Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிர்ச்சி தரும் சிறிலங்காவின் போர்குற்றங்கள் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திடம் கிடைத்துள்ள ஆதாரங்கள் !

Featured Replies

http://naathamnews.com/?p=6484

தமிழினத்தின் மீதான சிறிலங்காவின் போர் குற்றங்கள், இனப்படுகொலை தொடர்பிலான புதிய ஆதாரங்கள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திடம் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நா.த.அரசாங்கத்தின் தகவற்றுறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் ‘த இன்டிபென்டன்ட்’ ஊடகத்திடம் குறித்த ஆதாரங்களை கையளித்திருந்த வழக்கறிஞர் வாசுகி முருகதாஸ் அவர்கள், குறித்த ஆதாரங்களை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திடமும் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதொலைபேசியின் வழியே பதிவு செய்யப்பட்ட, 25க்கும் மேற்பட்ட ஒளிப்படங்களுடன், 3நிமிட அளவிலான காணொளிப்பதிவும் அவ் ஆதாரங்களாக உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://youtu.be/Gdo5GLBOU7M

http://youtu.be/hBclZIZIoq4

சிறிலங்கா தொடர்பில், சுதந்திரமான அனைத்துலக விசாரணையின் அவசியத்தினையே மீண்டும் ஒருதடவை, இந்த ஆதாரங்கள் வலியுறுத்தி நிற்பதாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தகவற்துறை அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத்தீவில் இயங்கி வரும் சிறிலங்காவின் அரசியல், இராணுவக் கட்டமைப்பின் உயர் மட்டத் தலைவர்களுக்கு, இக் காட்டுமிராண்டித் தனமான குற்றங்களில் பெரும் பங்குண்டு என்பதுடன், அவர்களின் பங்களிப்புடனேயே, இக் கொடுமைகள் நிகழ்ந்துள்ளன என்பதை இந்த ஆதாரங்கள் தெளிவாக காட்டுவதோடு, இதுவரை வெளிவந்துள்ள எல்லாவகை ஆதாரங்களின் அடிப்படையில், இன்றைய தேவை சுதந்திரமான அனைத்துலக விசாரணை ஒன்று மட்டுமேயாகும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தகவற்துறை அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DSC00063.jpgDSC00066.jpgDSC00072.jpgDSC00075.jpg

... இது நேற்றைய இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் "தி இன்டிபென்டன்ட்" நாளேட்டு செய்தி!! ... இன்று நாகதஅ வின் செய்தியாம்! ?... நாளை???

... சரி இதைக்கொண்டு என்ன செய்யப்போகிறீர்கள் என்பதை எம்மக்களுக்கு கூறுங்கள்! உருப்படியாக ஏதாவது செய்யுங்கள்!! அதை விடுத்து அங்கு போனது எங்களுக்கும் வந்தது! எங்களுக்கு வந்ததுதான் அங்கும் போனது! என்பது போன்ற குத்தாட்டங்கள் வேண்டாம்!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103446

  • தொடங்கியவர்

நெல்லையன்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை அதற்கு வாக்களித்த மக்கள் பார்பார்கள்.

மற்றது இப்படி போலி முகத்தைப் போட்டுக் கொண்டு இருட்டுக்குள் நின்று கொண்டு 'கறுப்பு' விளையாட்டு காட்டாமல் வெளிப்டையாக வந்து கருத்துக்களை கூறுங்கள்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை அழிக்க நினைக்கிற சிங்கள தேசத்துக்கும் உமக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

அடிப்படையில் தமிழர்களின் போராட்டத்தினை அழிக்க வேண்டும் என்பதே உங்களுக்குள் இருக்கின்ற ஒற்றுமை.

நிச்சயம் அது நடக்காது

:icon_mrgreen:

... ஏதாவது உருப்படியாக செய்தால்தான் தடைகள் வரும், எதிரிகள் அழிக்க நினைப்பார்கள் ... நீங்கள் ஒன்றும் செய்வதே இல்லையே பின்பு ஏன் வதந்திகளை பரப்புகிறீர்கள், உங்களை சிங்களம் அழிக்க முற்படுகிறது என்று???????????!!!!!!!!! ...

