Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

YARL கள அப்பாகளுக்கு

Featured Replies

இன்று தந்தையார் தினம் கொண்டாடப்படுகின்றது பொதுவாகவே டீன்ஏஜ் பருவத்தில் தந்தை மகன் உறவு என்பது கொஞ்சம் சிக்கலானதாகவே இருக்கும் இந்த பருவத்தில் தந்தையை பிடிக்காத மகன்கள் தான் அதிகம் அதை தாண்டி தந்தையிடமிருந்து விலகி வந்த பிறகு தான் அவரின் அருமை பெருமைகள் விளங்கும் .

**********************************************************************************

என் தகப்பன் என்னிடம் இருந்து ஒளித்துவைத்த, ரகசியங்கள் அடங்கிய பெட்டியின் சாவியை நான் தேட முற்பட்டதைப்போல், நீயும் தேடத் தொடங்குவாய். பத்திரமாகவும் பக்குவமாகவும் இருக்க வேண்டிய பருவம் அது. உனக்குத் தெரியாதது இல்லை. பார்த்து நடந்துகொள்.

நிறையப் பயணப்படு. பயணங்களின் ஜன்னல்களே முதுகுக்குப் பின்னாலும் இரண்டு கண்களைத் திறந்துவைக்கின்றன. புத்தகங்களை நேசி. ஒரு புத்தகத்தைத் தொடுகிறபோது நீ ஓர் அனுபவத்தைத் ...தொடுவாய். உன் பாட்டனும் தகப்பனும் புத்தகங்களின் காட்டில் தொலைந்தவர்கள். உன் உதிரத்திலும் அந்தக் காகித நதி ஓடிக் கொண்டே இருக்கட்டும்.

கிடைத்த வேலையைவிட, பிடித்த வேலையைச் செய். இனிய இல்லறம் தொடங்கு. யாராவது கேட்டால், இல்லை எனினும் கடன் வாங்கியாவது உதவி செய். அதில் கிடைக்கும் ஆனந்தம்அலாதி யானது.

உறவுகளிடம் நெருங்கியும் இரு, விலகியும் இரு. இந்த மண்ணில் எல்லா உறவுகளையும்விட மேன்மையானது நட்பு மட்டுமே. நல்ல நண்பர்களைச் சேர்த்துக்கொள். உன் வாழ்க்கை நேராகும்.

இவை எல்லாம் என் தகப்பன் எனக்குச் சொல்லாமல் சொன்னவை. நான் உனக்கு சொல்ல நினைத்துச் சொல்பவை. என் சந்தோஷமே! நீ பிறந்த பிறகுதான் என் தகப்பனின் அன்பையும் அருமையையும் நான் அடிக்கடி உணர்கிறேன். நாளை உனக்கொரு மகன் பிறக்கையில், என் அன்பையும் அருமையையும் நீ உணர்வாய்.

நாளைக்கும் நாளை நீ உன் பேரன், பேத்திகளுடன் ஏதோ ஒரு ஊரில் கொஞ்சிப் பேசி விளையாடிக்கொண்டு இருக்கையில் என் ஞாபகம் வந்தால், இந்தக் கடிதத்தை மீண்டும் எடுத்துப் படித்துப் பார். உன் கண்களில் இருந்து உதிரும் கண்ணீர்த் துளியில் வாழ்ந்துகொண்டு இருப்பேன் நான்.

இப்படிக்கு,

உன் அன்பு அப்பா ((அணிலாடும் முன்றில் - நா. முத்துக்குமார் - விகடன்)

**************************************************************************

இது விகடனில் நா .முத்துக்குமார் தனது மகனுக்கு வரைந்த கடிதம்

YARL கள அப்பாக்கள் ஆகிய நீங்கள் உங்கள் அப்பாக்களிடம் பெற்ற படிப்பினைகள் என்ன உங்கள் பிள்ளைகளிர்க்கு கற்று கொடுத்தவை கொடுப்பவை இன்னும் கொடுக்க வேண்டி உள்ளவை எவை.. பகிர்ந்து கொள்ளுங்கள்

Edited by அபராஜிதன்

  • Replies 51
  • Views 4.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கவுரவம்

2008_03_05_fatherAndSon-794281.jpg

கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் எட்டிப் பார்க்கும் நேரமெல்லாம் கண்ணில் பட்டுக் கொண்டிருப்பது “Happy Kiss Day” தான். அதை கிண்டல் செய்தும் அதைக் கொண்டாட முடியாதபடி ஏக்கத்திலும் பல ஸ்டேட்டஸ்கள் என் நேரக்கோட்டை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. என் நேரக்கோடும் அதற்குத் தகுந்தாற்போல், பெரும் கிடாயை விழுங்கிய மலைப்பாம்பென மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. என் பங்குக்கும் நானும் ஒன்றிரண்டை தட்டிவிட்டு விலகிச் செல்ல எத்தனிக்கும் தருவாயில் யாரோ ஒரு புண்ணியவான் அவர் தகப்பனுக்கு வாழ்த்துக் கூறிக் கொண்டிருந்தார் “Happy Fathers Day”.

