைப் பிரிவில் பட்டப்படிப்பை மேற்கொண்டார். அக் காலத்தில் மாணவர் அமைப்புகளில் தீவிரமாக பங்கெடுத்தார். மார்க்சியக் கருத்துகளில் ஈடுபாடு செலுத்தினார். பட்டபடிப்பை முடித்துக் கொண்டு கொழும்பு நில அளவையாளர் திணைக்களத்தில் எழுதுவினைஞராக (குமாஸ்தா) பணியாற்றினார். பின்பு திருமலை மாவட்ட கல்விக் கந்தோரில் பணியாற்றினார்.

அரசியல் :

பல்கலைகழக வாழ்வில் பல்வேறு இடதுசாரிக் குழுக்கள், அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டார். பின்னர் மலையகத்திலிருந்து வெளியான ~தீர்த்தக்கரை| எனும் அரசியல், இலக்கிய காலண்டிதழின் ஆசிரியர் குழுவில் ஒருவராகவும் அதன் வெளியீட்டாளராகவும் இருந்தார். அப்போது பிரான்சிஸ் சேவியர் எனும் பெயரில் சிறுகதைகள் எழுதியுள்ளார்.

1980 களின் தொடக்கத்தில் ~சங்கப்பலகை| எனும் குழுவை அமைத்து, மாதாந்தம் முக்கிய சமூக, அரசியல், பொருளாதார, கலை இலக்கிய விடயங்கள் தொடர்பான கருத்தரங்குகளை தொடர்ச்சியாக நடாத்தி வந்தார்.

1982 இல் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் (Pடுழுவு) இணைந்து கொண்டார்.

1983 இல் முழுநேர உறுப்பினரானதுடன் கழகத்தின் மத்திய குழுவிற்கும் தெரிவானார்.

1985 இல் Pடுழுவு மைப்பிலிருந்து வெளியேறினார். ~தீப்பொறி| ஈழவிடுதலைப் போராட்டக் குழுவை நிறுவிய ஸ்தாபக உறுப்பினர்களில் இவரும் ஒருவர். இக் காலகட்டத்தில் Pடுழுவு இனால் தேடப்பட்டு தலைமறைவாக இருந்து செயற்பட்டார். இக் காலத்தில்தான் ~புதியதோர் உலகம்| என்ற இந்த நாவல் எழுதப்பட்டது.

1986 இல் விடுதலைப் புலிகள் ஏனைய அமைப்புகளை தடைசெய்தமையால் இவர் தொடர்ந்தும் தலைமறைவாகவே செயற்பட்டார்.

1991 இல் யாழ்ப்பாணத்தில் அமைப்புப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மே மாதம் 17ம் திகதி விடுதலைப் புலிகள் அமைப்பினால் கைது செய்யப்பட்டார். மேற்கொண்டு அவர் பற்றிய எந்த விபரமும் இன்றுவரை கிடைக்கவில்லை.

இணைப்பைத் தேடி இணைத்தமைக்கு மனமார்ந்த நன்றிகள் யோக்கர். இவ்விபரங்கள் நூலின் முற்பகுதியிலும் இணைக்கப்பட்டுள்ளன. குறித்த காலகட்டத்தில் அத்தளத்தோடு நேரடி அனுபவம் உள்ளவர்களிடம் மேலதிக விபரங்கள் இருக்கக்கூடும்.

இக்கதையில் பெரும்பாலான கதாபாத்திரங்கள் முழு நிஜமானவை ,

செயலதிபர் - உமா மகேஸ்வரன் - கழகத்தால் கொலைசெய்யபட்டார் .

கலாதரன் - சந்ததியார் -கழகத்தால் கொலை செய்யபட்டார் .

ராமநாதன் - வாசுதேவா -புலிகளால் கொலை செய்யபட்டார்

பிரகாசம் - கண்ணன் - புலிகளால் கொலை செய்யபட்டார்

சிற்றம்பலம் - சித்தார்த்தன் -இன்றைய தலைவர் .

தேவன் - வாமதேவன் -சுகயீனமுற்று சென்னையில் காலமானார்

நடராசா - தங்கராசாமாஸ்டர் -விபரம் தெரியாது .

