Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடு கடந்த அரசின் ஆதரவில் நியூயோர்க் விளையாட்டுப் போட்டி

Featured Replies

என் அறிவுக்கு எட்டியவரையில் சொல்லப் போனால் இப்படி எடுப்புக்களே தேவை இல்லை..இன்று வரைக்கும் ஊரில் நடந்து கொண்டு இருப்பது அறிந்து கொண்டே இருக்கிறம்..இப்படி ஏற்பாடுகளை செய்பவர்கள் காதுகளுக்கும் நடக்கும் துக்க செய்திகள் போய் சேரும் என்று நினைக்கிறன்.அல்லது ஒன்iயும் பார்க்க,கே;க,பேசக் கூடாது என்று கண்ணை,காதை,வாயைப் மூடிக் கொண்டு இருந்து தான் இப்படி பட்ட நிகழ்வுகளை எல்லாம் நடத்துகீனமோ தெரிய இல்லை.தமிழன் இறக்கும் போதும் அடுத்தவன் கால் சப்பாத்தை நக்கி உயிர் பிச்சை கேட்டும் முடியாத கட்டத்தில் உயிர் துறந்து கிடப்பது கூட இவர்களின் உணர்வுகளைத் தூண்ட இல்லையா..இந்த ஏற்பாடுகளை செய்பவர்களும் தமிழர்கள் தானே..இவர்களின் உணர்வுகள் எங்கே போனது.....???

எல்லாவற்றையும் தங்களுக்கும்,தங்களுக்கு சார்பானவர்களுக்காகவுமே செய்யிறார்களே ஒளிய உண்மையாக பாதிக்கபட்ட இனத்திற்காக ஏதாவது நடக்கிறதா என்றால் அது கேள்விக் குறியாகவே இருக்கிறது.....யாகத்தில் இருந்து அனைத்துமே ஒரு வேண்டப்படாத நிழக்வுகளாகத் தான் நடந்து கொண்டு இருக்கிறது..ஏன் இவற்குக்கு செலவளிக்கும் பணம் என்ன வானத்தில் இருந்து கொட்டுதா..யாகம் செய்யும் போது ஒரு ஆலயதில் இருந்தே நான்கிற்கும் மேற்பட்ட அந்தணப் பெருமக்கள் வந்திருந்தார்களே அவர்கள் எல்லாம் ருத்திர தாண்டவத்திற்கு ஓசியில மந்திரம் ஓதிட்டு போக வந்தார்களா...பத்துக்கும் மேற்பட்ட அந்தணர்கள் இருந்தார்கள் இவர்கள் அனைவருமே ஒரு சதமுமே வாங்கமால் தான் ருத்திர யாகம் செய்துட்டு போனார்களா..இந்த நிமிசம் வரைக்கும் ஊரில் எத்தனை உயிர் பசியால் வாடி,வதங்கி உயிர் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள்..அப்படி இருக்கையில் தான் இந்த கேளிக்கை கூத்துக்கள் எல்லாம் செய்யிறார்கள்..எந்தக் கூத்தாக இருந்தாலும் வேறை நாடுகளில் இருந்து யாரையாவது அழைத்து வைச்சு கூத்தும்,கும்மாளமும் தானே நடக்கிறது..நான் நேரடியாக எந்த நிகழ்வுகளுக்கும் இதுவகை;கும் போனவள் இல்லை இனிமேலும் போகும் எண்ணம் இல்லை..ஆனால் வீட்டு தொலைக்காட்சிகளில் கண்ணுறாவி நிகழ்வுகளை பார்க்க கூடியதாக இருக்கும்....எல்லாம் தங்களுக்கு பெயர் தேடிக் கொள்ளும் விதமான நிகழ்வுகள் தான்..அப்படி இல்லாட்டி விடுதலைப் பாடல்களை கொச்சைப்படுத்தும் விதமான நடன நிகழ்வுகள்.அர்த்தம் இல்லாத திரைப்படப் பாடல்களுக்கு குத்தாட்டம் போடுவது..இதைத் தான் ஊரிலும் செய்தார்களா இல்iயே....

ஊரில் உண்மையாக சில நிகழ்வுகளை உருக்கத்தோடு,உணர்வுபூர்மாக செய்தார்கள் அவ்வாறே அங்குள்ள மக்களும் தங்கள் பங்களிப்புக்களை செய்தார்கள்...ஆனால் புலம் பெயர் மண்ணில் அப்படி இல்லை நேரத்தை செலவளிப்பதற்காகவும்,சுய தம்பட்டம் அடிப்பதும்,படங்களுக்கு வீடியோக்களுக்கு முகம் காட்டுவதிலும் தான் முன்னணி வகித்து நிக்கிறார்கள்..பதின் எட்டு ஆண்டுகளாக புலம் பெயர் மண்ணில் என்ன,என்ன கூத்துக்கள் எல்லாம் நடக்கிறது என்று விலாவாரியப் பார்த்து கொண்டு இருக்க கூடியதாக இருக்கிறது....என்ன செய்வது உங்களோடு ஒருத்தியாக நானும் கண்ணையும்,வாயையும்,காதையும் மூடிட்டு இருக்க வேண்டிய நிலை தான்..

இறுதியாக ஒன்றை சொல்லிட்டு போறன்..இதே அமெரிக்க மண்ணின் மைந்தனாக இருந்த ஜோன் எப்.கெனடி அவர்கள் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது சொல்லி சென்றாராம்..நாடு உனக்கு என்ன செய்தது என்று யோசிக்காதே..நீ நாட்டுக்கு என்ன செய்தாய் என்று யோசி..என்று சொல்லி சென்றாராம்...ஆகவே நாடு எங்களுக்கு ஒன்றும் செய்யத் தேவை இல்லை..நாட்டுக்கு நாம் என்ன செய்தோம் என்று ஒவ்வொரு தமிழ்மகளும்,தமிழ்மகனும் நித்தமும் நினைத்து வாழ்வோமாக இருந்தால் எங்கள் மண் இப்படி போகாது,எங்கள் உடன் பிறப்புக்கள் நாளுக்கு நாள் இறப்பை சந்திக்க மாட்டார்கள்...நன்றி.

இந்தப் பகுதிக்கு என் கருத்து வேண்டப்படாத ஒன்றாக இருந்தால் நிர்வாகத்தினருக்கு என் கருத்தை நீக்கி கொள்வதற்கு பூரண அனுமதி அளிக்கிறேன்.

செத்துப்போன மாடு உயிரோடு இருந்திது எண்டால் , ஓட்டைச் செம்பாலை ஒம்பது செம்பு பால் கறப்பன் எண்ட கதையாத்தான் யாயினி இவையளின்ரை விளையாட்டுகள் இருக்கு . இங்கை பாத்தால் சிங்களத்தின் பிரான்ஸ் தூதுவர் விளையாட்டுப் போட்டியில பிரதம விருந்தினர் . அப்ப அடுத்த மாவீரர் தினம் ?????????????????????

  • Replies 120
  • Views 6.2k
  • Created
  • Last Reply

பாதிக்கப்பட்ட தமிழர்கள் இன்று உண்ண உணவில்லாமல் உள்ள போது இப்படியான நிகழ்வுகளை நடத்தாமல் தவிர்ப்பது நல்லது. அந்த பணத்தை மக்களுக்கு கொடுக்கலாம். விளையாட்டுப்போட்டி நடத்துபவர்கள் மட்டுமல்ல பார்க்க வருபவர்களும் பணத்தை செலவழிக்கிறார்கள். அந்த மக்களை நினைத்து சிக்கனமாக பணம் சேமிக்க வேண்டிய நேரத்தில் இப்படி அனைவரும் நடப்பது வேதனையாக உள்ளது.

