Jump to content

மெல்பேர்ண் நகர மையத்தில் உத்தியோகபூர்வமாக ஏற்றி வைக்கப்பட்ட தமிழீழத் தேசியக் கொடி(காணொலி)


Recommended Posts

ஒஸ்ரேலியா மெல்பேர்ண் நகர மையத்தில் அமைந்துள்ள விக்ரோரிய தொழிற்சங்க கூட்டமைப்பின் அலுவலகக் கட்டிடத்தில், (Victoria Trades Hall) தமிழீழத் தேசிக்கொடி தொழிற்சங்கத்தினரால் உத்தியோகபூர்வமாக ஏற்றப்பட்டது.

இன்று வெள்ளிக் கிழமை (08-06-2012) மாலை 4.45 மணிக்கு தமிழீழத் தேசியக் கொடிக் கீதம் ஒலிக்க தொழிற் சங்கத்தின் முக்கிய உறுப்பினர் Jacob Cragg அவர்களால் தமிழீழத் தேசியக் கொடி கட்டிடத்தின் உச்சியில் ஏற்றி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஒஸ்ரேலிய பல்லினமக்கள், கரவொலி எழுப்பித் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

ஒஸ்ரேலியா அரசினால் பாதுகாக்கப்படும் புராதான கட்டிடங்களில் முக்கியாமாதொன்றான Victoria Trades Hall ஆனது உலகின் பழமைவாய்ந்த தொழிற்சங்கக் கட்டடமாகும்.

கொடியேற்றலின் பின்பு, தமிழீழத் தேசியக் கொடியின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி டொமினிக் சந்தியாப் பிள்ளை, பல்லின மக்களின் பெருகிவரும் ஆதரவு தமிழ் மக்களுக்கு ஊக்கமளிப்பதாக இருப்பதாகத் தெரிவித்தார்.

நிகழ்வின் இறுதியில் சனல் 4 இன் இலங்கையின் கொலைக்களங்கள் விவரணப்படம் திரையிடப்பட்டது. இதனைப் பார்வையிட்ட தொழிற் சங்க உறுப்பினர்கள் கவலையையும் அதிர்ச்சியையும் தெரிவித்ததுடன், சிறிலங்கா அரசின் பயங்கரவாத செயல்களைக் கண்டித்தனர்.

படங்களைக் காண இங்கே செல்லவும் http://tamilleader.c...8-11-32-32.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியான செய்தி .....

இந்த நிலை உலகம் எங்கும் வரவேண்டும்,

இதற்காக உழைத்த அனைவரையும் வாழ்த்துகின்றேன்.

எமக்கான தமிழ் ஈழம் பெற அனைவரும் சேர்ந்து பயணிப்போம், விரைவாக வென்றெடுப்போம் . :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியான செய்தி .....

:icon_idea:

இந்த நிலை உலகம் எங்கும் வரவேண்டும்,

இதற்காக உழைத்த அனைவரையும் வாழ்த்துகின்றேன்.

:icon_idea:

Link to comment
Share on other sites

மகிழ்ச்சியான செய்தி. இதற்கு உழைத்த அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக எங்களை

அங்கீகரிக்கும்வரை தொடர்ந்து உழைக்கவேண்டும்

இதற்காக உழைத்த உறவுகளுக்கு எமது நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியான செய்தி

Link to comment
Share on other sites

மகிழ்ச்சியான செய்தி.. இதற்காகப் பாடுபட்டவர் அனைவருக்கும் நன்றிகள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்தோசமாக இருக்கின்றது.

இதற்கு, முன்னின்று உழைத்த உறவுகளுக்கு பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

முன்னையது இத்தாலியில், பின்னையது மெலபேர்னில் பரவட்டும் ஈழத்தீ.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.