எனக்கு எல்லாமே அம்மா தான். என் போன்ற பலர்க்கும் நிலை அவ்வாறுதான் என்று அனுமானிக்கிறேன். நான் வளர்ந்த சூழல் அப்படி. சோறூட்டி, சீராட்டி, படிப்பை கவனித்து என எனக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவளாய், பிரிந்திருக்கும் ஓரோ கணமும் கண்களில் நீர் நிரம்பச் செய்யும் அன்பின் அட்சயம் ஏந்திய ஆதிரை அவள். என் கேள்விகளுக்கு பதில் கொடுத்து, தேடல்களுக்கு வழி கொடுத்து, நிழலாய் பின் தொடர்ந்து எந்தன் வெற்றிகளைக் கொண்டாடி, தோல்விகளில் துணை நின்று எனக்கான சகலமுமாய், ஏன் நானாகவே மாறிப் போனவளவள். இப்படியாக என்னை வடிவமைத்தவள் அந்த ஒரு வாக்கியத்தை மட்டும் காதிலோதாமல் இருந்திருக்கலாம் “குறும்பு பண்ணுன, அப்பாகிட்ட சொல்லிடுவேன். சாட்டைவார் பிஞ்சிடும்”.

இது அம்மாக்களின் சுயநலமா இல்லை குழந்தை வளர்ப்பின் உத்தியா என்றெல்லாம் சொல்லத் தெரியவில்லை, ஆனால் மகனின் வாழ்க்கையை வடிப்பவர் தாயெனினும் உளியாக்கப்படுபவர் தந்தைதான். அதனால்தான் என்னவோ, கல்லாக இருப்பவன் நெஞ்சில் வலியேற்படுத்தும் உளியென்பது உளியாகவே நிலைத்து விடுகிறது சிற்பமான பின்பும். முதன் முதலில் கடும் போக்குவரத்து நெரிசலின் ஊடாக சாலையை சாதாரணமாகக் கடந்தபோதுதான் விழுந்தது முதல் அடி! அப்போதெனக்கு ஐந்தாறு வயதிருக்கலாம். அதுவரை மாரில் தூக்கிக் கொஞ்சுபவராகவும் என்னவெல்லாமாகவோ இருந்தவர் அன்றிலிருந்து மாறிப்போனதாய் ஒரு தோன்றல். “அப்பா ஏன்மா முன்ன மாதிரி இல்ல?” பலமுறை ஒரே கேள்வி, ஒரே பதில்தான் “ச்சே அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல”. நான் மட்டும் என்ன இளக்காரமா? பிறந்து விழுந்த புலிக்குட்டியும் ஒரு பூச்சி என்றால் கூட காலால் அடித்துத்தான் சாப்பிடும். அதனைப் பொறுத்தவரையில் அது வேட்டை! அன்றிலிருந்து அவரின் விறைப்பும் முறைப்பும் எனக்குள்ளும் வந்துவிட்டது. ஆனாலும் இந்த விஷயத்தில் கூட, அவர்தான் எனக்கு ரோல்மாடல்.

கொஞ்சம் வளர்ந்த பின்பு, எனக்கும் என் அப்பாவுக்கும் உரையாடல் என்பதெல்லாம் இல்லாமல் போய் விட்டது. இன்னும் சொல்லப் போனால் அவரை அப்பா என்றழைத்தே பல காலமாகி விட்டது. நான் என்ன சொல்ல நினைத்தாலும் செய்தி அம்மா வழி போகும், “அம்மா, சினிமாக்கு போலாம் ம்மா”. அங்கிருந்தும் அவ்வாறே, “நான் வெளிய போறேன் அவன கடைய பாத்துக்க சொல்லு”. இதையும் மீறி, என்ன சொன்னாலும் கேட்டாலும், “ஹ்ம்ம், சரி, பண்றேன்” அவ்வளவுதான். அவரும் அப்படித்தான் “டேய்..”. இதைத் தாண்டி எனக்கும் அவருக்குமான உரையாடல்கள் “அரைக்கிலோ பருப்பு, அரிசி ரெண்டு கிலோ, புளி நூறு....”.

“அம்மா, இந்தா புரோக்ரஸ்கார்டு. கையெழுத்து போட்டு குடு”

“டேய், மாவாட்டிகிட்டு இருக்கேன்ல அப்பாகிட்ட வாங்கிக்கோ”

“அவரா எனக்கு எல்லாம் செய்யுறார்? நீதானே? இங்க வைக்கிறேன் போட்டு குடு”

வந்த வாய்ப்புகளைக் கூட வெட்டி எறிந்து செல்லுவேன். அவரின் அதே கவுரவமோ இத்யாதியோ எதோ ஒன்று நெஞ்சுக்குள் கெக்கலிக்கும். பனியனோடு கடையில் பொட்டலம் மடித்துக் கொண்டிருப்பார், ஒரு சத்தம் வரும் “விஜீஈஈஈஈ, கணக்குப் போடணும் வா!”. அம்மா கெஞ்சலாக என்னைப் பார்ப்பாள், சரியென்று எழுத்து போய் கணக்கைப் பார்க்கும்போதே “ஏழும் எட்டும் பதினஞ்சு, ஒரு ஆறு இருபத்தொன்னு, நாலு இருபத்தஞ்சு,..........” அவரே கணக்கை முடித்து வெற்றிப் புன்னகையோடு என்னைப் பார்ப்பார். எனக்கு வெறியாகும். அட்டையை தூக்கி எரிந்துவிட்டு அம்மாவைச் சென்று கடிந்து கொள்வேன். தேர்வு முடிவுகள் வரும்போது, வகுப்பில் முதல் மாணவனாக, கணிதத்தில் 96 க்கு குறையாமல் மதிப்பெண் எடுத்து ரிப்போர்ட்டை அம்மாவிடம் கொடுக்கையில் பெருமையாகச் சொல்லுவேன் “நான் கணக்குல 96 ன்னு அங்க சொல்லு”. இப்படியாக நானறியாமலேயே நான் நானாக காரணமாயிருந்தவர் அவர்தான்.