... இல்லை அதற்கு மேல் செய்தவைகளும் ... புலமெங்கும் திடீரென தோன்றிய தலைமைச்செயலக வீராதி வீரர்களின் துணையுடன் ... மாவீரர் வணக்க நிகழ்வுகளை சீரளித்தது ... ஊர்வலங்கள்/போராட்டங்களை பிரித்து நாலா திசையில் கொண்டு சென்றது ... இவைகளை விட வேறு ஏதாவது???????????

... இங்கு நாகதஅ இற்கு எதிராக கருத்துக்கள் எழுதப்படுகின்றன/பேசப்படுகின்றது என்பதை வைத்து முற்று முழுதாக எதிர்க்கிறோம் என்று அர்த்தம் கொள்ளாதீர்கள்! ... நாகதஅ ஆரம்பிக்கப்பட்ட சமயமோ, அதற்கு முன் கேபி அரைகுறை ஆங்கிலத்தில் நாகதஅ இற்கு அடித்தளம் இட்டபோது தொடக்கம் ஆதரித்தவர்கள் நாங்கள் ... கேபியின் முகமறியாது!!! பின் கேபியின் சரணாகதி நாடகம் கொஞ்சம் கொஞ்சமாக அம்பலத்துக்கு வர வர, நாகதஅ வை நோக்கியும் பல கேள்விகள் ... விடைகளற்று!!! ... இன்றும் நாகதஅ இற்குள்ளும் இருக்கும் பலர் உண்மையில் எமக்கு விடிவு வேண்டும் என உழைப்பவர்கள், அதில் சந்தேகம் இல்லை ... ஆனால் ... இந்த நாகதஅ இன் பின்னணியில் ... முன்னுக்கு வராமல் ... நிற்கும் சிலர், இன்றும் நின்று முட்டுக்கட்டைகளை இட்டு, செயற்பாடற்ற அமைப்பாக மாற்றிய நச்சுக்களையே அகற்ற வேண்டும், நச்சுக்களால் விலகியோர் திரும்ப வேண்டும் ..மென்ற அவா, அதையே பலர் எதிர்பார்க்கின்றார்கள் ... விரிவாக எழுத விரும்பவில்லை!!

... அதைவிடுத்து கறுப்பு என்றும் வெள்ளை என்றும் அடைமொழி மிரட்டல்கள் வேண்டாம்!...

Edited by Nellaiyan

இறந்தவர்களின் விடையம். விவாதங்கள் நல்ல பயனைத்தர வேண்டும்.

இது நேற்றைய இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் "தி இன்டிபென்டன்ட்" நாளேட்டு செய்தி!! ... இன்று நாகதஅ வின் செய்தியாம்! ?... நாளை???

சிங்களவன் தமிழனைக் கொன்று குவித்து வைத்திருக்கிறான். அது தற்செயலாக வெளிவரும்போது கவலைப்பட வேண்ணடியவர்கள் குழறி அழுவார்கள். புலம்புவார்கள். இரக்கம் உள்ளவன் உணர்வுள்ளவன் அப்படித்தான் செய்வான். படுகொலையைப் பார்த்து அழுபவனையும் புலம்புபவனையும் என்ன அழுகிறாய்? என்று கேட்டால் உங்களை போல் இனவுணர்வற்றவன் யாரும் இருக்க முடியாது,

  • கருத்துக்கள உறவுகள்

மேலேயுள்ள படங்களின், துண்டாடுபட்டுக் கிடப்பது, நமது உறவுகள்!

உறவுகள் இல்லாவிட்டாலும், நமது இனத்தவர்!

சரி, அது தான் வேண்டாம்! மனிதர்கள் என்றே வைத்துக் கொள்ளுவோம்!

தயவு செய்து, எமது உணர்ச்சிகளைப் புண்ணாக்காது, இன்னொரு திரியில் விவாதியுங்கள்!

நன்றிகள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லையன் சும்மா.. இறந்து போன மக்களின் பிணங்களின் மீதேறி நின்று கொண்டு சந்நதம் ஆடாமல்.. எவர் முன்னிறுத்தினாலும் பறுவாயில்லை போர்க்குற்ற ஆதாரங்கள் சர்வதேசத்தின் கரங்களை சென்றடைவதை நீங்கள் திட்டமிட்டு குழப்ப முனைவதையே இங்குள்ள கருத்தாடலில் அவதானிக்க முடிகிறது.

