Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறந்த குருவிகளும் பறந்த பெயர்களும் .

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்தில் வாழ்த்தி எழுதியதுடன் சரி

இதற்கெல்லாம் தேடி எழுத நேரம் வேண்டும் உறவுகளா.

எனக்கு அதுதான் பிரச்சினை.

வச்சுக்கொண்டு வஞ்சகம் செய்யவில்லை. புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுள்ளது.

மற்றும் படி கோவின் ஆக்கங்களுக்கெல்லாம் ஒரு வரி எழுதி பாராட்ட தவறுவதில்லை. (கண்ணில் பட்டால்)

  • Replies 445
  • Views 91k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

படம் முப்பத்திஏழுக்கான தூயதமிழ் கருங்கொண்டை நாகணவாய் ஆகும் . ஜீவா சிறப்புப்பரிசிலுக்குத் தெரிவாகின்றார் . ஜீவாவிற்கு தங்கச்சங்கிலி ஒன்றைப் பரிசாக அழிக்கின்றேன் .

men_gold_Chain1.jpg

men_gold_Chain1.jpg

பரிசுபெற்ற ஜீவாவிற்கு வாழ்த்துக்கள் .

  • தொடங்கியவர்

[size=5]38 வெள்ளைக் கண்ணி ( Oriental White-eye, Zosterops palpebrosus ) .[/size]

55878_172363799459474_100000575643043_469901_1440260_o.jpghttp://raxacollective.files.wordpress.com/2011/08/55878_172363799459474_100000575643043_469901_1440260_o.jpg

வெப்பமண்டல ஆசியாவில் கிழக்கிலிருந்து இந்தியத் துணைக்கண்டம் முதல் தென்கிழக்காசியா வரையிலும் இந்தோனேசிய, மலேசியா நாடுகள் வரை பரந்து காணப்படுகின்றன. சிறு கூட்டமாக உணவைத் தேடும் இவை மலர்த்தேன் மற்றும் சிறு பூச்சிகளை உணவாகக் கொள்கின்றன. இவற்றின் வேறுபட்ட கண்ணைச் சுற்றிக் காணப்படும் வெள்ளை வளையத்தைக் கொண்டும், மேற்பகுதி முழுவதும் காணப்படும் மஞ்சள் நிறத்தைக் கொண்டும் இப்பறவையினை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும். சிறகின் கீழ் காணப்படும் நிழல் போன்ற தன்மையினைக் கொண்டு இதன் துணை இனம் அழைக்கப்படுகிறது.

8-9 செ.மீ நீளமுடைய இச்சிறு பறவை மஞ்சள் தன்மையுள்ள ஒலிவ நிறத்தை மேற்பகுதியில் கொண்டும், கண்ணைச் சுற்றி வெள்ளை வளையமும், கீழ்ப்பகுதியும் கழுத்தும் மஞ்சளாகவும் காணப்படும். வயிற்றுப் பகுதி வெள்ளையான சாம்பல் நிறத்தையுடையது. ஆயினும் சில இனங்கள் மஞ்சள் நிறத்தையுடையன. இருபாலினங்களும் ஒத்த தோற்றத்தையுடையன.

இப் பறவை இனம் குறுங் காடுகளிலும் ஈரலிப்பான காடுகளிலும் வாழ்கின்றன. சில வேளைகளில் சதுப்பு நிலங்களிலும் தீவுகளிலும் பூச்சிகளை உண்டு வாழ்கின்றன.