சங்கர் - நோபெட் -புலிகளால் கொலை செய்யபட்டார்

கோபாலன் - சந்திரன் - கனடா

பூபாலன் - ஜான் மாஸ்டர் -கனடா

சேரன் - ஓட்டி பாண்டி -கடலில் நேவியால் சுடப்பட்டார் .

தருமன் -மாதவன் -பிரான்ஸ்

சிவபாதம் - பேபி -பிரான்ஸ் (தூள் கடத்துபவர் )

குழந்தைவேலு -சத்தியமூர்த்தி -ஜெயில் வந்து இப்போ யாழில் வங்கியில் வேலை செய்கின்றார் .

வரதன் -சின்ன மென்டிஸ் - புலிகளால் கொலை செய்யபட்டார் .

முருகன் - கந்தசாமி (சங்கிலி) -புலிகளால் கொலைசெய்யப்பட்டார்

கீதா -ஜென்னி -பிரான்ஸ்

பத்மா -உஷா -கனடா

அருள் -மதன் -கழகத்தின் முதல் உட்கொலை

இலங்கை C.I.D-விச்சுவேஸ்வரன் (உமாவுடன் P.L.O போனவர் -கனடா

  • தொடங்கியவர்

இக்கதையில் பெரும்பாலான கதாபாத்திரங்கள் முழு நிஜமானவை ,

செயலதிபர் - உமா மகேஸ்வரன் - கழகத்தால் கொலைசெய்யபட்டார் .

கலாதரன் - சந்ததியார் -கழகத்தால் கொலை செய்யபட்டார் .

ராமநாதன் - வாசுதேவா -புலிகளால் கொலை செய்யபட்டார்

பிரகாசம் - கண்ணன் - புலிகளால் கொலை செய்யபட்டார்

சிற்றம்பலம் - சித்தார்த்தன் -இன்றைய தலைவர் .

தேவன் - வாமதேவன் -சுகயீனமுற்று சென்னையில் காலமானார்

நடராசா - தங்கராசாமாஸ்டர் -விபரம் தெரியாது .

சங்கர் - நோபெட் -புலிகளால் கொலை செய்யபட்டார்

கோபாலன் - சந்திரன் - கனடா

பூபாலன் - ஜான் மாஸ்டர் -கனடா

சேரன் - ஓட்டி பாண்டி -கடலில் நேவியால் சுடப்பட்டார் .

தருமன் -மாதவன் -பிரான்ஸ்

சிவபாதம் - பேபி -பிரான்ஸ் (தூள் கடத்துபவர் )

குழந்தைவேலு -சத்தியமூர்த்தி -ஜெயில் வந்து இப்போ யாழில் வங்கியில் வேலை செய்கின்றார் .

வரதன் -சின்ன மென்டிஸ் - புலிகளால் கொலை செய்யபட்டார் .

முருகன் - கந்தசாமி (சங்கிலி) -புலிகளால் கொலைசெய்யப்பட்டார்

கீதா -ஜென்னி -பிரான்ஸ்

பத்மா -உஷா -கனடா

அருள் -மதன் -கழகத்தின் முதல் உட்கொலை

இலங்கை C.I.D-விச்சுவேஸ்வரன் (உமாவுடன் P.L.O போனவர் -கனடா

அர்யுன்,

மிக்க மிக்க நன்றிகள். இந்த விபரம் தான் தெரியாது தேடிக்கொண்டிருந்தேன். மிகவும் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இக்கதையில் பெரும்பாலான கதாபாத்திரங்கள் முழு நிஜமானவை ,

செயலதிபர் - உமா மகேஸ்வரன் - கழகத்தால் கொலைசெய்யபட்டார் .

கலாதரன் - சந்ததியார் -கழகத்தால் கொலை செய்யபட்டார் .

ராமநாதன் - வாசுதேவா -புலிகளால் கொலை செய்யபட்டார்

பிரகாசம் - கண்ணன் - புலிகளால் கொலை செய்யபட்டார்

சிற்றம்பலம் - சித்தார்த்தன் -இன்றைய தலைவர் .

தேவன் - வாமதேவன் -சுகயீனமுற்று சென்னையில் காலமானார்

நடராசா - தங்கராசாமாஸ்டர் -விபரம் தெரியாது .

