Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இத்தாலி- திறிவேறோ நகரசபையால் சுயநிர்ணய உரிமையும் ,தேசியக் கொடியும் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது. (படங்கள்)

Featured Replies

26-03-2012 அன்று இத்தாலி தமிழ் தேசிய அமைப்புக்களினுடைய பிரதிநிகளுக்கும் வியல்லா மாநகரத்தில் உள்ள திறிவேறோ நகரசபை அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையில் நடந்த கலந்துரையாடலில் இத்தாலி ஈழத்தமிழர் மக்களவை தமிழ் இளையோர் அமைப்பினரினால் தயாரிக்கப்பட்ட தமிழ் இனப்படுகொலையை வெளிப்படுத்தும் காணொளி காண்பிக்கப்பட்டு தாயக மக்களுடைய இன்றைய நிலை தொடர்பாகவும் எமது இனத்துக்கு சிங்கள அரசுகளால் நடாத்தப்படும் கொடுமைகள் நிறுத்தப்பட்டு சர்வதேசத்தால் இதற்கு நீதி வழங்கி சுயநிர்ணய உரிமையுடன் கூடிய நிரந்தர அரசியல் தீர்வு வேண்டும் என்றும் கேட்டிருந்தோம்.

அதன் போது உரையாற்றிய மேஜர் திரு மஸ்சிமோ வியசேத்தி அவர்கள் நீண்டகாலமாக திரிவேரோ நகரத்தில் மிகவும் ஒழுக்கமாக சமூகமாக வாழும் உங்களிற்கு இனப்பிரச்சனை உண்டு என்பது தெரியும் ஆனால் இவ்வாறான கொடுமை நடந்ததென்பது இன்றுதான் அறிய முடிந்ததை என்ணி கவலையடைகிறேன் என்று கூறி இனியுடம் இவ்வாறான கொடுமைகள் தொடர்வதை அனுமதிக்க முடியாது . தங்களினுடைய அரசியல் பலம் சிறியது என்றாலும் அதனுhடாக செய்யக்கூடிய முயற்சிகளை செய்வதாக கூறினார். அதற்கு அனைத்து கட்சிகளும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டன.

தொடர்ந்து உரையாற்றிய லேகா நோட் கட்சியைச்சேர்ந்த திரு சில்வானோ அவர்கள் திறிவேரோ நகரசபை உரிமைகள் மறுக்கப்பட்ட இனங்களிற்கு ஆதரவாக இருப்பதாகவும் அவர்களுடைய தேசியக்கொடிகளை நகரசபை ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் (உதாரணம் தீபெத்) அந்த வகையில் தமிழீழத் தேசியக் கொடியையும் நாங்கள் அங்கீகரித்து நகரசபையில் வைத்திருக்க வேண்டும் என்று மேஜரை கேட்ட போது அதனையும் அனைத்துக் கட்சியினரும் ஏக மனதாக ஏற்றுக் கொண்டனர்.

20-05-2012 அன்று திறிவேறோவில் நடந்த முள்ளிவாய்கால் நிகழ்வில் கலந்து கொண்ட துணை மேஜர் திரு மாரியோ அவர்களும் லேகா நோட் கட்சியை சேர்ந்த திரு சில்வானோ அவர்களும் எமது தமிழீழ தேசியக் கொடியினை உத்தியோக பு+ர்வமாக பியமொந்தே மக்களவை பிரதிநிதி அவர்களிடம் பெற்றுக் கொண்ட நிகழ்வானது பல்லாயிரக்கணக்கான எமது மாவீரச்செல்வங்களின் அளப்பரிய தியாகத்தினாலும் சொல்ல முடியாத துன்பங்களை சுமந்து எமது விடுதலைக்காக தங்களை இழந்து பணிசெய்த மக்களுடைய அர்ப்பணிப்புக்கு கிடைத்த வெற்றியாகும். தமிழர்களின் வீரத்தை மீண்டும் உலகறியச்செய்த எங்கள் தேசியத் தலைவர் எம்மினத்துக்கு கிடைத்த பெருங்கொடையாகும்;. துமிழ் மக்கள் வாழும் ஒவ்வொரு பிரதேசமும், ஒவ்வொரு நாடும் எமது தேசியக்கொடியை உலகெல்லாம் பறக்கச் செய்வதும் எமது வரலாற்றுக் கடமைகளில் ஒன்றாகும். இந்நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் மிகவும் உணர்வு பூர்வமாக கரகோசமிட்டு மகிழ்தனர்.

திறிவேறோ நகரசபையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் தமிழ் வடிவமும,; இத்தாலி வடிவமும் இணைக்கப்பட்டுள்ளது.

doc-1-722x1024.jpgdoc-2.jpgIMG_6107-1024x682.jpgIMG_6106-copy.jpgIMG_6104-copy.jpgIMG_6103-copy.jpgIMG_6097-copy.jpgIMG_6095-copy.jpgIMG_6092-copy.jpg

http://thaaitamil.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8B-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88/

வாழ்த்துக்கள். மிக்க மகிழ்ச்சியான செய்தி. இதில் தொடர்புடைய உறவுகள் யாராவது யாழில் இருந்தால் இதை வெள்ளை மாளிகைக்கு அனுப்புவது நல்லதென்று நினைக்கிறேன். வெள்ளை மாளிகையில் இருந்து தமிழருக்கு மிகப்பொருத்தமான தீர்வுக்கு இப்படியான சகல வகைத்தலைவர்களையும் அழைத்து பகிரங்கமாக விவாதிக்க வேண்டும். சோல்பரியின் ஒற்றை ஆட்சி தீர்வு 70 ஆண்டுகளுக்கு மேலானதும், இன்றை வரையில் நடை முறைப்படுத்த முடியாமல் இருப்பதும் என்பதை வெள்ளை மாளிகையாருக்கு பலவிதமான தலைவர்களும் சேர்ந்து விளங்க வைக்க வேண்டும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி உறவுகளே...

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முன் மாதிரியான முயற்சி. இங்க லண்டனிலும் தமிழ் மக்களின் வாக்குகளை கெஞ்சி வாங்கிவிட்டு.. பதவி கிடைத்ததும்.. ரகசியமா.. சிறீலங்கா தூதரகத்தோடு.. தொடர்பு பேணி.. மகிந்தரை மடிக்குள் வைச்சிருக்கும்.. அவருக்காக பிரித்தானிய அரசியல்வாதிகளிடம் பரிந்து பேசும்.. கவுண்சிலர்கள் சிலரோடு ஒப்பிடும் போது.. இந்த உறவுகளின் நியாயமான செயற்பாடு.. பாராட்டத்தக்கது. வரவேற்கத்தக்கது..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு முயற்ச்சி நன்றி உறவுகளே .....

மிகவும் பாராட்ட தக்க விடயம். இதற்காக உழைத்த உறவுகளுக்கு நன்றிகள்.

உன்னதமான செயற்பாடு. ஒரு அங்கீகாரத்திற்காகக் காத்திருப்பதும் , அதற்கான முதலடி எடுத்து வைத்திருப்பதும் மகிழ்ச்சியைத் தருகிறது. புலம்பெயர் நாட்டுத்தமிழர்கள் அந் நாட்டின் அரசிடமிருந்து தமிழர் தமிழீழத்திற்கான அங்கீகாரத்தை எதிர்பார்ப்பதற்கு முன் அந்தந்த நாட்டின் ஆரம்ப அரசியல் ஆட்சியிடம் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு முயற்சித்தல் இத் தருணத்தில் நல்ல வளர்ச்சி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.