நாடு கடந்த தமிழீழ அரசு.. தனது எல்லைக்குள் சக்திக்குள் செய்யக் கூடியதை செய்தே வருகிறது. அதனை அதற்கு வாக்களித்த மக்கள் நாங்கள் இனங்கண்டும் வருகிறோம். அந்த வகையில்.. உங்களுக்கு அவர்களைப் பிடிக்கவில்லை என்றால்.. ஒதுங்கி இருந்து விடுப்புப் பாருங்கள்.. அல்லது அவர்களின் தவறான செயற்பாடுகளை ஆதாரங்களோடு முன் வையுங்கள்.

சும்மா சும்மா உங்கள் கற்பனைகள் எல்லாம்.. துரோகிகள் விடுதலைப் புலிகளை அழிக்கச் செய்தது... போன்று செய்ய முற்படாதீர்கள்.

உங்களுக்கும் அர்ஜீனுக்கும் என்ன வித்தியாசம். அவரும் மக்களின் இறப்புக்களை புலி அழிப்பாக காண்பவர். நீங்கள் மிச்ச சொச்ச போராட்ட எச்சங்களையும்.. எதிரிக்கு காட்டிக் கொடுக்கும் கீழ்த்தரமான வேலையையே மே 2009 இல் இருந்து செய்து வருகிறீர்கள்..??!

அகரன் கேட்பது போல.. அவர்கள் மீது குற்றம் சாட்டும் நீங்கள்.. யார்..??! சரி அதைச் சொல்லா விட்டாலும்.. என்ன ஆதாரங்களோடு.. குற்றச்சாட்டுக்களை முன்னெடுக்கிறீர்கள்.. என்றாவது சொல்லுங்கள்.

சரி.. அதுவும் இல்லை என்றால்.. போர்க்குற்ற ஆதாரங்களை நீங்கள் யாரிடமாவது கையளித்திருந்தால்.. அதையாவது சொல்லுங்கள். எதையுமே செய்யாமல் இருந்து கொண்டு.. எதிரிக்கு.. வாய்ப்பான பிரச்சாரங்களை.. முன்னெடுப்பதை தவிருங்கள்.

இன்றேல்.. யாழின் புதிய களவிதியை ஒன்றுக்கு இரண்டு தடவை படியுங்கள்..??! :icon_idea::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இதைச்செய்த கொலைகார காட்டுமிராண்டி சிங்கள அரசுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் தண்டனை பெற்று கொடுக்கவேண்டிய கடமை தமிழர்களாகிய எல்லோருக்கும் உண்டு அதை நாம் அனைவரும் இணைந்து செயற்படவேண்டிய நேரம் அதை விடுத்து நாம் ஏன் எமக்குள் மொறன்படவேண்டும் தயவுசெய்து ஒன்றுமையாக நீதிக்காக போராடுவோம் .

  • கருத்துக்கள உறவுகள்

இது நேற்றைய இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் "தி இன்டிபென்டன்ட்" நாளேட்டு செய்தி!! ... இன்று நாகதஅ வின் செய்தியாம்! ?... நாளை???

But Vasuki Maruhathas, a London based solicitor who obtained the video footage from a client and handed it to The Independent, said she believed the footage was genuine. She said the video was smuggled out of the country because her client – who wishes to remain nameless – worked at an internet café which was often frequented by soldiers. He was regularly asked to back up their phones or download videos and photos so they could email them.இன்டிபென்டன் பத்திரிகையில் வாசுகி அவர்களின் கருத்தினையும் வெளியிட்டு இருக்கிறார்கள்.

Edited by கந்தப்பு

தமிழினப்படுகொலை செய்தவன் நெஞ்சை நிமித்தி உலக வலம் வருகிறான். திமிராக அறிக்கை விடுகிறான். தமிழர் பிரதேசத்தைக் கபளீகரம் செய்து, அங்கே புத்தசமயத்தைப் பரப்புகிறான்

.