சங்கர் - நோபெட் -புலிகளால் கொலை செய்யபட்டார்

கோபாலன் - சந்திரன் - கனடா

பூபாலன் - ஜான் மாஸ்டர் -கனடா

சேரன் - ஓட்டி பாண்டி -கடலில் நேவியால் சுடப்பட்டார் .

தருமன் -மாதவன் -பிரான்ஸ்

சிவபாதம் - பேபி -பிரான்ஸ் (தூள் கடத்துபவர் )

குழந்தைவேலு -சத்தியமூர்த்தி -ஜெயில் வந்து இப்போ யாழில் வங்கியில் வேலை செய்கின்றார் .

வரதன் -சின்ன மென்டிஸ் - புலிகளால் கொலை செய்யபட்டார் .

முருகன் - கந்தசாமி (சங்கிலி) -புலிகளால் கொலைசெய்யப்பட்டார்

கீதா -ஜென்னி -பிரான்ஸ்

பத்மா -உஷா -கனடா

அருள் -மதன் -கழகத்தின் முதல் உட்கொலை

இலங்கை C.I.D-விச்சுவேஸ்வரன் (உமாவுடன் P.L.O போனவர் -கனடா

அண்ணா உங்கள் பதிலுக்கு நன்றி ...எனக்கு சில சந்தேகம் பதில் சொல்வீர்கள் என நினைக்கிறேன்...நான் கோபாலன் தான் கேசவனாக இருப்பார் என்று நினைத்தேன் அதாவது அவர் தான் இந்த நூலை எழுதியிருப்பார் என்று நினைத்தேன் நீங்கள் கோபாலன் தான் சந்திரன் என சொல்கிறீர்கள்?... இந்த நூலை எழுதியவர் எந்த கதாபாத்திரத்தில் இந்த நூலில் வருகிறார்?...கதையில் வரும் நாதன் என்பவர் யார்?...இந்த கதையில் வரும் அனைவருமே உண்மையான கதா பாத்திரங்கள் அதைக் காதாசிரியரே ஆரம்பத்தில் சொல்லியிருக்கிறார்..."தேவன் " என்பவர் ஒபரோய் தேவனா?...பிரேம் என்பவர் யார் லெபனானில் பயிற்சி பெற்றவராம்?...கீதா ஜென்னியாக இருக்க முடியாது இவர்(கீதா)என்பவர் சத்யா என்னும் மருத்துவக் கல்லூரி மாணவியாக இருப்பார் என்பது எனது கருத்து...எதாவது பிழையாக கேட்டால் மன்னித்து பதில் சொல்லவும்...நன்றி அண்ணா

  • தொடங்கியவர்

ரதியைப் போலவே எனக்கும் நாhதன் யார் என்று அறிவதற்கு மிகவும் ஆர்வமாகவுள்ளது. அத்தோடு, இன்னமும் இந்த 'கோவிந்தன்' என்ற பெயர் எவ்வாறு உருவானது என்று ஒரு ஆர்வக்கோளாறு தொடர்கிறது—அழுத்தம் திருத்தமாக இவைதான் கதாசிரியர் அறியப்பட்ட புனைபெயர்கள் மற்றும் இதரபெயர்கள் என்று ஒரு பட்டியலை இட்டுவிட்டு, அப்பட்டியலில் இல்லாத பெயரைக் கதாசிரியர் பெயராகப் போட்டிருக்கிறார்கள். இதற்கு நிச்சயம் ஒரு பின்னணி இருக்கும் என்றே தோன்றுகின்றது. அத்தோடு இயன்றவரை பாத்திரங்களை உண்மையாக எழுத வெளிக்கிட்ட எழுத்தாளர் எதற்காகச் சங்கரை நோபேட்டிலும் பல வயது குறைந்தவராகப் பாத்திரப்படுத்தவேண்டும் என்று யோசிக்கையில் நோபேட் சங்கராக இருக்கமுடியாது என்றும் எண்ணத்தோன்றுகின்றது.

இக்கதையில் வரும் தற்போது உயிர்வாழும் எவருடையதேனும் யூரியூப் விடியோக்கள் உள்ளனவா? தேடிப்பார்த்தேன் ஒன்றும் கிடைக்கவில்லை. பூபாலன் பாத்திரமும் ஒரு சுவாரசியமான பாத்திரம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.