Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடலுக்கு.... எந்த சோப் போட்டு, குளிக்கலாம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

actress-0112.jpgbad1.jpg

சருமத்திற்கு ஏற்ற குளியல் சோப் எது?

சோப் என்பது அழகை அதிகரிக்க உதவும் சாதனமாக இன்றைக்கு விளம்பரப்படுத்தப்படுகிறது. சந்தையில் தினந்தோறும் புதிது புதிதாய் சோப்புகள் குவிகின்றன. இதில் எந்த சோப் நல்ல சோப் என தேர்வு செய்வதில் குழம்பித்தான் போகின்றனர் அனைவரும். சிலர் ‘பேபி சோப் உபயோகித்தால் சருமம் மிருதுவாகும்’ என்கிறார்கள் சிலர். இன்னும் சிலரோ வாசனையான சோப்பே சிறந்தது என்கிறார்கள். உண்மையில் எதுதான் நல்ல சோப் என்று ஆலோசனை கூறுகின்றனர் அழகியல் நிபுணர்கள்.

பண்டைய காலங்களில் சோப் என்பது பயன்படுத்தப்படவில்லை. இயற்கையான பொருட்களை பயன்படுத்தியே தேய்த்து குளித்து வந்தனர். பின்னர் சிகைக்காய் அறிமுகமானது. மெல்ல சோப் என்ற பொருள் அழுக்கும் நீக்கும் சாதனமாக அறிமுகப்படுத்தப்பட்டது. சந்தையில் இன்றைக்கு எண்ணிலடங்காத பிராண்டு சோப்புகள் வந்து விட்டன. அவற்றில் வாசனையான சோப் என்று பார்த்து வாங்குவதை விட நமது சருமத்திற்கு ஏற்ற சோப் எது என்பதை பார்த்து வாங்கவேண்டும்.

சருமத்தின் தன்மை

பிறந்த குழந்தைகளுக்கு சருமத் துவாரங்கள் இருக்காது. அவர்களுக்கு பேபி சோப்தான் பெஸ்ட். வளர்ந்தவர்களுக்கு சருமத் துவாரங்கள் இருக்கும். அவர்கள் பேபி சோப் உபயோகிப்பது உகந்ததல்ல.

சருமம் ரொம்பவே வறண்டிருந்தால், மாயிச்சரைசர் உள்ள சோப் நல்லது. 40 வயதுக்கு மேலானவர்கள் மாயிச்சரைசர் உள்ள சோப் உபயோகிக்கலாம். குழந்தைகளுக்கு அதை உபயோகித்தால் சருமத்தில் வட்ட வட்டமாக மச்சம் மாதிரி வரும். சருமத்தின் தன்மை தெரியாமல் மூலிகை கலந்த சோப்புகளையும் உபயோகிக்க வேண்டாம். அத்தகைய சோப்புகள் ஆன்டிசெப்டிக்காக செயல்பட்டாலும், சருமத்தை கருப்பாக்கி விடலாம்.

ஃபேஸ் வாஷ்

சோப்புகளில் ஆரம்ப பி.ஹெச் பேலன்ஸ் அளவே 7.5 அல்லது 8 ஆக இருக்கிறது. எந்தக் காரணத்தைக் கொண்டும் வாசனை அதிகமுள்ள சோப்புகளை தேர்ந்தெடுக்க வேண்டாம்.சோப்புக்கு பதில் ஃபேஸ் வாஷ் நல்லது. நமது முகத்தின் பி.ஹெச் பேலன்ஸ் 5.5. ஃபேஸ் வாஷின் பி.ஹெச் பேலன்ஸ் 6. இரண்டும் கிட்டத்தட்ட இணைந்து போவதால் சருமத்துக்கு நல்லது.

நன்றி தற்ஸ்தமிழ்.

  • கருத்துக்கள உறவுகள்

'லைப் போய்' என்ன மாதிரி தமிழ் சிறி?

இதை வெளிநாட்டில் வாங்க முடியுமா?

போர்டிங்கில் வசித்த காலங்களில், வாசனை சோப், வாங்கிக் கொண்டுபோனால், பெரிய பெடியங்கள் சவக்காரத்தைத் தூக்கிப் போட்டு, ஒரு சின்னக் கல்லை வைச்சுப் போடுவாங்கள்!

அதுக்காக, சொறி சோப்பு என அன்புடன் அழைக்கப் படும், லைப் போய் தான் வாங்கிறது வழக்கம்!

பழகிப் போச்சு!

நீங்க, டேய் ஸ்கொலர்ஸ்!

