Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய ரூபாவின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Indian_Rupees-230512-150.jpg

சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பில் கடந்த 6 நாட்களாக காணப்பட்ட சரிவு இன்றும் தொடர்கிறது. நேற்றைய வர்த்தக நேர முடிவில் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.55.39 ஆக சரிந்து அதிர்ச்சி அளித்த நிலையில் இன்று மேலும் 43 காசுகள் வரை சரிந்துள்ளது.

இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.55.82 ஆக இருந்தது. மதியத்திற்கு மேல் மேலும் இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்து ரூ.56.21 ஆக இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் தொடர்ந்து நிலவி வரும் நிதிச் சிக்கல் காரணமாகவும், அமெரிக்க டாலருக்கு நிகரான யூரோவின் மதிப்பும் குறைந்து வருவதாலும் இந்திய ரூபாயின் மதிப்பில் கடும் சரிவு நிலை காணப்படுகிறது. இதன் காரணமாகஇந்திய பங்குசந்தைகளில் கடந்த நான்கு மாத கால அளவில் கடுமையான சரிவு காணப்பட்டது.

http://www.seithy.co...&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

டொலர் மதிப்பே ஆட்டம் காணுது.. அதை முந்திக்கொண்டு இந்தியன் றுப்பீஸ் விழுறது கொஞ்சமும் நல்லாயில்லை.. :D

  • கருத்துக்கள உறவுகள்

Isai Anna seekirama Canadian dollars anuppi chennaila oru guest house vaangi vidunga..... Naangalam anga poai nikkalam.......

  • கருத்துக்கள உறவுகள்

Isai Anna seekirama Canadian dollars anuppi chennaila oru guest house vaangi vidunga..... Naangalam anga poai nikkalam.......

ஏன்.. நீங்கள் கோடம்பாக்கத்தை சுற்றிப் பார்க்க நாங்கள் துட்டு செலவு பண்ண வேணுமா? :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன்.. நீங்கள் கோடம்பாக்கத்தை சுற்றிப் பார்க்க நாங்கள் துட்டு செலவு பண்ண வேணுமா? :D

:lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இந்த வீழ்ச்சி இந்திய ரூபாய்க்கு?

rupee-symbol-250512-150.jpg

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வேக வேகமாகச் சரிந்து வருகிறது. போகிறப் போக்கைப் பார்த்தால், ஒரு டாலருக்கு ரூ.60 என்ற அளவுக்கு ஆகித்தான் நிற்கும் என்று பொருளியல் வல்லுநர்கள் கணக்கிடுகிறார்கள். ஏன் இந்த வீழ்ச்சி ரூபாய்க்கு?

உலகின் வலிமையான கரன்சிகளுள் ஒன்றாக இருந்த யூரோ தனது உறுப்பு நாடுகளான கிரீஸ், ஸ்பெயின், போர்த்துகல் ஆகிய நாடுகளின் நிதி சிக்கலால் தள்ளாடி வீழ்ந்துவிட்ட நிலையில், அதன் போட்டி கரன்சியான அமெரிக்க டாலர் எதிர்விளைவு காரணமாக உயர்ந்து வருகிறது.

உலகின் மற்ற நாடுகளை விட இந்தியாவில் தான் டாலரின் மதிப்பு அதிகம் உயர்ந்தும் , உணர்ந்து கொள்ளவும் படுவது ஏன் என்று கேட்டால் இந்தியாவில் அந்நிய முதலீடுகள் குறைந்து போனதும், இந்திய அரசின் பற்றாக்குறை வரவு செலவு அறிக்கையும், பணவீக்கம், இந்தியாவில் அன்னிய முதலீடுகள் குறைவால் ஏற்பட்டுள்ள டாலர் தட்டுப்பாடு, பெட்ரோலிய இறக்குமதிக்காக அதிகளவு டாலரை வெளியாக்குவது என்று பல காரணங்கள் கூறப்படுகின்றன.