இப் பறவைகள் சமூகப்பாங்கானவை. கூட்டமாக வாழும் இவை இனப்பெருக்கக் காலத்தில் பிரிந்து வாழும். அநேகமாக மரங்களில் காணப்படும் இவை மிகக் குறைவாகவே தரைக்கு வரும். மாசி தொடக்கம் புரட்டாதி வரை இவற்றின் இனப்பொருக்க காலம். சித்திரை உயர் இனப்பெருக்க காலமாகக் காணப்படுகிறது. மரக்கிளை பிரியுமிடத்தில் தொட்டில் போன்று நெருக்கமாக கூடு கட்டும். கூடானது சிலந்திவலை, மரப்பாசி, மரநார் முதலியவற்றால் அமைக்கப்படும். கூடு கட்ட 4 நாட்கள் எடுத்துக் கொள்ளும் இப் பறவை, இரண்டு வெளிறிய நீல நிற முட்டைகளை இரண்டு நாட்கள் இடைவெளியில் இடும். 10 நாட்களுகளில் குஞ்சு பொரிக்கும். ஆணும் பெண்ணும் குஞ்சுகள் கவனித்து, உணவூட்டும். 10 நாட்களின் பின் குஞ்சுகள் பறக்கத் தயாராகிவிடும். பூச்சிகளை பிரதான உணவாகக் கொள்ளும் இவை மலர்த்தேன் மற்றும் சில பழங்களையும் உணவாகக் கொள்ளும்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

ஆரம்பத்தில் வாழ்த்தி எழுதியதுடன் சரி

இதற்கெல்லாம் தேடி எழுத நேரம் வேண்டும் உறவுகளா.

எனக்கு அதுதான் பிரச்சினை.

வச்சுக்கொண்டு வஞ்சகம் செய்யவில்லை. புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுள்ளது.

மற்றும் படி கோவின் ஆக்கங்களுக்கெல்லாம் ஒரு வரி எழுதி பாராட்ட தவறுவதில்லை. (கண்ணில் பட்டால்)

எனக்கும் உங்களுக்கும் தொடர்பே அதுதானே!!!!!!!! :D :D ஆனா வெளியில வேறமாதி தெரியும் :lol::D :D உங்கள் வருகைக்கும் அக்கறைக்கும் மிக்க நன்றிகள் விசுகர் .

  • தொடங்கியவர்

இன்னும் சிறிது நேரத்தில் முடிவைத்தருகின்றேன் . அதுவரையில் ..........................

  • தொடங்கியவர்

படம் முப்பத்தி எட்டிற்கான தூயதமிழ் வெள்ளைக்கண்ணிக் குருவியாகும் . யாரும் இந்தக்குருவியை இங்காணமுடியாததால் சிறப்புப்பரிசும் கொடுக்கமுடியவில்லை .

  • தொடங்கியவர்

[size=5]39 பனங்காடை ( Coracias benghalensis )[/size]

indian_roller_copy4.jpg

பனங்காடை என்பது ஆசியக் கண்டத்தின் தெற்குப்பகுதியில் காணப்படும் ஒரு பறவை. இப்பறவை பாலக்குருவி என்றும் அழைக்கப்படும்.இது ஈராக் முதல் தாய்லாந்து வரை காணப்படுகிறது. இப்பறவை நீலமும் பழுப்பும் கலந்த நிறத்தில் இருக்கும். திறந்த புல்வெளிகளிலும் காட்டுப்பகுதிகளிலும் பொதுவாகக் காணப்படும். ஆண், பெண் பறவைகளுக்கிடையே தோற்றத்தில் குறிப்பிடத்தக்க வேறுபாடு இல்லை. கொண்டை, வால், இறக்கைப் பகுதிகள் நீலநிறத்திலும் கழுத்து உடலின் அடிப்பகுதி பழுப்பு நிறத்திலும் இருக்கும்.

இப்பறவைகள் சிறு பூச்சிகள், ஊர்வன, தவளை முதலானவற்றை உணவாகக் கொள்ளும். மார்ச் முதல் சூன் வரையான காலம் இவற்றின் இனப்பெருக்க காலம். பொதுவாக மரப்பொந்துகளில் மூன்று முதல் ஐந்து வரை முட்டைகள் இடும். இவற்றின் ஒலி காக்கை கரைவது போல் இருக்கும்.

இப்பறவை கர்நாடகா, ஆந்திரா, ஒரிசா, பீகார் மாநிலங்களின் மாநிலப்பறவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பனங்காடையைப் பார்த்தால் நல்ல சகுனம் என்றும் ஒரு நம்பிக்கை உண்டு. முன்பு மேனாட்டுச்சீமாட்டிகள் உடையலங்காரத்திற்கு இதன் சிறகுகளைப் பயன்படுத்தியதால் இவை வேட்டையாடப்பட்டு இதன் இறகுகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

என்னை யாராவது கண்டுபிடியங்கோவன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் குருவிகள் எல்லாம்... ஊரில், இருந்ததா?