உங்களுக்கு எங்கட பிரச்னையை, விளங்கப் படுத்துறது, கடினம்!!! :D

  • தொடங்கியவர்

original-lifebuoy-soap-1.jpg

"லைப் போய்" சவர்க்காரத்தின் வாசம் எனக்கு, பிடிக்கும் புங்கையூரான்.

நான்... இங்கு ஒரு இடமும், அந்த சவர்க்காரத்தை காணவில்லை.

சிலவேளை இங்கிலாந்தில் இருக்கலாம்.

போர்டிங்கில்... சின்னப் பையன்களிடம் சவர்க்காரத்தையும், களவெடுப்பவர்களை நினைக்க... அதிர்ச்சியாக உள்ளது.

"லைப் போய்" சோப்புக்கு, சொறி சோப் என்று... பெயர் வைத்த உங்களின் குறும்பை, மிக ரசித்தேன். :D:lol:

வெண்ணை இல்லா தயிர் அல்லது எலுமிச்சை ரசத்தோடு கலந்த கடலை மாவும் பயத்த மாவும் மிக சிறந்த அழுக்கு நீக்கிகளாகவும் மெருகூட்டிகளாகவும் அறியப்படுகிறது . ஒரு மாதம் முயற்சி செய்து பார்க்கவும் . அழகோ அழகு ஆகி விடுவீர்கள் .

எச்சரிக்கை ஆண்களுக்கு பட்டும்

ஆண்கள் உபயோக படுத்தி விட்டு பிறகு வெளிநாட்டு வெள்ளை காரன் உங்கள் பின்னாடி திரிஞ்சா நான் பொறுப்பு இல்லைங்க

  • கருத்துக்கள உறவுகள்

SoapLather.jpg

இலங்கை.. இந்தியா வாழ் மக்களுக்கு இது சரியான ஆக்கம். ஆனால் மேற்கு நாடுகளில் குழாய்களில் வரும் தண்ணீர் மென்னீராகும்... (soft water). அதாவது சுத்திரிகரிப்பின் போது.. ஒப்பீட்டளவில் பெருமளவு கல்சியம், மக்னீசியம் அயன்கள் அகற்றப்பட்டு குழாய்களில் அதிகம் படிவுகள் ஏற்படாதிருக்கும் வண்ணம்.. நீர் மென்மையாக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன.

குளோரின் ஏற்றப்பட்ட மென்னீரில் சோப் (சவர்க்காரம்) நுரையை எழுப்புவது கடினம். ஆனால் இலங்கை.. இந்தியா போன்ற நிலத்தடி நீர்.. அல்லது சேமிப்பு நீர் பாவிக்கப்படும் நாடுகளில் தண்ணீர் வன்னீராக இருப்பதால் அதில் சோப்பில் கரையக் கூடிய போதிய அளவு அயன்கள் (சோடியம் உட்பட்டவை) இருப்பதால்.. அவை நன்கு நுரையை எழுப்பி.. உடலை சுத்தம் செய்ய உதவுகின்றன.

தமிழ் கடை சோப்பும் நம்மவரும்:

புலம்பெயர் நாடுகளில் நம்ம தமிழ் கடைகள் ஒரு பொது அறிவு கூட இன்றி.. இப்படியான சோப்புக்களை இறக்குமதி செய்து விற்க.. நம்மவர்களும் ஊர் வழக்கத்தில் வாங்கிக் குவிக்கின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்னர் புலம்பெயர்ந்தவர்கள் கூட இந்த சோப் - தண்ணீர் பற்றிய அடிப்படை அறிவின்றி செயற்படுவதை காண்கிறோம். இவர்கள் என்னதான் சோப்பை மாத்தி மாத்தி வாங்கிப் போட்டாலும் அது நுரையை கிளப்பாது.. உடலை சரியா சுத்தம் செய்யாது. காரணம்.. குழாயில் வரும் தண்ணீர் அப்படி.

மேலும் சோப்.. சருமத்தில் உள்ள எண்ணெய் மற்றும் ஈரத்தன்மையை அகற்றி.. சருமத்தை உலர்த்தி விடுவதால்.. சருமம் அதன் பொலிவிழந்து போய்விடுவதோடு.. விரைந்து கெட்டும் விடும். வெண் படலங்கள் தோன்றும். ஊரில் அதிகம் வியர்வை வெளியேறுவதுடன்.. தோல் அதிகம் எண்ணொய் உற்பத்தி செய்வதால்.. இழக்கப்படும்.. எண்ணெய் தன்மை கூடிய விரைவில் சரியாகிவிடும். ஆனால் மேற்கு நாடுகளில் (குளிர் நாடுகளில்) அப்படியல்ல..!