உலகளவில் கச்சா எண்ணெய் விலை ஏற்றப்படவில்லை என்ற நிலையில் இந்தியாவில் மட்டும் ஒரேயடியாக ரூ.7.50 என்று வரலாறு காணாத அளவுக்கு ஏற்றியதற்கு என்ன காரணம்? முன்பு ஒரு பேரல் கச்சா எண்ணைக்காக சுமார் 95 டாலர்கள் செலவிட்ட இந்தியா, உலகச் சந்தையில் கச்சா எண்ணை விலை ஏறாவிட்டாலும்கூட, தற்போது பண வீக்கத்தின் காரணமாக அதே ஒரு பேரல் கச்சா எண்ணெய்க்கு சுமார் 3 டாலர்கள் கூடுதலாக, அதாவது 98 டாலர்கள் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த பணவீக்கத்தின் காரணமாக, கூடுதலாகக் கொடுக்க வேண்டிய மூன்று டாலரை யார் தலையில் கட்டுவது என்று அரசு ஆராய்ந்து பார்த்தால், எளிதில் மிளகாய் அரைக்கத் தக்கதாக இருப்பது திருவாளர் பொதுஜனத்தின் தலை தான்.

உலகச் செலாவணியாக டாலர் இருப்பதால், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் டாலரில் தான் விற்பனை இருக்கும். ஆக முன்பு கொடுத்ததை விட டாலருக்கு அதிக விலை கொடுத்து இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் மட்டுமின்றி, இரும்பு உள்ளிட்ட இறக்குமதி வகைகள் அனைத்தும் முன்பு விற்ற விலையிலேயே இந்தியாவுக்குக் கிடைத்து வந்தாலும், உலகச் சந்தையின் செலாவணியான டாலரைப் பெறுவதற்கு இந்தியா முன்பை விடவும் சுமார் 8 ரூபாய்கள் தற்சமயம் அதிகம் கொடுக்கின்ற படியால், இந்த விலையேற்றம் தவிர்க்க இயலாது.

அவ்வகையில்,இறக்குமதிப் பொருட்களுக்கு டாலரில் பணம் கட்ட வேண்டியிருப்பதால் இந்தியாவைப் பொருத்தவரை டாலர் தட்டுப்பாடு பெரிய தட்டுப்பாடில்லை. சமாளித்து விடலாம் என்றாலும், கணிவழிச் செயல்கள், நிரலிகள், ஜவுளிகள் போன்றவை , மனித சக்தி ஏற்பாடுகள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்பவர்களுக்கு இந்த டாலர் மதிப்பு கூடுதல் என்பது எதிர்பாரா உபரி ஆகும். அவ்வாறு ஏற்றுமதி செய்பவர்கள் மட்டும் இந்திய ரூபாய் சரிந்து டாலர் உயர்வதில் மகிழலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பணவீக்கத்தின் காரணமாக, கூடுதலாகக் கொடுக்க வேண்டிய மூன்று டாலரை யார் தலையில் கட்டுவது என்று அரசு ஆராய்ந்து பார்த்தால், எளிதில் மிளகாய் அரைக்கத் தக்கதாக இருப்பது திருவாளர் பொதுஜனத்தின் தலை தான்.

ஈரானிடம் இருந்து வாங்கும் எண்ணையை இந்தியா நிறுத்த வேண்டும் என அமெரிக்கா வற்புறுத்தி வருகிறது.எனவே இந்தியா வேறு தெரிவை நாடும் போது எண்ணையை அதிக விலை கொடுத்தே வாங்க வேண்டும்.திருவாளர் மக்கள் தலையை கொடுக்க தயாராக வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்.. நீங்கள் கோடம்பாக்கத்தை சுற்றிப் பார்க்க நாங்கள் துட்டு செலவு பண்ண வேணுமா? :D

அதானே அதுவும் ஸ்பெசலாய் பிகருகள பார்க்க :lol::D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

The reason for the fall of other currencies is Quantitive easing of US dollars. US has pumped billions into the economy. I read this somewhere last year. They predicted that all currencies will be weaken as a result of US quantitive easing.(I can't write in Tamil at the moment, google transliteration doesn't work!)

Edited by Queen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.