பல குருவிகளை நான் காணவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் குருவிகள் எல்லாம்... ஊரில், இருந்ததா?

பல குருவிகளை நான் காணவில்லை.

நீங்கள் வேறு குருவிகளை தேடித்திரிந்த்ததால் . இதை கண்டிருக்க மாட்டீர்கள் :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வேறு குருவிகளை தேடித்திரிந்த்ததால் இதை கண்டிருக்க மாட்டீர்கள் :icon_mrgreen:

AF1Bird010.gifஅதெண்டால்... உண்மைதான். :D:lol:desismileys_0526.gif

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் குருவிகள் எல்லாம்... ஊரில், இருந்ததா?

பல குருவிகளை நான் காணவில்லை.

இதே பிரச்சினை தான் எனக்கும்.

நீங்கள் வேறு குருவிகளை தேடித்திரிந்த்ததால் . இதை கண்டிருக்க மாட்டீர்கள் :icon_mrgreen:

இப்பதான் புரியுது

நானும் சிறியும் ஒரே ரத்தமல்லோ........ :lol::D :D

AF1Bird010.gifஅதெண்டால்... உண்மைதான். :D:lol:desismileys_0526.gif

:wub::D :D

  • கருத்துக்கள உறவுகள்

இதே பிரச்சினை தான் எனக்கும்.

இப்பதான் புரியுது

நானும் சிறியும் ஒரே ரத்தமல்லோ........ :lol::D :D

:wub::D :D

நான் ஊரில் கண்ட குருவிகள் என்றால்... ஒரு பத்துப் பறவைக்குள் விரல் விட்டு எண்ணிவிடலாம் விசுகு.

:D :D :lol:

  • கருத்துக்கள உறவுகள்

[size=4] பத்துப் பறவைக்குள் விரல் விட்டு// அங்க ஏன் விரல விட்டீங்க ?[/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தக் குருவிகள் எல்லாம்... ஊரில், இருந்ததா?

பல குருவிகளை நான் காணவில்லை.

எனக்கும்தான் :D

நான் ஊரில் கண்ட குருவிகள் என்றால்... ஒரு பத்துப் பறவைக்குள் விரல் விட்டு எண்ணிவிடலாம் விசுகு.

:D :D :lol:

அதிலையும் காகம்,நாரை,பச்சைக்கிளி,மைனா,கொக்கு முக்கிய இடம் பிடிக்கும். :lol::D :D

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிஞ்ச குருவியள் கொஞ்சம் றோசம்மா . ராசாத்தி பல்லி எண்டு யாழ்ப்பாண ரவுணுக்குள்ளை சுத்தினது பெயர்கள் ஞாபகம் படங்கள்தான் இல்லை ஒழுங்கா போன திரிக்குள்ளை குறுக்கிட்டதுக்கு கோ மன்னிக்கவும்.

  • தொடங்கியவர்

கருத்துக்களைப் பதிந்த தமிழினி ,தமிழ் சிறி ,குமாரசாமியர் ,விசுகு ,சாத்திரி ஆகியோருக்கு மிக்க நன்றிகள் இன்னும் சிறிது நேரத்தில் முடிவைத்தருகின்றேன் . அதுவரையில் ..........................

  • தொடங்கியவர்

படம் முப்பத்திஒன்பதிற்கான தூயதமிழ் பனங்காடை ஆகும் . தமிழினி ஒருவரே இந்தக்குருவியை அடையாளங் காட்டியதால் சிறப்புப் பரிசிலுக்குத் தெரிவாகின்றார் .

br-j-i1-diamond-v-necklace-in-18kt-yellow-gold-518.jpg

br-j-i1-diamond-v-necklace-in-18kt-yello

பரிசு பெற்ற தமிழினிக்கு வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

[size=5]40 இலங்கைக் காட்டுக்கோழி ( Gallus lafayetii ) .[/size]

1024px-Flickr_-_Rainbirder_-_Ceylon_Junglefowl_%28Gallus_lafayetii%29_Male.jpg

http://upload.wikime...yetii)_Male.jpg

இது இலங்கைக்கு உரியது. இது வீட்டில் வளர்க்கும் கோழிகளை உருவாக்கிய காட்டுக்கோழியான, இந்தியாவின் சிவப்புக் காட்டுக்கோழி எனப்படும் கல்லஸ் கல்லஸ் வகைக்கு நெருங்கிய உறவுள்ளது.

