Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறந்த குருவிகளும் பறந்த பெயர்களும் .

Featured Replies

  • தொடங்கியவர்

செண்பகம் பற்றி எனது பதிவு, செண்பகம் கூடுகட்டும்போது அதனுள் ஒரு தடி வைக்குமாம், அந்த தடியை எடுத்து வீட்டினுள் வைத்தால், நாணம் என்று அம்மா சொல்ல நான் எங்களின் மாமரத்தில் ஏறி கூடு கலைத்த ஞாபகம். அந்த குச்சிகளுக்குள் எந்த குச்சிய தேடுறது? ஒரு கூட்டை கலைத்த பாவம் மட்டுமே மிஞ்சியது!

சின்ன வயசிலை தானே அறியாமல் செய்தியள் . அதுகளின்ரை கூட்டைக் கலைக்கிறது பாவம்தான் . சிலநேரம் கருவி பொந்துகளுக்கை பம்பு முட்டை குடிக்க வரேக்கை அதுகள் போடுற சத்தம் இருக்கே , எனக்குப் பண்டிவிசர் தான் வரும் . உங்கள் அனுபவப் பகிர்வுக்கு மிக்க நன்றிகள் மலையான் .

  • Replies 445
  • Views 91k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் உங்கள் குருவிக்கூடு நன்றாக உள்ளது.

குருவிகளைத் தெரிந்திருந்தாலும் அதன் பெயர்கள் நினைவில் இருப்பதில்லை.

நல்ல பயனுள்ள திரி தொடருங்கள்.

கொண்டைவால்க்குருவி என ஒரு குருவி இருந்தால்

அது இது தான் :D

  • தொடங்கியவர்

படம் மூன்றிற்கான தூயதமிழ் " அரசவால் ஈபிடிப்பான் " ஆகும் . நாங்கள் பலபெயர்களில் இந்தக் குருவியை அழைத்தாலும் , அரசவால்ஈபிடிப்பானே தூய தமிழ்ச் சொல் ஆகின்றது . அந்தவகையில் குளக்காட்டானும் , தமிழினியுமே சரியான பதில்களைத் தந்திருந்தார்கள் . அவர்களுக்கு முறையே மூல் MOULES ( மட்டி ) பிறித்தை FRITES ( FTRENCH FRIGHT ) ( தமிழினியின் விருப்பத்திற்கு அமைய தேனீரும் பருத்தித்துறை வடையும் ) அன்பளிப்பாக வழங்குகின்றேன் . மேலும் குருவிகளுடன் கதைத்த புங்கையூரான் , நிலாமதி அக்கா , குமாரசாமி அண்ணை , சாத்திரி , விசுகர் , கரும்பு , மலையான் , வாத்தியார் ஆகியோரிற்கு எனது மனமார்ந்த நன்றிகள் .

தமிழினி .

4195180274_f75a6e9a39.jpg

+

Tea1.jpg

குளக்காட்டான் .

43517941.jpg

பரிசு பெற்றவர்களுக்கு வாழ்துக்கள் . நல்ல வடிவாய் சாப்பிடுங்கோ .

Edited by கோமகன்

குளக்காட்டான் .

43517941.jpg

பரிசு பெற்றவர்களுக்கு வாழ்துக்கள் . நல்ல வடிவாய் சாப்பிடுங்கோ .

நன்றி :)

  • தொடங்கியவர்

04 கொண்டலாட்டிக் குருவி ( red - vented bulbul ) .

2506351524_af679d1b3f.jpg

இராப்பாடி என்னும் (nightingale) பறவை தேன்சிட்டு என்றும் வானம்பாடி என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு அழிந்து வரும் பறவை இனம். இது இரவு நேரங்களில் பாடுவதால் இது இராப்பாடி என்று அழைக்கப்படுகிறது.

இது ஒரு இடம்பெயரும், பூச்சியுண்ணும் இனமாகும். ஐரோப்பிய, தென்மேற்கு ஆசிய நாடுகளில் காடுகளில் இனம்பெருக்கி வளர்கின்றது. பொதுவாக அமெரிக்காவில் இயற்கையில் இருப்பதில்லை.

http://ta.wikipedia..../wiki/இராப்பாடி

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

2506351524_af679d1b3f.jpg

இதைத் தானே சின்னான் குருவி என்பார்கள் :D

  • கருத்துக்கள உறவுகள்

கொண்டைக் கிளாறி .....or ...கொண்டை கிளப்பி ........