பதின்ம வயதுகளில் வெளியூரில் கல்லூரி. பெரும் விடுதலை என்றே எண்ணினேன். போன் வாங்கிக் கொடுத்தது என்னவோ அவர்தான். இருந்தாலும் பேச்சில்லை. தினமும் அம்மாதான் அழைப்பாள். “க்கம்..க்கம்” என்று இருமிக்கொண்டே அவர் அருகில் வரும்போது மட்டும், “ஹ்ம்ம் அப்பாவாடா, நல்லா இருக்காரு டா” நான் கேட்காமலேயே பதில் வரும். ஒரு நிமிட மௌனம் “கைல காசு இருக்காடா?” நிச்சயம் அவர்தான் கேட்க சொல்லியிருப்பார். இருந்தாலும் அந்த இளமைப் பொருமலில் அதெல்லாம் தோன்றியிருக்காது. “ஹ்ம்ம் இருக்கு” அவ்வளவு தான். மாதமொருமுறை ஊருக்குப் போகயில் அம்மா இரண்டாயிரம் கொடுப்பாள், ஒரு ஐநூரை அவளிடம் கொடுத்து கொடுக்கச் சொல்லி, சொல்லிவிட்டுப் போவார் “பாத்து செலவு பண்ண சொல்லு. சம்பாதிச்சாத்தான் அதன் அருமை தெரியும்”. வேண்டுமென்றே அந்த ஐநூறைத் திருப்பிக் கொடுத்து அம்மாவிடம் சொல்லுவேன் “இதல்லாம் சொல்லலேனா எனக்கு தெரியாதா? எப்பப் பாத்தாலும். ஏதோ ஒண்ணு சொல்லிக்கிட்டு..”. கல்லூரி படிக்கையில் இரண்டாயிரத்திற்குள் என் ஒரு மாதத்தை ஓட்ட முடிந்திருந்தது. காரணம் அந்த ஒரு சொல்.

கல்லூரி முடித்து வேலைக்குப் போகும் முன் தினமும் பல ஏளனப் பேச்சுக்கள். அதெல்லாம் எனக்கான தூண்டுகோல் எனப் புரியாமலே “நான் எங்காச்சும் போய்த் தொலையனும், அதானே உங்களுக்கு வேணும்?”. எனக்கு சாதகமாகவும் பேச முடியாமல், அப்பாவை ஆதரிக்கவும் முடியாமல் எப்போதும் போல கண் கசிந்து நிற்பாள் அம்மா. வேலை கிடைத்த மறுநாள், ஹைதராபாத் கிளம்பவேண்டும். எல்லாம் எடுத்து வைத்தாகிற்று. செலவுக்கு பணம் கொடுத்தாள். “இனிமேல் உங்களுக்கு இந்தக் கஷ்டம் வராது” அப்பொழுதும் அவரைக் குத்தினேன். கிளம்பும் தருவாயில் வெளியில் வந்து வீட்டைப் பார்க்கையில் ஓர் அடாத சோகம் நெஞ்சைப் பிழிந்தது. என்னவென்று சொல்லத் தெரியாத ஓர் உணர்வு. உள்ளே சென்றவன் அம்மாவை அழைத்தேன்,

“டேய்.. எதுக்கு இப்போ கண் கலங்கி இருக்கு?”

“ஒண்ணுமில்ல, அவர கூப்பிடு” அவர் வர, வைராக்கியம், கவுரவம் என்றெல்லாம் எண்ணி வைத்திருந்த கண்ணாடிப் பேழையை உடைத்தேன்.

“அப்பா.....” நிச்சயம் நெகிழ்ந்திருப்பார். இருவரையும் ஒருசேர நிறுத்தி முதல்முறையாக கால்களில் விழுந்து ஆசி பெற்று விடை பெற்றேன். ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும்...

அதன் பிறகும் இன்றுவரையிலும் இருவருக்குள்ளும் பேச்சில்லை, பேசிக்கொள்ள எதுவும் இருப்பதாய் தெரியவில்லை. இருந்தாலும் அந்த முறைப்பு இல்லை லேசான புன்னகை மட்டும். முதல் மாத சம்பளத்தில் எடுத்துக் கொடுத்த வேட்டி சட்டையை நான் காண அணிந்து வலம் வருவார். இப்போதும் நினைப்பேன், “அப்பா....” என்று அளவளாவ வேண்டுமென்று. வேண்டாம், அந்த கவுரவம், விறைப்பு, முறைப்பு இதுதான் அவருக்கு அழகு. அது மட்டும்தான்!