மக்களை தாயகத்திற்காக ஒன்று சேர்ப்பதற்கு விளையாட்டுப்போட்டி உகந்ததல்ல. அப்படி உகந்ததென்று நினைப்பவர்கள் எம்மக்களின் பிரச்சினையை தீர்த்து விட்டு நடத்துங்கள். தமிழீழ அணிக்கு ஆதரவளிக்கலாம். அது எமக்கான பிரச்சாரம், காலத்தின் தேவை. ஆனால் இது அவசியமற்ற ஒன்று. இது தான் என் நிலை.

முடிந்தால் கூட்டங்களை கூட்டி எம்மக்களுக்கு தனிப்பட என்றாலும் உதவும்படி பிரச்சாரங்களை மேற்கொள்ளுங்கள். அல்லது இறுதிப்போரில் கொல்லப்பட்ட மக்கள், பாதிக்கப்பட்ட மக்களின் படங்களை போட்டு கண்காட்சிகளை நடத்துங்கள். வேறு நாட்டவர்கள் மத்தியில் எம் இன படுகொலையை பரப்பலாம். சிலர் பண உதவியும் செய்யக்கூடும்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு மக்கள் ஆதரவு வழங்குகிறார்கள் இல்லை, அவர்கள் மேல் நம்பிக்கை இல்லை என்று பலரும் கதைப்பதற்கு காரணம் மக்களுக்கு எது தேவையோ அதை நிறைவேற்ற முயற்சி செய்வது குறைவு. உங்களுக்கு மக்கள் ஆதரவு இருக்க வேண்டும், உங்களை நம்பி மக்கள் பணம் வழங்க வேண்டும் என்றால் உங்கள் செயற்பாடுகள் அதற்கேற்றபடி இருக்க வேண்டும்.

அன்று புலிகளுக்கு பணம் கொடுப்பது கூட மக்கள் பலர் தாமாக கொடுக்கவில்லை. புலிகள் அங்கு ஆமிக்கெதிராக அடிக்க அடிக்க அதனால் பெறப்பட்ட உற்சாகத்தினால் தான் பலர் பண உதவி வழங்கினர். அவர்களுக்கே அந்த நிலை எனும் போது உங்கள் செயற்பாடுகள் எப்படி அமைய வேண்டும் என்று நீங்கள் திட்டமிட்டு இனியாவது செயற்படுங்கள்.

உங்களால் வேற்று இனத்து தலைவர்கள் எவரையும் ஒரு ஒழுங்கு செய்து சந்திக்க முடியாதா?

அவர்களுடன் எம் பிரச்சினை பற்றி விவாதிக்க முடியாதா

கடைசி வேற்று நாட்டு பத்திரிக்கை நிரூபர்களையாவது சந்திக்க முடியாதா?

அவர்கள் பத்திரிகையில் எம்மக்களின் அவலங்களை கொண்டுவர முடியாதா?

இல்லை என்றால் ஏன் என்று யோசித்து அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். (ஒரு தடவையுடன் நிறுத்தாமல் தொடர வேண்டிய சூழல்)

ஏற்கனவே நீங்கள் தமிழ் மக்களுக்காக செய்த உதவிகளை நான் மறக்கவில்லை. அதற்கும் நன்றியை தெரிவிக்கிறேன். ஆனாலும் உங்கள் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டுமென்று திட்டமிட்டு நடத்துங்கள்.

மக்களை ஒன்று சேர்க்க வேண்டுமெனின் மாவீரர் தினத்திற்கு ஒன்று சேருங்கள். அங்கும் மக்கள் உணர்வு பூர்வமாக மாவீரர் தினத்தை கொண்டாட வேண்டும். fun ஆக வருபவர்கள் கூட இறுதியில் அழுது கொண்டு செல்லும் வகையில் உங்கள் உரை, நடவடிக்கை, மாவீரர் பாடல்கள் அமைய வேண்டும்.

இதனை குறையாக எவரும் பார்க்காமல் என்ன சொல்ல வருகிறேன் என்று புரிந்து கொள்ளுங்கள். :rolleyes:

நன்றி.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் விரும்பிற வடிவுக்கு எல்லாம் போராடிக் கொண்டிருக்க முடியாது. அப்படின்னா தலைவர் கூட உருவாகி இருக்க முடியாது. தலைவர் கூட கடைசி வரை....சொந்த மக்களிடம் இருந்து தனித்துத் தான் வாழ வேண்டி வந்தது. அந்த வகையில் மக்கள் எவ்வளவு அருமையாக போராட்டத்தை விளக்கி நகர்த்திக் கொண்டிருந்தார்கள் என்பதையும் எம்மால் உணர முடிகிறது..???!

தலைவர்கள் உலக நிலவரத்தை ஆராய்ந்து தீர்மானிக்கும் வழியில் தான் மக்களுக்காகப் போராட முடியும்..!

நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகள்.. பற்றி சரியான அறிவின்மையே அவர்கள் மீதான மக்களின் அவநம்பிக்கைக்கும்.. குற்றச்சாட்டுக்களுக்கும் முக்கிய காரணம்.

புலம்பெயர் அசைலிகள்.. மக்கள் என்ற போர்வையில்.. தாயக மக்களை.. போராளிகளை.. போராட்டத்தைக் குற்றம் சொல்ல தகுதி உடையவர்களா என்ற இன்னொரு கேள்வியும் உள்ளது..???! :):icon_idea:

Edited by nedukkalapoovan

காசுகள் வாங்கேக்கை மட்டும் அசைலிகள் , கோப்பை கழுவியள் வேணுமாக்கும் . அவனவனவன் அறாவட்டிக்கு கடன்பட்டு குடுக்கேக்கை எங்கை போனது உந்த ஞானங்கள் ?????????????

  • கருத்துக்கள உறவுகள்

1972 இல் ஆயுதப் போராட்டம் தொடங்கிய போது எத்தனை அசைலிகள் இருந்தனர்..??????????! இன்று எத்தனை பேர் இருக்கினம்..??! எமது அரசியல் பிரச்சனையும்.. இனக்கலவரமும்.. 1952 இலேயே தொடங்கிட்டுது. ஏன் 20 வருசமா.. அசைலிகள் ஓடிவர முடியல்ல..???!

எமது ஆயுதப் போராட்டமே அசைல வாழ்வின் அடி நாதம். அதற்கு போராளிகளின் இருப்பும் போராட்டமும்.. தேவைப்பட்டது. அதற்காகவும்.. போராட்டத்தை.. காசு கொடுத்து காப்பாற்றியவர்களும் உள்ளனர்.

காசும்.. ஆயுதமும் போராடும் என்றிருந்தால்.. முள்ளிவாய்க்கால் பேரழிவு நிகழ்ந்திருக்காது. முள்ளிவாய்க்கால் பேரவலம் ஏற்பட அசைலிகளின் பெருக்கமும் ஒரு காரணம்..!