தமிழினப் படுகொலைக்கு, உலக அரங்கில் ஒன்றிணைந்து நீதி கேட்க வேண்டிய தமிழன் என்ன செய்கிறான். வெட்டிப் பேச்சும் வேதாந்தமும் பேசிக்கொண்டு. தனக்குள் சண்டை போட்டுக்கொண்டு திரிகிறான். இது சிங்களவனுக்கு ஏற்கனவே தெரிந்த விடயம். ஆதலால் நெல்லையன் போன்ற ஆட்களை வைத்துக்கொண்டு தமிழரின் சிந்தனையை ஒரு நிலைப்படுத்த விடாமல் உள்பூசல்களை ஏற்படுத்தி தனக்குச் சாதகமான சூழலை உருவாக்குகிறான். இதனை உணராத நெல்லையன் போன்றவர்கள் தமிழரிடையே நிரம்ப உண்டு. அவர்கள் நமது ஊர் காகத்தைப் பாத்தாவது திருந்தவேண்டும்.

ஒரு காகம் இறந்தால் அருகில் உள்ள காகம் கவலையாகக் கரைகிறது. அதனைக் கேட்டு எங்கெங்கோ இருந்தெல்லாம் காகங்கள் பறந்து வந்து, சேர்ந்து கரைந்து தன் இனத்துக்காகக் கத்துகின்றன. பறவைகளுக்கே இவ் உணர்வு இருக்கும்போது என்போன்ற தமிழருக்கு மட்டும் ஏன் இந்த உணர்வு இல்லை என நெல்லையன் சிந்திக்க வேண்டும்.

... இவ்வாதாரங்களை பார்த்து ஏளனம் செய்ய இங்கு கருத்துக்களை இணைக்கவில்லை! மாறாக மாதமொருமுறை வாரவிடுமுறையில் குறிப்பிட்ட தொலைக்காட்சி, வானொலியில் வந்து பீலா விடிவது போல்தான் இந்த செய்தியும்!

சிறிலங்கா தொடர்பில், சுதந்திரமான அனைத்துலக விசாரணையின் அவசியத்தினையே மீண்டும் ஒருதடவை, இந்த ஆதாரங்கள் வலியுறுத்தி நிற்பதாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தகவற்துறை அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tgte-us.org/

நாகதஅ இன் இணையத்தளம் சென்று பார்த்தால் மே18இற்கு பின்னர் எந்தவொரு செய்தியும் இல்லை, அதற்கு மேல் உந்த போர்க்குற்ற ஆதாரம் தொடர்பாக எதுவும் இல்லை, ... ஆனால் தகவற்துறை அமைச்சு செய்திக்குறிப்பாம்????????? .... யாரை ஏமாற்ற?????????

... இவ்வாதாரங்களை பார்த்து ஏளனம் செய்ய இங்கு கருத்துக்களை இணைக்கவில்லை! மாறாக மாதமொருமுறை வாரவிடுமுறையில் குறிப்பிட்ட தொலைக்காட்சி, வானொலியில் வந்து பீலா விடிவது போல்தான் இந்த செய்தியும்!

http://www.tgte-us.org/

நாகதஅ இன் இணையத்தளம் சென்று பார்த்தால் மே18இற்கு பின்னர் எந்தவொரு செய்தியும் இல்லை, அதற்கு மேல் உந்த போர்க்குற்ற ஆதாரம் தொடர்பாக எதுவும் இல்லை, ... ஆனால் தகவற்துறை அமைச்சு செய்திக்குறிப்பாம்????????? .... யாரை ஏமாற்ற?????????

நா.க அரசு இப்போது செய்யத்தக்கது பரப்புரைகள். அதை பல நாடுகளில் பலவழிகளில் செய்கிறது. நாம் சொல்ல வருவது நா.க. அரசு "இடிப்பாரை இல்லாத அரசாக " இருக்க வேண்டுமென்பதல்ல. நீங்கள் வெளியே நின்று இப்படி சந்தடி செய்ய்யாமல் உள்ளே புகுந்து மற்றவர்களுடனும் சேர்ந்து குற்றங்களை நிவிர்த்து செய்து தொழில் படவேண்டும் என்பதே. 100% சரியானவை ஜனநாயகத்தில் நடைமுறைப்படுத்த முடியாது. நீங்கள் அதற்கு அடுத்ததிற்கும் தயாராக இருக்க வேண்டும். இலங்கை அரசுக்கு தேவையானது ஒரு இயக்கம் மற்றதை தாக்குவதே.

