Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் தலைவர் மேதையல்ல தீவிரவாதி இனங்களுக்கிடையே நம்பிக்கை ஏற்படவேண்டும் : பொன்சேகா _

Featured Replies

sarath-fonseka_4.jpg

தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கை உருவான பிறகே அதிகாரப்பகிர்வு அளிக்கப்படவேண்டும் என்று அண்மையில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை இராணுவத்தின் முன்னால் தலைமைத் தளபதி சரத் பொன்சேகா கூறினார்.

கடந்த பல ஆண்டுகளில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே இரு தரப்பு அரசியல்வாதிகளால் அவநம்பிக்கையும் சந்தேக உணர்வும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதனால் தான் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பதை சிங்களவர் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றார்கள் என்றும் அவர் கூறினார்.

கொழும்பு புறநகரப் பகுதியான தலவத்துகொடவில் இந்திய ஊடகம் ஒன்றுக்கு ஞாயிற்றுக்கிழமை அவர் பேட்டியளித்தார்: தமிழர்களுக்கு எதைக் கொடுத்தாலும் அதற்கு சிங்களர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்கள். ஏனென்றால் தமிழர்களை அவர்கள் நம்பவில்லை. இரு இனங்களுக்கும் இடையே சமரசம் ஏற்படவேண்டும் என்று யாருக்கேனும் அக்கறை இருகு“குமானால் முதலில் பரஸ்பர நம்பிக்கை ஏற்படுத்துவதற்கு அவர்கள் முயற்சிக்கவேண்டும்.

பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள் இணைந்து வாழ்வது வர்த்தத் தொடர்புகளை உருவாக்கிக் கொள்வது போன்வற்றின் மூலம்தான் இந்த நம்பிக்கையை உருவாக்க முடியும். எல்லா ஒரே நாளில் நடந்துவிடாது. கொஞ்சம் காத்திருக்கேவண்டியிருக்கும்.பத்து இருபது ஆண்டுகள் கூட ஆகலாம் நாம் காத்திருந்துதான் ஆகவேண்டும். இப்போதிருக்கும் இவநம்பிக்கையே கூட கடந்த 30 ஆண்டு கால சண்டைகளின் விளைவுதான் என்றார் பொன்சேகா.

தமிழர்களின் பகுதிகளில் அதிக குளவு இராணுவம் குவிக்கப்பட்டிருப்பது, விடுதலைப் புலிகள் இயக்க்தைச் சேர்ந்த முன்னால் வீரர்கள் கைது செய்யப்படுவது ஆகியவை குறித்துக்கேட்டபோது இராணுவம் அங்கு இருக்கவேண்டும் இராணுவத்தை வெளியேறுமாறும் தமிழ்க் கட்சிகள் கோரக்கூடாது 200 தீவிரவாதிகம் சேர்ந்தால் குண்டு வெடிப்புகள் மூலம் இப்போதிருக்கும் நிலை தலை கீழாக மாற்றிவிட முடியும் என்றார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த முன்னாள் வீரர்களுக்கான மறு வாழ்வு நடவடிக்கைகள் குறித்தும் பொன்சேகா கடுமையாக விமர்சித்தார்.

மறு வாழ்வு என்பது விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தச்சு வேலை சொல்லிக் கொடுப்பதோ, அல்லது அந்த இயக்கத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கு இராணுவ வீரரை ஊக்கப்படுத்துவதோ கிடையாது. பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டவரின் மனதை மாற்ற வேண்டும். தீவிரவாத மன நிலையுடன் இருக்கும் ஆயுதம் இல்லாத ஒருவர் ஆயுத மேந்திய தீவிரவாதியை விட ஆபத்தானவர் என்றார் பொன்சேகா.

ஐ. நா. மனித உரிமைகள் குழுவில் இலங்கை அரசு மீது சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுக்கள் குறித்து கேள்விக்குப் பதிலளித்த அவர் சர்வாதிகார நாடுகளுடன் நட்பு கொண்டு, ஜனநாயக நாடுகளைப் பகைத்துக் கொண்ட ராஜபக்ஷ அரசின் தவறான கொள்கையில்தான் தவறு இருக்கறது என்றார்.

ஜன நாயக நாடுகளிடம் இருந்து நாம் நிறையக் கற்றுக் கொள்ளவேண்டியிருக்கின்றது. கற்றுக்கொண்டு நம்மைத் திருத்திக் கொள்ளவேண்டும். நம்முடைய நிலைக்காக பிற நாடுகளைக் குறைக் கூறக்கூடாது. அதே நேரத்தில் போர்க் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டார்கள். மருத்துவ மனைகள் மீது குண்டுகள் வீசப்பட்டன என்பவற்றை நான் மறுக்கின்றேன்.

