Jump to content

Recommended Posts

பதியப்பட்டது

29.06.2001 அன்று கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்புலிகளின் முதன்மைத் தளபதியான லெப்.கேணல் கங்கையமரன் மற்றும் மேஜர் தசரதன் ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

கடற்புலிகளின் தொடக்க காலம் முதலே கடற்புலிகள் அணியில் பணியாற்றி வந்த லெப்.கேணல் கங்கையமரன் அவர்கள் கடற்புலிகளின் நீரடி நீச்சற்பிரிவை உருவாக்கி அதன் பொறுப்பாளராகக் கடமையாற்றியவர். சிறிலங்கா கடற்படையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல வெற்றிகரத் தாக்குதல்களை வழிநடாத்தியவர்.

மன்னார் மாவட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த லெப்.கேணல் கங்கையமரன் 29.06.2001 அன்று கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியூடாகப் பயணித்துக் கொண்டிருந்த பொழுது அங்கு ஊடுருவியிருந்த சிறிலங்கா படையினரின் ஆழஊடுருவித் தாக்கும் படைப்பிரிவினரின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

இத்தாக்குதலின்போது மேஜர் தசரதன் (தசா) (சந்திரன் சுபாகரன் - கீரிமலை, யாழ்ப்பாணம்) என்ற போராளியும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு வணக்கம் செலுத்துகிறோம்.

185_lt_col_kangaiyamaran.jpg

Posted

[size=4]தாயக தன்னாட்சி உரிமைக்காக ஆயுதம் ஏந்தி போராடிய இந்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் !!![/size]

  • கருத்துக்கள உறவுகள்
Posted

லெப்.கேணல் கங்கையமரன் மற்றும் மேஜர் தசரதன் ஆகியோருக்கு வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ் ஈழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தம் இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த கங்கைஅமரன் (கும்பா) நண்பன் உட்பட , தசரதன் , ஏனைய வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கம் .

Posted

வீரவணக்கங்கள்.

Posted

வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீர வணக்கங்கள்.

Posted

ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர் தாக்குதலில் தன்னுயிரை கொடையாக்கிய தளபதிக்கும் ஏனைய போராளிக்கும் வீரவணக்கங்கள்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.