இவை அளவிற் பெரிய பறவைகள், ஆண் பறவைகள் பல நிறம் கொண்ட இறகுகளைக் கொண்டவை, எனினும் அடர்த்தியான காடுகளில் இவற்றைக் கண்டுகொள்வது கடினம். இவை காடுகளிலும், பற்றைகளிலும் வாழுகின்றன. இலங்கையில் இவற்றை, கித்துல்கல, யால, சிங்கராஜ ஆகிய இடங்களில் காணலாம்.

இது கல்லஸ் இனத்தைச் சேர்ந்த நான்கு வகைப் பறவைகளில் ஒன்று. இது ஒரு நிலத்தில் கூடு கட்டும் பறவை. இது ஒரு கூட்டில் 2 - 4 முட்டைகள் வரை இடும். பெசண்ட் குடும்பத்தைச் சேர்ந்த பல பறவைகளைப் போலவே இவ் வகையிலும், ஆண் பறவைகள், அடைகாப்பதிலோ அல்லது பொரிக்கும் குஞ்சுகளை வளர்ப்பதிலோ எவ்வித பங்கும் வகிப்பதில்லை. இவ் வேலைகளை மங்கலான நிறத்துடன், சிறப்பான உருமறைப்புக்கான உடலைக் கொண்ட பெண் பறவைகளே செய்கின்றன.

ஆண் இலங்கைக் காட்டுக்கோழி சுமார் 66 - 73 சமீ. வரை நீளம் கொண்ட பறவையாகும். இது நாட்டுக் கோழி போன்ற உடலமைப்பும், செம்மஞ்சள் கலந்த சிவப்பு நிற உடல் நிறமும், கடும் ஊதா நிற சிறகுகளையும், வாலையும் கொண்டது. தலையின் பின்பகுதியும், கழுத்தும் பொன்னிறமானவை. முகம் வெறுமையான சிவப்புத் தோலையும், முகப்பகுதியிலிருந்து மடிந்து நீண்டு தொங்கும் செந்நிறத் தோற் பகுதியையும் கொண்டது. உச்சியிலமைந்துள்ள "கொண்டை" யும், மஞ்சளான மையப் பகுதியுடன் கூடிய சிவப்பு நிறமானதே.

பெண் மிகவும் சிறியது, 35 சமீ. நீளம் மட்டுமே கொண்டது. இவை அடிவயிற்றிலும், மார்பிலும் வெள்ளை நிறம் அமைந்த, மண்ணிற உடல் நிறம் கொண்டவை.

பெரும்பாலான பெசண்ட் குடும்பப் பறவைகளைப் போலவே இலங்கைக் காட்டுக்கோழியும் நிலத்தில் வாழும் வகையாகும். இவை நிலத்தைக் கால்களால் கிளறி, பல்வேறு விதைகள், விழுந்த பழங்கள், மற்றும் பூச்சிகள் போன்றவற்றை எடுத்து உண்கின்றன. காட்டுக்கோழி இலங்கையின் தேசியப் பறவையாகப் அறிவிக்கப்பட்டுள்ளது.

http://ta.wikipedia....க்_காட்டுக்கோழி

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

இது சேவல்

(இதாவது தெரிந்திருக்கே) :D

  • கருத்துக்கள உறவுகள்

[size=4] ஊர்ச் சேவல்.[/size]

காட்டு கோழி சேவல்

Edited by KULAKADDAN

  • தொடங்கியவர்

கருத்துக்களைத் தெரிவித்த விசுகர் , நிலாமதி அக்கா , குளக்காட்டான் ஆகியோருக்கு மிக்க நன்றிகள் .

[size=4]இலங்கைக் காட்டுக்கோழி[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.