http://sriarjunan.blogspot.in/2012/06/blog-post.html?m=1

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய தந்தை எங்களின் குக்கிராமத்தில் அதிகம் படித்திராத விவசாயிதான். ஆனால் ஒவ்வொருமுறையும், எனது பள்ளி மாதாந்திர தேர்வுப் புள்ளிகளின் அறிக்கை அட்டவணையில் முன்னேற்றத்தைக் கண்டு கையொப்பமிடுகையில், அவரின் புன்னைகையிலும், கண்களிலும் ஓடிமறையும் பெருமிதத்தையும், தன் கையெழுத்து கோணலானாலும் தன் தனயனின் தலையெழுத்தை கல்வியால் நேர்வழிப்படுத்திய அம்மேதையை, கண்கள் பனிக்க இந்நாளில் வணக்கத்துடன் நினைவு கூர்கிறேன்..

Edited by ராஜவன்னியன்

அனைவரும் உங்கள் தந்தையை பற்றி எழுதுங்கள். நான் வாசிக்கிறேன். :D

எனது பெற்றோர் கடந்த ஒருவருடமாக தனியே தான் இருக்கின்றார்கள் .எவ்வளவோ காலத்திற்கு பின் இப்போ தான் தனிக்குடித்தனம் நடாத்துகின்றார்கள் .அம்மாவுக்கு மாடிப்படி ஏறுவது கஸ்டமாகியதால் அக்காவுடன் இருந்தவர்கள் அருகில் ஒரு அப்பாட்மென்ட் எடுத்து இருவரும் மட்டுமே அங்கு தனிய இருக்கின்றார்கள் .பிள்ளைகள் ,பேரபிள்ளைககள்,பூட்டபிள்ளைகளும் கண்டுவிட்டார்கள் .அம்மா லண்டனுக்கு 1979 ஆண்டு போனவா.பின்னர் இலங்கை திரும்பி 1982 திரும்ப லண்டன் போனதுதான் அப்படியே இருந்துவிட்டார்கள்.

இன்று காலை எழும்பி அப்பாவிற்கு ஒரு சேட்டும் கொண்டு போனேன் .அப்பர் குடி,சிகரெட் தொட்டதே இல்லை .தம்பி கொஞ்சம் தமிழ்கடை சாமான் வாங்கவேண்டுமென்றார்.புதிதாக திறந்த மாபெரும் தமிழ் கடையாகிய இரா சுப்பர் மார்கெட்டுக்கு கூட்டிக்கொண்டு போனேன் .உயர்ந்த மனிதன் சிவாஜி போல் வலு டிப் டாப்ஆக உடையணிந்து வாக்கிங் ஸ்டிக் பிடித்தபடி வந்தார் .வயது 87.அங்கு போய் காரை நிறுத்திவிட்டு தள்ளுவண்டி எடுக்க போனால் அதற்கு ஒரு டொலர் போடவேண்டியிருந்தது . என்னிடம் மாற்றிய காசு இருக்கவில்லை அப்பாவும் சில்லறை கொண்டுவரவில்லை என்றார் .இந்தா வாறன் என்று கடைக்குள் போய் மாற்றிக்கொண்டு வருகின்றேன் .தள்ளுவண்டிலுடன் நிற்கின்றார்.எங்கால காசு என்று கேட்டேன் தெரிந்த ஒருவர் வந்தார் வாங்கினேன் என்றார் .

எனக்கு ஏனோ கோபம் பொத்துக்கொண்டு வந்து "அதற்கிடையில் ஏன் அவசரப்பட்டு யாரிடமோ கடன் வாங்கினீர்கள்" என்று ஏசும் ஒரு தொனியில் சொல்லி காசை திருப்ப குடுத்துவிட்டுவாருங்கள் என்று அனுப்பிவிட்டேன் .குழந்தை பிள்ளை மாதிரி அவர்கள் கார் எடுக்கமுன் விரைவாக போய் மகன் மாத்திக்கொண்டு வந்துவிட்டார் என கொடுத்துவிட்டு வந்தார் .

பின்னர் சொப்பிங் முடித்து அப்பாட்மென்ட் போய் அப்பா அம்மாவுடன் இருந்து சினேகாவின் கலியாணம் விஜே டி.வி யில் பார்த்துவிட்டு வந்தேன் .

மனதிற்குள் ஏன் அப்படி நடந்தேன் என்று என்னில் என்மீதே வெறுப்பாக இருந்தது ஆனால் திரும்ப அதைப் பற்றி கதைத்து இன்னமும் ரணமாக்காமல் எதுவும் நடக்காத மாதிரி வீடு வந்து சேர்ந்தேன் .

மனம் இன்னமும் அதையே நினைத்துக்கொண்டிருக்கு ,அப்பாவை நினைக்க பாவமாகவும் இருக்கு .

என்ரை இரண்டும் மனுசியும் வழக்கம் போல் சாட்டுக்கு ஒரு காட்டும் உடுப்பும் தான் .

522751_4165188573663_1692304419_n.jpg

அர்ஜுன் அண்ணா உங்கள் அப்பாவிடம் ஒரு மன்னிப்பு கேட்டிருக்கலாமே???

என்ரை இரண்டும் மனுசியும் வழக்கம் போல் சாட்டுக்கு ஒரு காட்டும் உடுப்பும் தான் .