இதற்காகத்தான் மேற்கு நாடுகளில் Bath cream அல்லது bath lotion என்று வெவ்வேறு பெயர்களில் அவற்றிற்கே உரித்தான இரசாயன உள்ளீடுகைகளோடு திரவ சோப் விற்கிறார்கள். அவை மென்னீரிலும் நுரையை உருவாக்கி உடலை நன்கு சுத்தம் செய்வதோடு சரமத்தை மென்மையாகவும் ஈரலிப்பாகவும் வைத்திருக்க உதவுகின்றன.

இன்றும் பார்க்கிறோம்.... ஊர் வழக்கத்தில் புலம்பெயர் நாடுகளில் கூட சோப் போடும் ஒரு கூட்டம் மக்கள் இருப்பதை. அவர்களுக்கு புலம்பெயர் நாடுகளில் உள்ள குழாய் வழங்கல் நீரின் தன்மையை விளக்கி... ஊரோடு கூடி வாழ கற்றுக் கொடுக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.

அந்த வகையில் இப்படியான ஆக்கங்களை பிரசுரிக்கும் போது மக்களுக்கு சரியான அறிவுறுத்தலை வழங்கிப் பிரசுரிப்பது நன்று. :):icon_idea:

[கருத்துத் தெளிவிற்காக சில சொற் சேர்க்கைகள் இடப்பட்டுள்ளன.]

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெண்ணை இல்லா தயிர் அல்லது எலுமிச்சை ரசத்தோடு கலந்த கடலை மாவும் பயத்த மாவும் மிக சிறந்த அழுக்கு நீக்கிகளாகவும் மெருகூட்டிகளாகவும் அறியப்படுகிறது . ஒரு மாதம் முயற்சி செய்து பார்க்கவும் . அழகோ அழகு ஆகி விடுவீர்கள் .

எச்சரிக்கை ஆண்களுக்கு பட்டும்

ஆண்கள் உபயோக படுத்தி விட்டு பிறகு வெளிநாட்டு வெள்ளை காரன் உங்கள் பின்னாடி திரிஞ்சா நான் பொறுப்பு இல்லைங்க

தமிழ்ப் பைத்தியம்,

கடலை மாவும், பயத்தம் மாவும்... தேய்த்துக் குளித்தால்...animierte-smilies-badwc-025.gif

வெள்ளைக்காரன் பின்னாலை வாறானோ, இல்லையோ....

பாத் ரூம் குழாய் அடைத்ததுக்கு,smileys-badewanne-973362.gif வீட்டுக்காரன் பின்னாலை... திரத்திக் கொண்டு வருவான். :D:lol:

Edited by தமிழ் சிறி

ஊரில் உள்ள தண்ணீருக்கு சவர்க்காரம் நுரைக்கும், ஆனால் கொழும்புத் தண்ணீரில் ஒரு முழு சவர்க்காரக் கட்டியை கரைத்தாலும் நுரைக்காது... <_<

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

------

தமிழ் கடை சோப்பும் நம்மவரும்:

புலம்பெயர் நாடுகளில் நம்ம தமிழ் கடைகள் ஒரு பொது அறிவு கூட இன்றி.. இப்படியான சோப்புக்களை இறக்குமதி செய்து விற்க.. நம்மவர்களும் ஊர் வழக்கத்தில் வாங்கிக் குவிக்கின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்னர் புலம்பெயர்ந்தவர்கள் கூட இந்த சோப் - தண்ணீர் பற்றிய அடிப்படை அறிவின்றி செயற்படுவதை காண்கிறோம். இவர்கள் என்னதான் சோப்பை மாத்தி மாத்தி வாங்கிப் போட்டாலும் அது நுரையை கிளப்பாது.. உடலை சரியா சுத்தம் செய்யாது. காரணம்.. குழாயில் வரும் தண்ணீர் அப்படி.

------

இதற்காகத்தான் மேற்கு நாடுகளில் Bath cream அல்லது bath lotion என்று வெவ்வேறு பெயர்களில் அவற்றிற்கே உரித்தான இரசாயன உள்ளீடுகைகளோடு திரவ சோப் விற்கிறார்கள். அவை மென்னீரிலும் நுரையை உருவாக்கி உடலை நன்கு சுத்தம் செய்வதோடு சரமத்தை மென்மையாகவும் ஈரலிப்பாகவும் வைத்திருக்க உதவுகின்றன.