Edited by நிலாமதி

கொண்டலாட்டி அல்லது கொண்டை குருவி

  • கருத்துக்கள உறவுகள்

கொண்டை கிளப்பி அல்லது கொண்டை குருவி அல்லது கொண்டைக் கிளாறி அல்லது கொண்டலாட்டி

:lol:

:lol:

:lol:

  • தொடங்கியவர்

**************** குருவிக்கு அன்பாக ஹாய் சொல்ல முயற்சி செய்த வாத்தியார் , நிலாமதி அக்கா , குளக்காட்டான் ஆகியோருக்கு மிக்க நன்றிகள் .

  • தொடங்கியவர்

இன்னும் சிறிது நேரத்தில் படம் 4 ற்கான சரியான பெயரைச் சொன்னவரது பெயரையும் , சிறப்புப் பரிசையும் அறிவிக்கின்றேன் .

  • தொடங்கியவர்

படம் நான்கிற்கான தூயதமிழ் கொண்டலாட்டிக் குருவி ( RED VENTED BULBUL ) ஆகும் . நாங்கள் தேன்சிட்டு அல்லது வானம்பாடி என்று பலபெயர்களில் இந்தக் குருவியை அழைத்தாலும் , கொண்டலாட்டிக் குருவி தூய தமிழ்ச் சொல் ஆகின்றது . அந்தவகையில் குளக்காட்டானும் ரதியுமே சரியான பதிலைத் தந்திருந்தார்கள் , குளக்காட்டான் ரதிக்கு சிறப்புப் பரிசில்களை அளிக்கின்றேன் . குருவிகளுடன் கதைத்த வாத்தியார் , நிலாமதி அக்கா குளக்காட்டான் , ரதி ஆகியோருக்கு மிக்க நன்றிகள் .

இந்தக்குருவி சம்பந்தமாக நான் மீண்டும் ஆராய்ந்த பொழுது " கொண்டலாட்டி " என்ற பெயரே சரியாகின்றது . தவறான தகவலையும் , முடிவையும் எடுத்ததிற்காக மிகவும் மனம் வருந்துகின்றேன் .

நேசமுடன் கோமகன் .

குளக்காட்டான் :

burberry-1399.jpg

http://www.echarpeburberry.eu/burberry-tie-bu015-p-324.html

ரதி:

Women%20Scarf.jpg

http://www.google.fr...,r:1,s:24,i:149

பரிசுபெற்ற குளக்காட்டான் ரதிக்கு வாழ்த்துக்கள் .

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

05 அன்றில் பறவை (Plegadis falcinellus) ( அரிவாள் மூக்கன் ) .

1103px-Plegadis_falcinellus_%28aka%29_background_blurred.jpg

http://ta.wikipedia....alcinellus_(aka)_background_blurred.jpg

அன்றில் பறவை (Plegadis falcinellus) திரெஸ்கியோர்நித்திடே(Threskiornithidae) என்ற அரிவாள் மூக்கன் குடும்பத்தைச் சார்ந்த ஒரு கரைப்பறவை (shore bird or wader) ஆகும்.

அன்றில் பறவை போல மகன்றில் பறவையும் இணைபிரியாமல் வாழும் இயல்பினை உடையது.

இப்பறவையே ஐபிஸ் இனத்தில் பரவலாகக் காணப்படும் இனனமாகும். இது ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவின் அட்லாண்டிக் பெருங்கடல், கரீபியன் பகுதிகளில் ஆங்காங்கு காணப்படுகின்றன. இது பழைய உலகின் பகுதிகளில் தோன்றிப் பின் இயற்கையாக ஆப்பிரிகாவிலிருந்து 19ம் நூற்றாண்டில் தென் அமெரிக்காவிற்குப் பரவியதாக நம்பப்படுகிறது. இவ்வினமானது புலம் பெயரக்கூடியது; ஐரோப்பிய இனம் குளிர்காலங்களில் ஆப்பிரிக்காவிலும், வட அமெரிக்க இனம் கரோலினாவின் வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும் பெயர்கின்றன. பிற இனங்கள் இனச்சேர்க்கைக் காலங்கள் அல்லாத பிறகாலங்களில் பரவலாகப் பெயர்கின்றன.