மக்களின் ஒரு பகுதி போராட்டத்தில் ஈடுபட இன்னொரு பகுதி அதனை வைத்து தமது வாழ்வாரத்தைப் பெருக்கிக் கொண்டது. அதில் அசைலிகள் முக்கியமானவர்கள். போராட்டத்திற்கு செய்யப்பட்ட நிதி உதவி மட்டும் போதும் என்றால்.. இன்று நாம் தமிழீழத்தை வென்றிருக்க வேண்டும்..???! ஏன் முடியல்ல...???! இந்தக் கேள்வியை எத்தனை அசைலிகள் தம்மை தாமே கேட்டுள்ளனர்..????! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எப்பவுமே திரிக்கு சம்மந்தம் இல்லாமல் எழுதி திரியை திசை திருப்புவதே சிலருக்கு வேலையாய் போயிட்டுது ^_^

புலம்பெயர் அசைலிகள்.. மக்கள் என்ற போர்வையில்.. தாயக மக்களை.. போராளிகளை.. போராட்டத்தைக் குற்றம் சொல்ல தகுதி உடையவர்களா என்ற இன்னொரு கேள்வியும் உள்ளது..???! :):icon_idea:

இங்கு யார் தாயக மக்களை போராளிகளை போராட்டத்தை குற்றம் சுமத்தினார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு யார் தாயக மக்களை போராளிகளை போராட்டத்தை குற்றம் சுமத்தினார்கள்?

உருத்திரகுமரன் அண்ணா.. தேசிய தலைவரின் சட்ட ஆலோசகர். அன்ரன் அண்ணாவைப் போல தலைவருக்கு நம்பிக்கைக்குரிய ஒருவர். அவரின் தலைமையில் உள்ள ஒரு அமைப்பின் மீது நம்பிக்கை கொள்ளத் தேவையில்லை.. (கே பியும் தான் என்று சொல்லுவியள்.. கே பி தலைவரால் நேரடியாக மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஒருவர் அல்ல. ஆனால் உருத்திரகுமரன் அண்ணா நேரடியாக தலைவரால்.. மக்கள் முன் நிறுத்தப்பட்ட ஒருவர். எங்கட தமிழ்செல்வன் அண்ணா போல).. அவர்கள் மீது வீண்பழி சுமத்துவதை நிறுத்தி.... அவர்களின் ஜனநாயக செயற்பாடு உரிமையையாவது வழங்கலாமே.. என்பது தான் என் வேண்டுகோள்.

அவர்களுக்கு என்று ஒரு strategy உண்டு. அதன்படி அவர்கள் செயற்படுகிறார்கள். விடுதலைப்புலிகளிடமும் இருந்தது. மக்கள் அதனை தீர்மானிப்பதில்லை. அப்படி தீர்மானிப்பது என்றால்.. ஒரு அமைப்பை கொண்டு நடத்த முடியாது. அது சிதைந்து சின்னாபின்னமாவது தவிர்க்க முடியாயததாகும்.

இப்போ அப்பிள்.. அதன் வாடிக்கையாளர்கள் ஆளாளுக்கு சொல்வதை எல்லாம் செயற்படுத்த நினைத்தால்... அதன் கதி..என்னாகும். அது வாடிக்கையாளரின் தேவையை தீர்மானிக்கும்.. strategy பாவித்து முன்னேறும் ஒரு நிறுவனம். அப்படிதான் இதுவும்..! :):icon_idea:

அழகாக விளங்கப்படுத்தினீர்கள்.

நல்ல கருத்து நெடுக்ஸ்.

உருத்திரகுமரன் அண்ணா.. தேசிய தலைவரின் சட்ட ஆலோசகர். அன்ரன் அண்ணாவைப் போல தலைவருக்கு நம்பிக்கைக்குரிய ஒருவர். அவரின் தலைமையில் உள்ள ஒரு அமைப்பின் மீது நம்பிக்கை கொள்ளத் தேவையில்லை.. (கே பியும் தான் என்று சொல்லுவியள்.. கே பி தலைவரால் நேரடியாக மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஒருவர் அல்ல. ஆனால் உருத்திரகுமரன் அண்ணா நேரடியாக தலைவரால்.. மக்கள் முன் நிறுத்தப்பட்ட ஒருவர். எங்கட தமிழ்செல்வன் அண்ணா போல).. அவர்கள் மீது வீண்பழி சுமத்துவதையும்.. அவர்களின் ஜனநாயக செயற்பாடு உரிமையையாவது வழங்கலாமே.. என்பது தான் என் வேண்டுகோள்.

அவர்களுக்கு என்று ஒரு strategy உண்டு. அதன்படி அவர்கள் செயற்படுகிறார்கள். விடுதலைப்புலிகளிடமும் இருந்தது. மக்கள் அதனை தீர்மானிப்பதில்லை. அப்படி தீர்மானிப்பது என்றால்.. ஒரு அமைப்பை கொண்டு நடத்த முடியாது. அதை சிதைந்து சின்னாபின்னமாவது தவிர்க்க முடியாயதது.

இப்போ அப்பிள் வாடிக்கையாளர்கள் ஆளாளுக்கு சொல்வதை எல்லாம் செயற்படுத்த நினைத்தால்... அதன் கதி..என்னாகும். :):icon_idea:

மன்னிக்க வேண்டும் நெடுக்ஸ் அண்ணா, தாயக மக்களை, போராளிகளை, போராட்டத்தை நாம் குற்றம் சாட்டுகிறோம் என்று சொன்னீர்கள். இப்பொழுதும் கூறுகிறேன், அவர்களை நான் குற்றம் சாட்டவில்லை.

அத்துடன் இங்கு எங்கு நாடுகடந்த அரசாங்கத்தை நம்ப தேவையில்லை என்று கூறினேன்? அதனை இன்னும் நம்பாத மக்களின் நம்பிக்கையை பெறத்தக்கவாறு அவர்கள் செயற்பாடுகள் அமைய வேண்டும் என்று தானே கூறினேன். இரண்டுக்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரியவில்லையா?

தலைவர் ஒருவரை அறிமுகப்படுத்தினால் அவர் தலைவரின் கண்காணிப்பில் உள்ளவரை நாம் கவலை கொள்ள தேவையில்லை. ஆனால் இப்பொழுது அந்த நிலை இல்லை. எனவே நாம் தான் அவர்களின் நடவடிக்கை சரியாக இருக்கிறதா இல்லையா என்று கூற வேண்டும். அதை கேட்டு அவர்கள் தாம் இனி எதை தவிர்க்க வேண்டும் எதை செய்ய வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும். நீங்கள் கூறும் ஜனநாயக செயற்பாட்டு உரிமையும் அதை தான் கூறுகிறது.

நாங்கள் கூறுவது எதுவும் தமிழீழத்திற்கோ தாயகத்திற்கோ எதிரானதல்ல. அவர்கள் இன்றைய சூழலை உணர்ந்து அதற்கேற்ப நடக்க வேண்டும் என்று தான் நாங்கள் கூறுகிறோம்.

விடுதலைப்புலிகளையும் நாடுகடந்த அரசாங்கத்தையும் ஒப்பிட வேண்டாம். ஏனென்றால் விடுதலைப்புலிகள் மீது மக்கள் வைத்த நம்பிக்கையின் அளவு நாடுகடந்த அரசாங்கத்தின் மேல் வைக்கவில்லை. அப்படி வைக்க வேண்டுமென்றால் அது அவர்களின் செயற்பாடுகளில் தங்கியுள்ளது.

அவர்கள் என்ன செய்தாலும் சரி என்று நினைத்து ஒரு பகுதியினர் ஆதரவை வழங்கலாம். ஆனால் அவர்களின் ஆதரவு மட்டும் அவர்களுக்கு போதாது. எனவே மக்களில் பெரும்பகுதியினரின் ஆதரவை திரட்ட வேண்டிய தேவை அவர்களுக்கு உண்டு. அதற்கேற்ற படி அவர்களின் செயற்பாடுகள் அமைய வேண்டும்.