உள்ளே இருக்கும் K.P.யை இனி விட்டு விடுங்கள். வெளியே இருக்கும் சுதன்ராஜ், உருத்திராவிடம் உங்கள் கேள்விகளை கேளுங்கள். நாடுகடந்த அரசை RAW ஊடுருவுவதாக பலர் பலமுறை சந்தேகம் தெரிவித்திருக்கிறார்கள். அப்படியாயின் அதன் ஆதாரங்களை வெளியிடவேண்டும். சும்மா சொல்லிக்கொண்டிருப்பத்தால் RAW காசுச் செலவும் இல்லாமல் தான் விரும்பியவையை செய்ய இடம் கொடுக்கிறீர்கள்.

நாம் உருதிராவுக்கு ஆதரவு கொடுப்பது, தொண்டர்கள் விரும்பி வந்து ஒரு தலையின் கீழ் இயங்கினால் மட்டுமே ஜனநாயகம் வெற்றி அளிக்கமுடியும் என்பதால். ஆகையால் உங்கள் கேள்விகளை தனிப்பட்ட முறையில் சுதன்ராஜுக்கு அனுப்பி விட்டு, பிழைகளையும் சரிகளையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்குடன் வந்து சுதந்திர இயக்கத்துடன் இணையும் படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.

என்ன கேவலம் கெட்ட சிங்களவன். பாக்கவே கோபமாக வருகிறது!!

ந.க.த.அ. இப்படியான வேலைதிட்டங்கள் தொடர வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த தமிழீழ அரசு ஸ்ரீலங்கா அரசு தாயகத்தில் புரிந்த அரசபயங்கரவாதத்தை வெளி உலகுக்கு கொண்டுவர கடுமையாக உழைக்கவேண்டும்,

இதன் மூலம் உங்களின் மேல் உள்ள நம்பகரம் அற்ற தன்மையை போக்க உதவும் இதன் ஊடாக புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் எதிர்காலத்தில் பல பயனுள்ள திட்டங்களை நிறைவேற்ற முடியும் இதற்காக நாடு கடந்த தமிழீழ அரசும் அதன் அங்கத்தவர்களும் கடுமையாக உழைக்கவேண்டும்,

அப்படி நம்பிக்கை ஏற்படும்பொழுது எல்லோரும் உங்களின் பின் அணி திரளுவார்கள் அதன் மூலம் எமது இலட்சியமான தமிழ் ஈழத்தை அடைய முடியும் .

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே சுத்தி வளைத்து சிங்களம் செய்தது சரி. தவிர்க்கமுடியாதது. அறுவைச்சிகிச்சையின்போது ரத்தம் வரத்தானே செய்யும் என்கிறீர்கள்.

ஆனால் உலகம் தற்போது புரிந்து கொள்ள முயல்வது இவர்கள் எப்படி சர்வதேச விதிகளுக்கு எதிராக கொல்லப்பட்டார்கள் என்பதே.

விதிகளை அனுசரித்து போரிட்டிருந்தால் வெற்றி தமிழருக்கே.

தற்போதும் வெற்றி தமிழருக்கே.

(ஆனால் இத்தனை கொலையும் செய்தவன் தண்டனையை அனுபவிக்கணும்.)

நியாயமான விடுதலைக்கு ஆயுதம் ஏந்தி போராடுவது என்பது அடிப்படை. இதை ஒரு காட்டு விலங்கில் இருந்து சராசரி மனிதன் வரை செய்கிறான், அநேகமாக சகல நாடுகளும் செய்து வருகின்றன.

தமிழர்கள் அவர்களின் நியாயமான ஆயுதப்போராட்டம் அழிக்கப்பட்ட பின்னரும் கடந்த மூன்றுவருடங்களுக்கு மேலாக மக்கள் தினமும் ஒடுக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, ஆயுதப்போராட்டம் அதன் தலைமை, அதற்காக போராடிய மக்கள் மற்றும் அதற்கு உதவிய புலம்பெயர் அமைப்புக்கள் / மக்கள் செய்தது மிகவும் சரியானதே என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அர்ஜுன் நித்திரை கொள்ளும்போதாவது புலிகளை பற்றி பேசாது இருப்பாரா ?

இவருக்கு உண்மையிலேயே வருத்தம் முற்றிவிட்டது குணப்படுத்துவது கஸ்ரம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.