போரின் போது 4 வீரர்கள், 8 வீரர்கள் எனப் பிரிக்கப்பட்ட குழுக்கள் ஒவ்வொன்றையும் நான் தொடர்ந்து கண்காணித்து வந்தேன். அப்பாவிப் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று விட்டார்கள் என்பதை உறுதி செய்து கொண்ட பிறகு தான் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. கனரக ஆயுதங்கள் பயன் படுத்தப்படாத பாதுகாப்பு வலயங்களை நாங்கள் உருவாக்கித் தந்தோம். விடுதலைப் புலிகளை கண்காணிப்பதற்காக ஆளற்ற விமானங்களைப் பயன்படுத்தினோம்.

ஒருபோதும் நாங்கள் தீவிர வாதிகளைப்போல நடந்து கொள்ளவில்லை. அதனால்தான் 270000 தமிழர்கள் எங்கள் பகுதிக்கு வந்தார்கள் என்றார் பொன்சேகா.வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த புலித்தேவன், நடேசன் போன்ற விடுதலைப் புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவது பற்றிக் கேட்டபோது, மே 17 ஆம் திகதி இரவுக்குப் பிறகு யாரும் சரணடைய முன்வரவில்லை. யாராவது சரணடைந்திருந்தால் அதை எங்களது வீரர்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்றார்.

அதே நேரத்தில் மே 17 ஆம் திகதி இரவு 9 மணிவரை தான் இலங்கையில் இல்லை என்பதால், அந்த நேரத்தில் யாராவது சரணடைய முன்வந்திருந்தால் இதுபற்றித் தனக்குத் தெரியாது என்றும் பொன்சேகா கூறினார்.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபகாரனை ஒரு மேதை என்று கருதுகின்றீர்களா என்று கேட்டபோது அவர் ஒரு தீவிரவாதி என்றார். ___

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=38376

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தன்னைக் காத்துக் கொள்ள.. இப்படி எல்லாம் பொய்களை அவிழ்ப்பார் என்று தெரிந்து தான்.. மகிந்த கூட்டணி இவரை உள்ள தள்ளி வெளியில விட்டுள்ளது. இவர் இதன் மூலம் தன்னை பின்னால் இருந்து இயக்கும் அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளுக்கு விசுவாசியாக இனங்காட்டிக் கொண்டு.. தனது தீவிர சிங்கள பெளத்த பேரினவாத வெறியை சிங்களவரிடையே வளர்த்து அந்தச் செல்வாக்கில்.. மகிந்த கூட்டணியை பழிவாங்கலாம் என்றும் நினைக்கிறார்.

இவரின் கருத்துப்படி.. சரணடைந்த பொதுமக்கள்.. போராளிகள் திட்டமிட்டே படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதற்கான காரணம் வெளிவந்துள்ளது.

இந்த போர்க்குற்றவாளி நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். இவரை பின்னால் இருந்து இயக்கும் வேலையை நிறுத்தி மேற்கு நாடுகள் இவரையும் இவரின் பின்னால் நின்றோரையும்.. மகிந்த கூட்டணியையும்.. சர்வதேச நீதி விசாரணைக்கு உட்படுத்தி.. தண்டிப்பதோடு.. ஐநா மன்றின் மேற்பார்வையின் கீழ்.. ஈழத்தமிழ் மக்களுக்கு அரசியல் நீதி கிடைக்க உதவ வேண்டும்.

ஆக்கிரமிப்பு சிங்கள இராணுவம் முற்றாக நீக்கப்பட்டு.. தமிழர்கள் தங்கள் நிலத்தில் தாங்களே தங்கள் அரசியல் தலைவிதியை தீர்மானிக்க அனுமதிக்க வேண்டும். சிங்களவர்கள் சொல்லி..அல்லது சலுகை அளித்து தமிழர்கள் தங்கள் அரசியல் தலைவிதியை தீர்மானிக்க முடியாது..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இவர் மட்டும் பெரிய மேதையாக்கும்!

காலம் பதில் சொல்லும்!

பரதேசிகளின் துணை கிடைத்திராவிட்டல், பிரபாகரனின் நிழலைக் கூட, இந்த மேதை தொட்டிருக்க முடியாது!

  • கருத்துக்கள உறவுகள்

அவரை அறியாமல் அவர் சொல்ல நினைப்பது அதுதான்.

உண்மையும் அதுதானே.

பிரபாகரன் உலக ராணுவ மேதையே.