அப்பிள் கொம்பனியையும் நாடுகடந்த அரசாங்கத்தையும் ஒப்பிட முடியுமா? அப்பிள் தனக்கென்று ஒரு தரத்தை மக்களிடையே பிடித்துக்கொண்டது. வாடிக்கையாளர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளை அவர்கள் அப்படியே கேட்டுவிட்டு கைவிடப்போவதில்லை. தமது அடுத்தடுத்த தயாரிப்புகளில் கொண்டு வருவார்கள். அப்படி கொண்டு வராவிட்டாலும் அப்பிளின் தரம் குறையாது. எந்த நாட்டவனை கேட்டாலும் அப்பிளை தான் தரமுள்ளதென்று கூறும்படி உருவாக்கி விட்டார்கள். அதற்கு நீங்களே உதாரணம்.

ஆனால் நாடுகடந்த அரசாங்கம் தனக்கென்று ஒரு தரத்தை முழுமையாக மக்களிடையே பெற்றுக்கொள்ளவில்லை. பெரும்பகுதி மக்களையும் திரட்ட வேண்டிய சூழல் அதற்கு உண்டு. அவர்களை பழி சொல்லி எந்த கருத்தையும் நான் முன்வைக்கவில்லை. ஆனால் அவர்கள் தேவையற்ற விடயங்களை தவிர்த்து தேவையான விடயங்களில் கவனத்தை செலுத்த வேண்டும் என்றே கூறுகிறேன்.

  • இங்கு விளையாட்டுப்போட்டி வைப்பதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன பிரயோசனம் கிடைக்கும்?
  • இதில் கலந்து கொள்பவர்களில் எத்தனை பேர் அம்மக்களை நினைத்து கண்ணீர் விடுவார்கள்?
  • இதனை நடத்துவது மூலம் நாடுகடந்த அரசாங்கத்தால் எவ்வளவு பணத்தை தேறிய இலாபமாக பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கிறது?
  • அதில் எவ்வளவு பணத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்ப கூடியதாக உள்ளது? அனுப்புகிறார்களா? இல்லையா?
  • இங்கு கலந்து கொள்ளும் தமிழ் மக்கள் அனைவரும் வீண்விரயம் செய்யும் பணத்தின் மொத்த தொகை எவ்வளவாக இருக்கும்?

  • அதுவே இந்த போட்டியை நடத்தாமல் விட்டால் நாடுகடந்த அரசாங்கம் எவ்வளவு பணத்தை மக்களுக்கு அனுப்பி உதவியிருக்க முடியும்?
  • இங்கு மக்கள் கலந்து கொள்ளாமல் விட்டிருந்தால் மக்களில் ஒருபகுதியினராவது அப்பணத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பியிருக்க முடியும். அதன் தொகை எவ்வளவு?

இதையெல்லாம் யோசித்து நாடுகடந்த அரசாங்கம் நடக்குமானால் மக்கள் ஆதரவு பெருகுமே தவிர குறையப்போவதில்லை.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

துளசி.. புலம்பெயர்ந்த மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று விடுதலைப்புலிகள் அமைப்பு தோற்றம் பெற்றதல்ல. விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்றம் பெற்றதால்.. கிடைக்கப்பெற்ற ஒரு சைட் அந்தஸ்து தான் இந்த புலம்பெயர் மக்கள் என்றதே.

போராடப் பயந்து ஊரைவிட்டு பிழைப்புக்கு ஓடினதுகள் எல்லாம்.. யார் யார் மேல நம்பிக்கை வைக்குங்கள் என்பது உலகமே அறிந்தது..!

உருத்திரகுமரன் அண்ணா உட்பட நாடு கடந்த தமிழீழ அரசில் உண்மைப் போராளிகள் உள்ளனர். அவர்கள் தங்கள் மீது நம்பிக்கை வைக்கச் சொல்லவில்லை. அல்லது நீங்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் இராணுவ முகாம்களை தாக்க முடியாது. தற்கொடை தாக்குதல் செய்ய முடியாது.

அவர்களுக்கு உள்ள செயற்பாட்டு வரம்புக்குள் அவர்கள் இயன்றதை செய்கிறார்கள்.

தாயகத்தில்.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தார்மீக ரீதியில் உதவ முன்வர வேண்டியது புலம்பெயர் மக்களே அன்றி நாடு கடந்த தமிழீழ அரசல்ல. மாதா மாதாம்.. பாதிக்கப்பட்ட மக்களுக்காக நீங்கள்.. ஒரு பங்களிப்பை செய்ய முன் வந்தால்.. அதனை நாடு கடந்த தமிழீழ அரசு நிராகரித்தால்.. அதன் பின்னர் தான் நீங்கள் சொல்வது நியாயம் என்றாகும். ஆனால் நீங்கள் எவரும் உதவியே செய்ய முன்வராமல்.. ஒரு அமைப்பை குற்றம்சாட்டிக் கொண்டிருப்பதில் பயனில்லை.

ஏன் அதிகம் போவான்.. யாழில் உதயம் பெற்ற நேசக்கரம் அமைப்பு கிட்டத்தட்ட யாழ் உறவுகளால் கைவிடப்பட்ட நிலையில் ஓரிருவரின் அயராத உழைப்பில் இன்று இயங்கிக் கொண்டிருக்கிறது. அதற்காக அந்த அமைப்பின் வெற்றிக்கு எல்லாம் புலம்பெயர் மக்கள் உரிமை கோர முடியாது..! அதே நிலை தான் இங்கும்.

மக்கள் நம்பனும் என்பதற்காக போராட்ட அமைப்புக்கள் உருவாவதில்லை. மக்களுக்கு நீதி நியாயம்.. கிடைக்க வேண்டும் என்பதற்காகவே அமைப்புக்களும் தலைவர்களும் உருவாகின்றனர். தேசிய தலைவர் மீது 100% நம்பிக்கையை வெளிப்படுத்தி இருந்தால்.. நீங்கள் புலம்பெயர்ந்து இருக்கத் தேவையில்லை.... என்ற அடிப்படையை மறைத்து ஒரு போலி வாதம் செய்ய நான் அதனை ஏற்கத் தயார் இல்லை.

நிஜத்தை நிஜமாக பார்க்கப் பழகுவதும்.. மக்கள் நாம் விட்ட தவறுகளை திருத்தாமல்.. தலைவர்களை.. அமைப்புக்களை திருத்த நினைப்பதும்.. மகா கேவலம். மக்கள் திருந்தி நடந்து தலைவர்கள் மக்கள் விருப்பை கவனத்தில் கொள்ளாமல் நடந்தால் தான் அதிருப்தி வரனும். ஆனால் இங்கு.. தலைவர்கள் மக்கள் விருப்புக்கு நடக்கத் தயாராக உள்ள போதும்.. மக்கள் ஏனோ தானோ என்று நடந்து கொண்டு தலைவர்களில் குறை சொல்லிப் பயனில்லை..!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு...நீங்கள் புலம்பெயர் மக்கள் உதவி செய்ய முன் வந்து அதனை.. நாடு கடந்த தமிழீழ அரசு நிராகரித்த ஒரு சம்பவத்தை எம் முன் கொண்டு வாருங்கள் பார்க்கலாம்..???!