இன்றும் பார்க்கிறோம்.... ஊர் வழக்கத்தில் புலம்பெயர் நாடுகளில் கூட சோப் போடும் ஒரு கூட்டம் மக்கள் இருப்பதை. அவர்களுக்கு புலம்பெயர் நாடுகளில் உள்ள குழாய் வழங்கல் நீரின் தன்மையை விளக்கி... ஊரோடு கூடி வாழ கற்றுக் கொடுக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.

அந்த வகையில் இப்படியான ஆக்கங்களை பிரசுரிக்கும் போது மக்களுக்கு சரியான அறிவுறுத்தலை வழங்கிப் பிரசுரிப்பது நன்று. :):icon_idea:

நெடுக்ஸ் சொல்வது சரியாக, இருந்தாலும்....

குளிக்கும் போது.... தலைக்கு ஷம்புவும், உடம்புக்கு சவர்க்காரமும் போட்டுக் குளிக்காவிட்டால், குளித்த திருப்தி இருக்காது.

அத்துடன், சவர்க்காரம் போடும் நேரம்... கண் எரிவது, இன்பமான ஒரு உணர்வு. அதை எப்படி தியாகம் செய்வது. :D

  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/ksTy1BI3400

த்ரிஷாவே இந்த சோப்பு போட்டு குளித்துத்தான் இவ்வளவு அழகாக இருக்கின்றார் :D :lol:

Edited by தமிழரசு

புலம் பெயர் வாழ் அனைவருக்கும் .எனக்கும் மிகவும்,மிகவும் தேவையான சோப் டெற்றோல் சோப்பு ..........

ஆகா எவ்வளவு சுகம் ............நினைக்கவே கடி பறக்குது................ :D :D :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/n8HwdH-b9a8

பெண்களுக்கு சிறந்த மஞ்சள் சோப்பு :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

த்ரிஷாவே இந்த சோப்பு போட்டு குளித்துத்தான் இவ்வளவு அழகாக இருக்கின்றார் :D :lol:

திரிஷாவைப் போல், ஒரு குளியலில்... நமது தோல் மினு, மினுக்க... விவெல் சோப்புத்தான் இனி பாவிக்கணும். :D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகிர்வுக்கு தமிழ் சிறி,

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் வாழ் அனைவருக்கும் .எனக்கும் மிகவும்,மிகவும் தேவையான சோப் டெற்றோல் சோப்பு ..........

ஆகா எவ்வளவு சுகம் ............நினைக்கவே கடி பறக்குது................ :D :D :icon_idea:

[media=]http://www.youtube.com/watch?v=myB7osx-jZE

அரிப்பு, எரிச்சல், கடி, சொறி போன்றவற்றுக்கு....ஹமாம் சோப்பு வாங்கி பாவியுங்கள். :D:lol:

என்ன இந்தப் பக்கம் ஒரே கடி, சொறி, எரிச்சலா இருக்கு... :blink::o:rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன இந்தப் பக்கம் ஒரே கடி, சொறி, எரிச்சலா இருக்கு... :blink::o:rolleyes:

குளிக்காமலிருந்தால். அப்படித்தான்... இருக்கும். :D:lol:

குளிக்காமலிருந்தால். அப்படித்தான்... இருக்கும். :D:lol:

:lol: :lol: :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'லைப் போய்' என்ன மாதிரி தமிழ் சிறி?

இதை வெளிநாட்டில் வாங்க முடியுமா?

இதுக்கு போய் யோசிக்கலாமா??????? இருக்கே தமிழ் கடைகள்?

என்னுடைய கடை விலாசத்தை தரவா? :rolleyes:

லக்ஸ்,ராணி,பேபிசோப்,ஹமாம்,டெற்றோல்,லைவ்போய்(சிவப்பு,நீலம்,மஞ்சள்,)

மெடிமிக்ஸ் எல்லாம் இருக்கு வாங்கோ :D:lol:

தபாலில் வேணும் என்றாலும் அனுப்பிவிடலாம் தபால் செலவையும் தந்திங்கள் என்றால்.. :rolleyes::icon_idea:

இவ்வளவு காலமும் அதிகம் 'பேபி சோப்' அல்லது 'Dove சோப்' தான் பாவிக்கிறேன். இனி 'பேபி சோப்' ஐக் கைய விட வேண்டியதுதான்.