:rolleyes: :rolleyes:

Edited by காதல்

... நேற்றைய தினம் என் மகன் போக இறுக்கும் புதிய பாடசாலையின் summer fete. அங்கு போக இருக்கும் தருணத்தில் என் மகன், தாயாரை ஆய்க்கினைப்படுத்தி தனக்கு ஏதோ புதிய பேனை வாங்க வேண்டும் என்று ஒற்ரைக்காலில் நின்று, அருகே இருக்கும் ஷொப்பிங் சென்ரருக்கு கூட்டிச் சென்று, வர லேட்டாகி விட்டது, வந்தவுடன் பாடசாலை போய் திரும்பும் மட்டும் நான் அர்ச்சனை செய்து முடிக்க, என் மகனின் கண்களில் கண்ணீர்!

இன்று காலை ... நேரத்துடன் எழுந்து விட்டேன் விளையாட போவதற்காக ... எழுந்து கீழே வந்து யாழில் குந்த, நான் எழுந்த சத்தம் சத்தம் கேட்டு மகனும் எழுந்து விட்டான், கீழ் வந்து என் முன் நின்றான் .. கையில் ஓர் பார்ச்சலுடன், அப்பா happy fathers day என்று கையில் உள்ளதை நீட்டினான். அவன் கையில் உள்ளதை வாங்கிய பின் கட்டி அணைக்கையில் தான், நேற்று அவன் ஏன் ஷொப்பிங் சென்ரருக்கு போனான் என்று புரிந்தது.

அனைவரும் உங்கள் தந்தையை பற்றி எழுதுங்கள். நான் வாசிக்கிறேன். :D

... என் தந்தையைப் பற்றி எழுத யாழே போதாது ...

நெல்லையன் அண்ணா, உங்கள் மகனை நேற்று அழும் வரைக்கும் நல்லா பேசிப்போட்டீங்கள் போலிருக்கு. பாவம். :( :( :(

... என் தந்தையைப் பற்றி எழுத யாழே போதாது ...

:o:D

அர்ஜுன் அண்ணா உங்கள் அப்பாவிடம் ஒரு மன்னிப்பு கேட்டிருக்கலாமே???

அர்ஜுன் அண்ணா தனது அப்பாவைப் பேசியது சரி 100% சரி.

அர்ஜுன் அண்ணா தனது அப்பாவைப் பேசியது சரி 100% சரி.

அக்கா அவர் அப்பா செய்தது சரி என்று சொல்லவில்லை. அர்ஜுன் அண்ணா பேசினது பிழை என்றும் சொல்லவில்லை. ஆனால் தந்தையர் தினத்தன்று பேசியதால் அவர் அப்பா மனம் நொந்திருக்கும். அதை நினைத்து அர்ஜுன் அண்ணாவும் வேதனைப்படுகிறார். அதனால் தான் பேசிய பின்னராவது மன்னிப்பு கேட்டிருக்கலாம் என்று சொல்ல வந்தன். இருவருக்கும் வேதனை இருந்திருக்காது.

Edited by காதல்

இன்றைய நாளில் நல்லதொரு பதிவு அபராஜிதன்...

522751_4165188573663_1692304419_n.jpg

நெல்லையான் நீங்கள் இணைத்ததன் படி பார்த்தல் நான் 5 வயதில் நினைத்ததைத் தான் இன்று வரை நினைக்கிறன்... :)

எனக்கு பதினாறு வயது வரும் போது அப்பாவை இழந்துவிட்டேன். இருந்தாலும் நான் ஒரு அப்பா பிள்ளை தான்.உண்மையை சொல்வதானால் நான் அப்பா பிள்ளை தான்.அதே போலத்தான் எனது மூத்தமகனும்.அம்மா மீது பயம் மரியாதை இப்பவும் உண்டு.அவர் எனது தங்கையின் வீட்டில் தான் இருக்கிறார்.தேவை இருந்தால் மட்டுமே தொலைபேசியில் உரையாடுவேன்.மற்றும்படி அவருக்கு வைத்திய தேவைகள்,வேறு ஏதாவதுதேவைகளுக்கு அழைத்து செல்வேன்.எங்கள் வீட்டிற்கு வருவார் போவார்.எல்லோரிடமும் பழகுவார் .ஆனால் என்னால் அவருடன் கொசிப்படிக்க முடியவில்லை ஏனோ தெரியாது.அதேபோல அவரும் எனக்கு கரைச்சல் இல்லாத பிள்ளை என்ரால் மூத்தது என்று சொல்லுவாராம்

  • கருத்துக்கள உறவுகள்

கணவர்களுக்கு ஒரு தினம் வருதோ இல்லையோ... யாழ்க்கள அப்பாக்களுக்கு, "தந்தையர் தினத்தில்" சிந்திக்க ஒரு காணொளி, இதோ...

.