அன்றில் பறவை மரக்கிளைகளில் பிற கொக்குகளோடு கூட்டமாக முட்டையிடுகின்றன. சதுப்பு நிலங்களில் மந்தையாக இறை தேடக்கூடியவை இவை; மீன், தவளை மற்றும் பிற நீர்வாழ் உயிர்களையும், அவ்வப்போது பூச்சிகளையும் இரையாகக் கொள்கின்றன.

இவ்வினம் 55–65 செ.மீ. நீளமும் 88–105 செ.மீ. இறக்கை வீச்சளவும் கொண்டிருக்கும். பருவம்வந்த பறவைகள் செந்நிற உடலும் ஒளிரும் கரும்பச்சை இறக்கைகளையும் கொண்டிருக்கின்றன. பருவம் வராத இளம் பறவைகள் பழுப்பு நிறத்தில் காணப்படுகின்றன. இவ்வினம் மரப்பழுப்பு நிற அலகினையும், கறுத்த மேற்புறமும், நீலப் பழுப்பு நிறத்திலிருந்து நீலம் வரையிலான கீழ்ப்புறமும், சிவந்த பழுப்பு நிறக் கால்களையும் கொண்டு காணப்படுகிறது. கொக்குகளைப் போல் அல்லாமல், அன்றில் பறவைகள் கழுத்தை நீட்டியும், பெரும்பாலும் வரிசைகளிலும் பறக்கின்றன.

பொதுவாக அமைதியான அன்றில் பறவை இனப்பெருக்கக் காலங்களில் கரகரப்பான உறுமல் போன்ற கிர்ர்ர் என்ற ஒலியினை ஏற்படுத்துகின்றது.

அன்றில் நெய்தல் நிலத்தில் வாழும் பறவையினம். இதன் தலை சிவப்பு நிறம் கொண்டது. இதன் அலகு இறால்மீனுக்கு உள்ளதுபோல் இருக்கும். மேலும் வளைவானது. கூர்மையானது. கடலோரப் பனைமரக் கொம்புகளில் கூடுகட்டிக்கொண்டு வாழும். நாரையைப்போல் இதன் உணவு மீன். அன்றில் தன் துணையுடன் சேர்ந்தே வாழும். துணையில் ஒன்று பிரிந்தாலும் குரல் எழுப்பும். இந்தக் குரலை ‘அகவல்’ என்பர். ஆணும் பெண்ணும் சேர்ந்திருக்கும்போது எழுப்பும் குரலை ‘உளறல்’ என்றும், பெண் கருவிற்றிருக்கும்போதும் எழுப்பும் குரலை ‘நரலல்’ என்றும் சங்கத்தமிழ் பாகுபடுத்தி வழங்குகிறது.

தன்னைப்போல் துணையைப் பிரிந்து அகவுகிறதோ என்றும், தான் துணையைப் பிரிந்திருப்பதால் தன்மேல் இரக்கப்பட்டு அகவுகிறாயோ என்றும் இரவில் எழுப்பும் இதன் குரலை அகப்பாடல் தலைவிகள் கற்பனை செய்து பேசுகின்றனர்.

http://ta.wikipedia....rg/wiki/அன்றில்

Edited by கோமகன்

கோமகன் உங்கள் பணி பாராட்டுக்குரியது. நீங்கள் இந்த திரியை தொடங்கா விட்டால் பல பறவைகளின் தமிழ் பெயர்களை தேடியே பார்த்திருக்க மாட்டேன்.

நீங்கள் சொன்ன red vented bulbul க்கான தமிழ் பெயர் ......

விக்கிபீடியா சொல்லும் எல்லா பெயரும் முற்றுமுழுதாக சரி என சொல்லமுடியாது. அதேநேரம்

விக்கிபீடியா சொல்லும் 3 தமிழ் பெயர்களும் பிழை என்றும் சொல்லமுடியாது.