ஒரு ஜனநாயக அமைப்பு என்ற வகையில்.. நாடு கடந்த தமிழீழ அரசு பற்றிய மக்களின் அறிதல்.. மற்றும் உறவாடல்.. மற்றும் மக்கள் மத்தியில் அவர்களின் செயற்பாடுகளும்.. நெருக்கமும் அவசியமாகிறது. அந்த வகையில் அவர்கள் மக்களை நெருங்கி மக்களின் மனதறியும் விடயங்களில் கவனம் செலுத்துவது அவசியம்.

விளையாட்டுப் போட்டிகள்.. மற்றும் சமூக நிகழ்வுகளை ஒழுங்கமைப்பதன் மூலம்.. மக்களை அதிகம் நெருங்க முடியும் என்ற வகையில்.. நாடு கடந்த தமிழீழ அரசு அதற்கும் மக்களிற்கும் இடையில்.. உள்ள சில இடைவெளிகளை நிரப்ப முனைகிறது என்றே நான் கருதுகிறேன்.

மேலும் நாடு கடந்த தமிழீழ அரசு நேரடியாக உதவித்திட்டங்களை தாயகத்தில் செயற்படுத்த முடியாது. காரணம்.. நாடு கடந்த தமிழீழ அரசினை.. ஒரு புலி அமைப்பாகவே சிறீலங்கா அரசு பார்க்கிறது. இந்த இடத்தில்.. அந்த அமைப்பு புலி அமைப்பு அல்ல.. ஜனநாயக ரீதியில் அமையப்பெற்ற மக்கள் அமைப்பு என்பதை உலகிற்குச் சொல்ல வேண்டிய ஒரு அவசியமும் உள்ளது. இதற்கு மக்களுடனான உறவாடல்.. மக்கள் - அமைப்பு நெருக்கம்.. நம்பிக்கை வளர்வது அவசியம். இதனை நாடு கடந்த தமிழீழ அரசு உணரத்தலைப்பட்டிருப்பது நல்ல விடயமும் கூட.

என்னைப் பொறுத்தவரை ஆரம்பிக்கப்பட்டு.. பல சட்ட..அழுத்தங்கள் நிறைந்த சூழலில்.. தேசியக் கொடியான புலிக்கொடி தாங்கி.. தமிழீழம் என்ற பெயர் தாங்கி.. செயற்படும்.. ஒரு நேர்த்தியான அமைப்புக்குரிய கட்டமைப்புள்ள ஒரு ஜனநாயக நிறுவனமாகவே நாடு கடந்த தமிழீழ அரசை பார்க்கிறேன். இதனை மக்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம்.. அவர்களின் குறைந்த பட்ச அபிலாசைகளை என்றாலும் பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்பது எனது எண்ணம்.

இதனை.. பல அரசியல் அறிஞர்களும் ஏற்கவே செய்கின்றனர். அதனால் தான் தமிழகத்தில்.. இந்த அமைப்பின் துணை அமைப்பை உருவாக்கி செயற்படுத்தி வருகின்றனர். அதேபோல்.. சிங்கப்பூர் மலேசியாவில் இருந்தும் ஒத்துழைப்புக்கள் குவிந்திருக்கின்றன.

ஆனால்.. புலம்பெயர் மண்ணில்... உள்ள அசைலிகள் சிலர் தான் விசமத்துக்கு சந்தேகங்களையும்.. குழப்பங்களையும் வளர்த்து ஈழத்தமிழர் மத்தியில் எந்த ஒரு அரசியல் நிறுவனமும்.. நிலை பெற முடியாது.. இருக்கக் கூடிய சூழலை.. உருவாக்கி வருகின்றனர்.

இது எதிரிக்கே உதவும் செயலாகும். இதன் மூலம் இவர்கள் எதனை சாதிக்கிறார்கள் என்று நீங்கள் சொல்ல முடியுமா..???! இதன் மூலம்... தமிழீழத்துக்காக உயிர் தந்த மக்களும்.. போராளிகளும்.. தமிழீழத்திற்காக துன்பம் சுமக்கும் மக்களும் போராளிகளும் அடையும் நன்மை என்ன என்று நீங்கள் பட்டியலிட முடியுமா..????! :icon_idea::)

Edited by nedukkalapoovan

நெடுக்ஸ் அண்ணா,

தமிழர்கள் இன்றுள்ள சூழ்நிலையில் தாயகத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பையும், புலம்பெயர் தேசத்தில் நாடுகடந்த அரசாங்கத்தையும் நம்புவதை தவிர வேறு வழியில்லை.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக புலம்பெர் தேசத்து மக்கள் உதவி செய்வதற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திடம் மக்கள் பணம் கொடுக்க வேண்டும் என்றால் அவர்கள் நடவடிக்கை அதற்கேற்றபடி அமைய வேண்டும் என்று ஏற்கனவே கூறி விட்டேன். இங்கு அவர்கள் விளையாட்டு போட்டிகளையும் தேவையற்ற செயல்களையும் செய்வதை பார்க்கும் மக்கள் எப்படி பணம் வழங்க முன்வருவார்கள்? தாம் வழங்கும் பணத்தையும் இப்படியான நிகழ்வுகளுக்கு தாரை வார்த்து விடுவார்கள் என்று தான் நினைப்பார்கள். அதனால் தான் அவர்களின் செயற்பாடுகளில் மாற்றம் வர வேண்டும் என்று கேட்கிறேன்.

அவர்களின் செயற்பாட்டு வரம்புக்குள் அவர்கள் இயன்றதை செய்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். ஆனால் அவர்களின் செயற்பாட்டு வரம்புக்குள் இவற்றை தவிர்த்து இதைவிட அதிகமாக செய்ய முடியும் என்று நான் கூறுகிறேன்.

நாடுகடந்த அரசாங்கத்தை பற்றி கதைக்கும் போது நேசக்கரத்தை எதற்கு இங்கு இழுக்கிறீர்கள்? நேசக்கரத்தை தலைவரா அறிமுகப்படுத்தி வைத்தார்?

மக்கள் நம்பனும் என்பதற்காக போராட்ட அமைப்புக்கள் உருவாவதில்லை. மக்களுக்கு நீதி நியாயம்.. கிடைக்க வேண்டும் என்பதற்காகவே அமைப்புக்களும் தலைவர்களும் உருவாகின்றனர். தேசிய தலைவர் மீது 100% நம்பிக்கையை வெளிப்படுத்தி இருந்தால்.. நீங்கள் புலம்பெயர்ந்து இருக்கத் தேவையில்லை.... என்ற அடிப்படையை மறைத்து ஒரு போலி வாதம் செய்ய நான் அதனை ஏற்கத் தயார் இல்லை.

தேசிய தலைவர் மீது 100% நம்பிக்கையை வெளிப்படுத்தி இருந்தால் நீங்கள் அவருடன் சேர்ந்து போராடாமல் ஸ்டுடென்ட் விசாவில் வெளிநாடு வந்திருக்க தேவையில்லை என்ற அடிப்படையை மறைத்து அகதிகளை குற்றம் சாட்டுவதை ஏற்க நான் தயார் இல்லை. :)

விளையாட்டு போட்டிகள் சமூக நிகழ்வுகளை இந்த காலப்பகுதியில் நடத்துவதன் மூலம் நாடுகடந்த அரசாங்கம் மக்களை நெருங்க முடியாது என்பதே என் கருத்து. விளையாட்டுப்போட்டிக்கு வரும் பெருமளவிலான மக்கள் விளையாட்டுப்போட்டியை ரசித்து விட்டு செல்ல தான் வருகிறார்கள். மக்களிடம் உதவியை நாளைக்கு நாடுகடந்த அரசாங்கம் எதிர்பார்த்தால் அதே மக்களில் பெரும்பாலானோர் உதவி வழங்க மாட்டார்கள். கொடுத்தால் விளையாட்டுப்போட்டியை தானே நடத்துவார்கள் என்று நினைப்பார்கள்.