  • கருத்துக்கள உறவுகள்

நான் சிறு வயதில் உதைபந்தாட்டத்தில் விருப்பம் மற்றும் நல்லா விளையாடுவன், ஒரு சின்ன கீரோ, எங்கட கிளப்பில. மற்றும் விளையாட்டு போட்டிகளிலும் பரிசில்கள் வேண்டி இருக்கிறன், ஆனால் எந்த ஒரு நிகழ்விலும் எனது அப்பா வந்ததாக ஞாபகம் இல்லை, ஏன் நட்சத்திர அறிவுப்போட்டி என கே. ஸ் ராஜா நடத்திய வானொலி நிகழ்ச்சி எங்கள் ஊரில் நடந்தபோது எமது பாடசாலை சார்பில் நான் கலந்துகொண்ட போது கூட அப்பா வந்ததில்லை. தண்ணிஇல் எப்பவும் படிப்பின் முக்கியம் பத்தியே கதைக்கும், எனது அப்பா எனது ஏ.எல் ரிசல்சை சொன்னபோது பார்த்த பார்வை இன்னும் எனது ஞாபகத்தில் உள்ளது ..........

எனது அப்பாவின் எல்லா செய்கைகளையும் என்னால் இப்போது முழுமையாக புரிந்துகொள்ள முடிகிறது...... அம்மாவை விட என்னால் புரிந்துகொள்ள முடியும்.......

இப்போது எனது மகன் பத்து வயது, அவரின் உதைபந்தாட்ட அணியில் ஒரு சின்ன கீரோ, எல்லா மேச்சுக்கும் அப்பா வேண்டும், பயம் என்று இல்லை, தனது விளையாட்டை நான் பார்க்கவேண்டும். வேலையை விட்டுட்டு என்றாலும் போய் விடுவேன்.

Edited by மலையான்

  • கருத்துக்கள உறவுகள்

கணவர்களுக்கு ஒரு தினம் வருதோ இல்லையோ... யாழ்க்கள அப்பாக்களுக்கு, "தந்தையர் தினத்தில்" சிந்திக்க ஒரு காணொளி, இதோ...

.

பலசாலிகளிடம் பலத்தைக் காட்ட வேண்டும். முட்டாள்களிடம் அறிவை.. அமைதியை காக்க வேண்டும்..! அந்த முட்டாள் பெண்ணின் முன் அந்த ஆண் செய்தது.. அறிவுபூர்வமானது..! இது கணவர்மாராகி உள்ள ஆண்களுக்கு அவசியமான அறிவுரை..!

சிந்தித்துப் பார்க்கிறேன்.. நமக்கு இப்படி நிலை வந்தா.. மனசு தாங்காது..! பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்று ஓடிட வேண்டியான்..! :lol:

நன்றி ராஜவன்னியன்.. பகிர்ந்து கொண்டதற்கு..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கணவர்களுக்கு ஒரு தினம் வருதோ இல்லையோ... யாழ்க்கள அப்பாக்களுக்கு, "தந்தையர் தினத்தில்" சிந்திக்க ஒரு காணொளி, இதோ...

.

:lol: :lol: :lol:

பலசாலிகளிடம் பலத்தைக் காட்ட வேண்டும். முட்டாள்களிடம் அறிவை.. அமைதியை காக்க வேண்டும்..! அந்த முட்டாள் பெண்ணின் முன் அந்த ஆண் செய்தது.. அறிவுபூர்வமானது..! இது கணவர்மாராகி உள்ள ஆண்களுக்கு அவசியமான அறிவுரை..!

சிந்தித்துப் பார்க்கிறேன்.. நமக்கு இப்படி நிலை வந்தா.. மனசு தாங்காது..! பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்று ஓடிட வேண்டியான்..! :lol:

அண்ணா குஷனால் எறிந்ததால் அமைதியை கடைப்பிடிச்சார். :lol: இதுவே பொல்லுக்கட்டை, சட்டிபானை, பாறாங்கல்லால் எறிந்திருந்தால் நிச்சயம் நிரந்தர அமைதியை அடைந்திருப்பார் :icon_idea:

அந்த பெண் எதற்காக சண்டை பிடித்தாள் என்பது தெரியாமல் அவளை முட்டாள் என்று சொல்ல முடியாது.

அந்த பெண் முட்டாளா அல்லது அந்த ஆண் செய்த ஏதோ ஒரு காரியம் முட்டாள் தனமானதா என்பதை பொறுத்து தான் அவர்கள் சண்டை அமையும். :D

நீங்களும் கவனிச்சு நடந்தால் ஓட வேண்டியதில்லை. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நாளில் நல்லதொரு பதிவு அபராஜிதன்...

நெல்லையான் நீங்கள் இணைத்ததன் படி பார்த்தல் நான் 5 வயதில் நினைத்ததைத் தான் இன்று வரை நினைக்கிறன்... :)

ம்ம்ம்.. இப்ப விளங்குது.. :rolleyes::lol:

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா குஷனால் எறிந்ததால் அமைதியை கடைப்பிடிச்சார். :lol: இதுவே பொல்லுக்கட்டை, சட்டிபானை, பாறாங்கல்லால் எறிந்திருந்தால் நிச்சயம் நிரந்தர அமைதியை அடைந்திருப்பார் :icon_idea:

அந்த பெண் எதற்காக சண்டை பிடித்தாள் என்பது தெரியாமல் அவளை முட்டாள் என்று சொல்ல முடியாது.