இந்த உலகமே நின்று யுத்தம் செய்தும் இந்த நாயல தலைவர் எங்க என்பதை

அறியமுடியாத செம்மறி இப்ப வந்து கதையலக்குது .

இந்த நாய் இதைவிட கொஞ்ச கோமாளிகளின் மூத்திரத்தை குடிக்கலாம் .

அதுக்குதான் லாயக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

தீவிரவாத மன நிலையுடன் இருக்கும் ஆயுதம் இல்லாத ஒருவர் ஆயுத மேந்திய தீவிரவாதியை விட ஆபத்தானவர் என்றார் பொன்சேகா.

அதாவது புலிகளைவிட பிக்குமார்(தேரர்மார்)ஆபத்தானர்வர்கள் என்று சொல்கின்றார்,இலங்கை சுதந்திரம் அடைந்த பின்பு சிங்களவர்களில் அநேகர் இவர் குறிப்பிட்ட மனநிலை உடையவர்கள்

வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த புலித்தேவன், நடேசன் போன்ற விடுதலைப் புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவது பற்றிக் கேட்டபோது, மே 17 ஆம் திகதி இரவுக்குப் பிறகு யாரும் சரணடைய முன்வரவில்லை. யாராவது சரணடைந்திருந்தால் அதை எங்களது வீரர்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்றார்.

அதே நேரத்தில் மே 17 ஆம் திகதி இரவு 9 மணிவரை தான் இலங்கையில் இல்லை என்பதால், அந்த நேரத்தில் யாராவது சரணடைய முன்வந்திருந்தால் இதுபற்றித் தனக்குத் தெரியாது என்றும் பொன்சேகா கூறினார்.

வெள்ளைக்கொடி வழக்கில் மிக முக்கியமான சாட்சியாக கருதப்படும் இந்த மேதை இப்படி ஒரு செவ்வியை அவரது இந்த சூழலில்

வழங்கியிருப்பது ஒன்றும் ஆச்சரியத்திற்குரிய விடயமில்லை..........என்னில் அவரது நிலை அப்படி............பொறுத்திருந்து பார்ப்போம்

அவருக்கு சாதகமான சூழல் வரும்போது மகிந்தாவையும் அவரது சகாக்களையும் பழி வாங்க நிச்சயம் உண்மையைக்கக்குவார் ..

என்னில் இவரது ஒவ்வொரு பேசும், கதையும் நேரத்திற்கு நேரம் மாறுபட்டுக்கொண்டிருக்கிறது. அதற்காக உள்ளே இருந்ததால் மூழை குழம்பி விட்டது என நாம் நினைக்க கூடாது. இது மகிந்தாவை பொறுத்த வகையில் பல்லுப்புடுங்கப்பட்ட கொடிய விசப்பாம்பு.எப்போது சீறி ................... தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஒரு மேதை ஆக்கும்,

என்பதினால்தான் இவ்வளவு நாளும் ஜெயிலுக்குள்ள இருந்து கம்பி எண்ணினவர் ,பண்ணாடை, இவனை தூக்கில் போட்டிருக்கவேண்டும் .

எமது தேசியத்தலைவரை பற்றி பேச ஸ்ரீலங்காவில் எவனுக்கும் அருகதை இல்லை உள்ள நாடுகளோடு கூட்டம் கூட்டி யுத்தம் செய்தி போட்டு பேச்சு வேற தூ ..... உன்னையெல்லாம் பாம்பில நல்ல பாம்பு கெட்ட பாம்பு என்று இல்லைதானே பாம்புபம்புதான் .

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஒரு மேதை ஆக்கும்,

என்பதினால்தான் இவ்வளவு நாளும் ஜெயிலுக்குள்ள இருந்து கம்பி எண்ணினவர் ,பண்ணாடை, இவனை தூக்கில் போட்டிருக்கவேண்டும் .

எமது தேசியத்தலைவரை பற்றி பேச ஸ்ரீலங்காவில் எவனுக்கும் அருகதை இல்லை உள்ள நாடுகளோடு கூட்டம் கூட்டி யுத்தம் செய்தி போட்டு பேச்சு வேற தூ ..... உன்னையெல்லாம் பாம்பில நல்ல பாம்பு கெட்ட பாம்பு என்று இல்லைதானே பாம்புபம்புதான் .

http://www.youtube.com/watch?v=6LGHNcXsyi4

தோழர் .. மகிந்த கோத்தா இருவரில் யாராவது ஒருவர் போர்குற்றவாளி வழக்கில் சிக்கினால் .. அடுத்த செந்தில் நம்ம பொன்சேகா தான்...

அதை நாம் முன்னெடுக்க வேண்டும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.