Being well known in culture they have been referred to by many local names including Kala bulbul (=black bulbul), Bulbuli, and Guldum in Hindi, Kala painju in Himachal Pradesh; Assamese: Bulbuli sorai; Cachar: Dao bulip; Dafla: Nili betom; Lepcha: Mancleph-pho; Naga: Inrui bulip; Bhutan: Paklom; Bhil: Peetrolyo; Gujarati: Hadiyo bulbul; Kutchi: Bhilbhil; Marathi: Lalbudya bulbul; Oriya: Bulubul; Tamil: Kondanchiradi, Konda-lati, Kondai kuruvi; Telugu: Pigli-pitta; Malayalam: Nattu bulbul; Kannada: Kempu dwarada pikalara; Sinhala: Konde குருள்ள

http://en.wikipedia.org/wiki/Red-vented_Bulbul

  • தொடங்கியவர்

கோமகன் உங்கள் பணி பாராட்டுக்குரியது. நீங்கள் இந்த திரியை தொடங்கா விட்டால் பல பறவைகளின் தமிழ் பெயர்களை தேடியே பார்த்திருக்க மாட்டேன்.

நீங்கள் சொன்ன red vented bulbul க்கான தமிழ் பெயர் ......

விக்கிபீடியா சொல்லும் எல்லா பெயரும் முற்றுமுழுதாக சரி என சொல்லமுடியாது. அதேநேரம்

விக்கிபீடியா சொல்லும் 3 தமிழ் பெயர்களும் பிழை என்றும் சொல்லமுடியாது.

Being well known in culture they have been referred to by many local names including Kala bulbul (=black bulbul), Bulbuli, and Guldum in Hindi, Kala painju in Himachal Pradesh; Assamese: Bulbuli sorai; Cachar: Dao bulip; Dafla: Nili betom; Lepcha: Mancleph-pho; Naga: Inrui bulip; Bhutan: Paklom; Bhil: Peetrolyo; Gujarati: Hadiyo bulbul; Kutchi: Bhilbhil; Marathi: Lalbudya bulbul; Oriya: Bulubul; Tamil: Kondanchiradi, Konda-lati, Kondai kuruvi; Telugu: Pigli-pitta; Malayalam: Nattu bulbul; Kannada: Kempu dwarada pikalara; Sinhala: Konde குருள்ள

http://en.wikipedia....d-vented_Bulbul

உங்கள் நீண்ட கருத்துக்களுக்கும் , விளக்கத்திற்கும் மிக்க நன்றிகள் குளக்காட்டான் . நான் எனக்குக் கிடைத்த ஒரு புத்தகத்தின் ஊடாகவே இந்தக் குருவிகளுக்கான தூயதமிழைத் தேடுகின்றேன் . நான் அகரவரிசையில் தொடங்கியிருப்பதால் நீங்கள் குறிப்பிட்ட கொண்டலாத்திக் குருவி தலையில் கருமைநிறமான ஒரு கொண்டை , அல்லது தொப்பிமாதிரி இருக்கும் . ஆண் குருவி ஆயின் வால் பக்கம் நீண்ட தோகையாக இருக்கும் . மேலும் நீங்கள் சொல்கின்ற விக்கிபீடியா தொடர்பான கருத்திற்கு நானும் உடன்பாடே . நான் போட்ட படத்திற்கு கொண்டை இல்லை . படத்தின் கீழ் இராப்பாடிக்குருவி என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் புத்தகத்தில் போட்டிருந்தார்கள் . படத்திற்கும் , மேலதிக தகவலுக்கும் விக்கியின் உதவியை நாடினேன் . தவறுகள் இருந்தால் சொல்லுங்கள் , நான் எனது முடிவை மறுபரிசீலனை செய்கின்றேன் .

உங்கள் நீண்ட கருத்துக்களுக்கும் , விளக்கத்திற்கும் மிக்க நன்றிகள் குளக்காட்டான் . நான் எனக்குக் கிடைத்த ஒரு புத்தகத்தின் ஊடாகவே இந்தக் குருவிகளுக்கான தூயதமிழைத் தேடுகின்றேன் . நான் அகரவரிசையில் தொடங்கியிருப்பதால் நீங்கள் குறிப்பிட்ட கொண்டலாத்திக் குருவி தலையில் கருமைநிறமான ஒரு கொண்டை , அல்லது தொப்பிமாதிரி இருக்கும் . ஆண் குருவி ஆயின் வால் பக்கம் நீண்ட தோகையாக இருக்கும் . மேலும் நீங்கள் சொல்கின்ற விக்கிபீடியா தொடர்பான கருத்திற்கு நானும் உடன்பாடே . நான் போட்ட படத்திற்கு கொண்டை இல்லை . படத்தின் கீழ் இராப்பாடிக்குருவி என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் புத்தகத்தில் போட்டிருந்தார்கள் . படத்திற்கும் , மேலதிக தகவலுக்கும் விக்கியின் உதவியை நாடினேன் . தவறுகள் இருந்தால் சொல்லுங்கள் , நான் எனது முடிவை மறுபரிசீலனை செய்கின்றேன் .