அந்த பெண் முட்டாளா அல்லது அந்த ஆண் செய்த ஏதோ ஒரு காரியம் முட்டாள் தனமானதா என்பதை பொறுத்து தான் அவர்கள் சண்டை அமையும். :D

நீங்களும் கவனிச்சு நடந்தால் ஓட வேண்டியதில்லை. :icon_idea:

ஒருவேளை அவர் முட்டாள் தனமா நடந்திருந்தாலும் அந்தப் பெண்ணின் வன்முறையை ஆதரிக்க முடியாது..! இது மிகமோசமான செயல்..! அதுவும் ரீயை கொடுத்திட்டு தட்டிவிடுறது..

இது சிங்களவன் தமிழர்கள் மீது பொருளாதாரத்தடையை போட்டுவிட்டு.. இராணுவத்தை ஏவி தாக்கியது போன்ற ஒரு நிலையையே எனக்கு படம் பிடித்துக் காட்டுகிறது..!

இந்த இடத்தில்.. அவர் காத்த மெளனமும் பொறுமையும் அவர் முட்டாள் காரியம் செய்யக் கூடியவரா என்ற கேள்வியையே எழுப்புகிறது..??! அப்படி இருக்க.. வீட்டுக்குள்.. ஒரு வன்முறையாளரை அவர் பெண் என்பதற்காக.. பாதுகாக்க முனைவது தப்பு..! :):icon_idea:

ஒருவேளை அவர் முட்டாள் தனமா நடந்திருந்தாலும் அந்தப் பெண்ணின் வன்முறையை ஆதரிக்க முடியாது..! இது மிகமோசமான செயல்..! அதுவும் ரீயை கொடுத்திட்டு தட்டிவிடுறது..

இது சிங்களவன் தமிழர்கள் மீது பொருளாதாரத்தடையை போட்டுவிட்டு.. இராணுவத்தை ஏவி தாக்கியது போன்ற ஒரு நிலையையே எனக்கு படம் பிடித்துக் காட்டுகிறது..!

இந்த இடத்தில்.. அவர் காத்த மெளனமும் பொறுமையும் அவர் முட்டாள் காரியம் செய்யக் கூடியவரா என்ற கேள்வியையே எழுப்புகிறது..??! அப்படி இருக்க.. வீட்டுக்குள்.. ஒரு வன்முறையாளரை அவர் பெண் என்பதற்காக.. பாதுகாக்க முனைவது தப்பு..! :):icon_idea:

:o:lol:

எங்கேயோ தொடக்கி எங்கேயோ முடிஞ்சுது :o:lol::icon_idea:

வன்முறைக்கு தூபம் போடும் செயலை நிப்பாட்டினால் வீட்டுக்குள் வன்முறையாளர் உருவாக மாட்டார். :icon_mrgreen:

ஆண்களில் பெரும்பாலானவர்கள் செய்வதையும் செய்துவிட்டு அப்பாவி போன்று நடிப்பதில் வல்லவர்களாச்சே. :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

:o:lol:

எங்கேயோ தொடக்கி எங்கேயோ முடிஞ்சுது :o:lol::icon_idea:

வன்முறைக்கு தூபம் போடும் செயலை நிப்பாட்டினால் வீட்டுக்குள் வன்முறையாளர் உருவாக மாட்டார். :icon_mrgreen:

ஆண்களில் பெரும்பாலானவர்கள் செய்வதையும் செய்துவிட்டு அப்பாவி போன்று நடிப்பதில் வல்லவர்களாச்சே. :lol::icon_idea:

சிவனேன்னு.. பேப்பர் படிச்சுக்கிட்டு இருந்த மனிசனுக்கு முன்னால ரீ யை கொண்டு வந்து வைச்சிட்டு.. சண்டித்தனமும் பண்ணினதுமில்லாம.. வன்முறையில் ஈடுபட்டிட்டு.. அந்தப் பழிய அப்படியே தூக்கி அந்த ஆண் மீது போடுவது.. ரெம்பக் கொடுமை. இது பெண்கள் மீதும் அவர்களின் நடவடிக்கைகள் மீதும்.. ஆண்களுக்கு சந்தேகப் பார்வையையே உருவாக்குகிறது..! இந்த வீட்டு வன்முறை அணுகுமுறைகளை பெண்கள் கைவிட வேண்டும். அமைதி வழிக்கு அவர்கள் திரும்ப வேண்டும்..! :lol::)

snapback.pngராஜவன்னியன், on 18 June 2012 - 12:28 AM, said:

கணவர்களுக்கு ஒரு தினம் வருதோ இல்லையோ... யாழ்க்கள அப்பாக்களுக்கு, "தந்தையர் தினத்தில்" சிந்திக்க ஒரு காணொளி, இதோ...

ஆஆஆஆய்ய்ய்ய்! எனக்குத்தான் பெண் பிள்ளை இல்லையே?

இருந்தாலும் அப்பாமாரை மனைவிமார் நாலு கேள்வி நறுக்கென கேட்கும் போது அதை பெண் பிள்ளைகள் ஒட்டு கேட்டு விட்டு தாங்களும் தொடருவார்கள்.அதே நேரம் அப்பாமார் பெண்பிள்ளைகளில் பாசமும் கூட எல்லாம் செர்ந்து வாய்ப்பாகி விடுகிறது.

ஒருவேளை அவர் முட்டாள் தனமா நடந்திருந்தாலும் அந்தப் பெண்ணின் வன்முறையை ஆதரிக்க முடியாது..! இது மிகமோசமான செயல்..! அதுவும் ரீயை கொடுத்திட்டு தட்டிவிடுறது..