தமிழ்ப் பையித்தியத்தின் முறையை இங்குள்ள சில தென் கிழக்காசியப் பெண்கள் முகத்தில் பூசியிருப்பதைக் கண்டிருக்கிறேன். அவர்களின் தோல் மெருதுவாக இருக்கிறதா என்பதை அறியச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு போய் யோசிக்கலாமா??????? இருக்கே தமிழ் கடைகள்?

என்னுடைய கடை விலாசத்தை தரவா? :rolleyes:

லக்ஸ்,ராணி,பேபிசோப்,ஹமாம்,டெற்றோல்,லைவ்போய்(சிவப்பு,நீலம்,மஞ்சள்,)

மெடிமிக்ஸ் எல்லாம் இருக்கு வாங்கோ :D:lol:

தபாலில் வேணும் என்றாலும் அனுப்பிவிடலாம் தபால் செலவையும் தந்திங்கள் என்றால்.. :rolleyes::icon_idea:

ஜீவா உங்கள் கடையில்.... சன்லைற், மில்க வைற், சவரின் பார் சோப் எல்லாம் இருக்கா?

அதில்... சாரம் தோய்க்க... ஆசையாக உள்ளது. :D

தப்பிலி, கடலைமா பூசிய பெண்களை ஒருக்கா... தொட்டுப் பார்த்து விட்டு, சொறி சொல்லுங்கள்.

அவர்கள் தப்பாக நினைக்க மாட்டார்கள். :lol::icon_mrgreen:

உங்கட கன்னத்தில என்ன கறுப்பா ஒரு கோடு கிடக்கு, எண்டு சொல்லிப் பாருங்கோ தப்பிலி!

உங்கள் முகத்தை, ஒரு 'அப்பாவி' தோற்றத்திற்கு மாற்றி கொள்ள மறக்க வேண்டாம்!

சந்தர்ப்பம் கிடைத்தால் பதியுங்கள்! :D

இதுக்கு போய் யோசிக்கலாமா??????? இருக்கே தமிழ் கடைகள்?

என்னுடைய கடை விலாசத்தை தரவா? :rolleyes:

லக்ஸ்,ராணி,பேபிசோப்,ஹமாம்,டெற்றோல்,லைவ்போய்(சிவப்பு,நீலம்,மஞ்சள்,)

மெடிமிக்ஸ் எல்லாம் இருக்கு வாங்கோ :D:lol:

தபாலில் வேணும் என்றாலும் அனுப்பிவிடலாம் தபால் செலவையும் தந்திங்கள் என்றால்.. :rolleyes::icon_idea:

:lol: :lol: :lol:

நான் இதை பெட்றோல் என்று அவசரத்தில வாசிச்சிட்டேன் :icon_mrgreen:

கடினமான நீரில் சவர்க்காரம் கரையும் போது அதிலுள்ள இரசாயனப் பொருட்கள், நீரில் உள்ள கல்சியம், மக்னீசியம் அயன்களோடு சேர்ந்து உருவாக்கும் scum என்பது சவர்க்காரத்தின் உபயோகத்தை குறைக்கும்.

கல்சியம் மற்றும் மக்னீசியம் போன்றன உருவாக்கும் இரசாயனப்பொருட்கள் நீரில் இலகுவில் கரையாது.

மென் நீரில் சவர்க்காரம் இலகுவாக சேர்ந்து பயனை கொடுக்கும். மென் நீரில் தான் நுரை அதிகம் இருப்பதோடு, சவர்க்காரத்தை இலகுவாக உடலில் இருந்து கழுவமுடியாமல் இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா உங்கள் கடையில்.... சன்லைற், மில்க வைற், சவரின் பார் சோப் எல்லாம் இருக்கா?

அதில்... சாரம் தோய்க்க... ஆசையாக உள்ளது. :D

சாரம் வேறை கட்டுவிங்களோ???? :unsure: :unsure:

:lol: :lol: :lol:

நான் இதை பெட்றோல் என்று அவசரத்தில வாசிச்சிட்டேன் :icon_mrgreen:

:D :D :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா உங்கள் கடையில்.... சன்லைற், மில்க வைற், சவரின் பார் சோப் எல்லாம் இருக்கா?

அதில்... சாரம் தோய்க்க... ஆசையாக உள்ளது. :D

தப்பிலி, கடலைமா பூசிய பெண்களை ஒருக்கா... தொட்டுப் பார்த்து விட்டு, சொறி சொல்லுங்கள்.

அவர்கள் தப்பாக நினைக்க மாட்டார்கள். :lol::icon_mrgreen:

தப்பிலி மேலே ஏன் இந்த கொலை வெறி ......அவர் என்ன செய்தார் உங்களுக்கு தமிழ்சிறி :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.