படம் எடுக்கும் கோணத்தை பொறுத்து கொண்டாய் தெரிவதும், தெரியாததும் இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் நீங்கள் போட்ட படத்தில் எனது பார்வைக்கு கொண்டை தெளிவாக தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

படம் நான்கிற்கான தூயதமிழ் இராப்பாடிக் குருவி ( RED VENTED BULBUL ) ஆகும் . நாங்கள் தேன்சிட்டு அல்லது வானம்பாடி என்று பலபெயர்களில் இந்தக் குருவியை அழைத்தாலும் , இராப்பாடிக் குருவியே தூய தமிழ்ச் சொல் ஆகின்றது . அந்தவகையில் ஒருவரும் சரியான பெயரைத் தராததால் , நான் சிறப்புப் பரிசை வழங்க முடியாமைக்கு வருந்துகின்றேன் . ஆனாலும் குருவிகளுடன் கதைத்த வாத்தியார் , நிலாமதி அக்கா குளக்காட்டான் , ரதி ஆகியோருக்கு மிக்க நன்றிகள் .

  • தொடங்கியவர்

கருத்துக்களையும் , காணொளியையும் இணைத்துப் பதிவிற்கு மெருகேற்றிய குளக்காட்டான் , நுணாவிலானுக்கு மிக்க நன்றிகள் . இறுதியாகப் பதிவு செய்த படத்திற்கான பரிசைத் தட்டப் போவது யார் ????????

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியாக போட்ட படம் கிவி ...... பறவை எண்ணுகிறேன். முன்பு ( shoe polish இல் பார்த்த ஞாபகம்.) :D

  • தொடங்கியவர்

அரிவாள் மூக்கன் :lol:

கிட்ட வந்திட்டியள் , கொஞ்சம் தான் இடைவெளி இருக்கு , இந்தப் பெயரைக் கண்டு பிடிக்க . இதற்கு இலக்கியத்திலும் , சங்க கால நூல்களிலும் ஒரு தனி இடமே உண்டு . இது குருவி இல்லை பறவை . இதன் அருமை பெருமை கருதியே இணைத்தேன் . முயற்சி செய்யுங்கோ தமிழ் , வெற்றி நிச்சயம் .

கடைசியாக போட்ட படம் கிவி ...... பறவை எண்ணுகிறேன். முன்பு ( shoe polish இல் பார்த்த ஞாபகம்.) :D

கிவி இவ்வளவு உயரமா ?? எங்கை பாத்தியள் நிலாமதி அக்கா !?

  • கருத்துக்கள உறவுகள்

அரிவாள் மூக்கன்(நாரை)

  • தொடங்கியவர்

படம் ஐந்திற்கான தூயதமிழ் அன்றில் பறவை (Plegadis falcinellus) ஆகும் . நாங்கள் அரிவாள்மூக்கன் என்று அழைத்தாலும் " அன்றில் " என்பதே தூய தமிழ்ச் சொல் ஆகின்றது . அந்தவகையில் யாயினியும் தமிழினியுமே சரியான பதிலைத் தந்திருந்தார்கள் , யாயினி ,தமிழினி ஆகியோருக்குச் சிறப்புப் பரிசில்களை அளிக்கின்றேன் .

யாயினி:

black-rabits_100787-1152x864.jpg

black-rabits_100787-1152x864.jpg

தமிழினி:

63282976.jpg

http://pavedecensier.canalblog.com/tag/pain%20chocolat

பரிசு பெற்ற யாயினி , தமிழினிக்கு வாழ்த்துக்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் கோ

தமிழ் இனி ஏற்கனவே புல் பூண்டு தாவரம் என்று மேயுறா?

இதைக்காட்டினா

ஓடப்போறா??? :lol::D :D

  • தொடங்கியவர்

ஏன் கோ

தமிழ் இனி ஏற்கனவே புல் பூண்டு தாவரம் என்று மேயுறா?

இதைக்காட்டினா

ஓடப்போறா??? :lol::D :D

ஏன் முயலோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.