இது சிங்களவன் தமிழர்கள் மீது பொருளாதாரத்தடையை போட்டுவிட்டு.. இராணுவத்தை ஏவி தாக்கியது போன்ற ஒரு நிலையையே எனக்கு படம் பிடித்துக் காட்டுகிறது..!

இந்த இடத்தில்.. அவர் காத்த மெளனமும் பொறுமையும் அவர் முட்டாள் காரியம் செய்யக் கூடியவரா என்ற கேள்வியையே எழுப்புகிறது..??! அப்படி இருக்க.. வீட்டுக்குள்.. ஒரு வன்முறையாளரை அவர் பெண் என்பதற்காக.. பாதுகாக்க முனைவது தப்பு..! :):icon_idea:

என்னமோ ஒவ்வொருவரும் புதிதாக நடந்த விடயம் மாதிரி இதை பெரிது படுத்துகிறீர்கள்.சிலபேர் வீடுகளை வாங்கி விட்டு பிள்ளைகளுக்கு தனியான அறை வசதி அதுவும் வேலைக்கு அல்லது கடன் எடுத்து படிக்கும் பிள்ளையாயின் வீட்டுவாடகை,தொலைபேசிக்கட்டணம்,சாப்பாட்டுகாசு இப்படியே வசூலித்தால் அந்த பிள்ளை கேள்வி கேட்கும்தான்: வீட்டுக்கு பிந்திவரும், நண்பர்கள் வருவார்கள் இது சகஜமாய் இங்கு பல இடங்களில் நடக்கின்றது.இங்கு நான் சிலவேளைகளில் குடும்ப நீதிமன்று செல்வதால் எனக்கு பல விடயம் தெரியும்.எல்லாவற்றையும் பகிரங்க படுத்துவது தொழில் தர்மம் அல்ல.இங்கு போய் போயே எனக்கு மன அழுத்தம் வந்து மாத்திரைகள் சாப்பிட்டுள்ளேன்.ஆகவே எம் இனமாயினும் வேறு இனமாயினும் பெற்றார் ஆகிய நாம் தான் தவறிழைத்து பிள்ளைகளுக்கு சந்தர்பங்களை வழங்குகிறோம்.என்னையே பலர் கேட்பார்கள் என்ன பட்டிக்காட்டு வாழ்க்கை வாழ்கிறீர்கள் என" அதற்கு நான் கூறுவது இன்னும் நான் கனடியன் அல்ல சில விடயங்களை எனது பிள்ளைகள் செய்யும் போது ஏற்றுகொள்ளும் பக்குவம் எனக்கில்லை.ஆகவே அவர்கள் எமது கலாச்சாரத்தில் வாழட்டும்"

அதிகமான சந்தர்பத்தில் வன்முறையாளரை வீட்டுக்குள் உருவாக்குவது நாம்தான்.எமது பிள்ளை எம்மை மீறும் சந்தர்ப்பத்தை கூடுதலாக உருவாக்குபவர்கள் பாடசாலை ஆசிரியர்களும் சக மாணவர்களும் தான்,இப்படியான சந்தர்பங்களை நாம் முளையிலேயே கிள்ளி விட வேண்டும்.ஒரு எளிய முறை:-உங்கள் பிள்ளைகளின் பாடசாலையில் நடைபெறும் ஒவ்வொரு கூட்டத்திற்கும் சமூகமளிக்க வேண்டும்.உங்கள் பிள்ளைகளின் ஆசிரியையிடம் உங்கள் செல்லிடபேசி நம்பர்களை கொடுத்துவையுங்கள்.அவருடன் தொடர்பிலிருப்பதால் உங்கள் மீது அவருக்கு பயம் இருக்கும்.இது உங்கள் பிள்ளைக்கு பூரண பாதுகாப்பு கிடைக்கின்றது.இதே போல கணனி நடுவீட்டில் தான் இருக்க வேணும்.தொலைக்காட்சி நடுவீட்டில் முக்கியமல்ல.பிள்ளைகளுக்கு தேவையில்லாமல் செல்லிடப்பேசி வாங்கி கொடுக்காதீர்கள்.ஒருசில பிள்ளைகளுக்கு கட்டாயம் தேவைதான்.ஆகவே உங்கள் பொருளாதார பளுக்களை பிள்ளைகள் மீது சுமத்தாது அவர்களுடன் நண்பர்களாயிருந்து அரவணைத்தால் அவர்கள் நல்லவர்கள் தான்.சிலவிடயங்களில் அவதானம் தேவை,அண்மையில் ஒரு பிள்ளையின் பிறந்ததின நிகழ்வில் ஒருதாய்மாமன் தனது மருமக்கள்மாருக்கு (18 ௨0வயதுதான் இருக்கும்) வொட்கா போத்தில் ஒன்றை கொண்டுவது மறைத்து கொடுக்கின்றார்.அவர்களுடன் இரண்டு பெண் பிள்ளகளும் சேர்ந்து குடித்தார்கள்.இதை தனது பிள்ளை செய்தால் ஏற்று கொள்வாரா?

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாதான் எனக்கு எல்லாம் , அப்பா இப்போது என்னுடன் இல்லை !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.