அகதிகளை குற்றம் சாட்டி எல்லா இடமும் கருத்து எழுதுகிறீர்கள். இந்த அகதிகள் இல்லாமல் நாடுகடந்த அரசாங்கம் செயற்பட முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள். அகதிகளில் ஒரு பகுதியினராவது பாதிக்கப்பட்ட மக்களை நினைத்து பண உதவி செய்கிறார்கள்.

ஆனால் ஸ்டுடென்ட் விசாவில் வந்தவர்கள் செய்யும் அட்டகாசம் எனக்கு தெரியாதென்று நினைக்கிறீர்களா? நாடுவிட்டு நாடு வந்ததும் வெள்ளைக்காரியளை சைட் அடிக்கிறதும், படிக்கும் யுனியிலும் college இலும் குடியும் கும்மாளமுமா இருப்பதும், மாறி மாறி காதலிக்கிறதும், அவர்களுடன் பார்க் பீச் என்று சுற்றுவதும், அவர்களுடன் சேர்ந்து உணவு உண்ண விலையுயர்ந்த restaurant க்கு செல்வதும் என்று நாட்டை மறந்து தாங்கள் சந்தோசமாக சுற்றுவது, பின்னர் தாம் என்ன செய்கிறோம் என்பதை மறந்து இங்கு அகதிகளை குற்றம் சாட்டி கருத்துகளை வைக்கிறது. (நீங்கள் எப்படி என்று தெரியாது. பொதுவாக சொன்னேன்)

எனவே அகதிகளை பற்றி ஸ்டுடென்ட் விசாவில் வந்தவர்கள் கேவலப்படுத்தி எழுதுவதை இனியாவது தவிருங்கள்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------

[size=5]நான் நாடுகடந்த அரசாங்கத்தை விரும்பியோ விரும்பாமலோ [/size][size=5]ஆதரிப்பவள். ஆனால் அவர்கள் செயற்பாடுகள் தாயகத்திற்கு நன்மை பயக்கும் விதத்தில் அமைந்தால் அல்லது தமிழீழ விடுதலைக்கான பாதையில் சென்றால் எனது மற்றும் என்னை சார்ந்தோரின் பங்களிப்புகள் நிச்சயம் இருக்கும். அதுவே தேவையற்ற நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டால் அவற்றில் எனது மற்றும் என் சார்ந்தவர்களின் பங்களிப்பு இருக்காது. இது தான் இங்குள்ள பலரின் நிலையும். [/size]

[size=5]இதனை நான் நெடுக்ஸ் அண்ணாவுக்கு கூறவில்லை. நாடுகடந்த அரசாங்கத்திற்கு கூறுகிறேன். அவர்களில் சிலர் யாழில் உறுப்பினராக இருப்பதால் இதனை வாசிப்பார்கள் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன். :)[/size]

[size=5]நான் நாடுகடந்த அரசாங்கத்தை விரும்பியோ விரும்பாமலோ [/size][size=5]ஆதரிப்பவள். ஆனால் அவர்கள் செயற்பாடுகள் தாயகத்திற்கு நன்மை பயக்கும் விதத்தில் அமைந்தால் அல்லது தமிழீழ விடுதலைக்கான பாதையில் சென்றால் எனது மற்றும் என்னை சார்ந்தோரின் பங்களிப்புகள் நிச்சயம் இருக்கும். அதுவே தேவையற்ற நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டால் அவற்றில் எனது மற்றும் என் சார்ந்தவர்களின் பங்களிப்பு இருக்காது. இது தான் இங்குள்ள பலரின் நிலையும். [/size]

[size=5] :)[/size]

இதுதான் என்றும் என்னுடைய நிலைப்பாடும்

Edited by தமிழச்சி

  • கருத்துக்கள உறவுகள்

எந்த அமைப்பாக இருந்தாலும் தமிழ்மக்களின் அபிலாசைகளுக்கு மதிப்பளிக்காது சுயநல நோக்கோடு செயல்ப்பட்டால் நிச்சயமாக மக்கள் ஆதரவை இழக்க வேண்டிவரும் இப்போதைக்கு வேண்டுமானால் தப்பித்து கொள்ளலாம் ஆனால் தொடர்ந்தும் அதே தவறை மக்கள் ஏற்கமாட்டார்கள்.

.. பிராதான விளையாட்டே இதுதான்.. அங்கோ

5.JPG

... திரை மறைவிற்கு பின்னிருந்து யாரோ நூலினால் பொம்மைகளை ஆட்ட இரசிக்கிறோம் ... ஆனால் அதை இரசித்தாலும், யாரோ ஆட்டுகிறார்கள், ஆடுவதும் பொம்மைகளை என்பதை அறிகிறோம்! ஆனால் ... இங்கோ

TGTE%20Logo.jpg

பின்னிருந்து ஆட்டுகிறார்கள் ... ஆடுகிறார்கள்!! ... ஆனால் எம்மில் சிலர் நம்புகிறார்களில்லை பின்னிருந்து ஆட்டுவிக்கப்படுவதை!!! பதிலுக்கு சொல்கிறார்கள் ..ஆடுகிறார்கள் ... பறவாயில்லை தொடக்கத்தில் சுமாராகத்தான் ஆடுவார்கள், பின் பழகி விடுவார்கள் ... அவர்கள் பழக மிச்சம் ஒன்றும் இருக்கப்போவதில்லை!

வாழ்த்துக்கள் போடும் ஆட்டங்களுக்கு .. விளையாட்டை சொன்னேன் ...

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]நான் நாடுகடந்த அரசாங்கத்தை விரும்பியோ விரும்பாமலோ [/size][size=5]ஆதரிப்பவள். ஆனால் அவர்கள் செயற்பாடுகள் தாயகத்திற்கு நன்மை பயக்கும் விதத்தில் அமைந்தால் அல்லது தமிழீழ விடுதலைக்கான பாதையில் சென்றால் எனது மற்றும் என்னை சார்ந்தோரின் பங்களிப்புகள் நிச்சயம் இருக்கும். அதுவே தேவையற்ற நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டால் அவற்றில் எனது மற்றும் என் சார்ந்தவர்களின் பங்களிப்பு இருக்காது. இது தான் இங்குள்ள பலரின் நிலையும். [/size]

[size=5] :)[/size]

அதே...........

ஒரு சந்தேகம்

உருத்திரகுமாரண்ணா

அகதியாக வந்தாரா?

படிக்க வந்தாரா?

உண்மையில் தெரியாததால் தான் கேட்கின்றேன்

ஆனால் அவரது அமைப்பிலுள்ளவர்கள் அநேகமாக எல்லோருமே அகதியாக வந்தோர்களே.

எப்படி வந்தாலும் அவர்களது உழைப்பை எமக்காய் தருவதற்காக அவர்களை வாழ்த்தி வணங்கின்றேன்

அதே...........

ஒரு சந்தேகம்

உருத்திரகுமாரண்ணா

அகதியாக வந்தாரா?

படிக்க வந்தாரா?

உண்மையில் தெரியாததால் தான் கேட்கின்றேன்

ஆனால் அவரது அமைப்பிலுள்ளவர்கள் அநேகமாக எல்லோருமே அகதியாக வந்தோர்களே.

எப்படி வந்தாலும் அவர்களது உழைப்பை எமக்காய் தருவதற்காக அவர்களை வாழ்த்தி வணங்கின்றேன்.

நல்ல கேள்வி விசுகு அண்ணா, ஆனால் எனக்கும் பதில் தெரியாது. அவர் அகதியா வந்தவரா ஸ்டுடென்ட் விசாவில் வந்தவரா என்று நெடுக்ஸ் அண்ணாவிடம் தான் கேட்க வேண்டும். :D உருத்திர குமார் அண்ணாவுக்கு அல்லது நாடுகடந்த அரசாங்கத்துக்கு ஆதரவாக கதைத்து கொண்டு அகதிகளை கொச்சைப்படுத்தும் நெடுக்ஸ் அண்ணா மாட்டி விட்டார். :lol: :lol:

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

அதே...........

ஒரு சந்தேகம்

உருத்திரகுமாரண்ணா

அகதியாக வந்தாரா?

படிக்க வந்தாரா?

உண்மையில் தெரியாததால் தான் கேட்கின்றேன்

ஆனால் அவரது அமைப்பிலுள்ளவர்கள் அநேகமாக எல்லோருமே அகதியாக வந்தோர்களே.

எப்படி வந்தாலும் அவர்களது உழைப்பை எமக்காய் தருவதற்காக அவர்களை வாழ்த்தி வணங்கின்றேன்

நான் நினைக்கிறேன் அவர் மாணவ விசாவில் வந்திருப்பார் என்று :unsure:

உருத்திரகுமரன் அண்ணா.. தேசிய தலைவரின் சட்ட ஆலோசகர். அன்ரன் அண்ணாவைப் போல தலைவருக்கு நம்பிக்கைக்குரிய ஒருவர். அவரின் தலைமையில் உள்ள ஒரு அமைப்பின் மீது நம்பிக்கை கொள்ளத் தேவையில்லை.. (கே பியும் தான் என்று சொல்லுவியள்.. கே பி தலைவரால் நேரடியாக மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஒருவர் அல்ல. ஆனால் உருத்திரகுமரன் அண்ணா நேரடியாக தலைவரால்.. மக்கள் முன் நிறுத்தப்பட்ட ஒருவர். எங்கட தமிழ்செல்வன் அண்ணா போல).. அவர்கள் மீது வீண்பழி சுமத்துவதை நிறுத்தி.... அவர்களின் ஜனநாயக செயற்பாடு உரிமையையாவது வழங்கலாமே.. என்பது தான் என் வேண்டுகோள்.

சரி தலைவரின் நம்பிக்கைக்கு உரிய கேபியை விடுவம், அவரை நேரே தலைவர் அறிமுகப்படுத்தவில்லையாம்! அப்ப மாத்தயா? கருணா? பிள்ளையான்? பாப்பா? ... யார் நமக்கு இவர்களையெல்லாம் அறிமுகப்படுத்தியது???

அகதியாக வர உருத்திரன் அண்ணா என்ன எங்களை போல அள்ளகையா ?

அவர் எல்லாம் அள்ளிவிட்டு அரசியலுக்கு வந்த ஆள் .

என்னுடன் வி.டி.கந்தசாமியிடம் இரசாயன டியூசனுக்கு வந்தார் .இந்துக்கல்லூரிக்கு சற்று தள்ளி இருக்கு அவரின் மேல்வீடு ஆனால் அவர் படித்து சென்றல்.சட்ட கல்லூரிக்கு சிவபாலனிடம் போகும் காலங்களிலும் சந்தித்திருக்கின்றேன் .சிவபாலன் யாழ் மேயராக வந்து கச்சேரியடியில் யாரோ சிங்கள் இராணுவ தளபதிக்கு வைத்த குண்டில் பலியானார் .இவருடன் படித்த சிவபாலன் ,ரவிராஜ் இவர்கள் நாட்டிலே இருந்து அரசியல் செய்தார்கள்,இவர் புலிகள் உச்சிக்கு வந்தபின் தொத்திக்கொண்டவர்.

இவர் போல தான் இன்னொருவரும் பெயர் செல்வகுமார்.ஆள் மிக படித்த இஞ்சினியர் ,குமார் பொன்னம்பலத்தின் ஊடாக புலிகளுடன் தொடர்பு வைத்து கொஞ்சநாள் பிரபலமாகினார் பின்னர் ஒரு மூச்சையும் காணவில்லை .

எழுதி வையுங்கள் இவர் அரசுடன் டீல் போடும் காலம் தொலைவில் இல்லை .

நெடுக்குக்கு சமர்ப்பணம் :( :( :(

(ஆரம்பத்திலேயே சொன்னேன். எமதுது பல்லைக்குத்தி................)

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய தலைவர் கருணாவை அறிமுகப்படுத்தியது போன்று.. அவரின் நிலையையும் சொல்லிவிட்டார். மாத்தையாவின் நிலையும் அதே. பாப்பா.. பற்றி ஆதாரமில்லாமல் எதனையும் எடுகோளாக எடுக்க முடியாது..!

என்னைப் பொறுத்தவரை நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகளில் எனக்கு சந்தேகம் இல்லை. அவர்களின் strategy ஐ என்னால் விளங்கிக் கொள்ள முடிகிறது.

1988ல் தேசிய தலைவரும் பிரேமதாச அரசுடன் டீலில் இருந்தார். அது அன்றைய காலத்தின் கட்டாயமாகவும் இருந்தது. அதற்காக அவர் உரிமைகளை தாரைவார்க்கவில்லை. ஒட்டுக்குழு புளொட்டு.. ஈபிடிபி.. ஈஎன் டி எல் எவ்.. ஈபி.. கருணா குழு செய்வது போன்ற டீலை அல்ல தலைவர் கொண்டிருந்தார். இயக்கத்தையும் மக்களையும் பலப்படுத்தி காப்பாற்றி... போராட்டத்தையும் பெரும் பலம் வாய்ந்த படைகளிடம் இருந்து காப்பாற்ற அவர் அப்படிச் செயற்பட்டார்.

நாளை நாடு கடந்த தமிழீழ அரசும்.. மக்களை.. உரிமைகளை விட்டுக்கொடுக்காத அப்படி ஒரு டீலுக்கு எவரோடு போனாலும் அதனை விளங்கிக் கொண்டு ஆதரிக்கத்தான் வேண்டும். சம்பந்தன் போல.. சிங்கக் கொடிக்கு விசுவாசம் பேசி மக்களை காட்டிக் கொடுப்பதை விட.. இது எவ்வளவோ மேல்..! :):icon_idea:

நான் நினைக்கிறேன் அவர் மாணவ விசாவில் வந்திருப்பார் என்று :unsure:

அதில் வர ஒரு தகுதி வேணும். இல்லாதவர்கள் எல்லைகளை.. ஆட்களை ஏமாற்றி.. கள்ளக்கடத்தலால் தான் வர முடியும்..! அதுவே மொத்த இனத்திற்கும்.. சர்வதேச அவமானமுமாகியுள்ளது..! மனித ஆட்கடத்தல் குற்றம் உட்பட பல குற்றங்கள் எமது போராட்டம் மீது விழ அகதிகளாய் ஓடி வந்தவர்களே காரணம். இதனையும் அவர்கள் உணரத்தலைப்பட வேண்டும். :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாயினி துளசி விசுகு ஜீவா மற்றும் உறவுகளுக்கு

இங்கு உறுப்பினராக இருக்கும் சுபா சுந்தரலிங்கம் என்ற உறுப்பினர் நேசக்கரத்தினூடாக சாந்தி செய்யும் அதே வெலைகளை சுபாவும் செய்து கொண்டிருக்கின்றார்.அதைவிட இன்னும் அவரின் செயல்பாட்டை கீழே உள்ள சுட்டியை அழுத்தி பாருங்கள்

http://www.tgte-us.org/video.html

http://www.nowwow-us.org/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெல்லையான் எந்த ஒரு அமைப்பாலும் இப்போதைய சூழ்நிலையில் தாயகத்தில் எதுவுமே செய்ய முடியாது.ஆனால் அதற்கேற்ப சூழ்நிலைகள் தற்போது சுடர்விடத் தொடங்கியுள்ளது.பூமிப் பந்தில் எமக்கான சூழ்நிலை வரும் வரும் வரை தமிழர்கள் எந்த அமைப்பில் இருந்தாலும் ஒன்றாக அது வரை இருந்தாலே காணும்

தமிழர்களைப் பிரிப்பதற்கு இலங்கை இந்திய உளவுப் பிரவினர் அரும்பாடுபடட வண்ணம் இருக்கிறார்கள்.

அவர்களுடன் சேர்ந்து கோடாலிக் காம்பு வேலைப் பார்க்காமல் யாராவது பிரிந்திருந்தால் சேர்த்து வைக்க முயற்சி செய்யுங்கள்.

அடுத்தனை குறை கூறினால்

நான் இந்த அமைப்பில் இருக்கிறேன் இன்ன இன்ன செய்கிறேன் என்பதையாவது சொன்னால் உங்கள் அமைப்பு சரியாக இருந்தால் நாமும் வந்து சேரலாம் அல்லவா?

தேசிய தலைவர் கருணாவை அறிமுகப்படுத்தியது போன்று.. அவரின் நிலையையும் சொல்லிவிட்டார். மாத்தையாவின் நிலையும் அதே. பாப்பா.. பற்றி ஆதாரமில்லாமல் எதனையும் எடுகோளாக எடுக்க முடியாது..!

என்னைப் பொறுத்தவரை நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகளில் எனக்கு சந்தேகம் இல்லை. அவர்களின் strategy ஐ என்னால் விளங்கிக் கொள்ள முடிகிறது.

1988ல் தேசிய தலைவரும் பிரேமதாச அரசுடன் டீலில் இருந்தார். அது அன்றைய காலத்தின் கட்டாயமாகவும் இருந்தது. அதற்காக அவர் உரிமைகளை தாரைவார்க்கவில்லை. ஒட்டுக்குழு புளொட்டு.. ஈபிடிபி.. ஈஎன் டி எல் எவ்.. ஈபி.. கருணா குழு செய்வது போன்ற டீலை அல்ல தலைவர் கொண்டிருந்தார். இயக்கத்தையும் மக்களையும் பலப்படுத்தி காப்பாற்றி... போராட்டத்தையும் பெரும் பலம் வாய்ந்த படைகளிடம் இருந்து காப்பாற்ற அவர் அப்படிச் செயற்பட்டார்.

நாளை நாடு கடந்த தமிழீழ அரசும்.. மக்களை.. உரிமைகளை விட்டுக்கொடுக்காத அப்படி ஒரு டீலுக்கு எவரோடு போனாலும் அதனை விளங்கிக் கொண்டு ஆதரிக்கத்தான் வேண்டும். சம்பந்தன் போல.. சிங்கக் கொடிக்கு விசுவாசம் பேசி மக்களை காட்டிக் கொடுப்பதை விட.. இது எவ்வளவோ மேல்..! :):icon_idea:

அண்ணா இவ்வளவு நாள் நெல்லையன் அண்ணா நாடுகடந்த அரசாங்கத்துக்கு எதிர்ப்பான ஆள் என்று அனைவரும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். (அது பற்றி எனக்கு தெரியாது)

ஆனால் நீங்கள் நாடுகடந்த அரசாங்கத்தின் மீது கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் என்பதை இனி அனைவரும் தெரிந்து கொள்வார்கள்.

அவர்கள் என்ன செய்தாலும் சரி என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் அவர்கள் அப்படி தவறான வழிக்கு செல்ல கூடாதென்று தான் நாங்கள் இங்கு கருத்து வைக்கிறோம். அவர்கள் என்று தமிழீழத்திற்கு எதிராக நடக்கிறார்களோ அன்று அவர்களுக்கான மக்கள் பலரின் பங்களிப்பும் நிறைவுக்கு வரும். புரிந்து கொள்ளுங்கள். இனி இவர்கள் அரசுடன் டீல் பண்ணி எந்த பிரயோசனமும் கிடைக்க போவதில்லை.

அதில் வர ஒரு தகுதி வேணும். இல்லாதவர்கள் எல்லைகளை.. ஆட்களை ஏமாற்றி.. கள்ளக்கடத்தலால் தான் வர முடியும்..! அதுவே மொத்த இனத்திற்கும்.. சர்வதேச அவமானமுமாகியுள்ளது..! மனித ஆட்கடத்தல் குற்றம் உட்பட பல குற்றங்கள் எமது போராட்டம் மீது விழ அகதிகளாய் ஓடி வந்தவர்களே காரணம். இதனையும் அவர்கள் உணரத்தலைப்பட வேண்டும். :):icon_idea:

அது சரி, நாடுகடந்த அரசாங்கத்தில் உள்ள ஒருவர் கூடவா அகதியாக வந்தவர்களாக இல்லை?

-----------------------------------------------------------------------------------------------------------

என்னை பொறுத்தவரை இன்று நாடுகடந்த அரசாங்கம் செய்ய வேண்டிய மிக முக்கியமான விடயம்,

ஐ.நா மனித உரிமை குழுவின் இந்தவருடம் நடைபெற்ற கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இது பற்றி அடுத்தவருடம் நடக்கும் 22 ஆவது கூட்டத்தில் மீண்டும் விவாதிப்பார்கள்.

தீர்மானத்தில் கூறப்பட்ட எதையும் இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்த போவதில்லை. எனவே அதற்கெதிராக மீண்டும் ஏதும் ஒரு நடவடிக்கை கொண்டுவர பார்ப்பார்கள். அதனையும் ஒரு சாட்டாக வைத்து சர்வதேச விசாரணையை நடத்துமாறு நாம் கோர வேண்டும். (இதற்கு பல நாடுகள் ஒத்துழைப்பு வழங்காது என்பதும் தெரியும் - ஆனாலும் முயற்சிக்க வேண்டும்.)

அல்லது அரசாங்கம் சாக்கு போக்கு சொல்லி ஏதும் கடத்த பார்ப்பார்கள். அதையும் முறியடிக்க வேண்டும்.

இன்று இவர்கள் விளையாட்டுப்போட்டிகளை நடத்தி அதில் கவனத்தை செலுத்தாமல் ஐ.நா.மனித உரிமை குழுவில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளுடன் சந்திப்புகளை ஒழுங்கு செய்து அடுத்த வருடம் எமக்கு தேவையான ஆதரவை இப்பொழுதே திரட்ட வேண்டும். தலைவர்கள் என்று இருப்பவர்கள் தமிழீழத்திற்கு தேவைப்படும் விடயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நடக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.